World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

WSWS replies to letters on boycott of Israeli academics

இஸ்ரேலிய கல்விமான்களை புறக்கணித்தல் சம்பந்தமான கடிதங்களுக்கு உலக சோசலிச வலைத்தளம் பதிலளிக்கிறது

By Bill Vann
30 July 2002

Back to screen version

"இஸ்ரேலியக் கல்விமான்களை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு" என்ற ஜூலை 12ம் திகதி பில் வானின் கட்டுரைக்கு நாம் பெற்ற பெருமளவிலான கடிதங்களுக்கு உலக சோசலிச வலைத் தளம் பின்வரும் பதிலை வழங்குகிறது. இந்த விடயத்தையிட்டு எமக்கு வாசகர்களிடமிருந்து கிடைத்த கடிதங்களில் இருந்து தேர்ந்தெடுத்த கடிதங்களுக்கான பில் வானின் பதில் பின்வருமாறு.

மேற்குகரை, காஸா பகுதிகளை இஸ்ரேலிய அரசாங்கம் மீளக் கைப்பற்றியதற்கு முடிவுகட்ட நிர்ப்பந்திக்கவும், பாலஸ்தீனிய அதிகாரத்துடன் பேச்சுவார்த்தையை தொடரவும் தமது இஸ்ரேலிய சகபாடிகள் நெருக்குவாரம் செய்யவேண்டுமென்றும், ஐரோப்பிய கல்விமான்களை தமது இஸ்ரேலிய சகபாடிகளுடனான தொடர்புகளை இல்லாதொழிக்குமாறும் பிரித்தானிய பேராசிரியர் ஸ்டீவன் ரோஸ் (Steven Rose) ஆரம்பித்த அழைப்புக்கு பதிலாக ஜூலை 12ம் திகதி அறிக்கை எழுதப்பட்டிருந்தது.

புறக்கணிப்பை நடைமுறைப்படுத்துவதில் டெல் அவில் பல்கலைக்கழக பேராசிரியர் கில்டோன் டோரி (Gideon Toury), பார் இவான் பல்கலைக்கழக மிரியம் ஷிலேசிங்கர் (Miriam Schlesinger) என்ற இரு இஸ்ரேலிய கல்விமான்களை பிரித்தானிய இதழ்களுக்கு மொழிபெயர்ப்பதை அகற்றி விடுவது என்ற பிரித்தானிய வெளியீட்டாளர்களின் முடிவு சம்பந்தப்பட்டிருந்தது.

உ.சோ.வ. தளத்தின் பூர்வாங்க அறிக்கை ஜூலை 17ல் வெளியிடப்பட்ட "இஸ்ரேலிய கல்விமான்களின் புறக்கணிப்பு தொடர்பான கடிதப் பரிமாற்றல்" விளக்குகிறது. நாம் அக்கட்டுரையில் ஒரு வாசகரால் புறக்கணிப்பை ஆதரித்து வழங்கப்பட்ட விவாதத்துக்கு எமது பதிலை வழங்கியிருந்தோம்.

அன்று தொட்டு, நமது ஜூலை 12 அறிக்கை ஜூலை 17 கடித பரிமாறல் இரண்டுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக கடிதங்களுக்கான பதில்களை நாம் பெற்றுள்ளோம். இது மத்தியகிழக்கு தொடர்பான உடனடியான தந்திரோபாயங்களுக்கு மிகவும் அப்பாற்பட்டதாக பிரச்சினைக்குரிய விடயங்கள் செல்கின்றது. அவை சர்வதேச தொழிலாளர் இயக்கம் எதிர்கொள்ளும் வரலாற்று, தத்துவார்த்த அரசியல் பிரச்சினைகளை தமது அணுகுமுறைகளான "தீவிரவாத" அல்லது இடதுசாரி" என பொதுவாக குறிப்பிடப்படுபவனற்றுக்கும் மார்க்சிசத்துக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாடுகளை விரிவாக எடுத்துக்காட்டுகின்றன.

எமது ஆரம்ப கட்டுரையில் நாம் தெளிவாக குறிப்பிட்டதைப் போல, உலக சோசலிச வலைத் தளம் தேசிய இனம் என்ற ரீதியினை மட்டும் அடிப்படையாக கொண்டு மக்களை பாரபட்சப்படுத்தும் செயல்களை மறுப்பதுடன், தனிப்பட்ட வகையில் இஸ்ரேலிய கல்விமான்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் வியூகம் வகுக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கு, உதாரணமாக அவர்களை மாநாடுகள், வெளியீடுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்புகளில் இருந்தும் தடை செய்தற்கு எதிர்ப்பாக உள்ளது.

"இதன் நடவடிக்கைகள், சாதாரண இஸ்ரேலிய பிரஜைகளை சியோனிச மீள் எழுச்சி முயற்சிக்கு இலக்காக்கி, முழு உலகுமே யூத மக்களுக்கு எதிர்ப்பாகவுள்ளது என்றும், இஸ்ரேலிய அரசு மட்டுமே அவர்களுக்கு ஒரே ஒரு பாதுகாப்பானதாக உள்ளது என்ற ஆழ்ந்த பிற்போக்குத்தனமான ஐயுறவுமிக்க பிரமைகளுக்குள் மூழ்கடிக்கும் முயற்சிக்குள் தள்ளவிடும் ஒன்று" என நாம் முன்பு எழுதியிருந்தோம்.

எமது சில வாசகர்களின் கருத்துப்படி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நாளாந்தம் கோடிக்கணக்கான மக்கள் முகம்கொடுக்கும் பயங்கரமான நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் கையளவிலான சிறு இஸ்ரேலிய கல்விமான்களின் தலைவிதிக்கான கவனம் சற்று அப்பாற்பட்ட விடயமே. இந்த ரீதியிலான விவாதங்கள் இஸ்ரேலிய அரசுக்கெதிராக நெறிப்படுத்தப்படும் எச்செயலையுமே இஸ்ரேலிய பேராசிரியர்களை கருங்காலிகளாக்குவதுடன், டெல்அவிவ் பிரதேச தொழிலாள வர்க்க பிரதேசங்களில் தற்கொலை குண்டுதாரி தாக்குல்களை நியாயப்படுத்துவதில் கொண்டுபோய்விடும்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் நடாத்தப்படும் கொடுமைகளையிட்டு ஆக்ரோஷமடைவது எதிர்ப்பு அம்சங்களில் அடங்கியுள்ள அரசியல் அடக்கத்தை கவனமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியதில்லை என அர்த்தப்படவில்லை. தொழிலாள வர்க்கத்தை குழப்பும் அல்லது அவ்வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர அணிதிரட்டலின்றி ஓர் முற்போக்கான சமுதாய மாற்றத்தை அடைந்துவிடலாம் என்ற கருத்தினை முன்வைக்கும் அத்தகைய செயல்முறைகளை நாம் நிராகரிக்கிறோம்.

பாலஸ்தீனிய மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலுக்கு எதிரான பல்வேறுபட்ட வடிவங்களிலான எதிர்ப்புக்களான, இஸ்ரேலுக்கான உதவிகளுக்கு முடிவு கட்டும் கோரிக்கை, முதலீடுகளுக்கு இடமளியாமை உட்பட்ட சகலவற்றின் நியாயபூர்வமான தன்மையை நாம் அங்கீகரிக்கிறோம். ஆனால் எமது நிலைப்பாட்டின் அடிப்படைப் பிரச்சினை என்னவெனில், இத்தகைய கோரிக்கைகள் இஸ்ரேலிலும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளினதும் யூத அராபிய தொழிலாள வர்க்கம் இரண்டினதும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியத்துக்குமான சோசலிச நனவை அபிவிருத்தி செய்ய எங்ஙனம் சேவையாற்றுகின்றது என்பதேயாகும்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு கிடைத்த சில கடிதங்கள் மிகக் கபடமாக எமது நிலைப்பாட்டை திரிபுபடுத்தி அதனை சியோனிச ஆதரவாக கொச்சைப்படுத்தியும், பாலஸ்தீன மக்களின் ஒடுக்குமுறை தொடர்பாக கவனமற்றதாகவும் சித்தரிக்கின்றன. இத்தகைய நேர்மையற்ற குற்றச்சாட்டுகள், கல்விமான்களின் புறக்கணிப்பை தமது செல்வாக்கினை விரிவுபடுத்தும் ஒன்றாக கருதும் இத்தகைய குட்டி முதலாளித்துவ "இடது" எதிர்ப்பு இயக்கங்களினது தன்மையில் இருந்து ஊற்றெடுத்தமையால் அவை எம்மை எதிப்பதற்கு இன்றியமையதவையாய் விளங்குவதாகவும் உள்ளன.

ஏனைய வாசகர்கள் மிகத்தெளிவாக, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும் சம்பவங்களான கோடிக்கணக்கானோரை வீட்டில் அடைத்து அப்பாவி மக்களை கொல்லும், பாலஸ்தீனிய உள்கட்டமைப்பின் எஞ்சிய சொற்பங்களையும் அழிக்கும் செயல்களையிட்டு பயமடைந்து சியோனிச ஆட்சியின் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எதிர்ப்புச் செயல்களுக்கு ஏன் ஒருவர் மறுப்பாயிருக்க வேண்டும்? என கேள்வி எழுப்புகின்றனர்.

எவ்வாறிருந்தபோதும், இதில் அநேகமாக வெளிப்படும் தன்மை ஒன்று என்னவெனில், சியோனிசத்துக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தையும் சர்வதேசியத்தையும் அடிப்படையாக கொண்ட எந்தவொரு போராட்டத்துக்குமான அவசியத்தை அடிப்படையாக நிராகரித்துவிடும் ஒழுங்கீனமான அணுகுமுறை ஒன்றே காணப்படுகிறது. சில கடிதங்கள் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் என்ற ஒன்று கிடையாது என வற்புறுத்துகின்றன. ஏனையவர்கள் அராபிய, யூத தொழிலாளர்களிடையே உள்ள கூர்மையான சமூக அரசியல் பிரிவினைகளால் அவர்களை ஐக்கியப்படுத்துவது சாத்தியமற்றதென பிரகடனம் செய்கின்றனர்.

வேறுசிலர் இன்று "ஓர் அரசியல் அமைப்பில் ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கம் ஒன்று உருவாகாது" என்பதால் மத்திய கிழக்கில் ஓர் முற்போக்கான மாற்றம் ஏற்படுத்தப்பட வழிகாண வேண்டும் அதனால் பாலஸ்தீனிய மக்களின் துயரங்களுக்கு முடிவுகட்டப்படலாம் என்கின்றனர்.

இது விசேடமாக முதலாளித்துவ தேசியத்திற்கு அடிபணிவதையே அர்த்தப்படுத்துகின்றது. இந்த புறக்கணிப்பும் "இரு அரசுகள் என்ற தீர்வு" நோக்கி நெறிப்படுத்தப்பட்டதாகும். அதாவது மேற்குகரை, காஸாகரை பகுதிகளில் முன்னர் இருந்த சுதந்திர பாலஸ்தீனிய அரசு என்பதை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை மூலமான ஓர் இணக்கப்பாடு என்பதாகும்.

உலகம் பூராவுமுள்ள சோசலிஸ்டுகள் தற்போதுள்ள பாலஸ்தீனிய தலைமைகளுடன் ஆதரவான செயல்களை கொண்டுள்ளதாக அவர்கள் அடையாளம் கண்டால் மட்டுமே பாலஸ்தீனிய மக்களை சோசலிசத்திற்கு வென்றெடுக்க முடியும் என எமக்கு கூறப்பட்டது. எப்படி நாம் "ஆயுத போராட்டத்துக்கு ஆதரவளிக்காதிருக்க முடியும்? என ஒரு வாசகர் கோருகின்றார். அதாவது அப்போராட்டம் ஹமாஸ்களினால் மட்டுமல்லாது ஃபாத் (Fatah) இயக்கத்தினது பிரிவினராலும் மற்றும் முன்னாள் ஸ்ராலினிச ஆதரவு, பாலஸ்தீனிய விடுதலைக்கான ஜனநாயக முன்னணி (DFLP) யினாலும் ஆதரிக்கப்படும் பட்சத்தில் நாம் எப்படி ஆதரிக்காதிருக்க முடியும்? என்கிறார் அவர்.

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், ஒரு குட்டி பாலஸ்தீன அரசு உருவாக்குதலினால் தீர்க்கப்படலாம் என நாம் நம்பவில்லை. அரை நூற்றாண்டுக்கு மேல் இத் தேசியப் பிரச்சினை அநேக மத்திய கிழக்கு பிரச்சினையின் மத்தியாக இருந்தது கண்கூடு. ஆனால் பொதுமக்கள், தமது அரசியல் வங்குரோத்தை நிரூபித்த சகல தேசிய இயக்கங்களினது கசப்பான அனுபவங்களை கடந்து வந்துள்ளனர். சகல இடங்களிலுமே ஏகாதிபத்தியத்திடமிருந்து நியாயமான சுதந்திரம் பெற்றுவிடவோ அல்லது தொழிலாள ஒடுக்கப்பட்ட பெரும்பாலான மக்களது பொருளாதார அபிவிருத்திக்கான அத்திவாரத்தை கட்டியெழுப்வோ தேசிய முதலாளித்துவம் இலாயக்கற்றது என்பதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது.

ஒருகாலத்தில் புகழ்ந்துரைக்கப்பட்ட "ஆயுதப் போராட்டத்தினது" இறுதிமுடிவான வெளிப்பாடே இன்று தற்கொலை குண்டு தாக்குதலுக்கான பக்கபலமளிப்பதாகும். இது இத்தகைய தேசிய இயக்கங்கள் அடைந்த அரசியல் முட்டுச்சந்தியின் வெளிப்பாடாகும். தசாப்த காலமான ஒடுக்குமுறைகளால் இறுதியாக எஞ்சியுள்ள நம்பிக்கையீனமான நிலைமைகளும், இந்த தேசியவாத வேலைத்திட்டத்தின் தோல்வியும் இணைந்து இளம் பாலஸ்தீனிய தட்டினரை, இவ்வகையில் தமது உயிர்களை கொடுக்க தயாராகும் துயரமான நிலையை தோற்றுவித்துள்ளது. இந்த நடைமுறையை முன்னெடுத்தவர்களின் அரசியலும் முற்றாக பிற்போக்கு தன்மையானதாகும்.

இத்தகைய செயற்பாடுகளை நியாயப்படுத்த முயற்சிப்பவர்கள், இஸ்ரேலிய அரசின் பாரிய குற்றச் செயல்களை சாட்டாகக் காட்டுகிறார்களே தவிர முதலாளித்துவத்திற்கும் அராபிய, இஸ்ரேலிய ஆளும்தட்டினருக்கு எதிராக ஒரு பொதுப் போராட்டத்தில் அராபிய, இஸ்ரேலிய தொழிலாளர்களின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதை இலக்காக கொள்ளவில்லை. அவர்கள் முற்றாக மாறுபட்ட முடிவுகளுக்கே அழுத்தம் செய்கிறார்கள்.

இஸ்ரேலானது ஒரு முதலாளித்துவ அரசாகும். அதாவது தொழிலாள வர்க்கத்தை சுரண்டி உருவான ஒரு அரசாகும். அதேவேளை இத்தொழிலாளரை "குடியேற்றவாசிகளாக" (காலனித்துவவாதிகளாக) பண்புரீதியாக்குவது இது விரக்தியடைந்தவர்களின் நன்னடத்தைக்கான உணர்வை திருப்திப்படுத்துவதாயிருப்பினும் ஓர் புறநிலையான அல்லது புரட்சிகரமான முன்நோக்கிற்கான அடித்தளத்தை உருவாக்காது.

இஸ்ரேலில் தற்போது எழுந்துள்ள நிலைமைகள் சிக்கலான வரலாற்று அரசியல் அபிவிருத்திகளின் உற்பத்தியேயாகும். இஸ்ரேலில் தொழிலாளர்களிடையே சோசலிச நனவின்மைக்கான காரணம் அனைத்துலக தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாத மற்றும் அராபிய உலகின் முதலாளித்துவ தேசிய இயக்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டமையாகும்.

பல தசாப்தங்களாக இஸ்ரேலிற்குள் கணிசமானளவு யூத குடிவரவாளர்கள் வந்தமைக்கு சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முதலில் வெளிப்படுத்தப்பட்ட பிற்போக்கு கொள்கைகளும், பின் சோசலிச சோவியத் குடியரசு ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் உருவான கடுமையான நிலைமைகளுமே காரணமாகும்.

இஸ்ரேலியத் தொழிலாளரிடையே நனவினை அபிவிருத்தி செய்வதில் கணிசமானளவு பிரச்சினைகள் இருந்தபோதும் பாலஸ்தீனியருக்கு எதிராக நடாத்தப்பட்டுவரும் யுத்தத்துக்கு எதிராக ஷரோனுக்கு இஸ்ரேலுக்குள் பெருமளவு எதிர்ப்பும் எழுந்திருந்தது. அடிக்கடி நடக்கும் கருத்துக்கணிப்புகள் பெரும்பான்மையோர் குடியேற்றங்களை அமைப்பதை கைவிடுவதற்கும் காஸா, மேற்குகரை பகுதிகளில் சகல துருப்புக்களை வாபஸ்பெறவும் சாதகமாகவுள்ளதை புலப்படுத்தியுள்ளன.

இத்தகைய பரந்த உணர்வுகள், சோசலிஸ்டுகள் மிகத்திட்டவட்டமாக அனைத்துலகவாத நிலைப்பாட்டில் நின்று போராடுவதால் மட்டுமே சந்தர்ப்பத்துக்கேற்ப விரக்திக்கு அடிபணியாது ஓர் முற்போக்கான வழியை கண்டுபிடிக்க உதவும். இது "தற்போது எது சாத்தியமானது" என ஆரம்பமாகியுள்ள சந்தர்ப்பவாத அரசியல் வகையறாவுக்கும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலுள்ள நனவான நிலைமையில் இருந்து எதை பெறப்படலாம் என்பதற்கு எதிரான அணுகுமுறையாகும்.

உண்மையான ஸ்திரமான ஓர் சமாதானம் இப்பகுதியில் உருவாக்கப் பெறுவதற்கான ஒரே ஒரு அடிப்படையாக, உலக சோசலிசப் புரட்சியின் ஓர் பாகமாக அனைத்து இன, மதங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் இணைத்து ஐக்கிய சோசலிச மத்திய கிழக்கு அரசுகளை உருவாக்க போராடுவதே விளங்குகிறது. பொதுமக்களது சமூக ஜனநாயக தேவைகளை பாலஸ்தீனிய முதலாளித்துவம் நிரப்பிவிடும் தன்மையை கொண்டுள்ளது என்ற பிரமையை வளர்ப்பதால் அந்தப் பணியை செய்யமுடியாது. "நடைமுறை சாத்திய இலக்கு" என்ற "இரு அரசுகள்" என்ற தீர்வுக்கு பக்கபலமாக முன்னெடுப்பதும் இதற்கு தீர்வல்ல. இஸ்ரேலிய ஆட்சிக்கும் தற்போதைய பாலஸ்தீனிய தலைமைகளுக்கும் இடையிலான எந்தவொரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுமே இருபகுதியை சார்ந்த தொழிலாளரது வர்க்க ஒடுக்குமுறையை மேலும் ஆழமாக்குவதிலேயே கொண்டு செல்லும்.

ஒர் தொகையான வாசகர்கள், 1980ல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான புறக்கணிப்பு, முதலீடு செய்யாமைக்கான பிரச்சாரங்களைப் பற்றிய எமது இயக்கத்தின் நிலைப்பாடு என்னவாக விளங்கியது என கேட்டிருந்தனர். ஒரு சில தனிப்பட்ட தென்னாபிரிக்க கல்விமான்களை கருங்காலிகளாக்கும் அழைப்புக்கு நாம் ஆதரவளிக்கவில்லை. அவர்களில் சிலர் இனவாதத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்டியமைக்கு தண்டனை, ஒடுக்குமுறை என்பவற்றுக்கு ஆளாகியிருந்தனர்.

தென்னாபிரிக்க ஆட்சிக்கு எதிரான பொருளாதாரத் தடையை ஆதரித்த அதேவேளை, அக்காலகட்டத்தில் இந்த புறக்கணிப்பு முதலீட்டை செய்யாமை பிரச்சாரத்தை நடத்துபவர்களது அரசியல், ஐரோப்பிய அமெரிக்க ஆளும் கட்சிகளின் அரசியல்வாதிகள், பிரதான கூட்டுத்தாபனங்கள் என்பவற்றின் ஆதரவை வென்றெடுக்க இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை அடிமைப்படுத்தவே சேவையாற்றும் என எச்சரிக்கை செய்திருந்தோம். பெருவர்த்தக சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவானது, இந்த நிறவெறி இனவாதத்தை தனது சுய அக்கறையிலான நிலைப்பாட்டில் நின்று ஆராய்ந்து தனது தூரநோக்கான அதிக பொருளாதார இலாபகரமான ஆட்சியொன்றுக்கான மாற்றத்துக்காக ஆதரித்தது. எமது இயக்கமானது ஆயுத, ஏனைய பொருட்களை தடை செய்வதனூடாக உள்ளடங்கலாக தென்னாபிரிக்க தொழிலாளின் ஆதரவுக்கான தொழிலாள வர்க்கம் தனது சுயாதீனபலத்தை அணிதிரட்டுவதன் தேவையை வலியுறுத்தி நின்றது.

இஸ்ரேலிய கல்விமான்களை புறக்கணிக்குமாறு கோரும் பிரச்சாரத்தில் தென்னாபிரிக்காவை மாதிரியாக குறிப்பிட்டுக் காட்டுபவர்கள், நிறவெறிக்கு எதிரான புறக்கணிப்பு பிரச்சாரத்தில் அடங்கியிருந்த தேசியவாத, சீர்திருத்தவாத அரசியல் பற்றியோ உண்மையில் தென்னாபிரிக்காவில் உற்பத்தியான "வெற்றி" என்று கூறப்பட்டதை பற்றியோ சிறிதும் அக்கறை காட்டவில்லை. கல்விமான்கள் புறக்கணிப்பு சம்பந்தப் பட்டதில் மட்டுமன்றி பன்னாட்டு வங்கிகள், கூட்டுத்தாபனங்கள், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டதிலும் நிறவெறியின் சட்டபூர்வ வரம்பே அற்றுப்போய் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையிலான புதியதோர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. பொருளாதார அதிகாரம் பிரதானமாக சர்வதேச நிதிமூலதனத்தின் கடும்பிடிக்குள் அடங்குவதை நோக்கிய சிறிய மாற்றம் மட்டுமே உருவாகியது.

அரசாங்கத்துள்ளும் கூட்டுறவு பிரிவினுள்ளும் நுழைந்த ஒர் சிறு தட்டினரான கறுப்பரிடையே ஓரளவு மீள் பகிர்ந்தளிப்பு காணப்பட்டிருந்தாலும் கூட எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் சிறுபான்மை வெள்ளையரது ஆட்சியின் கீழ் காணப்பட்ட வறியவர் செல்வந்தர்களிடையிலான இடைவெளியானது மிகப் பாரியதாயுள்ளது. பரந்த மக்களிடையே நம்பிக்கையீனம் அதிகரித்த அளவில் வளரும் நிலைமைகளே அதாவது மூன்றிலொரு பங்கு ஜனத்தொகை வேலையற்றதாயும் நான்கில் ஒரு பகுதியினர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டும் காணப்படுகின்றனர். இத்தகைய நிலைமைகள் பொதுவாக "நிறவெறியின் நியாயபூர்வமாக" எடுத்துக்காட்டப்பட்ட அதேவேளை அவை முதலாளித்துவத்தில் இருந்தும் அதனை நிலைக்கச் செய்த புறக்கணிப்பு பிரச்சாரத்தினூடாக விளைந்த அம்சமான ஒரு மாற்றமாகிய அதிகார பலத்தினையும் கூட நியாயப்படுத்துகின்றது.

எமது அறிக்கையை மறுக்கும் எவருமே இந்த புறக்கணிப்பு இஸ்ரேலிய கல்விமான்களுடன் மட்டும் ஏன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. பாலஸ்தீனியரை ஒடுக்கவும், கொல்லவும் பயன்படுத்தப்படும் குண்டுகள், ரவைகளள், பணம் என்பவற்றை வழங்கிய வாஷிங்டன், லண்டன் சார்ந்த அமெரிக்க பிரித்தானிய கல்விமான்கள் ஏன் இதில் உள்ளடக்கப்படவில்லை? அத்துடன் அவ்வரசாங்கங்கள் இஸ்ரேலினால் இழைக்கப்பட்ட குற்றங்களிலும் பார்க்க மோசமான குற்றச் செயல்களுக்கான பொறுப்புள்ளவர்கள். எம்மை சிலர் இஸ்ரேலிய கொடுங்கோன்மையாளருடன் பக்கச்சார்புள்ளதாக குற்றம்சாட்டி, அல்லது உலகச் சந்தையில் அமெரிக்கா வகிக்கும் பங்கின் அளவு காரணமாக அமெரிக்காவை விட இஸ்ரேலை புறக்கணிப்பது சுலமானது எனவும் வாதாடுகின்றனர்.

ஆனால் உண்மைகளை எடுத்துப் பார்ப்பின் இஸ்ரேலிய கல்விமான்கள் உலகின் ஏனைய பாகத்தில் உள்ள அவர்களது சகபாடிகளை விட மோசமானவர்கள் அல்ல. புஷ் நிர்வாகத்தின் உலகளாவிய இராணுவமயமாக்கல், ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட போர் குற்றங்கள், வரப்போகும் ஈராக்கிற்கு எதிரான போர் அல்லது உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான ஒடுக்குமுறை என்பன பற்றி அமெரிக்க கல்விமான்களுள் எத்தனை எதிர்ப்பு குரல்கள் இதுவரை வெளிவந்துள்ளன?

இறுதியாக, சில பிரித்தானிய ஏனைய ஐரோப்பிய கல்விமான்கள் இப்பிச்சாரத்தை தமது அமெரிக்க சகபாடிகளை போலவே இதன்மூலம் மத்திய கிழக்கு சமாதானத்தை கொண்டுவருவதில் ஒரு பங்கினை வகிக்கலாம் என கருதலாம். அவர்களது நோக்கம் என்னவாயிருப்பினும், தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலாகிய நியாயமானதற்கு வெளியே உள்ள இந்த உணர்வை அவர்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர்கள் சுதந்திரமாக செயலாற்றமாட்டார்கள். அத்துடன் தமது தேசிய ஆளும் தட்டினது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி முதலீட்டின் தேவைக்கேற்ப மத்திய கிழக்கை மீள் ஒழுங்குபடுத்துவதற்கு உதவுவதே அவர்களின் பணியாகும்.

அனத்துலக சோசலிச வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒர் புரட்சிகர தொழிலாள இயக்கத்தை கட்டியெழுப்புவதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டளவில் மட்டுமே சமூகத்தின் மாற்றமொன்றுக்கான முன்னேற்றமான பங்கினை இந்த புத்திஜீவிகளாலும் கல்விமன்களாலும் வழங்க முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும். தற்போதைய புறக்கணிப்பு பிரச்சாரம் இந்த இயக்கத்திற்கு எதிரிடையானதாகும்.

Bill Vann

உலக சோசலிக வலைத்தள ஆசிரியர் குழுவின் சார்பில்

* * *

அன்பார்ந்த தோழர்களே,

நான் உங்களது வலைத் தளத்தில் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே சந்தாதாரராகி இருப்பினும் அதனால் நான் அடைந்த தாக்கமானது மிகவும் பிரமாண்டமானது. நான் கூறவேண்டிய சகலதும் "நன்றாக செய்துள்ளீர்கள்." இந்த சிறந்த வேலையை தொடர்ந்தும் கடைப்பிடியுங்கள்" என்பதே. விரைவில் உ.சோ.வ. தளம் பற்றி மிகக் கூடுதலாக நான் அறியப் போகிறேன் என்று மட்டும் நான் கூற விரும்புகிறேன். சிலகாலம் முன் நான் மார்க்சிச சோசலிச தத்துவத்தையும் பதிலீடான ஊடகங்களையும் படித்துள்ளேன். உங்களது வலைத் தளம் அதனது செழிப்பான வார்த்தை பிரயோக போக்கினால் உண்மையாக ஆழ்ந்த கருத்தையும் சிந்தனை அறிவையும் கொண்டுள்ளது. மிகவும் வியப்பானது!

எவ்வாறாயினும் நான் உங்களுக்கு "வாழ்த்துக்கள்" என்ற சிறு குறிப்பை வழங்க விரும்புகிறேன். அத்துடன் இச் சிறந்த போராட்டத்தை ஒரு போதுமே நிறுத்வேண்டாம். ஏனெனில் அனைத்து இடங்களிலும் உள்ள படிப்பறிவற்ற மக்களுக்கும் அறிவார்ந்த புத்திஜீவிகளாகிய இருவருக்குமே உங்களை போன்றவரது கருத்துக்கள் மிகத் திட்டவட்டமாக விலைமதிப்புமிக்கது.

சமாதானமும் நல்வாழ்த்துக்களும்,

MD

பி.கு: இஸ்ரேலிய கல்விமான்கள் புறக்கணிப்புக்கு எதிர்ப்பதில் நீங்கள் நூற்றுக்கு நூறு சரியானவர்கள். சோசலிசமானது அதனது ஆதரவாளர்கள் என கூறுபவர்கள், இத்தகைய இனவாத நோக்குகளை கொண்டவராகவும், தேசியங்கள் தேசங்களிடையே மேலதிக பிரிவினைகளை ஏற்படுத்த ஆதரவாளராக இருக்கும் பட்சத்தில், உலக மக்களை எங்ஙனம் வெற்றி கொள்ளும் என எதிர்பார்க்க முடியும்? இது தொடர்பாகவும் ஏனைய செய்தி கட்டுரைகளிலும் உ.சோ.வ.தளத்தின் ஆசிரியர்கள்/ எழுத்தாளர்களின் பரந்து பட்ட தன்மை உண்மையில் கவர்ச்சியானதும் உயர்ந்த தாக்கமளிப்பதுமாகும். தொடர்ந்து பேணுக!

22 ஜூலை 2002

* * *

ஹலோ,

உங்களது இஸ்ரேலிய கல்விமான்களின் புறக்கணிப்பு பற்றிய கட்டுரையை வாசித்ததுடன் அது மட்டும்தான் இஸ்ரேலிய கொள்கை சம்பந்தமாக நான் கண்ட மிகத் தெளிவானதும் தீர்க்கமான மனப்பாக்குடனுமான கட்டுரையென்று உங்கள் பக்கமாக நின்று சில வரிகளை கூற விரும்புகிறேன். இந்த புறக்கணிப்பானது பிழையானது. ஏனெனில் என்னைப் பொறுத்தமட்டில் 20 நாடுகள் இடம்பெற வேண்டியதாக நான் கருதும் மனிதாபிமானமற்ற சகல நாடுகளை ஆழ்ந்த பரிசீலனைக்கும் தனிமைப்படுத்தலுக்கும் ஆளாக்காத வகையிலான ஓர் கெட்ட இரசனை கொண்டதாக என்னால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புறக்கணிக்கும் ஆதரிக்கும் மனுவை நான் பார்த்தவுடன் அதில் பல அராபிய பெயர்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதையும அவதானித்தேன். இந்த புறக்கணிப்பு சவூதி அரேபியா (நிச்சயமாக இஸ்ரேலைப் போல நீதியற்ற பாரபட்சமான ஆட்சியான) இற்கு எதிராயிருப்பின் அவர்கள் இதில் கைச்சாத்திட மறுப்பது "முஸ்லிம் எதிர்ப்பு" அல்லது "அராபிய எதிர்ப்பு" என்று இதனை அழைக்கவும் கூடுமென என்னால் நினைத்துப் பார்க்க முடியும். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியரை வருத்தி மிக நன்றாக வாழ்வதையிட்டு நான் கூட கோபமுற்றுள்ளேன். ஆனால் இதற்கு எதிர்ப்பாயிருக்கும் அதே வேளையில், நான் கூட மற்ற மக்களின் செலவில் நன்றாக வாழ்வதை நினைவு கூர்கிறேன். மிக கூடிய வகையில் ஆத்ம சக்தியுள்ள பல மக்கள் இதனை அங்கீகரிக்க மறுப்பர்.

L.

21 July 2002

* * *

அன்பின் ஐயா.

எனது எதிரிகளுடன் தொடர்பு கொள்வதை நான் அடிப்படையில் எதிர்க்கிறேன். இது மனித இயல்பு என நான் கருதுகிறேன். அமெரிக்கா ஈராக்கையும் ஏனைய நாடுகளையும் புறக்கணிக்க தீர்மானித்தபோது அப்பாவிகளுக்கும் தனது எதிரிகளுக்கும் அது விளைவிக்கப்போகும் கேடுகளை பற்றி நன்கு அறிந்திருந்தது. இது தவறாகவிருப்பினும், தற்போது நான் இஸ்ரேலிய அரசு முற்றாக நிர்மூலமாக்கப்படுவதை காண விரும்புவதுடன் 1944 இலும் அதற்கு முன்னரும் சியோனிஸ்டுகள் பிராங்கிளின் ரூஸ்வெல்டின் ஆதரவுக்காக தள்ளப்பட்ட சமயத்தில் பேர்னாட் பெருட்ஸ்சின் மனப்பாங்குடன் முழு மனதோடு ஒத்துப் போகிறேன். அவரது மறுப்புகள் எவ்வாறாயினும் அரசு அங்கிருந்ததுடன், அது மீண்டும் மீண்டும் அவரால் சரியானதாக நிரூபிக்கப்பட்டது. இந்த அரசை விரும்புபவர்களுக்கு இந்த பாரிய சனத் தொகைப் பற்றிய அக்கறையோ அனுதாபங்களோ ஒருபோதும் பொருட்படுத்தப்படாது. அத்துடன் இன்று இக்கொடூரங்கள் நாளுக்கு நாள் மோசமடைந்துவருகின்றன.

அழிவுகர சியோனிஸ்டுகளின் விளையாட்டின் பெயராக கூட்டுப்பொறுப்பு விளங்குகின்றது. இச் சியோனிஸ்டுகள் பல்லாண்டுகாலமாக இத்தகையவற்றுக்கெதிராக போர் தொடுத்தவர்கள். அதே மனிதர்களே கூட்டாக அராபியரை சீரழித்து இடையறாது தொடரும் போர் ஒன்றை விளைவித்து இந்த முட்டாள்தனத்திற்காக அமெரிக்காவுக்கு வெட்கத்தை கொண்டுவந்தவர்கள். இந்த இரு அரசுகளான இஸ்ரேலிய அரசும் அமெரிக்காவும் இரு குற்றவாளிகளே உலகின் எந்தவொரு நல்ல செயல்களிலும் இவர்களை பங்குபற்றவிடக்கூடாது.

FS

18 July 2002

* * *

அன்புள்ள ஆசிரியர்களே:

ஜே. பி. யின் கடிதம் மிகச் சூடானதாகவும் வெற்றுக்கையணியுடன் காணப்பட்டாலும் மிக தீர்க்கமான உந்தல்களுடன் விளங்கும் அதேவேளை உங்களது எதிர்வாதம் துயரமான ஏமாற்றத்தை வழங்குகிறது. ஒரு சிறு குறிப்பை ஆனால் நீங்களும் பகிர்ந்துகொண்டுள்ள இந்த சம்பவத்தில் தூண்டப்பட்டுள்ளதை கூற இடமளியுங்கள். நீங்கள் "தொழிலிலிருந்து நீக்குவது" சம்பந்தமாக விபரிக்கிறீர்கள். இவ்விடயத்தில் தான் நீங்கள் கல்விமான்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை நிச்சயமாக அறிவீர்கள். ஒரு ஆசிரியர் தனது சகாக்களை ஆசிரியர் குழுவில் இணைய வரவழைக்கிறார். அதன் மூலம் சஞ்சிகைக்கு சம்பளம் வாங்காத கூட்டுக்காக ஒன்றாகியிருப்பதுடன், அதனை வெளியிடுவதற்கும் அனுமதி வழங்குகின்றார். பேராசிரியர் பேக்கர் இஸ்ரேலிய கல்விமான்களின் புறக்கணிப்புக்கு ஆதரவாக இவ்விரு இஸ்ரேலியர்களையும் சுய விருப்புடன் அவர்களை தமது சஞ்சிகையிலிருந்து (தயவுசெய்து அவர் ஓர் ஆசிரியர் என்பதை போலவே ஓர் பிரசுர கர்தாவுமாவார் என மனங்கொள்ளவும்) வெளியேறுமாறு கோருகிறார். அதற்கு நன்றியாக வெளியேற மறுக்கும் அவர்களை அதாவது தமது பதவிமேன்மையிலும் பார்க்க இஸ்ரேலிய தேசியத்துக்கு ஆட்பட்டதை வெளிப்படுத்தும் அவர்களது மறுப்புக்காக இவ்விரு இஸ்ரேலிய கல்விமான்களே கண்டனத்துக்கு உரியவர்கள், அவர்கள் மீது பேராசிரியர் பேக்கரின் தீரமான நிலைப்பாடு எடுத்துக்காட்டாகவுள்ளதுடன், அவ்வெடுத்துக்காட்டானது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

நன்றியுடன்

NM

18 July 2002

* * *

அன்புள்ள ஆசிரியரே,

1967 இல் இருந்து ஆக்கிரமிக்கப்ட்ட பாலஸ்தீனிய பகுதிகளின் மீதான நாளாந்தம் நடக்கும் ஷெல்லடி, குண்டுவீச்சுகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்பின் சீரழிவுகள் இறுதியில் 1967ல் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாது அதன் வாழ்வின் சகல அம்சங்களிலும் செயல்முறையிலும் தத்துவத்திலும் காட்டும் இஸ்ரேலிய நாட்டின் காலனித்துவ தன்மையுடனும் துன்பகரமான தன்மைகளுடனும் சமாதானமாக வாழவிரும்ப முயற்சித்த மேற்கத்தைய நாட்டு கல்விமான்களின் முற்போக்கானவர்களை ஒரு விதமாக கருத்தை தெரிவிக்கவைத்துள்ளது.

இஸ்ரேலிய கல்வியாளர் கூடம் உலகில் பரந்துபட்டதாயுள்ளது. இது அரச தட்டினரின் ஒரு பாகமாகவுள்ளதுடன் ஆளும் வர்க்கங்களுடன் நெருங்கி உறவாடுகின்ற ஒன்று. ஒரு போதுமே அதற்கு எதிர்ப்பானவராக தம்மை காட்டிக்கொள்ளாததாகும். பல்கலைக்கழக நிறுவனங்ககள் கல்வி நிறுவனங்கள் ஒரு போதுமே ஆக்கிரமிப்புக்கு எதிராகவோ அல்லது காஸா, மேற்குகரை பகுதிகளில் முதல், இரண்டாம் கட்ட இன்டிபாடாவின்போது பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இருந்த பரிதாப நிலைமைகளை பற்றித் தன்னும் கூட எதிராக குரலெழுப்பாதவையே.

1980 களின் ஆரம்பத்தில் இருந்து இஸ்ரேலிய உயர்கல்விப்பீடமானது அராபிய மொழியில் கற்பிக்கும் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கு இஸ்ரேலிலுள்ள பல அராபிய நிறுவனங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தடுத்து வந்தது. இத்தகைய கோரிக்கைகளுக்கு ஆதரவாக இஸ்ரேலிய கல்விமான்கள் எதுவித குரலையும் எழுப்பவில்லை. (அதே சமயம் பூர்வாங்க, ஆரம்பகல்வியை அராபிய மொழியில் பயின்ற இஸ்ரேலில் வாழும் அராபிய மாணவர்கள் தமது உயர் கல்வியை கீப்ரூ (Hebrew) மொழியில் படிக்க வேண்டியிருந்ததுடன் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்ல மறுக்கப்பட்டதுடன் அதே சமயம் இஸ்ரேலுக்கு வந்த யூத குடியேற்றவாசிகள் இத்தகைய வகுப்புகளுக்கு இலவசமாக செல்லமுடிந்தது.)

தமது சுய நிறுவனங்களில் அவர்களுக்குள்ளேயே காணப்பட்ட இனவாத, ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஒருபோதும் இஸ்ரேலிய கல்விமான்கள் எதிர்க்கவில்லை. மாநாடுகள் கருத்தரங்குகளில் அலசப்படும் விடயங்களில் கூட "ஜனத்தொகை பிரச்சினைகள்'' முற்றாக நியாயப்படுத்தப்பட்டிருந்தது (அராபிய குடிமக்களும் குடியேற்றவாசிகளும் இஸ்ரேலுக்குள்ளேயே வாழ்கின்றனர் என்ற உண்மை காணப்படும் நிலைமையிலும்). மறுபுறத்தில் பாலஸ்தீனிய மக்களுக்கெதிராக நடத்தப்படும் குற்றங்களை இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுள் தெரியப்படுத்த முயற்சிப்பவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவர். (மிகப்பிரபலமான வழக்கு 1948 போரின்போது தன்ரோரா கிராமத்தின் அராபிய பிரஜைகளின் வெளியேற்றம் பற்றி எம்.ஏ.பரீட்சை ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய டெடிகாசுக்கு (Teddy Katz) எதிரானது)

இரண்டாம் இன்டிபாடாவின் பின்னர், பல்கலைக் கழகங்கள் இடதுசாரி கல்விமான்களை விசாரணை செய்யத் தொடங்கின. கய்பா (Haifa) பல்கலைக்கழக 9 விரிவுரையாளர் உள்ளார்ந்த விசாரணைகளுக்காக பயமுறுத்தப்பட்டனர். ஏனெனில் அவர்கள் பல்கலைக் கழக நிர்வாகத்தினால் தடை செய்யப்பட்ட அராபிய மாணவர் மன்றத்தின் ஊர்வலம் ஒன்றில் பங்குபற்றியிருந்தனர். கலாநிதி இயான் பப்பே (Illan Pappe) என்ற வரலாற்றாசிரியர் புறக்கணிப்பு மனுவில் "தனது சகாக்களுக்காக வாதாடி கையெழுத்திட்டதால் குற்றச்சுமத்தப்பட்டு முற்றாக வெளியேற்றப்பட்டார்.

நீங்கள் சியோனிசத்திற்கும் ("Zionism") யூதவாதத்திற்கும் ("Judaism") இடையேயுள்ள தொடர்பை பார்க்கவேண்டும். சியோனிஸ்டுகளுக்கும் மற்றும் சியோனிச அமைப்புகளுக்கும் எதிரான செயல்களை "ஒருவரது தேசியம், இனம், மதம் என்ற ரீதியினாலான துன்புறுத்தல் என்பதை காலனித்துவவாதி/ சியோனிசம் என கருதுவது யூதரின் ஒரு உள்ளார்ந்த பகுதியும், ஓர் தீவிர சியோனிச எதிர்ப்புவாத அறிக்கையாகவும் உள்ளது. இது சியோனிச இயக்கங்களின் தத்துவங்களாலும், ஏனைய இனவாத அமைப்புகளாலும் ஆதரவளிக்கப்படுகின்றது.

இந்த புறக்கணிப்பு இஸ்ரேலியரை மேலும் ஆழமாக சியோனிச பொறிக்குள் தள்ளிவிடும் என நீங்கள் கூறுகின்றீர்கள். "வழமையான வேலை" என்ற கொள்கை பாலஸ்தீனியருக்கு என்ன பலனழிக்குமென்பதை ஒரு கணமேனும் நீங்கள் சிந்தித்து பார்க்கவில்லையா? இத்தகைய கொள்கை "அனைத்துலக ஒன்றிணைவு", ''அனைத்துலக புரட்சிகர இயக்கம்'' என்பன போன்ற கருத்துக்கு ஏமாற்றத்தையும் அவநம்பிக்கையையும் விளைவிக்கும் கொள்கை ஒன்றல்லவா? எட்டுகோடிக்கு மேற்பட்டவரான பாலஸ்தீனியர்கள் உங்களது கொள்கையை தீர்மானிக்கையில் கணக்கிலெடுக்கப்பட தகுதியற்றவரா?

ஆசிய, ஆபிரிக்காவில் மீள் காலனித்துவமயத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கிய முயற்சி காலனித்துவ வாதிகளுக்கு இவ்வாறான ஒடுக்குமுறையாளராக இருப்பது நல்லதல்ல என கூறுவதுதான் சிறந்தது என கருதுகின்றீர்களா? காலனித்துவ அல்லது அரை காலனித்துவ நாடுகளில் எத்தனை நாடுகள் இன்று கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தையாவது பெற்றுவிடும்? அல்லது அவை ஏகாதிபத்திய நாடுகளில் புரட்சி வெற்றி பெற்றுவிடும்வரை காத்திருந்து, வெற்றியீட்டிய தொழிலாளர்கள் இந்த மூன்றாம் உலக ஏழைமக்களுக்கு சுதந்திரத்தையும் சுயநிர்ணயத்தையும் வழங்கும் வரை காத்திருக்க வேண்டுமா?

தோழமையுடன்

IB

கைபா பல்கலைக்கழகத்தை சார்ந்த ஒரு யூத மாணவன்

14 ஜூலை 2002


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved