World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French right reorganises in new party

பிரெஞ்சு வலதுசாரிகள் புதிய கட்சி ஒன்றினுள் தம்மை மீழ் ஒழுங்கமைத்துள்ளனர்

By Francis Dubois
11 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 17-ந்தேதி பாரீஸ் நகருக்கு அருகே லு பூர்ஜே (Le Bourget) என்னும் இடத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், பிரெஞ்சு முதலாளித்துவ பாரம்பரிய கட்சிகள் புதிய ஒரு அமைப்பில் ஒன்றுபடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். புதிய கட்சிக்கு, மக்கள் இயக்கத்திற்கான கூட்டு (Union pour un Mouvement Populaire [UMP]) என பெயர் சூட்டியுள்ளனர்.

புதிய இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்படவுள்ள கோலிச கட்சியான, குடியரசுக்கான அணிதிரள்வு (RPR) உடன் தாராளவாத கட்சிகளான ஜனநாயக தாராளவாதிகள் (DL) மற்றும் பிரெஞ்சு ஜனநாயகத்திற்கான ஐக்கியம் (UDF) ஆகியவை இணைந்து செயல்பட முன்வந்துள்ளன. புதிய கட்சியின் தலைமை, இன்றைய பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக்கின் நெருங்கிய நண்பரும் 1995-97ம் ஆண்டுகளில் பிரதமராக பணியாற்றியவருமான அலன் யூப்பே (RPR) க்கு கிடைத்திருக்கின்றது.

"எமது யூனியன் (UMP) நிறுவப்பட்டிருப்பது அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கின்றது. கோலிஸ்ட்டுகள், கிறிஸ்துவ ஜனநாயக கட்சியினர், லிபரல்கள், தீவிரவாத குழுக்கள் மற்றும் சமுதாய மற்றும் சுதந்திர செயல்பாடு உள்ளவர்கள் ஆகிய அனைவரும் தற்போது முதல் தடவையாக ஒன்றுபட்ட ஒரு பெரிய இயக்கத்தில் இணைந்திருக்கிறோம். இப்படி செய்யும்போது நம்முடைய பழைய வரம்புகளைக் கடந்து இணைகின்றோம்'' என அந்த கட்சிகளின் இணைப்பு அறிக்கை தெரிவிக்கின்றது.

எப்படியிருந்தபோதும், பிரெஞ்சு பூர்வீக வலதுசாரி அணியினர் அனைவரும் UMP ஸ்தாபிதத்தில் பங்குபெறவில்லை. பிரான்சுவா பேய்ரு தலைமையில் செயல்பட்டு வரும் UDF இன் ஒரு பிரிவு இந்த புதிய அமைப்பில் இணைவதற்கு மறுத்துவிட்டனர். RPF யைச் சேர்ந்த சார்ல்ஸ் பஸ்குவா உட்பட இதர கோலிஸ்ட் தலைவர்கள் மற்றும் RPR இன் முன்னாள் தலைவர் பிலிப் செகோன் ஆகியோர் UMP உருவாக்கப்பட்டதை கடுமையாக கண்டித்தனர். அவர்கள் இருவரும் ஐரோப்பிய ஐக்கியத்திற்கு எதிராக செயல்படும் தலைவர்களாவர்.

பொதுமக்களது ஆதரவை பெற்று, செயல்படுகின்ற கட்சி UMP என்று அடையாளம் காட்டுவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டு அமைப்பாளர்கள் இதை ஒருவரலாற்று சம்பவமாக வர்ணித்தனர். பெருமளவில் மக்களை திரட்டிக்காட்ட விரும்பினர்; இதற்காக, பிரான்ஸ் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 15,000 மக்கள் திரட்டி கொண்டுவரப்பட்டனர். அந்த மாநாடு புதிய பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் அந்த அரசாங்கத்தின், வலதுசாரி தலைவர்களது கொள்கைகளை சிறப்பித்து கொண்டாடுவதற்கு ஓர் அரங்காக பயன்பட்டது. UMP கட்சியின் உண்மையான தலைவரான ஜாக் சிராக் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அதிபருக்கும், அவரது சகாவான யூப்பேக்கும் தேர்தலில் கைத்தடியாக பயன்படுவதற்கு உருவாக்கப்பட்டிருப்பதுதான் UMP என சிராக்கின் எதிரிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு மேலும் ஓர் சந்தர்ப்பத்தை தரவிரும்பாது தவிர்க்கும் நோக்கில் சிராக் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

புதிய கட்சி சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும், தனது உறுப்பினர்களை கொண்டிருப்பதாக கூறி வருகின்றது. குறிப்பாக, இளைஞர்கள், சாதாரண உழைப்பாளிகள் மற்றும் அறிவு ஜீவிகளை தன் பக்கம் ஈர்க்கவேண்டும் என்பது புதிய கட்சியின் நோக்கம். வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,64,500 ஆகும். இது அளவிற்கு அதிகமாக கற்பனையாக மதிப்பீடு செய்யப்பட்டிப்பதாக கட்சித் தலைவரே கூறுகிறார். உறுப்பினர்கள் எண்ணிக்கை, 80,000 வரை இருக்கலாம் என்பது சரியான தகவலாக இருக்கும். கட்சியின் பெயர், சின்னம், கொள்கைப் பிரகடனம், சட்ட திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்ட நேரத்தில் 30,000 பேர் மட்டுமே கலந்துகொண்டிருக்கின்றனர். புதிய அமைப்பின் தலைவராக அலன் யூப்பே 79.4% வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் எண்ணிக்கை 37,822 ஆகும்.

புதிய கட்சி பல்வேறு கட்சிகளில் இயங்குபவர்களின் ஒருங்கிணைப்பைத் தவிர, ஒரு வெகுஜன இயக்கமல்ல. தன்னை மிதவாத வலதுசாரியாக புதிய கட்சி அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகின்றது. அதனுடைய கொள்கை வரம்புகள் தெளிவாக சுட்டிக்காட்டப்படவில்லை. தெளிவில்லாமல் தங்களது அணுகுமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். பகிரங்கமாக வலதுசாரி கட்சியாக பிரகடனப்படுத்திக் கொள்வதா மற்றும் மிதவாத வலதுசாரி குட்டையில் ஆதரவை திரட்டிக்கொள்வதா என்பது குறித்து உண்மையான உடன்பாடு எதுவும் உருவாகவில்லை.

இதர நோக்கங்கள் என்று குறிப்பிடும்போது, பசுமை இயக்கத்தோடும், கத்தோலிக்க குழுக்களுடனும் போட்டி போட இப்புதிய கட்சி விரும்புகின்றது. இதற்காக, UMP தனது சொந்த சுற்றுப்புறச் சூழல் பிரிவான புளு இக்கோலஜி ("blue ecology") அமைப்பை வைத்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் கருச்சிதைவிற்கு எதிரான குழுவின் சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டின் புட்டன் (Christine Boutin) அவரது கட்சியுடன் UMPல் இணைந்திருக்கிறார். "Debout la France" எனப்படும் மன்னர் ஆட்சிக்கான இயக்கமும் இந்தக்கட்சியில் இணைந்திருக்கின்றது. புதிய செயற்குழுவிற்கு நடைபெற்ற தேர்தலில் இந்த மன்னர் ஆட்சிக்கட்சிக்கு 14.91% வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

தீவிர வலதுசாரி தேசிய அணியின் தலைவரான லு பென்னோடு இணைந்து செயல்பட விரும்பும் RPR-UDF கட்சிகளின் அரசியல்வாதிகளை UMP ஒதுக்கிவைத்திருக்கிறது. புதிய கட்சியில் சார்ல்ஸ் மில்லோன் (Charles Millon) மற்றும் ஜோன் பியர் சுவசோன் (Jean-Pierre Soisson) ஆகியோர் சேர விரும்புகின்றனர். அவர்களை நிரந்தரமாக விலக்கிவைக்க முடியாது என்று விவாதிக்கப்படுகிறது. ஏனெனில், மாநாடு முடிந்த இரண்டு நாட்களில் பிலிப் டு வில்லியே (Philippe de Villier) தலைமையில் செயல்படும் தீவிர வலதுசாரி இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் UMP கட்சியில் சேர்ந்துகொண்டனர்.

UMP இற்கான மாதிரி, ஸ்பெயின் நாட்டு மக்கள் கட்சியாகும் (Peoples Party [PP]). மாநாட்டில் ஸ்பெயின் நாட்டு மக்கள் கட்சி தலைவர், ஜோஸ் மரியா அஸ்நார் (Jose Maria Aznar) ஜேர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியனைச் சார்ந்த அங்கலா மெர்க்கெல் (Angela Merkel) மற்றும் போர்த்துகீசிய வலதுசாரி பிரதிநிதி ஜோஸ் மேனுவல் துரோ பரோசோ (Jose Manuel Durao Barroso) ஆகியோர் வெளிநாட்டு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஸ்பெயின் நாட்டில் 1989 முதல் ஜோஸ் மரியா மக்கள் கட்சியை மிகப்பெரிய இயக்கமாக நடத்தி வருகிறார். அந்தக் கட்சியில் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள், தாராளவாதிகள் மற்றும் பழைய பிராங்கோ கட்சி ஆதரவாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பழைய பிராங்கோ கட்சியான Allianza Popular இல்தான் ஜோஸ் மரியா தனது அரசியல் வாழ்வை துவக்கினார். ஐரோப்பிய அளவில் UMP ஜேர்மனியின் CDU-CSU (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன்) ஆகியவற்றுடனும், போர்த்துக்கலில் PP (மக்கள் கட்சி) மற்றும் வலதுசாரிகளுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறது.

கட்சியின் செயல்திட்டம்

கட்சியின் செயல்திட்ட பிரகடனத்தில் அரசியல் அடிப்படையில் சரியான சொற்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் ''நம்மில் மிகுந்த ஏழ்மை நிலையிலும், பலவீனமாகவும்,'' இருப்பவர்கள் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாசகங்கள் பிரான்சின் முன்னணி முதலாளிகள் அமைப்பு ''மெடப்'' (Medef) பயன்படுத்துபவை, சுதந்திரம், பொறுப்புணர்வு, ஐக்கியம் என்ற தலைப்புக்களுக்கு கீழ் தனி மனிதனது தேவைகள் சமுதாயத்திற்கு மேம்பட்டதாக காட்டப்பட்டிருக்கின்றது. சுதந்திரம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வாசகத்தில், ''சமுதாய உணர்விலும் பார்க்க தனிமனித வாதத்தில்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்,'' என விளக்கப்பட்டிருக்கின்றது.

கடமை உணர்வு என்ற அத்தியாயத்தில், அரசு அதிகாரம் தான் சமுதாய வாழ்வின் அடிப்படை என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ''சமுதாய வாழ்வு சட்டத்தை மதிப்பதாகயிருக்க வேண்டும், இதில் கடமை உணர்வு நிலைபெறும், அல்லது அழிந்துவிடும் அளவைப் பொறுத்தே சமுதாய வாழ்வு சுலபமா அல்லது தாங்க முடியாததா? என்பது முடிவாகும். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தங்களது செயல்களுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்கின்ற வகையில் அரசு அதிகாரமும், நீதி அதிகாரமும், உறுதி செய்து தரவேண்டும்'' என்று கொள்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

UMP சிறப்பாக பாராட்டி கூறியிருக்கும் ஐக்கியம் என்பது, இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் பிரான்சில் உருவாக்கப்பட்டுள்ள சமூக நல அமைப்புடன் தொடர்புபட்டதல்ல. ஐக்கியம் என்பது தனி மனிதனை மதிப்பதாகயிருக்கவேண்டும். அதை ஒரு ஊனமுற்றவர்களுக்கு உதவும் கருவியாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அப்படிச் செய்வதால் அரசின் உதவியைச் சார்ந்தே அனைவரும் இருக்கவேண்டி வரும் என்று கட்சியின் அறிக்கை விளக்குகிறது.

குடியேற்றம் தொடர்பாக அறிக்கை தெளிவில்லாமல் காணப்படுகின்றது. முதலும் முடிவுமாக நாம் அனைவரும், பிரான்ஸ் மக்கள் என வலியுறுத்துகின்றது. ஆனால், வேறுபாடுகளில் வழமை காணப்படுவதாக ஏற்றுக்கொள்கிறது. அவர்களாக விரும்பி ஒன்றிணைய வேண்டுமென்றும் கூறுகிறது. ''பிரான்சில் வாழ முடிவு செய்பவர்கள் அவர்களாகவே நமது, குடியரசின் சிறப்புக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதேநேரத்தில் அவர்களது சொந்த சிறப்புக்களை கைவிடத் தேவையில்லை, ஆனால், பிரெஞ்சுத் தன்மையுடன் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள தயாராகயிருக்கவேண்டும். அரசாங்கம் சம வாய்ப்பு உரிமைகளுக்கு உத்திரவாதம் செய்து தரவேண்டும்'' என UMP அறிக்கை கூறுகிறது. பிரான்சில் பல்வேறு வகையான குடியேறிய மக்கள் சிறிய வர்த்தகர்களாக உள்ளனர். இவர்களில் பிற்போக்கு மனப்பான்மை உள்ளவர்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் UMP இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் பிரான்ஸ் நாட்டு அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய கோலிச பழைமைவாத அரசியல் குறித்து அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

பிரான்ஸ் நாட்டில் இன்றைய பிரதமர், ரஃப்பரன் தலைமையில் இயங்கும், அரசின் கொள்கைகளை ஆழமாக ஆராய்ந்தால் UMP இன் திட்டத்தின் நடைமுறை முக்கியத்துவம் தெளிவாகும். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் சர்வதேச சந்தையில் போட்டி போடுகின்ற அளவிற்கும் சர்வதேச முதலாளித்துவத்திற்கு தன்னை ஏற்றதாக மாற்றிக்கொள்ள தற்போதைய பிரெஞ்சு அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. நாட்டை நவீனமயமாக்குகிறோம் என்ற முதலாளிகள் அமைப்பின் ஒப்புதல் பெற்ற திட்டத்தைக் கொண்டு நடப்பு அரசாங்கம் சமூக நலத் திட்டங்களின் அடிப்படையை தகர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதிகாரங்களை பரவலாக்கி, வேலை வாய்ப்பு சந்தையை மறுசீரமைத்து வருகின்றது. முதலாளிகளுக்கு ஆதரவாக வரிச்சீர்த்திருத்தங்களை மேற்க்கொண்டிருக்கின்றது. வரி வசூல் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த மக்கள் சமூகநல செலவினங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த வகையில் எதிர்ப்பு ஏதாவது கிளம்பும் ஆனால், ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு புதிய போலீஸ் அரசை உருவாக்க அரசு தயாராகி வருகின்றது.

புதிய இணைப்பின் அடிப்படை

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு வலதுசாரி கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவை திட்டவட்டமாக உருக்கொண்டு வரவில்லை. 1988ம் ஆண்டு அன்றைய பிரெஞ்சு பிரதமர் பல்தூர் இதே அடிப்படையில் ஓர் யோசனையை வெளியிட்டார். அவர் RPR கட்சியைச் சார்ந்தவர், அதற்குப் பின்னர் மூன்று ஆண்டுகள் RPR இன் தலைமை இத்தகைய ஒற்றுமையை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. 2001 இல் உருவாக்கப்பட்ட பிரான்ஸ் ஆல்டர்நன்ஸ் (France Alternance) அமைப்பும் அதேவருட ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட UEM (Union en mouvement) அமைப்பும் இதே முயற்சியை மேற்கொண்டன. இந்த முயற்சிகள் வெற்றிபெறாததோடு, இந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வலதுசாரி அமைப்புக்களும் தங்களது சொந்த வேட்பாளர்களை தனித்தனியாக நிறுத்தினர்.

2000ன் ஜனாதிபதித் தேர்தலில் உருவான சந்தர்ப்பத்தை சிராக் பயன்படுத்திக்கொண்டதால் UMP கட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாயிற்று. சோசலிச கட்சித் தலைவர் ஜோஸ்பன் தலைமையில், செயல்பட்டுவந்த முந்தைய அரசு (''பெரும்பான்மை இடதுகள்'') தனது நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான மக்கள் வாழ்க்கைத் தரமும், வேலை நிலைமைகளும் பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. எனவே, ஜோஸ்பன் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த சமூக ஜனநாயக, ஸ்ராலிஸ்ட்டுகள், மற்றும் பசுமை கட்சியின் அமைப்பினர் ஆதரவை இழந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்று வாக்குப்பதிவின்போது, வாக்குகள் பிளவுபட்டு (தீவிர இடதுசாரி வேட்பாளர்கள் பெற்ற 30-லட்சம் வாக்குகளும்) அளிக்கப்பட்டதில் பகிரங்க எதிர்ப்பு வெளிப்பட்டது. முதல் சுற்றில் 20% வாக்குகளை பெற்று சிராக் முன்னணியில் வந்தார். அப்போது, சோசலிச கட்சியின் ஜோஸ்பன் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுவதற்கு தேவையான வாக்குகளை பெற முடியவில்லை. சிராக்கிற்கு அடுத்தபடியாக, நவ பாசிஸ்டான லு பென் 17% வாக்குளை பெற்றார்.

சிராக்கும் அவரது ஆலோசகர்களும் ''பெரும்பான்மை இடதுகள்'' அணி சிதைந்ததை உடனடியாக உணர்ந்து வலதுசாரி அணியினரை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினர். முதல் சுற்று வாக்குப்பதிவு முடிந்து இரண்டு நாட்களில், ஏப்ரல் 23 அன்று பெரிய அரசியல் கூட்டு அமைப்பு ஒன்றை ஹிவிறி (ஹிஸீவீஷீஸீ யீஷீக்ஷீ ணீ றிக்ஷீமீsவீபீமீஸீtவீணீறீ விணீழீஷீக்ஷீவீtஹ் [ஹிவிறி]) என்ற பெயரில் உருவாக்கினர். அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தான் அப்போதும் UMP என்ற அதே பெயருடன் இணைந்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் UMP அறுதிப்பெரும்பான்மை பெற்று அரசை அமைத்தது.

அதிகாரபூர்வமான இடதுசாரி அணியினர், தொழிற்சங்க அதிகாரவர்க்கம், தீவிர இடதுசாரிகள் ஆகியவை தனக்கு வழங்கிய அரசியல் ஆதரவினை, தனது ஆதரவை திரட்டுவதற்கும் பயன்படுத்தினார். லு பென் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி சிராக்கை ஆதரிப்பதுதான் என்ற வாதத்தை முன்வைத்து, இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் இடதுசாரி அணிகள் சிராக்கிற்கு ஆதரவு திரட்டி வந்தன. சிராக் தேர்தல் பிரச்சாரத்தில் பெருமளவிற்கு ஈடுபட வேண்டிய அவசியம் இல்லாததால், புதிய வலதுசாரி கட்சியை உருவாக்குவதில் கவனம் செலுத்தினர். இடதுசாரிகளின் ஆதரவோடு சிராக் மிகப்பெரும் பெரும்பான்மை வலுப்பெற்று ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொண்டார். தற்போது அவருக்குத் தேவையான அதிகாரமும், அரசியல் நம்பகத்தன்மையும் இருப்பதால், வலதுசாரிகளை ஒருங்கிணைத்து ஜூனில் நடந்த தேர்தல்களில் UMP அமைப்பை மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.

முதலாளித்துவ அரசியல்வாதிகள் தங்களது பழைய போட்டி உணர்வுகளை மறந்து, UMP அமைப்பில் சேருவதற்கு இணங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது உள்நாட்டில் சமுதாய கொந்தளிப்புகள் உருவாகி வருவதுடன், வெளிநாடுகளில் ஏகாதிபத்தியங்களுக்கிடையே மோதல்கள் உருவாகி வருகின்றன. எனவே, இப்படி மறுஅணிதிரள்வது அவசியம் என முதலாளித்துவ தலைவர்கள் உணர்ந்தனர். ஜனாதிபதி தேர்தல்களின்போது, சமுதாய கொந்தளிப்புக்கள் வெளிப்பட்டன. கடந்த வாரங்களில் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் தொழிலாளர் வர்க்கத்தை சமாளிக்க முதலாளித்துவ கட்சிகள் அணி திரள வேண்டிய அவசியத்தை உருவாக்கிற்று.

இக்கொள்கை மிகப்பெரும்பாலான மக்களின் செலவில் புதுப்பணக்கார சிறிய குழுவின் நலனை பாதுகாக்க செயல்படுத்தப்படுகின்றது. இது ஜனநாயக உரிமைகளை சிதைப்பதன் மூலமே அடையமுடியும். அதற்கு ஏற்ற வகையில் வலதுசாரிகள் அனைவரும் ஒரே கட்சியில் இணைய வேண்டும். 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை நினைவுபடுத்துகின்ற வகையில் முதலாளித்துவ ஐக்கியம் உருவாகியுள்ளது. அப்போது முதலாளித்துவாதிகள் அனைவரும் 4வது குடியரசை காப்பதற்காக ஜெனரால் டு கோல் தலைமையில் அணிவகுத்து நின்றனர். அப்போது அல்ஜீரியாவில் நடத்தப்பட்டு வந்த காலனி ஆதிக்கப்போரின் பின் விளைவு பிரான்ஸ் நாட்டிலேயே உள்நாட்டுப்போராக மாறும் அச்சம் நிலவியது. அந்த நிலையிலும் முதலாளித்துவவாதிகள் டு கோலையே ஆதரித்தனர்.

ஐரோப்பாக் கண்டத்தில் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான, நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய வலதுசாரித் தட்டுகளுடன் இணைந்து செயல்பட புதிய கட்சி விரும்புகிறது. எனவேதான் லு பூர்ஜே கட்சி அமைப்பு மாநாட்டில் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த வலதுசாரி அணியினர் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டனர். யூப்பே மற்றும் ரஃப்ரன் உரைகளுக்குப் பின்னர், மூன்று ஐரோப்பிய பழைமைவாத கட்சிகளின் தலைவர்கள் முக்கிய உரையாற்றினர். மேலும் 400 முன்னணி சர்வதேச விருந்தினர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். போர்த்துக்கலில் அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய மக்கள் கட்சியின் 15வது மாநாட்டில், பிரெஞ்சு பிரதமர் Raffarin உட்பட Juppé, Philippe Douste-Blazy ஆகிய மூன்று முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

உள் முரண்பாடுகள்

பிரெஞ்சு வலதுசாரியினர் புதிய அமைப்பாக, உருவானதற்கான சூழ்நிலைகளையும், அந்த சக்திகளது அமைப்பு முறையையும் பார்க்கும்போது அது அடிப்படையிலேயே நிலையற்றதாக உள்ளது. இந்த மாநாடு ஆரம்பிப்பதற்கு முந்தைய வாரங்களில் பிரெஞ்சு பத்திரிகைகளில் இந்த இயக்கத்திற்குள் நிலவும் மோதல்கள் குறித்து நிறைய செய்திகள் வெளிவந்தன. இந்த வேறுபாடுகளை ஓரளவிற்கு நெறிமுறைப்படுத்தி தீர்த்துவைக்க முடியாவிட்டாலும், ஏதாவது ஓர் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து உருவாயிற்று.

UMP உருவாக்கப்பட்ட பின்னர் பல்வேறு எதிரும் புதிருமான குழுக்களுக்கிடையே சமரசம் காண்பதற்கான முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. பிரெஞ்சு முன்னணி பத்திரிகையான Figaro -ஓர் அரசியல் ஆய்வாளரை இது சம்மந்தமாக கருத்துக்கேட்டது. பல்வேறு இயக்கங்களும், பூட்டிய அறைக்குள் தங்களது கருத்து வேறுபாடுகளை வெளியிடத்தான் செய்யும் என்று அந்த அரசியல் ஆய்வாளர் கருத்துத் தெரிவித்தார். ''பெரிய ஏணியில் ஏறி உயரச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பவனது நிலையில்தான் பிரான்சில் இன்றைய தினம் இருந்து வருகின்றது. பிராந்திய, தேசீய, ஐரோப்பிய, தற்போது பூகோளமயத்தால் உருவாகும் சமுக-பொருளாதார விளைவுகள் போன்றவற்றால், அந்த ஏணி இப்படியும், அப்படியும் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. ஜாக்கோபியன்கள், அதிகாரங்களை பரவலாக்குவோர், மன்னர் ஆதிக்கவாதிகள், கூட்டாட்சி தத்துவத்தினர், சுதந்திர சந்தை ஆதரவாளர்கள் மற்றும் தேசியசந்தை பாதுகாப்புவாதிகள் ஆகிய தரப்பினருக்கிடையே ஏணியில் ஏற முயலும் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு படிக்கட்டிலும் கிளர்ச்சிகள் நீடிக்கவே செய்யும்'' என்று அந்த அரசியல் ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

UMP அமைப்பிற்குள்ளேயே இதுபோன்ற மோதல்கள் நடப்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் கட்சியின் வலைத் தளம் கொள்கை விவாதங்களைவிட, கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தி வருகின்றது. இந்த வகையில், ஜேர்மன் நாட்டு கிறிஸ்தவ ஜனநாயக யூனியனையும், ஸ்பெயின் நாட்டு மக்கள் கட்சியையும் நல்ல முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று UMP இன் வலைத் தளம் கட்சிக்காரர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றது. சிராக்கின் அரசியல் ஆலோசகர் ஜெரோம் மொனோட் (Jérôme Monod) ''புதிய அமைப்பிற்குள் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான ஜனாதிபதி தேர்தல் குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்கதல்ல,'' என்று கூறியதாக பிரான்சின் முன்னணி செய்தி பத்திரிகை லு மொண்ட் தகவல் தந்திருக்கின்றது.

UMP இன் வெளிப்படையான பலமும்,வெற்றியும் ஸ்பெயின் நாட்டு மக்கள் கட்சிக்கும், அல்லது இத்தாலியின் பெர்லஸ்கோனியின் Forza Italia கட்சிக்கும் இடையே காணப்படும் பொதுவான அம்சம் ஆகும். இந்நிலை தற்போதைய இடதுசாரிகள் வீழ்ச்சியாலும், சமூக தாராளவாத சக்திகள் வீழ்ச்சியாலும் உருவாகியுள்ளது. இதே அடிப்படையில் ஜோர்ஜ் புஷ் தலைமையில் இயங்கிவரும் குடியரசுக் கட்சியினர், அமெரிக்க அரசியலில் மேலாதிக்கம் செலுத்தி வருவதற்கு காரணம் அமெரிக்க ஜனநாயக கட்சிக்காரர்களிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் வராததுதான்.

பிரெஞ்சு பிற்போக்குவாத பத்திரிகைகள் மற்றும் UMP தலைவர்களது விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகள் மீண்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் அழித்துவிடும் என்று அச்சம் தெரிவிப்பதாக அமைந்துள்ளன. ''நமக்கு முன்னால் இருக்கும் மிக முக்கியமான நடவடிக்கைகள் என்னவென்றால், கட்சி வளரட்டும், நவீன கட்சியாக அது உருவாகட்டும், மக்களுக்கு நெருக்கமாக வளரவேண்டும். பல லட்சம் மக்களை கட்சியில் இணைக்கவேண்டும்'' என மாநாடு ஆரம்பிப்பதற்கு முந்தைய மாலை நேரத்தில் யூப்பே குறிப்பிட்டார்.

இடதுசாரி கட்சிகளுக்கிடையே அரசியல் இயக்கமின்மை உருவாகியிருப்பதால்தான் வலதுசாரி அணிகள் மீண்டும் இணைந்திருக்கின்றன. கடைசியாக வேலை நிறுத்தங்கள் ஆரம்பித்தபோது வலதுசாரி ஐக்கிய அணியில் எந்த அளவிற்கு நம்பிக்கை உள்ளது மற்றும் எவ்வளவு குறைவான செல்வாக்கு நிலவுகிறது என்பதும் அம்பலத்திற்கு வந்தது. ரஃப்ரன் அரசு உடனடியாக தனது உண்மை உருவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவைக்கொண்டுதான், வலதுசாரி கட்சிகள் தங்களை சீரமைத்துக்கொள்கின்றன, தங்களது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்குக் காரணம், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு சுயாதீனமான முன்நோக்கும், அரசியல் தலைமையும் இல்லாமையாகும்.

See Also :

பிரெஞ்சு பொலிசாருக்கு வழங்க உத்தேசித்துள்ள புதிய அதிகாரங்கள்

பிரான்ஸ்: கெடுபிடி கொள்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் அதிகரிப்பு

ரஃபரனினது சட்டம்- ஒழுங்கு வேலைத்திட்டம்: பிரான்சில் இருந்து ஒரு வாசகரின் பங்களிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் அரசியல் படிப்பினைகள்

பிரான்சின் தேர்தலை பகிஸ்கரி--
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை

Top of page