WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: வட
அமெரிக்கா
Democratic rights in America: the first casuality of Bush's anti-terror
war
அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள்: புஷ்சின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தின் முதல்
பலி
By the Editorial Board
19 September 2001
Use
this version to print
அமெரிக்க சட்ட மா அதிபர் ஜோன் அஷ்குரொப்டும் (John
Ashcroft) எப்.பீ.ஐ. (FBI) பணிப்பாளர்
றொபேட் முல்லரும் (Robert Mueller) செப்டம்பர்
16ம் திகதி இரண்டு கட்சிகளதும் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, சமஷ்டி அரசாங்கத்துக்கு முன்னொருபோதும்
இல்லாததும் அதிகளவிலானதுமான பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டப் பொதி சம்பந்தமாக உடனடி நடவடிக்கை
எடுக்கும்படி நெருக்கினர். இது 3 நாட்களுக்கு முன்னர் செனட் சபை இணையம்
(Internet) மீதான பரந்தளவிலான பொலிஸ் உளவு
வேலைகளை சட்டபூர்வமாக்கும்-2001இன் பயங்கரவாதத்தை எதிர்த்துச் சண்டையிடும் சட்டம்
(Combating Terrortism Act- 2001) சட்டமாக்கியதை
தொடர்ந்து இடம்பெற்றது.
புஷ் நிர்வாகத்திற்கு சமஷ்டி ஏஜன்டுகள் பயங்கரவாத சந்தேக நபர்களின் தொலைபேசிகளை
ஒற்று கேட்கவும், நிதிக் கொடுக்கல் வாங்கல்களை ஆராயவும் குடிவருகை தந்தவர்களையும் வெளிநாட்டு பயணிகளையும்
தடுப்புக் காவலில் வைக்கவும் நாடுகடத்தவும் பெரும் அதிகாரங்களும் தேவையாகவுள்ளது. இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு
உதவி வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட எவருக்கும் எதிரான தண்டனைகளையும் அதிகரிக்கும். பயங்கரவாதத்துடன்
தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் மீதான சட்டவரையறைகளை நீக்கும்.
இந்தப் புதிய சட்டங்கள் உலக வர்த்தக மையம்
மீதும் பென்டகன் மீதும் இடம்பெற்ற தாக்குதல்களின் பேரிலான ஒரு உடனடிப் பிரதிபலிப்பாகவே காட்டப்படுகின்றது.
ஆனால் அவை எப்.பீ.ஐ.யினாலும் சீ.ஐ.ஏ.யினாலும் மற்றும் உளவு ஏஜன்சிகளாலும் நீண்ட காலமாக வேண்டப்பட்டு
வந்த நடவடிக்கைகளையே ஒன்றாக முன்கொண்டுவந்துள்ளது. அத்தகைய திட்டங்கள் கிளின்டன் நிர்வாகத்தினால் இடைவிடாது
முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அவை மனித உரிமைகள் அடிப்படையில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. ஆனால் இப்போது
அப்படியானவை "பயங்கரவாதம் மீதான யுத்தம்" என்ற பேரில் ஒரு புறத்தே அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டுக் கொள்கைத்துறையில் போலவே புஷ் நிர்வாகம் கடந்த வாரம்
இடம்பெற்ற கொலைகார நிகழ்வுகளை செப்டம்பர் 11க்கு பெரிதும் முன்பிருந்தே தயார் செய்யப்பட்டு வந்த ஒரு
பிற்போக்கு உள்நாட்டுக் கொள்கையின் நிகழ்ச்சி நிரலை திறந்து விடுவதற்கான சந்தர்ப்பமாக்கிக் கொண்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களும் அமெரிக்கா ஐக்கிய அரசுகளில் ஜனநாயக உரிமைகளில்
உறுதியான அரிப்புக்களை தரிசித்தது. அரசாங்க உளவுச் சேவை அதிகாரங்கள் முன்னொரு போதும் இல்லாத விதத்தில்
அதிகரிக்கப்பட்டது. பொலிஸ் அட்டூழியங்கள் அதிகரித்தன. மரண தண்டனையினை பிரயோகிப்பது அதிகரிக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்ததோடு அடாவடித்தனங்களும் வளர்ச்சி கண்டது. (உலகில் ஏனைய
கைத்தொழில்மய நாடுகளில் மொத்தமாக உள்ளதைவிட அதிக அளவிலான பொலிசாரும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப்
படையினரும் அமெரிக்காவில் உள்ளனர்.)
அரசியல் அரங்கில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தீவிர வலதுசாரியினர்
கிளின்டன் நிர்வாகத்தை ஆட்டங்காணச் செய்யவும் குழிபறிக்கவுமான இடைவிடாத முயற்சிகளின் வடிவத்தை எடுத்தது. இது
ஒரு தொகை தொடர்புச் சாதன ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. இது மொனிக்கா லெவின்ஸ்கி
விவகாரத்திலும் ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டிலும் உச்சக்கட்டத்தை அடைந்தது. தெரிவு செய்யப்பட்ட
ஜனாதிபதியை அப்புறப்படுத்துவதில் வலதுசாரிகள் இருதடவை தவறிய போதிலும் அவை அவரின் வாரிசு தேர்தலில் தெரிவு
செய்யப்படுவதை தடுப்பதில் வெற்றி கண்டனர்.
புஷ் நிர்வாகத்தின் தோற்றம், அமெரிக்க ஜனநாயத்தின் நீண்ட சீரழிவின் விளைவேயாகும்.
பொதுஜன வாக்கை இழந்த நிலையிலும் புஷ் வெள்ளை மாளிகையினுள் அமர்த்தப்பட்டார். புளோரிடா வாக்குகளை
திருப்பி கணக்கிடுவதை தெரிவு செய்யப்படாத உயர்நீதிமன்றம் தலையிட்டு 5-4 என்ற பெரும்பான்மையின் மூலம் தடுத்ததை
தொடர்ந்து இது இடம்பெற்றது. இந்த வஞ்சனை தொடர்பு சாதனங்களின் மூடுமந்திரத்துடன் இடம்பெற்றது. அத்தகைய
ஒரு பாணியில் ஆட்சியில் இருத்தப்பட்ட ஒரு அரசாங்கம் "ஜனநாயகத்தை" அதன் எதிரிகளிடம் இருந்து காக்க ஒரு
யுத்தம் தொடுப்பதாக கூறிக்கொள்கின்றது.
புதிய சட்டங்கள் என்ன செய்யும்
அஸ்குரொப்ட் கிறிமினல் சட்டங்களை தொழில்நுட்பத் துறையிலான சமீபகால முன்னேற்றங்களான
'செல்' தொலைபேசி, ஈமெயில் செய்திகள் போன்றவற்றை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சிறியதொரு நடவடிக்கையாக
புதிய சட்டங்களை முன்வைத்தார்.
1978ம் ஆண்டின் ஒரு சட்டம் ஒரு இரகசிய சமஷ்டி நீதிமன்றத்தை நிறுவியது. அது பயங்கரவாதம்
தேசத்துரோகம் அல்லது நாசகார வேலை எனச் சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்ட நீதித்
திணைக்கள தொலைபேசி ஒற்றுகேட்பதை கையாளும். ஒவ்வொரு தொலைபேசி ஒற்றுகேட்டபின்பும் ஒரு குறிப்பிட்ட
தொலைபேசி இலக்கம் அல்லது இடத்தை குறிப்பிட வேண்டும். புதிய சட்டத்தின் கீழ் நீதித் திணைக்களம் ஒரு குறிப்பிட்ட
சந்தேக நபரினால் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு தொலைபேசி கருவியையும் இடைமறித்துக் கேட்பதற்கான ஒரு
இரகசிய விண்ணப்பத்தை விடுக்க முடியும். இது சுற்றாடலில் உள்ள சகல வாடகை தொலைபேசிகளையும் ஒரு பொது
நூலகத்தில் உள்ள சகல கணனி தரிப்புக்களையும் அல்லது ஒரு தனிநபர் வசமுள்ள சகல இணைய ஆலோசனை அறைகளையும்
உள்ளடக்கிக் கொள்ளும் சாத்தியம் உள்ளதால் இது ஒரு பெரிதும் ஊடுருவல் விதிமுறையாகும்.
புதிய சட்டங்கள் குடிவரவு, நாட்டுரிமை சேவைக்கு
(Immigration Nuturalisation Service) வெளிநாட்டவர்களை
தடுத்துவைக்கவும் வெளிநாட்டவர்களை நாடுகடத்தவும் விஸ்தரிக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். சில விடயங்களில்
எந்த ஒரு நீதிமன்ற விசாரணைக்கும் கீழ் வராத -ஒரு சமஷ்டி ஏஜன்டின் ஒரு வெறும் குற்றச்சாட்டின் பேரிலேயே
அங்ஙனம் செய்ய முடியும். புஷ் வெகு விரைவில் குடிவரவு, தேசிய இன சட்டத்தின் 215ம் பிரிவை பிரகடனம் செய்யலாம்.
இது வெளிநாட்டவர்கள் நாட்டினுள் நுழைவதையும் வெளியேறுவதையும் கட்டுப்படுத்த ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரத்தை
வழங்குகின்றது. குடிவரவு, நாட்டுரிமை சேவை (INS) அமெரிக்க
கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ள சகல வெளிநாட்டு மாணவர்கள் பற்றியும் ஒரு கணனிமயமான தகவல் வங்கியை
(Data Bank) ஸ்தாபிதம் செய்வதற்கு ஆணை வழங்கும்
விதத்தில் 1996ம் ஆண்டின் சட்டத்தினை அமுல்படுத்த உள்ளது. இதில் 500,000 மக்கள் உள்ளடங்குவதோடு, இவர்களில்
பலரும் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள்.
சமஷ்டி அதிகாரங்களை மேற்கண்ட விதத்தில் விஸ்தரிப்பது சமஷ்டி அரசாங்கம் "பயங்கரவாதிகள்"
ஆக குறிப்பிடும் அமைப்புக்களுக்கு நிதி திரட்டுவதை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதோடு சட்டரீதியான அரசியல்
நடவடிக்கைகள் மீதும் கூட பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருக்கும். அமெரிக்க அரசாங்கம் சிறிது காலத்திற்கு
முன்னரே ஆபிரிக்க தேசிய காங்கிரசையும் (ANC)
ஐ.ஆர்.ஏ.யையும் (IRA) பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும்
(PLO) பயங்கரவாத அமைப்பாக வரையறுத்தது. பீ.எல்.ஓ.வும்
ஐ.ஆர்.ஏ.யும் மீண்டும் அத்தகைய அமைப்பினுள் தள்ளப்படும். இதன் மூலம் இவற்றின் அமெரிக்க அரசியல் ஆதரவாளர்கள்
அகதிகளின் நிவாரணத்துக்கு பணம் திரட்டுவதன் பேரில் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்படுவர். இலங்கையில்
உள்ள தமிழ் தேசியவாத கெரில்லா இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின்
(LTTE) ஆதரவாளர்களுக்கு இவ்வாண்டின் ஆரம்பத்தில்
பிரித்தானியாவில் அதுவே நடைபெற்றது.
இருகட்சிகளதும் காங்கிரஸ் தலைவர்களும் பிரதிநிதிகள் சபை, செனட் சபை, நீதி கமிட்டிகள்
காங்கிரஸ் வியாழக்கிழமை மீளக் கூட்டப்படும் போது உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை விவாதத்துக்கு எடுக்கும்
என்றனர். நீதி திணைக்களம் இன்னமும் இச்சட்டத்துக்கான ஒரு இறுதி வரைவை தயார் செய்யவில்லை. செனட் குழுவுக்கு
தலைமை தாங்கும் ஜனநாயகக் கட்சி செனட்டர் பட்ரிக் லீகியின் (Patrick
Leahy) ஒரு பேச்சாளர் இதற்காக ஏனைய சகல வேலைகளும் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளப்படும் என்றுள்ளார்.
காங்கிரஸ் சபையின் லிபரல்களான மசாசூசெட்ஸ் (Massachusett)
ஜனநாயகக் கட்சிக்காரர் பார்ணி பிராங்கும் (Barney Frank)
மார்ட்டின் மீகானும் (Martin Meehan) சிவில் உரிமைகளை
பெரிதும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உற்சாகத்துடன் ஆதரவளித்துள்ளனர். மீகான் (Meehan)
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியதாவது: "நாம் இந்த நாட்டில் கிடைக்கக் கூடியதாக உள்ள
தொழில்நுட்பங்களான முகத்தை இனங்காணும் தொழில்நுட்பம் போன்றவற்றை
(Facial Recognition technology) பயன்படுத்தி
இந்த நாட்டில் போதிய பணி செய்துள்ளோம் என நான் நினைக்கவில்லை. அதில் நாம் பெரும் முதலீடு செய்ய
வேண்டும். இந்த பேசமுடியாத சட்டத்தின் பேரில் அமெரிக்கர்கள் பாதுகாப்பின் பேரில் சுதந்திரங்கள் மீதான சில
வரையறைகளை சகித்துக் கொள்வர்."
இணையம் மீதான ஒற்று (Spying
on the Internet)
செப்டம்ர் 13ம் திகதி பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடும் சட்டத்தினை அங்கீகரிப்பதில்
செனட் சபையின் நடவடிக்கையை ஒரு நெருக்கியடிப்பாகவே வருணிக்க முடியும். ஒரு ஒதுக்கீட்டு மசோதாவுக்கான ஒரு
திருத்தமாக குடியரசுக் கட்சியின் யுத்தா (UTAH) செனட்டர்
ஒறின் ஹச்சினாலும் (Orrin Hatch) அரிசோனா செனட்டர்
ஜோன் கீல் (Jon Kyl) இனாலும் அறிமுகம் செய்யப்பட்ட
பின்னர் அங்கு விவாதமும் இடம்பெறவில்லை; இந்நடவடிக்கை குறித்து மாறுபட்ட கருத்தும் இருக்கவில்லை.
இம்மசோதா எப்.பீ.ஐ.க்கும் ஏனைய பொலிஸ் ஏஜன்சிகளுக்கும் இணைய சேவை
வழங்கிகளை (Internet Service Providers)
அவை கடந்து செல்லும் போது ஈமெயில் செய்திகளை கார்ணிவோர்
(Carnivore) எனப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை பாவித்து இணையத்தின் மீது உளவு பார்க்க முடியும்.
இன்று தொலைபேசி ஒற்றுக்கேட்டல் தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ்
பொலிசார் உள்வரும் வெளியேறும் தொலைபேசி அழைப்புக்களின் பதிவுகளை பெறுவது பெரிதும் சுலபமானது. இந்த
நடைமுறை 'ட்ரப் அன்ட் ட்ரேஸ்' (Trap and Trace)
என அழைக்கப்படுகின்றது. இது அழைத்த அல்லது அழைக்கப்பட்ட சகல (தொலைபேசி) இலக்கங்களையும் ஒரு எல்லை
தளத்துக்கு இட்டுச் செல்கின்றது. தொலைபேசி உரையாடல்களின் சாராம்சத்தை பதிவு செய்யும் ஒரு உண்மையான
தொலைபேசி ஒற்றுக் கேட்டலை எடுக்க ஒரு உயர்ந்த மட்டத்திலான சாட்சியம் கிடைக்க வேண்டும்.
கடந்த காலத்தில் இணைய போக்குவரத்து, தொலைபேசி ஒற்றுக் கேட்டலுக்கென விதிக்கப்பட்ட
பெரிதும் வரையறுக்கப்பட்ட தரங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. புதிய சட்டத்தின் கீழ் இணைய இடைமறிப்பு
"பொறியும் சுவடும்" (Trap and Trace) போல் கணிக்கப்படும்.
இருப்பினும் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல் தனியொரு தொலைபேசி இலக்க பட்டியலுக்கு வெகு அப்பால் செல்கிறது.
இதில் ஈமெயில் முகவரிகளும் சேர்த்துக் கொள்ளப்படும். இணைய தளங்களின் வழிகளும் தேடப்படும். மறைசொற்றொடர்
பயன்படுத்துவோர் தேடுதல் இயந்திரங்களினுள் பதியப்படுவர்.
ஒரு நியூஹாஷயர் குடியரசுக் கட்சிக்காரரான செனட்டர் ஜூட் கிரேக் [Judd
Gregg] இணையங்களை பெருமளவில் பொலிசார் இடைமறிக்க வேண்டும் எனக் கேட்டார். கணனி கைத்தொழிற்துறை
அரசாங்கத்திடம் சகல ஈமெயில் செய்திகளையும் கண்டுபிடிக்கும் திறப்புகளை வழங்க வேண்டும் என அவர் சிபார்சு செய்தார்.
புஷ் நிரவாகமும் காங்கிரசும் பரந்த புதிய உள்நாட்டு உளவு அதிகாரங்களின் நடைமுறை
அமுலில் ஆரம்ப நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அமெரிக்கத் தொடர்பு சாதனங்கள் அவசியமான அரசியல் சூழ்நிலையை
உருவாக்க முயற்சிக்கின்றார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஆழமாக
கட்டுப்படுத்துவது அவசியம் என இடைவிடாது பிரகடனம் செய்து கொண்டுள்ளது.
தினசரி பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கேபிள்
(Cable) வலைத் தொகுதிகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக
"சுதந்திரத்துக்கு" ஒரு யுத்தப் பிரகடனம் செய்து கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் தமது சுதந்திரங்களை
கட்டுப்படுத்திக் கொள்ள கூச்சலிட்டுள்ளனர் என்ற சித்திரத்தை முன்வைத்தன.
இதில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது நியூயோர்க் டைம்ஸ் இன்
மனோபாவம் ஆகும். இது செப்டம்பர் 18ம் திகதி ஒரு நடுக்கம் பிடித்த கட்டுரையை தாங்கி வெளிவந்தது. அமெரிக்கா
"ஒரு புதிய வகையிலான நாடாகும் -அங்கு இலத்திரனியல் இனங்காணல் தரமாகும். வெளிநாட்டவர்கள் பெரிதும்
நெருக்கமான விதத்தில் தேடப்படுவர். நியூயோர்க், வாஷிங்டன் போன்ற நகரங்கள் மீதான ஆகாயவெளி சகல சிவில்
விமானச் சேவை விமானங்களுக்கும் அப்பாற்பட்ட எல்லைகளாக விளங்கும்."
கடைப்பிடிக்கப்பட வேண்டியுள்ள நடவடிக்கைகளைப் பற்றி இக்கட்டுரை தீர்க்கதரிசனமாக
கூறுகையில் ஒரு தேசிய இலத்திரனியல் இனங்காணும் அட்டை
(National electronic identification Card) பற்றி குறிப்பிட்டது. "கணனி சில்லுகளுடன்
(Computer chips) சேர்ந்து அத்தகைய அட்டைகள்
(Cards) அவை வழங்கப்பட்டவர்களுக்கு விரிவான தகவல்களைக்
கொண்டிருக்கும். ஒரு கணனியினால் வாசிக்கும் போது அவற்றை அடையாளம் காட்டும். அட்டைகளை கைவிரல் அடையாளத்துடன்
ஒன்றிணைக்கக் கூடியதாக இருக்கும். அல்லது ஒரு சில வருடங்களில் முகப் பண்புகளையும் ஒன்றிணைக்க முடியும். கட்டிடங்களுக்கு
அல்லது பிராந்தியங்களுக்கு சுழல்வழிகள் ஊடாகச் செல்வதை அனுமதிக்க அல்லது இடத்தை வரையறுக்க திட்டமிட்டுக்
கொள்ள முடியும். ஒரு தரப்பட்ட இரவில் ஒரு குறிப்பிட்ட பெருந்தெருவில் வாகனம் ஓட்டும் வேகத்தையும், ஒருவரின்
இருப்பிடம், நிதிக் கொடுக்கல் வாங்கல்களையும் கிரிமினல் வரலாற்றையும் தேடிக் கண்டுபிடிக்க முடியும்."
ஏனைய நடவடிக்கைகள் குடிவருகை மீதான கடும் கட்டுப்பாடு பரந்தளவிலான வீடியோ
(Video) கண்காணிப்பு, பொலிசார் தனிப்பட்ட முகச்சாயல் விபரங்களை பரந்த அளவில் பயன்படுத்துவது
என்பதையும் உள்ளடக்கும். "சாத்தியமான பயங்கரவாதிகளை இனங்கண்டு கொள்ள இனவாரி விவரணங்களையும்
உட்கொண்டு இருப்பது சாத்தியம். பயங்கரவாதம் ஒரு சாத்தியம் என அவர்கள் கருதும் எந்த ஒரு இடத்திலும்
மக்களை தேடுவதற்கு அவர்கள் அத்தகைய முகச் சாயல் விபரங்களை பயன்படுத்தலாம்."
டைம்ஸ் இன் ஆய்வுகள் இறுதியாகக் குறிப்பிட்டதாவது: "கடுமையான விமானத்
தளப் பாதுகாப்புகளை தொடர்ந்து ஏற்படக் கூடிய அதிக கஷ்டமான பிரச்சினைகளையிட்டு அமெரிக்கர்கள் கவனத்தை
செலுத்த வேண்டும் என சில பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத் தளங்களும் விமானங்களும் பெரிதும் பத்திரமாகியதும்
நாடு, ஸ்ரேடியம், புகையிரதம், பஸ் நிலையங்கள் பல்கலைக்கழகங்கள், ஆரம்ப பாடசாலைகள், பூங்காக்கள்,
நீர்த்தேக்கங்கள் போன்ற பொது இடங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விஸ்தரிப்பதை பற்றியும் கணிக்க வேண்டியுள்ளது."
1998-99 அரசியல் குற்றச்சாட்டு காலப் பகுதியிலும் 2000ம் ஆண்டின் தேர்தல்
நெருக்கடியின் போதும் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கான எந்த ஒரு கணிசமான பிரதிநிதியும் அமெரிக்க அரசியல்,
தொடர்புச் சாதன அமைப்புகளினுள் கிடையாது என்பது தெளிவாகியது. ஆளும் பிரமுகர்களின் மேலாதிக்கம் கொண்ட
பகுதியினர் அரசியலமைப்பு சட்டத்தால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட சிவில் உரிமைகளையும் ஜனநாயகக் கொள்கைகளையும்
ஆரம்ப அளவில் தன்னும் காப்பதை எதிர்த்துள்ளனர். அவை இராணுவவாதம், யுத்தம் போன்ற மக்கள் வெறுப்புக்கு
பெரிதும் இடமான கொள்கைகளை அமுல் செய்வதற்கு ஒரு தடை எனக் கருதினர். கம்பனி இலாபம் உழைப்பில் இருந்து
கொண்டுள்ள சகல கட்டுப்பாடுகளையும் நீக்குவதும் வைத்திய உதவி (Medicare)
சமூக பாதுகாப்பு (Social Security) போன்ற
உத்தரவாதம் செய்யப்பட்ட சமூக நலன்புரி அம்சங்களை ஒழிப்பதும் இதில் அடங்கும். முதலாளித்துவ ஜனநாயகத்தின்
பாரம்பரிய வடிவங்கள் அதிகரித்த அளவில் இணக்கம் காணமுடியாத வகையில் முன்னொருபோதும் இல்லாத அளவில்
அதிகரித்த அளவிலான சமத்துவமின்மையாலும் அரசியல் அமைப்புக்கும் உழைக்கும் மக்களின் பரந்த வெகுஜனங்களுக்கும்
இடையே நீண்டு இழுபட்டுப் போகும் ஒரு சமூக அமைப்பையும் குறித்துக் கொண்டுள்ளது. அமைப்பின் தாராளவாத பிரிவானது
தனது பக்கத்தில் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலை விரும்புவதாகவும் இல்லை. அவ்வாறே அதை எதிர்க்கக்
தக்கதாகவும் இல்லை. பெருமளவுக்கு அது அலட்சியமாக உள்ளது.
செப்டம்பர் 11 ம் திகதிய காட்டுமிராண்டித்தனமானதும் பிற்போக்கானதுமான பயங்கரவாத
தாக்குதல்களின தறுவாயில் ஜனநாயக அமைப்புகளின் ஆழமான அரிப்பு, ஆளும் மேல்தட்டினர் ஒரே நள்ளிரவில் எடுத்த
தீர்மானத்தில் வெளிப்பாடாகியுள்ளது. அரசின் ஒரு ஏஜன்சியாகத் தொழிற்படும் ஒரு தொடர்புச் சாதனத்தின்
துணையோடு பெயர் குறிப்பிடப்படாத ஒரு தொகை எதிரிகளுக்கு எதிராக காலவரையறையற்ற காலத்துக்கு நாட்டினை
யுத்தத்தினுள் மூழ்கடிக்க எந்த ஒரு பகிரங்க கலந்துரையாடலோ அல்லது விவாதமோ இல்லாமல் சிவில் உரிமைகளை
பிரமாண்டமான அளவில் கட்டுப்படுத்துகின்றது.
See Also:
21 September 2001
புஷ் நிர்வாகத்துக்கு ஏன் யுத்தம் அவசியமாகியுள்ளது?
14 September 2001
நியூயோர்க்
மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் வேர்கள்
|