:
செய்திகள் ஆய்வுகள்
:
வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
White House uses intimidation to scuttle probe of September 11
செப்டம்பர் 11 விசாரணையிலிருந்து தப்பி ஓட வெள்ளை மாளிகை ஆத்திரமூட்டலை பயன்படுத்துகிறது
By Peter Daniels
19 August 2002
Back to screen version
செப்டம்பர்11 தாக்குதலுடன் தொடர்புடைய வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் கசிவின் மூலத்தை
உறுதிப்படுத்த அமெரிக்க செனெட் மற்றும் அவையின் புலனாய்வுக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்களை எப்.பி.ஐ விசாரித்தல்,
எதேச்சாதிகார ஜனாதிபதி பதவியை ஏற்படுத்துதற்கும் மற்றும் அமெரிக்காவில் பாரம்பரிய அதிகார சமநிலையை
நிலைகுலைவிப்பதற்கும் புஷ் நிர்வாகத்தினாலான சமீபத்திய முயற்சியாக இருக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்கள் பொய் அறி
கருவிக்கு மற்றும் ஏனைய கேள்விகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எப்.பி.ஐ-ன் வேண்டுதல் செப்டம்பர் 11
தொடர்பானதில் புலனாய்வு "குறைவு" பற்றிய விசாரணைக்காக அழைப்பு விடுத்திருக்கும் ஜனநாயக மற்றும் குடியரசு
கட்சி அரசியல்வாதிகளை ஆத்திரமூட்டுவதற்கான தெளிவான முயற்சியாகும்.
எப்.பி.ஐ நடவடிக்கைக்கு வழிவகுத்த செய்தி ஊடக செய்தி அறிக்கைகள், 6 பில்லியன் டாலர்கள்
ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் உயர்-ரகசிய புலனாய்வு முகவாண்மையான, தேசிய
பாதுகாப்பு முகவாண்மை, கடந்த செப்டம்பர் 10 அன்று ஏதோ நடக்க இருந்தது என்ற எச்சரிக்கை பற்றிய இரு செய்திகளை
இடைமறித்திருந்தது, ஆனால் அந்தச் செய்திகள் தாக்குதல்களுக்கு அடுத்தநாள், செப்டம்பர் 12 வரைக்கும் அராபிக்
மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லை என விளக்கியது. "நாளைக்கு கடைசி நேரம்," என்று ஒரு செய்தி கூறுகிறது.
"நாளை பந்தயம் தொடங்குகிறது" என்றது மற்றொரு செய்தி.
இந்த வெளிப்படுத்தல், சி என் என்- இல் ஜூன் தொடக்கத்தில் வந்தது, உடனே வாஷிங்டன்
போஸ்ட் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் ஆகிய செய்தித்தாள்களில் - தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர்
ஜக்காரியாஸ் மொஸ்ஸூவி (Zacarias Moussaoui)
கைது செய்யப்பட்ட பிறகும் அவரை விசாரணை செய்வதை பின்பற்ற
எப்.பி.ஐ மிக முக்கியமாய் மறுத்தது உள்பட, ஏனைய பல அறிக்கைகளிடையே அது வெளிவந்தது. செப்டம்பர் 10 செய்தி
இடைமறிப்புக்கள் அவை மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் கூட தாக்குதல்களை தடுத்து நிறுத்துகின்ற அளவுக்குப் போதாதது
என்று நிர்வாகத்தினர் கூறிய போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத உயர்மட்ட அதிகாரிகளது எந்தநேரத்திலும்
தாக்குதல் நடக்கலாம் என்ற முன்கூட்டிய அறிவைப்பற்றிக் கூறும் பாணியின் பகுதி அவை என்பது தெளிவாகும். வெள்ளம்
போன்ற அறிக்கைகள் இரு கட்சிகளின் காங்கிரஸ் தலைவர்களையும் இந்தவிஷயம் பற்றிய விசாரணைக்குத் திட்டமிடுமாறு நிர்ப்பந்தித்தது.
காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தங்களின் விசாரணையை
உளவறிதல் "தகர்ந்துபோதலின்" சாத்தியம் மீது குவிமையப்படுத்தி இருக்கின்றனர், விமானக் கடத்தல்காரர்கள் அரசாங்க
வட்டாரங்களால் பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்பதன் குறிகாட்டல்கள் மீது அல்ல. இவ்விஷயத்தைப்பற்றி எந்தவித ஆய்வையும்
செய்வதற்கு புஷ் நிர்வாகம் ஆட்சேபனை மற்றும் குரோதத்துடன் பதிலளித்திருக்கிறது. தேசிய பாதுகாப்பு முகவாண்மை
இடைமறித்தல்கள் பற்றி முதலில் வெளியானபொழுது, வெள்ளைமாளிகையானது அச்சுறுத்தும் கண்டனங்களை வெளியிட்டது.
விஷயமானது --செப்டம்பர்11 தாக்குதல்கள் பற்றிய முன்கூட்டிய அறிதலுக்கான ஆதாரக்குவிப்பு-- கசிவடைந்ததன் உள்ளடக்கத்திலிருந்து--
அரசாங்க இரகசியத்தைப் பாதுகாத்தல் எனும் விஷயத்திற்கு மாறியது. உதவி ஜனாதிபதி ரிச்சர்ட் செனி அவை மற்றும்
செனெட்டின் புலனாய்வுக் குழுக்களின் தலைவர்கள் முறையே புளோரிடா குடியரசுக் கட்சியாளர் போர்ட்டர் கோஸ்
மற்றும் புளோரிடா ஜனநாயகக் கட்சியாளர் போப் கிரஹாம் ஆகியோருக்கு புகார் கூறுவதற்கு தொலைபேசி அழைப்பை
எடுத்தார். வெள்ளைமாளிகையின் ஜனாதிபதி செய்தித்துறை தலைவர் எரி பிளெய்ச்சர் இந்த செய்திக் கசிவுகள் "பயங்கரவாதம்
மீதான போர்" உடன் சமரசம் செய்துகொள்ள முடியும் என்றார்.
செய்திக் கசிவு பற்றிய வெள்ளைமாளிகையின் முன்னுக்குப்பின் முரணான தன்மையை அரிசோனா
குடியரசுக் கட்சியாளர் ஜோன் மெக்கெய்ன் சுட்டிக்காட்டினார். ஜூலை31 காங்கிரஸ் விசாரணையில், ஈராக்கிற்கெதிரான
போரின் சாத்தியமான திட்டங்கள் பற்றியதில் அச்செய்திக் கசிவு நிர்வாகக் கிளையியினுள் இருந்து வந்தது பற்றி அவர்
பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்டை கேட்டார். அத்தகைய செய்திக் கசிவுகள் "கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு
முன்னர் நீங்கள் இங்கு முதலில் வந்தபொழுது விளையாடப்பட்ட விளையாட்டு, மற்றும் அது இப்போதிருந்து 30 ஆண்டுகளாக
விளையாடப்பட்டு இருக்கலாம்" என்றார் மெக்கெய்ன்.
அத்தகைய விஷயத்தின் மீதான வழக்கமான நடைமுறை காங்கிரசின் அறக் குழு விணசாரணையை
நடத்துவதாக இருந்திருக்கும். இருப்பினும், இந்த விஷயத்தில் கோஸூம் கிரஹாமும் அட்டர்னி ஜெனரல் அஷ்ச் கிராப்டுக்கு
எழுதி மற்றும் நீதித்துறை விசாரணைக்கு கேட்டதன் மூலம் நிர்வாகத்துடன் உடனடியாக தங்களை உகந்தவராகக்
காட்டிக்கொண்டனர். அடுத்த சில வாரங்களாக எப்.பி.ஐ, செனெட் மற்றும் அவையின் புலனாய்வுக் குழுவின் 37
உறுப்பினர்கள் அனைவரும் உள்பட, காபிடல் ஹில்லில் உள்ள 100 பணியாளர்களையும் கேள்வி கேட்பதை மேற்கொள்ள
இருக்கிறது.
பெரும்பாலான செனெட்டர்களும் பிரதிநிதிகளும், குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக்
கட்சியினர் போலவே அவர்களின் துல்லியம் மற்றும் அதேபோல அதிகாரப் பிரிவு இரண்டையும் பற்றிய ஐயுறவாதத்தைக் குறிப்பிட்டு,
பாலிகிராப் சோதனைக்கு தங்களை உட்படுத்த மறுத்திருப்பதாக அறிவித்தனர். எப்.பி.ஐ யின் செயற்பாடு பற்றி விசாரணை
செய்வதற்கு பொறுப்பான அதே காங்கிரஸ் குழுவும் அதே முகவாண்மையினால் விசாரிக்கப்படுவர். நியூயோர்க்
டைம்ஸ் ஆசிரிய தலையங்கமிட்டாற்போல, ஆளும் நிறுவனத்தின் பெரும்பாலான பகுதிகளைப் பொறுத்தவரை சந்தேகத்திற்கிடமில்லாமல்
பேசினால், "காங்கிரஸ் விசாரணையை உறைய வைப்பதற்கான ஒரு வழி, மன்ற உறுப்பினர்களை பாலிகிராப் சோதனைகளை
எடுப்பதற்கு கேட்க மற்றும் செய்தியாளர்களுடனான அவர்களது பேரங்கள் பற்றிய கேள்விகளுக்கு விடை அளிக்க எப்.பி.ஐ
ஏஜண்டுகளின் கூட்டம் ஒன்றை காபிடல் ஹில்லுக்கு அனுப்புவதாகும். செனெட் மற்றும் அவை புலனாய்வுக் குழுக்கள் கடந்த
செப்டம்பர் 11க்கு வழிவகுத்த ஆண்டுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கத்தின் பதில்நடவடிக்கையை மீளாய்வு
செய்யும்போது துரதிருஷ்டவசமாக, அதுதான் செனெட் மற்றும் அவை புலனாய்வுக் குழுவில் இந்நாட்களில் நடந்து
கொண்டிருக்கின்றன."
நெருக்கமாய்த் தொடர்புடைய வளர்ச்சியில், காங்கிரஸ் உறுப்பினர்களை விசாரிக்க
எப்.பி.ஐ-யை அனுப்பிய அதே நீதித்துறையானது, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு விரைவாய் நிறைவேற்றப்பட்ட
கொடிய மசோதாவான, அமெரிக்க தேசபக்த சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்கள்
மீது கவனக்குறைவாய் விட்ட அதன் பாத்திரம் பற்றியதில் அவையின் நீதித்துறைக் குழுவால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகூற
மறுத்தது.
கடந்த இலையுதிர்காலத்தில் கவனக்கண்காணிப்பு மற்றும் போலீஸ் அதிகாரங்களை புஷ்
நிர்வாகம் விரிவுபடுத்தலின் மீது குடியரசுக்கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர்.
இருப்பினும், இப்பொழுது, வெள்ளைமாளிகை அதன் முடிவுகளை, சர்வாதிகார ஆட்சியின் பாணியில் தலையாட்டி முத்திரைகுத்தி
சாதாரணமாய் உறுதிப்படுத்துவதற்கு அதற்கு காங்கிரஸ் தேவைப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அவையானது குடியரசுக் கட்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, நீதித்துறைக் குழுவின்
தலைவர் விஸ்கான்சினிலிருந்து வரும் குடியரசுக்கட்சி பிரதிநிதி எப்.ஜேம்ஸ் சென்சென் பிரென்னர் ஆவார். அதன் அணி
உறுப்பினர் ஜனநாயகக் கட்சியாளர் மிச்சிகனின் ஜோன் கான்யெர்ஸ் ஜூனியர் ஆவார். சென்சென் பிரென்னர் மற்றும்
கான்யெர்ஸ் ஆகிய இருவரும், புத்தக நிலைய நூலகம் மற்றும் செய்தித்தாள் பதிவுகள்: உள்வந்த மற்றும் வெளிச்சென்ற
தொலைபேசி அழைப்புக்களின் தொலைபேசி எண்களின் பட்டியல்; மற்றும் கவனக்கண்கானிப்பு "உலா" விற்கான திட்டங்கள்
உள்பட தேசபக்தன் சட்டத்தின்கீழ் புதிய நிறைவேற்று அதிகாரம் பற்றி 50 கேள்விகளின் பட்டியலை அட்டர்னி ஜெனரல்
ஆஷ்ச்கிராப்ட்டுக்கு அனுப்பினார்.
பதிலளிக்க வெளிப்படையாக மறுப்புத் தெரிவித்தலுடன், நீதித்துறையின் பதிலானது தெளிவற்ற
விடைகளைக் கொண்டிருந்தது. பாதிப்புக்கு மேலும் அவமானம் சேர்க்கும் விதமாக, அது எந்த காங்கிரஸ் குழு மேற்பார்வையை
செயல்படுத்தும், அவையின் புலனாய்வுக் குழுவிற்கு பதில்களை அனுப்பும் நீதித்துறைக் குழுவுக்கு அறிவிப்பது, எது தகவல்களைப்
பெற்றிருக்கவில்லை மற்றும் தேசபக்தி சட்டத்தினை அமுல் படுத்துதல் என்பது மீதாக கவனக்குறைவாய் விட்டது என்று
குற்றம் சாட்டப்படாது, என்று தீர்மானிக்கும் உரிமையை தனக்குத்தானே தவறாக உரிமை கற்பித்துக்கொண்டது.
கான்யெர்சின்படி, நீதித்துறைக் குழுவின் பதில், "தனது நடவடிக்கைகள் கவனக்குறைவாக
ஆக்கப்படவில்லை" என அஷ்ச்கிராப்டால் விடுக்கப்பட்ட அறிக்கைகளாக குவிந்தன. செனெட் நீதித்துறைக் குழுவின் தலைவர்,
வெர்மோன்ட்டின் ஜனநாயகக் கட்சி செனெட்டர் பாட்ரிக் லெஹி பின்வருமாறு கூறினார், "நீங்கள் என்ன தெரிந்துகொள்ள
வேண்டுமென்று நாங்கள் உங்களுக்கு கூறுவோம், வேறு எதையும் நாங்கள் உங்களுக்கு கூறமாட்டோம்." லெஹி மேலும்
கூறினார், "இங்கு நான் இருக்கின்ற இதுவரை, மேற்பார்வைக் குழுக்கள் உரிமையளிக்கப்பட்டது பற்றியதிலிருந்து தகவல்
பெறுவது மிகவும் கடினமாக இருக்கின்ற நிர்வாகத்தை நான் ஒருபோதும் அறியவில்லை."
இண்டியானா குடியரசுக் கட்சியாளர் டான் பர்ட்டன் மற்றும் அயோவா செனெட்டர் சார்லஸ்
கிராஸ்லி உள்பட, குடியரசுக்கட்சியின் வலதுசாரிகள் கூட நீதித்துறையின் நடவடிக்கைகள் பற்றி கவலை தெரிவித்தனர். கட்சிசாரா
பொது கணக்கு அலுவலகத்திற்கு தலைமைதாங்கும், பொது கணக்குத் தணிக்கை அதிகாரி டேவிட் எம்.வாக்கர், தனது
நினைவுக்கு எட்டியவரை மிக இரகசியமான நிர்வாகம் ஏதாவது இருக்குமாயின் தற்போதைய நிர்வாகம்தான் என்றார்.
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்புலம் பற்றி எந்த விசாரணையிலும் வெள்ளைமாளிகை
தப்பிக்க நாடுவது, காங்கிரஸ் அக்கறையுடன் விசாரணை செய்யும் என அது அச்சப்படுகிறது என்பதினால் அல்ல. ஜனநாயகக்
கட்சியினர் புஷ்ஷின் இராணுவக் கொள்கையுடன் தங்களையே ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் மற்றும் பயங்கரவாதம்
மீதான போர் என்று அழைக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சம்பவங்களில், அரசாங்கம் குற்றத்திற்கு
உடந்தையான சாத்தியத்தைப் பற்றி பொதுமக்கள் அறிவதை மட்டும் தாங்கள் எதிர்க்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டி
இருக்கிறார்கள்.
மிகவும் வியப்பூட்டுவது என்னவென்றால் வரலாற்றிலேயே அமெரிக்க மண்ணில் மிகவும் மோசமானதான
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக் காலம் செப்டம்பர் 11 சம்பவங்கள் பற்றி எந்த விதமான
பொது விசாரணைகளும் இருந்திருக்கவில்லை. மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்னென்ன விசாரணைகள் இடம்
பெற்றிருக்கட்டும், முடிவுகள் கவனமாக தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன.
இருப்பினும், வெள்ளைமாளிகையானது, அத்தகைய ஆண்மையற்ற விசாரணையைக் கூட மூடிவிடும்
ஆற்றொணா நிலையில் உள்ளது. அது இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது. கொள்கை மீதான ஆழமான பிளவுகள் நிர்வாகத்துக்குள்ளே
வெடித்திருக்கின்றன மற்றும் தொடர்ச்சியான விசாரணை பாதிப்பை ஏற்படுத்தும் தகவலை வெளிவிடுவதற்கான வாகனமாக
இருக்க முடியும் என அமெரிக்க அரசியல் நிறுவனம் ஒட்டுமொத்தமாக, வெள்ளைமாளிகை அஞ்சுகிறது. அத்துடன், புஷ்
நிர்வாகம் ஈராக்கில் மற்றும் எங்கெனும் போருக்கான திட்டங்களுடன் முன்னேறிச் செல்கிறபோது மற்றும் உள்நாட்டில்
குடிமக்களின் உரிமைகளின் மீது அதன் தாக்குதலை முன்னெடுக்கையில், எந்த விமர்சகரையும் மற்றும் அனைத்து விமர்சகர்களையும்
ஆத்திரமூட்ட அது நாடுகிறது.
ஆளும் வட்டங்களின் உள்ளேயான பிளவுகள் செனெட் சிறுபான்மை தலைவர் டிரென்ட் லாட்
மற்றும் எண்பது வயதுடைய மேற்கு வர்ஜீனியா ஜனநாயகக் கட்சியாளர் றொபேர்ட் பைர்ட் ஆகியோரால் விடுக்கப்பட்ட
சமீபத்திய அறிக்கைகளில் எதிரொலித்தன. குடியரசுக்கட்சி வலதுசாரி தலைவரான லாட் புலனாய்வுக்குழு உறுப்பினர்களின்
புகார்களை ஏளனம் செய்தார் மற்றும் புலனாய்வுக் குழுக்களின் தலைவர் விசாரணை மேற்கொள்ளும்படி எப்.பி.ஐ-யை
அழைத்திருந்தார் என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார். "எப்.பி.ஐ அந்த வேலையைச் செய்துதருமாறு கேட்கப்பட்டது,"
என லாட் கூறினார்." இப்பொழுது அவர்கள் (சட்டம் இயற்றுபவர்கள்) புகார் செய்கின்றனர். நான் உதவ முடியாது
ஆனால் அங்கு தவறான நடத்தை இருந்திருக்கிறது என என்னை வேடிக்கை காட்ட முடியாது, பின்னர் விசாரணை தொடங்கும்பொழுது
புகார் இருக்கும்."
அதேவேளை, மிகப் பழமைவாத ஜனநாயகக் கட்சியாளர்கள் மத்தியில் உள்ள,
சட்டமியற்றும் கிளையின் தனிச்சிறப்புரிமையை இழப்பதற்கு அஞ்சி அதனைக் காப்பவர்களுள் ஒருவராகவும் இருக்கும், பைர்ட்
ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது கூறுவதாவது, "அண்மையில் நாடு ஆபத்தான பாதையை எடுப்பதாகத் தெரிகிறது.
அயலார் அண்டை அயலாரை உளவு பார்ப்பதற்கு அட்டர்னி ஜெனரல் விரும்புகிறார். செனெட்டர்களும் அவர்களின் பணியாளர்களும்
பொய்யறி கருவி சோதனைகளுக்கு ஆளாக வேண்டும் என்று கேட்கப்படுகின்றனர். நமது நாடு தனிநபர் காப்பு உரிமைகள்
நீதித்துறையின் பெயரால் மிதித்து நசுக்கப்படும்,
ஒரு போலீஸ் அரசாக மாறுவதற்கு எதிராக நாம் அதனைப் பாதுகாக்க
வேண்டும். இந்த அமெரிக்க ஐக்கிய அரசுகளில் பாதுகாப்பிற்கான விலையாக இது கட்டாயம் இருக்கக் கூடாது."
|