World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

Globalisation, Jospin and the political program of Attac

பூகோளமயமாக்கலும் ஜொஸ்பனும் அற்றாக்கின் அரசியல் வேலைத்திட்டமும்

பகுதி1

By Nick Beams
10 September 2001

Use this version to print

பிரெஞ்சு பிரதமரான லியனல் ஜொஸ்பன் பூகோளமயமாக்கலுக்கு எதிரான ஐரோப்பிய இயக்கத்தின் முக்கிய கொள்கை ஒன்றிற்கு தனது ஆதரவை காட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 28 ஆம் திகதி தொலைக்காட்சிக்கு வழங்கிய 50 நிமிட பேட்டி ஒன்றில் இம்மாத இறுதியில் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய நிதியமைச்சர்களின் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சர்வதேச மூலதனத்தின் இயக்கத்தின் மீது வரிவிதிக்கும் திட்டத்தை பிரான்சு முன்வைக்கும் என குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய மாற்றீடு மீது விதிக்கப்பட கூறப்படும் ''ரொபின் வரி'' [Tobin tax] எனப்படும் இவ்வரியானது 1972 ஆம் ஆண்டு அமெரிக்க பொருளியலாளரான ஜேம்ஸ் ரொபின் [James Tobin] என்பவரால் முன்மொழியப்பட்டது. இது 1997 இன் இறுதியில் உருவாக்கப்பட்ட அற்றாக் [ATTAC- Association for the Taxation of Financial Transactions for the Aid of Citizens- பிரஜைகளுக்கு உதவுவதற்காக நிதி மாற்றீடுகள் மீதான வரிவிதிக்க கோரும் அமைப்பு] எனப்படும் பிரான்சை சேர்ந்த அமைப்பின் வழிகாட்டும் கொள்கையாக இது இருக்கின்றது.

லியனல் ஜொஸ்பன் தனது பேட்டியில் ''நாங்கள் இவ்விடயம் [பூகோளமயமாக்கல்] தொடர்பாக கலந்துரையாட வேண்டும். ஐரோப்பா ரொபின் வரிவிதிப்பிற்கு சம்மதம் தெரிவிக்க பிரான்சு முன்நடவடிக்கை எடுப்பதற்கு நான் சம்மதிக்கின்றேன்'' என தெரிவித்தார்.

இந்நடவடிக்கையானது ஜொஸ்பனினதும் அவரது சோசலிசக் கட்சியினதும் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது. இவர் இந்நடவடிக்கைக்கு தான் முன்னர் சாதகமாக இருந்ததை இப்பேட்டியில் தெரிவித்தார். அவர் 1995 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது ரொபின் வரியை முன்வைத்தார். ஆனால் அப்போது இவ்வரியானது அரசாங்கத்தின் முக்கிய பிரிவினரால் எதிர்க்கப்பட்டது.

கடந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் பிரான்சின் நிதியமைச்சரான Laurent Fabius, இவ்வரியை எதிர்த்து ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் அவர் இத்திட்டமானது நடைமுறைச்சாத்தியமற்றது எனவும், வெளிநாட்டு பரிமாற்ற சந்தையை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஆனால் அரசியல் நிலைமையானது திடீரென மாற்றமடைந்ததுடன், இதனால் தான் ஜொஸ்பன் Laurent Fabius இனதும் சோசலிசக் கட்சியினதும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இவ்வரிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

யூலை மாதத்தில் G8 மாநாட்டிற்கு எதிரான ஊர்வலமும், பூகோளமயமான நிறுவனத்திற்கு எதிராக அபிவிருத்தியடையும் எதிர்ப்பும், நிதிமூலதனத்தின் ஆதிக்கமும் சர்வதேச முதலாளித்துவம் மிகவும் சிறியதொரு சமூகத்தட்டில் தங்கியிருப்பது அதிகரித்துவருவது வெளிப்படுகின்றது.

ஆளும்வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள் சிலர் ஒன்றையும் கற்றுக்கொள்ளாதும் ஒன்றையும் மறந்துவிடாமலும் என்ற நிலைப்பாட்டில் இருக்கையில், ஜொஸ்பனை போன்ற சிலர் இவ் எதிர்ப்பு பூகோள முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கான முன்னோடி என்பதை மிகவும் விழிப்புணர்வுடன் உணர்ந்து அதை திசை திருப்பவும், சிதறச்செய்யவதற்குமான வழிவகைகளை தேடுகின்றனர்.

ஜெனோவா மாநாட்டிற்கு முன்னரே, தனது முக்கிய அதிகாரிகளுக்கும் அற்றாக்கின் அங்கத்தவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அதிகாரபூர்வமான கூட்டத்தில் ஜொஸ்பன் இவ்வரியை நோக்கி திரும்பத் தொடங்கிவிட்டார். இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர் பிரான்சு ''பூகோளமயமாக்கலின் அதிகரித்துவரும் தீமைகள் என்பதின் அடித்தளத்தில்'' சிறிய பிரிவினரின் வன்முறைகளை எதிர்ப்பதாக குறிப்பிட்ட அவர் ''வசதியான நாடுகளுக்கும் ஏழ்மையான நாடுகளுக்கும் இடையில் உள்ளடங்கியுள்ள இலாபங்களை பங்கிட்டுக்கொள்ள பெரும்பான்மையான ஆண்களும் பெண்களும் விரும்பும் உலகளவில் தோன்றியுள்ள பிரஜைகளின் இயக்கத்தின் பார்த்து மகிழ்ச்சியடைவதாக'' குறிப்பிட்டார்.

மேலும் அவர் ''ஒரு நீடித்து நிலையான ஒழுங்கமைக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க விருப்புவதாகவும், இது உலகத்தின் வளங்களை சமமான அடித்தளத்தில் உருவாக்க உதவும் எனவும், வித்தியாசமான கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் கொண்ட சமமரியாதையான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் சமமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகின்றோம்'' என்றதுடன், ''பிரான்சு உலகம் முழுவதும் கொண்டு செல்ல விரும்பும் செய்தியின் மத்திய புள்ளி இதுதான்'' என குறிப்பிட்டார்.

அற்றாக்கின் வேலைத்திட்டம்

உலக மூலதனத்திற்கு எதிரானதும், அதன் விளைவிலான சமூகசமத்துவமின்மையையும், ஏழ்மையையும் கடுமையாக எதிர்த்தபோதும் அற்றாக்கின் வரலாறும் முன்னோக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கத்தை சோசலிச அடித்தளத்தில் அபிவிருத்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. மாறாக இப்படியான இயக்கத்தின் அபிவிருத்தியை தடைசெய்ய முயல்வதுடன், முதலாளித்துவம் தேசிய அரசாங்கங்களின் ஒருங்கிணை நடவடிக்கை மூலம் ஒழுங்கமைக்கலாம் எனவும், வெளிநாட்டு மூலதன இயக்கத்தினை தடைசெய்வதனால் நிதி ஊகவாணிபத்தை தடைசெய்வதன் மூலமாக தேசிய பொருளாதார நோக்கங்கள் பலவீனப்படுவதை தடைசெய்யலாம் என கூறுகின்றனர்.

அற்றாக்கின் அரசியல் நோக்கம், அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கி மனித சமுதாயத்தின் தேவைகளின் அடித்தளத்தில் பொருளாதாரத்தை ஒழுங்கமைக்கும் சோசலிசமல்ல. மாறாக முதலாளித்துவ தேசிய அரசுகளின் பொருளாதார தனித்துவத்தையும், அரசியல் அதிகாரத்தையும் மறுசீரமைப்பதாகும்.

அற்றாக் 1997 இன் ஆசிய பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் உருவாக்கப்பட்டது. Le monde diplomatique என்னும் இதழில் அதன் பத்திரிகை ஆசிரயரான Ignacio Ramonet பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

''ஆசிய நிதிச்சந்தைகளை தாக்கிய சூறாவளி உலகத்தின் ஏனைய பகுதிகளையும் ஆபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. முதலீட்டு மூலதனத்தின் பூகோளமயமாக்கல் உலகத்தை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளது. அது தேசிய எல்லைகளை அர்த்தமற்றதாக்கியுள்ளதுடன், தனது மக்களுக்கு ஜனநாயகத்தையும், செல்வத்தையும் செழிப்பையும் வழங்கும் உறுதியையும் கொண்ட அரசுகளின் அதிகாரத்தை இல்லாதொழிக்கின்றது.

Ignacio Ramonet மூலதனத்தின் பூகோளமயமாக்கத்தை அதனது தேசியத்திற்கு மேலான தனது அமைப்புகளுடன் [சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு] ''சட்டத்திற்கு மீறிய'' ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் ''இச் செயற்கையான உலக அரசானது சமுதாயத்தின் அடித்தளமில்லாது இருக்கின்றது. நிதிச்சந்தைகளுக்கும், அதனது தலைவர்களால் நடாத்தப்படும் மாபெரும் வியாபாரத்திற்கும் பதிலளிக்கமுடியும். இதன் விளைவாக உலகத்திலுள்ள உண்மையான அரசுகளுக்கு அதிகாரத்திற்கான அடித்தளம் இல்லாது போகின்றது. இந்நிலைமை தற்போது மேலும் மோசமடைகின்றது'' என குறிப்பிட்டார்.

அற்றாக்கின் ஸ்தாபக அடித்தளம் இதனை பிரதிபலிக்கின்றது. அது நிதியின் பூகோளமயமாக்கல் அதிகரித்து ''பொருளாதார பாதுகாப்பின்மையையும், சமூக சமத்துவமின்மையையும்'' உருவாக்குவதுடன், ''மக்களின் விருப்பங்களும் ஜனநாயக அமைப்புகளும், பொதுவான நல்லவிடயங்களுக்கான தனித்தன்மையான அரசுகளின் பொறுப்புகளும் பெறுமதி இழந்தபோவதுடன்'', தனியே ஊகத்தினை அடித்தளமாக கொண்ட நாடுகடந்த நிறுவனங்களினதும், நிதிச்சந்தைகளினதும் நலன்களை வெளிப்படுத்துகின்றன என குறிப்பிடுகின்றது.

அது மேலும் சர்வதேச நாணய மாற்றீட்டின் மீதான ''ரொபின் வரியானது'' ஊகவாணிபத்தை தடுக்கும் எனவும், எதிர்ப்பை அதிகரிப்பதுடன் மக்களும், தேசிய அரசுளும் நடவடிக்கை எடுப்பதற்கான இடமளிப்பதன் மூலம் ''அரசியலை சரியான இடத்தில் வைக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் எனவும் தெரிவிக்கின்றது.

அவர்களது மேடை மேலும் ''நிதியின் ஆதிக்கத்தின் முன் ஜனநாயகம் இழக்கப்பட்டுப்போவதை திருப்பபெறவேண்டும் எனவும், முதலீட்டாளர்களினதும் வியாபாரிகளினதும் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக நாடுகளின் இறைமை மேலும் இழக்கப்படுவதை எதிர்க்கவேண்டும் எனவும்'' கூறுகின்றனர்.

இவ்வறிக்கையானது அற்றாக்கின் முன்னோக்கு என்னவென்பதை எடுத்துக்காட்டுகின்றது. அது பூகோள மூலதனத்தின் ஆதிக்கத்தால் உருவான சமூக சமத்துவமின்மையின் மீதும், ஜனநாயக உரிமை மீதான தாக்குதலுக்கும் எதிராக வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்பினை தமக்கு அடித்தளமாகக் கொள்ள முனைவதுடன், அவ்வெதிர்ப்பை தேசியவாத அரசியல் முன்னோக்கின் அடித்தளத்தில் திருப்ப முனைகின்றனர்.

அற்றாக்கின் முன்னோக்கானது முதலாளித்துவத்திற்கு எதிரானதல்ல மாறாக முதலாளித்துவத்தின் ஒருகுறிப்பிட்ட பிரிவினரின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. அற்றாக் இப்பாதுகாப்பை இரு வழிகளில் செய்கின்றது. முதலாவதாக பூகோள மூலதனத்தால் உருவாக்கப்படும் தீமைகளை நிதிமூலதனத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என கூறுவதன் மூலமும் மூலதனத்திலிருந்து முற்றாக வேறுபடுத்திக்காட்டுவதன் மூலமும் அரசியல் உணர்மை வளர்ச்சியை தடைசெய்கின்றது.

இரண்டாவதாக சர்வதேச அரங்கில் தமக்கு போட்டியான அமெரிக்க மூலதனத்திற்கு எதிராக தமது நலன்களை பாதுகாக்கவிரும்பும், முக்கியமாக பிரான்சினதும் ஜேர்மனியினதும் நலன்களை பாதுகாக்க விரும்பும் முதலாளித்துவத்தின் பிரிவினரிற்கு ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்க முனைகின்றது.

ஜொஸ்பன் இந்நலன்களை ''பிரான்சு உலகத்திற்கு தெரிவிக்கும் செய்தியின் மத்திய புள்ளி'' இதுதான் என தனது வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார். அவரது வெளிநாட்டு அமைச்சரான Hubert Vedrine இதனை மிக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்தமாத இறுதியில் இராஜதந்திரிகளுக்கான வருடாந்த கருத்தரங்கில் அவர் ''நாங்கள் மனிதாபிமான, கட்டுப்படுத்தப்பட்ட பூகோளமயமாக்கத்தை நோக்கி எமது முயற்சிகளை எடுக்கவேண்டும் எனவும் ஒரு புதிய உயர்மட்டத்திலான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சம் பிரச்சனைகளுக்கு உதவாது'' என குறிப்பிட்டார்.

சுசான் ஜோர்ஜின் முன்மொழிவு

அற்றாக்கின் அரசியல் நோக்கமும், சோசலிச இயக்கத்தின் அபிவிருத்திக்கு எதிரான அடிப்படையான எதிர்ப்பும் அதன் உதவித் தலைவரான சுசான் ஜோர்ஜ் [Susan George] ஆல் தெளிவாக குறிப்பிப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் பிறேசில் நாட்டின் Porto Alegre நகரத்தில் நடைபெற்ற உலக சமூக அமைப்பின் கூட்டத்தில் முக்கிய பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றிய சுசான் ஜோர்ஜ், சர்வதேச நிதிச்சந்தைகளினது இயக்கம் தொடர்பாகவும், அதிகரித்துவரும் சர்வதேச கடன்களால் பெருகும் நெருக்கும் ஏழ்மை தொடர்பாகவும் எடுத்துக்காட்டும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். எவ்வாறிருந்தபோதும் தனது கருத்தை வெளிவிடமுன்னர் ஜொஸ்பனின் அரசாங்கத்தை சேர்ந்த இரு அமைச்சர்களை இவ்வமைப்பின் கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்புவிட்டதன் மூலம் தனது அமைப்பினது அடிப்படை தன்மை எடுத்துக்காட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் அவர் பாரிய நிறுவனங்களையும், சர்வதேச நாணய சந்தையையும் ''ஜனநாயக் கட்டுப்பாட்டின் கீழ்'' கொண்டவர வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும், எமது முன்னவர்கள் போராடி வெற்றிபெற்ற தேசிய வரிவிதிப்பு திட்டத்தின் மூலம் சமத்துவமின்மை நீக்கப்பட்டதற்கும், தேசிய ரீதியில் சேவைகளை வழங்குவதற்கு காரணமாக இருந்தவற்றிற்காக நாமும் சர்வதேசிய வரிவிதிப்பிற்காக போராடவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இவ்வரிகள் நடைமுறைப்படுத்தப் படக்கூடியது என குறிப்பிட்ட அவர் மேலும் ''அரசாங்கங்கள் இவ்வரியை பிரயோகித்தால் உலகம் முன்னொருபோதும் இல்லாதவாறு செல்வம்மிக்கதாகவும், தொழில்நுட்ப வளங்களையும் கொண்டிருக்கும். உண்மையான பிரச்சனை என்னவெனில் அரசாங்கங்கள் அதை செய்கிறார்கள் இல்லை'' என தெரிவித்தார்.

சர்வதேச சோசலிச இயக்கத்தின் அபிவிருத்திக்கு எதிரான தனது கருத்து தொடர்பாக அவர், ''21ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் ''முதலாளித்துவத்தை தூக்கிவீசுவது'' தொடர்பாக எனக்கு சிறிதளவும் நோக்கமில்லை என நான் மன்னிப்புடன் தெரிவிக்கவேண்டும்'' என குறிப்பிட்டார்.

அவர் மேலும் ''தத்துவஞானியான Paul Virilio குறிப்பிட்டபடி ''உலக விபத்து'' ஒன்றனை நாம் காண நேரலாம், ஆனால் இது பாரிய மனித பாதிப்புடன் தொடர்புள்ளது. சகல நிதிச்சந்தைகளும், பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியடையுமானால் மில்லியன் கணக்கான பணம் அநியாயாயமாகப் போவதுடன் பெரிய, சிறிய நிறுவனங்கள் நட்டத்தில் செல்வதுடன், வங்கிகள் மூடப்பட்டு அரசாங்கங்களால் அழிவினைத்தடுக்கும் தகமையை இல்லாதொழித்துவிடுவதுடன், பாதுகாப்பின்மையும் குற்றச்செயல்களும் தலைவிரித்தாடுவதுடன், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு எதிரான கொப்சியன் [Hobbesian] நரகத்தை போன்ற யுத்தக் காலகட்டத்தில் இருக்கவேண்டியிருக்கும்'' என தெரிவித்தார்.

''நீங்கள் விரும்பினால் என்னை ஒரு சீர்திருத்தவாதி என அழைக்கலாம், நான் அப்படியான ஒரு எதிர்காலத்தை தவிர்க்கவிரும்புகின்றேன். அத்துடன் நான் திட்டமிடப்பட்ட நவீன தாராளவாத எதிர்காலத்தையும் தவிர்க்க விரும்புகின்றேன். எனது ஆய்வுகள் சரியானதாக இருந்தால், அதாவது இரண்டும் எதிரான வேலைத்திட்டத்தை தடுத்துநிறுத்தி, நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தற்போதைய அழிவுமிக்க முதலாளித்துவ அமைப்பை ஒரு ஒன்றிணைந்த அமைப்பால் பிரதியீடு செய்து, சமுதாயம் முழுவதின் மீதும் தனது கட்டளைகளை வலியுறுத்தாது இருக்குமாறு சந்தைகளை அவற்றின் இடத்தில் இருந்தவேண்டும்'' எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் இந்நீண்ட குறிப்புகளை மீண்டும் எடுத்துக்காட்டவேண்டியிருந்தது ஏனெனில் இவை அற்றாக்கின் முன்னோக்கின் முக்கிய உள்ளடக்கங்களை தொகுத்து எடுத்துக்காட்டுவதாலாகும்.

உலக முதலாளித்துவத்தை ஆய்வுக்குட்படுத்தி ஒரு புரட்சிகரமான சோசலிச முடிவை எடுப்பதை தடுப்பதற்காக சுசான் ஜோர்ஜ் முயன்று அவர் தனது தகவல்களின் அடித்தளத்தில் ஒரு வைக்கோல் மனிதனை உருவாக்கியுள்ளார்.

அவர் சுட்டிக்காட்டும் கொப்சியன் [Hobbesian] தீயகனவானது, முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கிவீசுவதை குறிப்பிடவில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்பின் அடிப்படையான போக்குகளின் விளைவுகளையே ஆகும். இறுதி ஆய்வுகளின்படி மார்க்சிச இயக்கம் நீண்டகாலமாக பேணிவரும், வரலாற்று ஆய்வு என்பது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதாகும்.

ஆசியாவில் என்ன நிகழ்ந்தது என்பதை முன்வைத்தால், 1997-98 நிதி நெருக்கடியானது ஓரிரவிற்குள் இலட்சக்கணக்கான மக்களை ஏழ்மைக்குள் தள்ளிவிட்டது. ஆனால் அது எடுத்துக்காட்டியது போல் ஆசிய நெருக்கடியானது உலக முதலாளித்துவத்தின் அடிப்படை போக்குகளின் ஆரம்ப வெளிப்பாடாகும். இப்போக்குகள் உலக ரீதியான வீழ்ச்சியாக அபிவிருத்தியடைவதை எடுத்துக்காட்டுவதுடன், நிதி நெருக்கடிக்கான ஒரு அபாயமாக காணப்படுவதுடன், துருக்கி, ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகளில் பிரச்சனைகளிலும் அல்லது அமெரிக்காவினது நிதியமைப்பினதும், அமெரிக்க டொலரினது நெருக்கடியினையும் தொட்டுச் செல்கின்றது .

சுசான் ஜோர்ஜ் இன் படி சர்வதேச நிதிச்சந்தைகளை அரசுகளின் அரசியல் சட்டத்திற்கு கீழ்ப்படுத்துவதே ஒரேயொரு சாதகமான முன்னோக்காகும். ஆனால் அவரோ அல்லது இம் முன்னோக்கின் பாதுகாவலர்கள் ஒருவர் கூட இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் 25 வருடங்களாக முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பாக விளங்கிய இந்த தேசிய, சர்வதேசிய ஒழுங்கமைப்புக்கள் ஏன் உடைந்துகொட்டின என்பதை ஆராயவில்லை.