தென் அமெரிக்கா
As Latin American crisis spreads, US offers loan to Uruguay
இலத்தீன் அமெரிக்க நெருக்கடி பரவுகையில் ஐக்கிய அமெரிக்கா உருகுவேயிற்கு கடன் வழங்குகின்றது
By Bill Vann
6 August 2002
Back to screen version
இன்னுமொரு இலத்தீன் அமெரிக்க அரசாங்கம் அதனது வெளிநாட்டுகடனை திரும்ப செலுத்தாத
நிலைமையிலிருந்து தடுப்பதை நோக்கமாக கொண்ட இடைக்கால நடவடிக்கையாக புஷ்ஷின் நிர்வாகமானது 1.5 பில்லியன்
டாலரை கடனாக ஆகஸ்டு 4ம் திகதி வழங்கியுள்ளது. ஆர்ஜெனடீனாவை கடந்த டிசம்பரில் உலுக்கிய வன்முறைமிக்க காட்சிகளை
அதன் எல்லையிலுள்ள பாரிய நகரான Rio de la Plata
வில் 3.4 மில்லியன் மக்கள் மீண்டும் நடத்தவிருந்த சந்தர்ப்பத்திலேயை
அக்கடனானது கிடைத்துள்ளது.
ஜூலை 30 ஆம் திகதி வங்கிகளை மூடுமாறு அதன் ஜனாதிபதி
Jorge Batlle,
உருகுவேயின் தலைநகரான மொன்ரவீடியோவில் கட்டளையிட்டதை தொடர்ந்து வன்செயல்கள் தோன்றியது. இந்நாடானது
தனது வங்கி இருப்புக்களில் 40% இற்கு அதிகமானதை இழந்ததை தொடர்ந்து அதனது வங்கிமுறையானது பாரிய உடைவை
எதிர்நோக்கியது. மூலதனத்தின் வெளியேற்றமானது கடந்த டிசம்பரில் 3 பில்லியன் டாலராக இருந்த உருகுவேயின் மத்திய
வங்கியின் சர்வதேச இருப்புக்களை 622 மில்லியன் டாலராக்கியது.
இந்த வங்கிகளின் வீழ்ச்சியானது ஆர்ஜென்டீனாவின் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தினுள்
உருகுவேயும் செல்வதின் விளைவு என பரவலாக கருதப்பட்டது. உருகுவேயின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாய
ஏற்றமதியிலும், உல்லாசத்துறை, நிதிச்சேவைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்திலேயே தங்கியுள்ளது. கூடுதலான பண
மீளப்பெறுதலானது, உருகுவேயின் வங்கி கணக்குகளை பாதுகாப்பான சொர்க்கம் என நம்பியிருந்த செல்வம்மிக்க ஆர்ஜென்டீனியர்கள்
தமது பணத்தை முன்னரே எடுத்துக்கொண்டதாலேயே உருவாகியது என நம்பப்படுகின்றது.
திட்டமிட்டிராத ''வங்கி விடுமுறையானது'' சகல மக்கள் செலவீனங்களும் இல்லாதுபோனதால்
தற்காலிக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தீடீர் வரட்சியினால், அதில் தமது வாழ்க்கைக்கு தங்கியிருக்கும் வேலையற்ற
தொழிலாளர்கள் உள்ள மொன்ரவீடியோவின் ஏழ்மையான நகரங்கள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள்
வீதிகளுக்கு வந்ததுடன், ஒரு தொகை உணவு சந்தைகளையும், வியாபாரத்தலங்களையும் கொள்ளையடித்துடன், பலமான
ஆயுதம் தரித்த பொலிசாருடன் மோதினர். தலைநகரத்தின் வீதிகளை வானூர்தியின் துணையுடனான 5000 கலகம் அடக்கும்
பொலிசார் ஆக்கிரமித்துக்கொண்ட பின்னரே நிலைமை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
இக் கொள்ளையடிப்புகளானது அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்்ததாக அரசாங்கம்
குற்றம் சாட்டியது. இது ஆர்ஜென்டீனாவின் வங்கிகளை மூடுமாறு உத்தரவிட்ட பின்னர் ஜனாதிபதி
Fernando de la Rua
இன் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டபோது உருவான குற்றச்சாட்டுக்களை எதிரொலிக்கின்றது.
உருகுவேயின் உள்நாட்டு அமைச்சர்
Guillermo Stirling
''எல்லா மக்களும் ஒரே இடத்தில் கூடுவது ஒரு தற்செயலான ஒன்றல்ல'' எனவும்,
''நாங்கள் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட அமைப்பை எதிர்நோக்குகின்றோம், இதற்கு உருகுவே மக்கள் வாழ்ந்த மரியாதையும்,
பாரம்பரிய சகிப்புதன்மையிலிருந்தும் உடைத்துக்கொள்வது தேவை'' எனவும் குறிப்பிட்டார். இவ் அறிக்கையானது
1972களின் ஆரம்பத்திலிருந்து நாட்டின் 15 வருடங்கள் இராணுவ சர்வாதிகாரதினது குரலை ஒத்த எச்சரிக்கையாக
இருக்கின்றது.
எவ்வாறிருந்தபோதிலும், மொன்ரவீடியோவில் ஏழைகளினது சமூக எழுச்சிக்கு மூளை வகுத்தவர்கர்கள்
யாரென காணவது இயலாதுள்ளது. முக்கிய இடதுசாரி தேர்தல் முன்னணியான
Frente Amplio அடுத்த
தேர்தலில் வெற்றிபெறுவதற்கான சாத்தியமுள்ளது. அதன் தலைவரான
ஜிணீதீணீக்ஷீங க்ஷிஊsஹீuமீக்ஷ்
வன்முறைகள் ஆரம்பித்த பின்னர் நெருக்கடிக்கான அரசாங்கத்தின் தீர்வை விவாதிப்பதற்காக நள்ளிரவுவரை நீடித்த கூட்டத்தில்
கலந்துகொண்ட அதிகாரிகளில் ஒருவராவார்.
இக்கொள்ளையடிப்புகளுக்கு அப்பால், 10,000 உருகுவே தொழிலாளர்கள் ஜனாதிபதியின்
மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்று சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து புதிய கடனைப் பெறுவதற்கான முயற்சியாக
Jorge Batlle
இனால் அறிவிக்கப்பட்ட ''கட்டமைப்பு சீர்திருத்த'' திட்டத்திற்கு எதிராக தமது
எதிர்ப்பை காட்டினர்.
அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் வெட்டுக்களையும், அரசாங்க தொழிற்சாலைகளை
விற்றுத்தள்ளுகையிலும் தொழிற்சங்கங்களானது உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய கொள்கைகளை கோரி ஆர்ப்பாட்டத்தை
ஒழுங்குபடுத்தியது. உத்தியோகபூர்வமான அறிக்கைகளின்படி, 15% ஆன தொழில்புரிய கூடியவர்கள் வேலையற்று
இருப்பதாகவும், இன்னும் பலர் தற்காலிக மற்றும்
பகுதிநேர வேலைகளில் தங்கியுள்ளனர். உருகுவேயின் பொருளாரதாரமானது கடந்த
4 வருடங்களாகவே வீழ்ச்சியின் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அதனது உறுதிப்பாட்டிற்கும் மற்றம் பரந்த சமூகநல வசதிகளுக்குமாக
''இலத்தீன் அமெரிக்காவின் சுவிற்ஸலாந்து'' என அழைக்கப்பட்ட நாட்டில் முன்னொருபோதும் இல்லாதவாறான வறுமை
நிலவுகின்றது.
உருகுவேயிற்கு வழங்கப்பட்ட கடனானது இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தை
வீழ்ச்சியிலிருந்து தடுக்கும் பொருளாதார உதவி தொடர்பான அதனது கடுமையான கொள்கையிலிருந்து தான் உடைத்துக்கொள்ளவதை
பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என விரைவாக புஷ்ஷின் நிர்வாகம் தெளிவுபடுத்தியது. அமெரிக்காவின் திறைசேரியின் இரண்டாவது
முக்கியம் வாய்ந்தவரான John Taylor
''உருகுவேயின் மிகக்குறிப்பிட்ட நிலைமைகள் மற்றைய நாடுகளுக்கு பொருத்தமற்றவை''
என தெரிவித்தார்.
திறைசேரி திணைக்களத்தின் சில தகவல்கள் உருகுவேயிற்கு வழங்கப்பட்ட இச்சிறிய தொகையானது
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவிருக்கும் புதிய கடனால் திரும்பி செலுத்தப்படவேண்டும் என குறிப்பிட்டன.
ஆர்ஜென்டீனாவிலிருந்து பரவிய ''தொற்றுநோயானது'' பாரிய நிதி முதலீடுகளை வழங்கும் அழுத்தத்தை அதிகரிக்கும்
என்ற கவனத்தின் கீழ், இக்கடனானது இன்னுமொரு செலுத்துமதி இயலாமையை இல்லாது செய்யும் நோக்கத்தை
கொண்டுள்ளது.
உருகுவேயிற்கான கடன் அறிவிக்கப்படுகையில் இலத்தீன் அமெரிக்காவிற்கான சுற்றுப்பிரயாணத்தை
மேற்கொண்டிருக்கும் அமெரிக்க திறைசேரி செயலாளரான
Paul O'Neill, கடந்த டிசம்பரில் ஆர்ஜென்டீனாவிற்கான உதவிகள்
வெட்டப்படவேண்டும் என்றவர்களில் ஒரு முக்கியமான அதிலிருந்து வாஷிங்கனும், சர்வதேச நாணய நிதியத்தியமும் ஆர்ஜென்டீனாவின்
பொருளாதாரம் துண்டுதுண்டாக உடைவதை திருப்தியுடன் கடந்த 8 மாதங்களாக கவனித்துவருகின்றன.
Paul O'Neill இன் ஆர்ஜென்டீனாவிற்கான
விஜயமானது Rio de Janeiro இன் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை
உருவாக்கியது. கடந்த மாதத்தின் இறுதியில் அவர் பிரேசில் அரசாங்கத்தின் ஆத்திரத்தை தூண்டியதுடன், தேசிய நாணயத்தின்
இன்னுமொரு ஓட்டத்தை உருவாக்கியதுடன், ஒரு பகிரங்க அறிக்கையில் பிரேசில், உருகுவே மற்றும் ஆர்ஜென்டீனாவிற்கான
புதிய நிதி உதவியானது சுவிஸ் வங்கி கணக்குகளில் சென்றுமுடியும் என கூறியதன் மூலம் உண்மையில் அந்நாடுகளின் நிதிச்சந்தைகளில்
பாரிய வீழ்ச்சியை உருவாக்கினார். இவ்வறிக்கையானது ஆர்ஜென்டீனாவின் முன்னாள் ஜனாதிபதியான Carlos
Menem உம் அவரது குடும்பத்தினரும் ஆர்ஜென்டீனாவை சுரண்டியது தொடர்பான
குற்றச்சாட்டுக்கள் தொடர்புபட்டதாகும்.
பிரேசில் அரசாங்கத்தின் பங்குகள் ஒரு சில வாரங்களுக்குள் தனது பெறுமதியில் அரைப்குதியை
இழந்ததால், பிரேசிலின் நாணயமான றியல் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து டொலருக்கான அதனது மதிப்பில் மூன்றில் ஒரு
பகுதிக்கு அதிகமான தனது பெறுமதியை இழந்துள்ளது. அதனது நாணயத்தின் மதிப்பிறக்கமானது கூடியளவு டொலரை
கொண்ட அதனது 250$ பில்லியன் கடனை அடைப்பதை கடினமாக்கியுள்ளது.
திறைசேரி செயலாளரின் மேலதிகமான ஆத்திரமூட்டும் கருத்துக்கள் தொடர்பாக பயமுற்று
இலத்தீன் அமெரிக்காவிலுள்ள அமெரிக்க தூதுவரலாலயங்கள்
Paul O'Neill இன் செய்தித்துறை தொடர்புகளை கட்டுப்படுத்தியது.
இதேவேளை வாஷிங்டன் தான் மேலதிக கடன் உதவிகளையோ அல்லது தென் கண்டத்தின் முழுப்பிராந்தியத்தை
பற்றிக்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு எந்தவொரு தீர்வையும் வைக்கப்போவதில்லை என்பதை தெளிவாக தெரிவித்தது.
ஆர்ஜென்டீனாவின் அதிகாரிகள் Paul O'Neill
இன் விஜயத்தை பொப் பாடகரான
Bono இன் ஆபிரிக்காவிற்கான
விஜயத்தைப்போல் விரும்பியபோதும், அவர் அங்கு சுதந்திர சந்தையினது பெருமைகளை புகழ்ந்ததுடன், அக்கண்டத்தின் அழிவுகரமான
சமூக பிரச்சனைகளைப்பற்றி போலியான கவலையை தெரிவித்தபோதும், அப்பிரச்சனைகளை தீர்க்க எவ்வித உதவியும்
வழங்கவில்லை.
இதேவேளை, உலக வங்கியின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் ''ஆர்ஜென்டீனா தொடர்பான
உத்தியோபூர்வமான கொள்கை ஒரு ''உதாரணமான தண்டனை'' எனவும் இது சர்வதேச வங்கிகளின் கடனை திரும்பி
செலுத்தாமைக்கு பாரிய கடன்பட்டுள்ள இலத்தீன் அமெரிக்காவினதோ அல்லது வேறு எந்த நாட்டிற்கும் அவர்கள் செலுத்தவேண்டிய
விலை தொடர்பான ஒரு எடுத்துக்காட்டாகும்'' என குறிப்பிட்டார்.
உலக வங்கியின் பிரதான பொருளியலாளரும், கிளின்டனின் நிர்வாகத்தின் கீழ் பொருளாதார
ஆலோசகர்களுக்கான அமெரிக்க குழுவின் தலைவருமாக இருந்த
Joseph Stiglitz, Buenos Aires இன் நாளிதழான
றிஊரீவீஸீணீ 12
இற்கு ''இது அமெரிக்காவும் சர்வதே நாணய நிதியமும் இந்நெருக்கடி உருவாக
வகித்த பங்கை மூடுமறைப்பதையும் நோக்கமாக கொண்டது'' என தெரிவித்தார்.
ஆர்ஜென்டீனாவின் ஜனாதிபதியான
Ernesto Duhalde இற்கும் சர்வதே நாணய நிதியத்திற்கும் இடையில்
சர்வதேச கடனை மீண்டும் பெறுவதற்காக தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையானது தற்போதைய நெருக்கடியிலிருந்து
வெளியேறுவதற்கான வழியை காட்டுவதற்கு தேவையற்றது எனவும்
Joseph Stiglitz
குறிப்பிட்டார். மேலும் அவர் ''வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றங்கள் மூலமாகவும், பண மதிப்பிறக்கம் மூலமாகவும் ஆர்ஜென்டீனா
இதற்கு ஒரு விலையை செலுத்தவேண்டுமானால், சர்வதே நாணய நிதியத்தினுடனான உடன்பாடானது இவ்விலைக்கு பெறுமதியற்றது''
என தெரிவித்தார்.
சர்வதே நாணய நிதியத்தினது எவ்விதமான புதிய கடன்களும் உலக வங்கி போன்ற ஏனைய
உத்தியோகபூர்வமான கடன்வழங்குனர்களுக்கே அப்பணம் சென்றடையும். இது இப்போதே வறுமைக்கோட்டின் கீழ் வாழும்
அரைவாசி சனத்தொகையான, துன்புறும் 36 மில்லியன் மக்களுக்கு எவ்விதமான மாற்றீட்டையும் வழங்கப்போவதில்லை.
மாறாக சர்வதே நாணய நிதியத்தால் கோரப்படும் நிபந்தனைகள் நாட்டை இன்னும் வீழ்ச்சிக்குள் இட்டுச்செல்வதுடன்,
நூறு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைத்தலங்களை இழப்பதற்கும், தற்போது எஞ்சியுள்ள அத்தியாவசிய சமூக
சேவைகளையும் இல்லாதொழிப்பதற்கு காரணமாகும்.
|