World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government and LTTE agree on scheme to end war

போரை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் உடன்பாடு
By Nanda Wickremasinghe
16 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

நோர்வேயில் டிசம்பர் ஆரம்பத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்று, சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் 19 வருட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வகுக்கப்பட்ட அரசியல் தீர்வின் தன்மையைக் குறிகாட்டுகின்றன.

நான்கு நாள் பேச்சுவார்த்தையின் முடிவில், டிசம்பர் 5 அன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இருதரப்பினரும் "வரலாற்று ரீதியாய் வாழ்ந்துவந்த தமிழ் பேசும் மக்களின் பகுதிகளில்", சுயநிர்ணய பிரச்சினைக்கான தீர்வாக "ஐக்கிய இலங்கைக்குள்ளே ஒரு கூட்டமைப்பை" அகழ்ந்தெடுப்பதற்கு உடன்பட்டனர். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, இந்த அறிவிப்பானது தீவின் வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திர தமிழீழ தனி அரசுக்கான அதன் நீண்டகாலக் கோரிக்கையை சம்பிரதாயபூர்வமாக கைவிடலைக் குறிக்கிறது.

அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளரான ஜி.எல்.பீரிஸ் இம்முடிவை "முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க மாற்றம்" (paradigm shift) என விவரித்தார். "வரலாற்று ரீதியான மற்றும் முன்னர் என்றும் எதிர்பார்த்திருந்திராத தடை தகர்த்து உண்டாக்கப்பட்ட வழி...... கூட்டாட்சி அமைப்பை வெளிப்படையாக இனம்காட்டலாக இருந்தது, அது அரசியல் கட்டுமானம் உருவாவற்கு அடிப்படையாக இருக்கும்."

இவ் அறிவிப்பானது உடனடியாக வாஷிங்டன் மற்றும் லண்டனால் வரவேற்கப்பட்டது. அமெரிக்க அரசுத்துறை பேச்சாளர் பிலிப் ரீக்கர் "இருதரப்பினரும் அரசியல் பிச்சினைகளை விவாதிப்பதில் முன்னேற்றத்தை செய்திருப்பது," "அதி சாதகமாக" இருந்தது என்கிறார். அதேபோல பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் மைக் ஓ பிரையன், பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தால் தான் "ஊக்கப்படுத்தப்பட்டிருந்ததாக" கூறினார்.

இருதரப்பினரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பிரதான வல்லரசுகளின் அழுத்தத்தின் கீழ் இருக்கின்றன. இப்போரானது சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு ஒரு தடையாக இருக்கிறது மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தை மேலும் சீர்குலைப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைகளுக்கு முந்தைய வாரத்தில் ஒஸ்லோவில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில், அமெரிக்க அரசு துணை செயலாளர் ரிச்சர்ட் அர்மிட்டேஜ், விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் மற்றும் சிறிலங்காவின் இறையாண்மையை ஏற்கவேண்டும் என சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் அண்டன் பாலசிங்கம் உத்தரவாதங்களை வழங்குவதில் சிரமப்பட்டார். பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்: "இந்த மாதிரி (கூட்டாட்சி அமைப்பு).... பொருத்தமான அரசியல் வடிவத்திற்குள்ளே முறையாக பொதுக்கருத்து உருவாக்கப்பட வேண்டும்." ஆனால் அவர் கொழும்பைத் தளமாகக் கொண்டு வெளிவரும் ஐலண்ட் பத்திரிகையில் லண்டனில் அண்மைய பேச்சில் இரு அரசுகள் ஏற்படுத்தப்படுவதை ஆதரித்ததாக கூறிய அறிக்கையை அவர் "திரிக்கப்பட்ட" அறிக்கை என்றார். பேச்சுவார்த்தைகளை அடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சுவிட்சர்லாந்திற்கு அதன் கூட்டாட்சி அமைப்பை ஆய்வுசெய்வதற்கென ஒரு பேராளர்குழுவை அனுப்பியது

நாட்டின் சீரழிந்து வரும் பொருளாதார நிலையின் காரணம் ஒரு பகுதியாக, இருதரப்பினரும் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இப்பொழுது தள்ளப்பட்டு இருக்கின்றனர். அடுத்த மே மாதத்தில் டோக்கியோவில் நடைபெற இருக்கும் உதவி வழங்குநர்களின் இன்னொரு உச்சிமாநாட்டிற்குத் தயார் செய்வதற்காக, ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் செய்தார். அமைதிப் பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று ஜனவரியில் தாய்லாந்தில் இடம்பெறவிருப்பதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் புணரமைப்பு நிதிகளுக்காக டோக்கியோவில், ஒரு கூட்டு வேண்டுகோளுக்கான அடிப்படையாக மனிதாபிமான விஷயங்களைப் பற்றி அங்கு இருதரப்பினரும் விவாதிக்கப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதில் தமிழ் செல்வந்தத் தட்டினர்க்கு ஒத்துழைக்கும் ஒரு சுதந்திரமான முதலாளித்துவ துண்டு நிலத்தை ஏற்படுத்துவதற்காக பிரதான வல்லரசுகளை நாடியது. அமெரிக்க ஐக்கிய அரசுகளாலும் ஐரோப்பிய அரசுகளாலும் மறுதலிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், த.ஈ.வி.பு ஆனது, போரால் சீரழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சர்வதேச மூலதனத்திற்கான மலிவு உழைப்புக்கான மேடையாக மாற்றுவதில் கொழும்பு அரசாங்கத்தின் இளைய பங்காளராக தொழிற்படுவதை இப்பொழுது நாடுகின்றது.

அதன் இறுதி வடிவம் எதுவாயினும், ஒரு "கூட்டாட்சி அமைப்பு" ஆனது, கொழும்பில் உள்ள சிங்கள மேலாதிக்கம் உடைய அரசியல் அமைப்பினால் பல தசாப்தங்களாக, படிமுறை ரீதியாக பாகுபாடு காட்டப்பட்ட தமிழ் மக்களின் முறைமையான துன்பங்கள் ஒன்றைக்கூட தீர்க்காது. பிராந்திய சுயாட்சிக்கான முந்தைய முன்மொழிவுகளைப் போல, புதிய ஏற்பாடும் நாட்டின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் செல்வந்தத் தட்டினருக்கு இடையிலான அதிகாரம் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடுகளாக இருக்கும். அது இருக்கின்ற வகுப்புவாத இயக்கங்களை வலிமைப்படுத்திக் கொள்ள வைக்கும் மற்றும் எதிர்கால இனப்பதட்டங்களுக்கும் மோதல்களுக்குமான விதைகளை விதைக்கும்.

அரசாங்கத்தின் சார்பாக பீரிஸ், முன்மொழியப்பட்ட கூட்டமைப்புத் தீர்வினை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது பொதுஜன ஐக்கிய முன்னணி 2000-ல் இயற்றுவதற்கு முயற்சித்த அரசியற்சட்ட பொதியுடன் ஒப்பிட்டார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான விக்கிரமசிங்க அந்த மாற்றங்களைக் கண்டித்து சிங்கள தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்த பின்னர், அந்த அரசியற்சட்ட இணைப்பு அதற்குத் தேவையான மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையைப் பெறத்தவறியது. கடந்த ஆண்டு தேசிய தேர்தலில் வெற்றி பெற்ற விக்கிரமசிங்க, இப்பொழுது அதேபோன்ற நடவடிக்கைகளை நிறைவேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் மற்றும் சிங்கள பேரினவாத இயக்கங்களின் எதிர்ப்பினை எதிர்கொண்டிருக்கிறார், அவை, அவர் காட்டிக்கொடுத்து விட்டதாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

சிங்கள உறுமய, ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) போன்ற தீவிரவாத சிங்கள அமைப்புக்கள் மற்றும் அனைத்து இலங்கை பெளத்தர்கள் காங்கிரஸ் ஒஸ்லோ உடன்பாட்டை தேசம் காட்டிக் கொடுப்பு என்று கண்டித்ததுடன், தனிநாட்டை அமைப்பதை நோக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் முதலாவது அடி எடுப்பினை அது பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறினர்.

ஐக்கிய முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணி இரண்டுமே ஆழமாக சிங்கள பேரினவாதத்தை எதிரொலித்தவை மற்றும் அதன்காரணமாக அத்தகைய அழுத்தத்தை அதிகமாய் கூர்த்தறிவனவாக அவை உள்ளன. விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் முகமாக, பாதுகாப்பு அமைச்சர் திலக் மரபோனா அண்மையில்: "போர் நிறுத்தம் நமது பாதுகாவலைக் கைவிட்டதாக அர்த்தப்படுத்தாது. நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என கூறினார். த.ஈ.வி.பு அதன் சொந்த நீதிமன்றங்களை அமைத்திருப்பது பற்றிய செய்திகளை அடுத்து, "தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனங்கள் எங்கெங்கு அமைந்திருந்தாலும், அவை அரசியற்சட்டத்திற்கு முரணானவை மற்றும் சட்டவிரோதமானவை" என்று கூறி, அரசாங்கம் சட்ட அமைப்பு முறையை நிர்வகிக்கும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணியில் உள்ள, முன்னணிக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) யானது, அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படுவதை எதிர்ப்பதில் சாத்தியமான கூட்டுக்களை பலப்படுத்துதற்காக, டிசம்பர் தொடக்கத்தில் ஒரு பேராளர்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது. இந்திய அரசாங்கம் பொதுவாக பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக இருந்த வரும் அதேவேளை, ஆளும் வட்டாரத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலையை மதிப்புயர்த்தும், அமைதி உடன்பாட்டின் அரசியல் விளைவு பற்றி கவலைகள் இருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டு வெடிப்பாளரின் கைகளில், 1991ல் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, இந்தியா சம்பிரதாயபூர்வமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது. சி.ல.சு.க பேராளர் குழு இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் ராஜீவின் விதவையான எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் அதேபோல, இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்தனர்.

கடந்தவாரம் சிறிலங்கா வருகையின்போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், தமிழீழ விடுதலைப் புலிகள் அதன் வேலைத் திட்டங்கள் தமிழ் நாட்டிலும் மற்றும் ஏனைய தென்னிந்திய மாநிலங்களிலும் உள்ள தமிழ் ரசிகர்களைச் சென்றடைவதற்கு வகைசெய்யும், இறக்குமதி செய்யப்பட்ட, உயர் ஆற்றல் கொண்ட ஒலிபரப்பு சாதனத்தை அதற்கு அனுமதிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக கவலைகளைத் தெரிவித்ததாக செய்தி அறிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேரத்தை முடிப்பதற்கு கொழும்பு மீது கணிசமான சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் கூட்டாட்சி அமைப்பு விவரங்கள் தயாரித்து முடிக்கப்படுகையில், எதிர்க்கட்சி பேரினவாத குழுக்கள் நிச்சயமாக, விக்கரமசிங்க அரசாங்கம் எதிர்கொள்ளும் அதிகரிக்கும் அரசியல் சிக்கல்களை உக்கிரப்படுத்தும்.

See Also :

இலங்கை பேச்சுவார்த்தைகளில் மேலும் சலுகைகளுக்காக வாஷிங்டன் எல்டிடிஈ-ஐ நிர்ப்பந்திக்கின்றது

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் பாரிய சலுகைகளை வழங்கியுள்ளனர்

இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தை: தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மூலதனத்துக்கு தலைவணங்குகின்றது

Top of page