:உலகப்
பொருளாதாரம்
G-7 meeting keeps silent on major problems
G-7 கூட்டம் முக்கிய பிரச்சனைகள்
தொடர்பாக மெளனம் சாதிக்கின்றது
By Nick Beams
13 February 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
கடந்தவார இறுதியில் கனடாவின் ஒட்டாவாவில் (Ottawa)
இடம்பெற்ற G-7 தொழிற்துறை நாடுகளினது
நிதியமைச்சர்களினதும், மத்தியவங்கி முகாமையாளர்களினதும் கூட்டம் முக்கிய பிரச்சனைகளின் மத்தியில் நிகழ்ந்தது.
இவை எந்தவொரு புறநிலையான நிலைமைகளினுள்ளும், இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் உலக
முதலாளித்துவ பொருளாதாரம் எதிர்நோக்கிய சில முக்கிய பிரச்சனைகளின் வரிசையில் வைத்துப் பார்க்கக் கூடியதாக
இருக்கிறது.
அமெரிக்க பொருளாதார வரலாற்றின் பாரிய நிறுவனத்தோல்வியான என்ரோன் உடைவானது
அமெரிக்க பொருளாதாரத்தினது இலாபத்தினுள்ளும் அதிர்ச்சி அலைகளை செலுத்தியுள்ளதுடன், இலாப கணக்குகளுடன்
தொடர்புபட்ட 1990களின் இறுதி அரைப்பகுதியில் ''புதிய பொருளாதாரம்'' என அழைக்கப்பட்டதை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆர்ஜென்டீனாவினது திவாலானது வரலாற்றில் ஒரு சுதந்திரமான அரசாங்கத்தின் திவாலாகும்.
சிலவேளைகளில் இத்திவாலைவிட முக்கியமானது என்னவெனில் G-7
நாடுகளினது வங்கிகளினாலும் அரசாங்கங்களினாலும் ஆதரவளிக்கப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தினால் திணிக்கப்பட்ட
கொள்கைகளின் பத்தாண்டு நிறைவின்போது இது நிகழ்ந்திருப்பதேயாகும்.
மேலும் G-7 இன் சந்திப்பின்போது
ஜப்பானின் உத்தியோகபூர்வ தகவல்கள், கடந்த பத்தாண்டுகளில் அதனது பொருளாதாரம் மூன்றாவது கட்ட மந்தநிலையை
அடைந்துள்ளதையும், இதன் விளைவான பணவீக்கம் பங்குச்சந்தை பெறுமதிகளை கடந்த 18 வருடங்களில் இல்லாத
அளவிற்கு கீழிறக்கியுள்ளதுடன் முக்கிய வங்கிகளை நெருக்கடிக்குள் இட்டுச்சென்றுள்ளதை காட்டுகின்றது.
இப்பிரச்சனைகளில் ஏதாவது, உலகின் முக்கிய நிதிப்பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தில்
கலந்துரையாடப்படும் என கருதப்பட்டிருக்கலாம். ஆனால் G-7
சந்திப்பு பின்வரும் பழமொழியின்படி நிகழ்ந்ததாக தோன்றுகின்றது. அதாவது நிலைமை எவ்வளவிற்கு மோசமாகவுள்ளதோ
அந்தளவிற்கு உத்தியோகபூர்வமானவர்களின் அறிவிப்புக்களில் வார்த்தைகள் மனதிற்கு ஆறுதல் தருவதாகவுள்ளது.
நிதியமைச்சர்களின் அறிக்கைகளில் ''விரிவாக்கத்தின் திருப்பம்'' ''பொதுவாக பலமடைகின்றது''
என குறிப்பிட்டனர். ''அபாயங்கள் எதுவுமில்லை'' என கவனத்திற்கு எடுத்த அவர்கள் தாம் ''விழிப்பாக இருக்க''
அர்ப்பணித்துள்ளதாகவும் ''ஒரு உறுதியானதும், நிலையானதுமான மீட்சியை கொண்டுவருவதற்காக பொருத்தமான நடவடிக்கைகளை''
எடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.
எதிர்வருவதை குறிப்பிடுவதுபோல் ஒரு பத்திரிகை அறிக்கையானது ''கூட்டத்தின் அறைகூடங்களில்
நம்பிக்கை முரசு ஒலித்ததாக'' குறிப்பிட்டது. இது 2001 இன் இறுதி காலாண்டில் 0.2% இற்கு மேற்படாத அமெரிக்காவின்
பொருளாதார அதிகரிப்பையும், அமெரிக்க திறைசேரி செயலாளரான
Paul O' Neill இன் கருத்தான அமெரிக்க பொருளாதாரம் இவ்வருட இறுதியில் 3% இருந்து 3.5%
ஆக அதிகரிக்கும் என கூறியதையும் அடித்தளமாக கொண்டிருப்பதாக தெரிகின்றது.
பொருளாதார எதிர்பார்ப்புகள் தொடர்பாக பேசும் உத்தியோகத்தர்களில் போல் ஒ
நெய்ல் (Paul O' Neill) ஒருவர் மட்டுமே அல்ல.
ஐரோப்பிய மத்திய வங்கி தலைவரான விம் டுய்சென்பேர்க் (Wim
Duisenberg) படி: "2001 இன் இறுதியில்
இருக்காது என்று கூறப்பட்ட உலகப் பொருளாதாரத்தின் மந்தநிலை பற்றிய அபாய நேர்வு தற்போது மறைந்து
விட்டிருப்பதாகத் தோன்றுகிறது என்று கூறுவது இப்பொழுது பாதுகாப்பானதாக இருக்கிறது.''
வரலாற்றில் பெரிய சுதந்திரமான நாட்டினது கடன் திரும்ப செலுத்தாமையினது நிலை
என்ன? ''ஆர்ஜென்டீனாவின் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளின் சரியான திசைகுறித்து நாங்கள் வரவேற்கின்றோம்''
என உத்தியோகபூர்வமான அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதில் மேலும் ''நாங்கள் அவர்களை சர்வதேச நாணய
நிதியத்துடனும், சர்வதேச சமூகத்துடனும் அபிவிருத்திக்கான வாய்ப்பினையும், எதிர்கால வெளிநாட்டு முதலீட்டினையும்
நீடிக்கும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியானதுமான ஒரு உறுதியான பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்காக
இணைந்து நெருக்கமாக இயங்குமாறு உற்சாகப்படுத்துகின்றோம்'' என குறிப்பிட்டது.
நிச்சயமாக ஆர்ஜென்டீனாவின் அழிவிற்கான காரணம் சர்வதேச நாணய நிதியத்தால் கடந்த
பத்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின் விளைவாகத்தான் உருவானது என்பது தொடர்பாக அதில் குறிப்பிடப்படவில்லை.
இந்நெருக்கடி தடுக்கப்பட்டிருக்கலாமா என கேட்கப்பட்டதற்கு, அமெரிக்க திறைசேரி செயலாளரான
Paul O' Neill ''என்ன செய்யப்பட்டிருக்கலாம் என
எனக்கு தெரியாது'' என பதிலளித்தார்.
உலகப் பொருளாதார மந்தநிலையானது மறைவதாக குறிப்பிடப்படும் எதிர்பார்ப்பிற்கு
மத்தியிலும், ஆர்ஜென்டீனாவின் அழிவுகள் முடிந்துவிட்டதாகவும், தொடர்ச்சியான மந்தநிலைமையும் ஜப்பானின்
நிதிநெருக்கடியும் ஒரு குறிப்பிட்டளவிலும் கூட G-7 இன் அறிக்கையில்
குறிப்பிடப்படவில்லை.
வால் ஸ்ட்ரீட் (Wall
Street Journal) பத்திரிகையானது மாநாடு பற்றிய அதன் செய்தி அறிக்கையில்,
ஜி-7 "அதன் காலாண்டு அறிக்கைகளில் முக்கிய G-7 மண்டலங்களில்
உள்ள பொருளாதார நிலைமை குறித்து வழமைபோல் மதிப்பீட்டை வழங்கும், ஆனால் உலகின் இரண்டாவது பெரிய
பொருளாதாரமான ஜப்பானை சங்கடத்திற்கு உள்ளாக்காமல் தவிர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இம்முறை
அவ்வாறு செய்வதைத் தள்ளி வைத்திருப்பதாக சில அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக" குறிப்பிட்டது.
கடந்த பத்தாண்டுகளாக G-7
மாநாட்டிற்கு வருகைதரும் ஜப்பானிய நிதித்துறை அதிகாரிகளைப்போல், தற்போதைய நிதியமைச்சரான மசாஜூரோ
ஷியோக்காவா (Masajuro Shiokawa) ஜப்பானின் தற்போதைய
பொருளாதாரம் தொடர்பான விபரமான புள்ளிவிபரங்களையும், வழங்கப்படாத கடன்களையும் பண மதிப்பிறக்கத்தையும்
உடனடியாக இல்லாதொழிப்பதற்கான முன்மொழிவுகளையும் தான் வழங்கியதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் ''ஆரம்பத்தில் கேள்விகளையும் ஆலோசனைகளையும் நான் கேட்டேன்,
ஆனால் அங்கு ஒருவரும் இல்லை" என்றார். "ஒவ்வொருவரும் குறிப்பு எடுப்பதிலும், ஊக்கமளிக்கும் வகையில் தலையாட்டிக்கொண்டிருப்பதிலும்
முனைப்பாய் இருந்தனர்'' என்று குறிப்பிட்டார்.
எப்போதும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் நிதி உடைவினை தவிர உலகப் பொருளாதாரத்தை
அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பாரிய அபாயம் ஜப்பானில் இருந்து வரும் ஜென்னின் (Yen)
பெறுமதியின் வீழ்ச்சியாகும். கடந்த 15 மாதங்களில் அதன் பெறுமதி 15 வீதம் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து உலகச்சந்தையில்
போட்டி இடக்கூடியதாக இருப்பதற்காக சீனா தனது பணத்தை மதிப்பிறக்கம் செய்யவேண்டியிருக்கும் எனவும், அதனைத்
தொடர்ந்து கிழக்காசிய பிராந்தியத்தில் பணத்தின் மதிப்பிறக்க தொடர்ச்சி ஒன்றை உருவாக்கிவிடும் என்ற அச்சத்தை
உருவாக்கியது.
இவ்விரண்டு பிரச்சனைகளும் ஒருவராலும் கலந்துரையாடப்படவில்லை. ஒரு அறிக்கை குறிப்பிட்டதைப்போல்
''இம்மாநாடு வெளிநாட்டு பரிமாற்று சந்தைகளுக்கு அசைபோடுவதற்கு சிறியளவையே வழங்கியுள்ளதுடன், ஒரு
உடையும் சந்தையை அவர்கள் பார்க்க விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டின''. அவ்வறிக்கை ''நாங்கள் பரிமாற்ற
சந்தைகளை நெருக்கமாக கவனித்துவருவதாகவும், பொருத்தமாக இணைந்து இயங்குவதாகவும்'' குறிப்பிட்டது.
கடினமான பிரச்சனைகள்
எவ்வாறிருந்தபோதும் G-7
இடம் ஆய்வுகள் எதுவுமில்லை. மேலும் முன்னெடுப்புக்கள் குறித்து குறிப்பிடவே தேவையில்லை. இது முக்கிய நிதித்துறை
அதிகாரிகளின் இயலாமையின் விளைவல்ல, மாறாக அண்மைக்காலத்தில் பொருளாதார வரலாற்றை பார்க்கையில் தெரிவது,
இது உலக முதலாளித்துவப் பொருளாதாரம் எதிர்நோக்கும் கடினமான பிரச்சனைகளின் வெளிப்பாடாகும்.
1990 இன் முழுப்பத்தாண்டு காலத்தையும் இரண்டு பகுதிகளாக பிரித்தால், முதலாவது
பகுதியில் கிழக்காசியாவின் ''பொருளாதார அதிசயம்'' ஆரம்பத்தில் ஜப்பானினதும் பின்னர் அமெரிகாவினதும் நிதியுதவிகளால்
ஊக்குவிக்கப்பட்டு உலகப் பொருளாதாரத்தின் 50% வளர்ச்சிக்கு பங்களித்தது. எவ்வாறிருந்தபோதும் 1995 இன் பின்னர்
பொருளாதார வளர்ச்சிகான முக்கிய ஊற்றான அமெரிக்க டொலரின் மறுமதிப்பீடு அமெரிக்காவின் நிதிப்பெருக்கத்திற்கான
காரணமானது. இப்போக்கானது 1997-1998 ஆசிய நிதிநெருக்கடியின் பின்னர் தீவிரமடைந்தது.
Morgan Stanley நிறுவனத்தின்
பொருளாதாரவாதிகளின் கணிப்பீடுகளின்படி அமெரிக்காவின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் அதிகரிப்பானது 2000 ஆம்
ஆண்டின் மத்தியில் முடிவடைந்த அடுத்துவந்த 5வருட உலகத்தின் மொத்த உற்பத்தியின் அண்ணளவான 40% வளர்ச்சிக்கு
காரணமாக இருந்ததுடன், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்கை இரண்டு மடங்காக்கியது. இக்காலகட்டத்தில்
தேவைகளுக்கான அதிகரிப்பு உலகத்தின் 1.8% உடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவினது 4.9% ஆக இருந்தது. வேறுவார்த்தைகளில்
கூறுவதானால், அமெரிக்க பொருளாதார விரிவாக்கமானது உலகத்தை தனக்கு பின்னால் இழுத்துச்சென்றது. இந்தப்போக்கு
தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
உலக விரிவாக்கத்திற்கான புதிய ஊற்றினை எங்கு கண்டுபிடிப்பது? ஜப்பானில்
கண்டுகொள்ளமுடியாது. ஏனெனில் அது ஆழமான வீழ்ச்சிக்குள் சென்றுகொண்டிருப்பதுடன், மார்ச் 31ம் திகதி
முடிவடையும் நிதிவருடத்திற்கான பொருளாதார சுருக்கத்தை ஆகக்குறைந்தது 1% ஆக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐரோப்பா எதிர்வரும் மாதங்களில் ஒரு அதிகரிப்பை காணலாம். ஆனால் இது உலக விரிவாக்கத்தினை
தாக்குப்பிடிக்குமளவிற்கு இருக்காது.
இது அமெரிக்காவிடமே கையளிக்கப்பட்டுள்ளது. இங்கு மிதமிஞ்சிய கையிருப்பினாலும்,
பாவனையாளர்களினது செலவானது கடன்படும் மட்டத்திற்கு அதிகரித்தமையாலும் தொழிற்துறை தனது முதலீடுகளை
வெட்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு போதுமான, அமெரிக்காவினது வளர்ச்சியின் மட்டமானது,
இது தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.5% ஆக இருக்கும் அமெரிக்க செலுத்துமதியின் நிலுவை
பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க இட்டுச்செல்லும். அதனைத் தாக்குப் பிடிப்பதற்கு, இப்படியான செலுத்துமதி
இடைவெளியானது மறுபக்கத்தில் உலகத்தின் எஞ்சிய பகுதிகளில் இருந்து நிதி உட்பாய்ச்சலை வேண்டிநிற்கும். தற்போது
இது நாள் ஒன்றிற்கு $1 பில்லியனுக்கும் $2 பில்லியனுக்கும் இடையில் இருக்கிறது.
வேறுவார்த்தைகளில் கூறுவதால், உலக முதலாளித்துவ பொருளாதாரம் எதிர்நோக்கும்
உடனடி பிரச்சனைகளை கவனமாக ஆராயும்போது, அவை ஆழமான உள்ளடங்கியுள்ள முரண்பாடுகளில் இருந்து தோன்றுவதை
எடுத்துக்காட்டுகின்றது. சிலவேளை இதனால் தான் G-7
இன் நிதித்துறை அதிகாரிகள் இவற்றை எவ்வளவு விரைவாக கடக்க
முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்க முயல்வது நல்லது என நினைத்திருக்கலாம்.
|