மத்திய
கிழக்கு
Israel: Leadership election plunges Labour Party into factional warfare
இஸ்ரேல்: தலைமைக்கான தேர்தல் தொழிற்கட்சியை உட்கட்சி குழுச்சண்டை
நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது
By Jean Shaoul
8 September 2001
Use this version to print
இஸ்ரேலிய தொழிற்கட்சி தலைமைக்கான தேர்தல் கள்ள வாக்கு பற்றிய குற்றச்சாட்டுக்களுடன்
மனக்கசப்பில் முடிவடைந்தது.
ஏரியல் ஷெரானின் லிக்குட் - தொழிற்கட்சி கூட்டரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக
இருக்கும் பினியமின் பென்-எலியசர், தனது எதிராளியான இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஆவ்ரஹாம் பேர்கின்
வெற்றி ஒரு மோசடி என்றும் வாக்குகளைத் திரும்ப எண்ணுமாறும் கோரினார். இரு வேட்பாளர்களும் கட்சியில் தங்களின்
தலைமைப் பதவியைக் காத்துக் கொள்ள வழக்கறிஞர்களை அமர்த்திக் கொண்டு நீதிமன்றங்களை நாடி உள்ளனர்.
உண்மையில் தொழிற்கட்சி உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன, அதன்
முடிவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அது பேர்க் ஒரு சதவீதத்துக்கும் குறைவான புள்ளி கொண்ட
மிகச் சிறு வித்தியாசத்தில் வென்றார் என வெளிப்பட்டது. பென்-எலியசர் அம் முடிவை தேர்தல் திருட்டு என உடனடியாகக்
கண்டனம் செய்ததோடு, மறுவாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்கு ஒரு குற்றவியல் நடுவரால் தலைமை தாங்கப்படும்
தேர்தல் சரிபார்ப்புக் குழு ஒன்றை அமைப்பதற்காக அழைப்பு விடுத்தார். "அது கட்சி முழுவதையும் கறைப்படுத்தும்
பிரதான அரசியல் ஊழல்" என்று பென்-எலியசர் கூறினார்.
அவரது பிரச்சாரத்துக்கான பேச்சாளர், அரசியல் ரீதியாக மிக மிதவாதியாக பெயரளவில்
இருக்கும் பேர்க்கிற்கு ஆதரவாக, குறிப்பாக இஸ்ரேலிய அரபுகளும் ட்ரூஸ் சமுதாயத்தினரும் வசிக்கும் இஸ்ரேலின் வடபகுதியில்
கள்ள வாக்கு போடப்பட்டிருக்கிறது என்று கூறினார். மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்ட போது,
பேர்க்கின் 47 சதவீதத்திற்கு பென்-எலியசர் 51.7 சதவீதம் பெற்று முன்னனியில் இருந்து வந்தார். பின்னர் நாட்டின்
ஏனைய பகுதியைக் காட்டிலும் வடபகுதியில் பெருமளவு அதிகமாகத் திரும்பிய பின் மற்றும் முன்னர் தனக்கு ஆதரவளித்திருந்ததாக
எலியசர் கூறிய ட்ரூஸ் பகுதியிடமிருந்து பலமான வாக்கு கிடைத்த பின்னர் பேர்க் முன்னிலைக்கு நகர்ந்தார். பேர்க்
இக்குற்றச்சாட்டுக்களை மறுத்தார் மற்றும் தன்னை வெற்றியாளராய் அறிவித்துக் கொண்டார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஷெரானுக்கு எதிரான பிரதமர் தேர்தலில் ஈஹூட்
பாரக் படுதோல்வி அடைந்த பின்னர், அவர் ராஜினாமா செய்ததன் காரணமாக தலைமைக்கான தேர்தல் நடந்தது.
அவர் பதவி இறங்கிய பின்னர், 78 வயது நிரம்பிய முன்னாள் கட்சித் தலைவரும் பிரதமரும் மற்றும் வெளி உறவு
அமைச்சருமான ஷிமோன் பெரஸ் பாரக்கின் பதவியில் அடுத்தவராக அமர்ந்தார். பேர்க்கின் வழக்குரைஞர்,
யாக்கோவ் நீமான் சட்ட நடவடிக்கையானது கட்சிக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பையும் பாதிக்கும் என்று உறுதிப்படுத்தி
உள்ளார்.
இரு வேட்பாளர்களதும் குறிப்பு மற்றும் வேலைத்திட்டங்கள் தொழிற்கட்சியின் சமாதானத்திற்கான
கட்சி என்ற தேய்ந்துபோன கோரிக்கையையும் மற்றும் லிக்குட் கட்சியின் அரசியல் மேலாதிக்கத்தையும் மிகவும் வலதுசாரி
அரசியல் மற்றும் இராணுவ மேல் தட்டுக்களின் மேலாதிக்கத்தையும் பலப்படுத்துதற்காக எப்படி அதன் உண்மையான
பாத்திரம் இருந்து வருகிறது என்பதையும் திரை நீக்கி வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்கள்
இரு பகுதியினரும் எதிர் கொண்டுவரும் நெருக்கடி மிகுந்த அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொழிற்கட்சி
தலைமைக்கான தேர்தலில் உண்மையில் புறக்கணிக்கப்பட்டதானது, மேற்குக்கரை மற்றும் காசா மீதான இஸ்ரேலின் 34
வருட ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனியரின் கிளர்ச்சி எழுச்சியை எப்படி கையாள்வது என்பதைப் பிரத்தியேகமாக
அம்பலப்படுத்துகிறது.
பேர்க் தேர்தல் போட்டியை தொழிற்கட்சியின் இருப்புக்கான போராட்டம் என்றார்.
தனது எதிராளியைத் தாக்குமுகமாக, ஷெரானின் லிக்குட் கட்சிக்குள்ளே உள்வாங்கப்படுவதற்கு கட்சியைத் தாம் அனுமதிக்கப்
போவதில்லை என்றார்.
பென்-எலியசர் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு மிகவும் ஆர்வமுள்ள
ஆதரவாளராக காணப்படுகிறார் மற்றும் அவரது அரசியல், உண்மையில் ஷெரோன் கட்சியினது அரசியலில் இருந்து வேறுபிரித்தறிய
முடியாததாக இருக்கிறது. அவர் 1949ல் ஈராக்கிலிருந்து இஸ்ரேலுக்கு வந்தார். இஸ்ரேலின் அரசியல் அரங்கை மேலாதிக்கம்
செய்யும் முன்னாள் தளபதிகளுள் அவரும் ஒருவர். 1977ல் தெற்கு லெபனானிலும் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளிலும்
கொமாண்டர் ஆகப் பணியாற்றிய பின்னர், 1984ல் அவர் வலதுசாரி பட்டியலில் பாராளுமன்றத்தில் நுழைந்தார், அதன்பின்னர்
அது தொழிற் கட்சியில் சேர்ந்தது. அவர் இன்னொரு இராணுவத்தினரான பராக்கின் கீழ்துணைப் பிரதமராக இருந்து,
வீடு மற்றும் கட்டுமானத் துறையையும் வகித்தார், அப் பதவியில் இருக்கும் பொழுது மேற்குக் கரை மற்றும் காசாவில்
குடியேற்றங்களின் பெரும் விஸ்தரிப்புக்கு இசைவாணை கொடுத்தார், 1993 ஒஸ்லோ உடன்பாட்டிற்குப் பின்னர் அவற்றின்
வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
பிப்ரவரி தேர்தலில் ஷெரோனின் வெற்றிக்குப் பின்னர், சிலவாரங்களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட
லிக்குட்- தொழிலாளர் கூட்டணியில் பென்-எலியசர் பாதுகாப்பு அமைச்சராக முன்மொழியப்பட்டார். பாலஸ்தீனியர்களுக்கு
எதிரான ஷெரோனின் கடும் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த இஸ்ரேலிய தொலைக்காட்சியில் இரவிரவாகத்
தோன்றி, "பயங்கரம் ஒரே ஒரு உண்மையான விடையைக் கொண்டிருக்கிறது-- பயங்கரத்தை" என பிரபலமாக விவாதித்துக்
கொண்டிருந்தவர் பென்-எலியசர் தான். பாலஸ்தீனிய பொறுப்பினருக்கு எதிராக ஒரு தொன் குண்டுகளைப் போடுவதற்கு
எப்-16 விமானங்களைப் பயன்படுத்தவும் இஸ்ரேலின் அரசியல் எதிராளிகளை படுகொலை செய்வதற்கு வழிநடத்தப்படும்
ஏவுகணைகளைப் பயன்படுத்தவும் வெறுமனே ஆதரித்திருக்கவில்லை, அதற்குப் பின்னேயான இயக்கு சக்தியாகவும் அவர்
இருந்து இருக்கிறார். "புவாட் வேலையைச் செய்து முடிப்பார்" என்பது அவரது பிரச்சார முழக்கமாக இருந்தது.
"நான் பயங்கரத்தை எதிர்த்துப் போராடுவேன், எமது குழந்தைகளை பயங்கரவாதிகள் கொலைசெய்ய வந்து
கொண்டு இருக்கிறார்கள் என்ற அறிக்கையைப் பெற்ற பின்னர் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்று கூறுவதற்கான தார்மீக
உரிமை இந்த உலகில் ஒருவருக்கும் இல்லை" என்று பென்-எலியசர் ஜெருசலேம் ரிப்போர்ட் பத்திரிகையிடம்
கூறினார்.
பென்-எலியசரின் இராணுவவாத நம்பிக்கையூட்டும் ஆதாரச் சான்றுகள் பற்றி ஒருவரும்
சந்தேகம் கொள்ள முடியாது, ஆனால் அதுவே பேர்க்கை சமாதானப் புறா என்று கூறுவதைப் படம் பிடித்துக் காட்டுவதாகக்
கூறிவிட முடியாது. அவரது தந்தை தேசிய மதவாதக் கட்சியின் முன்னனி உறுப்பினராக இருந்தார் மற்றும் அடுத்தடுத்த
அரசாங்கங்களில் அமைச்சராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தார். இளைய பேர்க் லெபனானில் யுத்தத்திற்கு
எதிராகத் தோன்றிய எதிர்ப்பு இயக்கமான இப்பொழுது அமைதி எனப்படுவதின் தலைவர்களுள் ஒருவராக
விளங்கினார். பெரஸின் சீடராக, அவர் 1992ல் க்னெஸ்ஸெட்/
பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஆனார். உலக சியோனிச இயக்கத் தலைவராக ஆவதற்காக, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்
ராஜினாமா செய்தார். 1999ல் பாராளுமன்றத்துக்கு மீண்டும் நுழைந்து சபாநாயகர் ஆனார், மற்றும் முன்னாள் சமாதான
செயல்வீரர் என்ற பெயர் இருந்த போதிலும், ஜூலை 2000ல் காம்ப் டேவிட் உச்சி மாநாட்டில் பாலஸ்தீனியருக்கு
பாரக்கின் மேலீடாகத் தோன்றுகின்ற விட்டுக் கொடுப்புகளுக்கு கடும் எதிர்ப்பாளராக இருந்தார்.
தொழிற்கட்சி ஷெரோனின் கூட்டணியில் சேர்ந்த பொழுது அதில் பேர்க் இருந்தார், அதன்
மூலம் பாலஸ்தீனியர்கள் மீதான கடும் ஒடுக்குமுறைக்கு தீர்க்கமான ஆதரவை அளித்தார். பெரஸ் போலவே, அவர்
பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கான வேண்டுகோளுடன் லிக்குட் கட்சிக்கான ஆதரவையும் பாலஸ்தீனியர் மீதான ஆக்கிரமித்தல்,
படுகொலைகள் மற்றும் இராணுவத் தாக்குதல்கள் இன்னொரு தலைமுறைக்கான பேச்சுவார்த்தை தீர்வுக்கான எந்த சாத்தியத்தையும்
மூடிவிடும் என கூறுவதை எச்சரிப்பதையும் இணைக்க முயற்சித்துள்ளார். இருப்பினும், இஸ்ரேலிய- பாலஸ்தீனிய
மோதலுக்கு அமைதியான தீர்வை விரும்புபவர்களுள் பேர்க் தன்னை நம்பிக்கை கொள்ளவைக்கும் தலைவராக முன்னேற்ற
முடியவில்லை. ஒஸ்லோ உடன்பாட்டை கையெழுத்திட்டதில் மிக நெருக்கமாக தொடர்புடைய மனிதன் பெரஸ்- எந்த
வேட்பாளரையும் ஆதரிக்க மறுத்த, மற்றும் வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் ஷெரோனின் குற்றங்களுக்கு தலைமை
வக்காலத்து வாங்குபவராக இருக்கும் சிறப்பான சூழ்நிலைமைகளின் கீழ்--அதேவேளையில் பாரக் இறுதியாய் பாலஸ்தீனியருடன்
சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு தேர்ந்து எடுக்கப்பட்டு, பென்-எலியசரின் ஆதரவில் முன்வந்தார்.
அரபுப் பகுதிகளில் வாக்களிக்க வந்தோர் 80 சதவீதமாக இருந்தபோதும், தொழிற்கட்சியின்
வலதுசாரிப் பக்கம் பாய்ச்சலால் அந்நியப்படுத்தப்பட்ட பெரும்பான்மையோர் உட்பட கட்சியின் 1,17,000
உறுப்பினர்களில் 40 -- 50க்கு இடையிலானவர்கள் வாக்களிக்கவில்லை. இது பென்-எலியசரைதனது சொந்த வலதுசாரி
தொகுதியை வெற்றிகரமாக அணிதிரட்டவும் கிட்டத்தட்ட ஆயிரம் வாக்குகளில் பேர்க்கைத் தோற்கடிக்கவும் சக்தி
அளித்தது. ஆறு மாதங்களுக்கு முன்னாள் தான், வாக்கெடுப்பு 30 சதவீத கட்சியினர் பென் எலியசருக்கு ஆதரவு தர,
70 சதவீத கட்சியினர் பேர்க்கை ஆதரிப்பதாகக் காட்டியது. மேலும் பொதுவாக, கருத்துக் கணிப்பின்படி, அடுத்த
சில மாதங்களில் தேர்தல்கள் நடைபெற்றால் தொழிற்கட்சி துடைத்துக் கட்டப்படும். 120 இடங்களைக் கொண்ட
பாராளுமன்றத்தில் லிக்குட் 40 வெல்லும் அதேவேளை 20 இடங்களை வெல்லுவது அதற்கு அதிர்ஷ்டமாகும், இது அதன்
நிலைமைகளில் முன்ஒருபோதும் இல்லாத எதிர்த் திருப்பமாக இருக்கும்.
See Also:
26 September 2001
இஸ்ரேலின் படுகொலை கொள்கையின்
அரசியல் முக்கியத்துவம்
14 September 2001
இனவாதம்
பற்றிய ஐ.நா மாநாட்டிலிருந்து இஸ்ரேலும் அமெரிக்காவும் வெளிநடப்புச் செய்தன
07 September 2001
இனவாதம் பற்றிய
ஐ.நா மாநாட்டில் சியோனிசத்தைப் பாதுகாக்க அமெரிக்கா முன்வருகிறது
|