World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Stocks plunge amid fears of world slump

உலக ரீதியான பொருளாதார படு இறக்கத்தின் அச்சங்களுக்கு மத்தியில் பங்கு முதல்கள்வீழ்ச்சி

By Patrick Martin
5 September 2001

Use this version to print

பூகோள பொருளாதாரப் பின்னடைவின் முழுத் தாக்குதலின் வளர்ந்துவரும் அச்சங்களை வெளிப்படுத்தும் வீழ்ச்சியில், அமெரிக்க பங்குச்சந்தையானது கடந்த நான்கு மாதங்களில், கடந்த வாரத்தில் அதன் மிகக் குறைவான புள்ளியை எட்டியது. டெள-ஜோன்ஸ் தொழில்துறை சராசரி தொடர்ச்சியாக அடுத்தடுத்து நான்கு நாட்கள் வீழ்ச்சி அடைந்து, 10,000 க்கும் கீழே இறங்கியதுடன் முடிவடைந்தது, அதேவேளை நாஸ்டாக் பல்வகைக் குறியீட்டெண் 1800க்குக் கீழே வீழ்ச்சியுற்றது. ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர், ஒர் குறியீட்டெண் கூட அந்த அளவு கீழ் நிலையில் இருந்ததில்லை. நாஸ்டாக் குறியீட்டெண்அதன் சிகரமாக இருந்த 2000லிருந்து 64 சதவீதம் பொறிந்துள்ளது; டெள(Dow) 15 சதவீதம் வீழ்ச்சிஅடைந்துள்ளது.

ஆகஸ்ட் 30ல் 171.32 அளவு கீழிறங்கிய டெள, வெள்ளிக்கிழமை நடந்த வர்த்தகத்தில் மிகச்சிறிய அளவிலான மீட்சி இருந்த போதிலும், அந்த வாரம் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக கீழிறங்கியது. சன் மைக்ரோ சிஸ்டத்திலிருந்து வந்த எதிர்மறையான விற்பனை அறிக்கையால் நாஸ்டாக் இன்னும் மூன்று சதவீதம் வீழ்ச்சி அடைந்தது, அது ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய சந்தைகளில் விரைந்து அழிவுகளைக் கொண்டு வரும் என எச்சரித்தது. ஆகஸ்ட் 30 அன்று மட்டும் சன் பங்கு 17 சதவீதம் வீழ்ந்தது.

வோல்ஸ்ட்ரீட்டின் இந்த நிகழ்ச்சிகள் பூகோள பங்குமுதல் சந்தைகளை வார முடிவில் கீழிறங்க வைத்தன. ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி வீதங்களை கால் புள்ளி அளவில் குறைப்பதாக அறிவித்திருந்தும், ஐரோப்பிய பங்கு முதலின் விலைகள் வெள்ளி அன்று 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. ஐரோப்பிய மத்திய வங்கியானது, இந்த ஆண்டின் இரண்டாவது கால் பகுதியில் ஜேர்மன் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது, அதேவேளை இத்தாலிய மற்றும் பெல்ஜிய பொருளாதாரம் உண்மையில் சுருங்கி விடும் என்ற அறிக்கைகளுக்கு எதிர்ச் செயல் புரிவதில் ஊக்கமுடன் இருந்தது.

வட்டி வீதங்களை வெட்டும் அதனது முடிவில், ஐரோப்பிய மத்திய வங்கியானது அமெரிக்க விலை வீழ்ச்சிகளை பிரதான காரணி என்று மேற்கோள் காட்டியது. வங்கியின் தலைவரான விம் டுய்சென்பேர்க் (Wim Duisenberg) பின்வருமாறு குறிப்பிட்டார், "குறையும் அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தில் இருந்து எழுகின்ற, குறையும் பொருளாதார வளர்ச்சி வேகமானது முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்தவாறு பெரியது, ஆழமானது மற்றும் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடியது. "ஒரு செய்தியாளர் மாநாட்டில் விம் டுய்சென்பேர்க், குறையும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வேகத்தின் விளைவுகளை ஐரோப்பிய மத்திய வங்கியானது குறைத்து மதிப்பிட்டிருந்ததில்லை, ஆனால் அதன் நீட்டிப்பு மற்றும் கடுமைபற்றி குறைத்து மதிப்பிட்டிருந்தது என்று குறிப்பிட்டார். "அமெரிக்கப் பொறுப்பாளர்களுடன் சேர்ந்து, நாங்கள், உண்மையில் அளவுக்கு மீறிய நம்பிக்கையுடன் இருந்தோம்" என்றார்.

பொருளாதாரச் சரிவு பற்றிய மேலும் கூடிய செய்திகளுக்கு மத்தியில், திங்கள் மற்றும் செவ்வாய் அன்று ஐரோப்பிய பங்கு சறுக்குவது தொடர்ந்தது. லண்டனில், வாங்கல் மற்றும் விநியோகத்திற்கு உரிமையுடைய நிறுவனம் (Chartered Institute of Purchasing and Supply), பிரிட்டிஷ் உற்பத்தி அடுத்தடுத்து ஆறு மாதங்களாக ஆகஸ்டில் வீழ்ந்தது என்று அறிவித்தது. ஜேர்மனியின் மென் பொருள் தயாரிப்பிலேயே மிகப்பெரிய நிறுவனமான SAP, லாபத்தைப் பற்றிய எச்சரிக்கையைத் தரும் என்ற செய்தியின் பேரில் திங்கட்கிழமை அன்று 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. டோக்கியோ பங்கு முதல் சந்தை கிட்டத்தட்ட ஒவ்வொருநாளும் குறைந்த மட்டங்களின் புதிய பதிவுகளை அடைவதனால் ஆசிய சந்தைகளும் கூட வீழ்ச்சி அடைகின்றன. ஜப்பானிய சரிவானது, நாட்டின் நீல சில்லுகள் கார்ப்பொரேஷன் (Blue chip corporations) களில் -- புஜிட்சு, ஹிட்டாச்சி, டோஷிபா, மட்சுஷிட்டா எலெக்டிரிக், நிசான், மிட்சுபிஷி, மாஜ்டா மற்றும் இசுஜு அனைத்தும் 4000லிருந்து 20,000 வரை வேலைகளை வெட்டுவதாக அறிவித்துள்ள-- எதிர்பாரா வடிவங்களில் வேலை குறைப்பினால் ஏற்படும் வேலை இழப்பினால் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 3, திங்கட்கிழமை அன்று, நிக்கெய் பங்கு முதல் சராசரியாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ந்தது, அது 303.8 புள்ளிகளை இழந்து, 10,409.68 ஐ அடைந்தது. நிக்கெய் சராசரி டெள மட்டத்திற்கு கீழேயும் விழக்கூடிய உண்மையான சாத்தியக்கூறு இருந்தது --ஜப்பானிய முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை இது வியப்பூட்டும் அளவுக்கு தலைகீழான நல்லகாலம் ஆகும். 10 ஆண்டுகளுக்கு முன்னர்தான், நிக்கெய் 30,000ல் முடிந்திருந்தது மற்றும் டெள 3,000 க்கும் கீழே இருந்தது.

நாஸ்டாக் பொறிவால் சிறு முதலீட்டாளர்கள் அச்சமடைந்ததால், பரஸ்பர நிதி பங்குமுதல் பரந்த சந்தைகளை விட்டு வெளியேறத் தொடங்குவது ஆரம்பிக்கும், விற்றல் பற்றிய நிதி ஆய்வாளர்கள் மத்தியில் அச்சம் வளர்ந்து வருவதாக செப்டம்பர் 4 அன்று லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. பாங்க் ஆப் அமெரிக்கா கடனீட்டுப் பத்திரங்களின் சந்தை மூலோபாய வல்லுநர் ரொம் மாக்மானஸ் (Tom McManus), போராடும் பொருளாதாரம் மற்றும் இருளார்ந்த சந்தை தோற்றங்களுக்கு மத்தியில் அடுக்கடுக்கான புதிய கார்ப்பொரேட் லாபங்கள் குறித்து, "செப்டெம்பர் புயல்" சாத்தியம்பற்றி எச்சரித்தார். சராசரி அமெரிக்கபங்கு நிதி கடந்த ஆண்டின் 2சதவீத வீழ்ச்சியில்இருந்த அந்த உயர்மட்டத்திலிருந்து இந்த ஆண்டில் 13 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ந்துள்ளது. பரந்த அளவில் வைத்திருக்கும் சில நிதிகள் இன்னும் அதிகம் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஜானஸ் (Janus) நிதி இந்த ஆண்டு வரை 25 சதவீதத்தை இழந்துள்ளது, அதேவேளை பிடலிட்டி வளர்ச்சி நிதி 26.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்கு நிதிகள் மொத்தத்தையும் பொறுத்தமட்டில், 2000 மற்றும் 2001க்கு இடையிலான இழப்புக்கள் இந்த வகை முதலீடு பரந்த அளவில் செல்வாக்கு அடையத்தொடங்கியதன் பின்னால் ஏற்பட்ட முதலாவது நிகழ்வு ஆகும்.

பரஸ்பர நிதி தொழில் துறைக்கான தலைமை வர்த்தகக் குழு ஆகஸ்ட் 30 அன்று ஜூலையில் 1.2 பில்லியின் டொலர்கள் திரும்ப்பப்பெறலை அனுபவமாகப் பெற்றது, இது மார்ச் மாதத்திற்குப் பின்னரான முதலாவது வெளியேற்றமாகும். பங்கு நிதிகள் 3.6 டிரில்லியன் டொலர்களை சொத்தாகக் கொண்டிருக்கின்றன மற்றும் வோல்ஸ்ட்ரீட்டில் அது மிகப்பெரிய தனித்த முதலீட்டாளர் ஆக இருக்கின்றது, அது அனைத்துப் பங்குகளிலும் ஐந்தில் ஒரு பாகமாகும். இச்சொத்துக்களில் அரைவாசிக்கும் மேலானவை கோடிக்கணக்கானோர் தங்களின் ஓய்வூதிய வருமானத்திற்காகத் தங்கி இருக்கும் IRA, 401K மற்றும் ஏனைய தனியார் ஓய்வூதியத் திட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. 1987 அக்டோபர் சந்தைப் பொறிவிற்குப் பின்னர், அதைத்தொடர்ந்த 18 மாதங்களில் 16 மாதங்கள் நிதிகள் வெளியேற்றத்தால் பங்கு நிதிகள் பாதிக்கப்பட்டன. அவை பொறிவிற்கு முந்தைய சொத்துக்களில் 12 சதவீதம் ஆகும். அந்த அலகுகளில் இன்று திரும்பப்பெறல் சந்தையிலிருந்து 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமானவை, 1987ல் வெளியேறியது போல 13 மடங்குகள் ஆகும். இது நிதி அமைப்பு முறைக்கு கணக்கிடமுடியாத விளைவுகளைக் கொண்டிருக்கும்.

பிசினஸ் வீக் இதழ், "தற்போதைய மனநிலை" என்று தலைப்பிடப்பட்ட சிறு முதலீட்டாளர் மனநிலையை பற்றிய மதிப்பீட்டில், "இயற்பியல் நியதிகளை --பொருளாதார நியதிகளை எதிர்த்து நிற்பதாகத் தோற்றமளித்தாலும்கூட, ஆழமாக இருப்புக் கொண்ட சமூகத் துன்பங்களை ஆற்றுப்படுத்துகின்ற செல்வச் செழுமையினை தோற்றநிலையாகக் கொண்ட சுழற்சி" யின் மேலோட்டமான முடிவைப்பற்றி புலம்புகிறது. முழு வளர்ச்சி பெற்ற நிதிரீதியான பீதி இன்னும் அபிவிருத்தி அடைந்திருக்கவில்லை எனும் வியப்பு காணப்படுவதை அவ்விதழ் வெளிப்படுத்துகிறது: "சிலவகை வலிமையான பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்கையில் பீதிக்கான பொத்தான்களை அழுத்த பொதுமக்கள் மறுப்பது தெரிய வருகின்றது. தொழில்நுட்பத்துறை- பங்கு குமிழிகளின் பொறிவானது, காகிதப் பணத்தில் 5 டிரில்லியன் டொலர்களை துடைத்துக்கட்டியதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த அக்டோபருக்குப் பின்னர், தனிநபர் கடனானது சராசரி ஆண்டு வீதமாக 8.2 சதவீதம் உயர்ந்துள்ளது. பத்து மாதங்களுக்கு முன்னர் உற்பத்தித் தொழிற்துறை சறுக்கலைச் சந்தித்தது- அங்கேயே நிற்கிறது. ஒரு குறிப்பிட்ட வேளைக்குப் பொருந்தாத சமயத்தில், சக்தி (energy) விலைகள் உயரே எழுந்தன. இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த நாடகத்தில், கார்ப்பொரெட்டுகளின் லாபங்களில் வறட்சியானது வேலைகள் குறைப்பினால் ஏற்படும் லட்சக்கணக்கான வேலைகள் இழப்புக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது."

வர்த்தக இதழானது புஷ் நிர்வாகத்தால் தள்ளப்படும் வரி வெட்டுக்களை நிராகரித்து எழுதுகையில், "தள்ளுபடிக்கான காசோலைகள் சில்லறைக் காசுகளைவிட --அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் ஆன 40 பில்லியன் டொலர்களைவிட-- மிக அதிகமானது அல்ல. இந்த நிதி தூண்டலின் அற்பத்தன்மையை எடுத்துக் காட்டும் இன்னொரு அளவு கோல்: பெரிய கம்பெனிகள் ஏற்கனவே உடலுழைப்பற்ற தொழிலாளர்கள் மற்றும் இடை நிர்வாகத்தினர் ஆகியோருக்கு எதிர்பார்க்கப்படும் போனசை --மொத்தமாக 30 பில்லியன் டொலர்களை--வரிவிலக்கின் மதிப்பில் முக்கால் பாகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்க அரசாங்கமானது உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சி பற்றிய அதன் மதிப்பீட்டை கடுமையாகக் குறைத்துள்ளது. 1999 மற்றும் 2000 ல் ஆண்டுக்கு 3.4 என்ற வீதத்திலிருந்து கீழ்நோக்கியதாக 2.6 சதவீதமாக மட்டும் திருத்தியது. அமெரிக்க ஐக்கிய நாடுகளானது உற்பத்தித் திறன் வளர்ச்சியை 1975 முதல் 1995 வரை நீடித்திருந்த 1.4 சத வீதத்திலிருந்து இரண்டரை மடங்கு பெரியதான எண்ணுக்கு முடுக்கி விடலின் மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்த "புதிய பொருளாதார" சகாப்தத்துக்குள் அமெரிக்கா நுழைந்துள்ளது என்ற கோரல்களுக்குப் பின்னர், சிறிய வித்தியாசமாகத் தோன்றும் இது பெரும் அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

மத்திய ரிசேர்வ் வாரியத்தின் தலைவர் அலன் கிரீன்ஸ்பான் மற்றும் வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டாளர்கள் இருவரது கொள்கைகளும் வெள்ளை மாளிகையாலும் காங்கிரசினல் வரவு- செலவுத் திட்ட அலுவலகத்தாலும் தயாரிக்கப்படுகிறது, அது இறுதியில் உற்பத்தித் திறனில் திட்டம் வகுக்கப்பட்ட வளர்ச்சியைச் சார்ந்துள்ளது. வர்த்தகத் துறையால் அறிவிக்கப்பட்ட அளவீட்டின் படியான உற்பத்தித்திறன் வளர்ச்சியில் கீழ்நோக்கிய திருத்தலானது, அடுத்த பத்தாண்டின் மீதான திட்டம் வகுக்கப்பட்ட உபரியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டொலர்களை வெட்டும்.

இந்த உற்பத்தித்திறன் பற்றிய எண் விபரங்கள் கடந்த ஐந்தாண்டுகளின் நிதி செழிப்பின் யதார்த்தத்தைப் பற்றி கேள்வி எழுப்புகின்றன என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிடுகின்றது: "இப்பொழுது அந்த செழிப்பானது மந்தமான வளர்ச்சியாக பொறிந்துள்ளது, அந்த செல்வச் செழிப்பிற்கு உற்பத்தித்திறனின் பங்களிப்பு நிச்சயமற்றதாக இருக்கிறது. தற்காலிக காரணிகளான-- எடுத்துக்காட்டாக, வளம் கொழிக்கும் சந்தை, மேலதிக வர்த்தக முதலீடு, கடன் நிதி பெற்ற நுகர்வோர் செலவில் எழுச்சி அலை ஆகியன-- அனைத்தும் முக்கிய பாத்திரங்களை ஆற்றும் என்று திருத்தப்பட்ட உற்பத்தித்திறன் பற்றிய எண் விபரங்கள் கருத்துரைக்கின்றன."

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், செழிப்பானது சந்தைகள் எப்பொழுதும் மேல் நோக்கியே செல்கின்றன ஒருபோதும் கீழிறங்காது என பொதுமக்களை நம்பச்செய்யும் வண்ணம் பொய்யான புள்ளிவிவரங்கள் மற்றும் தொலைபேசியில் வாணிகக் கணக்குப் பதிவு ஆகியவற்றால் முண்டு கொடுக்கப்படும் நிதிரீதியான ஊகத்தையே பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.