World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Broad support for the World Socialist Web Site at Washington demonstration

வாஷிங்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்திற்கான பரந்த ஆதரவு

22 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க இராணுவ வாதம் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஏப்ரல் 20ல் வாஷிங்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், யுத்தத்திற்கும், அரச ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்திற்கு போராடுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி தலையீடு செய்திருந்தது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இலாப அமைப்புக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை கட்டுவதன் அடிப்படையில் நெறிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்திய ''யுத்தத்தை எதிர்ப்பதற்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளை பேணுவதற்குமான ஒரு சோசலிச மூலோபாயம்'' என தலையங்கம் இடப்பட்ட ஒரு அறிக்கையின் 10 ஆயிரக்கணக்கான பிரதிகள் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களாலும் உலக சோசலிச வலைத்தளத்தின் ஆதரவாளர்களாலும் வினியோகிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் எழுதப்பட்டிருந்ததாவது, ''இராணுவ வாதமும், ஒடுக்குமுறையும் சமூக செல்வத்தை உற்பத்தி செய்பவர்களான பெரும்பான்மை மக்கள் உற்பத்திச் சாதனங்களை கட்டுப்படுத்துபவர்களாகிய சில சலுகை படைத்த சிறுபான்மையினரால் சமூக தேவையை தமது சொந்த இலாபங்களுக்கு கீழ்படிய வைப்பவர்களாலும் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவாகும். உலகெங்கும் இலாப அமைப்பு பண்புமயமாக்கியிருக்கும் தொழிலாளர் மற்றும் முதலாளித்துவத்திற்கு இடையில் விரிந்துபோயிருக்கும் பொருளாதார வெற்றிடம், அரச ஒடுக்குமுறை மற்றும் இராணுவ பலாத்காரத்திற்கும் இடையில் ஒரு உயிர்ப்பு நிறைந்த தொடர்பு இருக்கிறது.''

ஆரம்பத்திலேயே ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டம் சோ.ச.க/உலக சோசலிச வலைத் தள மேசையைச் சுற்றி குவிந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கட்சியின் முன்னோக்கினை கலந்துரையாடியதுடன், நூற்றுக்கணக்கான டாலரில் புத்தகங்களை வாங்கியதுடன், உலக சோசலிச வலைத்தளத்திற்கு உற்சாகமாக பங்களிப்பு செய்தார்கள். அதில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பாகங்களில் இருந்து வந்திருந்ததுடன், உலக சோசலிச வலைத்தளத்தின் அன்றாட வாசகர்கள் என தம்மை அழைத்துக்கொண்டதுடன், வலைத்தளமானது தமது சொந்த அரசியல் அபிவிருத்திக்கு கல்வியறிவூட்டும் பாத்திரத்தை வகிப்பதாக மதிப்பளித்தனர்.

Philadelphia வில் அமைந்திருக்கும் பெனிஸ்சில்வானியா பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரான அகிலானோ உலக சோசலிச வலைத் தளத்தினை இரண்டு வருடங்களாக படித்துவருகிறார். ''சர்வதேச மற்றும் உள்நாட்டு செய்திகள் பற்றி மிகப் புறநிலையான நிலைப்பாட்டை நீங்கள் எடுப்தற்காக மட்டுமல்ல மாறாக சர்வதேச நிலைப்பாட்டில் இருந்து நீங்கள் எடுக்கும் உங்கள் நிலைப்பாட்டிற்காகவே உண்மையில் வலைத்தளத்தை எனக்கு பிடித்திருக்கிறது'' என அவர் கூறினார். விலைபோகாத ஒரேயொரு அரசியல் போக்கு நீங்கள் மட்டும்தான். உங்களது வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது, அத்துடன் அவர்களது உடனடி சுயநலன்களின் அடிப்படையில் தொழிலாளர்களிடம் நீங்கள் அழைப்புவிடவில்லை.''

Ron என்பவரும் Philadelphia இல் இருந்து வந்திருந்தார், அவர் உலக சோசலிச வலைத் தளத்தினை எட்டு மாதங்களுக்கு முன்னர் படிக்கத் தொடங்கியிருந்தார். ''எனக்கு மிக உடன்பாடான ஒரு அரசியல் வடிவத்தினை வலைத்தளம் கொண்டிருப்பதால் தான் நான் அதைப் படித்துவருகிறேன். ஒரு சர்வதேச நோக்கில் இருந்து செய்திகள் எழுதப்பட்டு வருகின்றன. வித்தியாசமான மூலங்களில் இருந்த புள்ளிவிபரங்களின் மிக விளங்கக்கூடிய தொகுப்பாக இருப்பதுடன், கூறப்படும் விவாதங்களிற்கு குறிப்பிடப்படும் காரணிகள் பக்கபலமாக இருக்கின்றன. நான் மாற்றீட்டு செய்தி ஊடகங்களினை தேடிவந்தேன் ஆனால் அப்படியான ஒன்றைக் கண்டுகொள்வது கடினமானதாகவே இருக்கிறது. அப்படித் தேடியபோது நான் கண்டுகொண்ட ஒரே வலைத் தளம் உங்களுடையதாக இருக்கிறது.'' என அவர் கூறினார்.

Deborah என்பவர் Connecticut என்னுமிடத்தில் இருந்து வந்திருந்தார். உலக சோசலிச வலைத் தள மேசையினை பார்த்த பின்னர் அவர் 20 டாலரை நன்கொடையாக அளித்தார். ''உங்களது வலைத்தளத்தை வாசிப்பது ஒரு மாபெரும் விடயமாக இருக்கிறது, ஏனெனில் அது, புஷ் நிர்வாகம் செய்துகொண்டிருப்பதையிட்டு வெறுப்படைந்திருந்தது நான் மட்டுமில்லை என்பதை விளங்கிக்கொள்ள எனக்கு உதவி செய்தது. எனக் கூறினார். அவர் மேலும் கூறியபோது, உலக சோசலிச வலைத்தளத்தின் கட்டுரைகளை ஏனையவர்களுக்கும் படிப்பதற்காக அடிக்கடி அனுப்பிவைப்பதாகவும் குறிப்பிட்டார்.

எங்களை அணுகியவர்களில் பலர் தம்மை வலைத் தளத்தின் வாசகர்களாக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுன், அதனது அரசியல் உள்ளடக்கத்தை புகழ்ந்தனர். ''உங்களிடம் ஒரு அற்புதமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புவதுடன், உங்கள் இந்த மாபெரும் வேலையை என்றும் தொடரவேண்டும்'' என ஒரு மாணவர் கூறினார். இன்னொரு ஆர்ப்பாட்டக்காரரான ஒரு வலைத்தள வடிவமைப்பாளர், தான் ஒரு வருடமாக எமது வலைத்தளத்தை படித்துவருவதாக குறிப்பிட்டார். ''நான் என்றுமே பார்த்திருக்காத ஒரு சிறந்த ஊடகமாக அது இருக்கிறது'' எனக் கூறியதுடன், இனிவருங்காலத்தில் வலைத்தளத்தின் வடிவத்தில் ஏதாவது புதிய மாற்றங்கள் செய்யவேண்டுமானால் தான் உதவி புரிவதாக கூறிச் சென்றார்.

See Also :

யுத்தத்தை எதிர்ப்பதற்கும் ஜனநாயக உரிமைகளை பேணுவதற்குமான ஒரு சோசலிச மூலோபாயம்