WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Washington pushes LTTE for more concessions at Sri Lankan peace talks
இலங்கை பேச்சுவார்த்தைகளில் மேலும் சலுகைகளுக்காக வாஷிங்டன் எல்டிடிஈ-ஐ நிர்ப்பந்திக்கின்றது
By Wije Dias
4 December 2002
Use this version to print
|
Send this link by email
| Email the author
நோர்வேஜிய தலைநகரான ஒஸ்லோவில் திங்கள் கிழமை அன்று இலங்கை அரசாங்கத்துக்கும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று சமாதான பேச்சுக்கள் தொடங்கியது. பெயரளவிலான
அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படாதபோதிலும், நாட்டின் நீடித்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு
அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை உருவாக்கிக்கொள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் மேலதிக
விட்டுக்கொடுப்புக்களை செய்வதையே அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டுகின்றது.
கடந்த வாரந்தான், ஒரு ஆதரவு மாநாடு நடைபெற்றது அதுவும் கூட ஒஸ்லோவில் கூட்டப்பட்டது.
அப்போது இலங்கையின் யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதிகளை புனருத்தாரனம் செய்வதற்கான நிதி
உதவிக்கு எல்டிடிஈ ஆனது அரசாங்கத்துடன் சேர்ந்து விண்ணப்பம் செய்தது. அந்த மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான்,
பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் உட்பட 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கெடுத்தனர்.
அந்த மாநாடு தொடங்குவதற்கு கூட முன்னதாகவே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்
அஸ்லே வில்ஸ் தெளிவாகக் கூறினார். அதாவது புஷ் நிர்வாகம் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி எல்டிடிஈ பகிரங்கமாகவே
வன்முறையைப் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும். அமெரிக்காவின் பயங்கரவாத அமைப்புகளின்
பட்டியலில் எல்டிடிஈ இருப்பதால் ஒஸ்லோவில் அமெரிக்க பிரதிநிதித்துவ குழு எல்டிடிஈ-யுடன் கை குலுக்கவோ அல்லது
ஒரே மேசையில் அமரவோ மாட்டாது என்றும் கூட அவர் விளக்கினார்.
வில்ஸின் அறிக்கைகள் எல்டிடிஈ-மீது மேலும் அழுத்தம் கொடுப்பதை கணக்கிட்டு விடுக்கப்பட்டனவையாகும்,
செப்டம்பரில் தாய்லாந்தில் நடைபெற்ற முதலாவது சுற்று பேச்சுக்களின் போது எல்டிடிஈ-யானது அதன் தனித் தமிழ்நாட்டு
கோரிக்கையை பெயரளவில் கை விட்டது. தாய்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றின் போது கூட எல்டிடிஈ-யின்
பிரதான பேச்சாளரான அன்டன் பாலசிங்கம், ஒரு தொடரான கூட்டுக்குழுக்களில் ஒத்துழைக்க உடன்பட்டார். அத்துடன்
அவரது அமைப்பின் குறிக்கோள் இலங்கையில் பிரதான அரசியல் நீரோட்டத்தில் நுழைவதே என பிரகடனம் செய்தார்.
பாலசிங்கம் வாஷிங்டனில் இருந்துவந்த சமிக்ஞையை தவறவிடவில்லை. உதவி மாநாட்டில்
அவரது உரையின் போது அவர் கூறியதாவது: ''தமிழ் தேசியப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக்காணும் அதன்
இறுதியான குறிக்கோளை நோக்கி பேச்சுவார்த்தை நிகழ்வுப்போக்கை முன்னெடுப்பதற்கு நாம் ஒவ்வொரு முயற்சியையும்
மேற்கொள்வோம். போர்நிறுத்த உடன்பாட்டில் முழு மனதாக வாக்குறுதி அளித்ததுபோல் நாம் போருக்கோ அல்லது
வன்முறைக்கோ திரும்பமாட்டோம்''. பாலசிங்கம் விட்டுக்கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தபோதிலும் அவரது
அறிக்கை போதுமானதல்ல. மாநாட்டின் மத்தியில் அமெரிக்காவின் துணை அரசு செயலரான ரிச்சட் ஆர்மிடேஜ்,
எல்டிடிஈ-க்கு ஒரு கெடு விதிப்பதற்கு இணையான அசாதாரணமான படியை எடுத்தார். ஒரு அரசியல் தீர்வுக்காண
எல்டிடிஈ-யின் அர்ப்பணத்தினால் அமெரிக்கா பெருமளவில் ''உற்சாகம் அடைந்திருப்பதாக'' கூறிய அவர், பிறகு கூடுதலாக
கூறியதாவது: ''எல்டிடிஈ மேலும் ஒருபடி முன்சென்று பகிரங்கமாகவே பயங்கரவாதத்தையும், வன்முறையையும் நிராகரிப்பதற்கான
அதன் அர்ப்பணத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாம் ஊக்கப்படுத்துகிறோம்-அதாவது எல்டிடிஈ தனிநாட்டுக்கான
அதன் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுவிட்டது என்றும் பதிலாக இலங்கை அரசாங்கத்தின் இறையாண்மையை ஏற்றுக்கொள்கின்றது
என்றும் இலங்கையிலுள்ள மக்களுக்கும் மற்றும் நிச்சயமாக சர்வதேச சமூகத்துக்கும் தெளிவுபடுத்துவதற்காகும்''.
ஏனைய இடங்களில் நடந்தது போலவே வன்முறையை நிராகரிக்க வேண்டும் என்பதற்கான
அறைகூவல் முழுமையாக நிராயுதபாணியாக வேண்டும் என வலியுறுத்துவதை நோக்கிய எளிதான முதல்படியாகும். சுமார்
இரண்டு பத்தாண்டுகளாக இலங்கை இராணுவத்திற்கு எதிரான ஒரு குரூரமான போரை நடாத்திய எல்டிடிஈ பாலசிங்கம்
தெளிவுபடுத்தியது போல் பதிலுக்கு சில உத்தரவாதங்கள் இல்லாமல் அதன் ஆயுதங்களை கைவிடுவதாக இல்லை.
இருப்பினும் அமெரிக்கா திட்டவட்டமாக அதை நோக்கித்தான் தள்ளுகிறது.
எவ்வாறாயினும் பாலசிங்கம் உதவிக்கான மாநாட்டின்போது பெரும் வல்லரசுகளுக்கும்
இலங்கை அரசாங்கத்திற்கும் தானாகவே வளைந்து கொடுப்பதற்காக பின்வாங்கினார். அவர் மிக அதிகமான தமிழ்
மக்கள் வாழும் பகுதிகளில் பொருளாதார கட்டுமானம் அழிக்கப்பட்டதற்கு முன்னைய பொதுஜன முன்னணி (பி.ஏ) அரசாங்கத்தை
குறிப்பாக குற்றம் சாட்டினார். ''தமிழ் இனத்தின் பொருளாதார அஸ்திவாரமாக விளங்கும் விவசாயம் மற்றும்
மீன்பிடிக்கும் தொழில்களை கடுமையாக பாதித்த போரையும் பொருளாதாரத் தடையையும் கடந்த அரசாங்கம் நமது
மக்கள் மீது திணித்தது'' என அவர் பிரகடனம் செய்தார்.
பாலசிங்கத்தின் குறிப்புக்கள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுடன் நெருக்கமான உறவுகளை
ஏற்படுத்த சேவை செய்யும் அதேவேளை, 1983ல் போரை தொடங்குவதிலும் அதனை ஒரு பத்தாண்டுக்கு மேலாக
நடாத்துவதிலும் அவை ஐக்கிய தேசிய கட்சியின் (ஐ.தே.க) சாதனையை செளவுகரியமாக புறக்கணிக்கின்றன- ஐ.தே.க
தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதான பங்காளியாகும். உண்மையில் போர் மற்றும் ஐ.தே.க
வுக்கு எதிராக உழைக்கும் மக்கள்-தமிழ் மற்றும் சிங்கள மக்கள் -மத்தியில் வளர்ச்சி கண்டுவந்த விரோதத்தை
பயன்படுத்தி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் பொதுஜன முன்னணியும் பெரும்பான்மையை வென்ற பின்னர், 1994ல்
யு.என்.பி பதவியிழந்தது.
நவம்பர், 27ல் அவரது வருடாந்த ''மாவீரர் தின'' உரையின் போது எல்டிடிஈ-யின்
தலைவர் பிரபாகரன், ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கையை வெளிப்படையாக கைவிட்டார், ''ஒரு ஐக்கியப்பட்ட
இலங்கை என்ற ஒரு கட்டமைப்பினுள் கணிசமான அளவு அதிகார பகிர்வுடன்'' போரை நிரந்தரமாக முடிவுக்கு
கொண்டுவர முடியும் என்றார், எல்டிடிஈ ''ஒரு திருப்புமுனையை அடைந்துள்ளது'' என்று கூறிய அவர் பின்வருமாறு
பிரகடனம் செய்தார். ''இன்றைய உலகின் எதார்த்தங்களை நாம் புறக்கணிக்க முடியாது நாம் இதனை உணர்ந்து விடுதலைக்கான
நமது பாதையை சரிசெய்து கொள்ளவேண்டும்''.
ஒரு தனி தமிழீழத்துக்கான எல்டிடிஈ-யின் கோரிக்கை எப்போதுமே இலங்கையின் வடக்கு
மற்றும் கிழக்கில் ஒரு சுதந்திரமான முதலாளித்துவ சிறு அரசை நிர்மாணிப்பதற்கு பெரும் வல்லரசுகளின் ஆதவை எடுத்துக்கொள்வதை
குறிக்கோளாகக் கொண்டிருந்தது. அந்த ஆதரவை வென்றெடுக்க தவறிய எல்டிடிஈ-யின் தலைவர்கள், குறிப்பாக அமெரிக்காவில்
நிகழ்ந்த செப்டம்பர்11 தாக்குதல்களை அடுத்து, கொழும்பிலுள்ள ஆளும் தட்டுக்களுடன் ஒரு சமரசத்திற்கு செல்வது
அவசியமானது என்று முடிவுக்கு வந்தனர்.
பேரினவாத நிலைப்பாடு
விக்ரமசிங்கா அரசாங்கம் அதன் பங்கிற்கு எல்டிடிஈ-யுடன் ஒரு உடன்பாட்டை செய்துகொள்ள
வேண்டும் என்ற அழுத்தத்தின் கீழ் உள்ளது. கொழும்பில் உள்ள வியாபார பிரிவினர் சிலரே நாட்டின் அதிகரித்து வரும்
பொதுக்கடனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் வெளிநாட்டு முதலீட்டுக்கு புத்துயிர் அளிக்கவும் போரை ஒரு
முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுத்து வந்தனர். அமைதி நிகழ்வுப்போக்கு என அழைக்கப்படுவதற்கு ஆதரவளித்த
ஏனைய பெரும் வல்லரசுகளும் அந்த மோதலானது அதிகப்படியாக நிலையற்று இருக்கும் இந்திய துணைக்கண்டத்தை
மேலும் ஸ்திரமற்றதாக்கச் செய்யும் வல்லமையுள்ளது என அஞ்சினர்.
ஆனால் இரண்டு பத்தாண்டுகளாக போரை நடத்திவந்த அடுத்தடுத்து வந்த ஐ.தே.க
மற்றும் பி.ஏ அரசாங்கங்கள், அமைதி பேச்சுவார்த்தைகளுக்கும், நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு எந்த சலுகைகள்
வழங்குவதையும் எதிர்க்கும் சிங்கள பேரினவாதத்தையும் வேண்டுமென்றே தூண்டிவிட்டனர். அத்துடன் சிங்கள தீவிரவாத
குழுக்களின் தோற்றத்திற்கும் ஊக்கமளித்தரனர். கொழும்பிலுள்ள பத்திரிகையின் சில பிரிவுகள் பேரினவாத உணர்வுகளை
பரப்புவதற்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் பிடித்துக்கொண்டனர், எல்டிடிஈ-க்கு அதிகமாக விட்டுக்கொடுப்பதன்
மூலமாக அரசாங்கமானது நாட்டை காட்டிக்கொடுக்கத் தயாராகிறது என அர்த்தப்படுத்துவதன் மூலமாக இதைச்செய்தன.
ஓஸ்லோவின் உதவிக்கான மாநாட்டிற்கு சற்று முன்னதாக சன்டே டைம்ஸ் ஒரு படத்தை
வெளிட்டது. அது எல்டிடிஈ ஒரு நீதிமன்றத்தை தொடங்கி வைக்கும் ஒரு சடங்கென கூறப்பட்டது-எல்டிடிஈ அதன்
சொந்த தனியான நிர்வாகத்தை அமைக்கின்றது என அர்த்தமாகிறது. அதன் சிங்கள மொழி சகோதர பத்திரிக்கையான
லங்கா தீபாவும் கூட ஒரு புகைப்படத்தை வெளியிட்டது, எல்டிடிஈ அரசாங்க கட்டுப்பாடு பகுதிகளில் அதன் சொந்த
நீதிமன்றங்களை உருவாக்குகிறது- என அது கூறுகிறது. அந்த புகைப்படம் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு, 1993ல்
எல்டிடிஈ கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என பின்னர் தெரிய வந்தது.
வன்முறையை முற்றுமுழுதாக கைவிடுவதை பாலசிங்கம் மறுத்ததை, பத்திரிக்கையின் சில
பிரிவுகள் எல்டிடிஈ-யை நம்பமுடியாது என்பதை அது எடுத்துக்காட்டுவதாக கூறின. சிங்கள இனவாதத்திற்கு இழிபுகழ்
பெற்ற தி ஐலண்ட் பத்திரிக்கை ''எல்டிடிஈ வன்முறை இல்லை என்ற வாக்குறுதியை நிராகரிக்கிறது'' என்ற தலைப்பு
பதாகையை கொண்டிருந்தது. அத்துடன் அதன் ஆசிரியர் குழு கட்டுரையில் பின்வருமாறு கூறியது: ''புலி (பாலசிங்கம்)
அதனது வரிக்கோடுகளை மாற்றி கொள்ளவில்லை, அத்துடன் இன்றும் வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் அர்ப்பணம் செய்துள்ளது.''
எதிர்கட்சி மக்கள் கூட்டணியின் பிரதான பகுதியாக இருக்கும் இலங்கை சுதந்திர கட்சி
சிங்கள பேரினவாத ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) உடன் சேர்ந்து, கடந்தவாரம் கொழும்பில், ஒரு பொதுக்
கூட்டத்தை நடாத்தியது, இது எல்டிடிஈ-யுடன் எந்த உடன்பாட்டையும் எதிர்ப்பதற்காக ஒஸ்லோ மாநாடு நடந்த
மறுநாள் நடைபெற்றது. எல்டிடிஈ நீதிமன்றங்களை உருவாக்குவதற்கும் எல்டிடிஈ வன்முறையை கைவிடுவதை நிராகராப்பதை
எதிர்த்தும் பேச்சாளர்கள் ஒருவருக்குப் பிறகு ஒருவர் பேசினார்கள்.
யுஎன்பி அரசாங்கமானது சிங்கள தீவிரவாதக் குழுக்களினால் நடத்தப்படும் பிரச்சார
இயக்கம் தொடர்பாக மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அதே அமைப்புக்களுடன்
யுஎன்பி அதுவாகவே கூட்டுச் சேர்ந்து எல்டிடியுடன் பேச்சுக்களுக்கான அடிப்படையை உருவாக்குவதைக் குறிக்கோளாகக்
கொண்ட அரசியல் சாசன மாற்றங்களை, பிஏ அரசாங்கம் அமுல்படுத்த எடுத்த முயற்சிகளை எதிர்த்தது. அரசாங்கத்திற்கான
ஆதரவை மேலும் திரட்டுவதற்கான எல்டிடியிடமிருந்து மேலும் சலுகைகளை விக்கரமசிங்காவும் அவரது பிரதான பேசசாளரான
பீரிசும் கேட்டார்கள்.
See Also :
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தையில்
பாரிய சலுகைகளை வழங்கியுள்ளனர்
இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தை:
தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மூலதனத்துக்கு தலைவணங்குகின்றது
Top of page
|