World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Thousands rally in Michigan against Israeli attacks on Palestinians

பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக மிச்சிக்கனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

By Shannon Jones
2 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஆக்கிரமித்த பிராந்தியங்களுக்குள் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2000 ஆயிரம் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் குடும்பப் பெண்கள் ஏப்பிரல் 1 இல் மிச்சிக்கன் டெட்ரோயிட்டின் புறநகரப்பகுதியான டியர்போர்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்க அராபிய அமைப்புகளாலும், அமெரிக்க அராபிய பாகுபாட்டிற்கு எதிரான அமைப்பு மற்றும் அமைதிவாதிகளாலும் நடாத்தப்பட்டது. அராப் மற்றும் மத்திய கிழக்கு குடியேற்றவாசிகள் மீதான மேலும் ஒரு 'விசாரணை' க்கான நீதியமைப்பு துறையின் தலைவரான (Attorney General) John Ashcroft இன் அழைப்பு உள்ளடங்கலாக, அமெரிக்க அராபியர்களை பயமுறுத்தும் புஷ் நிர்வாகத்தின் புதுப்பிக்கப்பட்ட முயற்சி இருந்தபோதும் பரந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு வந்திருந்தனர்.

இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் குறிப்பாக இஸ்ரேலிய பிரதமர் ஆரியல் ஷரோனின் (Ariel Sharon) ஆக்கிரமிப்பை கண்டிக்கும் பதாகைகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் சுமந்துசென்றனர். ''ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனத்தில் செப்டம்பர் 11'', ''இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, அரச ஆதரவு பயங்கரவாதம்'', ''ஷரோன் ஒரு கொலைகாரன்,'' மற்றும் பாலஸ்தீனத்திலான மனித அழிப்பை முடிவுக்கு கொண்டு வா''. என அந்தப் பதாகைகளில் எழுதப்பட்டு இருந்தன.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிமிப்பு மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான ஆதரவினையும் கண்டித்து ஏனைய பதாகைகளும் எழுதப்பட்டு இருந்தன. ஒரு அமெரிக்க ஜனநாயகவாத செனட்டர் ஆன Carl Levin இன் ''இஸ்ரேலுக்கான கண்மூடித்தனமான ஆதரவு'' வினையும் ஒரு பதாகை தேர்வு செய்திருந்தது. ஜனாதிபதி புஷ்ஷினை பிரித்தானிய அரசனான ஜோர்ஜ் III உடன் இணைத்து, ''ஜோர்ஜ் அரசனை கீழிறக்கு,'' என இன்னொரு பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

''ஷரோன், ஹிட்லர் அனைவரும் ஒன்றே, இங்கே பெயர்கள் மட்டுமே வேறு'' என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு விருப்பத்திற்குரிய பாடலாக இருந்தது. வடமேற்கு டியர்போர்னில் இருந்து மாநாகர சபை (City hall) வரைக்குமான இரண்டு மைல்களுக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெரும்பாதை லாறித் தொழிலாளர்களுடன் இணைந்து சிறுகடை உடமையாளர்கள் மற்றும் அயலவர்களும் அவர்களின் பக்கமாக நடந்து வந்தனர். சிலர் இடையில் இணைந்து கொண்டனர்.

டியர்போர்ன் மாநகரசபை பக்கத்தில் ஒரு மேடையினை அமைத்ததுடன், ஒலிபெருக்கி மூலம் ஒழுங்கமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசினார்கள். எப்படியிருந்தபோதும், இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தின் கொடூரத்தினை வெளிப்படுத்தியபோதும், அதிகமாக சொல்வதற்கு பேச்சாளர்களுக்கு எதுவும் இருக்கவில்லை. அமெரிக்க நீதி அமைப்பினால் நூற்றுக்கணக்கான அமெரிக்க அராபிய குடியேற்றவாசிகள் முகம்கொடுத்துவரும் தடுத்து வைப்புக்கு எதிராக யாரும் பேசவில்லை. அல்லது ஆப்கானிஸ்தான் மீதான புஷ் நிர்வாகத்தின் கொடூர யுத்தம் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கான அதனது ஆதரவுக்கிடையிலான ஒரு உறவினை எவரும் வரைந்துகாட்டவில்லை. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவினை எதிர்க்க காங்கிரசுக்கு கடிதம் எழுதும்படி தொழிலாளர்களுக்கான ஒரு அழைப்புடன் பேச்சுக்கள் முடிந்தன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பரந்த பெரும்பான்மையினரின் தீர்மானம் மற்றும் இராணுவத்திற்கான எதிர்ப்பின் பழமைவாத தன்மை பேச்சுக்களில் வெளிப்பட்டன. பேச்சாளர்கள் ''சுதந்திர பாலஸ்த்தீனம்'' மற்றும் ''ஆக்கிரமிப்பினை இப்போது முடிவுக்குகொண்டுவா'' போன்ற பாடல்களினால் தொந்தரவுக்குள்ளானார்கள். பொது மேடைப் பேச்சாளர்கள் அமைதி மற்றும் சத்தமின்மைக்கு தொடர்ச்சியாக அழைப்புவிட்டனர். இறுதியில் ஒழுங்கமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தினை உடனடியாக முடிவுக்கு கொணர்ந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை வீட்டிற்கு அனுப்பினர்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கான பேட்டியாளர் குழு தெருக்களில் நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியது. அங்கு கிட்டதட்ட புஷ் நிர்வாகம் மற்றும் பெரும் வர்த்தகத்தால் கட்டுப்படுத்தப்படும் செய்தி ஊடகங்களின் பொய்களுக்கு எதிரான பொதுவான எதிர்ப்பு இருந்தன.

Henry Ford Community கல்லூரியின் ஒரு மாணவரான ஒரு இளம் தாய், ''நாம் அமெரிக்க இந்தியர்களை போல் பார்க்கப்படுகிறோம். எமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறோம். பல வருடங்களில், அமெரிக்கா பின்நோக்கி பார்க்கும் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது ஒரு தவறாக இருந்தது எனவும் பார்க்கும்'' என WSWS இடம் கூறினார்.

''CNN இல், ஒரு தற்கொலை குண்டுதாரியை F-15 jet fighter க்கு அவர்கள் ஒப்பிட்டனர். எப்படி உங்களால் அந்த ஒப்பீட்டை செய்ய முடியும்? மக்கள் தம்மைத்தாமே கோபத்தினால் கொன்றுகொண்டு இருக்கிறார்கள். பலமான எந்த கருத்தும் எம்மிடம் இல்லை.''

''றமல்லாவில் 700 பேரை சுற்றி வளைத்து முட்டிக்காலில் இருக்க நிர்ப்பந்தித்ததை நான் கேள்விப்பட்டேன். இஸ்ரேலியர்கள் அவர்களது தலையில் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இது இன்னொரு மனிதப்படுகொலையாக இருக்கப்போகிறது''

புஷ் நிர்வாகம் அராபிய குடியேற்றவாதிகளை தடுப்புக்காவலில் வைத்திருப்பதையும், Global Relief Foundation போன்ற இஸ்லாமிய கருணை அமைப்புக்களை மூடிவிட்டதையும் அவர் கண்டித்தார். ''பசி மற்றும் கொடுமைப் படுத்தல் காரணமாக Global Relief மற்றும் ஏனைய கருணை அமைப்புக்களினை பல மக்கள் சார்ந்திருந்தனர். இப்போது அங்கே இன்னும் பல மக்கள் பட்டினியால் இருக்கப்போகின்றனர்'' என அவர் கூறினார்.

லெபனானின் மூலத்தைக்கொண்டிருந்த ஒரு இளம் டறக் ஓட்டுனரான Alec, "நான் ஒரு பாலஸ்தீனியன் அல்ல ஆனால் மனிதன்.'' அவர் தொடர்ந்தார், ''செய்தி ஊடகங்களால் மக்கள் முடமாக்கப்பட்டுள்ளனர் போல் தெரிகிறது. பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான கடுமையான ஆக்கிரமிப்பினை நீங்கள் பார்க்கலாம். இஸ்ரேல் நிலங்களை கைப்பற்றியுள்ளதுடன், வீடுகளை அழித்து, சிறுவர்கள் மற்றும் தாய்மார்களை கொன்று கொண்டுள்ளது. ஹிட்லரால் யூதர்களுக்கு என்ன செய்யப்பட்டதோ அதைத்தான் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு செய்துகொண்டிருக்கிறது.''

''எதன்மீதும் அரபாத் கட்டுப்பாட்டினை வைத்திருக்கவில்லை. அவர் ஒரு அறையினுள் உட்காந்துகொண்டு இருக்கிறார். அவரிடம் இருப்பதெல்லாம் ஒரு கைத் தொலைபேசியே. மக்களை அவர் அடைந்தபோதுகூட, எதை அவரால் செய்ய முடிந்தது?''

பாலஸ்தீனியர்களிடம் எவ்வித இராணுவ பலமும் இல்லை. கவச வாகனங்களோ அல்லது விமானங்களோ அல்லது இயந்தி துப்பாக்கியோ கூட அவர்களிடம் இல்லை. திருப்பி போரிடுவதற்கான எவ்வித வழியையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆகையால் தான் அவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.''

''எனக்கு யூதர்கள் மீது எந்த வெறுப்புமில்லை. எனக்கு இஸ்ரேல் மீதுதான் வெறுப்புண்டு. ஷரோன் ஒரு பயங்கரவாதியாக இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. Sabra மற்றும் Shatilla வில் அவர் கொலைகளுக்கு கட்டளையிட்டார்.'' என அவர் WSWS இடம் குறிப்பிட்டார்.

See Also:

அரபாத்தைப் படுகொலை செய்வது பற்றியும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை அழிப்பது பற்றியும் இஸ்ரேலும் வாஷிங்டனும் விவாதிக்கின்றன