வட
அமெரிக்கா
US anthrax attacks linked to army biological weapons plant
அமெரிக்க அந்த்ராக்ஸ் தாக்குதல்களில் இராணுவ உயிரி ஆயுத தொழிற்சாலை
சம்பந்தம்
By Patrick Martin
28 December 2001
Use
this version to print |
Send this link by email
| Email the author
அக்டோபர் மாதம் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு முன்னணி செனட்டர்களுக்கு அந்த்ராக்ஸ்
உயிர் நுண்மங்கள் (ஸ்போர்கள்) அடங்கிய கடித உறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பத்திரிகைச் செய்திகள் மற்றும்
முன்னணி நுண்உயிர் ஆய்வாளரின் ஆய்வு இவற்றின்படி, இவை சென்ற பத்து ஆண்டுகளில் இரகசியமாக தயாரிக்கப்பட்ட ஒரு
அமெரிக்க இராணுவ கிருமி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கிருமிகளோடு ஒப்பு நோக்குகையில் ஒரேமாதிரியாக
உள்ளது. மேலும் ஒரு அமெரிக்க இராணுவ உயிரியியல் மற்றும் இரசாயன யுத்த தொழிற்சாலை டக்வே
(Dugway) நிரூபணப் பகுதியில் உள்ளது. இந்த இடம்
சோல்ட் லேக் சிட்டி (Salt Lake City), யுடா
(Utah) விற்கு சுமார் 80 மைல்கள் தென்மேற்காக உள்ளது.
செனேட்டர்கள் டாம் டேஹில் பாட்ரிக் லீஹி என்ற இருவருக்கும் அனுப்பப்பட்ட அந்த்ராக்ஸ் மேற்கண்ட தொழிற்சாலையிலிருந்து
அனுப்பப்பட்டிருக்கலாம். டக்வேயில் உள்ள விஞ்ஞானிகள் ஆம்ஸ் மரபுக்கூறில்
(Ames strain) இருந்து எடுக்கப்பட்ட கிருமிகளையே
வளர்த்து அபிவிருத்தி செய்தனர். இந்த மரபுக்கூறுகளே செய்தி ஊடகத்திற்கும் காங்கிரஸிற்கும் அனுப்பப்பட்ட கடிதங்களில்
காணப்பட்டன.
இந்தக் கிருமிகள், இந்த நோய் மிகவும் வேகமாக பரவுதற்கு உகந்தவையாக,
ஒன்றிலிருந்து மூன்று மைக்ரான் அளவு உள்ளதாய், இந்த உயிர் நுண்மங்கள் மிகவும் சன்னமாக அரைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தன.
டிசம்பர் 12 அன்று பால்டிமோர் சன் பத்திரிகையில், இந்த ரகசிய ராணுவ வேலைத்திட்டம் இருப்பது
பற்றி ஒரு கட்டுரையில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அதுவரை அமெரிக்க அரசு அதிகாரிகள், அந்த்ராக்ஸ் சம்பந்தமாக
விசாரித்து வரும் அதிகாரிகள் உட்பட அனைவரும், அத்தகைய ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் சர்வதேச
உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு முன்னர் அமெரிக்க ராணுவம் 1960களின் இறுதியில் முற்றிலும் கிருமி
போர்முறையை நிறுத்திவிட்டதாகக் கூறிவந்தனர்.
ஆயுத தரத்துக்கு அபிவிருத்தி செய்யப்பட்ட அந்த்ராக்ஸ், உடன்படிக்கைப்படி சட்ட
பூர்வமானது ஏனெனில் "அமைதி மற்றும் பாதுகாப்பு" காரணத்திற்காக சிறிய அளவு உற்பத்தி அனுமதிக்கப்பட்டிருக்கிறது
என்று பென்டகன் பேச்சாளர் ஒருவர் இப்பொழுது கூறுகின்றார். அதாவது அமெரிக்காவை கிருமி போர்முறை
தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கையைத் தயார் செய்வதாகும். கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காதான் ஆயுதத் தரத்துக்கு
உற்பத்தி செய்துள்ள ஒரே நாடு என்பது தெரிந்ததே.
டக்வே வசதிவாய்ப்பானது உலர்ந்த அந்த்ராக்ஸ் உயிர் நுண்மங்களைதயார் செய்கிறது.
சில சமயங்களில் அவை வாஷிங்டன் மாவட்டத்திலிருந்து 30 மைல்கள் தூரத்திலுள்ள மேரி லான்ட் அருகே டெட்ரிக்
கோட்டையில் உள்ள இன்னொரு உயிரி யுத்தப் பிரிவுக்கு அனுப்பப்படுகிறது. டெட்ரிக் கோட்டையில் பாக்டீரியாவை
கதிரியிக்க முறையில் கொல்வதற்கான வசதி மற்றும் ----- பாதுகாப்பாக வேலை செய்வதற்கு வசதியாக வருகின்ற
அந்த்ராக்ஸ் கப்பற் சரக்கை நோய்க்கிருமிகள் பாதிக்காமல் சுத்தப்படுத்துவதற்கான வசதி இருக்கிறது. சன்
கூற்றுப்படி கடைசியாக டக்வேயிலிருந்து டெட்ரிக் கோட்டைக்கு சரக்கு வந்து சேர்ந்தது ஜுன் 27 ஆகும்.
செப்டம்பர் 4 அன்று இவை திருப்பி டக்வேக்கு அனுப்பப்பட்டன. இது நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களின்
மேல் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகும். இது புளோரிடாவில் முதல் அந்த்ராக்ஸ் சம்பவம்
கண்டுப்பிடிக்கப்படுவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பாகும். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பேச்சாளரின்படி உயிர்
நுண்மங்கள் வாஷிங்டனில் உள்ள ஆயுதப்படைகளின் நோய்க்குறி இயல் நிலையத்திற்கு கூட 1997ல் அனுப்பப்பட்டன.
டக்வே சோதனைக் கூடம் அண்மையில் ஆயுதத் தரத்துக்கு அந்த்ராக்ஸ் உருவாக்கி உள்ளது
என்று சன் கட்டுரை உறுதிப்படுத்துவதற்கு முன்னரே, இந்தத் துறையில் வல்லுனரான ஒருவர் சமீபத்தில் அனுப்பப்பட்ட
தபால்களில் பயன்படுத்தப்பட்ட அந்த்ராக்ஸ் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்க நிறுவனத்தை சார்ந்ததே என்ற
முடிவுக்கு வந்துள்ளார். டிசம்பர் 10-ல் உயிரி ஆயுதங்கள் தொடர்பான அமெரிக்க விஞ்ஞானிகளின் வேலைசெய்யும்
குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் பார்பராஹாட்ச் ரோசன்பேர்க் பின்வருமாறு கூறினார்: "இந்த கடிதங்களில்
உள்ள அந்த்ராக்ஸ் அமெரிக்க அரசாங்க அல்லது ஒப்பந்தக்காரர்களின் சோதனைக் கூடத்தில் தயாரிக்கப்பட்டதற்கு
சாத்தியம் இருக்கிறது. இது குற்றம் செய்தவர் சொந்தமாக தயார் செய்ததாக இருக்கலாம் அல்லது அமெரிக்க
பாதுகாப்பு துறையினால் தயார் செய்ததாக இருக்கலாம் அல்லது அமெரிக்க உயிரி பாதுகாப்பு திட்டத்தின் பகுதியாக
தயாரிக்கப்பட்டிருக்கலாம்: அல்லது 1969ல் நிக்ஸன் நிறுத்தி வைத்ததற்கு முன்னரான அமெரிக்க உயிரி ஆயுதத் திட்டத்தின்
மிச்சம் மீதியாக இருக்கலாம்" என்றார்.
இந்தத் துறையில் மற்றொரு நிபுணரான ரிச்சர்ட் ஸ்பெர்ட்ஸல் கூட, மனக்குறை உடைய
உனோபாம்பர் போன்ற தனிப்பட்ட நபர் இந்த அந்த்ராக்ஸ் அடங்கிய கடிதங்களை தயார்செய்திருக்க முடியும் என்ற
கருத்தை நிராகரித்தார். இவர் ஈராக்கில் ஐ.நா. உயிரி ஆயுத சோதனைக்குழுவை வழிநடத்திய முன்னாள் இராணுவ
கேர்னல் ஆவார். சர்வதேச உறவுகளின் அவைக் குழு முன்பாக டிசம்பர் 5 அன்று சாட்சியமளித்தபோது அவர் கூறியதாவது:
"செனட்டர் டாஷ்லேக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அடங்கிய அந்த்ராக்ஸ் உற்பத்தியின் தரமானது, நிச்சயமாக உயிர்
நுண்மத்துகள்களின் அடர்த்தி மற்றும் தூய்மை என்ற அர்த்தத்தில் சோவியத், ஈராக், அல்லது அமெரிக்க திட்டத்தில் காணப்படுவதை
விடவும் சிறந்ததாக உள்ளது."
பால்டிமோர் சன் பத்திரிகை கட்டுரைக்கு பதிலளிக்கையில் டக்வே நிரூபணப்
பகுதிக்கான பேச்சாளர் ஒருவர் டாஷ்லே மற்றும் லெஹி கடிதங்களில் அடங்கியுள்ள உலர்ந்த அந்த்ராக்ஸ் தூள்போன்றே
தனது நிறுவனம் தயார் செய்திருந்ததாக உறுதிப்படுத்தினார், ஆனால் அது "நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது" மற்றும்
முற்றிலுமாய் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. 1969-லேயே நிக்சன் நிர்வாகம் தாக்குதலுக்கான உயிரி ஆயுதங்களுக்கான
திட்டத்தை நிறுத்திவிட்டதன் பின்னர், இவருடைய கூற்று முதன் முறையாக அமெரிக்க அரசாங்கம் உயிரி யுத்தத்தில்
பயன்படுத்தத் தக்க பொருளை உற்பத்தி செய்திருக்கின்றது என்று ஒப்புக்கொண்டது.
பார்பரா ஹாட்ச் ரோஷன்பேர்க் கூறியதாவது: "இது குறிப்பிடத்தக்கது. இதுவரை
எந்த அமெரிக்க வசதி வாய்ப்பும் அந்த்ராக்சை ஆயுதமாக பயன்படுத்தியது என்பதை ஒப்புக்கொண்டதேயில்லை. முக்கியமான
கேள்வி என்னவென்றால் யாரேனும் ஒருவர் மிகச்சிறிய அளவை கைப்பற்றி கடிதங்களில் உபயோகித்திருப்பாரா?
என்பதே ஆகும். வாஷிங்டன் போஸ்ட் கூற்றுப்படி டக்வேக்கும் அந்த்ராக்ஸ் தாக்குதலுக்கும் ஏதாவது தொடர்பு
உள்ளதா என்று எப்.பி.ஐ புலனாய்வுசெய்து வருகிறது. ஆய்வுக்கூடத்தில் வேலைசெய்பவர்களையும் எப்.பி.ஐ புலன் விசாரணை
செய்தது. டெட்ரிக் கோட்டை கூட சாத்தியமான வளமாக இருந்தது, தொற்று நோய்கள் தொடர்பான அமெரிக்க
இராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆம்ஸ் மரபுக்கூறு அந்த்ராக்ஸுக்கு முக்கியமான மூலாதாரமான நிறுவனம்.
இந்த நிறுவனம் அமெரிக்கா மட்டுமல்லாமல் கனடா, இங்கிலாந்திலுள்ள உயிரி யுத்த ஆய்வு வசதிகளுக்கும் சப்ளை செய்கிறது.
நவம்பர் 30 அன்று போஸ்ட் கூறியதாவது: "அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றின்படி,1980களின்
நடுப்பகுதியில் இருந்து, சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட பாக்டீரியாவை அமெரிக்க ஐக்கிய
அரசுகள், கனடா மற்றும் இங்கிலாந்துஆகிய நாடுகளில் ஐந்து பரிசோதனைக் கூடங்களுக்கு விநியோகித்த அந்த்ராக்ஸின்
நச்சுத்தன்மையான மரபுக்கூறுக்கு அமெரிக்க இராணுவ சோதனை நிலையம் ஒன்றே பிரதான பொறுப்பாளராக இருக்கிறது."
இந்த இலையுதிர்கால அந்த்ராக்ஸ் தாக்குதலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் மிக
சமீபத்திய அந்த்ராக்ஸ் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. ஆம்ஸ் மரபுக்கூறு மார்ச்சில் அல்பக்கெர்க்குவில் உள்ள புதிய
மெக்சிகோ சுகாதார விஞ்ஞான மையத்திற்கு அனுப்பப்பட்டது மற்றும்மே- இல் அந்தராக்ஸ் ஊசி மருந்து ஆராய்ச்சி செய்யும்
ஓஹியோ, கொலம்பஸில் உள்ள பெட்டெல்லே நினைவு நிலையம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டது.
நியூயோர்க் டைம்ஸ் செய்தியின்படி மத்திய அரசாங்கத்தின் விசாரணையாளர்கள்,
டாஷ்லே மற்றும் லேஹி கடிதங்களில் இருந்த அந்த்ராக்ஸ் உயிர் நுண்மங்கள் அமெரிக்க அரசால் நடத்தப்படும் ஒரு
அரசாங்க ஆயுத சோதனைக்கூடத்தில் தான் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்த கடிதங்களில்
இருந்த அந்த்ராக்ஸ் ஒரு கிராமில் ஒரு டிரில்லியன் உயிர் நுண்மங்கள் அடங்கியது. இது பரவலாக விநியோகிக்கப்படுமானால்
இந்த அடர்த்தியானது அமெரிக்க ஜனத்தொகையில் பாதி அளவைக் கொன்றுவிடும்.
தன் பெயர் சொல்ல விரும்பாத மத்திய விஞ்ஞான ஆலோசகரை மேற்கோள்காட்டி
டைம்ஸ் குறிப்பிட்டது: அந்தராக்ஸின் தரமானது "இராணுவ ஆய்வுக்கூடங்களில் தொடர்புடைய ஒருவர் அல்லது
அவர்களின் ஒப்பந்தக்காரர்கள் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பார் என நம்பிக்கையை வழங்குகிறது". அந்த
விஞ்ஞானி டைம்ஸிடம் மேலும் கூறியதாவது: "நமது விஞ்ஞானிகளில் ஒருவரே இதுபோன்றதை செய்திருக்கமுடியும்
என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே பயமாக உள்ளது. ஆனால் அதற்கு உறுதியான சாத்தியம் இருக்கிறது."
டக்வேயில் ஆயுதத்தரம் வாய்ந்த அந்த்ராக்ஸ் தயாரிக்கப்படுகிறது என்ற வெளிப்படலும்
டெட்ரிக் கோட்டையிலிருந்து ஆம்ஸ் மரபுக்கூறு விநியோகிக்கப்பட்டமையும் இந்த துறையில் இன்றுவரை நவீன ஆரய்ச்சிகளைச்
செய்துவரும், ஒப்பீட்டளவில் சிறிய குழுவான விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை உண்டாக்கியிருக்கிறது. பத்திரிகைக்கான
கருத்துரைப்புக்களில் நடந்து கொண்டிருக்கும் கிருமி யுத்தத்திட்டம் பற்றி பலர் வியப்பைத் தெரிவித்தனர். பார்பரா
ஹாட்ச் ரோஷன்பேர்க் டக்வே நடவடிக்கைகள் கிருமி யுத்தம் சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தங்களின் கடப்பாடுகளை
மீறுவதாக உள்ளது என குறிப்பாகக் கூறுகிறார்.
வாஷிங்டன் போஸ்ட், டிசம்பர் 16 முதல் பக்க அறிக்கை இந்த நிபுணர்கள் கூற்றை
மேற்கோள் காட்டி முடிவாக வெளியிட்டுள்ளது: "கேபிடல் ஹில் கட்டத்திற்கு அனுப்பப்பட்ட அந்தராக்ஸ் உயிர் நுண்மங்கள்
1980-ல் இருந்து அமெரிக்க இராணுவம் தன்வசம் கையிருப்பில் வைத்திருக்கும் உயிராபத்தை விளைவிக்கும் பாக்டீரியா
சேமிப்பு இருப்புடன் இனங்காட்டப்பட்டுள்ளது என்று மரபியல் கைரேகை பற்றிய ஆய்வுசுட்டிக் காட்டுகிறது." விஞ்ஞானிகளுள்
ஒருவர் போஸ்ட் இடம், டாஷ்லே மற்றும் லெஹியின் கடிதங்களில் உள்ள அந்த்ராக்ஸின் "மூலாதாரம்,
தொற்று நோய்கள் தொடர்பான அமெரிக்க இராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்திருக்க வேண்டும்" அதாவது
டெட்ரிக் கோட்டையில், என்று குறிப்பிட்டார்.
போஸ்ட் மேலும் குறிப்பிட்டது: "ஆய்வுத் தகவலின்படி, அந்த்ராக்ஸ் தாக்குதல்
தொடர்பான எப்.பி.ஐ.-ன் விசாரணையானது, சி.ஐ.ஏ-ஆல் நடத்தப்பட்டது உட்பட, அமெரிக்க அரசாங்கம் உயிரி
ஆயுதங்கள் ஆய்வுத் திட்டங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்ட, மரண ஆபத்தை விளைவிக்கும் அந்தராக்ஸ் தூளுக்கு மூலாதாரமாக
இருக்குமோ என்பது பற்றி அதிகமாய் குவிமையப்படுத்தி வருகிறது. மரபியல் சோதனைகளின் முடிவுகள் அதற்கான சாத்தியத்தை
பலப்படுத்துகிறது. எப்.பி.ஐ சி.ஐ.ஏ உடன் வேலை செய்த ஒப்பந்தக்காரர் மீது கவனத்தைக் குவிமையப்படுத்தி வருகிறது
என்று ஒரு தகவல் கூறுகிறது."
ஃபிளாக் ஸ்டாப்பில், வட அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள மரபியல் நிபுணர்
பால்கெய்ம்-ஆல் தலைமை தாங்கப்பட்ட ஆய்வுக் குழுவினால் அளிக்கப்பட்ட மரபியல் கைரேகை பற்றிய ஆய்வு முடிவுகள்,
எப்.பி.ஐ ஆனது ஆம்ஸ் மரபுக்கூறைப் பயன்படுத்தும் சி.ஐ.ஏ வின் சொந்த கிருமி யுத்த வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பான
சி.ஐ.ஏ அதிகாரிகளைப் பேட்டிகாண ஆரம்பித்துள்ளது என்பதை மேலும் கூறுகிறது என்று பத்திரிகை குறிப்பிட்டது.
லாப நோக்கமும் அரசியலும் இந்த கடித தாக்குதலில் சாத்தியமான காரணிகள் என்று
எண்ணப்பட்டு வருகிறது என்று போஸ்ட் மேலும் கூறியது: "புலனாய்வாளர்கள் அந்த்ராக்ஸ் தாக்குதல்களுக்கு,
ஒருவகைப் பழிவாங்கல், அந்த்ராக்ஸ் குணப்படுத்தும் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஒருவர் ஆதாயம் அடைதல்
அல்லது ஒருவேளை ஈராக் மீது குற்றம் சாட்டவிரும்பும் ஒருவரின் முயற்சி..... என்பது உட்பட, பரந்த அளவிலான
சாத்தியமான காரணங்கள் பற்றி பல கோணங்களிலிருந்தும் ஆராயப்பட்டு வருகிறது.
புலனாய்வில் இந்தப் புதியவழி பற்றி வாஷிங்டன் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்
அதேவேளை, புஷ் நிர்வாகமும் சரி பிரதான தொலைக்காட்சி வலைப்பின்னல்களும் சரி, அமெரிக்க அரசின் ஒரு
பகுதியே அந்த்ராக்ஸ் தாக்குதல்களுக்கு காரணமான அதி வலது சக்திகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது
என வளர்ந்து வரும் விஷயத்தின் மேல் எந்தவிதமான பொதுகவனத்தையும் குவிமையப்படுத்தவில்லை.
|