World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Behind the official debate, US builds up forces for attack on Iraq

உத்தியோகபூர்வ விவாதத்திற்குப் பின்னால், அமெரிக்கா ஈராக்கைத் தாக்குவதற்காக படைகளைத் தயாரிக்கிறது

By Patrick Martin
24 August 2002

Back to screen version

ஈராக்குடன் ஒரு போரை -- தொடுப்பதா இல்லையா என்பதைக் காட்டிலும்-- எப்பொழுது மற்றும் எப்படித் தொடுப்பது என்பது பற்றிய விஷயத்தைப் பற்றி அமெரிக்கப் பத்திரிக்கைகளின் பக்கங்களில் உயர்ந்த அளவில் பகிரங்கப்படுத்தப்பட்ட விவாதம் தொடரும் அதேவேளை, மத்திய கிழக்கு நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் ஊடுருவுவதற்குமான தொழில் நுட்ப மற்றும் தர்க்கரீதியான தயாரிப்புக்களுடன் அமெரிக்க இராணுவம் தொடர்ந்து முன்செல்கின்றது.

வெள்ளைமாளிகையும் பெண்டகனும் சதாம்ஹூசைன் ஆட்சியைத் தூக்கி எறிவதற்கான போரைத் தொடுப்பதற்கு இறுதி முடிவை எடுக்கவில்லை என்று திரும்பத்திரும்பக் கூறின. ஆனால் இதன்கீழ் மேற்கொள்ளப்படும் நடைமுறை நடவடிக்கைகள், ஈராக்குடனான போர் நேரம் சம்பந்தப்பட்ட ஒன்று மட்டும்தான் எனக் கூறுகின்றது.

அந்நாட்டை அடுத்துள்ள பகுதியைச் சுற்றி 100,000க்கும் மேலான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஏற்கெனவே நிலைகொண்டுள்ளன. முக்கியமாக, பல அமெரிக்க பத்திரிக்கைகளின் விவரப்படி, அது அமெரிக்க நடுவண் ஆணையகத்தின் கொமாண்டர் ஜெனரல் டோமிபிராங்ஸால் முன்மொழியப்பட்ட, ஈராக் ஆக்கிரமிப்பிற்கான மிக அண்மைய காட்சியின் கீழ் தேவைப்படும் குறைந்த பட்ச துருப்புக்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமானது.

கடந்த மேமாதத்தில் உண்மையில் நடுவண் ஆணையகம் முன்மொழிந்த, 250,000 துருப்புக்களும் மூன்றுமாத தயாரிப்பும் தேவைப்படும், மோசமான ஆக்கிரமிப்பு காட்சிக்குப் பதிலாக, 50,000 லிருந்து 80,000 வரையிலான துருப்புக்களுடன் ஈராக்கைத் தாக்கும் திட்டம் பற்றி பிராங்ஸ் ஆகஸ்டு தொடக்கத்தில் வெள்ளைமாளிகையில் ஜனாதிபதி புஷ்ஷிடம் சுருங்கக் கூறியதாக அறிவிக்கப்படுகிறது, அந்தப்படை இரண்டு வாரங்களிலேயே தயார் செய்யப்பட முடியும்.

அமெரிக்க துருப்புக்கள் அனுப்பலில் பல புதியன, மற்றும் நடந்து கொண்டிருக்கும் "பயங்கரவாதம் மீதான போர்"- என்பதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என வாஷிங்டனால் பகிரங்கமாக விளக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்களின் மிகப்பெரும் பகுதிகள் ஈராக்கைத் தாக்கும் நிலையில் உள்ளன, அல்கொய்தாவை அல்ல. அவை பாரசீக வளைகுடா நாடுகளில் 12,000 நிலைகொண்டிருந்த மார்ச்சிலிருந்து 37,000 ஆக உள்ள அமெரிக்க துருப்புக்கள் மற்றும் அதே காலகட்டத்தில் அதேபகுதியில் 7,000 வரை இருந்து 27,000 ஆக உள்ள பிரிட்டிஷ் துருப்புக்களையும் உள்ளடக்கும். மிக விரைவான படைகுவிப்பு துருக்கியில், ஜூலை இறுதி அளவில் அமெரிக்கத் துருப்புக்கள் 7,000 லிருந்து 25,000 ஆக பெருகியதாகும். சில 6,400 துருப்புக்கள் ஜோர்டானில் இருக்கின்றன, அத்துடன் கடந்தவாரம் ஜோர்தானிய இராணுவத்துடன் கூட்டுப் பயிற்சிக்காக 4000 பேர் வந்தடைந்தனர்.

மத்திய கிழக்கில், மத்திய ஆசியாவில் மற்றும் ஆபிரிக்க கொம்புப் பகுதியில் (The Horn of Africa) உள்ள அமெரிக்க இராணுவப்படைகள் நிலைகொண்டுள்ள இடங்கள் பற்றிய வரைபடம் பாக்தாததைச் சுற்றிய ஒரு சுருக்குக் கயிறு போல் வரவரத் தெரிகிறது. அமெரிக்க படைவீரர்கள், கடற்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் தற்பொழுது பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், கஜக்கஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், ஜோர்ஜியா, அஜெர்பைஜான், துருக்கி, இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து, குவைத், செளதிஅரேபியா, கத்தார், பஹ்ரைன், ஒமான், யேமன், எரிட்ரியா மற்றும் கென்யாவில் நிலைகொண்டுள்ளனர், அத்துடன் கடற்படையினர் பாரசீகவளைகுடா, அரேபியக் கடல் மற்றும் மத்தியதரைக்கடல் கடற்கரைகளில் நிற்கின்றன.

ஈராக்கிய நிலைகள் மீது அமெரிக்கா முன்முயற்சி எடுத்த விமானத்தாக்குதல்கள் தொடர்கின்றன. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஜெட்விமானங்கள் ஆகஸ்டு 17ல் தெற்கு ஈராக்கில் இலக்குகள் மீது குண்டுகளை வீசின, இது வடக்கு மற்றும் தெற்கு ஈராக்கில், 1991ல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவற்றால் ஐ.நா அனுமதி இன்றி திணிக்கப்பட்ட இரு "பறக்கத் தடை" மண்டலங்களில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருபத்தேழாவதும் மற்றும் இவ்வாரத்தில் நடந்ததில் இரண்டாவதுமாகும். போர்விமானங்கள் பாக்தாதின் தெற்கில் தி-குவார் மாகாணத்தில் பொதுக்கட்டிடங்களை மற்றும் குடியிருப்பு வீடுகளைத் தாக்கியதாக ஈராக்கிய விமானப்படை கூறியது.

அமெரிக்க சிறப்புப் படைகள் சில ஈராக்கிய எல்லைப் பகுதிகளில் ஏற்கனவே இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வரவிருக்கின்ற போருக்கான தயாரிப்பாய் குர்திஷ் குடிப்படைகளுக்கு பயிற்சியைத் தொடங்க மார்ச் இறுதி அளவில் வடக்கு ஈராக்கின் குர்திஷ் பகுதிக்குள் அமெரிக்க கொமோண்டோக்கள் நுழைந்தனர், மொசுல் மற்றும் கிர்க்குக் எண்ணெய் நகரங்கள் அருகே பெருமளவிலான துருக்கிய மக்களுடன் துருக்கிய சிறப்புப்படைகள் அப்பகுதிக்குள் நகர்ந்தனர். ஜூனில் நவீனரக விமானங்களை வரவழைப்பதற்கு விமானத்திட்டுக்களை நீடிப்பதில் வேலையை ஆரம்பிப்பதற்கு அமெரிக்க மற்றும் துருக்கிய கட்டுமானத்துறை பொறியியலாளர்கள் நுழைந்தனர்.

இஸ்ரேலை தளமாகக் கொண்ட டேப்கா.கொம் செய்திச்சேவையின்படி, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குண்டுவீச்சு விமானங்களால் ஆகஸ்ட் 6ல் நடத்தப்பட்ட தாக்குதல், மத்திய ஈராக் மற்றும் செளதி எல்லைக்கு இடையிலான பாலைவனத்தில் உள்ள அல்-நுக்கைப்--ல் உள்ள ஈராக் ஆணையகம் மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டன, வீட்டுப் பகுதியிலும் Fiber-optic systems- களை அழிக்க முதல் தடவையாக துல்லியமாய் வழிகாட்டக்கூடிய குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. அதேநாளில், போர் நேரத்தில் பாக்தாதைப் பாதுகாக்கும் ராடார் அமைப்புமுறை உபயோகப்படாதது என்று விளக்கிக்காட்டுதற்கு, அமெரிக்க போர்விமானங்களின் அலைகள், பலத்தைக் காட்டும் விதமாக ஈராக் தலைநகருக்குள் அருகாக பறந்து பேரிரைச்சலை ஏற்படுத்தின.

ஆகஸ்டு 8 அன்று, துருக்கிய பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி, மொசூலுக்கு வடக்கே 50 மைல்கள் அளவில், வடக்கு ஈராக்கில் பாமெர்னியில் விமானதளத்தைக் கைப்பற்றுவதற்கு துருக்கி கொமாண்டோக்களை ஏற்றிவந்த ஹெலிகாப்டர்களுக்கு அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் துருக்கிய ஜெட்விமானங்கள் பாதுகாப்பாக வந்தன. ஈராக்கிய பாதுகாப்புப் படைகளுடனான சிறு சண்டையில் அவர்களைக் கொன்று விமான நிலையத்தைக் கைப்பற்றிய துருக்கியப்படையுடன் அமெரிக்க சிறப்புப்படைகளும் உடன் தொடர்ந்தன. பாமெர்னி ஆக்கிரமிப்பு அமெரிக்க- துருக்கிய படைகளுக்கு முக்கிய அளிப்பு (supply) தொடர்பு பகுதியான சிரிய-ஈராக் இரயில் பாதையில் விருப்பம்போல தாக்குவதற்கான திறனைத் தருகிறது.

நியூயோர்க் டைம்ஸ் ஆகஸ்ட் 19 அன்று அமெரிக்க விமானப்படை பாரசீக வளைகுடா பிராந்தியம் முழுவதும் ஆயுதங்கள், குண்டுகள் வெடிபொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றுக்கான மூலப்பொருட் சரக்குகளை சேகரிக்கிறது மற்றும் துல்லியமாய் வழிகாட்டப்படும் ஆயுதங்களின் அந்த இருப்புக்கள் பெரிதும் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டன, குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் இரண்டும், இலையுதிர் கால அளவில் மீள நிரப்பப்பட வேண்டும்.

குவைத் மற்றும் கத்தாரில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க போர் தளவாடங்களின் அளவு இரு கவச வண்டி பிரிகேடுகளுக்கு சமமானதாக இருக்கிறது. நடுவண் ஆணையகத்திற்கான பேச்சாளரின்படி, இது 230 M1A1 Abrams tanks, 120 M2A2 Bradley fighting vehicles, 200 armored personnel carriers, 50 mortars and 40 155-millimeter howitzers, அதேபோல தளவாடங்கள் மற்றும் 30 நாட்களுக்கான உணவு மற்றும் எரிபொருள் அளிப்பும் உள்ளடங்குவன. கருவிகளை இயக்கும் 9,000 துருப்புக்கள் 96 மணிகளுக்குள் அந்தப் பிராந்தியத்துக்குப் பறந்தன. இன்னொரு இரண்டு கவச வண்டி பிரிகேடுகளுக்கான சாதனம் வளைகுடாவில் உள்ள கப்பல்களில் ஏற்றப்பட்டிருக்கின்றன.

ஈராக்கிற்கு எதிரான தரைப்போரில் பயன்படுத்துவதற்கு இந்தப் பிராந்தியத்துக்கு டாங்கிகளையும் மற்றைய கனரக சாதனங்களையும் கொண்டு செல்வதற்கு 10 பெரிய சரக்குக் கப்பல்களை ஏற்பாடு செய்ய கடற்படை அண்மையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. செங்கடலில் பெரும்பாலும் செளதி அரேபியாவில் உள்ள இனங்குறிக்கப்படாத துறைமுகத்திற்கு இரு fast roll-on, roll-off ships -களை வாடகைக்கு அமர்த்தியது. இன்னும் எட்டு roll-on, roll-off ships- களுக்கு ஸ்காண்டிநேவியன் கப்பல் கம்பெனி மேயெர்ஸ்க் (Maersk) வாடகைக்கு அமர்த்தப்பட்டது. இந்த கப்பல்கள், "தளவாடங்கள் போன்றவற்றை மற்றும் M1A1 டாங்குகள் போன்ற வாகனங்கள் போன்ற அமெரிக்க இராணுவ சரக்குகளை எடுத்து" செல்லும் மற்றும் அவற்றை இந்தியப் பெருங்கடல் தீவான டீகோ கார்சியாவின் "முன்னரே நிலைகொண்டுள்ள பகுதிக்கு" கொண்டு செல்லும் என்று குறிப்பிடும் ஒப்பந்தத்துடன் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. கப்பலானது அவர்களின் சரக்கை போர் மண்டலத்திற்கு நகர்த்துவதற்கு ஆணைகளை எதிர்பார்த்து, அங்கு ஆயத்தமாக நிற்கும்.

ஆகஸ்டு மத்தியில் பெண்டகனானது பாரசீக வளைகுடாவில் உள்ள குறிப்பிடப்படாத பகைநாட்டை (பத்திரிக்கை விவரப்படி, ஈரான் மற்றும் ஈராக்கைச் சேர்த்து) அமெரிக்கா ஆக்கிரமித்தலை பாவனை (நடிப்பதற்கு) செய்வதற்கு, சுமார் 250 மில்லியன் டாலர்கள் செலவிலான, மூன்று வார போர் விளையாட்டை, என்றுமிராத அளவுக்கு அதன் பெரிய ஆணையிடல் மற்றும் கட்டுப்பாட்டு பயிற்சி நடவடிக்கையை முடித்தது. ஐக்கிய அமெரிக்க அரசுகளில் ஒன்பது துப்பாக்கி சுடும் மண்டலங்களில் மற்றும் டசினுக்கும் மேற்பட்ட கணினி பாவனைகளில் நடத்தப்பட்ட நூற்றாண்டு சவால் 2002 என்று அழைக்கப்படும், பயிற்சி நடவடிக்கையில் 13,500 இராணுவ மற்றும் குடிமக்களைச் சார்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டனர்.

பயிற்சி நடவடிக்கை பற்றிய பத்திரிகை விவரப்படி, அமெரிக்கப் படை குறிப்பிடத்தக்க அளவு இழப்பால் பாதிக்கப்பட்டது ஏனென்றால் அவர்கள் பாரசீக வளைகுடாவில் சுடுவதை முன்முயற்சி செய்யாமல், எதிரி முதலில் தாக்குவதற்கு அனுமதித்தனர். தாக்குதல் வந்தபொழுது, "சிவப்பு" (ஈரான்/ஈராக்) கொமாண்டர்கள் தந்திரோபாய வியப்பை நிகழ்த்தினர். பயிற்சியின் இந்த அம்சத்தின் மீது குவிமையப்படுத்திய சில பத்திரிகை விவரங்கள், பெருமளவிலான அமெரிக்க சேதங்களுக்கான ஆபத்து நேர்வு பற்றி நன்கு புலப்படுத்தின. ஆனால் அவை பெண்டகன் திட்டமிடலாளர்களால் விரும்பிப் பெறப்படும் முடிவை: அமெரிக்காவால் எதிர்பாரா தாக்குதலுடன் வளைகுடாவின் குறுகிய எல்லைப் பகுதியில் போர் தொடுப்பது சிறந்தது என்ற முடிவைப் பற்றி மெளனம் சாதித்தன.

ஈராக் மீதான அமெரிக்கப் போர் ஏற்கனவே, தெளிவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட விஷயங்களுக்கான திட்டமிடல் நிலைக்கு அப்பால் சென்று விட்டது என்பதன் மிகவும் மறைமுகமான மற்றைய ஆதாரம் இருக்கிறது. வாஷிங்டனிலிருந்து போர்விருப்ப மொழி அதிகரித்து வருவதற்கு பதில்கொடுக்கும் வண்ணம், அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகள் கடந்த ஐந்துமாத காலமாக ஈராக் எண்ணெய் இறக்குமதியைக் கடுமையாய்க் குறைத்திருக்கின்றன. அமெரிக்க இறக்குமதிகள் கடந்த மார்ச்சில் ஒரு நாளைக்கு சுமார் பத்து இலட்சம் பீப்பாய்களில் இருந்து 1,00,000க்கும் 2,00,000 பீப்பாய்களுக்கும் இடையிலானதாக குறைந்துவிட்டிருக்கிறது. 2001ல் அமெரிக்காவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 8 சதவீதத்தை ஈராக் அளித்தது.

பத்திரிகை விவரங்கள் அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகள் மற்றும் ஈராக்கிய அரசாங்கத்திற்கு இடையில் விலை நிர்ணய தகராறு பற்றி மேற்கோள்காட்டின, ஆனால் வாஷிங்டன் போஸ்ட், வளைகுடாவிலிருந்து வாபஸ்பெறல் "இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை நடக்குமானால் கச்சா எண்ணெய்க்கான மாற்று வளங்களை இடம்தேடுவதற்கான ஒரு ஆவலை சமிக்கை கூட காட்டலாம்" என்று குறிப்பிட்டது.

அமெரிக்க அரசுத்துறை, தனியார் உதவி அமைப்புக்களை ஈராக்கில் நிவாரண வேலையை மேற்கொள்வதற்கு அரசாங்க நிதியில் பத்துலட்சக்கணக்கான டாலர்களை முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டது. அந்நாடு தற்போது அமெரிக்க முற்றுகையின் கீழ் உள்ளது, அங்கு அமெரிக்க நிதிஉதவி பெறும் அறக்கட்டளைகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மனிதாபிமான உதவிக் குழுவைச் சேர்ந்த அதிகாரி பத்திரிகையிடம் கூறியது போல, "அரசாங்கத்தின் ஒரு பகுதி நமது சூளுரை பகைவரால் கட்டுப்படுத்தப்படும் எல்லைப் பகுதிக்குள் 6.6 மில்லியன் டாலர்களைப் போட விரும்புகின்றது, அதேவேளை அரசாங்கத்தின் இன்னொரு பகுதி அந்தப் பகைவனை பதவியிலிருந்து இறக்குவதற்கு பெரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது என்பது ஒன்றை ஒன்று நிரப்புவது போன்று தெரிகிறது." இந்த ஒப்பந்தமானது அமெரிக்க ஆக்கிரமிக்குப் பின்னர், அல்லது ஒருவேளை வடக்கு ஈராக்கில் உள்ள குர்திஷ் படைகள் போன்ற அமெரிக்க கூட்டணி குழுக்களால் எல்லைப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் செய்யவேண்டிய வேலைக்கானது என்பது ஐயத்திற்கிடமற்ற அனுமானம் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved