World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தோனேசியா

Megawati apologises but Indonesian army repression continues in Aceh

மேகாவதி மன்னிப்பு கோருகிறார் ஆனால் ஆசேவில் (Aceh) இராணுவத்தின் அடக்குமுறை தொடர்கிறது
By Peter Symonds
29 August 2001

Use this version to print

புதிய இந்தோனேசிய நிர்வாகத்தின் ஜனாதிபதியான மேகாவதி சுகார்னோபுத்திரி [Megawati Sukarnoputri] யின் ஆட்சியின் திசையின் ஓர் தெளிவான அறிகுறி என்னவெனின், வடக்கு சுமாத்திராவின் மாகாணமான [North Sumatran] ஆசேவில் தொடர்ந்து கொண்டிருக்கும் இராணுவ அடக்குமுறையாகும். பிரிவினைவாத சுதந்திர ஏசே இயக்கத்திற்கெதிராக [Free Aceh Movement] அண்ணளவாக 30.000 விசேடபடை குழுக்கள் உட்பட பொலிசாரும், ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஆகஸ்ட் 16 இந்தோனேசிய ஜனாதிபதியாக நாட்டிற்கு நிகழ்த்திய முதல் பேச்சில் மேகாவதி சுகார்னோபுத்திரி ஜனநாயக உரிமைகள் தொடர்பாகவும், பாதுகாப்பு படைகளின் மீதான மக்கள் கட்டுப்பாடு சம்பந்தமாக தான் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக வலியுறுத்தினார். மிகவும் குறிப்பாக, "நீண்ட காலமாக பொருத்தமில்லாத தேசிய திட்டங்களின் விளைவாக துன்புற்றுள்ள எங்களுடைய சகோதரர்களிடம் (ஆசேவிலும், மேற்கு பப்புவாவிலும்) மன்னிப்பு கேட்பதாக கூறினார்".

அதேவேளை மேகாவதி வற்புறுத்தியது என்னவெனின் கிழக்கு தீமோரைப் (East Timor) போல எந்தவொரு மாகாணங்களும் இந்தோனேசியாவில் இருந்து பிரிந்து போக அனுமதிக்க முடியாது என்பதாகும். ஏசோவிலும் மேற்கு பப்புவாவிலும் உள்ள மக்கள் தங்களுடைய போராட்டங்களை கைவிட வேண்டுமெனவும் "புதிய இந்தோனேசியாவை கட்ட உதவ வேண்டுமெனவும்" அவர் அவர்களை கேட்டுக்கொண்டார். எப்படியிருந்தாலும் பிரிவினைவாத உணர்வுகளின் எழுச்சிகளை தடுப்பதற்கான ஜக்காட்டா அரசின் வெற்றிகரமான ஒரே ஒரு தனி வழி என்னவெனின், இராணுவ சப்பாத்தின் பலத்தினுடனாகும்.

மேகாவதி பேச்சு வழங்கிய அதே நாள் மேற்கு ஆசேயில் உள்ள Llong கிராமத்தில், 48 சடலங்கள் புதை குழியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இராணுவ பேச்சாளரின் கருத்துப்படி, மிகவும் சிதைவுற்ற சடலங்கள் அடையாளம் கண்டுகொள்ளவோ அல்லது மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்யவோ முடியாமல் உள்ளது என்றார். ஓர் சுதந்திர ஏசே இயக்கத்தின் பேச்சாளர் சுதந்திர ஏசே இயக்கந்தான் இதற்கு பொறுப்பு என்ற இராணுவ குற்றச்சாட்டை மறுத்துள்ளார். "இவ் உடல்கள் இந்தோனேசிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகும்" என Reuters செய்திஸ்தாபனத்திற்கு கூறினார்.

ஓர் கணிப்பின் படி கடந்த தசாப்ததில் மாத்திரம், 6,000 மக்கள் இப் பிரச்சனையில் இறந்ததுடன், இத்துடன் ஏப்பிரலில் பிரிவினைவாதிகளுக்கெதிராக இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 1000 பேர்களும் அடங்குவர். மேகாவதியின் வெற்று குணாம்சமான "மன்னிப்பும்" அத்துடன் பேச்சுவார்த்தைக்கான உடன்படிக்கைகளும், வரையறுக்கப்பட்ட பிராந்திய சுயாட்சி என்பனவற்றை தற்பொழுது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதன் காரணம் என்னவெனின் மேகாவதியும் ஒருபகுதி இராணுவத்தினரும் முன்னய ஜனாதிபதியான அப்துல் ராமன் வாகிட் பிரிவினைவாதம் தொடர்பாக மென்மையான அணைகுமுறையை கடைப்பிடித்ததை மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியதாகும்.

தனது இராணுவத்தினாலும் மக்களுடைய விமர்சனத்தின் அழுத்ததினாலும், ஏப்பிரலில் வாகிட் ஜனாதிபதியின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடுவதாவது "ஆயுதம் தாங்கிய பிரிவினவாதிகளுடன்" பேச்சுவார்த்தைக்கான முயற்சி தோல்வியடைந்ததுடன் "மிகவும் பரந்த அணுகுமுறை" தேவையென்பதாகும். மேகாவதியின் 15 அமைச்சர்கள், இராணுவத் தலைமை, கமாண்டோக்கள், தேசிய புலனாய்வு நிறுவன தலைவர், ஏசேயின் ஆளுனரும், உள்ளூர் உத்தியோகத்தர்களும் உள்ளடங்கிய புதியதோர் குழுவை பாதுகாப்பு தாக்குதலை நடைமுறைபடுத்துவதற்காக "சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பை சீரமைப்பதற்குமான நடவடிக்கை" என நியமித்தார்.

இவ் நடவடிக்கை தேசிய ரோந்து பொலிஸ் தலைவரான Yusuf Manggabarani யாலும், பேர்பெற்ற விசேட இராணுவபடை முன்னாள் கமாண்டோ (Korpassus) உதவி தலைவரான ஜெனரல் Zamroni ஆலும் வழிநடத்தப்பட்டது. Zamroni 700 இற்கு மேலான Kopassus படைகளுக்கு பொறுப்பானவரும் மேற்கு ஜாவாவில் கெரில்லா-எதிர்ப்பு (Anti-Guerrilla) விசேடபயிற்சி பெற்றவருமாவர்.

ஐக்கிய அமெரிக்காவை அடித்தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவால் [Human Rights Watch] வெளியிடப்பட்ட இம்மாத அறிக்கையின் படி "இப் புதிய படைகள் புறப்படுகையிலேயே திட்டமிட்ட முறையில் சந்தேகத்திற்கிடமான சுதந்திர ஏசே இயக்கத்தின் கோட்டைகளையும், தலைமையகங்களையும், குறி வைத்ததோடு அத்துடன் சாதாரன மக்கள் இந்த நடவடிக்கையால் கொல்லபட்டுள்ளதாக உள்ளுர் நிறுவனங்கள் கோரியுள்ளது. யூன் முதல் கிழமைக்கும் யூலை நடுப்பகுதிக்குமிடையில் 150 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்தோனேசிய Red Cross ஆல் நிச்சயப்படுத்தப்பட்டதுடன், 800 வீடுகள் எரித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மிகவும் கெளரவத்திற்குரிய மனித உரிமைகள் நிறுவனமான Kontras, யூலை7-19 இல் மத்திய ஏசேவில் துப்புகளை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது இவர்களுடைய அங்கத்தவர்கள் இந்தோனேசிய பாதுகாப்பு படைகளால் தடுக்கப்பட்டதுடன் இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார்கள்.

இவ்வருட ஆரம்பத்திலிருந்து ஏசேவில் பரந்தளவான இராணுவ அடக்கு முறை பற்றி வேறு சாட்சியங்களை மனித உரிமைகள் கண்காணிப்பு வெளியிட்டுள்ளது.

* சட்டத்திற்கு புறம்பான கொலைகள் சாதாரணமாக காணப்படுவது பற்றிய அறிக்கை குறிப்பிடுகையில்: 2001 நடுப்பகுதியில் ஏசேவில் உள்ள மக்கள் சுதந்திர ஏசே இயக்கத்திற்கு உரியவர்கள் என சந்தேகத்தில் பல கொலைகள் நடந்துள்ளதாகவும் மிகவும் சரியான தொகையை கணக்கு எடுப்பது கடினமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2001 மார்ச் 29 இல் நடந்த இம்மாதிரியான சில உயர் மட்ட கொலைகளில், தெற்கு ஏசேவில் இருந்து வந்த மத தலைவரான TGK. Kamal, ஓர் மனித உரிமைகள் சட்டத்தரணியான Suprin Sulaiman, அத்துடன் அவர்களுடைய சாரதியான Amiruddin, ஆகியோரின் கொலைகளை நிகழ்ந்த சூழ்நிலையின் அடிப்படையில் தங்கிய சாட்சியங்களை பார்க்கும் போது இந்தோனேசிய பாதுகாப்பு படைகளே இதற்கு பொறுப்பென பரந்தளவில் கணிக்கப்படுகிறது. ஆனால் எண்ணுக்கணக்கான மற்றய சந்தர்ப்பங்களில் அரசாங்கப் படைகளினை நிருபிப்பதற்கு நேரடியாக கண்ட சாட்சியங்கள் உள்ளன".

* கடந்த பெப்பரவரியில் இராணுவத்தின் கைகளாலேயே கூட்டுத் தண்டனை (Collective Punishment) ஒன்று நிகழ்ந்துள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டு காட்டியுள்ளது. சுதந்திர ஏசே இயக்கப்படைகள் Idi Rayenk நகரத்தினுள் நுளைந்து, உள்ளூர் பொலீஸ் விடுதிகளை எரித்ததுடன் சிறைச்சாலைகளையும், பொலிஸ் நிலையத்தினையும் குண்டு வைத்தது. "இந்தோனேசிய படைகள் வந்தபோது, ஓர் பாரிய சண்டையின் நிகழ்வில் கிட்டத்தட்ட 17 சாதாரண மக்கள் கொலை செய்யப்பட்டதற்கு காரணமாக அமைந்தது. இந்தோனேசிய இராணுவத்தினதும் பொலிசாரினதும் கூட்டுப் படையால் கவச வண்டிகளைப் பாவித்து, மூன்று வானூர்திகளை பாவித்து நகர மத்தியை தரைமட்டமாக்கி சென்றதுடன், அதை சுற்றியுள்ள ஆறு கிராமங்களையும் எரித்துள்ளனர். யூன் மாத தொடக்கம் வரை இந்நகரம் சிதைந்திருந்ததுடன் எதுவித பொருளாதார நடவடிக்கைகளும் தொடங்கவில்லை. இடம் பெயர்ந்துள்ளவர் தொகை 6,000 இருந்து 9,000 என கணிக்கப்பட்டுள்ளது".

* இவ் அறிக்கை, அடிப்படை ஜனநாயக உரிமைகள் கூட தொடர்ச்சியாக மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது. "மே 2001 இல் இந்தோனேசிய பொலிசார் சட்டபூர்வமான உரிமைகளான கருத்துதெரிவிக்கும் உரிமை, கூட்டம் கூடுதல், ஒன்றிணைதல், ஏசேவிலுள்ள ஏசேனியர்கள் அரசியல் நடவடிக்கைகளை வைப்பது மட்டுமல்லாமல், ஜக்காட்டாவில் தங்கியுள்ள ஏசேனியர்களை கூட தடைசெய்ய முன்வந்தனர். மேலும், சுகாட்டோ (Suharto) காலத்தில் அரசாங்கத்திற்கு எதிரான விமசகர்களை கைது செய்வதற்கு பொலிஸாரால் பாவித்த இந்தோனேசிய குற்றவியல் சட்டத்தில் உள்ள ''வெறுப்பை பரவலாக்கும்'' என்ற பிரிவை இணைத்ததுடன், இதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களையும், அரசாங்கத்தினை எதிர்க்கும் அல்லது வெறுப்பான பேச்சுக்கள், அல்லது வெளியீடுகளை தடை செய்தனர்.

கடந்த கிழமை மேகாவதியினுடைய மன்னிப்பு சம்பந்தமாக உள்ளூர் ஏசே தலைவர்கள் ஐயுறவு கொண்டிருப்பதுடன் நேரடி எதிர்ப்புகளை தெரிவித்தனர். பல்கலை கழக பேராசிரியர் Husaini Ibrahim இது தொடர்பாக விமர்சிக்கையில் "ஏசேயர்கள் அரசாங்கத்தை எனிமேல் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் எனவும், ஏனெனின் அவர்கள் தொடர்ச்சியாகவே ஏமாற்றப்பட்டுள்ளார்கள்'' என குறிப்பிட்டார். சுதந்திர ஏசே இயக்கப்பேச்சாளர் Amri Abdul Wahab, ஜக்காட்டா போஸ்ட் பத்திரிகைக்கு கூறுகையில் "நான் உங்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது கூட ஏசேயர்களை கொல்வது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் மேகாவதி கடைசி முறையாக மன்னிப்பு கேட்டு இரண்டு நாட்களாகியும் விட்டது". முன்னைய ஆயுதப்படைகளின் தலைவரான ஜெனரல் Wiranto கூட, 1998 இல் மன்னிப்பு கோரியதுடன் வழமையான இராணுவப்படைகளை மாகாணத்தில் இருந்து வாபஸ் பெற்றார். இது "மீண்டும் வேறு உடுப்புகளுடன் திரும்ப அனுப்புவதற்காக மட்டுமே" என அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

ஆசே மக்களிற்கு சுதந்திர ஆசே இயக்கத்தால் முற்போக்கான மாற்று வழியையும் எதையும் வழங்கவில்லை. 1976 ஆல் உருவாக்கப்பட்ட கெரில்லா அமைப்பானது, இஸ்லாமிய Sharia சட்டத்தை அமுல்படுத்த கூறி அழைப்பதன் மூலமும், தங்களுடைய மாகாணத்தில் வரும் நிலஎண்ணெய், எரிபொருள் வாயு சேமிப்புக்களால் வரும் வருமானத்தில் ஜக்காட்டா கூடிய பங்கை வருமானமாக எடுக்கிறது என குற்றம் சாட்டுவதாலும், ஓர் பகுதி உள்ளூர் வியாபாரிகளினதும், இஸ்லாமிய ஆளும் சிறிய தட்டுக்களை நோக்கி அழைப்புகள் விட தொடங்கியது. சுகாட்டோ அதிகாரத்துவ ஆட்சியின் கீழ், கடுமையான இராணுவ அடக்குமுறை, சுதந்திர ஏசே இயக்கத்திற்கு உள்ளூர் மக்களின் பலத்தை அதிகரிக்கச்செய்தது. இதன் பிற்போக்கு பிரிவினைவாத திட்டத்தின் குணாம்சம் மிகவும் தெளிவாக ஏசேயர்கள் அல்லாதவர்கள் மேல் குறிப்பாக ஜாவாவில் இருந்து குடியேறியவர்கள் மேல் தாக்குதல் நடாத்தியதால், ஆயிரக் கணக்கானேர் தப்பியோடியதில் இருந்து காணக்கூடியதாகவுள்ளது.

மேகாவதி தென்கிழக்கு ஆசிய நாட்டின் பிரயாணத்தின் பின் ஏசேவிற்கு "கலந்துரையாடல்" ஒன்றை நடாத்த புறப்படவுள்ளார். Sharia மதச்சட்டத்தை அமுல் செய்வதுடன், கல்வி முறை, சட்டம் மற்றும் மாகாணத்தை ஆளுவதற்கான ஓர் விசேட சுய ஆட்சியை கொடுப்பதற்கான சட்டத்திற்கு ஏற்கனவே அவர் கையெழுத்திட்டுள்ளார். எண்ணெயாலும் எரிபொருள் வாயுவாலும் வரும் வருமானத்தில் கணிசமான வீதம் மகாணத்திற்கு கொடுப்பதாக பிரேணைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் சில சலுகைகளை வழங்கும் அதே வேளை புதிய நிர்வாகம் ஏசேவில் சகலவிதமான எதிர்ப்புகளுக்கு எதிராக அடக்கியாள உத்தேசித்துள்ளது. சுதந்திர ஏசே இயக்கம் தனது ஏசே பிரிவினைக்கான கோரிக்கையை கைவிடாது விட்டால் அரசாங்கம் "கடுமையான நடவடிக்கை" எடுக்குமென நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இவருடைய இராணுவ தலைமையின் ஆதரவாளர்களில் ஒருவரான, இராணுவ தந்திரேபாய பிரிவான Kostad இன் உதவித்தலைவரான ஜெனரல் Ryamizard Ryacudu, கடத்த வெள்ளியன்று தனது விமர்சனத்தை வெளிப்படையாகவே பின்வருமாறு கூறினார்: "உலகத்தில் எந்த நாடென்றாலும் சரி, கிளர்ச்சி செய்யும் இயக்கம் அழிக்கப்படும்".