ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்கா
நெருங்குகிறது
By Patrick Martin
23 July 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
அமெரிக்க துணை பாதுகாப்பு செயலாளர்
பெளல் வொல்போவிட்ஸால் (Paul
Wolfowitz ) கடந்த வாரம் துருக்கிக்கு செய்யப்பட்ட
விஜயம் ஈராக்கிற்கு எதிராக முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை
நோக்கிய இன்னொரு அடிஎடுப்பைக் குறிக்கிறது. உல்போவிட்ஸ்
புஷ் நிர்வாகத்தின் கொள்கை வகுப்பாளரும், இவர் எண்ணெய் வளம்
மிக்க பாரசீக வளைகுடா நாடுகளுடனான போருக்கான திட்டங்களுடன்
மிக நெருக்கமாய் இனங்காணப்பட்டவர். அவரது பயணத்தின்
நோக்கம் அத்தகைய தாக்குதலுக்கு அதன் ஒத்துழைப்பு மிகவும்
முக்கியமான ஆட்சியாளருடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள்
நடத்துவதற்காக ஆகும்.
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றில் மாபெரும் குற்றங்களில்
ஒன்றாக இருக்கும். இது கொரியா மற்றும் வியட்நாமில் இரத்தம்
தோய்ந்த போர்களுக்கு மட்டும் பொருத்தமானதாக இருக்கும்.
பெண்டகன் உள் ஆய்வுகள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் நிகழ்ச்சியின்போது
பத்தாயிரக்கணக்கான குடிமக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கனவே
முன்கணித்திருக்கிறது. சண்டையானது பாக்தாத்தின் வீதிகளுக்கு நீட்டிக்கப்பட்டால்
- அல்லது இந்த ஆண்டின் தொடக்கத்தின் அதன் குறிப்புக்களின்
படி செயல்பட்டால், மற்றும் தந்திரோபாய அல்லது மூலோபாய
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் - இறப்பு எண்ணிக்கை
அளவிடா முடியாத அளவு அதிகரிக்கும்.
ஈராக்கிற்கு எதிரான போரின் நோக்கம் சதாம்
ஹூசைனைத் தூக்கி வீசி ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது
என்ற கூற்றுக்கள் இருப்பினும், 2000 தேர்தல்களில் ஜனநாயக
விரோத சதியின் உற்பத்தியான புஷ் நிர்வாகத்திற்கு பாக்தாத்தில் மக்களின்
ஆட்சியை நிறுவும் நோக்கம் இருக்கவில்லை. பதிலாக, அதன்
இலக்கு ஈராக்கின் பெரும் எண்ணெய் வளங்ளைக் கைப்பற்றுவதாக
இருப்பதுடன், மற்றும் உலகின் இரண்டு முக்கிய எண்ணெய் உற்பத்தி
செய்யும் பிராந்தியங்களான பாரசீக வளைகுடா மற்றும் மத்திய
ஆசியாவில், எவராலும் சவால் செய்ய முடியாத அமெரிக்க
மூலோபாய மேலாதிக்கத்தை நிறுவுவதாக இருக்கின்றது.
இந்தப் பிராந்தியத்தில் வாஷிங்டனின் உண்மையான
நோக்கங்கள் Times of London பத்திரிகையில்
ஜூலை 11ல், "பெரும் எண்ணெய்க் கிணறுகளில் முன்னுக்கு உள்ள
மின்னும் பரிசுப்பொருட்களை மேற்கு பார்க்கிறது" எனத்
தலைப்பிடப்பட்ட கட்டுரையில் தெளிவாக்கப்பட்டன.
"ஜனாதிபதி சதாம் ஹூசைனை அகற்றுவது
ஈராக்கின் வளங்கொழிக்கும் புதிய எண்ணெய் வயல்களை மேற்கத்திய
விலைகூறுபவர்களுக்கு திறந்துவிடும் மற்றும் சவுதி அராபிய எண்ணெய்
மீது சார்ந்திருப்பதைக் குறைக்கும் முன்னேற்றத்தைக் கொண்டு
வரும்," எனவும், "அத்தகைய தோண்டி எடுக்கப்படாத
எண்ணெய் வயல்களை வேறு எந்த நாடும் வழங்காது...."
என அச்செய்தித்தாள் கூறியது.
ஈராக்கில் 112 பில்லியன் பரல்கள் எண்ணைய்
இருப்பு உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சவுதி அரேபியாவின்
256 பில்லியன் பரல்களுடன் ஒப்பிடுகையில் அது இரண்டாவதாகும்.
எண்ணெய் வளங்கள் இன்னும் கூட அதிகமானதாக இருக்கக்கூடும்,
மதிப்பிடப்படாத இருப்பு 220 பில்லியன் பரல்கள் அளவுக்கு அதிகமாக
இருக்கலாம் என்பதால், சிறப்பாக தெற்கு ஈராக்கின் மஜ்நூன்,
மேற்கு குர்னா மற்றும் நாஹ்ர் உமர் போன்ற மூன்று பெரிய எண்ணெய்
வயல்கள் ஒவ்வொன்றும் குவைத்தின் மொத்த எண்ணெய் வளத்தைவிட
பெரியது. ஒரு தொழிற்துறை நிபுணர் பிரித்தானிய செய்தித்தாளிடம்
கூறியவாறு, "உலகில் அதுபோல் வேறெதுவும் எங்கும் இல்லை.
அது பெரிய பரிசாகும்."
ஈராக்கிற்கு எதிரான போர் நாட்டத்திற்குப் பின்னால்,
இரண்டாவதும் சமமான அளவு பலமான உள்நோக்கம் இருக்கிறது.
அது ஐக்கிய அமெரிக்க அரசுகளின் உள்ளே ஆழமடைந்து வரும்
சமூக மற்றும் நிதி நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கு உரிய
ஒரே வழியாக ஆளும்தட்டின் பகுதிகளால் அதிகரித்த அளவில் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க செய்தி ஊடகத்தில் குறிப்பிட்டப்படும் செய்திகள் அத்தகைய
போரின் காலநேரம் பற்றி, இந்த குளிர்காலம்வரை அல்லது
2003 ஆரம்பம் வரைக்கும் ஒரு நடவடிக்கையும் இருக்காது
என்று கூறிக்கொண்டு மனநிறைவுடன் செய்திகளைப் பரப்பும்
அதேவேளை, புஷ் நிர்வாகத்தின் நொருங்கிக் கொண்டிருக்கும்
அரசியல் நிலைப்பாடு நவம்பர் தேர்தல்களுக்கு முன்னரே இராணுவத்
தாக்குதலை நடாத்தக்கூடும்.
பங்குச்சந்தைப் பொறிவின் சூழலில் மற்றும்
நிறுவனங்களின் குற்றச்செயல்கள் பற்றித் தொடர்ச்சியாக
வருகின்ற அறிக்கைகள், அவற்றுள் சில புஷ், சென்னி மற்றும் அவர்களின்
அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியவர்களுடன் தொடர்புபடுத்துகின்ற
சூழ்நிலைகளின் கீழ், வெள்ளை மாளிகையானது குடியரசுக்கட்சிக்கான
ஒரே மாற்றுவழி கண்கவரும் இராணுவ சாகசம் என நன்றாக
முடிவு செய்திருக்கலாம். இது ஈராக்கில் பரந்த அளவில் குண்டுகளை
வீசுதல் முதல் சதாம் ஹூசைனைக் கொலைசெய்வதை இலக்காகக்
கொண்ட பாக்தாத்தின் மீதான திடீர்ப் படை எடுப்பு மற்றும்
அவரது ஆட்சியைத் துண்டித்தல்வரை, முழு அளவிலான ஆக்கிரமிப்பு
வரையிலான எதுவும் இதில் சம்பந்தப்பட்டிருக்க முடியும்.
இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஜ் (Ha'aretz)
பிரெஞ்சு அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி,
ஈராக் மீதான தாக்குதல் ஆக்ஸ்டில் எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு
சீக்கிரம் நடக்கக்கூடும் என்று கூறியது. அமெரிக்கத் துருப்புக்களை
அனுப்புவதில் தாமதங்கள் பற்றிய மற்றும் இந்தப் பிராந்தியத்தில்
உள்ள அரசாங்கங்களுக்கான ஆதரவைப் பெறுவதில் தடைகள் பற்றிய
அமெரிக்க செய்தி ஊடக அறிவிப்புக்கள், "காலம், இடம் மற்றும்
தாக்கும் விதம் ஆகியவற்றுடன் தந்திரோபாய வியப்பை ஏற்படுத்துவதற்கு
தவறான தகவல்" அளிக்கும் நோக்கம் கொண்டவை என
அச்செய்தித்தாள் குறிப்பிட்டது. "புஷ் அவரது டெக்சாஸ் பண்ணையில்
விடுமுறை எடுத்துக் கொண்டிருப்பதைக் காணும் அதேவேளை,
சி.ஐ.ஏ ஆதரவுடன் சிறப்புப் படைகள் மற்றும் துல்லியமான விமானத்
தாக்குதல்கள் வடிவத்தில் ஆகஸ்ட் மத்தியில் தாக்குதல்
நடைபெற்றால் பாரிஸ் வியப்படையாது" எனவும் குறிப்பிட்டது.
அமெரிக்க யுத்தத்திட்டங்கள்
அமெரிக்க செய்தி ஊடகத்திற்கு கசிந்த பெண்டகன்
அறிக்கைகளின்படி, 1990-91 பாரசீக வளைகுடா போரின் பொழுது
கட்டி எழுப்பப்பட்ட சவுதி அரேபியாவில் தளங்களின் வலைப்பின்னலைப்
பயன்படுத்தாமல், துருக்கி மற்றும் சிறிய வளைகுடா நாடுகளான
குவைத், கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றிலிருந்து ஈராக்கிற்கு
எதிரான யுத்தம் வெற்றிகரமாக நடத்தப்பட முடியும் என்று இராணுவ
உயர்மட்டத்தினர் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
இந்த மூன்று சிறிய வளகுடா ஷேக்குகளின் அரசுகள்
இந்தப் பிராந்தியத்தின் அமெரிக்க இராணுவ கட்டமைப்பை விட
சிறிது பெரிதாக இருக்கின்றன. கடந்த மாதம் பாதுகாப்பு செயலாளர்
டொனால்ட் ரும்ஸ்பீல்ட் சவுதி அரேபியாவில் நிற்காது இம்மூன்று
நாடுகளுக்கும் விஜயம் செய்தார், ஆனால் இப்புறக்கணிப்பினால்
அது இந்த பிராந்தியத்தில் தனது முக்கியத்துத்தை இழந்துபோய்விடவில்லை.
குவைத்திலுள்ள தோஹா முகாமிலுள்ள அமெரிக்க
தளம் ஈராக்கிய எல்லையிலிருந்து 35 மைல்கள் தூரத்திலேயே
இருக்கிறது. இது அமெரிக்க மத்திய ஆணையகத்தின் முன்னோக்கிய
தலைமையகங்களின் பகுதி ஆகும். 8000 பலமான இராணுவ படைப்பிரிவினர்,
விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் என அளவிலும் சண்டையிடும்
திறனிலும் குவைத் எமிரின்,
ஆயுதப்படைகளைக் குள்ளமானதாக ஒப்பிட்டுக்காட்டும்
படையின் பகுதியாக அப்ராம் டாங்கிகள் (Abrams
tanks), Bradley fighting வாகனங்கள் மற்றும்
பேட்ரியாட் வான்-பாதுகாப்பு ஏவுகணைகள் (Patriot
air-defense missiles) ஆகியவற்றை கொண்ட
2000 படைவீரர்கள் தோஹா முகாமில் உள்ளனர்.
கத்தார், அல் உதெய்த் விமானத் தளத்தின் பகுதியாய்
இருக்கிறது, பெரிதும் வசதி நிறைந்த அது எப்-16 போர் விமானங்கள்,
JSTAR கண்காணிப்பு விமானங்கள்,
கே.சி-10 மற்றும் கேசி-135 ஆகாய தாங்கிகளை ஆகியவற்றை இயக்கும்
ஆயிரக்கணக்கான அமெரிக்க விமானப்படை வீரர்களுக்கு ஏற்கனவே
இல்லமாக இருக்கிறது. அல் உதெய்த் இந்தப் பிராந்தியத்தில்
அமெரிக்க வான் நடவடிக்கைகளுக்கான பிரதான ஆணையகம்
மற்றும் கட்டுப்பாட்டு மையமாக தகுதியுடையதாக இருக்கின்றது.
அது சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் வான்தளத்தை
(Prince Sultan air base)
பிரதியீடு செய்யும். அது 1991 போரின் நோக்கங்களுக்கு பயன்பட்டது
ஆனால் இப்பொழுது அது சவுதி முடியாட்சியால் அதைப்பயன்படுத்துவதில்
கட்டுப்பாடுகள் போடப்பட்டதால் தடுக்கப்பட்டு இருக்கிறது.
பஹ்ரைன் தீவின் ஷேக் அரசு பாரசீக வளைகுடாவில்
4225 கடற்படை வீரர்களையும், கடல்சார்ந்த தரைப்படைவீரர்கள்
ஆகியோர் தங்கி இருக்கும், அமெரிக்காவின் முதன்மையான கடற்படைத்
தளம் ஆகும். தலிபானைத் தூக்கி வீசியதால் குறிக்கப்படும், ஆப்கானிஸ்தானில்
முதற்கட்ட நடவடிக்கைகளின் நிறைவேற்றத்திற்குப் பிறகு கடந்த
டிசம்பரில் அமெரிக்க மத்திய ஆணையகத்திற்கான கடற்படைத்
தலைமையகங்கள் அங்கு மாற்றப்பட்டன.
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போருக்கான
ஒரு சாத்தியமான இராணுவக் காட்சி, நியூயோர்க் டைம்ஸூக்கு
கசிந்த மற்றும் ஜூலை 5ல் வெளியிடப்பட்ட பத்திரங்களில் தெளிவாக்கப்படுகிறது.
அதில் தெற்கில் பாரசீக வளைகுடாவில் இருந்து, மேற்கில் ஜோர்டானிலிருந்து
மற்றும் வடக்கில் துருக்கியிலிருந்து மும்முனைத்தாக்குதல்
சம்பந்தப்படும் என குறிப்பிட்டது.
ஜோர்டானின் நிலைப்பாடு 1991ல் இருந்த நிலையிலிருந்து
கடும் மாற்றம் ஏற்பட்டதைப் பிரதிநிதித்துவம் செய்யும். பெரிய
விமானங்களுக்கு இடமளிக்கும் வசதியாக இரு ஜோர்டானிய விமான
தளங்களில் ஓடுதளத்தை நீட்டித்தல் உட்பட, பெண்டகன் ஜோர்டானில்
பல உயர் முக்கியத்துவம் உடைய கட்டுமான திட்டப்பணிகளை
நடத்திக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம், மத்திய
ஆணையகத்தின் கொமாண்டர், ஜெனரல் டொமி பிராங்க்ஸ் (Tommy
Franks), ஜோர்டானுக்கு விஜயம் செய்து
அரசர் அப்துல்லா மற்றும் அவரது மூத்த இராணுவக் கொமாண்டர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினார்.
துருக்கிக்கு இலஞ்சம்
துருக்கிக்கு பெளல் வொல்போவிட்ஸ் பயணம்
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போருக்கான ஆதரவை உறுதிப்படுத்துவதை
நோக்கமாகக் கொண்டது, அத்தகைய தாக்குதலுக்கு இந்நாடு
மிகவும் முக்கிய தளப்பகுதியாக இருக்கும். இனசிர்லிக்கில் (Incirlik)
உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் நாட்டின் வடபாதி பகுதியில்
வானிலிருந்து நடத்தும் நடவடிக்கைகளுக்கான முக்கியமான
இடமாகும் மற்றும் எண்ணெய் வளம் மிக்க கிர்க்குக் (Kirkuk)
பிராந்தியத்தைச் சுற்றிய பகுதியில் தரைநடவடிகைகளை நடத்துவதற்கு
துருக்கியின் துறைமுகங்களும் தரைவழிப் பகுதிகளும் தேவைப்படும்.
பிரதமர் புலென்ட் எஸ்விட் (Bulent
Ecevit) உள்பட, துருக்கி அதிகாரிகள்
ஈராக்மீது ஒருதலைப் பட்சமான அமெரிக்கத் தாக்குதலுக்கு
தங்களின் எதிர்ப்பை திரும்பத்திரும்பக் கூறும் அதேவேளை, அவர்களது
உண்மையான இலக்கு அவர்களது ஒத்துழைப்பிற்காக நிதி ரீதியாகவும்
மற்றும் எதிர்பார்க்கும் பாக்தாத் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு
சம்பவத்தில் போருக்குப் பிந்தைய ஒழுங்கு முறைகள் ஆகிய இரண்டிலும்
சிறந்த சாத்தியமான விலையை வாஷிங்டனிலிருந்து கறந்தெடுப்பதாக
இருந்தது.
துருக்கி ஆட்சியானது வடக்கு ஈராக்கில் சுதந்திர
குர்திஷ் ஆட்சி தோன்றக்கூடாது என்பதில் பிரதானமாக கவலை
கொண்டுள்ளது. அது தென்கிழக்கு துருக்கியில் பெரிய அளவில் மற்றும்
கொடுமையாக ஒடுக்கப்படும் குர்திஷ் சிறுபான்மையினருக்கான
ஈர்க்கும் துருவமுனையாக மாறக்கூடும். வொல்போவிட்ஸ்
அவர் வருகை தந்த சிலமணிநேரங்களுக்குள் இந்த விஷயம் பற்றி
குறிப்பிட்டார். இஸ்தான்புல்லில் அவரது பேச்சில் அமெரிக்க
அரசாங்கம் எந்தவிதமான சுதந்திர குர்திஷ் அரசையும் எதிர்க்கிறது
என அறிவித்தார்.
ஒரு அறிக்கையின்படி, ஈராக்கிற்கு எதிரான
அமெரிக்கா தலைமையிலான போருக்குப் பிறகு, வட ஈராக்கிலுள்ள
இரு பிரதான எண்ணெய் உற்பத்தி மையங்களான, கிர்க்குக் மற்றும்
மொசுல் (Kirkuk, Mosul) ஆகியனவற்றைக்
குர்திஸ்தானியர்கள் கட்டுப்படுத்துவதற்கு விட்டுவிடக்கூடாது என
வாக்குறுதி அளிக்குமாறு துருக்கிய அதிகாரிகள் வொல்போவிட்ஸை
வலியுறுத்தினர். இந்த எண்ணெய் வயல்களை கட்டுப்படுத்துதல்
குர்திஷ் அரசுக்கு ஒரு சக்திமிக்க பொருளாதார அடிப்படையை
பிரதிநிதித்துவப்படுத்தும்- அல்லது போருக்கு ஆதரவு தருவதற்காக
அல்லது அதில் பங்கேற்பதற்காக துருக்கிக்கு வெகுமதியாக அளிக்கப்படும்
ஆதாயம்மிக்க ஒரு பரிசாக இருக்கும்.
அங்காராவில் இன்னும் அதிகமான கவலைகள்
கூட இருக்கின்றன. நியுயோர்க் டைம்ஸ் ஜூலை 18ல் வொல்போவிட்ஸ்
விஜயம் பற்றிய அறிவிப்பில் "துருக்கி, அமெரிக்கா 4 பில்லியன்
டாலர்களுக்கும் மேலான கடனை ரத்து செய்வதற்கு விரும்புகிறது,
ஆனால் அரசாங்க அதிகாரிகள் ஈராக்கின் ஜனாதிபதி சதாம்
ஹூசைனைக் கவிழ்க்கும் இராணுவ நடவடிக்கையின் அவர்களது
ஆதரவிற்கான விலையை அவர்கள் குறிப்பிடக்கூடாது என்று இன்று
கூறினர்" என குறிப்பிட்டது.
துருக்கி விஷயத்தைத் தவிர, இந்தப் பிராந்தியத்தில்
கால்வருடிகளாக செயல்படும் பல்வேறு ஷேக்குகள் மற்றும்
அரசர்களுடன் கலந்தாய்வு செய்யும் சிறு பாசாங்கைச் செய்து
வருகிறது. அண்மைய பெண்டகன் பத்திரம் பற்றிய அதன் விவரத்தில்
"அத்தகைய பாத்திரத்தை ஆற்றுவது பற்றிய மேலோட்டமாகக்
கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் சாத்தியமான தளங்களாக
பத்திரத்தில் ஒரு நாடுகூட இனங்காட்டப்படவில்லை..." என டைம்ஸ்
குறிப்பிட்டது.
டைம்ஸ் "திட்டமிடலின் ஆரம்ப இயல்பை
" இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் கூறியது. தேசிய
இறையாண்மை மற்றும் இப்பிராந்தியத்தின் மக்கள் உரிமைகள் பற்றி
புஷ் நிர்வாகத்தின் மதியாததன்மையை அது எடுத்துக்காட்டுகிறது
என்று சொல்வது இன்னும் துல்லியமாக இருக்கும்.
அமெரிக்க போர்த் திட்டங்கள் ஒரே ஒரு கூட்டாளியான
பாரசீக வளைகுடாவின் முன்னாள் பேரரசின் ஆட்சியாளரான பெரிய
பிரித்தானியாவுக்குதான் முகாமையான பாத்திரத்தை அளிக்கிறது.
பிரதமர் டோனிபிளேயர் இராணுவ சேமப்படையினரை (military
reserves) அழைப்பதற்காகவும் அப்பிராந்தியத்தில்
தேவைப்பட்டால் அனுப்பக்கூடிய அளவுக்கு பயிற்சிக்கால
நடவடிக்கைகளில் இருந்து கவசப்பாதுகாப்பு உடைய படைப்
பகுதியினரை திரும்பப் பெறவும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்
என ஜூலை 19ல் லண்டனில் பத்திரிகை செய்தி அறிக்கைகள் கூறின.
பிரிட்டீஷ் கப்பல்களும் போர் விமானங்களும் ஓமான், பஹ்ரைன் மற்றும்
துருக்கியிலிருந்து செயல்படும்.
ஆப்கானிஸ்தானில் வடக்குக் கூட்டணி என்ற மாதிரியில்,
இந்தத் தலையீட்டில் ஈராக்கியர் பங்கேற்பதாகப் பாசாங்கு
கூட இருக்க முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
ஏனென்றால் ஈராக்கிய முதலாளித்துவத்தின் போட்டி எதிர்ப்புப்
பிரிவினர் மக்கள் ஆதரவையோ அல்லது இராணுவப் படைகளின்
ஆதரவையோ கொண்டிருக்கவில்லை. துருக்கிக்கு அவரது விஜயத்திற்கு
முன்னர், பிரதான எதிர்ப்பினரின் குடை அமைப்பான, ஈராக்கிய தேசிய
சபையின் பிரதிநிதிகளை வொல்போவிட்ஸ் சந்தித்தார். அதில் "ஈராக்கில்
எதிர்த்தரப்பு அணியினரின் குழப்பமான நிலையை", "தெளிவற்ற
அறிக்கையை" என்று விவரிக்கப்படுவதைக் கேட்டார். (நியூயோர்க்
டைம்ஸ், ஜூலை5).
அண்மைய ஐ.நாடுகள் ஆயுத சோதனை அதிகாரிகள்
மறு நுழைவு மீதாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை
முறிவை அல்லது வடக்கு மற்றும் தென் ஈராக்கில் அமெரிக்கா
அறிவித்த "பறக்கத் தடை" மண்டலங்களில் தொடர்ந்து
கண்காணித்துவரும் அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் போர்விமானங்கள்
சம்பந்தப்படும் திட்டமிட்ட ஒத்திகை சம்பவத்தில் புஷ் நிர்வாகமானது
போருக்கான பொருத்தமான சாக்குப்போக்கை தேடிக்கொண்டிருக்கிறது.
நடந்து கொண்டிருக்கும் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் ஈராக்கிய
விமான எதிர்ப்பு சூட்டிற்குப் பதில் தாக்குதல் என்று கூறப்பட்டு
முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 2002-ன் முதலாவது ஐந்து
மாதங்களில் பிப்ரவரி 28 மற்றும் ஏப்பிரல் 19-ல் இரண்டு பெரியஅளவிலான
திடீர்த்தாக்குதல்கள் இடம் பெற்றன. ஜூன் நடுப்பகுதிக்குப் பின்னர்
இருந்து அங்கு ஆறுநாட்கள் குண்டுத்தாக்குதல்கள் நடந்து
இருக்கின்றன.
See Also :
போருக்கான அமெரிக்கா நாடும் சாக்குப்போக்காக ஈராக்கில் புதிய குண்டு வீச்சுத்
தாக்குதல்கள்
அமெரிக்கா ஈராக்கின் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது
புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கான
திட்டங்களை உறுதிப்படுத்துகின்றது
Top of page
|