World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

Letters on the US massacre of POWs in Afghanistan

ஆப்கானிஸ்தானில் யுத்தக் கைதிகளை அமெரிக்கா படுகொலை செய்தது பற்றிய கடிதங்கள்

12 December 2001

Use this version to print | Send this link by email | Email the author

ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்க தலிபான் யுத்தக்கைதிகள் படுகொலை பற்றிய சமீபத்திய கடிதங்களைத் தேர்ந்தெடுத்துக் கீழே பிரசுரித்துள்ளோம்.

க்யூலா-ஐ-ஜாங்கி கோட்டையில் நடந்த தலிபான் யுத்தக் கைதிகள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றிய முழு விளக்கத்திற்கும் ஆய்விற்கும் நன்றி. "நமது ஆட்களின்" மறைமுகத்தூண்டுதலினால் கோட்டையில் நடைபெற்றவை ஒரு பக்கப் படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள உங்களது இணையதள பார்வையாளர்கள் எவருக்கேனும் இன்னமும் தயக்கம் இருந்தால், சி.ஐ.ஏ. முகவர்களால் அமெரிக்க தலிபான் தன் ஆர்வ ஊழியர் ஜோன் வோக்கரிடம் எடுக்கப்பட்ட "பேட்டி" யின் வீடியோ டேப் செய்யப்பட்டதன் பிரதியினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த இரு சி.ஜ.ஏ. முகவர்களில் ஒருவர் பின்னர் ஒரு கலகத்தில் இறந்துவிட்டார். இந்த பிரதியின் ஒரு பகுதி "நியூஸ்வீக்.கொம்"- ல் காணப்படுகிறது.

இந்த நாடாவானது கலகத்திற்கு ஒரு "சில மணி நேரத்திற்கு" முன்னர் எடுக்கப்பட்டது. இந்த பிரதியில் தெளிவாக தெரிவதாவது, கைதிகள் கொலை செய்யப்படுவர் என்று மிரட்டப்பட்டுள்ளனர். மேலும் சி.ஐ.ஏ. முகவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் சில கைதிகளை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கூறியது, நிறைய யுத்தக் கைதிகள் கொல்லப்படப்போவதாகத் திட்டமிடப்பட்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், உத்தியோக ரீதியாக முன்வைக்கின்றவாறு, "பெருந்திரள் தற்கொலைக்கு" விரும்பிய மதவெறியர்களின் மன ஆசையே இந்தக் கிளர்ச்சிக்கு தூண்டுதலாக இருந்தது என்பதைக் காட்டிலும், இந்த ஒளி நாடாவில் அவர்கள் கொலை செய்யப்படப்போவதாக யுத்தக் கைதிகளுக்கு நம்பத்தகுந்த காரணம் காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் அந்த விதியை முறியடிக்க இறுதிக்கட்டம் வரை முயன்றனர் --அவர்கள் கிளர்ந்தனர். முடிவில் கைதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

திரு. வோக்கருடைய "பேட்டி" பற்றி ஒளி நாடாவின் உட்கருத்துக்களை அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் என்பது அறிய ஆவலாக உள்ளது. மேலும் அந்த நாடாவிற்கு அதனுடைய "கயிறு திரித்தலை" கொடுத்து, அதனைப் பத்திரிகைத் துறையினர் ஆய்விற்கோ அல்லது விமர்சனமோ செய்யாமல் மேற்செல்வர் என்பது அமெரிக்க அரசாங்கத்தின் வெளிப்படையான எண்ணமாக இருந்தது. நாடாவில் திரு.வோக்கர் அவருக்கு பயங்கரவாத நடவடிக்கையில் பங்கு இருக்கிறது என்றோ அல்லது அதனைப் பற்றித் தனக்குத் தெரியும் என்றோ குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை. திரு.வோக்கர் அவரிடம் "பேட்டி கண்டவர்களிடம்" எதையும் கூறவில்லை. அந்த நாடா திரு.வோக்கர் கிளர்ச்சிக்கு முன்பு கோட்டையில் இருந்தார் என்ற ஒன்றே ஒன்றை நிரூபிக்கிறது. அவர் ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் இருந்தார் என்பதே அவர் அரச எதிர்ப்புக் குற்றம் புரிந்தார் என்பதற்கும் மரணதண்டனை விதிக்கப்படுவதற்கும் போதுமானதாக உள்ளது என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்திற்குரியவர்களை விசாரிக்க அமெரிக்க அரசு இரகசிய இராணுவ மன்றங்களை அமைத்த பொழுது, குடியுரிமை சுதந்திரவாதிகளின் பயத்தினை மட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் இந்த நீதிமன்றங்களில் அயல்நாட்டினர் மட்டுமே விசாரிக்கப்படுவர் என்று கூறி சமாதானப்படுத்த முயன்றது. இப்பொழுது அமெரிக்காவின் பாதுகாப்பில் "பயங்கரவாதி" இருக்கையில் அமெரிக்க குடிமகனை இரகசிய இராணுவ நீதிமன்றத்தில் முன் நிறுத்துகிறது. நல்வாழ்விற்கான சாபப்பெட்டி அகல திறக்கப்படுகிறது.

LG

8 டிசம்பர் 2001


அன்புள்ள WSWS,

கியூலா-ஐ-ஜாங்கி கோட்டையில் நடைபெற்றதை போர் குற்றம் என மிகவும் சரியாகக் குறிப்பிட்டீர்கள்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் ஆப்கான் மக்களுக்கு எதிரான பெருங்குற்றமாக மனித நேயத்திற்கு எதிரான குற்றம் இன்னும் இழைக்கப்படுகிறது. இதுவே அவர்களை ஏழ்மை மிக்க அகதிகளாக மாற்றியுள்ளது. இந்த குளிர்காலம் முடியும்போது ஏற்படப்போகும் உயிரிழப்புகள் அனைத்தும் துன்பகரமாக கடவுள் குற்றத்தினால் ஏற்பட்டது என்ற கருத்துக்குள் திணிக்கப்படப்போகிறது. தாங்கள் தங்களது 7ந் தேதிய அறிக்கையில் அதையே குறித்துள்ளீர்கள். இந்தத் தேவையில்லாத தொடர்ந்து வரும் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பேற்று குற்றத்தினை ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்.

உண்மையுடன்,

RG

10 டிசம்பர் 2001


தோழர்களே,

இப்பொழுது நாட்டில் மிக உயர் பதவியில் உள்ள சட்ட அதிகாரியால் சட்டத்தின் விதிமுறைகள் ஒழிக்கப்பட்டிருக்கிறது, இது நமக்கு, உத்தியோகபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதிமொழிக்கு எதிராக, சட்டம் ஒழுங்கை மீறுகின்றவர்களை மக்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்லவைத்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது தவிர வேறு எவ்வித வாய்ப்புகளையும் விட்டுவைக்கவில்லை. இந்தப் பேர்வழிகள் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யும் செயல்களால் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அரசியற் சட்டத்தைக் கீழறுக்கின்றனர் அவை அரச துரோகமாகும். குண்டு வெடிப்பினால் ஒன்றும் அறியாத அப்பாவி ஆப்கானிஸ்தான், ஈராக் குடிமக்களைக் கொல்லல் மற்றும் போர்க்கைதிகளை சித்திரவதை செய்து கொலைசெய்தல் ஆகியவை மூலம் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்தல் பரந்த அளவில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளில் கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும். இது இவர்கள் செய்யும் குற்றங்களின் ஆரம்பம் மட்டுமே ஆகும். நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன், அமெரிக்க மக்களாகிய நாம் பின் வருபவர்களுக்கு எதிராக ஒரு முறையான குற்றச்சாட்டு மசோதாவை அளிக்கலாம், ஒரு ஆரம்பமாக:

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஐக்கிய வாழைப்பழ குடியரசுகளின் தலைவர்.

டிக் செனி, ஒளிவிடத்தின் துணை ஜனாதிபதி.

ஜோன் அஷ்குரொப்ட், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விசேடதகைமையாளர்.

டொனால்ட் றும்ஸ்ஃபெல்ட், யுத்தப்பிரபு பதவி வகிப்பவர்.

கோலின் பாவெல், யார் எக்கேடுகெட்டு கெட்டும் போகட்டும், அவருக்கு அவரைப்பற்றிய நினைவு.

ஐக்கிய அமெரிக்க அரசுகளின் உச்சநீதிமன்றம், எல்லவற்றையும் துறந்தது. பல்வேறு படைத்தளபதிகள், சாவின் தளத்தில்.

முழுக் கார்ப்பொரேட்டுகளும்- பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கார்ப்பொரேட் ஆதரவாளர்கள்,

வங்கிகள், கடைசி ஆனால் குறைவில்லை.

நான் மேலும் தொடரமுடியும்.

போராட்டத்தில்,

JC

வடக்கு கரோலினா

6 டிசம்பர் 2001


நீங்கள் செய்திகளைச் சிதைத்துவிட்டீர்கள். உண்மையைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை. அமெரிக்க அரசு, ஆப்கானிஸ்தான் கைதிகளைக் கொல்வதை ஆதரிக்கவில்லை-- அவர்கள் கலகஞ்செய்யாதவரை, சண்டை தொடங்காத வரை கொல்லப்படவோ, பழி கூறப்படவோ இல்லை. ஆப்கானிய தலிபான்களை வடக்குக் கூட்டணிப் படையினர் விடுவித்தனர். மாஸார் இல் தலிபான் கைதிகள் தான் கொல்லத் தொடங்கினர்.

தாங்கள் அமெரிக்க வாதத்திற்கு எதிரான ஒரு தடுமாற்றமுற்ற நிலையில் இருப்பதால் உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்று உங்களால் பார்க்க முடியாது: இந்த அமெரிக்க நடவடிக்கைகளினால் ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரம் பெற்றதாக உணர்ந்துள்ளனர். தாங்கள் உண்மையைத் திரித்துவிட்டீர்கள். தாங்கள் குறிப்பற்றவர். இறுதியாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நல்ல சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கை வந்துள்ளது-- ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு நன்றி.

"அமெரிக்காவை வெறு" என்னும் உங்களது நேர்மையற்ற பிரச்சாரத்தில் ஒசாமா பின்லேடனைப் போல் உள்ளீர்கள். உலகத்திற்கு ஒரு உதவி செய்யுங்கள். இந்த அலுவலிலிருந்து வெளியேறி மேலும் பொய் கூறுவதை நிறுத்துங்கள்.

FC

28 நவம்பர் 2001


உங்களுடைய மெய்ம்மையான ஆய்விற்கும் தகவல் செய்திக்கும் நன்றிகள் பல. நான் உங்களுடைய கருத்துக் கோணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் அந்த இன அழிப்பு தாக்குதல்களைக் கண்டனம் செய்வதில் தங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

NS

நோர்வே

28 நவம்பர் 2001


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பற்றிய சிந்தனையார்ந்த தங்களது கட்டுரைக்கு மிகவும் நன்றி. இப்பொழுது நாம் விவரத்திற்கு வருவோம். மிலோசெவிக் நடத்திய அட்டூழியங்களை எதிர்த்துக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய அமெரிக்க அரசுகள் தற்பொழுது அதையே செய்கிறது. நான் ஐயத்துக்கிடமில்லாமலும் உறுதியாகவும் சொல்கிறேன், மிலோசெவிக் மேல் பன்னாட்டு தீர்ப்பு மன்றம் வைக்கப்பட்டால் டொனால்டு றும்ஸ்ஃபெல்டிற்கும் அவரது பணியாளர்களுக்கும் ஒன்று கட்டாயம் வைக்க வேண்டும். போர்க்கைதிகளை நடத்தும் விதம் பற்றி ஜெனிவா மாநாட்டால் தடுக்கப்பட்ட அந்தக் குற்றத்தினைச் செய்யும் இவர்கள் எங்கு பயணம் செய்தாலும் அந்நாடுகள் கைது செய்யவேண்டும். சி.என்.என். அல்லது அமெரிக்க ஊடகம் சொல்வதை, சரியாகச் சிந்திப்பவர்களானால் எவர் நம்புவார்கள்? யாரோ ஒருவர் துப்பாக்கியுடன் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும்பொழுது நீங்கள் எப்படி துப்பாக்கியுடன் சிறையிலிருப்பீர்கள், எப்படி அவர்களுடன் சண்டையிடுவீர்கள்? பொது அறிவுடன் சிந்தித்துப் பாருங்கள். இவை அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க ஊடகத்திலுள்ள அறிவுத் திறம் குறைந்த மக்களுக்காக கூறப்படுவன ஆகும். அந்த குற்றங்கள் கண்டிப்பாக தண்டனை பெறாமல் விட்டுவிடப்போவதில்லை என்று எனக்குப்படுகிறது. வன்முறையைத் தீர்க்க வன்முறையைக் கையாள முடியாது. அவர்கள்தான் உலகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று அமெரிக்கா நினைக்கிறது. ஒரு அமெரிக்கர் இறந்தால் உலகமே அதற்கு வருந்தவேண்டும். ஆனால் 800,000 ருவாண்டார்கள் இறந்தாலும் அது ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் அமெரிக்கர்களல்லர். அவர்கள் ருவாண்டார்கள். புஷ்ஷின் தந்தையால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஹைத்தியில் நடந்த திடீர் அரசியல் புரட்சியில் 5000 பேர் இறந்தனர். அதுவும் ஒன்றுமில்லை. நீங்கள் ஒரு வல்லாண்மை மிக்க ஒரே முனைப்புத்திறனுடைய உலகத்தைக் கொண்டிருந்தால் உலகத்தைச் சுற்றி ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கக்கூடியதுதான் நீங்கள் செய்யும் ஒரே ஒரு பணியாக இருக்கும். ஒன்று மட்டும் நிச்சயம் எனக்குத் தெரியும். அதாவது நீங்கள் மேலாதிக்க சக்தி உடையவராக இருக்கலாம். ஆனால் உங்களது வாழ்க்கை முழுவதிலும் நீங்கள் மேலாதிக்க சக்தி உடையவராக இருக்க முடியாது.

அமெரிக்க ஊடகத்தைப் பற்றி நான் பேசப்போவதில்லை. அதைப் பார்க்கப்போவதுமில்லை. அதிலும் குறிப்பாக சி.என்.என் இந்த தொலைக்காட்சி நிலையம் நிலைக்கும் என்று நான் நினைக்கவில்லை. திரும்பவும் உங்களது சிந்தனையார்ந்த பகுப்பாய்விற்கும் உள்ளுணர்வு சார்ந்த ஆராய்ச்சிக்கும் மீண்டும் நன்றி! தங்களால் மட்டுமே முடியும் இப்பணியினைத் தாங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.

JC

28 நவம்பர் 2001


எனக்குள் ஒரு வினா. அமெரிக்கா இன்னமும் உயர்நிலையில் இருக்கின்றபோது, தலிபான் அல்லது வேறு அரசுகள் மனித உரிமைகளைத் தொடர்ந்து தவறான வழியில் பயன்படுத்த ஏன் அனுமதிக்கக்கின்றது? இந்த மோதலைத் தொடங்குவதற்கு நாம் குடிமக்கள் நிரம்பிய கட்டிடங்கள் மீது விமானத்தைப் பறக்க விடப்போவதில்லை.

MM

5 டிசம்பர் 2001


11/27/01 தேதியிட்ட தங்களது உண்மையான துணிவுமிக்க தலையங்கத்திற்கு நன்றி. WSWS மட்டுமே அமெரிக்க செய்தி வெளியீடுகளில் என்னால் படிக்கத்தகுந்தது. நான் ஒரு ஆசிய- அமெரிக்கன். நான் அங்கேயே பிறந்த குடிமகன். இருந்தாலும் இந்த நாட்டில் நிலவும் சிறுபான்மையினரின் நிலையில்லாத சூழ்நிலை அதிலும் சிறப்பாக போர் இசிப்பு (ஹிஸ்டீரியா) மேலும் பகட்டாரவார போலிப்பற்றும் மூர்க்கமாகப் பரவிக்கிடக்கும் இந்தச் சூழ்நிலையின் காரணமாக பேசுவதிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாக உணர்கிறேன்.

இந் நற்பணியைத் தொடர்ந்து செய்க.

MA

28 நவம்பர் 2001


உங்களுக்குத் தெரியுமா, நான் தவறுகளை வெறுக்கும் ஒரு வெகு சததாரண மனிதன். இந்த செப்டம்பர் 11, தாக்குதல்கள் ஒரு சிலிர்த்து எழுந்து நிற்கும் குற்றம். ஆனால் தீவிரவாத எதிர்ப்புப் போர்வையில் நடக்கும் இந்தப் போரைப் பற்றி நிறைய கேள்விகள் எனது மனதில் இருக்கின்றன. அந்தச் சிறை குண்டு வெடிப்பானது என்னை மிகவும் ஆழமாகக் கலங்கச் செய்துவிட்டது. நான் அமெரிக்காவின் சி.என்.என். பார்ப்பதையே விட்டுவிட்டேன். ஏனெனில் அவர்கள் இதுபோன்ற வெளியீடுகளைத் தவிர்த்துவிடுகின்றனர். மேலும் எவரும் கடினமான கேள்விகளைக் கேட்பதில்லை.

கடவுள் நம்மீது கருணை காட்டட்டும்.

TC

27 நவம்பர் 2001


வாழ்த்துக்கள்:

(பதிவுக்குறிப்பிற்காக: நான் ஒரு கிறிஸ்தவன். இந்த "கூட்டாட்சி எதிர்ப்பு இயக்கம்" (Anti-Federalist") என்று சொல்லப்படுவது நமது காலப் பெரும் பிரிவின் தொடக்கம் இதற்கு நான் ஒரு அபிமானி) நான் தங்களது கட்டுரையை ஒரு அமெரிக்க இஸ்லாமிய குறியிடத்தின் இணைப்பு வழியாக வாசிக்க கிடைக்கப் பெற்றேன். உங்களது இலக்கில் சரியாக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். தங்களுக்கு ஆர்வமுள்ள இரண்டு விஷங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலாவது, ஒரு சாதாரண ஓவிய ஒப்பந்தக்காரராக அன்றாட வேலை நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான் என்னுடைய அட்டவணையை அனுசரித்து அடிக்கடி மாற்றிக்கொள்வேன். அப்படி ஒரு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் திங்கட்கிழமை அன்று மத்திய வெர்ஜீனியாவில் நடந்தது. அது எமது புதிய காங்கிரஸ் பிரதிநிதி ராண்டி ஃபோர்ப்ஸ் என்பவரால் கூட்டப்பெற்ற "ஒரு நகரக்கூட்டம்." அந்தக் கூட்டத்தில் ஓய்வு பெற்றவர்களும் அந்தந்த துறைக்கு பொருத்தமானவர்களும் நிறைந்திருந்தனர். இது மருத்துவ பாதுகாப்பு, படைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர் மற்றும் இராணுவ நலன்கள் பற்றியதாக இருந்தது. இதை பின் கவனித்ததில் எனது சீற்றம் வளர்ந்தது. அந்த காங்கிரஸ் பிரதிநிதி கூட்டத்தில் எங்களிடம் அவர் சொல்ல வேண்டிய தேவையைப் பற்றிக் கூறியபொழுது, நான் சீற்றத்துடன் கட்டிடத்தின் என்னுடைய பக்கத்திலிருந்து கையசைத்தேன். அப்பொழுது நான் என்னுடைய பணி உடையில் இருந்தேன் மிக ஆர்வமாக அங்கிருந்து கையசைத்த ஒரே உண்மையான பாட்டாளி நான்தான்!

அந்தக் காங்கிரஸ் பிரதிநிதியை அழைத்து சாதாரணமான கேள்விகளைக் கேட்கத்தொடங்னேன். அரசுப் பொய்களைப் பற்றிய பெரிய பட்டியலைக் கொடுத்தை, நாங்கள் ஏன் இப்பொழுது அவர்களை நம்ப வேண்டும் என்று கேட்டேன்: இந்த பிரச்சினையை புஷ் செக்கிஸ்ட் புட்டின் உடனான யுத்தத்துக்கு பயன்படுத்துவார்; அவர் அதை திடீர் ஆட்சிக் கவிழப்புத் தலைவருக்கு (பாகிஸ்தானிய ஜெனரல்) கொண்டு செல்வார்; அவர் அதை அயல் நாடுகளிலுள்ள எல்லா தரப்பு தலைவர்களிடமும் கொண்டு செல்வாரே ஒழிய பிரச்சனையை எங்களுக்காகச் செய்யவில்லை." நீங்கள் ஏன் போர் அறிவிப்பு செய்யக்கூடாது?"

அவர் வாயிலிருந்து வந்த முதல் கருத்து, அப்படிச் செய்தால் அது தாலிபானுக்கு உறுதியான சிறப்பு நிலையை உண்டாக்கிவிடும், அதை நாம் பார்க்க விரும்பவில்லை. இது எப்படி இருக்கிறது? எமது எதிரிகளுடன் எமது முறையில் கையாள யுத்தத்தை தவிர்த்திருக்க முடியும் என தெளிவான முறையில் கண்டார். இது என்னை வெறுப்படைய வைத்தது. இந்த வர்த்தைகளை அவர் மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டு இதை அவர் மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டமை அவருடைய உதட்டிலிருந்து உருண்டு விழுகின்றன. அதிர்ஷ்டவசமாக ஒருவரும் கைதட்டி ஆரவாரிக்கவில்லை. மேலும் ACLU (American Civil Liberties Union) வினர் கடவுளைப் பற்றி குறிப்பாகப் பேசி தரைமட்டமாகப் போய்விட்டனர் என்பதைப் பற்றி வெகு உயர்வாக முணுமுணுத்து பேசினார். இந்தப் பொய்யான எளிதான "நாட்டுப்பற்று" இனைக் கண்டு கடவுள் உண்மையாக வெறுப்படைவார் என்றே நினைக்கிறேன்.

இரண்டாவதாக டிசம்பர் 6ந் தேதி வியாழக்கிழமை இரவு (சுமார் 8 மணி அளவில்) சி.என்.என். க்ரேடா வான் சஸ்ட்ரேன் இன் "நடப்புச் செய்தி" யாக அமெரிக்க தலிபான் போராளி ஒருவரின் தனிப்பட்ட சிறப்புப் பேட்டியினை ஒளிபரப்பப் போவதாக அவர்கள் அறிவித்தனர். நான் எனது மனைவியிடம், "நீ கவனி, அவர்கள் அவரது குரலினை நீக்கிவிடுவர்" என்று கூறினேன். எனது வாக்கு நிறைவேற நான் இன்னும் ஒரு இருபது நிமிடம் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. பேட்டியின் சில பகுதிகளை ஒளிபரப்பினார்கள். அந்த பேட்டி உண்மையில் அதிர்ச்சியாய் இருந்தது, இருந்தும் சந்தேகமில்லாமல் வியப்படையக் கூடியதாக அது காட்டப்பட்டது. அவரது சந்தேகத்துக்கிடமில்லாத தலைவிதியின் காரணமாக, சில சக சிறைக்கைதிகள் அவர்களுடைய தளர்ந்த அங்கிகளுக்குள் எறிகுண்டுகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று புலம்பினார். இந்தச் செயல் இஸ்லாமிய இராணுவ சட்டப்படி ஒரு "பாரதூரமான குற்றம்" எனவும் சிறப்பாக அதன் காரணமாக ஒரு முஸ்லிம் சக முஸ்லிம் இடம் சரணடைந்ததாகவும் கூறினார்.

நல்ல அனுபவமில்லா அமெரிக்கர்களின் செயல்களைவிட அவர்களது பகைவர்களின் செயல்பாடு திறமை அதிகம் என்று பழையவர்களுக்குத் தெரியும். எப்படி இருந்தபோதும் சிறைக்கைதிகளுக்கு தெரியும் அவர்கள் கடைசியில் சுடப்படப்போவதாக என்று கூறி முடித்தார். அவர் அந்தக் கூற்றினை இருமுறை கூறினார். அதனுடன் ஒளிப் பேழை (வீடியோ) காட்சி முடிவடைந்தது. அவர்களுக்கு வடக்குக் கூட்டணி படையினருடன் கிடைத்த அனுபவத்தினால் இனி ஒன்றும் இழப்பதற்கு இல்லை என்பது என்னுடைய அனுமானம்.

இந்த நிகழ்ச்சிக்கு இருபது நிமிடங்களுக்குப் பிறகு அரசு சார்ந்த காட்சித் தொகுப்பாளர் ஒருவர் பேட்டியின் பகுதிகளையும் இன்னும் ஒரு சில பகுதிகளையும் ஒலியுடன் ஒளிபரப்பினார். முந்தைய பத்தியில் நான் பதிவு செய்த இறுதிக் கூற்றுகள் அதில் காணாமல் போயின. அதற்குப் பிறகு இதுவரை எவரும் அதுபற்றிப் பேசவில்லை. அவர் குரல் காணாமல் போனது, திரும்பவும் அது நான் பார்த்த எந்தச் செய்திக் குறிப்பிலும் காணக் கிடைக்கவில்லை.

உங்களது உண்மையான

WP

11 டிசம்பர் 2001


ஹலோ,

சில சமயம் முன்னுணர்வுடன் அவ்வப்பொழுது நிகழும் நிகழ்ச்சிகளைக் காணும் பொழுது ஒரு சோர்வினை உண்டுபண்ணும் விதத்தில் செயல் நிகழ்கிறது. ஒரு வாரம் முன்னதாக என் மனைவியிடம் கூறினேன், சி.ஐ.ஏ. சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்தி இருக்கலாம் அதனால் அவர்களுக்கு ஏதும் இழப்பு இல்லை என்று நினைத்து அவர்கள் கிளர்ந்து எழுந்திருக்கலாம் என்று.

ஒளி நாடாவைப் பற்றி அறிய வெகு ஆவலாக உள்ளேன். வெளியிடப்படாத நாடாவின் பகுதிகளில் இன்னும் குற்றச்சாட்டுகள் அதிகமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறுகிறேன். யாராவது தகவல் வெளியீட்டுச் சட்டத்தின்படி மீதிப் பகுதிகளை வெளியிடச் செய்வார்களா? ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகம் கட்டாயம் செய்ய வேண்டும்.

நீங்கள் முக்கியமான வேலை செய்கிறீர்கள். இந்த உண்மை நிலையைக் கண்டறிய அதிக நாள் எடுத்தால் இந்த மக்கள், உடு உருக்களால் அணி செய்யப்பட்ட மறைக்கப்பட்ட பொய்களால் போர்த்தியவர்களாகிவிடுவர். உங்களைப் போல் உள்ளவர்கள் உண்மையான தேசப்பற்று உடையவர்கள். அவர்களைப் போல் சட்டத்தின் விதிகளை தங்கள் இஷ்டம் போல் திடீர் திடீரென மாற்ற நினைப்பவர்கள் துரோகிகள்.

MS

11 டிசம்பர் 2001