World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

US comes to the defence of Zionism at UN conference on racism

இனவாதம் பற்றிய ஐ.நா மாநாட்டில் சியோனிசத்தைப் பாதுகாக்க அமெரிக்கா முன்வருகிறது

By Jean Shaoul
1 September 2001

Use this version to print

தென் ஆபிரிக்காவில் நடைபெறும் இனவாதம் பற்றிய ஐ.நா உலக மாநாட்டில், மேற்குக்கரையையும் காசா பாலைவனத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்ததை இனவாதம் என்று தீர்மானம் விமர்சிப்பதால், ராஜாங்க செயலாளர் கொலின் பாவெலை அம் மாநாட்டில்கலந்து கொள்ள ஜனாதிபதி புஷ் அனுமதி மறுத்துள்ளமை, பாலஸ்தீனியர் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்கு முறைக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அசையாத ஆதரவின் மேலதிக அறிகுறியாகும்.

அமெரிக்காவையும் இஸ்ரேலையும் சாந்தப்படுத்துவதற்கான திருத்தங்களுக்குப் பின்னரும் கூட, தீர்மானத்தின் தொனியானது, "மட்டான அளவில் பாரபட்சமுடையது" ஆக இருந்தது என்றும் "எமது நண்பரும் பலமான கூட்டாளியுமானவரை தனிமைப்படுத்துவதற்கு" இந்த நிகழ்ச்சி பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்கா அனுமதிக்கத் தயார் இல்லை என்றும் அவர் கூறினார்.

"அவர்கள் இஸ்ரேலை பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் வரையில் அங்கு நாங்கள் பிரதிநிதித்துவம் கொண்டிருக்க மாட்டோம் என்று கொலின் பாவெல் அலுவலகத்தின் ஊடாக தெளிவுபடுத்தி விட்டோம்" என புஷ் குறிப்பிட்டார். "இஸ்ரேலைத் தனிமைப்படுத்தவும் கரிபூசவும் முயற்சிக்கும் மாநாட்டில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை." பதிலாக, அத்தீர்மானத்தை இன்னும் மேலதிகமாக எழுதாண்மை வகையில் செறிவற்றதாக்கவும் அதற்கு முயற்சிக்கவும் அமெரிக்கா இளநிலை பேராளர் குழு ஒன்றை அனுப்பும் என்றார்.

அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் சியோனிசத்தை இனவாதத்துடன் சமமாக்கிய 1975 ஐ.நா தீர்மானத்தை உயிர்ப்பிப்பதற்காக முயற்சித்து வந்தனர். அந்தத் தீர்மானமானது 1973ல் ஆறு நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் இஸ்ரேல் அதன் பக்கத்து அரபு நாடுகளைத் தோற்கடித்த பின்னர் மற்றும் இஸ்ரேலைத் தனிமைப்படுத்துவதற்கான ஒரு வழியாக இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு எண்ணெய் அனுப்புவதற்கான அரபு ஆட்சிகளின் வணிகத்தடை ஆகியவற்றுக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. 1975 தீர்மானம் நடைமுறை விளைபயன்களைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அது உண்மையில் பாலஸ்தீனியர்களுக்கான அரபு ஆட்சியாளர்களின் நடைமுறை ஆதரவுமுடிவுக்கு வந்ததைக் குறித்தது. ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஆதரவளித்த பொழுது மற்றும் நீண்ட காலமாக இருந்து வரும் அரபு - இஸ்ரேலிய மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மட்ரிட் மாநாட்டில் கலந்து கொள்ள சம்மதித்த பொழுது, 1991ல் இத்தீர்மானம் இறுதியாக திரும்பப்பெறப்பட்டது.

கடந்த செப்டம்பர் இறுதியில் இரண்டாவது இண்டிபதா (பாலஸ்தீனிய கிளர்ச்சி எழுச்சி) வெடித்த பொழுது, அது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி புதுப்பிக்கப்பட்ட அழைப்புக்கள் எழுந்தன. ஆனால் அமெரிக்காவையும் இஸ்ரேலையையும் அதிகம் ஏற்றுக் கொள்ளச்செய்யயும் வண்ணம் தீர்மானத்தை எழுத்தாண்மையில் செறிவற்றதாக ஆக்குவதற்கு அதன் திட்ட ஆதரவாளர்கள் ஒப்புக் கொள்ளக்கூடியதாக, டுர்பன் (Durban) மாநாட்டிற்காக வரைவு செய்யப்பட்ட தீர்மானம் மிகவும் கடுமை குறைந்ததாக இருந்தது. அதன் தற்போதைய வடிவத்தில், வரைவுத்தீர்மானமானது, 1975ன் தீர்மானம் செய்ததுபோல் சியோனிசத்தை இனவாதத்துடன் நேரடியாக சமப்படுத்தவில்லை, மாறாக "குடியேற்றப் பகுதிகளில் காணப்படும் அந்நிய ஆக்கிரமிப்பானது.... ஒரு புதிய வகை இன ஒதுக்கல், மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும்" என்று கூறியது. அது "வரலாற்றுப் பாலஸ்தீனத்தில் அரபு மக்கட்தொகையை இன அழித்தொழிப்பு செய்வதை" குறிக்கிறது. "ஆக்கிரமிக்கப்பட்ட அரபு பகுதிகளில் பாலஸ்தீனியர்களுக்கும் அதே போன்று ஏனையோருக்கும் எதிரான இன பாகுபாட்டு செயல்முறைகள் பற்றி ஆழமான கவலை கொண்டுள்ளது" என்றும் கூட தீர்மானம் வெளிப்படுத்துகின்றது.

மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான புஷ் நிர்வாகத்தின் மறுப்பானது, பாலஸ்தீனியர்கள் மீதான பொருளாதார மற்றும் இராணுவ முற்றுகைக்கு அதன் ஆதரவு மற்றும் உலக ரீதியான பொது ஜன அபிப்பிராயத்திற்கு முகத்தில் அறைந்தாற்போல், எதிராளிகளைப் படுகொலை செய்யும் அதன் கொள்கைக்கு ஆதரவளித்தல் மற்றும் அரபு நாடுகளுக்குள்ளே சினம் கொண்ட எதிர்ப்பை வளர்த்தல் பற்றிய அதன் கடும் சிடுசிடுப்பை எதிரொலிக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை மாநாடு விமர்சிக்கும், அதன் தயவில் இருக்கும் நாட்டைக் கடிவாளமிட்டு இழுத்துப்பிடிக்கக் கோரும், மற்றும் மனித உரிமைகளின் பேரில் செயல்படும் --சிறிய நாடுகளுக்கு எதிரான அதன் யுத்தத்தையும் அடாவடித்தனத்தையும் நியாயப்படுத்துதற்கு அது வழக்கமாக காட்டுகின்ற-- மூடுதிரையை அம்பலப்படுத்தும் என அமெரிக்கா அஞ்சுகின்றது.

டுர்பனில் ஐ.நா மாநாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர், அதற்கு இணையாக அரசு-சாரா அமைப்புக்களால் கூட்டப்பட்ட மாநாட்டில் 7,000 பேராளர்கள் இஸ்ரேலை "பாரபட்சம் காட்டும் நாடாக" வும் பாலஸ்தீனியர்கள் "ஆக்கிரமிப்பை எந்த வழியிலும் எதிர்க்கலாம்" என்பதையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்கவேண்டுமென கோரினர். தீர்மானமானது பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் "முழு நஷ்டஈட்டை" யும் வழங்குமாறு கூட கோரியது, பாலஸ்தீனியர்களை அந்நிய இராணுவ ஆக்கிரமிப்பு அரசின் கீழ் வசிக்கும் மக்கள் என்றும் விவரித்தது." பாலஸ்தீனியர்கள் தற்போது காலனி ஆதிக்க, பாரபட்சம் காட்டும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள், அந்த ஆக்கிரமிப்பு அவர்களின் அடிப்படை சுயநிர்ணய உரிமையை மீறுகிறது" என்று வரைவு தீர்மானம் கூறுகின்றது.

கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் மேன்லி இஸ்ரேல் மீதான விமர்சனம் பற்றிய அமெரிக்காவின் கவலையை எதிரொலித்தார் மற்றும் ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம், தான் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறினார். தீர்மானத்திற்கு அமெரிக்க எதிர்ப்பானது, மாநாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியங்களின் ஆதரவையும் கூட கீழறுத்துள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் கோபிஅன்னான் அமெரிக்காவை சாந்தப்படுத்தி மாநாட்டில் பங்கேற்க இணங்கச் செய்வதற்கு தன்னால் முடிந்த எல்லலாவற்றையும் செய்தார். மாநாட்டை விருந்தோம்பும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் அரசாங்கமானது சர்ச்சைகளைக் குறைத்துக் காட்டுவதற்கு படாதபாடு பட்டது. தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி தாபோ ம்பெக்கி, புஷ்- பாவெலை அனுப்ப மறுத்ததைப் பற்றி கருத்துக்கூற மறுத்தார். மனித உரிமைகளுக்கான ஐ.நா தூதுவர் மேரி ரொபின்சன் அதேபோன்ற சமரச நிலைப்பாட்டை எடுத்தார். இஸ்ரேல் மீதான தீர்மானத்தைப் போலவே அமெரிக்காவையும் மேற்கத்திய வல்லரசுகளையும் நிலைகுலையச் செய்த பல தீர்மானங்கள் அங்கு இருந்தன. அட்லாண்டிக்- கடந்த அடிமை வியாபாரம் மனித குலத்திற்கு எதிரானகுற்றம் மற்றும் அந்த இழப்பை சரியீடுசெய்யவும் ஏற்றுக்கொள்ளக் கோரும் ஆபிரிக்க நாடுகளிடமிருந்து வந்த தீர்மானங்களும் இவற்றில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தன --இரண்டும் இப்பொழுது கைவிடப்பட்டிருந்தன.

தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய அரசுகளின் பதட்டம் கொண்ட எதிர்வினையானது அரபு ஆட்சிகள்தான் பாலஸ்தீனியர்களின் பாதுகாவலர்களாக இருப்பன என்ற அரபு ஆட்சிகளின் கோரலுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கவில்லை. இண்டிபதா தொடங்கியதன் பின்னரான அவர்களின் செயல்பாடுகளின் உள்ளடக்கத்தில், தீர்மானத்தை மேசையில் வைத்தது சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சிப் பண்பைக் கொண்டிருந்தது. பாலஸ்தீனியர்களுக்கு உதவ முன்வருவதற்கு அவர்களின் எதிர்ப்புக்கு மூடுதிரையாக, ஐ.நாவில் வாய்ச்சவடாலைப் பயன்படுத்துதற்கு மீண்டும் ஒருமுறை நாடினர்.

கடந்த செப்டம்பருக்கு பின்னரான ஐந்திற்கும் குறையாத அரபு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் அவசர கூட்டத்தில், சில நாட்களுக்கு முன்னர் தான் கெய்ரோவில் நடைபெற்ற கூட்டத்தில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான நடவடிக்கைக்கான திட்டம் தங்களிடம் இல்லை என்று சிரிய வெளியுறவு அமைச்சர் பரூக் அல்-ஷாரா அப்பட்டமாக ஒத்துக் கொண்டார். ஒரு அரபு பிரதிநிதி "அது சங்கடமாக ஆகிவிட்டது" என்றார். "அவர்கள் சந்திப்பதற்கே ஏன் அக்கறைப்படுகிறார்கள்" என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

தங்களது சொந்த குடிமக்கள் மத்தியில் இஸரேல் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு கடும் குரோதத்தை எதிர் கொள்கையில், அரபு ஆட்சிகள் எப்படியாவது எதிர்ப்பைக் காட்டுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இண்டிபதா முதலில் வெடித்தபொழுது, வளைகுடா யுத்தத்திற்குப் பின்னரான முதலாவது அரபு உச்சி மாநாடு ஈராக்கிற்கு நிதி மற்றும் அரசியல் ஆதரவைத் தருவதாக உறுதி அளித்தது. அது உயர் காட்சி மேடைத் தோற்றமாக இருந்ததைத்தவிர வேறொன்றுமில்லை. எகிப்தும் ஜோர்டானும் அமெரிக்காவிற்கு நன்றிக்கடன் பட்டதாகவும் தங்களின் தத்தளிக்கும் ஆட்சிகளை மூழ்கிப்போகவிடாது மிதக்க வைக்கும் கடன்வசதிகளை இழக்க வேண்டி வருமே என்ற அச்சத்தில், இஸ்ரேலுடனான தங்களின் அமைதி ஒப்பந்தங்களை திரும்பப்பெற எத்தனிக்காது இருந்தனர். செளதி அரேபியா உலக வர்த்தக அமைப்புக்குள் நுழைவதற்கு விரும்பியதுடன் இஸ்ரேலைப் பின்வாங்கும்படி செய்ய மேற்கத்திய அரசுகளை நிர்ப்பந்திப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான கருவியாக எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த மறுத்தது.

ஒவ்வொரு வாரமும் வெடித்தெழும் வன்முறைகளுடன், வேலையின்மை, ஏழ்மை மற்றும் ஒடுக்குமுறை வளரவளர அரபு ஆட்சிகள் வெகுஜனங்கள் தீவிரமயப்படுத்தப்படுவது கண்டு அஞ்சுகின்றன. செளதி ஆட்சியானது பொது ஜனங்களின் கோபம் அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களைத் தூண்டிவிடும் என அஞ்சுகின்றது. அதேவேளை ஜோர்டான் அரசாங்கம் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்துள்ளதுடன் தேர்தலை நடத்தினால் பாலஸ்தீனிய ஆதரவு மற்றும் இஸ்லாமிய கட்சிகள் வெல்லலாம் என்று அஞ்சி நடத்த வேண்டிய தேர்தலை இலையுதிர்காலத்துக்கு தள்ளிப் போட்டுள்ளது.

மொகம்மது சித்-அஹ்மது எனும் எகிப்திய விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டவாறு, "அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் பலமானதாக இருந்தால், சூழ்நிலை கையைவிட்டுப் போகவும்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இண்டிபதா பாலஸ்தீனிய எல்லைகளுக்கு அப்பால் போய்விடலாம் என ஒவ்வொருவரும் அஞ்சுகின்றனர் மற்றும் இராணுவ ரீதியாய் பதிலிறுப்பதற்கு ஒருவரும் தயாரில்லை. "இந்த சூழ்நிலைமைகளின் கீழ், தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாக சோவியத் ஒன்றியம் இன்னும் காட்டிக் கொண்டிருந்தபொழுது நிறைவேற்றப்பட்ட 1975 தீர்மானம் போல, அது பேராளர்களுக்கு கடப்பாடுடையதாக இருக்காது என்று நன்றாகத் தெரிந்திருந்தும், அரபு ஆட்சிகள் மீண்டும் ஒரு முறை ஐ.நாவில் சூழ்ச்சிகளைச் செய்வதற்கு திரும்பி இருக்கின்றன.

இஸ்ரேலிய அரசின் குற்றங்களை எதிர்ப்போர் மத்தியில், மிகக் குறைந்த மட்டத்தினருடன் செயலாற்றுவதற்கு யூத எதிர்ப்புவாதத்தை தட்டி எழுப்புவது அவர்களின் இன்னொரு எதிர்வினையாக இருக்கிறது. குறிப்பாக சிரியாவும் ஈரானும் நச்சுத்தன்மை வாய்ந்த யூத எதிர்ப்பு அறிக்கைகளுடன் வந்துள்ளன. டாவிட்டின் நட்சத்திரத்தையும் ஸ்வாஸ்திகாவையும் கொச்சைத்தனமாக சமமானவையாகக் காட்டும் கருத்துப் படத்தைக் கொண்டிருந்த சிற்றேடு, மேரி ரொபின்சனை எதிர்ப்புத் தெரிவிக்கவும் "நான் ஒரு யூதர்" என்று நாடகப் பாணியில் பிரகடனப்படுத்தலைச் செய்யவும் இட்டுச் சென்றது.

அரபு முதலாளித்துவ வர்க்கத்தால் செய்யப்பட்ட பெரும்பாலான பிரச்சாரத்தின் பிற்போக்குத்தன்மையானது, சியோசினிசவாதிகளின் கைகளில் பயன்படும் வகையிலும் இந்தப் பிராந்தியத்தில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான அடித்தளத்தை வழங்கும் பிளவுகளை அரபுத் தொழிலாளர்களுக்கும் யூதத் தொழிலாளர்களுக்கும் இடையில் வளர்த்தெடுக்கும் வகையிலும், யூதமக்களை இஸ்ரேலிய அரசுடன் அது நேரடியாக சமப்படுத்துதலால் ரத்தினச் சுருக்கமாகக் காட்டப்பட்டது. அவர்களின் இறுதி இலக்கானது, மத்திய கிழக்கு முழுவதிலும் ஆளும் தட்டுக்கு எதிரான பொதுப்போராட்டத்தில் அரபு மற்றும் யூதத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துதற்கும் ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டி அமைப்பதற்குமான அரசியல் இயக்கத்தை வளர்த்து எடுப்பதைத்தடை செய்வதாகும்.