WSWS:
செய்திகள் & ஆய்வுகள் :
மத்திய
கிழக்கு
Israel and US walk out of UN conference on racism
இனவாதம் பற்றிய ஐ.நா மாநாட்டிலிருந்து இஸ்ரேலும் அமெரிக்காவும் வெளிநடப்புச்
செய்தன
By Chris Marsden
6 September 2001
Use
this version to print
தென்னாபிரிக்காவில் உள்ள டுர்பன்
(Durban) இல் நடைபெற்றுவரும் ஐ.நா மாநாட்டிலிருந்து அமெரிக்காவும்
இஸ்ரேலும் கூட்டாக வெளிநடப்புச் செய்தது விவாதம் நடப்பதற்கு முன்னரே முடிவெடுக்கும் ஒருவகைப்பட்ட முன் கூட்டிய
முடிவாகும். அது பாலஸ்தீனியர்களை அடக்கி ஒடுக்கி வரும் சியோனிச அரசுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களையும்
உள்ளார்ந்த ரீதியில் இனவாதத்தைக் கொண்டிருக்கின்றன என்று படம்பிடித்துக் காட்டுதற்காக ஒத்திகை பார்க்கும்
விஷயமாக இருந்தது.
ஐ.நா மாநாட்டிற்கான மூல வரைவுத் தீர்மானம், "சியோனிசம் மற்றும் செமிட்டிச
எதிர்ப்புவாதம் ஆகியவற்றின் அதிகரித்து வரும் இனவாத நடைமுறைகள் பற்றிய "அதன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி
உள்ளது மற்றும் இனவாதம் மற்றும் பாரபட்ச கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுள்ள இயக்கங்களின், குறிப்பாக
இன மேலாதிக்கத்தின் அடிப்படையிலான சியோனிச இயக்கத்தின்" தோற்றம் பற்றிப் பேசுகின்றது. அது மேற்குக் கரையில்
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஒடுக்கு முறையினை "புது வகை இன ஒதுக்கல், மனித சமுதாயத்திற்கு எதிரான
குற்றம்" என நேரடியாக விமர்சனம் செய்கின்றது.
அமெரிக்காவும் இஸ்ரேலும், இஸ்ரேல் பற்றிய எந்த நேரடி குறிப்பினையும் எடுத்துவிட
வேண்டும் என வலியுறுத்தின. வெளிநடப்புக்கு முன்னாடி, அரபு அரசுகளுடன் நடத்திய கலந்தாலோசனையின் பேரில்
பின்லாந்தாலும் தென்னாப்பிரிக்காவாலும் வரையப்பட்ட சமரச தீர்மானத்தின் காட்சி இரு பேராளர்களுக்கும் வழங்கப்பட்டது.
இஸ்ரேல் தொடர்பான எந்த குறிப்பான விமர்சனமும் சுதி இறக்கப்பட்டு, புதிய வடிவம் பேராளர் குழுவின் அங்கமாக
இருந்த, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரொம் லான்டோஸ்
(Tom Lantos)
ஆல் ஏற்றுக் கொள்ளக்கூடியதாய் உச்சரிக்கப்பட்டதாகக்கூட பத்திரிக்கைச் செய்தி அறிக்கைகள் சுட்டிக் காட்டின. ஆனால்
நிகழ்ச்சிகள், அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் சமரசத்துக்கு எந்த விருப்பமும் இல்லாதிருந்ததாக நிரூபித்தன.
மேற்குக் கரையிலும் காசாவிலும் லிக்குட் பிரதமர் ஏரியல் ஷெரோனின் இராணுவத்
தாக்குதலுக்கு அமெரிக்காவின் மறைமுக ஆதரவின் முன் பாலஸ்தீனியர்கள் தாம் அந்நியப்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளனர்.
அரபு அரசுகளில் இருந்து அவர்களுக்கு நாணயமாக மாற்றக் கூடிய அடையாளப் பணம் பெற்றுக் கொள்வதைத் தவிர
நடைமுறை ரீதியான ஆதரவு எதுவும் இல்லை. அரபு அரசுகள் மோதல் கொண்ட கடந்த ஆண்டு முழுவதும் இஸ்ரேலுடன்
தமது சொந்த உறவுகளைப் பராமரித்து வருகின்றன. இதன் உச்ச கட்டமாக, ஐரோப்பிய வல்லரசுகள் --இருதரப்பினருக்கும்
இடையில் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்று மிக ஆர்வமாக இருக்கும் அதேவேளை-- இஸ்ரேலைத்
தனிமைப்படுத்தும் எதையும் செய்ய விரும்பவில்லை. மத்திய கிழக்கில் இராணுவ ஆற்றலகம் ஆக இருக்கும் இஸ்ரேல், இந்தப்
பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சரியீடாக இருக்கும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலுடன்
நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்ளும் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது.
இஸ்ரேலும் கூட ரஷ்யாவிடமிருந்து மிகவும் நட்பு ரீதியான எதிர்வினையை வென்று எடுப்பதில்
சில வெற்றிகளைப் பெற்றுள்ளது. ரஷ்யாவானது இஸ்ரேலுக்கும் அரபு ஆட்சிகளுக்கும் இடையில் ஒரு நேர்மையான தரகர்
ஆக தன்னை வழங்குவதன் மூலம் மத்திய கிழக்கு விவகாரங்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை சவால் செய்ய நாடுகிறது.
டுர்பன் மாநாட்டின் பொழுது ஷெரோன், இஸ்லாமிய பயங்கரவாதத்தால் முன்வைக்கப்படும் பொது அச்சுறுத்தலை விவாதிப்பதற்கும்,
ரஷ்யாவிலிருந்து இஸ்ரேலுக்கு மேலும் பத்துலட்சம் யூத குடிபுகுபவர்களின் சாத்தியம் பற்றியும், ஆயுத தளவாடங்கள்
மற்றும் வணிக விஷயங்கள் பற்றியும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சு நடத்துவதற்காக மொஸ்கோவுக்கு வருகை மேற்கொண்டார்.
ரஷ்யா செச்சென்யாவில் இஸ்லாமிய கிளர்ச்சிப் படைகளை கோரமாக நசுக்கியதற்காக தமது ஆதரவைக் கூட சுட்டிக்
காட்டினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் டுர்பனில், பிரதான வல்லரசுகள் மத்தியில் அவர்களை ஏற்கும்படி
செய்வதற்காக வேலைசெய்து கொண்டிருந்த சியோனிச சார்பு அணியில் உடைவு தோன்ற அனுமதிக்கப்படக் கூடாதது
அத்தியாவசியமானது என கருதின. ஆகையால், அவர்களது வெளிநடப்பை நியாயப்படுத்துதற்கு, டுர்பன் மாநாடானது,
நாஜிக்கள் ஒன்று கூடியதுடன் ஒப்பிடத்தக்கதாய் செமிட்டிச எதிர்ப்புவாதம் விரைவாக வளரும் சேமக்கலமாக புஷ்
மற்றும் ஷெரோன் அரசாங்கங்களால் படம்பிடித்துக் காட்டப்பட்டது.
டுர்பனில் யூத ஆதரவாளர் குழுவின் தலைவரான ஷிமோன் சாமுவேல் பின்வருமாறு
அறிவித்தார்: "கோயெபல்ஸை (ஹிட்லரின் நாஜிக்கட்சி பிரச்சாரத் தலைவர்) மகிழ்விக்கும் அரசு சாரா அமைப்புக்களின்
பத்திரத்தை நாங்கள் பார்க்கிறோம். அரசாங்க மாநாட்டின் முடிவில், ஐ.நா வின் மைன் கேம்ப் (Mein
Kampf - My struggle) பை அழைக்கும் தீர்மானங்களை
நாங்கள் பார்க்கப்போகிறோம் என்பது இப்பொழுது தெளிவாக இருக்கின்றது."
இஸ்ரேலின் உத்தியோகப்பூர்வ பேச்சாளர் மோர்டிச்சாய் யெடிட், இஸ்ரேலைக்
கண்டனம் செய்வது தீர்மானத்தில் இருக்கக்கூடாது என மாநாட்டில் வலியுறுத்தினார். அமெரிக்க இஸ்ரேலிய புறப்பாட்டுக்கு
முன்னரான முழுமுடிவான கூட்டத்தில், "யூதர்களுக்கு தாயகம் இருப்பதற்கான அடிப்படை உரிமையை மறுக்கும், சியோனிச
எதிர்ப்பு என்பது முழுமையாகவும் தெளிவாகவும் சொன்னால் செமிட்டிச எதிர்ப்புவாதத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை"
என்று அவர் கூறினார். யெடிட், இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை நடத்தும் விதத்தை விமர்சிக்கக் கோரும் அரபு ஆட்சிகளின்
முன்மொழிவுகளை மட்டம் தட்டும் விதமாக, " 'இனவாதம்', 'பாரபட்சம்', மற்றும் 'மனித உரிமைகள்' எனும்
வார்த்தை கூட அவர்களின் சொந்த அகராதியில் இல்லாத அரசுகளின் குழு" என்றார். ஐ.நா தீர்மானமானது, "இரண்டாவது
உலக யுத்தத்துக்குப் பின்னர் பிரதான சர்வதேச மாநாட்டில் இடம்பெறும் மிக மோசமான இனவாத பிரகடனம்" ஆக
இருந்தது என்றார்.
அவரது குறிப்புக்கள் அமெரிக்க ஆதரவு அரபு அரசுகளில் ஒன்றான எகிப்தின் வெளிவிவகார
அமைச்சர் அஹ்மது மாஹெரால் வெளிநடப்பைச் செய்ய தூண்டியது.
மாநாட்டிலிருந்து தனது விலகிக் கொள்ளலை அறிவிக்கும் முகமாக, அமெரிக்க அரசு செயலாளர்
கொலின் பாவெல், "உலகில் பழி கூறப்படும் மற்றும் இழிவு படுத்தப்படும் ஒரே ஒரு நாடு இஸ்ரேலை "தனிமைப்
படுத்தும் எந்த முயற்சியையும் மற்றும் இஸ்ரேலில் இன ஒதுக்கல் இருந்தது என்ற எந்த கருத்துரைப்பையும் கண்டித்தார்.
தனது பங்கிற்கு, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஷிமோன் பெரஸ், "நாங்கள் ஆதாரமற்ற முறையிலும் அவமானகரமான
முறையிலும் காலனி ஆதிக்க நாடாக படம்பிடித்துக் காட்டப்படுகிறோம்.... அரபு லீக், அவை அனைத்தும் அமைதிக்கு
எதிராக வெளிவந்திருக்கின்றன" என்று அறிவித்தார்.
இஸ்ரேலில் உள்ள வலதுசாரிப் பத்திரிக்கை அதே தொனியில் அணி நடையிட்டது.
செப்டம்பர் 4-ம் தேதி ஜெருசலேம் போஸ்டில் யொசி ஒல்மெட்டால் எழுதப்பட்ட கட்டுரை, டுர்பன்
மாநாட்டை "நாஜிக்கள் யூதர்களை இறுதியில் துடைத்தழிக்க தவிர்க்க முடியாதபடி இட்டுச்சென்ற நடவடிக்கையாக
இருந்த, தங்களின் யூத -விரோத செய்திகளைப் பரப்பிய, யூதர்கள் உரிமைகளைப் பறிக்க கடும் முயற்சி செய்த
நுரெம்பேர்க் பகிரங்கக் கூட்டங்களின் கண்ணாடி பிம்பம்" என விவரித்தார். "டுர்பன் மாநாட்டில் கலந்து கொண்ட
அனைவரும் நாஜிக்கள் அல்லர், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் கூட அல்ல, ஆனால் அளவுக்கு அதிகமானவர்கள்,
மற்றும் தெளிவாகவே இந்த வெட்கம் கெட்ட கூட்டத்திற்கு அவர்களின் உண்மைத் தன்மையைக் கொடுத்துள்ளனர்" என்று
அவர் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டார்.
இஸ்ரேலிய - அமெரிக்க தாக்குதலானது, இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை நடத்துவது
சம்பந்தமான உத்தியோகப்பூர்வ ஐ.நா கண்டனத்திற்கான எந்த வாய்ப்பையும் தடுப்பதற்கான அதன் இலக்கில் வெற்றியடைந்துள்ளதாக
காணப்படக் கூடும். தீர்மானமானது அதைச் செய்யாவிட்டால், வெளிநடப்பு செய்யப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும்
கனடாவிடம் இருந்தும் அச்சுறுத்தல்கள் பின் தொடர்ந்தன. பிரெஞ்சுப் பிரதமர் லியோனல் ஜோஸ்பன் புதன் கிழமை
அன்று, "இறுதித் தீர்மானம் சியோனிசத்தையும் இனவாதத்தையும் தொடர்ந்து உள்ளீர்த்துக் கொள்ளுமாயின் பிரான்சும்
ஐரோப்பிய ஒன்றியமும் வெளிநடப்புச் செய்யும்" என்றார். நாங்கள் அச்சேறப் போகும்பொழுது தென்னாப்பிரிக்கா,
(ஐரோப்பிய ஒன்றியங்களின் சார்பாக) பெல்ஜியம், அரபு லீக், நோர்வே மற்றும் நமீபியா விலிருந்து ஐந்து
பேராளர்கள் மத்திய கிழக்கு மீதான சமரச அறிக்கை என்று கூறப்படுவதை ஒருங்கமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலின் வெளி நடப்புக்கு முன்னர் தன்னும், தான் சாதித்துவிட்டேன் என்ற உணர்வை
பெரஸால் மறைக்க முடியவில்லை. அவர் செய்தியாளர்களிடம் கூறினார்: "அரபு முன்மொழிவுகளுக்கு எதிரான எதிர்ப்பு
அமெரிக்காவை மட்டும் உள்ளடக்கவில்லை மாறாக பெயரளவில் எதிர்ப்புக்கு முடிவெடுத்த 15 ஐரோப்பிய ஒன்றிய
நாடுகள், கடந்த காலத்தில் அரபு பக்கத்தில் வாக்களிக்கும் அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள்; கனடா, ரஷ்யா,
இலத்தின் அமெரிக்க அரசுகள்.... இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றையும் உள்ளடக்கி இருப்பது
இதுதான் முதல் தடவை ஆகும்." அரபு மற்றும் முஸ்லிம் லீக்குகளின் "ஒருதலைப்பட்சமான முடிவை" எதிர்த்த 43 நாடுகளுக்கும்
அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
தாங்கள் செமிட்டிச எதிர்ப்புவாதத்தின் அடிப்படையில் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு
அணிதிரண்டுள்ளதாகக் கூறும் அந்த அரசாங்கங்களின் கூற்று முற்றிலும் போலித்தனமானது. மாநாட்டிற்கு வெளியில் ஆர்ப்பாட்டம்
செய்யும் சிலரால் யூத எதிர்ப்பு இனவாதம் வெளிப்படுத்தப்பட்டது, அதேபோல சிரியா மற்றும் ஈரான் ஆகியவற்றின்
உத்தியோகப்பூர்வ அறிக்கைககளில் வெளிப்படுத்தப்பட்டது --பிந்தையது செமிட்டிச எதிர்ப்புவாதம் மீதான கலந்துரையாடலை
அது தற்கால இனவாத வடிவத்தில் இல்லை என்று கூறி நிராகரித்துவிட்டது என்பதில் சந்தேகமில்லைத்தான். ஆனால் பாலஸ்தீனியர்கள்
மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறை மற்றும் யூதர் அல்லாதோருக்கு எதிரான சியோனிச அரசாங்கத்தின் வழக்கமான
பாரபட்சம் ஆகியவற்றைக் கண்டிக்கின்ற அதேவேளை, செமிட்டிச எதிர்ப்பினை எதிர்ப்பது முற்றிலும் சாத்தியமானதே.
அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும், பாலஸ்தீனிய நிர்வாகத்தினை (PA)
கீழறுப்பதற்கும் பெரும்பாலான ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப்புறப் பகுதிகளை மீண்டும் ஒரு முறை இஸ்ரேலின் நேரடிக்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குமான ஓட்டத்தை முன்னெடுப்பதற்கு ஷெரானுக்கு வழி அமைத்துக் கொடுக்கின்றன.
See Also:
07 September 2001
இனவாதம் பற்றிய
ஐ.நா மாநாட்டில் சியோனிசத்தைப் பாதுகாக்க அமெரிக்கா முன்வருகிறது
05 September 2001
மத்திய கிழக்கில்
பெரும் பங்காற்ற ஐரோப்பா விரும்புகிறது
03 September 2001
பாலஸ்தீனிய
தலைவரின் படுகொலையுடன், இஸ்ரேல் ஆத்திரமூட்டல்களையும் வன்முறையையும் அதிகரித்து வருகின்றது
|