:
ஐக்கிய அமெரிக்கா
Kissinger resigns as head of September 11 probe
செப்டம்பர் 11 - விசாரணைக் கமிஷன் தலைவர் பதவியிலிருந்து
கிஸ்ஸிங்கர் ராஜினாமா
By Patrick Martin
16 December 2002
Use this version to print |
Send this link by email
| Email the author
செப்டம்பர் 11-ந்தேதி நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு,
ஜனாதிபதி புஷ், நியமித்த ஒரு தரப்பு விசாரணைக் கமிஷன் தலைவர் ஹென்றி கிஸ்ஸிங்கர், நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களில்
ராஜினாமாச் செய்துவிட்டார். இந்தச் சம்பவங்களில் அமெரிக்க, இராணுவ, புலனாய்வு அமைப்புகளின் பங்கை, விசாரிக்க,
எந்த முயற்சி எடுத்தாலும், அதற்கு எவ்வளவு கடும் எதிர்ப்பு அரசு மட்டத்தில் நிலவுகின்றது என்பதை இந்தப் பதவி
விலகல் எடுத்துக்காட்டுகின்றது.
உலக வர்த்தக மையக் கட்டிடத்திலும், பென்டகனிலும் ஏறத்தாழ 3000 அப்பாவி மக்கள்,
வெந்து மடிந்து 18 மாதங்களுக்குப் பின்னரும், அமெரிக்க வரலாற்றிலேயே, மிகப்பெரிய பாதுகாப்பு, தோல்விக்கு,
எந்த ஒரு அதிகாரியும் பொறுப்புச் சாட்டப்படவில்லை. இப்படி விடாப்பிடியாக புஷ் நிர்வாகம், தடைக்கல்லாகவே
செயல்பட்டுக்கொண்டிருக்குமானால், புஷ் நிர்வாகம் எதையோ மறைக்க விரும்புகிறது என்ற முடிவிற்கு, மேலும் மேலும்
மக்கள் வரவேண்டிய கட்டாயம் ஏற்படவே செய்யும்.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதி மாளிகைக்கு ஒரு கடிதத்தை
அனுப்பினார். விசாரணைக் கமிஷன் தலைவர் என்ற முறையில், அவர், "நலன்கள் முரண்பாட்டை சந்திக்க
வேண்டியிருக்கும் என கூறப்பட்டதை அவர் கடுமையாக தனது கடிதத்தில் கண்டித்தார். "கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ்"
என்ற அவரது ஆலோசனை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக, பாரசீக வளைகுடா நாடுகளின் மன்னர்கள்,
பிரம்மாண்டமான அமெரிக்க கம்பெனிகள் இருப்பதாகவும், அவர்கள் அவரது ஆலோசனை நிறுவனத்திற்கு கொழுத்த கட்டணங்கள்
தருவதாகவும் கூறப்பட்டது.
உயர் அரசு பதவிகளுக்கு நியமிக்கப்படுவோர், வழக்கமாக, தங்களது நிதி நிலவரம் குறித்து
அறிவித்துவிடவேண்டும். இந்த நிபந்தனையிலிருந்து கிஸ்ஸிங்கருக்கு விலக்கு அளிக்க புஷ் நிர்வாகம் விரும்பியது. ஏனெனில்,
அவர் ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். காங்கிரஸ் அவரை நியமிக்கவில்லை. மத்திய அரசின் ஊதியம்
எதுவும் பெறாமல் அவர் பகுதி நேரப் பணி செய்தார். இந்த விதிவிலக்கிற்கு, செப்டம்பர் 11 - தாக்குதலில் பலியானவர்களது
குடும்பங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஜனநாயக, மற்றும்
குடியரசுக் கட்சிக்காரர்கள் இணைந்து கிஸ்ஸிங்கர், வழக்கமான நிதி ஆதார தகவல் தரும் நடைமுறையைப் பின்பற்ற
வலியுறுத்தினர்.
கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் - தனியார் நிறுவனம் அவர் நிக்சனுக்கு உதவியாளராக
இருந்தபோது இதை நிறுவினார். அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எந்தவிதமான
தொழில்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்ற தகவலும் தரப்படவில்லை. பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ள
விவரங்களில், கிஸ்ஸிங்கருக்கு கட்டணங்கள் தரும் பெரிய நிறுவனங்கள் பட்டியலில், எக்ஸான் மொபில்
(ExxonMobi), ä®®
(ITT), அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
(American Express), அன்ஹீஸர் புஷ்
(Anheuser-Busch), கொக்கோ-கோலா
(Coca-Cola), மற்றும்
H.J. ஹைன்ஸ்
(H.J. Heinz) போன்ற பெரிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
புஷ்சிற்கு, கிஸ்ஸிங்கர் எழுதியுள்ள கடிதத்தில், செப்டம்பர் 11 - நிகழ்வுகள் பற்றிய
முழு விசாரணைக்கும், தனது வாடிக்கையாளளின் நலன்களுக்கும் இடையில் மோதல் எதுவும் இல்லை என விளக்கினார்.
ஆனால், "இந்தக் கருத்து வேறுபாடுகள் விரைவில் நான் சொந்தமாக உருவாக்கி வைத்திருக்கும் ஆலோசனை
நிறுவனத்திற்குள் தாவிவிடும்" என அவர் அச்சம் தெரிவித்தார்.
"ஸிங்கர் அசோசியட் நிறுவனங்களை நீக்கிவிடுவதற்கு கமிஷனின் பணிகளை குறிப்பிட்ட
அளவிற்கு தாமதப்படுத்தாமல் நிறைவேற்ற முடியாது. எனவே நான் இந்த விசாரணைக் கமிஷன் தலைவர் பொறுப்பை
ஏற்க முடியாது என்ற முடிவிற்கு வந்தேன்" என கிஸ்ஸிங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
டிசம்பர்-13 - வெள்ளியன்று கிஸ்ஸிங்கர் பதவி விலகினார். அதற்கு இரண்டு நாட்களுக்குப்
பின்னர் கமிஷனின் துணைத்தலைவராக, அறிவிக்கப்பட்ட, முன்னாள் ஜனநாயகக் கட்சி செனட் சபை பெரும்பான்மை தலைவர்
ஜோர்ஜ் மிற்சேலும் ராஜினாமா செய்தார். இந்தக் கமிஷனின் பணிகள் பகுதி நேர அலுவலகமாயிருக்க முடியாது.
பதினெட்டு மாத விசாரணைக் காலத்தில் தான் தனது நியூயோர்க் சட்ட நிறுவனத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ள
முடியாது, என்று ஜோர்ஜ் மிற்சேல் தெரிவித்தார்.
1994-ம் ஆண்டு செனட் சபை உறுப்பினர் பதவிக்குப் பின்னர், கிளிண்டன் நிர்வாகத்தின்
வெளிநாட்டு கொள்கை நெருக்கடிகளை தீர்த்துவைக்கும் பணியில் ஈடுபட்டார். வடக்கு அயர்லாந்து மற்றும் இஸ்ரேல்
பாலஸ்தீன தகராறு ஆகிய பிரச்சனைகளில் கிளிண்டனின் பிரதிநிதியாக செயல்பட்டார். இதுபோன்ற தகராறுகள் சிக்கலானவை
இழுபறி நிலையில் சென்றுகொண்டு இருப்பவை. அதுபோன்ற சிக்கல்கள் அவரை நிலைகுலைய செய்ய முடியவில்லை. ஆனால்
செப்டம்பர்11 பற்றிய விசாரணையில் உள்ள படுகுழிகள் அவரை நிலைகுலையச் செய்துவிட்டன.
அவர் விலகியதும் - செனட் சபை மற்றும் கீழ் சபை ஜனநாயக கட்சிக்காரர்கள்,
முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் லீ ஹாமில்டனை மிற்சலுக்கு பதிலாக, தேர்ந்தெடுத்தனர். ஆனால், கிஸ்ஸிங்கருக்கு அடுத்த
தலைவரை வெள்ளை மாளிகை இன்னமும் அறிவிக்கவில்லை. விசாரணைக் கமிஷனில் குடியரசுக் கட்சியினருக்கு ஐந்து
உறுப்பினர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரே ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வாஷிங்டன்
மாநிலத்தைச் சேர்ந்த செனட் சபையின் முன்னாள் உறுப்பினர், சிலாட் கோர்ட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்
நடைபெற்றிருந்தபோதும், அதை பற்றிய தீவிர விசாரணை எதுவும் நடைபெறாமல் புஷ் நிர்வாகம் நீண்ட காலமாக
தடைக்கற்களை உருவாக்கி வந்திருந்ததோடு அதன் ஓர் பாகமாகவே கிஸ்ஸிங்கர் நியமனம் இடம்பெற்றது.
செப்டம்பர்-11 - முதல், எந்த விசாரணையையும், வெள்ளை மாளிகை எதிர்த்தது. அதற்குப்பின்னர், கடுமையாக
கட்டுப்படுத்தப்பட்ட விசாரணை கீழ்சபையிலும் செனட்டிலும் உள்ள புலனாய்வு கமிட்டிகளிலும் நடத்துவதற்கு இசைவு தெரிவித்தது.
இந்த இரண்டு கமிட்டிகளிலும் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மத்திய உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ. மற்றும் மத்திய புலனாய்வு
அமைப்பான எப்.பி.ஐ ஆகியவற்றோடு நெருக்கமான உறவு கொண்டவர்களாவர்.
உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் தாக்குதல் பலியானவர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்
குறிப்பாக, முதலாண்டு நினைவு நாளில் வெள்ளை மாளிகை தன்னுடைய பிடிவாதத்திலிருந்து இறங்கி வர நிர்ப்பந்தம்
கொடுத்ததோடு வாய்மொழியாக, விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை அந்தக் குடும்பங்களைச்
சார்ந்தவர்கள் பெற்றனர். உடனடியாக, இந்த உடன்பாட்டிற்கு எதிராக, வெள்ளை மாளிகை செயல்படத் துவங்கியது.
தேசிய பாதுகாப்பு இலாகாவின் சட்டத்தில் விசாரணைக் கமிஷன் அமைப்பது, தொடர்பான வாசகங்களை மாற்றின.
விசாரணைக் கமிஷன் முடிவுகள் மீது, ரத்து செய்வதற்கு புஷ் நிர்வாகத்திற்கு அதிகாரம்
வழங்கும் இரண்டு அம்சங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்தான், வெள்ளை மாளிகை காங்கிரஸ் தீர்மானத்தை ஆதரிக்க
உடன்பட்டது. இந்த இரண்டு முக்கிய அம்சங்களிலும், ஜனநாயக கட்சிக்காரர்கள் தங்களது நிலையிலிருந்து மாறி புஷ்
நிர்வாகத்திற்கு உடன்பட்டனர். புஷ், விசாரணைக் கமிஷன் தலைவரை நியமிப்பார். சம்மன் எதுவும் அனுப்புவதற்கு
10-பேரில் 6-பேர் ஆதரவு தெரிவிக்கவேண்டும். இதன் மூலம் புஷ் நிர்வாக அதிகாரிகளுக்கு வெள்ளை மாளிகை
சம்மன் அனுப்ப விரும்பினால், குடியரசுக் கட்சியைச் சார்ந்த விசாரணைக் கமிஷனின் ஐந்து உறுப்பினர்களும், அதை தடுத்து
நிறுத்தி விடுவர்.
கடைசியாக, இயற்றப்பட்டுள்ள விதிகளின்படி, குடியரசு கட்சியின் இரண்டு செனட்டர்கள்
செயல்பாட்டு நிபந்தனை தளர்த்தப்பட்டது. அந்த இரண்டு செனட்டர்களும், குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் ஒருவரை தேர்ந்தெடுக்கும்
அதிகாரம் பெற்றனர். அவர்கள் இருவரும், நியூ ஆம்ஸ்ஷேரின் முன்னாள் செனட்டர் வாரன் ருட்மன் பெயரை
முன்மொழிந்தனர். ஆனால், செனட் சபையின் குடியரசுக்கட்சி உறுப்பினரான
Trent Lott அந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
ஏனெனில், வாரன் ருட்மன் செப்டம்பர்-11 தாக்குதலுக்கு முன்னர் சி.ஐ.ஏ. மற்றும் எப்.பி.ஐ. பங்கு குறித்து அவர்
மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்..
கிஸ்ஸிங்கரை தேர்ந்தெடுத்ததன் மூலம் புஷ் நிர்வாகம் செப்டம்பர்-11 அன்றும் அதற்கு
முன்னரும், அமெரிக்க அரசாங்கத்தின், செயல்பாட்டை மூடி மறைக்கும் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்தது. வியட்நாம்
போரில் ஏழு ஆண்டுகள் அந்தப்போர் நீடிக்க காரணமாக இருந்து, முப்பதாயிரம் அமெரிக்கர்களும் பத்து லட்சம் வியட்நாம்
மக்களும், பலியாவதற்கு, காரணமாகயிருந்தவருக்கு பலியான மூவாயிரம் அமெரிக்கர்கள் பற்றி கவலை என்ன?
வியட்நாம் போரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு
அமைப்புக்கள் பங்குகொண்ட சட்ட விரோத இரத்தம் சிந்தும் அத்தனை நடவடிக்கைகளிலும், கிஸ்ஸிங்கருக்கு நேரடியாக
தொடர்பு உண்டு. கம்போடியாவில் நடைபெற்ற இரகசிய குண்டு வீச்சுத் தாக்குதல், சிலி நாட்டில் சி.ஐ.ஏ.
துணையோடு நடத்தப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி இந்தோனேஷியாவில் தொடங்கி பாகிஸ்தான், கிறீக் மற்றும் லத்தீன்
அமெரிக்கா முழுவதிலும் காட்டுமிராண்டித்தனமான இராணுவ சர்வாதிகாரங்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.
சென்ற புதன்கிழமை ஓர் நெருக்கடியான கட்டம் கிஸ்ஸிங்கரின் செயல்பாட்டிற்கு உருவாயிற்று,
செப்டம்பர்-11 தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த தூதுக்குழுவினர் கிஸ்ஸிங்கரின் நியூயோர்க் அலுவலகத்திற்கு
வந்து விசாரணைக் கமிஷன் தலைவரின் நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க விரும்பினர். அப்போது விசாரணைக்
கமிஷன் தரவேண்டிய பதில்கள் என்று சில கேள்விகளை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த வினாக்களின் பட்டியலில்
கீழ்கண்ட கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக, அந்த தூதுக்குழுவின் சார்பில் ஒருவர் தெரிவித்தார்:-
* அமெரிக்காவின் குடியேற்ற மற்றும்
பிரஜா உரிமை சேவை, விமானம் கடத்திய பலரை ஏன் அமெரிக்காவின் விமான பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற
அனுமதித்தது?
* செப்டம்பர்-11ல் தாக்குதல் தொடங்கியதும்,
நியூயோர்க் மற்றும் வாஷிங்டனை பாதுகாப்பதற்கு நாட்டின் விமானப்படை பாதுகாப்பு அமைப்பிடம் விமானங்கள்
எதுவும் ஏன் இருக்கவில்லை?
* சி.ஐ.ஏ. கண்காணிப்பு பட்டியலில்
எத்தனை விமான கடத்திகள் இடம்பெற்றிருந்தனர்? அவர்களில் எவராவது, புலனாய்வு ஏஜென்டுகளுக்கு தெரிந்திருந்தால்,
அந்த விபரம் எப்.பி.ஐ. மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்திற்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை?
கிஸ்ஸிங்கருக்கு ஒன்று தெளிவாக தெரிந்துவிட்டது. அமெரிக்க அரசின் செயல்பாட்டை மூடி
மறைக்க அவர் மேற்க்கொள்ளும் முயற்சி குறித்து பொதுமக்களிடையே இதுவரையில்லாத அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டு
கேள்விக்கணைகளை தொடுப்பர் என்பது புரிந்துவிட்டது.
கிளி-பிள்ளைப்போல் புஷ் நிர்வாகம் திடீரென்று சற்றும் எதிர்பாராத வகையில்
தாக்குதல் நடந்துவிட்டதாக தொடர்ந்து கூறி வருகின்றது. இது மிகவும் அபத்தமான நிலை. இதைப் பற்றி விசாரிக்காமல்,
மேலே கண்ட கேள்விகளை எழுப்புவதும், பதில் தருவதும், இயலாத காரியம். செப்டம்பர்-11-ந்தேதி, நிகழ்ச்சிகள்
அனுமதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது நேரடியாக அரசாங்கமே ஏற்பாடு செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கு இடம்
இருக்கிறது. அரசு உயர்மட்டத்தில் இதுபோன்று ஓர்நிலை எடுக்கப்பட்டிருக்கலாம். உலகம் முழுவதிலும் அமெரிக்காவின்
இராணுவ ஆக்கிரமிப்பை தொடங்குவதற்கு சாக்காக, பிரளயம் போன்ற ஒரு சம்பவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்.
கிஸ்ஸிங்கர் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படும், தொழில் நிறுவனங்கள் தொடர்பான கேள்விகள்
மிகவும் கடுமையானவை. வெளியுறவு அமைச்சராக இருக்கும்போது, அவர் சர்வதேச "ஆலோசனை" அமைப்பு மூலம்
கோடிக்கணக்கான டாலர்களை, சம்பாதித்தவர். இவற்றில் பெரும்பகுதி பணம் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்யும்
கம்பனிகளிலிருந்து கிடைத்தவை.
அவரது அடிப்படையை பின்பற்றி இன்றைய ஜனாதிபதியின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி
ஜோர்ஜ் எச்.டபில்யூ.புஷ் செயல்பட்டிருக்கிறார். கார்லைல் குழு பிரதிநிதியாக கோடிக்கணக்கான டாலர்களை அவர்
சம்பாதித்திருக்கிறார். அது தனியார் முதலீட்டு நிறுவனம் பல ஆண்டுகள், அந்த நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளர்களில்
சவுதி அரேபியாவின் பின் லேடன் குடும்பத்தினர் சம்மந்தப்பட்டிருந்தனர்.
புஷ் பதவி ஏற்றதும் பின்லேடன் குடும்பத்தினர் தொடர்பான, அமெரிக்க விசாரணையை
ரத்து செய்தார். அந்தக் குடும்பத்தினரை புஷ் நிர்வாகத்தின் ஒப்புதலோடு செப்டம்பர்-11-க்குப் பின்னர் சில நாட்களில்
சவுதி அரேபியாவிற்கு திரும்ப அனுப்பி வைத்தார்.
கிஸ்ஸிங்கர் பல்வேறு ஐரோப்பிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், நீதிமன்ற விசாரணைக்காக
நாடப்படுபவர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். 1969-முதல் 1976-வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும்,
வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள், கொலைப்
படைகள் மூலம் நடாத்திய கொலைகள் ஆகியவை தொடர்பாக அவர் மீது பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களில் வழக்குகள்
உள்ளன. செப்டம்பர்-11 - நிகழ்ச்சிகள் தொடர்பாக தீவிரமான விசாரணை எதுவும் மேற்கொள்ளப்பட்டால் தற்போது
அமெரிக்க அரசில் பணியாற்றிக்கொண்டுள்ள பல தலைவர்கள் அதேபோன்று சட்டம் மற்றும் அரசில் ஆபத்துக்களில்
சிக்கிக்கொள்ளக்கூடும்.
See Also :
அதிகாரபூர்வ
விசாரணைக்கு புஷ், கிஸ்ஸிங்கரை தேர்ந்தெடுத்தார்: செப்டம்பர்-11 நிகழ்வுகளின் பின்னணியை மூடிமறைப்பதில் புதிய
கட்டம்
செப்டம்பர் 11 விசாரணையிலிருந்து
தப்பி ஓட வெள்ளை மாளிகை ஆத்திரமூட்டலை பயன்படுத்துகிறது
செப்டம்பர் 11 விசாரணை
தொடக்கம்; புஷ், காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்கை மூடி மறைக்க முயற்சி
சதியும் மூடி மறைப்பும்: புஷ்
நிர்வாகமும் செப்டம்பர் 11ம்
அமெரிக்க
அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?
பகுதி
1: முன்கூட்டிய எச்சரிக்கைகள்
பகுதி 2: விமானக் கடத்தல்காரர்களைக்
கண்காணித்தல்
பகுதி 3: அமெரிக்க ஐக்கிய அரசுகளும்
மத்திய கிழக்கு பயங்கரவாதமும்
பகுதி 4: விசாரணை செய்ய மறுப்பு
Top of page
|