World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
US, British air strikes kill Iraqi oil workers அமெரிக்க, பிரிட்டிஷ் விமான தாக்குதல்களில் ßராக்கிய எண்ணெய் நிறுவன தொழிலாளர்கள் பலி By Bill Vann தெற்கு ஈராக் நகரமான பஸ்ராவிலுள்ள, தென்னக எண்ணெய் நிறுவனத்தின் கட்டுமானங்கள் மீது சென்ற ஞாயிறன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமானங்கள் ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியதில், அதிகமான தொழிலாளர்கள் பலியானார்கள் மற்றும் ஏறக்குறைய 20 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த நிறுவனமுள்ள பகுதியின் வெளியே தெருவில் போய்க்கொண்டிருந்த வழிப்போக்கர்கள் மீது உடைந்த கண்ணாடிகள் தெறித்து சிதறி காயங்களை உண்டாக்கியது. அதிகரித்து வரும் குண்டு வீச்சுத் தாக்குதலை எதிர்த்து ஈராக்கிய வெளிநாட்டமைச்சர் நஜி சப்ரி (Naji Sabri) ஐ.நா. சபைக்கு ஆக்ரோஷமான கடிதம் ஒன்றை கொடுத்த சிறிது காலத்திற்குள்ளாக, இந்த நாசமூட்டும் வான்படை தாக்குதல் நடந்துள்ளது. "அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமானங்கள், ஈராக் நகரங்கள், கிராமங்கள் மீதும், ஈராக் குடியரசின் உள்கட்டுமானத்தின் மீதும் நடத்தப்பட்ட ஒரு அரச பயங்கரவாதம், காரணமில்லாமல் நடத்திய தாக்குதல், மற்றும் ஈராக்கிய உள்நாட்டு விவகாரத்தில் அத்துமீறி ஊடுருவும் செயல்" என சப்ரி எழுதினார். ஈராக்கிய இராணுவம், கொல்லப்பட்டவர்கள் நால்வர் என மதிப்பிட்டிருந்தபோதும் பஸ்ரா நகரவாசிகள் இறப்பு எண்ணிக்கையை எட்டாக சொல்கின்றனர். விமானங்கள், தெற்கு ஈராக்கில் மக்கள் வாழும் மேலும் இரண்டு இடங்களைக் குறிவைத்து தாக்கியதாக ஒரு இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பஸ்ரா குடிமக்கள் விமான நிலையமானது ஏற்கனவே தாக்குதலினால் பெருத்த சேதம் அடைந்துள்ளது. தினமும் வான்தாக்குதல் நடைபெறும் என்ற அச்சத்தில் அந்த துறைமுக நகரவாசிகள் உள்ளனர். 1998ம் ஆண்டிலிருந்து, ஈராக்கின் தெற்கு மற்றும் வடக்கில் "விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதி" என அழைக்கப்படும் பகுதியிலேயே, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்கள் ஏறத்தாழ 65,000 முறை தாக்குதல்களை நடாத்தியுள்ளன. இத் தாக்குதல் திட்டமானது ஈராக்கிய விமானப்படை பாதுகாப்பு நிலையை முற்றிலும் அழிக்க சமீப காலங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளன மற்றும் ஈராக்கிய நகரங்கள் மீது முழு அளவிலான விமான தாக்குதல் நடாத்த விமான ஓட்டிகளை ஆயத்தப்படுத்தியுள்ளது. விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதிகள் என அமெரிக்காவும், பிரிட்டனும் ஐ.நா.வின் உத்தரவை நாடாமல் தாங்களாகவே ஒரு தரப்பாக விதித்துள்ள தடைசெய்யப்பட்ட சில பகுதிகளை ஈராக் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஈராக்கின் விமான எதிர்த்தாக்குதலானது, ஐ.நா. சபையின் சமீபத்திய ஆயுத சோதனை தீர்மானத்தின் மீது நடக்கும் ஒரு "அத்துமீறல் விஷயதானம்" என்கிறது புஷ் நிர்வாகம். இந்த அதிகரித்துவரும் பதட்டமான சூழலை ஈராக் மீது படையெடுக்க ஒரு சாக்குப்போக்காக உபயோகித்துக்கொள்ள வாஷிங்டன் நினைக்கிறது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் மீது நடந்துள்ள தாக்குதலானது, நிர்வாக அலுவலகங்களையும் மோசமாக சேதப்படுத்தியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு வறுமை, பட்டினியை சமாளிக்க ஈராக்கிற்கு உதவிவரும் ஐ.நா. ஒப்புதலுடன் நடக்கும் "எண்ணெய்க்கு மாற்றாக உணவு" என்ற திட்டத்தின் நிர்வாக அலுவலக கட்டிடங்களும் பெரும் நாசம் அடைந்தன. காலை 11 மணிக்கு இரண்டு ஏவுகணைகள் அந்த கட்டிடத்தை தாக்கியபோது அங்கே சுமார் 600 முதல் 700 தொழிலாளர்கள் இருந்தனர். இந்தத் தாக்குதல் நடந்த பின்னும், புஷ் நிர்வாகம் புதிய போர் மிரட்டல்களை விடுத்துள்ளது. அமெரிக்க காங்கிரசால் ஒப்புதலளிக்கப்பட்ட 355.5 பில்லியன் டொலர் இராணுவ வரவு-செலவு திட்டத்திற்கு, திங்களன்று கையொப்பமிட்ட புஷ், ஈராக்கில் ஐ.நா. சோதனையாளர்களின் செயல் "ஊக்கம் தருவதாக இல்லை" என கூறியுள்ளார். இதுவரை ஐ.நா.வின் சோதனையில், அமெரிக்கா குற்றம்சாட்டி வருவது போல் அரபு நாட்டில் "பெரும் அழிவு தரும் ஆயுதங்கள்" ஏதும் இதுவரை சிக்கவில்லை. ஈராக் தன்னிடம் உள்ள அனைத்து இரசாயன, உயிர்க்கிருமி மற்றும் அணு ஆயுதங்களின் முழு விவரப்பட்டியலை, டிசம்பர் 8-க்குள் முன்வந்து சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு என்று புஷ் திரும்பத் திரும்பக் கூறினார் -- இராணுவ மற்றும் இராணுவமல்லாத பொது உடமைகளையும் வேறுபாடின்றி தாக்கலாம் என்று அமெரிக்கப் போர் திட்டம் கூறுகிறது. "கொடுக்கப்படும் பட்டியலானது நம்பகமானதும், முழுமையானதுமாக இருத்தல் வேண்டும், இல்லாவிட்டால் ஈராக்கின் சர்வாதிகார அதிபர் தன் போக்கை மாற்றிக்கொள்ள விருப்பமில்லை என்று உலகுக்கு காட்டுவதாய் அமையும்" என்கிறார் புஷ். இந்த வெளியிடப்படும் விவரங்கள் "நம்பக்கூடியதும், முழுமையானதுமாக" இல்லை என வாஷிங்டன் கருதினால், அது போர் புரியும் என்றும் கூறினார். "தற்காலிகமான அமைதி என்பது போரை மறுத்து ஆபத்தை விடுத்து ஓடுவது என்று இருந்தாலும், இது வரவிருக்கும் பெரிய யுத்தத்தையும், பயங்கரத்தையும் பற்றிய ஒரு முன்னோட்டமாக அமைகிறது. சூழ்ந்துவரும் அபாயங்களையும், அச்சுறுத்தல்களையும் பார்க்கும்போது போரை விட்டால் வேறு உபாயமில்லை என்ற நிலைக்குத் தள்ளப்படும் வரை மாற்றுத் தேர்வு மட்டுப்படுத்தப்படும் வரை அமெரிக்கா ஒன்று சேர்ந்து வரும் அபாயங்களை எதிர்கொள்ளும்" என்று அவர் கூறினார். ஈராக்கியர்கள் தங்கள் அறிக்கையில் சமர்ப்பிக்கும் எந்த ஒரு விவரமும், போருக்கான சாக்குப் போக்கைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் எனலாம். அவர்கள் அப்படி எந்த ஒரு ஆயுதத்திட்டமும் தங்களிடம் இல்லை என மறுத்தால், ஐ.நா. தீர்மானத்தை மீறியதற்கும், உண்மையை மறைத்ததற்கும் வழக்கு போடப்படும். அப்படி ஒரு திட்டம் உண்டென்று ஒப்புக்கொண்டால், அது ஐ.நா. சோதனைத்திட்ட தீர்மானத்திற்கு எதிராக நடந்த "விஷயதான அத்துமீறல்" என அதனைக் கொள்ளலாம். அதேநாளில் துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனி, டென்வரில், தேசிய விமானப்படை பாதுகாப்பு கொமாண்டர்களிடம் பேசும்போது, "அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதம் மற்றும் பாக்தாதில் உள்ள ஆட்சி இவற்றுக்கு இடையில் ஏற்படக் கூடிய கூட்டால் அமெரிக்கா அச்சுறுத்தப்படுகிறது" என்ற ஆதாரமில்லாத பேச்சை மீண்டும் கூறி வருகிறார். செனி, "அதனால்தான் ஈராக்கால் திணிக்கப்படும் மிரட்டல்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலிருந்து நம்மை திசை திருப்பவில்லை, அது பயங்கரவாதத்தின் மீதான போரை வெல்வதற்கு முற்றிலும் தீர்க்கமானது. "ஈராக்கில் பேரழிவு தரக்கூடிய நாசகார ஆயுதங்கள்" இல்லை என முற்றிலும் ஊர்ஜிதப்படுத்தப்படும் வரையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாம் வெல்லவில்லை" என கொள்ளவேண்டும் என்றார் செனி. இதற்கிடையில் வாஷிங்டன், புதுப்பிக்கப்பட்ட இராஜதந்திர ரீதியிலான தாக்குதலைக் கடைபிடித்துள்ளது. அது ஈராக்கின் முன்னாள் நட்பு நாடுகளான சிலவற்றை ஈராக்குக்கு எதிராக போர் புரியும் வகையில் தங்களுக்கு ஆதரவு தரக்கோரி பேரம் பேசியும், பலவந்தப்படுத்தியும் வருகிறது. பாதுகாப்பு அமைச்சக துணைச்செயலாளர் போல் வொல்ஃபோவிட்ஸ் அமெரிக்கப் போர் விமானங்களை விற்க பிரஸ்ஸல்ஸ், லண்டன் மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்ல, மத்திய துணை செயலாளர் ரிச்சட் ஆர்மிடேஜும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லி மற்றும் பல மூத்த அமெரிக்க அதிகாரிகளும் வரும் வாரங்களில் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். போருக்கு ஆயத்தமாகும் பென்டகன், சுமார் 60,000 படை வீரர்களை ஈராக்கை சுற்றியுள்ள நாடுகளில் நிறுத்திவைத்துள்ளது. இப்படைக்குத் தேவையான எல்லா ஆயுதங்களையும், கருவிகளையும் இரண்டு மடங்காக அங்கே குவித்துள்ளது. சுமார் 12,000 போர் வீரர்களையும் கப்பற்படையினரையும் முற்றுகையிட்ட பிரதேசங்களிலும், குவைத்தின் கால்வாசி இடப்பரப்பையும் உபயோகித்து வரும் அமெரிக்கா, அங்கே ஈராக்கின் எல்லையோரம் நிரந்தரமாக போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த மாத இறுதியவில் விமானம் தாங்கும் ஐந்து பிரம்மாண்டமான போர்க்கப்பல்களைக் கொண்ட கப்பற்படையை, பாரசீக வளைகுடாவிற்கும், மத்திய தரைக்கடலுக்குமிடையே நிலைப்பெறச் செய்து, ஈராக்கைத் தாக்கக்கூடிய தொலைவில் அவற்றைச் செயல்படுத்த உள்ளது. அடுத்த வார இறுதிக்குள், அமெரிக்க மத்திய படையின் தலைவர் ஜெனரல் டாமி, ஃபிராங்க்ஸ் மற்றும் 750க்கும் மேற்பட்ட தலைமையக பணியாளர்களையும் சேர்த்து, பாக்தாதிலிருந்து 700 மைல் தொலைவிலுள்ள கத்தாரின் அல்-உதெய்த் விமான தளத்தில் இறக்கிவிடப்பட உள்ளனர். இராணுவத்தின் மேலும் ஒரு பயிற்சியான இதை "உள் நோக்கு" என பொய்யாய் அழைக்கின்றனர். இந்தப் போர்ப் "பயிற்சி" யின் நோக்கமானது, ஈராக் மீது படையெடுக்கும்போது
ஒருங்கிணைக்க வேண்டிய ஆணையிடும் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளையும் சோதித்துப்பார்க்க உதவுகின்றது. ஈராக், ஐ.நா.
சபைக்கு ஆவணம் சமர்ப்பிக்கவேண்டிய டிசம்பர் 8 கெடுநாளை ஒட்டியே இந்த பயிற்சி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ் நிர்வாகமானது, இதுவே இராணுவத்தை செயலில் இறங்க வைக்கும் விசையழுத்தியாக செயல்படும்" என்கிறது. இதனிடையில்,
ஜெனரல் ஃபிராங்க்ஸ் மற்றும் அவர் அலுவலர்களும் அதிகாரபூர்வமாக இந்தமாத இடையில் புளோரிடாவிலுள்ள நிரந்தர
தலைமையகத்துக்குத் திரும்புவார்கள். இராணுவ பதட்டங்களை சமாளிக்க புஷ் நிர்வாகம் இவர்களைத் தக்க இடத்தில்
அமர்த்தும் என்று நம்புவதற்கு காரணம் உள்ளது. |