World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள்
& ஆய்வுகள் :ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: Children in Poverty ஜேர்மனியில் சிறுவர்கள் ஏழ்மையில் By Dietmar Henning ஜேர்மன் அரசினால் கடந்த ஏப்ரலில் முதலாவது தடவை ஏழ்மை-வறுமை தொடர்பான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இது வளர்ச்சியடைந்துவரும் சமூக சமத்துவமின்மையை காட்டுகின்றது. ஒரு புறத்தில் அளவுக்கு மீறிய பணக்காரர்களும் மறு புறத்தில் ஏழைகளையும் கொண்டதாக இச்சமுதாயம் உள்ளாதாக இவ்வறிக்கையை சேர்த்து வெளியிட்ட ERNST ULRICH HUSTER குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையானது அதிகரித்துவரும் ஏழ்மையின் நிலைமை குறித்து விபரமாக ஆய்வு செய்துள்ளது. மே 16 ம் திகதி வெளிவிட்ட எமது ஆய்வில் நாம் பின்வருமாறு குறிப்பிட்டோம். "15, 20 வருடங்களுக்கு முன்னால் முதுமையானவர்கள் மாத்திரமே தமது வாழ்க்கைத்தரத்தில் ஏழ்மைக்குள் தள்ளப்பட்டனர். ஆனால் இன்று ஏழ்மை இளமையாகிவிட்டது. இது இன்று ஆட்சி செய்யும் அரசாங்கத்தினாலும் மாற்றப்பட வில்லை, மாறாக மோசமடைந்துள்ளது. இதை கடந்த செவ்வாய் அன்று கூட்டப்பட்ட பல சமூகநல நிறுவனங்கள் அடங்கிய தேசிய ஏழ்மைக்கான மாநாடு (NAK) மீண்டும் பத்திரிகை மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. ஏழ்மையானது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள, இளமையான, வெளிநாட்டவர்களின் குடும்பங்களிலும், தகப்பனற்ற குடும்பங்களும், வேலையற்ற குடும்பங்களிலும் கூடுதலாக உள்ளது. ஆனால் அரசாங்கமானது இவ் ஏழ்மை-வறுமை அறிக்கையில் குறிப்பிடப்படும் எண்ணிக்கைகள் விதிவிலக்கானவை எனவும், ''சமூகப்பிரச்சனை தீவிரமான'' ''பிரச்சனைக்குரிய பகுதியினரின்'' பிரச்சனை எனவும் காட்டமுயல்கின்றது. இளம் குடும்பத்தினரையும், தகப்பனற்ற குடும்பங்களையும் ''பிரச்சனைக்குரிய பகுதியினர்' என எடுத்துக்காட்டுவது உண்மையில் நடைமுறையில் உள்ளதை திரிப்பதும், அவ்வறிக்கையில் குறிப்பிடுவதுபோல் இப்பிரச்சனை சமுதாயத்தில் எல்லையிலுள்ள குடும்பத்தினர் மத்தியில் இல்லாது நடுத்தர குடும்பத்தினர் மத்தியிலும் காணப்படுகின்றது. பிராங்போட் என்னும் இடத்திலுள்ள சமூக சேவை, சமூக நிபுணத்துவர்கள் நிறுவனம் தொழிலாள நலன்புரி அமைப்பின் (ARBEITE WOHNFAHT) சார்பில் வெளிவிட்ட அறிக்கையில் இந்த நிலைமையை தெளிவுபடுத்துகின்றது. "ஏழ்மையான சிறுவர்களும் இளைஞர்களும் எல்லாப் பிராந்தியங்களிலும் உள்ளனர். நாட்டுப்புறங்களிலும் உள்ளனர். இவர்கள் அதிகமாக தாய் தகப்பன் உள்ள குடும்பங்களிலே உள்ளனர். அதிகமான சிறுவர்களும் இளைஞர்களும் சிறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். ஏழ்மையான குடும்பங்கள் அதிகமானவையில் தகப்பன் தொழில் புரிகின்றனர். பிள்ளைகளை தனித்து வளர்ப்பவர்கள், வேலையற்றவர்கள், வெளிநாட்டவர்கள், இளமையான குடும்பத்தினர், அதிகமாகபிள்ளைகள் உள்ள குடும்பங்களு "எரியும் சமூகப்பிரச்சினையில்" அதிகமாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் அர்த்தம் இவர்கள் மட்டும்தான் ஏழ்மைநிலையில் இருப்பவர்கள் அல்ல ஏழ்மை ஜேர்மனியில் மேலோங்கி வளர்ச்சி கண்டுள்ளது. 1998ல் மொத்த குடும்பங்களில் நான்கில் மூன்று பகுதி (78வீதமான) திருமணமான குடும்பங்களில் பிள்ளைகளுடன் உள்ளனர். ஐந்தில் ஒருபகுதியினர் (ஏறத்தாள 18 வீதம்) தாய் அல்லது தகப்பன் இல்லாதவர்கள். இதில் 4 வீதமானாவர் திருமணமாகாது ஒன்றாக வாழும் குடும்பத்தின் பிள்ளைகள். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஏழு பிள்ளைகள் அதாவது ஒவ்வொரு ஏழு இளைஞர்கள் (மொத்தமாக 2,24மில்லியன்) 1998ல் அரைவாசிக்கு குறைந்தசராசரி வருமானத்தில் வாழுகின்றனர். இவர்கள் ஏழைகள் என குறிப்பிடவேண்டும். அரைவாசிக்கு மேற்பட்ட இவ்விளைஞர்கள் சமூக நல உதவியில் வாழ்கின்றனர். 1998 ல் ஜேர்மனியில் 2,88 மில்லியன் மக்கள் 1,5 மில்லியன் குடும்பங்கள் சமூக நல உதவி பெற தள்ளப்பட்டனர். இதில் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் 1,1 மில்லியனாகும். இவர்கள் "பெரிய குழுக்கள்" என அரசு அறிக்கை வர்ணிக்கின்றது. இந்த சமூகவசதியில் வாழ்பவர்களில் தனித்து வாழும் பெண்கள் அதிகமாக உள்ளனர். அனேகமாக ஒவ்வொரு 3 தனித்து வாழ்பவர்கள் (31,1வீதமாக) மேற்கு ஜேர்மனியில் சமூக வசதிப்பணம் பெறுபவர்களாவர். இது மேலும் 90,000 பெண்களாவர். கிழக்கு ஜேர்மனியில் 17 வீதமான தனித்து வாழ்பவர்கள் சமூகப்பணம் பெறுகின்றனர். 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் சமூகப்பணம் பெறுகின்றார்கள். இது ஒரு பெற்றார் உள்ள குடும்பத்தில் அதிகரிக்கின்றது. வேலையும் குழந்தை வளர்ப்பும் ஜேர்மனியில் இன்னும் ஒன்றோடு ஒன்று பொருந்துவதில்லை. இதனை வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுகின்றது. மேற்கு ஜேர்மனியில் 1972 இல் இருந்து 1993 வரையில் 40% இருந்து 51% ஆக அதிகரித்துள்ளது. இது அதிகரித்துவரும் ஏழ்மையினால் இல்லை. மாறாக பாடசாலைக்கு செல்லும் வயதையடைந்த பிள்ளைகளினால் ஆகும். 6வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளை உடைய பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரிக்காததுடன், முழுநேர வேலைக்கு செல்லும் பெண்களின் தொகை 1972 இல் 1996 ஐ விட அதிகமாக இருந்தது. கிழக்கு ஜேர்மனியில் DDR காலத்தில் தொழில்புரிந்த அதிக தாய்மார்கள் ஜேர்மனியின் மறுஇணைப்பின் பின் மோசமாக குறைந்தது. 1991ல் 83 வீதமாக இருந்தது, 1998 ல் 71 வீதமாக குறைந்தது. 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் தாய்மார்கள். பிரத்தியேகமாக 6 வயதிற்குட்பட்ட தாய்மார்கள் கூடிதலாக வேலையில்லாது இருக்கின்றனர். வெளிநாட்டவர் குடும்பங்களில் இந்தநிலைமைமேலும் ஒருபடி மோசமானது. பிரத்தியேகமாக துருக்கியர் குடும்பத்தில் பெண்கள் ஆகக்குறைந்தவர்களே தொழில் புரிகிறார்கள். வெளிநாட்டு பெண்கள், பராமரிப்பு பிரிவிலும், கடைகளிலுமே அதிகமாக வேலை செய்கின்றனர். இவர்கள் குறைந்த அந்தஸ்த்தும், குறைந்த சம்பளத்திலும் எந்தவித முன்னேற்றமுமின்றி பாதுகாப்பற்ற வேலைசெய்கின்றனர். 1.1.1999 இருந்து சிறுவர் பாடசாலைக்கு செல்ல அனுமதி பெற்ற 3 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் சட்டரீதியில் பாடசாலைக்கு உரிமை பெற்றுள்ளதாக எழுத்துக்களில் இருந்த போதிலும் உண்மையாக இடமில்லாது உள்ளனர். பிரத்தியேகமாக மேற்கு ஜேர்மனியில் இது மோசமான பாடசாலை நேரங்கள் பராமரிப்பிற்கு போதிய வசதியின்மையால் முழுநேரப் பாடசாலையை தொடர முடியாத நிலையிலுள்ளது. சர்வதேச நிலைமைகளுடன் ஒப்பிடும்போது ஜேர்மனியில் சிறுவர்கள் பராமரிப்பு நிலைமை மிகவும் மோசமான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. 90களில் சிறுவர்களின் பராமரிப்பு எண்ணிக்கை வீதம் மூன்று வயதிற்குட்பட்டவர்கள் டென்மார்க்கில் 48%, சுவீடனில் 33%, போர்த்துக்கடிலில் 12% ஆகவுள்ளது. இந்த முன்நிபந்தனைகளால் தனித்து பிள்ளைகள் வளர்க்கும் தாய்மார்கள் தமது பிள்ளைகளை ஏழ்மைக்கு இட்டு சென்றுள்ளனர். இந்நிலை சேர்ந்து வாழும் குடும்பங்களிலும் தாக்கத்தினை உண்டாக்கியுள்ளது. மோசமான பராமரிப்பு, பாடசாலைகளின் வளமின்மையானதாக அல்லது தகப்பன் மாத்திரமே வேலைசெய்ய அனுமதிக்கின்றது. ஒருவரின் வருமானத்தில் இருந்து முழுக் குடும்பத்தினையும் பராமரிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது. இது தவிர்க்க முடியாதபடி இக் குடும்பங்களை ஏழ்மைக்கோட்டின் கீழ் இட்டுச்செல்கின்றது. மோசமான சிறுவர் பராமரிப்பு, குறைந்த வருமானம், வேலையில்லா நிலைமை, சிறுவர்களையும் இளைஞர்களையும் ஏழ்மைக்கு தள்ளிவிடுகிறது. இது வாழ்நாள் முழுவதும் விரக்தி நிலைக்கு வழிசமைக்கின்றது. தாய், தகப்பன் தமது பிள்ளைகளின் மீதான கட்டுப்பாட்டினை இழப்பதுடன் தவிர்க்க முடியாதபடி பிள்ளைகள் தன்னம்பிக்கை இழந்து வாழ்க்கையுரிமையும் இழக்கின்றனர். சிறுவர்களும் இளைஞர்களும் இப்படியானதொரு சுழச்சி நெருக்கடிக்குள் சிக்குப்பட்டுள்ளனர். நிதியின்மை, வருமான வருவாயின்மையும் தவிர்க்க முடியாதபடி குறைந்தபடிப்பு, சுகாதார வசதியின்மை இவைகள் சமுதாயத்தில் பலாத்கார நடவடிக்கையினை துண்டுகின்றது. குறிப்பாக "பெண்களும் சிறுவர்களும்" பலாத்காரத்தில் என்ற அறிக்கை தமது ஆய்வில் ஒவ்வொரு மூன்று குடும்பங்களில் பலாத்காரம் உள்ளதாகவும், 400 பெண்கள் நிறுவனங்கள் ஜேர்மனியில் உள்ளதாகவும், வருடத்தில் 45.000 பெண்கள் தமது பிள்ளைகளுடன் அங்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. பெற்றோரின் வசதியின்மையால் பிள்ளை தனது படிப்பிற்கான உபகரணங்களை வாங்கமுடியாத நிலை, தமக்கு விரும்பிய சாமான்களை வாங்கமுடியாத நிலை, பிள்ளைகளின் தனித்துவமான வளர்சியை தடைசெய்கின்றது. இதன்விளைவு தன்னம்பிக்கை குறைந்த, விரக்தி, தனிமைநிலை, எளிதில் நம்பிக்கையின்மை, நரம்புதளர்ச்சி, ஈடுபாட்டு குறைவு இவைகளால் பாதிக்கப்பட்டு இறுதியில் ஒரு தொழில்புரியும் படிப்புக்கான தகுதியையும் இழக்கின்றனர். மேலும் உயர்ந்த வாடகை நிலைமையால் ஏழ்மைக் குடும்பங்கள் வசதியில்லாத வீடுகளைக் கொண்டுள்ளனர். சில பிராந்தியங்களில் பிள்ளைகள் சுகாதாரமற்ற சுற்றுசூழலும், முக்கியமாக வேலைக்கான படிப்புகளும், மேலதிக படிப்பிற்கான வசதியும், வேலைகளும், உதவி வசதிகளும் அற்ற கட்டுமான அமைப்பை கொண்டுள்ளன. இது பொது நிலையங்கள் மீதான வன்முறையையும், ஆத்திரத்தையும் கொண்ட நிலைக்கு காரணமாகியுள்ளது. இவ்வசதியற்ற நிலைமையானது அக்குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளத்தை இல்லாதொழித்துள்ளதுடன், அவர்களின் எதிர்கால தனிப்பட்ட, சமூக வாழ்க்கை உருவாக்கவதற்கான முன்னிபந்தனைகளை இல்லாதொழித்துள்ளது. பின்வரும் நிலைமைகள் குழந்தைகள் ஏழ்மையானவர்களாக காட்டப்படலாம் என அரசாங்க அறிக்கையே குறிப்பிட்டுள்ளது. *நாளாந்தவாழ்க்கைக்கு தேவையான சாதாரண தேவைகள் இல்லாதுபோதல், *சமூகவாழ்கையினுள் உள் இழுக்கப்பட தேவையான உதவிகள் இல்லாமை, *சமூகப்பொறுப்புக்கும், சமூக உறவுகளின் அபிவிருத்தியிலிருந்து அகற்றப்படுதல், *புத்திஜீவித, கலாச்சார பயிற்றுவிக்கும் வசதிகள் இல்லாதுபோதல், *தமது சூழலில் உடலியல் நல வசதிகள் இல்லாதுபோதல், *குடும்பங்களில் குழந்தைகள் கவனிக்கப்படாது விடுதல், *குடும்பங்களில் குழந்தைகள் வன்முறைக்குள்ளாகுதல். விஞ்ஞான ஆய்வுகளில் பணவசதியற்றமை ''வருமானமற்ற நிலைமை'' என குறிப்பிடப்படுகின்றது. ஆனால் வழமையாக இது கலாச்சார, சமூக ஏழ்மையையும், வைத்திய வசதிகள் உள்ளடங்கிய ஏனையவற்றின் பற்றாக்குறையையும் குறிப்பிடுகின்றது. இது பிற்போக்கான அரசியல்வாதிகளால் ஏழ்மையாக இருப்பது அவர்களின் பிழையெனவும், ஏழ்மையாக இருப்பவர்கள் படிப்பறிவற்றவர்கள் அல்லது முயற்சியற்றவர்கள் எனவும் கூறப்படுகின்றது. இது மட்டுமல்ல பணம் படைத்தவர்கள் படிப்பறிவானவர்கள், முயற்சி உடையவர்கள் என்றதுபோல் பிழையானது. வருமானம் குறைவு, கல்வியறிவு குறைவு, சிறந்த உணவின்மை போன்றவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவையும், ஒன்றினை ஒன்று பலப்படுத்துபவையாகவும் இருக்கின்றன. இவ் அரசாங்க அறிக்கை காட்டுவதுபோல், வெளியேறிவர முடியாத இந்த சுழற்சியினுள் ஏழ்மையானவர்கள் மூழ்கியுள்ளனர். இளைஞர்களும், குடும்பங்களும் ஏழ்மையில் மூழ்கியிருப்பது இச்சமுதாயத்தின் வங்குரோத்தின் வெளிப்பாடாகும். முக்கியமாக இளைஞர்களும் குழந்தைகளும் ஏழ்மைக்குள்ளும், பலாத்காரத்தினாலும் அபாயத்திற்குள்ளாகியிருக்கும் ஒரு சமூதாய அமைப்பிற்கு எதிர்காலம் இல்லை. |