Israeli devastation of West Bank paves way for mass expulsions
மேற்குக்கரையில் இஸ்ரேலின் அழிப்பானது பாரிய மக்கள் வெளியேற்றத்திற்கு
வழியமைக்கின்றது
By Patrick Martin
12 April 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
இஸ்ரேலின் இராணுவ தாக்குதலானது பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை பிரதேசத்தில் அண்ணளவாக
ஆயிரம்பேரின் கொலைக்கும், ஆயிரக்கணக்கானோரின் காயமடைதலுக்கும் அல்லது கைது செய்யப்படுதலுக்கும், முழுமக்கள்
தொகையான 3.2 இலட்சம் மக்களினது முற்றுகைக்கும் காரணமாகியுள்ளது. பிரதமர் ஆரியல் ஷரோனும், அவரது
லிகுட் கட்சியினரும், கூட்டு கட்சியான தொழிற் கட்சியினரும், இஸ்ரேலிய பாதுகாப்புபடையின் கட்டளையிடும் தலைமையகமும்
தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவினது யுத்தத்திற்கு பின்னர் காணமுடியாத அளவிலான காட்டுமிராண்டித்தனத்திற்கு காரணமாவர்.
கடந்த புதன்கிழமை ஜெனின் அகதிமுகாமிற்கு வெளியே எஞ்சியுள்ள பாலஸ்தீனிய போராளிகளின்
சரணடைதலின் பின்னர் மேற்குகரையில் பரந்தளவிலான இராணுவ மோதல்கள் முடிவிற்கு வந்துள்ளது. பாரிய கடினங்களுக்கு
மத்தியிலும் ஜெனினில் இருந்த எதிர்ப்பானது தீர்க்கரமானதாவும், வீரமிக்கதாகவும் இருந்்ததுடன், இஸ்ரேலிய பத்திரிகைகள்
கூட அம்மோதல்களை பாலஸ்தீனிய மஸாடா என குறிப்பிட்டிருந்தன.
பாலஸ்தீனிய சினைப்பர்களால் உருவாக்கப்பட்டிருந்து பொறியில் அகப்பட்டு 13 இராணுவத்தினரை
இழந்த பின்னர், இஸ்ரேலிய படைகள் ஜெனினில் செய்ததைவிட மோசமான குற்றம்மிக்க கொலைகளை இஸ்ரேலிய இராணுவம்
செய்திருந்தது. இதில் நிமிடத்திற்கு 3000, 20மில்லிமீட்டர் அளவிலான குண்டுகளை சுடக்கூடிய விமான எதிர்ப்பு ஆயுதங்களை
பாவித்து பாலஸ்தீனிய போராளிகள் ஒழிந்திருக்கக்கூடிய வீடுகளை அழித்தனர். இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்றினால்
பேட்டி காணப்பட்ட இஸ்ரேலிய உதவிப்படை வீரர் ஒருவர், ''இது வியட்னாம் போலிருந்தது எனவும், அங்கு இப்போது
ஒன்றும் இல்லை'' எனவும் தெரிவித்தார். பாலஸ்தீனிய பேச்சாளர் ஒருவர் ஜெனினின் நிகழ்வுகளை ஒரு படுகொலை
எனவும், அதில் 500 இற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உயிரிழந்ததாக குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய தாங்கிகளும், கனரக வாகனங்களும், துப்பாக்கி தாங்கிய வானூர்திகளும், யுத்த
விமானங்களும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ந்தும் உலாவிவருவதுடன், சிறிய குழு போராளிகளை தாக்கிவருவதுடன்,
கட்டிடங்களையும், தொழிற்சாலைகளையும், பாவனை நிலையல்களையும் தனியார் வீடுகளையும் அழித்துவருகின்றன. இஸ்ரேலிய
சார்பான அமெரிக்க பத்திரிகைகள் கூட இவ் அழிவுகளின் அளவை கருத்தில் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.
New York Times பத்திரிகையானது
'''அழிவுகள் மறக்க முடியாதுள்ளது. சீமெந்து, இரும்பு குவியல்கள் நபுலஸ் இன் புராதன நகரமான கஸ்பாக்கிலும்,
றமல்லாவில் உள்ள அமைச்சகங்களினது அழிக்கப்பட்ட கணனிகளின் குப்பைகளாக குவிந்துள்ளதாகவும், துல்கிராமில்
தாண்டிச்செல்லும் தாங்கிகளால் அழிக்கப்பட்ட கடைகளின் முகப்புக்கள் வரிசையாக கிடப்பதுடன், உடைந்த நீர்க்குழாய்கள்
தண்ணீரை இறைப்பதுடன், மட்டமாக்கப்பட்ட கார்களும், நொருக்கப்பட்ட கண்ணாடி வயல்களும், குப்பைகளும், மின்சாரத்தூண்கள்
துண்டுகளாக உடைந்து கிடக்கின்றதுடன், வீடுகள் வழமையாக இருக்கும் இடங்களில் சரிந்த சுவர்களும், அலுவலக கட்டிடங்களை
குண்டுகள் துளைத்ததால் பாரிய பிளவுகளும் காணப்படுகின்றன'' என குறிப்பிட்டது.
மேற்குக்கரைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்குமாறு மார்ச் 29ம் திகதி ஷரோன் இஸ்ரேலியப்படைகளுக்கு
கட்டளையிட்டபோது, அதன் நோக்கம் ''பயங்கரவாதத்தை வேரோடு அறுப்பதே'' என குறிப்பிட்டிருந்தார். ஆனால்
நடைமுறையில் ''வாழ்க்கையின் அடிக்கட்டுமானமும், எவ்விதமான எதிர்கால பாலஸ்தீன அரசுக்கான அடித்தளமான
வீதிகள், பாடசாலைகள், மின்சார பாதைகள், தண்ணீர் குழாய்கள், தொலைபேசி கம்பிகள் போன்றவை அழிக்கப்பட்டுள்ளன
என கவனமாக குறிப்பிடலாம்'' என New York
Times ஏற்றுக்கொண்டிருந்தது.
இஸ்ரேலிய படையினர் கல்வி அமைச்சினையும், திட்டமிடல் அலுவலகத்தையும், உள்ளூர்
தொலைக்காட்சி நிலையத்தையும், வானொலி நிலையத்தையும், பாலஸ்தீனிய தகவல், கலாச்சார அலுவலகங்களையும்
இடித்துள்ளனர்.
பாரிய கைதுகளும் தடுத்துவைத்தலும்
கடந்த இரண்டு வாரத்தில் நடாத்திய தாக்குதல்களில் ஷரோனின் அரசாங்கம்
15வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட கிட்டத்தட்ட அனைவரையும், அதாவது 4185 பாலஸ்தீனியர்களை தடுத்துவைத்துள்ளது.
இவ் எண்ணிக்கை அதன் அளவில் மட்டுமல்லாது சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் மயக்கமுறவைக்கின்றது. இது 5இலட்சம்
அமெரிக்கர்கள் தடுக்கப்பட்டு, உடை கழையப்பட்டு, அடித்துநொருக்கப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் உள்ளதற்கு சமமானதாகும்.
இந்த 4185 பாலஸ்தீனியர்களில் 121பேர் மட்டுமே தாக்குதலுக்கு முன்னர் இஸ்ரேலால்
தேடப்பட்டவர்களாகும். இது இஸ்ரேலின் உறுதியற்ற வரைவிலக்கணத்தின்படி கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள்
''பயங்கரவாதிகள்'' அல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அவர்களின் இவ்வாறான வரைவிலக்கணம் அரசியலில் ஈடுபட்டுள்ள
ஒவ்வொரு பாலஸ்தீனியர்களையும் பயங்கரவாதியாக்குகின்றது. தமது நகரங்களும் கிராமங்களும் இஸ்ரேல் டாங்கிகளால்
ஆக்கிரமிக்கப்பட்ட பின்னரே பல பாலஸ்தீனியர்கள் ஆயுதம் தூக்கினர். பலர் ஆயுதம் தூக்கவேயில்லை. இவர்கள்
ஆசிரியர்களாகவும், நிர்வாகிகளாகவும், வழக்கறிஞ்ஞர்களாகவும், தொழில்நுட்பவியலாளர்களாகவும், வைத்தியர்களாகவும்,
பாடசாலை மாணவர்களாகவும் இருந்ததாலும், எதிர்கால பாலஸ்தீனய அரசாங்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம்
என்பதாலேயே கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேலிய படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட 24மணித்தியால ஊரடங்கு சட்டம்மூலம்
வெளியில் வரும் அனைவரையும் சுடுமாறு இட்ட உத்தரவால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வீடுகளில் அடைக்கப்பட்டிருப்பதால்,
இவ் இராணுவ தடையானது ஒரு பாரிய அழிவுக்குரியதாக மாறியுள்ளதாக சர்வதேச உதவி அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மின்சாரம், மருந்து வசதிகள், மருத்துவ பராமரிப்பு
இல்லாமல் உள்ளன.
செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளரான
Jessica Barry '' மருத்தவ நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கின்றது என்பதை என்னால் இதற்கு
மேலாக கூறமுடியாது எனவும், நோயாளியான மக்கள், சத்திர சிகிச்சை தேவையானவர்கள், மகப்பேறை எதிர்பார்த்துள்ளவர்கள்
வைத்தியசாலைக்கு செல்லவேண்டியுள்ளது. இது ஒரு உண்மையான மனிதாபிமானமான நெருக்கடி'' எனவும் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய படையினரால் செய்யப்பட்ட விஷேடமான கொடுமைகள் குறித்த அறிக்கைகள்
வெளிவந்துள்ளன. ஷரோனின் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட இவர்கள் பாலஸ்தீனயர்கள் அனைவரையும் எதிரிகளாக
கருதுகின்றனர். இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பான B'Tselem
என்னும் குழு இஸ்ரேலிய படையினர் ஏப்பிரல் 8ம் திகதி நாபுலஸ் இல் உள்ள அவசர சிகிச்சை நிலையத்தில்
உள்ள நோயாளிகளை கைப்பற்றி, துப்பாக்கிகளை அவர்களது தோளில் வைத்து மனிதக்கேடையங்களாக படையினருக்கு
முன்னால் நடக்குமாறு நிர்ப்பந்தித்தனர். ஜெனின் நகரத்தில் மக்கள் வீட்டின் உள்ளே இருக்கும்போதே அவர்களது வீடுகளை
புல்டோசர்களால் இடித்தனர் எனவும் அக்குழு தெரிவித்தது.
விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீனிய கைதிகள் தாம் குண்டுகளை கட்டிவைத்திருக்கவில்லை
என காட்டுவதற்காக உடைகள் அனைத்தும் கழையப்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் படைவீரர்களுக்கு முன்னர் வீடுகளினுள்
புகுமாறும் நெருப்பு எடுப்பதற்கும், பொறிகளை அகற்றுவதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டதாக குறிப்பிட்டனர். பாலஸ்தீனிய
கைதிகளை 18நாட்களுக்கு சந்திக்க முடியாது என இராணுவம் வழக்கறிஞ்ஞர்களுக்கு தடையுத்தரவு இட்டுள்ளது. இவ்
உத்தரவு நாட்டின் உயர் நீதிமன்றத்தால் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. இக்குற்றங்கள் அனைத்தும் ஜெனோவா உடன்படிக்கைகளை
மீறுவதுடன், இஸ்ரேலிய சிவில், இராணுவ தலைவர்களையும் யுத்த குற்றவாளிகள் என குற்றம் சாட்டகூடியவை.
இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குகரையின் கூடுதலான பகுதிகளுக்கு நிருபர்கள் செல்வதை
தடுத்துள்ளதற்கும், இஸ்ரேலிய படையினர் அங்குள்ள நிலைமைகளை அறிவிக்க விரும்பிய நிருபர்களை சுட்டும், கண்ணீர்ப்புகை
அடித்தும், அடித்ததற்கும் முக்கிய காரணங்கள் உள்ளது. ஏனெனில் அவர்களது பாரிய குற்றச்செயல்கள் தொடர்பாக
குற்றத்தன்மையை ஒழித்துவைத்திருப்பதற்காகும்.
கொலின் பெளலின் தலையீடு
ரோம் நகரம் தீப்பிடித்து எரியும்போது நீரோ மன்னர் பிடில் வாத்தியம் வாசித்ததாக
கூறப்படுவதுண்டு. கொலின் பெளலினது மத்திய கிழக்கின் மெதுவான பயணமும் இத்தன்மை உடையது. இஸ்ரேலிய படையினர்
ஜெனின், நாபுலுஸ், பெத்தலேம் மற்றும் ஏனைய பாலஸ்தீனய நகரங்களுக்கும் நெருப்புவைக்கையில் அவர்
மொரோக்கோவில் இருந்து எகிப்திற்கு சென்று, பின்னர் ஸ்பெயினுக்கு சென்று, பின்னர் ஜோர்தானுக்கு சென்றார்.
புஷ் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சரை அப்பிரதேசத்திற்கு அனுப்புவதாக அறிவித்த ஒரு வாரத்தின் பின்னர், மத்திய
கிழக்கு நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக இறுதியில் கடந்த வியாழக்கிழமை கொலின் பெளல் இஸ்ரேலுக்கு
வந்தார்.
புஷ் இனது ரோஸ் தோட்டத்தின் உரையானது இஸ்ரேல்- பாலஸ்தீனிய நெருக்கடி தொடர்பான
அமெரிக்காவின் கொள்கையில் எவ்விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்நிகழ்வுகள் உறுதிப்படுத்துவதுடன்,
அது மேற்குகரையின் கொடுமைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை தொடர்பதற்கு ஒரு முகமூடி இடுவதாகும். புஷ் நிர்வாகம்
இப்பிரதேசத்தில் பாலஸ்தீனிய மக்களை பாதுகாப்பதற்கு ஒரு விரலைத்தானும் உயர்த்தாத, முக்கியமாக சவுதி அரேபியா,
எகிப்து, ஜோர்தான் போன்ற பிற்போக்கான அரபு அரசாங்கங்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவாகும்.
பெளலின் விஜயமானது பாலஸ்தீனிய மக்களுக்கு எவ்வித உதவியையும் செய்யப்போவதில்லை.
மாறாக இது ஷரோனின் அரசாங்கம் மேற்குகரையில் உருவாக்கவிரும்பும் ''புதிய யதார்த்தத்திற்கு'' அமெரிக்காவின்
ஆதரவை வழங்குவதற்காகும். அவர் இஸ்ரேலுக்கு வரும்போது, இஸ்ரேலிய படைகளின் பின்வாங்கல் தொடர்பான அமெரிக்காவின்
உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடத்தக்க மிருதுவான தன்மை காணக்கூடியதாக இருந்தது. இராணுவ நடவடிக்கைகள்
ஒருசில வாரங்கள் நீடிக்கும் என்ற ஷரோனின் அறிவித்தல் தொடர்பாக பெளல் ஒருவித விமர்சனத்தையும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலிய தாங்கிகளால் சூழப்பட்டிருக்கும் றமலாவில் உள்ள பாலஸ்தீனிய அதிகாரத்துவத்தின்
தலைமையகத்தில் உள்ள இரண்டு அறைகளில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் யாசிர் அரபாத்தை பெளல் சந்திக்கவேண்டுமா
இல்லையா என்பது குறித்து அமெரிக்க தொலைத்தொடர்பு சாதனங்களின் விவாதத்தில் ஒரு சிடுமூஞ்சித்தனனமான இரட்டை
நிலைப்பாடு காட்டப்பட்டது. ஒரு பகுதியினர் பெளலின் விஷயத்திற்கு உரித்துடையவராக இருப்பதற்கு அரபாத் இஸ்ரேலில்
நடைபெறும் தற்கொலைத்தாக்குதலை மறுதலிக்கவேண்டும் எனவும், எதிர்த்தரப்பினர் அரபாத்தின் இப்படியான அறிக்கைகளை
நம்பமுடியாது எனவும், பெளல் அரபாத்தை தவிர்க்கவேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
ஆனால் எந்தவொரு தொலைத்தொடர்பு வித்தகர்களும் 1982 இல் லெபனானிலும்,
2002 இல் மேற்குகரையிலும் பாரிய யுத்தக்குற்றங்களுக்கு காரணமான ஆரியல் ஷரோனை பெளல் சந்திக்கவேண்டுமா
என கேள்வி கேட்கவில்லை. பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் நீண்டகால தலைவரும், பாலஸ்தீனிய அதிகாரத்துவத்தின்
தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அரபாத்துடன் உரையாடாமல் மத்திய கிழக்கில் சமாதானம் குறித்தோ அல்லது ஆகக்குறைந்தது
ஒரு பேச்சுவார்த்தையோ எவ்வாறு சாத்தியமாகும் என்பது தொடர்பாக ஒருவரும் விவாதிக்கவில்லை.
வெளிநாட்டு அமைச்சரான பெளல் தற்போதைய யுத்தம் எவ்வளவிற்கு தீவிரமாக நடந்தாலும்,
இரு பிரிவினருக்கும் இடையில் உடனடியாக இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார். ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில்
''இஸ்ரேலிய தாக்குதல் எவ்வளவுகாலம் நீடிக்கும், உடனடியாக அவர்கள் சகல இடங்களிலும் இருந்து பின்வாங்குவார்களா,
அவர்கள் தற்போது நீண்டகாலமாக இருக்கும் சகல பிரதேசங்களில் இருந்தும் பின்வாங்குவார்களா, பிரச்சனை அங்குள்ளது,
சமாதானத்தை நோக்கி இட்டுச்செல்லக்கூடிய சமாதான போக்கிற்கு அவர்கள் கொண்டுவரப்படவேண்டும்'' என தெரிவித்தார்.
இது மேற்குகரையில் ஷரோனின் ஆக்கிரமிப்பின் முக்கிய அரசியல் தர்க்கத்தை
மறைக்கின்றது. பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டுவரவேண்டும் என்ற அவரின் நோக்கமானது, அதாவது இஸ்ரேலால்
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீனிய மக்களை இல்லாதொழிப்பதாகும். இது 1948 இற்கு முன்னரான பாலஸ்தீனிய
அரசின் பிரதேசத்தை இரு அரசாங்கங்களுக்குள் பிரித்துக்கொள்வது தொடர்பான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதல்ல,
மாறாக ஏற்கெனவே இடம்பெயர்ந்துள்ள மக்களை புதிய இடப்பெயர்விற்கான நிலைமையை உருவாக்குவதாகும்.
சியோனிசத்தின் தர்க்கவியல்
மேற்குகரையில் தற்போதைய நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் இஸ்ரேலியப்படைகள்
பின்வாங்கப்படுவர் என கூறப்படுவதை நம்பமுடியாது. கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ஷரோன்
நிகழ்த்திய ஒரு மோசமான, இராணுவ உரையில் ''இஸ்ரேலிய சமூகத்தினுள் எவ்விதமான ஊடுருவலையும் தடுப்பதற்காக,
எமது பிரதேசத்திற்கும் பாலஸ்தீனிய பிரதேசத்திற்கும் இடையில் ஒரு தடைப்பிரதேசத்தில் எமது படைகள் தொடர்ந்தும்
ஈடுபடுத்தப்பட்டிருப்பர் '' என தெரிவித்தார்.
இப்படியான ஒரு தடைப்பிரதேசம் உருவாக்கப்படுவது தொடர்பாக இஸ்ரேலில் கடந்த
மாதங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது இஸ்ரேலுக்கு சாதகமாக இஸ்ரேலுக்கு அண்மையில் வாழும் அல்லது
மேற்குகரையை அண்மித்த குடியிருப்புக்களில் வாழும் பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றுவதையும், இக்குடியிருப்புக்களை
சுற்றி பாரிய ''அரபுக்கள் அற்ற'' ஒரு பிரதேசத்தை உருவாக்குவதாகும்.
தடைப்பிரதேசம் உருவாக்குவது தொடர்பான கருத்தானது இஸ்ரேலிய படையினரை தொடர்ச்சியாக
மேற்குகரையில் வைத்திருப்பதற்காவும், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான மோசமான நடவடிக்கைகளை கூடுதலாக எடுப்பதற்கும்
என நம்புவதற்கு உண்மையான காரணங்கள் உள்ளன. (இஸ்ரேலிய பாதுகாப்பு படையால் மேற்குகரைக்கும் இஸ்ரேலுக்கும்
இடையில் உள்ள 200மைல் எல்லைப்பிரதேசத்தை கண்காணிக்கமுடியாது எனவும், சுற்றிவளைக்கப்பட்ட இத்தடைப்பிரதேசம்
10தடைவைகள் கூடுதலாக இருக்கும் என ஒரு இஸ்ரேலிய விமர்சகர் தெரிவித்துள்ளார்).
அமெரிக்காவினது உத்தியோகபூர்வமானதும், தொலைத்தொடர்பு சாதனங்களினதும்
விமர்சனங்கள் மேற்குகரையில் அவரது தாக்குதல்கள் கண்மூடித்தனமாக இராணுவத்தில் தங்கியிருப்பது எனவும், நீண்டகால
நோக்கற்ற கொள்கையற்றதன் விளைவாகும் என மட்டுப்படுத்தியளவில் குறிப்பிடுகின்றனர். ஆனால் இவ் இராணுவத்தாக்குதலின்
பின்னணியில் இராஜதந்திர காரணங்களுக்காக வெளிப்படையாக கூறமுடியாத ஒரு அரசியல் மூலோபாயம் உள்ளது.
ஷரோனின் அரசாங்கத்தினது நடவடிக்கைகளினது தர்க்கவியலான, மேற்குகரையில் யாசிர்
அரபாத்தை மட்டுமல்லாது இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான நிலைமையை உருவாக்குவதாகும்.
சியோனிச பயங்கரவாதியான மெனாசெம் பெகின் (Menachem
Begin) ஆல் முதல்முதலில் வெளிப்படையாக கூறப்பட்ட பாரிய இஸ்ரேலை உருவாக்குவதற்கான புராதன
யூத தாயகத்தின் ஒரு பகுதியான யுடேயா, ஸமரியா (Judaea,
Samaria) இன் பகுதிதான் மேற்குகரை என்ற கருத்தை லிகுட் கட்சியினர் ஒருபோதும் நிராகரிக்கவில்லை.
ஆனால் ஷரோனும், லிகுட் கட்சியினுள் அவரது முக்கிய எதிராளியுமான பென்ஜமின்
நெட்டன்யாகும் இஸ்ரேல் நாட்டை பாதுகாக்ககூடிய ஒரேயொரு எல்லை யோர்தான் ஆறு என்ற கருத்திற்கு
கீழ்ப்பணிந்துள்ளனர். இது 320,000 பாலஸ்தீனியர்களை விட கூடுதலாக உள்ள 400,000 இஸ்ரேலிய குடியிருப்பாளர்களை
கொண்டுள்ள மேற்குகரையின் ''நிலம் தொடர்பான விடயங்களை'' மாற்றுவதில் அவசியமாக தங்கியுள்ளது.
ஷரோனின் பாராளுமன்ற உரையானது பாலஸ்தீனிய மக்கள் அனைவரையும் இலக்காக
கொண்டது. அவர் ''பைத்தியகாரத்தனமான கொலை எமது பாலஸ்தீனிய அயலவர்களை வைத்திருப்பதற்கான பிடியை
இல்லாதொழித்துள்ளது'' என குறிப்பிட்டார். அவர் இதை குறிப்பிடும்போது கடந்த 18மாதங்களில் நிகழ்ந்த மரணம்
இஸ்ரேலியர்களிடையே 400 ஆகவும், பாலஸ்தீனியர்கள் இடையே கிட்டத்தட்ட 2000ஆகவும் இருந்தது.
அவர் மேலும் ''ஆட்சி செலுத்துவது என்பது கொல்லுவதற்கான அனுமதிப்பத்திரமல்ல,
மாறாக கொலைசெய்யப்படுவதை தடுப்பதற்கான பொறுப்பாகும் என அவர்கள் எமக்கு வாக்குறுதியளித்ததை பாலஸ்தீனியர்கள்
விளங்கிக்கொள்வார்கள் என நம்புகின்றோம்'' என கூறினார். இப்போது இஸ்ரேலிய படைகளுக்கு மேற்குகரையில்
அதேமுறையில் ஒரு ''கொல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை'' ஷரோன் வழங்கியுள்ளார்.
ஷரோனினது நடவடிக்கைகள் அவரது கொள்கைகளினது உண்மை இலக்கு என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
அவரது ஒருவருட பதவிக்காலத்தில் மேற்குகரையில் 30 புதிய யூத குடியேற்றங்களை ஒருவாக்குவதற்கான வேலைகளுக்காக
அனுமதியளித்தார். மேற்கு கரையின் மொத்த சனத்தொகையின் 1/8
பகுதியான 400,000 பாலஸ்தீனியர்களின் வீடுகளும், வாழ்க்கைக்கான பிழைப்பு வழிகளும் முன்வைக்கப்பட்டுள்ள இத்தடைப்பிரதேசத்தால்
அபாயத்திற்குள்ளாகியுள்ளன.
இக்கொள்கையின் உள்ளடக்கமானது ஷரோனின் நடமாடும் பிரதிநிதியான
நெட்டான்யாகுவால் வாஷிங்டனில் அமெரிக்க செனற் கூட்டத்தில் நடாத்தப்பட்ட உரையில் தெரிவிக்கப்பட்டது. பெளல்
மத்திய கிழக்கிற்கு செல்கையில், நெட்டான்யாகு அதனை ''இது எதனையும் கொண்டுவரப்போவதில்லை'' என நிராகரித்தார்.
அவர் மேற்குகரையில் இருந்து அரபாத்தை வெளியேற்றவும், பாலஸ்தீனிய அதிகாரத்துவத்தை இல்லாதொழிக்கவும் அழைப்புவிட்டார்.
அவரது பார்வையாளர்களாக இருந்த குடியரசு, ஜனநாயக கட்சியின் அங்கத்தவர்கள் அதற்கு பலத்த வரவேற்கு
வழங்கினர்.
நெட்டான்யாகு தனது உரையை பின்வருமாறு முடித்தார். ''பயங்கரவாதத்தின்
எந்தவொரு வலைப்பின்னலும் இருக்கவிடப்படமுடியாது. அது முற்றாக இல்லாதொழிக்கப்படாவிட்டால் கொடிய
புற்றுநோயைப்போல் திரும்ப ஒழுங்கமைக்கப்பட்டு, மிகவும் மூர்க்கமாக தாக்கும். முழுவலைப் பின்னலையும்
இல்லாதொழிப்பதுதான் வெற்றியை உறுதிப்படுத்தும்''.
ஒருவர் ''பயங்கரவாத வலைப்பின்னல்'' என்பதை ''பாலஸ்தீனிய மக்கள்''
என்பதால் பிரதியீடு செய்தால், ஷரோனினதும் நெட்டான்யாகுவினதும் உண்மையான திட்டம் வெளியாகும்.
See Also :
புஷ்ஷின் ''சமாதான முன்னெடுப்பு''
அரபு மக்களுக்கு எதிரான பரந்த யுத்தத்திற்கு அடித்தளமிடுகின்றது
இனப் படுகொலையின் நிகழ்ச்சிப்
பட்டியல்: ஷரோனும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்கள் மேல் எப்படித் தாக்குதலைத் தயார் செய்தனர்
|