World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Britain's dossier on Iraq: human rights as a pretext for war

ஈராக் மீது பிரிட்டனின் ஆய்வு அறிக்கை: மனித உரிமைகளை சாட்டாக்கி போருக்கு ஆயத்தம்

By Chris Marsden
5 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ (Jack Straw) பிரிட்டனின் வெளியுறவுத்துறையின் சார்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஈராக் ஆட்சியாளர்கள் நடத்தியதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் பற்றிய தொடர்ந்த அவரது உரை வெளிப்படையாக ஈராக்கில் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் நடாத்தும் நேரடி சோதனையை தொடர்புபடுத்தி இருந்தன. அதன் மூலம், போருக்கான வாய்ப்புக்களையும் வெளியிட்டார்.

1988-ம் ஆண்டு, ஈராக்கின் குர்டிஷ் நகரான ஹலாப்ஜாவில் விஷவாயு தாக்குதலால் கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் சித்திரவதைகளால் மாண்டவர்கள் பற்றிய வீடியோ காட்டிகளை வெளியிட்டு விட்டு அந்த அறிக்கையின் அவசியம் பற்றி ஜாக் ஸ்ட்ரோ விளக்கினார். இந்த அறிக்கை சதாம் ஹூசேன் என்கின்ற தீய சக்தியை மக்கள் விரிவாக அறிந்து கொள்வதற்கு அவசியமாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தை கடுமையாக கண்டித்து சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டது. ''சந்தர்ப்பவாத அடிப்படையில் சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும் பிரிட்டன் வெளியிட்டிருக்கின்றது என சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் பிரதிநிதி ரிச்சார்ட் பன்டிங் (Richard Bunting) கருத்து தெரிவித்தார். பிரிட்டன் மற்றும் அமெரிக்கா சில விபரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுகின்றன. இதர நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை மிக எளிதாக அலட்சியம் செய்து விடுகின்றார்கள். பிரிட்டன், அமெரிக்காவின் வெளிநாட்டு மற்றும் இராணுவ குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு செய்திருக்கிறது என, அவர் விளக்கினார்.

அமெரிக்காவில் செயல்ப்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பைச் சார்ந்த ஹனியா முஃப்டியும் (Hania Mufti), பிரிட்டன் அறிக்கை வெளியிட்ட நேரத்தை கண்டித்திருக்கிறார். தன்னுடைய அமைப்பு ஈராக்கின் குர்டிஷ் பகுதிகளில் சதாம் ஹூசேன் நடத்திய உரிமை மீறல்கள் பற்றி தகவல்களை சேகரித்த நேரத்தில் வெளியுறவுத்துறை அவற்றை புறக்கணித்து விட்டதாக, ஹனியா முஃப்டியும் குறிப்பிட்டார். எனவே, அரசாங்கம் இந்த நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டது பற்றி ஆராயும்போது முந்தைய நடவடிக்கையை கருத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரிட்டனின் நாடாளுமன்ற தந்தை என பாராட்டப்படும், நீண்ட காலம் உறுப்பினராக உள்ள தொழிற்கட்சி உறுப்பினர் டாம் டால்யெல் (Tam Dalyell) ''இந்த அறிக்கை வழக்கத்திற்கு மாறாக, இதுவரை நடைபெற்றிராத அளவிற்கு போருக்கு ஆயத்தம் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்.

தொழிலாளர் கட்சியின் மற்றொரு எம்.பி அலிஸ் மகோன் (Alice Mahon), இப்போது ஏன் இது வெளிப்படுகிறது? என்பது நமக்குத் தெரியும், இவையெல்லாம் போரை மென்மைப்படுத்தும் முயற்சியே என்றார்.

பிரிட்டனின் பத்திரிகைளில் கணிசமான தரப்பினர் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு கண்டனம் செய்திருக்கின்றனர்.

டெய்லி மிரர்- அதன் பொது இயக்க ஆதரவு பத்திரிகையாளர் ஜோன் பில்கரின் (John Pilger) கட்டுரையை வெளியிட்டிருந்தது. ''பிரிட்டிஷ் பிரதமரும், அமெரிக்க குடியரசுத் தலைவரும், சதாம் ஹூசேன் தனது மக்களுக்கு எதிராக, குறிப்பாக, 1988-ம் ஆண்டு குர்டிஷ் கிராமமான ஹலாப்ஜாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறார் என்று இடைவிடாது கூறிக் கொண்டு வருகின்றநேரத்தில் அந்த கால கட்டத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும் சதாம் ஹூசேனுக்கு உடந்தையாக இருந்தைப் பற்றி குறிப்பிடுவதில்லை'' என எழுதியிருக்கிறார்.

''சதாம் ஹூசேனுக்கு இரசாயன ஆயுதங்களை ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்படுவதை இரண்டு அரசாங்கங்களும் அப்போது ஒப்புதல் தந்தனர். குர்டிஷ் கிராமத்தில் நடைபெற்ற அட்டூழியத்தை மறைப்பதற்கு இரண்டு அரசுகளின் வெளியறவுத் துறைகளும் முயன்றன இந்த கொடூரத்தாக்குதல்களுக்கு ஈரான் நாடு பொறுப்பு என்பதாக போலியான ஒரு தகவலை இரு அரசுகளும் பரப்பின,'' என்று அந்த நிருபர் எழுதியுள்ளார்.

அரசுக்கு சொந்தமான பி.பி.சி யினது இராஜதந்திர நிருபர் ஜேம்ஸ் ரொபின்ஸ் கூட இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தை, ''அது ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கை அடைவதற்காக வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கை" என விளக்கத்தள்ளப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரின் ஜாக் ஸ்ட்ரோ வின் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வரவேற்பு கிடைக்கவில்லை, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் போர் முயற்சிக்கு ஆதரவு தரும் என்ற நோக்கில், அறிக்கை வெளியிடப்பட்டது. ஜேர்மனியில் பேர்லினர் சைட்டுங் என்ற பத்திரிகை அந்த அறிக்கையை "ஆயுதங்களை பறிமுதல் செய்யவும் சாத்தியமானால் ஈராக் சர்வாதிகாரியை ஆட்சியிலிருந்து கவிழ்க்கவும் பிரிட்டன் நடத்திய போர் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதி" என வர்ணித்தது.

"அமெரிக்காவுடன் சேர்ந்து பிரிட்டன் இராணுவ நடவடிக்கையில் இறங்கும்போது, பிரிட்டிஷ் பொதுமக்கள் தன்னை ஆதரிக்க வேண்டுமென்ற நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக'' நியூ சுரீச்சர் சைட்டுங் என்ற பத்திரிகை விமர்சனம் செய்திருக்கின்றது.

பிராங்போட்டர் ருண்ட்சாவ் என்ற பத்திரிகை -தனது செய்தியில் ''அந்த அறிக்கை கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது'' என எழுதிருந்தது.

அரசாங்கம் தனது செயலுக்கு சமாதானம் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரிட்டனின் ஈராக் தொடர்பான அதிகாரி மார்க் செட்வில் மிகவும் பரிதாபகரமான நிலையில் மறுப்பு வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என்று, அந்த அதிகாரி குறிப்பிட்டார். அந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜோர்டான் தலைநகர் அமானில் அவர் அளித்த பேட்டியில், ''ஈராக்கிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயத்தம் செய்ய பிரிட்டன் விருப்பம் கொண்டிருப்பதாக, மத்திய கிழக்கு நாடுகளில் வலுவான கருத்து நிலவுகின்றது, அது உண்மையல்ல இதில் சமாதான வழியைத்தான் நாங்கள் நாடுகிறோம்'' என விளக்கினார்.

ஈராக் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், ''எண்பதுகளில் கன்சர்வேட்டிவ் அரசுகள் நடவடிக்கைக்கு நியாயம் கற்பிப்பது இன்றைய அரசின் நோக்கமல்ல.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ ஈராக்கிடம் அணு ஆயுதங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறியதை, பின்னர் வெளியுறவுத்துறை மறுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஏனென்றால் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் புலனாய்வு அறிக்கைகள் ஈராக்கிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. ''சதாம் ஹூசேன் அணு ஆயுதங்களை பெறுகின்ற நோக்கில் செயல்படுகின்றார்,'' என்ற கருத்தில் அவ்வாறு அமைச்சர் கூறியதாக வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் நோக்கம், ஐ.நா ஆய்வாளர்கள் ஆயுதங்கள் தொடர்பாக எந்த விதமான ஆதாரங்களையும் ஈராக்கில் திரட்டமுடியாது என்ற கவலையால் உந்தப்பட்டு பிரிட்டன் அந்த அறிக்கையை வெளியிட்டது. ஈராக் மீது மீண்டும் குண்டு வீசிதாக்குதல் நடத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த அறிக்கை ஐ.நா-ஆயுத ஆய்வாளர்கள் நவம்பர் 28-ம் தேதி, ஈராக் சென்றடைந்தனர். சதாம் ஹூசேனின் அரண்மனைகள் உட்பட ஆய்வாளர்கள் விரும்பிய எல்லா இடங்களையும் சோதனை இடுவதற்கு அவர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவுமில்லாத சுதந்திரம் வழங்கப்பட்டது. ஐ.நா-ஆயுத ஆய்வாளர்களுக்கு எந்த விதமான சான்றுகளும் கிடைக்கவில்லை. டிசம்பர், 7ம் தேதி அவ்வாறு ஈராக் அறிக்கை வெளியிடவேண்டுமென்று ஐ.நா-கட்டளையிட்டிருந்து. பொதுமக்களை கொன்றுகுவிக்கும் எந்த ஆயுதமும் தன்னிடம் இல்லை என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தும் என்பதை ஈராக் குறிப்பிட்டிருந்தது.

அப்படியிருந்தும் அமெரிக்கா ஐ.நா-வின் அறிக்கைகளை புறக்கணித்து விட்டு, தனது சொந்த வெளியிடப்படாத, வெளிவராத புலனாய்வு தகவல் மூலம் இராணுவ நடவடிக்கைக்கு ஆயத்தம் செய்யப்போவதாக கோடிட்டுக் காட்டியிருந்தது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ அறிக்கை வெளியிட்ட தினத்திலேயே அமெரிக்க குடியரசுத் தலைவர் புஷ் ஐ.நா-ஆயுத ஆய்வாளர்களது ஆற்றல் குறித்து கடுமையான சந்தேகத்தை வெளியிட்டார். மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதை ஐ.நா-ஆய்வாளர்களால் கண்டு பிடிக்க முடியாது என புஷ் குறிப்பிட்டார். ''அமெரிக்க மற்றும் பிரிட்டனின் விமானிகளை நோக்கி சுட்டுக்கொண்டிருக்கும் (குண்டு வீசி தாக்குதல் நடத்திவரும்) ஓர் அரசாங்கம் ஐ.நா-வின் பாதைக்கு வராது, கண்டனங்களும், பொய்மூடைகளும் அடங்கிய கடிதங்களை அனுப்பிக்கொண்டிருக்கின்ற அரசாங்கம் எப்படி ஐ.நா-வழிக்கு வரும்? ''என புஷ் கேட்டார்.

தனது ஆயுதத்திட்டங்கள் குறித்து விபரங்களை தெரிவிக்க வேண்டியது ஈராக்கின் கடமையேதவிர, ஐ.நா- ஆயுத ஆய்வாளர்கள் பொறுப்பல்ல; அல்லது ஈராக் கடமை தவறுமானால் கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என்று புஷ் கூறியிருக்கிறார்.

ஈராக் இரண்டு விமான எதிர்ப்பு தாக்குதல்களை நடத்தியிருப்பதாக புஷ் கூறியிருக்கிறார், உண்மை என்னவென்றால், அதுபோன்ற எதிர் நடவடிக்கைகளில் ஈராக்கை தூண்டுகின்றவகையில் அமெரிக்காவும், பிரிட்டனும் தொடர்ந்து தெற்கு ஈராக் பகுதிகளில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்துவது மார்ச் மாதத்திற்கு பின்னர் 300-சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் மாதம் 54-தொன் குண்டுகளை வீசிதாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

பிரிட்டன் வெளியிட்ட அறிக்கையை தனது போர் பிரச்சார இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக, அமெரிக்கா வரவேற்றிருக்கின்றது. "ஐ.நா-வின் 1441-வது தீர்மானத்தில் கண்டுள்ள ஆயுதக்குறைப்பு நடவடிக்கை ஈராக் எடுக்க வேண்டிய, நடவடிக்கைகளில் ஒன்றாகும். அந்த தீர்மானம் ஈராக் தனது சிவிலியன்கள் மீது (பொது மக்கள்) அடக்கு முறைகளை கையாள்வதை கைவிடவேண்டுமென்று வலியுறுத்துகின்றது" என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ட்ரம்ஸ்பீல்ட் குறிப்பிட்டார்.

போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளை மறைமுகமாக அவர் கண்டித்தார், இது போன்ற மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் சில நாடுகளுக்கு கவலை அளிக்கவில்லையே என்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.... ''அந்த அரசாங்கம் (ஈராக்) பொது மக்களை கொன்றுகுவிக்கும், ஆயுதங்களை வைத்திருக்கிறது. மனித வாழ்வை ஏன் தனது சொந்த மக்களது வாழ்வைக்கூட துச்சமாக மதித்து நடவடிக்கைகளில் இறங்குகிறது, அத்தகைய ஆட்சியானது: ஒரு குறிப்பிட்ட வகையைச் சார்ந்த அபாயம் என கருதப்படவேண்டும்'' என்பதாக டொனால்ட் ட்ரொம்ஸ்பீல்ட் குறிப்பிட்டார்.

அரசியல் சந்தர்ப்பவாதம் என்று பரவலாக பிரிட்டன் மீது கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துகின்ற வகையில், வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ ஈராக் மீது அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, துருக்கியின் தலைநகர் அங்காராவிற்கு விஜயம் செய்தார், ஐரோப்பிய யூனியனில் துருக்கி உறுப்பினராவதற்கு பிரிட்டன் தந்திருக்கும் உறுதி மொழிக்கு கைமாறாக அமெரிக்கா -பிரிட்டன் மேற்கொண்டுள்ள போர்முயற்சிகளுக்கு துருக்கி ஆதரவு தரவேண்டும் என்ற உதவியை நாடுவதற்காக அவர் துருக்கி பயணத்தை மேற்கொண்டார்.

துருக்கி மனித உரிமைகள் மீறலில் மிகக் கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி ஜாக் ஸ்ட்ரோ எந்த விதமான பேச்சும் நடத்தவில்லை. துருக்கி நாட்டில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் ஆண்டு அறிக்கையில் காணப்படும் சில வாசகங்களின் சுருக்கம் வருமாறு: ''துருக்கியில் போலீஸ்காவலில் பரவலாக தொடர்ந்து சித்திரவதைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, திட்டமிட்டு இத்தகைய நடவடிக்க்ைகளை எடுத்து வருகிறார்கள், டஜன் கணக்கில் அரசியல் கொலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, அவற்றில் நீதித்துறைக்கு அப்பாற்பட்ட மரண தண்டனை நிறைவேற்றமாகவும் இருக்கலாம், பிரதானமாக, குர்டிஷ் இனத்தவர் வாழும் துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது அடக்கு முறைகள் நீடிக்கின்றன, ஆண்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும், கொடுமைப்படுத்தப் படுவதாகவும் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கடுமையாக தாக்குகிறார்கள், கண்ணைகட்டிவிடுகிறார்கள் கைகளை கட்டித் தொங்க விடுகிறார்கள், மின்சார அதிர்ச்சிகளை செலுத்துகிறார்கள், பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள், உணவுதரப்படவில்லை, உறங்கவும் விடுவதில்லை என்பது போன்ற கொடுமைகள் துருக்கியில் அடிக்கடி நடைப்பெற்றுவருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.''

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோவைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பவுல் வொல்ஃபோவிச் துருக்கிக்கு விஜயம் செய்ததோடு அந்நாட்டுடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார். அமெரிக்க படைகள் துருக்கியின் வழித்தடங்களையும், வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள அந்த உடன்படிக்கை வகை செய்தது, ஒரு லட்சம் அமெரிக்க படைவீரர்கள் இத்தகைய வசதிகளை பயன்படுத்திக் கொள்வார்கள் என கருதப்படுகிறது, துருக்கிக்கு பொருளாதார ஆதரவு தருவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது, தனது நுழைவு வாயிலில் இராணுவ மோதல்கள் நடப்பதால், ஏற்படுகின்ற எந்த குழப்பத்தையும் சமாளிக்கின்ற வகையில் அமெரிக்கா பொருளாதார உதவிகளை வழங்கும் என வொல்ஃபோவிச் உறுதியளித்துள்ளார். வடக்கு ஈராக்கில் வாழ்ந்து வருகின்ற குர்டிஷ் இனத்தவர்கள் தங்களுக்கு என சொந்த நாட்டை உருவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வொல்ஃபோவிச் துருக்கிக்கு உறுதியளித்துள்ளார்.

See Also :

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை எதிர்!
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

Top of page