World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்

Washington debate continues over attack on Iraq

ஈராக் மீதான தாக்குதல் பற்றிய வாஷிங்டனின் விவாதம் தொடர்கிறது

By Patrick Martin
31 July 2002

Use this version to print | Send this link by email | Email the author

தங்களின் பொதுக் குறிக்கோளான சதாம் ஹூசைனைத் தூக்கி எறிவதும் உலகின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய சேமிப்பு இருப்பான, ஈராக்கின் எண்ணெய் வளத்தின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றலுமான தங்களின் பொதுக் குறிக்கோளை நிறைவேற்ற எந்த வழிமுறைகள் மற்றும் சாக்குப்போக்குகளை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதம் பற்றி புஷ் நிர்வாகத்தின் போட்டிப் பிரிவினரான, காங்கிரசின் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர், மற்றும் இராணுவ உயர் மட்டத்தினர் மத்தியில், வாஷிங்டனின் உத்தியோக வட்டாரத்தில் வெளிப்படையான கலந்தரையாடல் சென்றுகொண்டிருக்கிறது.

முன்னணி அமெரிக்க செய்தித்தாள்களின் பக்கங்களில் விவாதத்தின் அண்மைய சுற்று பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கான புஷ் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு இராணுவத்தில் பரந்த அளவிலான எதிர்ப்பினை மேற்கோள் காட்டி, ஜூலை28, ஞாயிறு அன்று, வாஷிங்டன் போஸ்ட் அதன் பெண்டகன் செய்தித்தொடர்பாளர், தோமஸ் ரிக்ஸ் (Thomas Ricks) என்பவரால் வழங்கப்பட்ட முதல் பக்க அறிக்கையை வெளியிட்டது.

போஸ்டின் விவரப்படி. "ஜனாதிபதி புஷ்ஷின் ஈராக் பற்றிய திரும்பத்திரும்பக் கூறும் போர் விழைவுள்ள அறிக்கைகள் இருப்பினும், பல அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் ஜனாதிபதி சதாம் ஹூசைன் உடனடி அச்சுறுத்தலை முன்வைக்கவில்லை என்றும் அமெரிக்க ஐக்கிய அரசுகள் பாக்தாத்தில் தலைமையை மாற்றுவதை நிர்ப்பந்திப்பதற்கு ஈராக்கை ஆக்கிரமிப்பதைவிட எதிரியைத் தாக்குக்காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி நயத்தைத் தொடர வேண்டும் என்றும் மனநிறைவு கொண்டிருந்தனர். "இந்த அதிகாரிகளுள், இராணுவத்தின் உச்சநிலை ஆணையகமான, தளபதிகளின் கூட்டுப் படைத் தலைமை உறுப்பினர்கள் உள்ளடங்குவர் என்று செய்தித்தாள் கூறியது.

பென்டகனின் எச்சரிக்கையானது, குறைந்தபட்சம் பகுதி அளவிலாவது, அமெரிக்க ஆக்கிரமிப்பானது கணிசமான அளவு தரைப்படைகளை அனுப்புவதைத் தேவையாகக் கொண்டிருக்கிறது, அது அணுஆயுதத்தாலோ, இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களாலோ பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும் அல்லது தலைநகரான, பாக்தாதைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான வீட்டுக்கு வீடான சண்டையில் உயர்ந்த அளவு ததும்பிவழியும் பாதிப்புக்களை எதிர்கொள்ள வைக்கும்.

போருக்குப் பிந்தைய ஈராக்கில் அமெரிகக் கொள்கை, ஈராக்கின் தெற்கில் ஈரான் சார்பு ஷைட் அரசு (Shi'ite state), அல்லது இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரதான கூட்டாளியான, துருக்கிக்கு அச்சுறுத்தலாகக் காணப்படும், வடக்கில் சுதந்திரமான குர்திஷ் அரசு உருவாதலைத் தடுப்பதில் நோக்கம் கொண்டதாக அக்கறையும் கூட இருக்கிறது. ஒரு பெண்டகன் அதிகாரி போஸ்டிடம், "குர்துகள் மற்றும் ஷைட்டுகளுக்கு எதிரான பிரச்சாரத்தை நாம் முடுக்கிவிட்டிருக்கிறோம் என்பது கிட்டத்தட்ட உறுதி என நான் நினைக்கிறேன்" எனக் கூறினார் -வேறுவார்த்தைகளில் சொன்னால், சதாம் ஹூசைனுக்கு எதிரான அமெரிக்கப் போர் ஈராக்கிற்குள்ளே ஹூசைன் ஆட்சிக்கு எதிரான அமெரிக்காவுடன் பெயரளவில் கூட்டுவைத்துள்ள சக்திகளுக்கு எதிரான போராக முடிந்துவிடக் கூடும்.

முழு அளவிலான ஆக்கிரமிப்பிற்கு ஒரு மாற்றை: குண்டுவீசல் மற்றும் வானிலிருந்து இறக்கிய துருப்புக்களால் தாக்குதல் இவை இணைந்த பாக்தாதின் மீது விரைந்து அடிக்கும் தாக்குதலை, பரிசோதித்துக் கொண்டிருக்கும் குடிமக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி, ஈராக்கிற்கான இராணுவத் திட்டமிடலின் தற்போதைய நிலை பற்றிய அதன் சொந்த முன்பக்க விவரத்தை இரண்டு நாட்கள் கழித்து நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டது. இந்த "உள்-வெளியே" அணுகுமுறை சதாம் ஹூசைனைக் கொல்வதை மற்றும் தலைநகரிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டால் பிரதான ஈராக்கின் இராணுவப்படைகள் தாங்கள் சொந்தமாய்நின்று போராடமாட்டா என்ற நம்பிக்கையின் அடிப்படையில், ஈராக்கிய ஆணையக மையங்களை அழிப்பது ஆகியவற்றை நோக்கமாக்க் கொண்டிருக்கிறது.

பரந்த அளவிலான அழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலிருந்து சதாம் ஹூசைனைத் தடுக்கும் அதேவேளை, போரின் அளவை குறைக்கும் முயற்சியாக டைம்ஸால் முன்வைக்கப்படும் அதேவேளையிலேயே, அத்தகைய மூலோபாயம் -அமெரிக்க பக்கத்தில் அத்தகைய ஆயுதங்களைப் பெரும்பாலும் பயன்படுத்துவதை செய்யக்கூடும். திடீர்த் தாக்குதல் வெற்றியின்றிபோனால், அது அமெரிக்கப் படைவீரர்களை பாக்தாத்தில் அல்லது அதன் அருகில் ஈராக்கியப் படைகளால் சுற்றிவளைக்கப்படுமாறு தனிமைப்படுத்தி விட்டுவிடக்கூடும். அந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அரசாங்கமானது அதன் ஆக்கிரமிப்புப் படை மேலழுத்தி அமுக்கிவிடப்படுவதைக் காட்டிலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு நன்கு முடிவு செய்திருக்கலாம்.

உயிரிழப்பும் செலவும்

புஷ் நிர்வாகத்தின் உள் விவாதம் "70,000 லிருந்து 2,50.000 வரையான அளவில் துருப்புக்கள் இறக்குதலை மதிப்பிட்டிருக்கின்றது" என டைம்ஸ் கூறியது. ஈராக்கின் பக்கத்தில் எதிர்பார்க்கப்படும் சேதங்கள் குறிப்பிடப்படவில்லை, அது சிறப்பாக, முப்பது லட்சம் மக்களைவிட அதிகமாய்க் கொண்ட பெரிய, மிக அபிவிருத்தி அடைந்த நகர்ப்புறத்தில் பாக்தாதில் கடுமையானதாக இருக்கும். ஆனால் மனிதாபிமான உதவி முகவாண்மைகள் 10,000 குடிமக்கள் அளவில் அதிகமாக பாக்தாத்தில் மட்டுமே கொல்லப்படுவார்கள் என்று மதிப்பிட்டுள்ளன.

அடுத்தநாள் டைம்ஸில் தொடர்ந்து வந்த கட்டுரையானது, ஈராக்கிற்கு எதிரான போரின் நிதிச்செலவு பற்றி, இராணுவ படையினர் மற்றும் அளிப்புக்கள் மீதான மொத்தமான செலவுகள் மற்றும் உலக எண்ணெயின் பெரும்பகுதியை வழங்கும் பாரசீக வளைகுடாவில் போரிலிருந்து விளையும் பொருளாதார திட்டச் சீர்குலைவின் அர்த்தத்தில் மதிப்பிடுவதற்கு விழைந்தது.

முதலாம் புஷ்ஷின் நிர்வாகத்தின் பலமான அமெரிக்கக் கூட்டாளி ஜப்பான், குவைத் மற்றும் செளதி அரேபியா போன்றவை செலவின் பெரும்பகுதியை செலுத்திய பொழுதிலான, 1990-91 பாரசீக வளைகுடா போரினைப்போல் அல்லாமல், 2002 அல்லது 2003ல் போருக்கான செலவானது கிட்டத்தட்ட முழுவதுமே அமெரிக்க ஐக்கிய அரசுகளால் செலுத்தப்படும். முதலாவது வளைகுடாப் போருக்கு மொத்தமாக மதிப்பிடப்பட்ட செலவான 61 பில்லியன் டாலர்களில், அமெரிக்க கருவூலத்திற்கு கிட்டத்தட்ட 13 பில்லியன் டாலர்கள் செலவு பிடித்தது. இரண்டாவது வளைகுடாப் போருக்கு மேல்நோக்கிய அளவாய் 80 பில்லியன் டாலர்கள் -முந்தைய அமெரிக்கா செலவிட்ட தொகையைப் போல் ஆறுமடங்கு- தேவைப்படலாம், அதுவும் அமெரிக்க நடுவண் அரசின் வரவு-செலவுத்திட்டம் பற்றாக்குறையில் மூழ்கி உள்ள சூழ்நிலையின் கீழே.

ஈராக்குடனான போர்ச் சம்பவத்தில் புதிய "எண்ணெய் அதிர்ச்சியை" முன்னுணர்ந்து புஷ் நிர்வாகமானது ஏற்கனவே நடவடிகையை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளே, புஷ் அமெரிக்க மூலோபாய பெட்ரோலிய சேமிப்பு இருப்புக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்களைக் கூடுதலாகச் சேர்ப்பதற்கு சக்தித்துறை செயலாளர் ஸ்பென்சர் ஆபிரகாமிடம் குறிப்பிட்டார். ஒரு மதிப்பீட்டின்படி சேமிப்பு இருப்பிற்கான அமெரிக்க அரசாங்க கையகப்படுத்தல் இந்த ஆண்டு எண்ணெய்க்கான தேவையில் வளர்ச்சியில் அரைப்பங்கிற்கும் அதிகமான அளவினைக் கணக்கில் கொண்டிருக்கிறது.

செனட்டின் வெளியுறவுக் குழுவானது புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஈராக் கொள்கை மீதான விசாரணைகளை நடத்தப்போகின்றது. அது வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர் தொடங்கி முன்னாள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பின்னர் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளது சாட்சியங்களை பெறவிருக்கின்ஈது. அவையின் சர்வதேச உறவுகள் குழுவின் முன்னர் அதேபோன்ற விசாரணைகள் ஆகஸ்ட் இறுதியில் ஆரம்பமாக இருக்கின்றன.

செனெட் குழுவின் தலைவரான டிலாவேரின் ஜனநாயகக் கட்சியாளரான ஜோசப் பிடன் (Joseph Biden), இராணுவ நடவடிக்கைக்கான தனது ஆதரவை திரும்பத்திரும்ப வெளிப்படுத்தி, புஷ் நிர்வாகம் பெறவிரும்பும் காங்கிரசனல் அங்கீகாரத்தை வழங்கினார் மற்றும் இந்தப் பிராந்தியத்திற்கான அதன் நீண்டகால இலக்குகளை தெளிவாகக் கூறினார். நிர்வாகத் தரப்பை அழைப்பதில் காலதாமதத்தை விளக்கும்பொருட்டு, பிடன் பத்திரிக்கையிடம் பின்வருமாறு கூறினார், "என்ன செய்வது என்பது பற்றி விவாதத்தைத் தேடும் பிரசவ வேதனையில் புஷ் நிர்வாகம் இன்னும் இருக்கிறது என்பது எனக்கு தெளிவாகிறது. பக்குவமில்லாது ஒரு முடிவெடுக்கும் நிலையில் அவர்களை வைக்க நான் விரும்பவில்லை."

போருக்கான சாக்குப்போக்கை நாடுதல்

ஈராக்கிற்கு எதிரான ஒரு சாக்குப்போக்கை தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் மூன்று இணையான வழித்தடங்களின் வழியாக புஷ் நிர்வாகம் நகர்ந்து வருகிறது: வடக்கு மற்றும் தெற்கு ஈராக்கில் பறக்கத்தடை செய்யப்பட்ட மண்டலங்களில் தொடர்ந்து ஆத்திரமூட்டல்; நாட்டிற்குள்ளே ஐ.நா ஆயுத சோதனை அதிகாரிகளை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சிகள், மற்றும் அணுஆயுத, உயிரி மற்றும் இரசாயன ஆயுத வசதிவாய்ப்புக்கள் என்று கூறப்படுவனவற்றின் பேரில் "முன்னதாக தனதாக்கிக் கொள்வதற்கான" தாக்குதல்களின் அச்சுறுத்தல்களை வழங்குதல் ஆகியன.

ஜூலை 28, ஞாயிறு அன்று, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்கள் தெற்கு ஈராக்கில் செய்தித் தொடர்புகளைக் குண்டு போட்டுத் தகர்த்தன; இது ஒப்பீட்டளவில் அமைதியான காலமான ஆண்டின் முதல் ஆறு மாதங்களிற்குப் பின்னர் ஜூலை மாதத்தில் நடந்த அத்தகைய ஆறாவது நிகழ்ச்சி ஆகும். பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், அத்தகைய தாக்குதல்கள் "வாராந்திர அடிப்படையில்" எதிர்பார்க்கப்பட முடியும் என்றார்.

கடந்தவாரம் பென்டகன் அதிகாரிகள், பறக்கத்தடை மண்டலங்களை நிர்ப்பந்தப்படுத்தல் ஈராக்கிய இராணுவத்தை அனுப்புதலைப் பற்றிய முக்கிய விவரங்களை தொடர்ந்து வழங்குகிறது, அதேவேளை நாட்டின் வான் பாதுகாப்பினை அழித்தல் மற்றும் இடையூறு செய்தல் மற்றும் இலக்குகளின் சூழலை அமெரிக்க விமானிகளுக்கு பரிச்சயமுள்ளதாக்குகிறது என கூறினர். பாரசீக வளைகுடா போரின் முடிவிற்குப் பின்னர், ஈராக் மீதான வான் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் 11 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளன, அது முற்றுகையிடப்பட்ட அந்த நாட்டின் பட்டினி கிடக்கும் மக்களுக்கான மனிதாபிமான உதவி மீதான மொத்த செலவை விட மிகவும் அதிகமானதாகும்.

ஆயுத சோதனைகளைப் புதுப்பித்தல் மீதாக ஈராக்குடனான ஐ.நா ஆதரவு பேச்சுவார்த்தைகள், சோதனையிடும் திட்டத்தில் அமெரிக்கர்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வற்புறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறன. இது ஈராக்கிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது, சதாம் ஹூசைன் மற்றும் ஏனைய ஈராக்கிய உயர்மட்டத் தலைவர்களின் இடத்தைக் கண்டு பிடிக்கவும் கொலை செய்வதற்காக அவர்களை இலக்கு வைக்கவும் நாடி, 1991லிருந்து 1998 வரை, சோதனையிடல்களின் முந்தைய சுற்றின் பொழுது, சி.ஐ.ஏ முகவர்கள் ஐ.நா பரிசோதனையாளர்கள் என்ற முகமூடியின் கீழ் வேலை செய்தனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஈராக் வெளியுறவு அமைச்சர் நாஜி சாப்ரி ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம், வாஷிங்டன் ஈராக் அரசாங்கத்தைத் தூக்கி வீசி, அமெரிக்கக் கம்பனிகளுக்கு நாட்டின் எண்ணெய் சேர்ம இருப்பை கிடைக்க வழி செய்யும் "பொம்மை ஆட்சியை" நிறுவ விரும்புகிறது என குறிப்பிட்டார்.

ஈராக்கிற்கு எதிரான போர் பற்றிய அமெரிக்க அச்சுறுத்தலை எடுத்துக் கொண்டால், ஐ.நா மூடுதிரையின் கீழ் அமெரிக்க சோதனையாளர்களை பாக்தாத் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டார். "அந்த உளவாளிகள் குடிமக்கள், பொருளாதார நிறுவனங்கள் அதேபோல பாதுகாப்பு மற்றும் இராணுவ நிலைகள் பற்றிய தகவல்களை இந்நாள் வரைக்குமாய் நவீனப்படுத்துவர் மற்றும் இந்தப் புள்ளிவிவரங்களை ஈராக்கைத் தாக்குவதில் பயன்படுத்தும் வண்ணம் அவற்றை அமெரிக்க புலனாய்வுத் துறை மற்றும் இராணுவ அங்கங்களுக்கு வழங்குவர்" என்றார் அவர்.

ஈராக்கிய அதிகாரியின் ஆய்வு எதிர்பாராத வட்டாரத்தில் இருந்து - ஈராக்கில் 1991- 1997 வரைக்கும் ஐ.நா ஆயுத சோதனையாளர்களுக்கு தலைமை வகித்த ஸ்வீடிஷ் ராஜிய அதிகாரி ரோல்ப் எக்கியுஸ் (Rolf Ekeus) இடமிருந்து ஆதரவைக் கண்டது. அவர் ஸ்வீடிஷ் வானொலியில் பேசும்பொழுது, அமெரிக்கா சோதனை நிகழ்ச்சிப்போக்கை தனது சொந்த நலன்களுக்காகக் கையாண்டது என்பதில் ஐயமில்லை என்றார் .

எக்கியுஸ், சதாம் ஹூசைன் இருப்பிடம் பற்றிக் கண்டறியும் தகவல்களை அடைவதற்கு சோதனையிடல்களைப் பயன்படுத்தும் அமெரிக்க முயற்சிகளை தானே மறுதலித்ததாகக் குறிப்பிட்டார். அமெரிக்க அரசாங்கமும் கூட சோதனையிடல்களை ஈராக்குடன் மோதலைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தியது, "அது நேரடி இராணுவ நடவடிக்கைக்கான நியாயப்படுத்தலாகப் பயன்படுத்தக் கூடும்" என்றார் அவர். தான் ஐ.நா பதவியை விட்டு விட்ட பிறகு, அமெரிக்கா தனது சோதனை அதிகாரிகள் மத்தியில் இரண்டு சி.ஐ.ஏ அதிகாரிகளை வைத்திருந்ததாக தாம் கேள்விப்பட்டதாக ஒரு ஸ்வீடிஷ் செய்தித்தாளிடம் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவானது பறக்கத்தடை மண்டலத்தை மற்றும் சோதனை விவகாரத்தை பாக்தாதின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதற்கு நீண்டகாலமாய் பயன்படுத்தி வந்திருக்கிறது. அதன் மிகப் புதிய ஆத்திரமூட்டல், ஜூன் 1 அன்று மேற்குமுனை பயிற்சி முடித்தோருக்கு ஆற்றிய ஜனாதிபதி புஷ்ஷின் உரையினை அடுத்து, ஈரான் மற்றும் ஈராக்கில் ஆயுத வசதிவாய்ப்புக்களின் மீது தன்னிச்சையான இராணுவத் தாக்குதல்கள் பற்றிய பகிரங்க விவாதங்களின் ஆரம்பமாகும். அந்த உரையில், முன்னதே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் போர்முறை பற்றிய புதிய கொள்கையினை அவர் அறிவித்தார்.

ஜூலை 29 அன்று வாஷிங்டன் போஸ்ட், ஈரானிய அணு உலை மீதான இராணுவத் தாக்குதலின் சாத்தியம் பற்றி புஷ் நிர்வாகத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என செய்தி வெளியிட்டது. அது புஷ்ஷெஹ்ரில் (ஈரானின் தென்மேற்கு பிராந்தியம்) ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றது. அந்த அணு உலையை ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டும் பராமரித்து வருகின்றன, அது 2003 அல்லது 2004ல் முடிவுபெறத் திட்டமிடப்பட்டிருக்கிறது, அது குடிமக்கள் உபயோகத்திற்கான அணுசக்தி நிலையம் ஆகும். சர்வதேச அணுசக்தி முகவாண்மையிலிருந்து சோதளை அதிகாரிகள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் அப்பகுதியைப் பார்வையிட்டிருக்கின்றனர்.

இஸ்ரேலிய அரசாங்கம், புஷ்ஷெர் நிலையத்தைத் திறப்பது பற்றி ஈரானுக்கு எதிராக பகிரங்கமாய் எச்சரிக்கை விடுத்திருக்கிறது என குறிப்பிட்டது. கடந்த மாதம் இஸ்ரேலிய பத்திரிகையான ஹாரெட்ஜ், ஷெரோன் அரசாங்கமானது ஈரான் தொடர்பான கொள்கையில் அவசர மீளாய்வை நடத்தியது என செய்தி வெளியிட்டது மற்றும் "தேவைப்பட்டால், அணு ஆயுதங்களின் திறனைப் பெறுவதிலிருந்து தெஹ்ரானைத் தடுக்க பலத்தைப் பயன்படுத்துவது உள்பட, அனைத்தும் கட்டாயம் செய்யப்பட் வேண்டும்" என ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறியதை மேற்கோள்காட்டியது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு 1981ல் ஒசிராக்கில் ஈராக்கிய அணுஉலை அழிக்கப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல் மாதிரியாகக் கொள்ளப்படும். பெருமளவு தூரம் பயணம் செய்யப்பட வேண்டியதை, மற்றும் இப்பிராந்தியத்தில் மிகுதியாய் அமெரிக்க இராணுவம் இருப்பதை எடுத்துக் கொள்கையில், ஈரானுக்கு எதிரான அத்தகைய வான்வழித்தாக்குதல் செயலூக்கமான அமெரிக்க ஆதரவு மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

பாதுகாப்பு செயலாளர் ரம்ஸ்பீல்ட் ஜூலை 29 அன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் ஈராக்கில் இராசாயன, உயிரி மற்றும் அணு ஆயுத வசதிவாய்ப்புக்கள் மீது வான்வழி தாக்குதல்கள் பற்றிக் கேட்கப்பட்டார். பென்டகனில் விஷயம் மும்முரமாய் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பதைக் குறிகாட்டி, ரம்ஸ்பீல்ட் பின்வருமாறு குறிப்பிட்டார், ஈராக்கின் எதிர்நடவடிக்கைகள் மற்றும் பதுங்கிடம் காரணமாக அத்தகைய வான்தாக்குதல் போதுமானவையாக இருக்காது. "வானிலிருந்து... நீங்கள் குறிப்பிடுவதை சதாரணமாய் செய்வது எளிதானது என்ற கருத்து சூழ்நிலையைத் தவறாகப் புரிந்து கொண்டிருத்தலாகும்" என்று அவர் கூறினார். தெளிவாக மறைமுகமாய் சுட்டுவது தரைப்படைகளை அனுப்புவது மற்றும் ஒரேயடியாய் ஈராக்கை வெல்வது மட்டுமே போதுமானது என்பதாகும்.

நூரென்பேர்க்கில் நாஜி தலைவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுள் ஒன்று அவர்கள் செக்கோஸ்லோவேகியா, போலந்து நோர்வே மற்றும் யூகோஸ்லாவியா போன்ற நாடுகளுக்கு எதிராக "உக்கிரமான யுத்தத்துக்கு சதித்திட்டம் தீட்டினார்கள்" என்பதாகும். அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு நம்பத்தகுந்த அச்சுறுத்தலை முன்வைக்காத நாட்டிற்கு எதிராக போர் தொடுக்க பகிரங்கமாக அவர்கள் திட்டமிடுவதால் அதேபோன்ற குற்றச்சாட்டுக்கள் வாஷிங்டனில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு எதிராக வரிசைப்படி இருக்கும்.

See Also :

ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்கா நெருங்குகிறது

போருக்கான அமெரிக்கா நாடும் சாக்குப்போக்காக ஈராக்கில் புதிய குண்டு வீச்சுத் தாக்குதல்கள்

அமெரிக்கா ஈராக்கின் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது

புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கான திட்டங்களை உறுதிப்படுத்துகின்றது

Top of page