World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Thousands march in Australia against Israel's aggression

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

By James Conachy
8 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

காசா மற்றும் மேற்கு கரையிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தினை வாபஸ் வாங்கும்படி கோரி 10,000 தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சனிக்கிழமை அன்று சிட்னியில் இருக்கும் இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும் ஒரு உற்சாக வெளிப்பாட்டிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். பெருந்தொகையான கொடிகள், பதாகைகளைத் தாங்கியபடி ''பாலஸ்தீனத்தை விடுதலை செய்'' என்ற இடிமுழக்கம் வாய்ந்த அழைப்புடன் நகரத்தின் தெருக்கள் ஆர்ப்பாட்டத்தால் நிரம்பி வழிந்தது. டசின் கணக்கான பெண்மணிகளும், இளம் பெண்களும் பாலஸ்தீனக் கொடியை தலையில் கட்டியிருந்தனர். ''இஸ்ரேல், அமெரிக்கா இன்று எத்தனை குழந்தைகளை நீங்கள் கொன்றுள்ளீர்கள்'' என ஒரு இளைஞர் குழு பாடலைப் பாடியது. ''பாலஸ்தீனத்தில் மனித அழிப்பை நிறுத்து'', ''ஷரோன்! ஒரு கசாப்புக் கடைக்காரன்'', ''அப்பாவி மக்களை கொன்றதற்காக தேடப்படுகிறார்--ஷரோன்'', '' அவர்கள் அனைவரையும் கொல்வதுதான்--ஷரோனின் இறுதித் தீர்மானம்'', புஷ் மற்றும் ஷரோன்= ஹிட்லர்'' மற்றும் ''பாலஸ்த்தீனத்தில் எங்கே போனது மனித உரிமைகள்?'' என பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன.

முக்கியமாக சிட்னியில் இருக்கும் பரந்த அரபு சமூகத்தினைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினரே அங்கு பெரும்பான்மையாக பங்கெடுத்திருந்தார்கள். இஸ்ரேலிய அரசாங்கத்தின் யுத்தக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் வேறு நகரங்களில் இருந்தும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர். பாலஸ்தீன மக்களுடன் தமது ஐக்கியத்தினை வெளிப்படுத்துவதன் பாகமாக முக்கியத்தும் வாய்ந்த வகையில் அதில் கலந்துகொண்ட சிறு எண்ணிக்கையிலான யூதமக்கள் ஷியோனிச அழுத்தம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத தட்டுக்களின் யூத எதிர்ப்பு வாதத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நாளில் ஏனைய இரு மாநிலங்களின் தலை நகரங்களான Perth மற்றும் Brisbane இல் 500 மற்றும் 1000 இற்கு இடையிலான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டமானது சிட்னி மாநகர சபையில் தொடங்கி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகம் அமைந்திருக்கும் மார்ட்டின் பிளேஸ் (Martin Place) வரை சென்றது. ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியவர்கள்-- ''பாலஸ்தீனத்திற்கான அவுஸ்திரேலிய ஐக்கிய குழு'' என்பதன் கீழ் ஐக்கியப்பட்ட பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்புகள்-- ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இருந்து இஸ்ரேலினை பின்வாங்கும் படி கேட்பதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் John Howard இக்கு அழைப்பு விடுவதற்கு இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொண்டார்கள். முழு இஸ்ரேலிய ஆக்கிமிப்பிலும் இஸ்ரேலிய பிரதமர் ஆரியல் ஷரோனின் கொடூர நடவடிக்கைகளுக்கான ஒரு வெளிப்படையான ஆதரவாளராக Howard இருந்து வந்துள்ளார். ''அவர் பயங்கரவாதிகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு இன்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரைக் கேட்டுக்கொண்டுள்ளதுடன் அவரிடம் பரிந்துரைக்கிறார்கள் என்பதை இஸ்ரேலியர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்'' என ஏப்ரல் 2 இல் பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத்தினை அவரது தலைமையகத்தில் இருந்து இஸ்ரேலிய கவசவாகனங்கள் தனிமைப்படுத்தியதுடன் Howard பிரகடனம் செய்தார்.

எவ்வாறு இருந்தபோதிலும், ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் அவுஸ்திரேலிய அரசாங்கம் அல்லது அமெரிக்க புஷ் நிர்வாகத்தினைப் பற்றிய குறைகூறும் எதுவித விமர்சனமும் இடம் பெறாமல் இருக்கும் படி பார்த்துக்கொண்டார்கள். எந்த பேச்சுக்களும் அங்கே இடம்பெறவில்லை மற்றும் ஒலி பெருக்கி மற்றும் megaphones இனை யாரும் பாவித்துவிடாதபடி இறுக்கமான கட்டுப்பாட்டினை பொறுப்பாளர்கள் வைத்திருந்தார்கள். அமெரிக்க தூதரகத்தினை நோக்கி செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்கப்பட்டார்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் முடியும் இடத்தினை வந்துசேர முன்னரே அது கலைத்துவிடப்பட்டது.

பல ஆர்ப்பாட்டக்காரர்களின் உணர்வுகள் அதன் ஒழுங்கமைப்பாளர்களிற்கு கடுமையான எதிர்ப்பு நிறைந்ததாக இருந்தன. Martin Place இல் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் சென்று எதிர்ப்பு தெரிவிப்பதற்கு (ஆர்ப்பாட்டம் செய்வதற்கு) பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இருந்து உடைத்துக்கொண்டு போனார்கள். அதன் பின்னர் ஏனையவர்கள் ஆர்ப்பாட்டத்தின் ஒழுங்கமைப்பாளர்களுடன் முரண்பட்டுக்கொண்டதுடன், அவர்கள் இஸ்ரேல் தூதரகத்தின் முன் வாசலில் தடிகளையும் கற்களையும் வீசத்தொடங்கியவுடன் காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்

அவுஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் இந்த நிகழ்வினை அதனது அறிக்கையில் குவிமையப்படுத்தியது. Sydney Morning Herald இன் முதற்பக்கச் செய்தியில் ''இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பலாத்காரமான மோதல்'' என தலையங்கம் தீட்டியிருந்ததுடன், ஆர்ப்பாட்டத்தின் எண்ணிக்கையினை குறைத்துக்காட்டி அதில் பங்குகொண்டவர்களின் கோபத்திற்கும், ஏமாற்றத்திற்குமான காரணத்தின் எதுவித தன்மையையும் அளிக்கவில்லை. அதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மேற்குக்கரை மற்றும் காசாவிலான 35 வருட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையால் கடந்த 18 மாதங்களில் கொல்லப்பட்டோ அல்லது ஊனமாக்கப்பட்டோ இருந்தனர்.

உலக சோசலிச வலைத் தளம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரிடம் பேசியது. 1992 இல் அவுஸ்திரேலிய வந்த ஒரு பாலஸ்தீனியரான ஷியாத்திடம் பேசிய போது, ''பாலஸ்தீனத்திற்கான விடுதலையை ஆதரிப்பதற்கும் மற்றும் யுத்தக் குற்றவாளியான ஷரோனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தும்படி சர்வதேச சமூகத்திடம் கேட்பதற்கும் மற்றும் பாலஸ்தீன மக்களை கொல்வதை நிறுத்தும்படி நிர்ப்பந்திப்பதற்கும் நான் இங்கே வந்துள்ளேன். அங்கே மிக அதிகமான அநீதிகள் நடைபெறுகின்றன. பல பாலஸ்தீன குடும்பங்கள் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் காசாவில் இஸ்ரேலிய படையினரால் எனது மைத்துனன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் ஒரு சாதரண மனிதனாக இருந்தான். அவன் எதுவித ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை ஆனால் அவனை சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.

''எனது சிறிய தாயார் 1989 இல் காசாவில் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு 62 வயது, ஒரு வயோதிகப் பெண்மணியாக அவர் இருந்தார். அவர்கள் (இஸ்ரேலிய படையினர்) அவர் இறக்கும் வரை முதுகில் அடித்தார்கள். ஒசமா பின் லாடனைப் போன்றவர்கள் அநீதிகளுக்கு எதிரான மக்களின் கோபத்தினை பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு இந்த தற்கொலை குண்டுதாரிகள், அநீதிகளில் நீண்டகாலம் வாழ்ந்ததாலேயே தமது உயிரினை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாழ்க்கையே கிடையாது எனது குடும்பத்தின் ஒரு உறவினரின் கணவர் இஸ்ரேலிய இராணுவத்தினால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவர் மிகவும் கடுமையான வாழ்க்கைக்கு முகம் கொடுத்தார். அவர் தனது உயிரினையே அர்ப்பணிக்க முடிவெடுத்துவிட்டிருந்ததை நான் கேள்விப்பட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அது மிகக் கொடூரமானதாக இருக்கிறது.

"இந்த இன்டிபாடா 28 செப்டம்பர் 2000 இல் ஷரோன் Aqsa Mosque (Temple Mount) போயிருந்த போது தொடங்கியது. அமைதியை குலைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் அங்கே போனார். ஒஸ்லோ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, 'நான் உயிரோடு இருப்பேயானால் இந்த ஒஸ்லோ உடன்பாட்டினை குலைப்பேன்' என ஷரோன் குறிப்பிட்டார். ஷரோன் தலைமை பயங்கரவாதியாக இருக்கிறார். அதையிட்டு எதுவித சந்தேகமும் கிடையாது. நீ பயங்கரத்தை நிறுத்த விரும்பினால் பாலஸ்தீன மண்ணில் இருந்து வெளியேறு'' என்றார்.

கடந்த சில நாட்களாக காசாவில் இருக்கும் அவரது குடும்பத்துடன் தொடர்புகொண்டிருக்கும் ஒரு பாலஸ்தீன பெண்மணி அவரது மகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார், ''அவர்கள் கவச வாகனங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். Ramallah, Bethlehem மற்றும் Jenin நாசமாக்க பட்டுள்ளன. காசாவினை அவர்கள் தாக்கும்வரை நாம் காத்திருக்கிறோம். என்ன நடக்கப்போகிறது என்பது எமக்கு தெரியவில்லை.''

''அரபு நாடுகள் மற்றும் உலகெங்கும் ஏனைய நாடுகளில் இருந்து மக்கள் இதை நிறுத்தும் படி கேட்க வேண்டும் என்பது எமக்கு அவசியமாக இருக்கிறது. முஸ்லீம்களும் யூதர்களும் அமைதியாக வாழவேண்டும், ஒவ்வொருத்தரும் அமைதியை கொண்டு வரவேண்டும். ஷரோனுக்கு அமைதி தேவையில்லை. எம்மை நீண்டகாலத்திற்கு தாக்கும் திட்டத்தை அவர் கொண்டிருக்கிறார். பாலஸ்தீன குழந்தைகளை அவர் பலியெடுக்கிறார். புஷ் உலகை ஆள்வது புஷ் க்கு அவசியமாக இருக்கிறது. அவர்களிடம் அமைதியில்லை. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளிக்காவிடில் எதுவுமே நடைபெற்றிருக்காது. ஷரோன் புஷ் இடம் இருந்து பச்சை விளக்கு சமிஞ்சையை பெற்றுள்ளார். நாம் என்ன செய்ய முடியும்? நான் ஒரு பாலஸ்தீனிய பெண். எனது அனைத்துக் குடும்பமும் உறவுகளும் காஷாவில் இருக்கின்றார்கள்'' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஏனையவர்களுக்கு தெரிந்தவர்கள் மேற்குக் கரையில் அவர்களது வீடுகளில் முற்றுகையிடப்பட்டு இருக்கின்றனர். தனது நண்பர்கள் குழுவுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஒரு இளம் பெண்ணான செல்மா, ''எனது சினேகிதியின் சகோதரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்து வருவதுடன், முக்கியமாக உணவினையோ அல்லது தண்ணீரையோ அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

''அமெரிக்காவும் இஸ்ரேலும்--மக்களல்ல ஆனால் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள்-- தான் உண்மையான பயங்கரவாதிகள். பாலஸ்தீனியர்கள் பயங்கரவாதிகள் எனக் கூறிக்கொண்டு அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கிறது. பாலஸ்தீனியர்களிடம் கற்களைத்தவிர எதுவுமே இல்லை. இன்னொரு நாள் மூன்று வயது குழந்தை ஒரு பயங்கரவாதியாக எப்படிக்கொல்லப்பட முடியும்? அல்லது பத்து வயது சிறுவன்?''

ஷரோனின் அதிகாரம் அவரிடம் இருந்து பறிக்கப்படும். அவர் எப்போதும் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை. அவர் ஒரு யுத்தக் குற்றவாளி. மற்றும் ஜோர்ஜ் புஷ் ஷரோனின் ஒரு சகோதரர். அவர்கள் இருவருமே கொடூரமானவர்களாக இருக்கிறார்கள். இருவரில் ஒருவருமே அதிகாரத்தை கொண்டிருக்கப் போவதில்லை. அக்கறை உணர்வினை கொண்டிருக்கும் மக்கள் அதைக் கைப்பற்றுவார்கள், அன்றிலிருந்து அவர்கள் தான் நாடுகளை ஆள்வார்கள்.''

அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் ஒரு அமெரிக்க பெண்மணியான ஜான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம், ''நான் ஒரு யூதப் பெண். இஸ்ரேலினை நேசிப்பதன் ஊடாகவும் இஸ்ரேலுடன் என்னை இனம் காணுவதன் ஊடாகவும் நான் வளர்ந்தேன். ஒரு வருடம் அங்கு நான் வாழ்ந்தேன். ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் தற்போது நடந்து கொண்டிருப்பது பற்றி நான் அதிர்ச்சியடைந்திருப்பதை உணர்கிறேன். பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தினை சுமக்க ஷரோன் முயல்வதுடன், அதனை பிடிக்கும் முற்று முழுதான உறுதிப்பத்திரத்தினை கொண்டிருப்பது போல் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது முற்றாகப் பிழையானது என நான் கருதுகிறேன். அங்கு குடியேற்றத்தினை நிறுத்திவிட்டு இஸ்ரேல் வெளியேறுவதுடன் பின்வாங்க வேண்டும். ஒரு பலமான ஸ்திரமான பாலஸ்தீன அரசினை உருவாக்க உதவி செய்ய வேண்டும். நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.''

தற்போது இருபது வயதினை கடந்திருக்கும் அகமெத் ஒரு அராபிய அவுஸ்திரேலியர், அவர் அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களை குற்றம் சாட்டினார். ''இஸ்ரேலிய அரசாங்கத்திற்கான அவர்களது ஆதரவினால் நாம் வெறுப்படைந்தோம். என்ன காரணத்திற்காகவும் இஸ்ரேலுக்கு எதிராக நிற்பதற்கு எந்த அரசாங்கங்களுக்கும் துணிவில்லை போல் தெரிகிறது. பாலஸ்தீனத்தை கைப்பற்றவும் முற்றாக ஆக்கிரமிக்கவும் ஷரோன் தெளிவாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் ஆனால் யாரும் அவருக்கு எதிராக நிற்க முடியாது இருக்கின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின் முழு 'பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்' அவர்களது நலன்களை விரிவாக்குவதற்கான ஒரு முன்நிபந்தனையாக மட்டுமே இருக்கிறது. ஆப்கானிஸ்தான் மீதான யுத்தம் கூட எண்ணெயுடன் சம்மந்தப்பட்டு இருக்கிறது.

''ஈராக் போன்ற சில நாடுகளிற்கு எதிரான ஐ.நாவின் தீர்மானத்திற்காக உலகம் எழுந்து நின்று போராட வேண்டும். 1967 இல் இருந்தே இஸ்ரேல் ஐ.நாவின் தீர்மானத்தினை வைத்திருக்கிறது. இஸ்ரேல் உடனடியாக ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவரவும் பின்வாங்க வேண்டும் எனக்கோரி இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒருவர் அங்கு சென்றார் ஆனால் அங்கு ஒருவருமே அதை மதிக்கவில்லை. உலகின் காவலாளியான ஐக்கிய அமெரிக்க எங்கே?''

''அனைத்து மனித உரிமை மீறல்களையும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆதரவளிப்பதற்காக நான் இங்கே வந்துள்ளேன். அவர்களது நடவடிக்கைகள் யுத்தக் குற்றச் செயலாக இருக்கிறது. 1982 இருந்து Shatilla மற்றும் Sabra (பாலஸ்தீன அகதி முகாம்கள்) இல் மனித உரிமை மீறல்களை ஷரோன் வெளிக்காட்டி இருக்கிறார். யாரும் அவரை நிறுத்தவில்லை. இப்போது அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக தமது பலத்தினை முடுக்கிவிட்டுள்ளார்கள். அடுத்தது யாராக இருக்கப்போகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?''

1970 களில் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த ஒரு அரை ஓய்வுபெற்ற இரயில்வே துறை தொழிலாளியான முகமத் அலி ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களான இஸ்ரேலின் வரம்பு மீறலினை கோபத்துடன் குற்றம் சாட்டியதுடன், ''பாலஸ்தீனியர்கள் பயங்கரவாதிகள் என ஒவ்வொரு நாளும் எமக்கு சொல்லப்படுகிறது ஆனால் ஷரோன் அரச பயங்கரவாதியும் ஒரு நிரூபிக்கப்பட்ட யுத்தக் குற்றவாளியுமாவார். ஊடகங்களுக்கு இது தெரியும் ஆனால் அவரது உண்மையான பதிவுகளை பற்றியோ அல்லது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன சாதாரண மக்களின் கருத்துக்களைப் பற்றி அவை எதுவுமே சொல்வதில்லை. ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் ஷரோனுடன் உடன்படாதிருக்கிறார்கள் ஆனால் இஸ்ரேலில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளை அறிக்கையிடுவதற்கு செய்தி ஊடகங்கள் மறுக்கின்றன.

''இது ஒரு முழு வடிவிலான யுத்தத்தை மத்திய கிழக்கில் இலகுவாக அபிவிருத்தி செய்யும் என நான் பயப்படுகிறேன். லெபனான் தாக்கப்பட்டதுன் சிரியா பயமுறுத்தலின் கீழ் இருக்கிறது மற்றும் புஷ் உம் பிளேயரும் ஈராக்கினை தாக்க விரும்புகிறார்கள். ஈராக் மனித அழிப்பு ஆயுதங்களை வைத்திருப்பதாக புஷ் குறிப்பிடுகிறார். ஆனால் உலகில் எவரையும் விட அதிக ஆயுதங்களை கொண்டிருக்கும் அமெரிக்காவின் யுத்தத்திற்கான சாக்குப்போக்காக இது இருக்கிறது. எண்ணெய் வளங்களை தமது கைகளிற்குள் கொண்டு வருவதற்காக யுத்தம் செய்ய விரும்பும் யுத்தத்திற்கான இந்த வக்காலத்துக்காரர்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஈராக் மக்கள் துன்புற்று வருகிறார்கள்.

''பாலஸ்தீன மக்கள் அவுஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடி மக்களைப் போன்று இருக்கிறார்கள். அவர்கள் தமது நிலங்களில் இருந்து அகற்றப்பட்டதுடன் கொலைசெய்யப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகிறார்கள். இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்குவதும், அரபு மற்றும் யூத மக்கள் அமைதியாக வாழ அனுமதிப்பதுமே மத்திய கிழக்கிற்கான ஒரேயொரு முடிவாக இருக்கிறது. அவுஸ்திரேலிய மற்றும் ஏனைய ஒவ்வொரு நாடுகளும் இதைக் கோரவேண்டும்.''

சிட்னி, மெல்பேர்ன் மற்றும் ஏனைய அவுஸ்திரேலிய நகரங்களிலும் மேலதிக ஆர்ப்பாட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

See Also :

புஷ்ஷின் ''சமாதான முன்னெடுப்பு'' அரபு மக்களுக்கு எதிரான பரந்த யுத்தத்திற்கு அடித்தளமிடுகின்றது

ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஷரோனின் யுத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக மிச்சிக்கனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

அரபாத்தைப் படுகொலை செய்வது பற்றியும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை அழிப்பது பற்றியும் இஸ்ரேலும் வாஷிங்டனும் விவாதிக்கின்றன