WSWS:
செய்திகள் & ஆய்வுகள்:
மத்திய
கிழக்கு
Thousands march in New York and New Jersey against Israeli aggression
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நியூயோர்க்
மற்றும் நியூஜேர்சியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
By Alan Whyte
10 April 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இஸ்ரேலின்
தாக்குதலுக்கு எதிராக கடந்த கிழமையின் வார இறுதியில் ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நியூயோர்க்கிலும்
நியூஜேர்சியிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். வெள்ளிக் கிழமை
இரவு Jersey City, Paterson, New Jersey,
Times Square மற்றும் நியூயோர்க் நகரத்தில் அமைந்திருக்கும்
Brooklyn Borough Hall போன்ற இடங்களில் நான்கு ஆர்ப்பாட்டங்கள்
இடம்பெற்றன.
Times Square இல்
அமைந்திருக்கும் இஸ்ரேலிய தூதரகத்திற்கு ஆர்ப்பாட்டம் வந்தடைந்தபோது
மூவாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கே வந்திருந்தனர்,
ஒரு சில நூறு பேர்களைக் கொண்ட ஆர்ப்பாட்டமாகத்தான்
அது இருக்கும் என அதிரடிப் பொலீஸ் படையினர் எதிர்பார்த்திருந்தனர்.
சனிக்கிழமை பொலீஸ் முன்னரைவிட தயார் நிலையில் இருந்ததுடன், 3
ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிடப்பட்ட
இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு முழுசக்தியுடன் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகவும் வரிசைக்கிரமமாக வந்தபோதும்
ஆர்ப்பாட்டம் சட்டத்திற்கு புறம்பானது எனவும் அதற்கு
அனுமதி இல்லை எனவும் அறிவித்த ஒலிபெருக்கியுடன் நின்றிருந்த ஒரு
பொலீஸ் அதிகாரி, போக்குவரத்தினை மக்கள் தடை செய்தாலோ
அல்லது நடந்து போனாலோ கைதுசெய்யப்படுவார்கள் என
அறிவித்தார்.
சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் பாலஸ்தீன நடவடிக்கைக்
குழுவால் நடாத்தப்பட்டது, ஆனால் அதில் அராபிய தொழிலாள
வர்க்கம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளடங்கலாக
அராபியர்கள் அல்லாத ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
அதே நாள் Union Square இல்
இன்னொரு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. செப்டம்பர் 11
பயங்கரவாத தாக்குதலில் இருந்து அரசும் செய்தி ஊடகங்களும்
முன்னெடுக்கும் தேசப்பற்றுக்கு எதிராக வளர்ச்சியடைந்துவரும்
எதிர்ப்பினை இந்த ஆர்ப்பாட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தக்
காரணத்திற்காகவே, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை சனிக்கிழமை
இடம்பெற்ற முக்கிய ஆர்ப்பாட்டத்தில் 500 பேர்கள் மட்டுமே
கலந்துகொண்டனர் என அறிக்கையிட்டது, உண்மையில் கலந்துகொண்டவர்களின்
எண்ணிக்கை இதைவிட ஆறுமடங்கு அதிகமாகும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தினை Brooklyn
Borough Hall இல் தொடங்கியதுடன், Brooklyn
பாலத்தினை கடந்து மாநகரசபை
வரையும் சென்றனர். அவர்கள் சுமந்து சென்ற பதாகைகளில்,
''பாலஸ்தீனத்தை விடுதலை செய், மனிதப் படுகொலைக்கு
அமெரிக்க நிதியுதவி செய்கின்றது,'' ''செய்தி ஊடகங்கள் பொய்
சொல்கின்றன, குழந்தைகள் இறக்கின்றனர்; நான் ஒரு பயங்கரவாதியல்ல''
மற்றும் ''பாலஸ்தீனத்திற்கான சுதந்திரம், மனிதப்படுகொலையை
நிறுத்து, ஷரோன் ஒரு பயங்கரவாதி.'' என எழுதப்பட்டு இருந்தன.
''ஆக்கிரமிப்புக்கு எதிரான யூதர்கள்'' என தம்மை அழைத்துக்கொள்ளும்
ஒரு குழுவால் இன்னொரு பதாகை சுமந்துசெல்லப்பட்டது.
''ஒரு ஐந்து சதமோ, ஒரு பத்து சதமோ,
இஸ்ரேலின் குற்றங்களுக்கு மேலும் பணம் ஏதும் கொடுக்காதே,''
''ஷரோன், ஷரோன் நீ ஒழிந்துகொள்ள முடியாது, மனிதப் படுகொலைக்காக
உன்னை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவோம்,'' ''பாலஸ்தீனத்தை
விடுதலை செய், விடுதலை செய், ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவா''
மற்றும் ''அராபியர்களும் யூதர்களும் கொடூரங்களுக்கு எதிராக
இருக்கிறார்கள்.'' ஆர்ப்பாட்டக்காரர்களால் பாடப்பட்ட
இப்படியான சில சுலோகங்களும் அடங்கும்
சனிக்கிழமை உலக சோசலிச வலைத் தளம் ஒரு
சில எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடியது.
18 வயதாகும் மூஷா ஒரு வர்த்தக மாணவர்
இரவில் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்கிறார். அவர் Brooklyn
இல் பாலஸ்த்தீன பெற்றோர்களுக்கு
பிறந்தார். ''மக்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு கவசவாகனங்களால்
அவர்களின் வீடுகளை இஸ்ரேல் முற்றுகையிட்டிருக்க கூடாது. அவர்கள்
அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் அழித்துவிட்டதால் அங்கே
எவரும் தண்ணீர் பெற்றுக்கொள்ள கூட முடியாது இருப்பதுடன்,
அவர்கள் மக்களின் வீடுகளை குண்டுகளால் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்''.
''என்னுடைய மைத்துனன் றமல்லாவில் வசிக்கிறார்.
அவர் நடத்திய சிறிய விடுதியை இஸ்ரேல் இராணுவம் அழித்தபோது,
அவர் தனது வேலை மற்றும் வீட்டினையும் இழந்துவிட்டார். 1998
மற்றும் 1999 இல் அது நடைபெற்றது. அப்படியிருந்தும் கூட எங்களுக்கு
எதிராக எப்போதுமே கண்ணீர் புகையினை அடிக்கும் இராணுவத்துடன்
அங்கு நிறைய சண்டைகளும் இடம்பெற்றன. குறிப்பாக இரவுகளில்
நாம் அங்கு கார் ஓட முடியாது, அப்படி ஓடினால் உங்களை
இராணுவம் அடிப்பதுடன் சிறைக்குள் அடைத்துவிடுவார்கள். அவர்கள்
வைத்திருக்கும் ஆயுதம் எங்களிடம் இல்லை, ஆனால் அவர்கள்
நாங்கள் பயங்கரவாதிகள் என கூறுகின்றார்கள். அவர்களுக்கு
அரபாத் வெளியேற வேண்டுமாம் ஆனால் எப்படி எமது நிலங்களை
விட்டு நாம் வெளியேற முடியும்? நாம் அதை பகிர்ந்து கொள்ள
விரும்புகிறோம் ஆகையால் எம்மால் வெளியேற முடியாது.''
என அவர் கூறினார்.
பாதுகாப்பு வழக்கறிஞரான Kevin
McMinges, ''பாலஸ்தீனத்தின் மீதான
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புடன் நான் உடன்படவில்லை. அல்லது தற்கொலைக்
குண்டுகளுடனும் நான் உடன்படவில்லை. ஆனால் ஆபத்தான இந்த
நடவடிக்கைகளை விளைவாக்கிய மூலங்களை நாம் விளங்கிக்கொள்ள
வேண்டும் என நான் கருதுகிறேன். ஷரோன் ஒரு உண்மையான யுத்தக்
குற்றவாழி மற்றும் பயங்கரவாதியாக இருக்கிறார். செய்தியூடகங்கள்
அவை எல்லாவற்றையும் மூடிமறைக்கின்றன'' என கூறினார்.
கட்டிட வல்லுனரான Graham
Richards, ''அமெரிக்க மற்றும் இஸ்ரேல்
செய்தி ஊடகங்களின் பொய்களால் நான் வெறுப்படைந்துள்ளேன்,
எமக்கு கிடைக்கும் அனைத்துச் செய்திகளும் ஒரு பக்கச் சார்பானதும்
மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு சார்பான செய்திகளாக
இருக்கின்றன. அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது
மிக வெளிப்படையாக இருக்கிறது. என்னுடன் பணியாற்றும் பலர்
இஸ்ரேல் அதிக தூரம் சென்று கொண்டிருக்கிறது என நம்புகிறார்கள்.''
என அவர் கூறினார்.
பாலஸ்தீனத்தையும் லெபனானையும் சார்ந்த
அமெரிக்காவில் பிறந்தவர் டாறிக். அரசியல் மற்றும்
பொருளாதார முதுநிலை பட்டப்படிப்பு மாணவராவார். ''பாலஸ்தீன
மக்களின் நீதிக்கு நான் சார்பானவன், அதனது அர்த்தம் பாலஸ்தீனத்தின்
மீதான ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் ஒரு
விடுதலையான மற்றும் சுதந்திரமான பாலஸ்தீனம் என்பதாகும்.
யூத அடிப்படைவாதிகள் எனது குடும்பத்தினர் பலரை அவர்களது
சொந்த நாட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டிருக்கிக்கிறார்கள்.
அமெரிக்க அரசாங்கம் எப்போதும் இஸ்ரேலுக்கு சார்பானதாகவே
இருந்துவந்திருக்கிறது.
அவர்கள் தான் எம்மை ஆக்கிரமிப்பதும் பயங்கரத்துக்குள்ளாக்குவதும்,
மற்றும் புஷ் அரபாத்தினை குற்றம் சாட்டிக்கொண்டேயிருக்கிறார்.
சதாம் குசேனை அழிப்பதற்கு அராப் மக்களின் ஆதரவு பெறுவது
குழப்பப்படுவதனாலேயே தற்போது அமெரிக்கா மத்திய கிழக்கில்
நடைபெற்றுக் கொண்டிருப்பதையிட்டு அக்கறையாக இருக்கிறது.
அமெரிக்கா ஈராக்கினை தாக்குமானால், இறக்கப்போவது
அதிகமாக அப்பாவி மக்களாகவே இருப்பார்கள்'' என கூறினார்.
See Also :
இஸ்ரேலின்
ஆக்கிரமிப்புக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர்
ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய
தொழிலாளர்களும் இளைஞர்களும் ஷரோனின் யுத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
செய்தனர்
பாலஸ்தீனியர்கள் மீதான
இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக மிச்சிக்கனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
செய்தனர்
அரபாத்தைப்
படுகொலை செய்வது பற்றியும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை அழிப்பது பற்றியும் இஸ்ரேலும்
வாஷிங்டனும் விவாதிக்கின்றன
|