World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Conference of US right-wingers hears call to execute John Walker

Let liberals know "they can be killed too", says TV commentator

அமெரிக்க வலதுசாரி மாநாடு ஜோன் வோக்கரை கொலை செய்யக் கோரும் அறைகூவலை செவிமடுக்கிறது

"அவர்களும் கூட கொல்லப்பட முடியும்" என்பதை மிதவாதிகள் அறியட்டும், தொலைக்காட்சி வர்ணனையாளர் குறிப்பிடுகிறார்

By Patrick Martin
27 February 2002

Use this version to print | Send this link by email | Email the author

பத்திரிகையாளரும் தொலைக்காட்சி விமர்சகரும் ஆன அன் கொல்ட்டர் (Ann Coulter) ஜோன் வாக்கர் லிண்ட் (John Wacker Lindh) ஐ கொலைசெய்ய அறைகூவல் விடுத்ததை மிக பெருவாரியான அளவில் ஒன்றுகூடி இருந்த வலதுசாரி அமெரிக்க அரசியல் தொண்டர்கள் ஆர்ப்பரித்ததானது மிதவாதிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.

பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (CPAC) பேசிய கொல்ட்டர் இவ்வாறு கூறினார், "கல்லூரி மிதவாதிகளை கருத்தில் கொள்ளும்போது ஜோன் வோக்கர் மரண தண்டனை பெறமாட்டார் என்பதை அறிந்து நீங்கள் மறுபடியும் வருத்தமடைவீர்கள்." மிதவாதிகளை அச்சுறுத்த நாம் ஜோன் வோக்கர் போன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும். அப்போதுதான் தாம் கொல்லப்படக்கூடும் என்பதை அவர்கள் உணர்வார்கள். இல்லாவிடில் அவர்கள் அடியோடு துரோகிகளாக மாறிவிடுவர்."

கொல்ட்டர் தன் கூற்றுக்கு மன்னிப்பு கோரவில்லை. பார்வையாளர்கள் தன் கூற்றை பலமாக ஆதரித்ததாக கூறினார். சுமார் 3,000 பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த நான்கு நாள் மாநாடு குடியரசு கட்சியின் வருடாந்திர அதி- வலதுசாரி மாநாடாகும். வர்ஜீனியாவில் உள்ள ஆர்லிங்டனில் ஜனவரி30 முதல் பிப்ரவரி2 வரை நடைபெற்றது. அதில் 70க்கு மேற்பட்ட அமைப்புகளில் இருந்தும், பத்திரிகைகளிலிருந்தும் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். (1994-ல் CPAC மாநாட்டில், வலதுசாரி ஆதரவாளர்கள் குழுவால் கூட்டப்பட்ட ஒரு பத்திரிகை நிருபர் கூட்டத்தில்தான் கிளிண்டனுக்கு எதிராக பாலாஜோன்ஸ் பாலியல் குற்றசாட்டு பகிரங்கமாகக் கொண்டு வரப்பட்டது.)

கொல்ட்டரின் கருத்துக்களும் பார்வையாளரின் எதிர்வினைகளும் -அமெரிக்க கம்பெனிகளில் ஒரு பகுதியும் செய்தி ஊடகத்தின் ஒரு பகுதியும் ஊக்குவித்து ஆதரவளிக்கின்ற, குடியரசு கட்சியின் முக்கிய பங்கு வகிக்கும், புஷ் நிர்வாகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் பாசிச குழுவின் அரசியல் ஏற்பாட்டிற்கு உள்ளேயான அமெரிக்க அரசியல் வாழ்வில் முக்கியமாக நிலவும் நிலைமைகளைப் பிரதிபலிக்கின்றன.

கொல்ட்டர், கிறிஸ்தவ அடிப்படைவாதம், அமெரிக்க பேரினவாதம் மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றின் ஆபத்தான சேர்க்கையை ஆதரிக்கும், மிகவும் அறியாமை மிக்க தட்டினரின் பிரதிநிதிகளுள் ஒருவர் ஆவார். கொல்ட்டர் நீதித்துறையிலும் செனட்டிலும் உதவியாளராக பணியாற்றினார் கிளிண்டன் ஆட்சியில் வலதுசாரி பத்திரிகையாளராகவும் தொலைக்காட்சி நிருபராகவும் பணியாற்றினார்.

கிளிண்டன் மீதான பதவிநீக்க விசாரணைக்கு பாலா ஜோன்ஸ் வழக்கைப் பயன்படுத்திய வலதுசாரி வழக்கறிஞர்கள் குழுவுடன் கொல்ட்டர் நெருங்கிப் பணிபுரிகையில், அவரது குவிமையம் கொள்கை அடிப்படையைக் காட்டிலும் ஊழல்-வதந்தி பரப்புவது பற்றியதாகவே இருந்தது. கொல்ட்டர் கிளிண்டன் விரோத High Crimes and Misdemeanurs என்ற புத்தகத்தை எழுதினார். அது அதி வலதுசாரி வட்டத்தில் அவரது பண்போவியக் குறிப்பை உயர்த்தியது. அவர் கிளிண்டனை இந்த புத்தகத்தில் ஒரு தொடர் கொலையாளியாக சித்தரித்தார்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் கொல்ட்டர் தனது National Review Online கட்டுரையில் முஸ்லிம்களைக் குறிக்கையில் பின்வருமாறு எழுதினார், "நாம் முஸ்லீம் நாடுகளின்மீது படையெடுத்து, அவர்களின் தலைவர்களைக் கொன்று, அந்நாட்டு மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும்." இது கணிசமான அளவு பத்திரிகை விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் தூண்டிவிட்டது மற்றும் நேஷனல் ரிவிவ் தொடர் பந்தியை வெளியிட மறுத்தது. அதில் அவர் "கறுப்பு ஆண்களுக்கு" எதிராக போலிஸ் நடவடிக்கைகள் எடுப்பதற்கு வக்காலத்து வாங்கினார்.

கடைசியாக அந்த வலதுசாரி பத்திரிகை கொல்ட்டரை பதவி நீக்கம் செய்தது. அது அவருடைய அரசியல் கண்ணோட்டங்கள் அரசியல் வட்டாரங்களுக்கு புதிது என்பதன் காரணமாக அல்ல, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் யுத்தத்துக்கு பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவை நாடும் புஷ் நிர்வாகத்தின் முயற்சியை அவரது இனவாத வசைமாரி குறுக்காக வெட்டிவிடும் என்பதால் ஆகும். புஷ் அமெரிக்கா இஸ்லாம் மதத்தை எதிக்கவில்லை என்று கூறும்பொழுது, புஷ் நிர்வாகத்தின் ஆர்வமிக்க ஆதரவாளர் இஸ்லாமுடன் போர் தொடுக்கவேண்டும் என்று சரி நுட்பமாகக் கூறுவது தர்மசங்கடமானதாக இருந்தது.

அதன் பின்னர் இருந்து கொல்ட்டர், "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" மத்திய கிழக்கு நாடுகளை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுதல் தேவையாயிருக்கிறது என்று தொடர்ந்து தாக்கி வருகிறார். டிசம்பரில் தொலைக்காட்சியில் "சுதந்திரம் மற்றும் அனைத்து மக்களுக்கான சமத்துவம் பற்றிய அமெரிக்கக் கருத்தை இந்நாடுகளில் அமல்படுத்தாமல் மேற்குக்கு எதிரான எதிர்கால பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் துடைத்தழிக்க முடியாது. மற்றும் அந்தச் சுதந்திரம் இறுதியில் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தில் இருந்தே பெறப்படுகிறது" என்று அவர் கூறினார்.

இவ்வாறு கொல்ட்டரின் அத்தகைய பிதற்றல் CPAC-யில் அவர் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்படுவதற்கு தடையாக இல்லை. அந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகைக் குறிப்பு, "நமது மாநாட்டுக்கு வருகை தந்திருந்த" "மாபெரும் ஆசிரியர்களுள்" ஒருவர் என அவரை வர்ணித்தது.

புஷ் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கொன்டொலீசா ரைஸ் (Condoleeza Rice) மற்றும் மனித சேவைகள் மற்றும் நலத்துறை செயலாளர் டோமி தோம்சன் கொட்லர் (Tommy Thompson Coulter) உட்பட மாநாட்டில் பங்கேற்ற மற்றும் பேசிய புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு மாநாட்டில் அவர் பங்கேற்றிருந்தது எந்த தயக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பழமைவாதிகளுக்கு உரிய பாடமாக டிமோதி மாக் வெய் (Timothy McVeigh ) முக்கியமான மிதவாதி ஆதிரித்திருந்தால் பற்றார்வ வெறி கிளம்பி இருக்கும் என ஒருவர் கற்பனை செய்து பார்க்கக்கூடிய போதிலும், CPAC முடிந்த மூன்று வாரங்கள் ஆகிய நிலையில் இது பற்றி சிறிதளவே பத்திரிகைக் கவனிப்பு இருந்துள்ளது. ஜனநாயகக் கட்சிப் பேச்சாளர் எவரும் கொல்ட்டரின் கருத்தைக் கண்டிக்கவில்லை அல்லது புஷ் நிர்வாகம் அவரது மிதவாதம் மற்றும் கீழறுப்பு வேலையிலிருந்து விலகி இருக்குமாறு கோரவும் இல்லை. புஷ் நிர்வாகமும் குடியரசு கட்சிப் பேச்சாளரும் கூட அவருடைய குறிப்புத் தொடர்பாக மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் இதுபோன்ற கருத்துகளை நிர்வாகத்தரப்பினரும் அதி வலதுசாரி அரசியற் தட்டின் பிரதிநிதகளும் கூறி வருகின்றனர். அட்டர்னி ஜெனரல் John Ashcroft காங்கிரஸ் முன்னர் வாக்கு மூல உறுதி எடுக்கையில், அமெரிக்க தேசபக்தி சட்டத்தின் (USA Patriot Act) ஜனநாயக விரோதப்போக்கை கண்டிப்பவர்கள் யாரும் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் என கூறினார்.

கிறிஸ்தவக் கூட்டணியின் நிறுவனர் பாட் றொபட்சன் கடந்தவாரம் தொலைக்காட்சியில் 700 கிளப் என்பதில், இஸ்லாமிய மதம்- வன்முறையான மதம் எனக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, "இஸ்லாம் அது மற்ற மதங்களை ஆதிக்கம் செய்யும் வரை மற்றும் கட்டுப்படுத்தும் வரை மற்ற மதங்களுடன் அமைதியாக ஒன்றுபட்டு இருக்கும், பின்னர் தேவையாயின், அழித்துவிடும்."

ஜோன் வாக்கர் லிண்ட் பற்றிய கொல்ட்டரின் கருத்துகள் வலதுசாரி தீவிர அரசியல் கருத்துக்களை குறிக்கின்றன. இஸ்லாம் மதத்திற்கு மாறி ஆக்பானிஸ்தானுக்கு சென்று தலிபானுக்காக சண்டையிடச் சென்ற ஒரு கலிபோர்னிய இளைஞன் மீதான வழக்குத் தொடுப்பின் பின்னே உள்ள அரசியல் நோக்கங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

கம்யூனிஸ்ட்டுகள் மீதான மெக்கார்தி வேட்டையாடிய வழக்கு விசாரணையை உற்று நோக்குகிறது.. அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிரான அனைத்து இடதுசாரிகளையும் அச்சுறுத்துவதற்காக வேண்டி Julius மற்றும் Ethel Rosenberg என்ற இரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வலதுசாரி பழிவாங்கலின் பிரதான இலக்குகளான ஜனநாயக கட்சி மற்றும் செய்தி ஊடகத்தில் உள்ள உத்தியோகபூர்வ ஊழல்மிக்க மற்றும் கோழைத்தனமான மிதவாதிகள் மட்டும் இந்த வலதுசாரி தாக்குதலுக்கு இலக்கு அல்ல. Coulter மற்றும் Ashcroft பயப்படுவது என்னவென்றால், அமெரிக்காவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருதலும் புஷ் நிர்வாகத்தின் சமூகக் கொள்கைகள் மக்கள் எதிர்ப்பைப் பெற்று வருதலும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும், உழைக்கும் மக்களின் பரந்த தட்டினரை ஜனநாயக மற்றும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் அமெரிக்க முதலாளித்துவத்தை விமர்சனத்துடன் பார்க்குமாறு ஈர்க்கும் என்பதேயாகும்.