WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
White House lied about threat to Air Force
One
எயர் போர்ஸ்-1 மீதான தாக்குதல் அபாயம் குறித்து வெள்ளை மாளிகை
பொய் கூறியுள்ளது
By Jerry White
28 September 2001
Use
this version to print
ஜனாதிபதி புஷ் செப்டம்பர் 11 ஆம் திகதியின் பெரும்பான்மையான நேரம் வாஷிங்டனில்
இல்லாமல் இருந்ததற்கான காரணமாக கூறிய, Air Force One
இன் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அபாயம் குறித்து வெள்ளைமாளிகை பொய்கூறியுள்ளதில் தற்போது அகப்பட்டுள்ளது.
வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின்படியும், CBS செய்தியின்
படியும் ஜனாதிபதியின் விமானமான Air Force One இன்
மீதான தாக்குதல் எச்சரிக்கை குறித்து இரகசிய சேவையினர் தொலைபேசி அழைப்பு எதையும் பெறவில்லை என்பதை
வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் பின்வாங்கல் தொடர்பான இவ்விடயம் செய்தி
சாதனங்களில் பெருமளவில் குறிப்பிட்டப்படவில்லை.
உலக வர்த்தக மையத்தினதும், பென்டகனின் மீதானதுமான பயங்கரவாத தாக்குதலை
அடுத்து, புஷ் இன் நடவடிக்கைகள் அரசியல், செய்தி ஸ்தாபனங்களினதும் மத்தியில் விவாதத்திற்கு உரியதாகியது. நியூயோர்க்கினதும்,
வாஷிங்கடனினதும் அழிவினைத்தொடர்ந்து, உள்நாட்டு அமைச்சகத்தின் மீதான கார்க்குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும்,
மேலும் விமானங்கள் கடத்தப்படும் ஆபத்தும் குறித்த வெளிப்படையற்றதும், உறுதிப்படுத்தப்படாததுமான செய்திகள் வெளியாகின.
அதன்போது புளோரிடாவில் இருந்த புஷ் ஒரு இராணுவ முகாமிலிருந்து இன்னொரு முகாமை நோக்கி இரகசிய சேவையினரால்
விரைவாக கொண்டுசெல்லப்பட்டார்.
அவர் வெளிறிபடியும், நடுங்கியபடியும் முதலில்
Louisiana இல் உள்ள விமானப்படையின் நிலவறை [Underground
Bunker] ஒன்றிலிருந்து ஒரு ஆரம்ப அறிக்கையை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டார். பல மணித்தியாலங்களின்
பின்னர் அமெரிக்க விமானப்படை விமானத்தை தவிர சகல விமானங்களும் தரையிறங்கிய பின்னர் புஷ்
Nebraska எனும் இடத்திலுள்ள விமானப்படையின் ஆணையிடும்
கட்டளையகத்தின் முக்கியதளம் ஒன்றிற்கு பறந்து சென்றார். ஆரம்ப தாக்குதல் நிகழ்ந்த கிட்டத்தட்ட 10 மணித்தியாலங்களின்
பின்னர் மாலை 7 மணிவரை அவர் வாஷிங்கடனுக்கு திரும்பவில்லை.
புஷ் வாஷிங்டனுக்கு விரைவாக திரும்பாதது குடியரசுக்கட்சி உள்ளடங்கலாக பலரிடமிருந்து
விமர்சனத்தை உருவாக்கியது. அமெரிக்க நிதிப்பலத்தின் அடையாள சின்னத்தினதும், அமெரிக்க இராணுவ நரம்புமண்டலத்தின்
ஒரு பகுதி அழிப்பும் உள்ளடங்கலாக, அமெரிக்க குடிமக்கள் மீதான பாரிய தாக்குதலின்போது அமெரிக்க ஜனாதிபதியின்
தீர்மானமற்றதும் அல்லது பயப்பீதியான அந்தவிதமான தோற்றப்பாடும் அமெரிக்க அரசியல், பொருளாதார தட்டினரின்
மத்தியில் பாரிய கவலையை உருவாக்கியுள்ளது.
New York Times பத்திரிகையின்
ஆசிரியரும், நிக்சனின் ஆலோசகரும், குடியரசுக் கட்சியின் ஆதரவாளருமான
William Safire நெருக்கடியின் ஆரம்ப கட்டத்தில் புஷ் பயமடைந்து
தனது பதவியை கைவிட்டுவிட்டார் என கருத்துத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12ம் திகதி தலையங்க கட்டுரையில்
William Safire
''ஆரம்ப பயங்கரமான காலகட்டத்திலும் அது ஒரு வெளிநாட்டு சக்தியின்
அணுக்குண்டுத் தாக்குதல் போல் நோக்கப்படவில்லை. புஷ் வாஷிங்டன் பகுதிக்கு திரும்பிவர வலியுறுத்தியிருக்கவேண்டும்,
மற்றும் வெள்ளை மாளிகைக்கு அதிக தூரமில்லாத பாதுகாப்பான ஒரு இடத்திலிருந்து நேரடியாகவும் அமைதியாகவும் செய்தியை
ஒலிபரப்பியிருக்க வேண்டும்'' என எழுதியிருந்தார்.
இவ் விமர்சனங்களால் தாக்கப்பட்ட புஷ் இன் முக்கிய அரசியல் ஆலோசகரான
Karl Rove
உம், உயர் அதிகாரிகளும் அரசியல், வர்த்தக, இராணுவ அமைப்பை உறுதிப்படுத்துவதை
பரபரப்பாக மேற்கொண்டனர். அத்துடன், மக்கள் மத்தியில் புஷ் இன் ஆழுமைக்கு பரந்தளவில் முண்டுகொடுத்தனர்.
செப்டம்பர் 12ம் திகதி மாலை செய்தித்துறையினுள் பரவலாக பரப்பியபடி
The Associated Press
உம் Reuters
உம் புஷ் இன் முதல்நாள் நடவடிக்கை மீதான விமர்சனத்தை இல்லாது
செய்வதற்கான கதைகளை சுமந்து வந்தன. அவர்கள் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் ''பயங்கரவாதிகளின்
தாக்குதலுக்கு வெள்ளைமாளிகையும், Air Force One
உம் இலக்குகளாக இருப்பதற்கான உண்மையான, நம்பத்தக்க தகவல்கள்
இருப்பதாகவும், பென்டகனின் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட விமானம் வெள்ளைமாளிகையை நோக்கி பறந்ததாகவும்''
குறிப்பிட்டதாக ஆதாரம் காட்டின. அன்றைய மாலைச் செய்தியில் வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளரான
Ari Fleischer
இதனை மீண்டும் சுருக்கமாக திரும்ப கூறியதுடன், வெள்ளை மாளிகையும்,
Air Force One
உம் உண்மையான இலக்குகளாக இருப்பதற்கான
''விஷேட, நம்பத்தக்க தகவல்கள்'' இரகசிய சேவையினரிடம் உள்ளதாக
குறிப்பிட்டார்.
''நிலவறையின் உள்'' என தலையங்கமிடப்பட்ட
New York Times
பத்திரிகையின் செப்டம்பர் 13 ஆம் திகதி இன்னுமொரு அறிக்கையில் பெயர்குறிப்பிடாத
''வெள்ளை மாளிகை உயர்மட்ட அதிகாரி'' ஒருவருடனான கலந்துரையாடலில் அவர் தன்னிடம் ''இரகசிய சேவைக்கு
ஒரு பயமுறுத்தும் தகவல் கிடைத்ததாகவும் அதனை அவர்கள் கையாட்களூடாக ஜனாதிபதிக்கு ''Air
Force One தான் அடுத்தது'' என்ற செய்தியை அனுப்பியதாக''
குறிப்பிட்டதாகவும், மேலும் ''அவ் அதியுயர் அதிகாரியின் இத்தகவல் உண்மையானதாக நம்புவதற்கு அமெரிக்க
இரகசிய சொற்களை அறியும் முறையானது பாவிக்கப்பட்டதாகவும்''
William Safire
எழுதியுள்ளார்.
இத்தகவலானது Karl Rove
ஆல் உறுதிப்படுத்தப்பட்டதாக
Safire குறிப்பிட்டார்.
Karl Rove
புஷ் வாஷிங்டனுக்கு திரும்ப விரும்பியதாகவும், ஆனால் இரகசிய சேவையினர்
''எச்சரிக்கையை உள்ளடக்கியிருந்த வார்த்தைகள் பயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி தங்கியிருக்கும் இடங்களும், நடவடிக்கைகளும்
தெரிந்திருக்கின்றது என்பதற்கான சாட்சி'' என தெரிவித்ததாக கூறியதாகவும்
Safire மேலும் குறிப்பிட்டார்.
இவ் ஆச்சரியம் மிக்க செய்திகளின் வெளிவந்த இரண்டு வாரங்களின் பின்னர் புஷ் இன்
நிர்வாகமானது முழுக்கதையும் ஒரு கட்டுக்கதை என்பதை ஏற்றுக்கொண்டது. செப்டம்பர் 25ம் திகதி
CBS இன் மாலைச் செய்தியானது
''அவ்வாறு ஒன்றும் நிகழவில்லை'' என அறிவித்தது.
முக்கிய விடயம் என்னவெனில், வழமைக்குமாறான நெருக்கடியான நேரத்திலும், மக்கள்
அமைதியற்றிருந்தபோதும் ஜனாதிபதியின் பெருமையை பாதுகாப்பதற்காக அதிகாரிகள் பொய் கூறியதானது மிகவும் முக்கிய
தாக்கங்களை கொண்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற 24 மணித்தியாலங்களுக்குள் வெள்ளை மாளிகை அமெரிக்க
மக்களினதும், உலகத்தினதும் கருத்தை ஏமாற்றும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது. இது செப்டம்பர் 11ம்
திகதியிலிருந்து இன்றுவரை அரசாங்கத்தால் கூறப்பட்டவை அனைத்தும் நல்ல நோக்கத்தில் செய்யப்பட்டவை என
கருதமுடியாதுள்ளது.
தாக்குதல் நடந்த தினத்தில் புஷ் தனது நடவடிக்கைகள் குறித்து பொய் கூறியிருப்பரானால்,
அவர் அரசாங்கத்தின் விசாரணைகள் தொடர்பாகவும், இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் தொடர்பாகவும், அமெரிக்காவின்
யுத்தத் தயாரிப்பின் நோக்கங்கள் குறிக்கோள் தொடர்பாகவும், தொலைத்தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்பதற்கும்,
தேடுதல் நடாத்துவதற்கும், சந்தேக நபர்களை தடுத்துவைப்பதற்கும் பொலிசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவேண்டும்
என அவரது நிர்வாகத்தால் கேட்கப்படுவது தொடர்பாகவும் பொய் கூறியிருக்கலாம் என ஏன் ஒருவர்
கருதமுடியாது?.
அரசாங்கத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் அமெரிக்க மக்கள் ஐயுறவுடன் நோக்குவதற்கும்,
அரசாங்கத்தின் வலியுறுத்தல்களை சுதந்திரமானதும், பரிசோதித்துப் பார்க்க கூடிய தகவல்களில்லாமல் ஏற்றுக்கொள்ளாமல்
விடுவதற்குமான தாராளமான காரணங்களை இம் முழுக்காலகட்டமும் வழங்குகின்றது.
அரசாங்கத்தின் ஏமாற்றுதலை, முக்கியமாக புஷ் பதவிக்கு வந்ததிலிருந்து இத்தாக்குதலுக்கு
காரணம் பின் லேடனும் அவரது Al Qaeda
வலைப்பின்னலும் தான் காரணமென்பதையும், பின் லேடனுக்கு புகலிடம் வழங்கியுருப்பதால்
ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படைவாத தலிபான் அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும் என்ற அதனது வலியுறுத்தலின்
உண்மையை அமெரிக்காவில் உள்ள மக்கள் மட்டுமல்லாது உலக மக்களும் கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டை
எடுத்துள்ளது.
செப்டம்பர் தாக்குதல்களில் பின் லேடன் ஒரு பங்கு வகித்திருப்பது சாத்தியமானது.
எவ்வாறிருந்தபோதும் புஷ் இன் நிர்வாகம் இதுவரை சாட்சியங்கள் எதையும் முன்வைக்காததோடு, அப்படி முன்வைப்பதற்கான
நோக்கமிருப்பதாகவும் வெளிப்படையாக தெரியவில்லை. இதற்கு பதிலாக அமெரிக்க மக்கள் வெள்ளை மாளிகை மீது
குருட்டு நம்பிக்கை வைக்கவேண்டும் எனவும், யுத்தத்தை நடத்துவதற்கும் சிவில் உரிமைகளை நசுக்கவதற்கும் வெற்று
காசோலை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.
Air Force One தொடர்பான
பொய்க்கதையானது புஷ் நிர்வாகத்தின் பொய்யான முறைகளை மட்டுமல்லாது செய்தி ஸ்தாபனங்களின் வெட்கம்
கெட்டதும், அதற்கு உடந்தையாக இருக்கும் அடிபணிந்த தன்மையையும் எடுத்தக்காட்டுகின்றது. ஜனாதிபதியின் விமானத்தின்
மீதான தாக்குதல் குறித்த பொய்யான தொலைபேசி அழைப்பு தொடர்பான கதை வெளிவந்ததுடன் செய்தி ஸ்தாபனங்கள்
அதனை விமர்சனமற்ற முறையில் தலையங்கச் செய்திகளுடனும், அச்சுறுத்தும் பதாகைகளுடனும் மாலைச்செய்தியில் மீண்டும்
மீண்டும் பரப்பின. தற்போதைய நெருக்கடி முழுவதிலும் போல் செய்தி ஸ்தாபனங்கள் வெட்கம் கெட்டவகையில் அரசாங்கத்தின்
பிரச்சார கைகளாக செயற்பட்டன.
ஆனால் வெள்ளை மாளிகை இரண்டு வாரத்தின் பின்னர், இக்கதையை வாபஸ் பெற்றதும்,
கூடுதலான செய்திவலைப் பின்னல்கள் New York
Times
போன்ற பிரபல்யமான பத்திரிகைகள் இச்சம்பவத்தை குறிப்பிடக்கூடவில்லை.
Washington Post
தனது பங்கிற்கு தனது பக்கங்களுக்குள் அரசாங்கத்தின் முகத்தை புதைத்துவிட்டது.
எந்தவொரு செய்தி வெளியீட்டாளர்களும் இக் குற்றச்சாட்டை அனுமதித்ததை ஒரு பிரச்சனையாக்கவோ அல்லது அதன்
ஆழ்ந்த தாக்கத்தினை விவாதிக்கவோ இல்லை.
அதிகாரபூர்வமான வாபஸ் வாங்கலுக்கு முன்னரே, வாஷிங்டனின் செய்தியாளர்கள் மத்தியில்
Air Force One
தொடர்பான கட்டுக்கதையை பரவலாக ஏற்றுக்கொண்டனர்.
New York Times
இன் 23ம் திகதி எழுதிய கட்டுரையில்
Maureen Dowd,
''தற்போது பரவலாக மதிப்பிழந்த [ஆசிரியர் குறிப்பு] -கதையான பென்டகனை நோக்கி சென்ற விமானம்
வெள்ளை மாளிகையை நோக்கி இலக்காக கொண்டிருந்ததால் தான் புஷ் உடனடியாக வாஷிங்கனுக்கு திரும்பவில்லை எனவும்,
Air Force One
ஆபத்துக்குள்ளாகியிருந்தது என்பதை
Karl Rove நகரம்
முழுவதும் செய்தியாளர்கள்
மத்தியில் விற்கமுயன்றதாக'' குறிப்பிட்டிருந்தார்.
Maureen Dowd உம் அவரது சக
கூட்டாளிகளும் அரசாங்கம் பொய் கூறுவதை நம்பியிருந்தாலும், செய்தித்துறையின் அதனை பகிரங்கமாக எதிர்க்காததால்
அக் கதையின் உண்மையான தன்மைபற்றி மக்கள் அறிந்துகொள்வதற்கான வழிகள் இருக்கவில்லை.
செய்தித்துறையின் அமைதிக்கு இன்னுமொரு காரணமும் இருக்கலாம். இக்கதையானது
செப்டம்பர் 12ம் திகதி Karl Rove
ஆல் கையளிக்கப்பட்டது.
Fleischer உம்
ஏனைய அதிகாரிகளும் செப்டம்பர் 11ம் திகதி புஷ் இன் பலவீனமான நடவடிக்கையைவிட இவ்விடயத்தை மிகவும் அபாயமானதாகவும்,
நகைப்பிற்கிடமான முறையிலும் எழுப்பினர்.
இப்படியான கேள்வியை
William Safire செப்டம்பர் 13ம் திகதி
New York Times
இல் எழுப்பியிருந்தார்.
Air Force One
இன் இரகசியம் தொடர்பாக பயங்கரவாதிகள் அறிந்துள்ளார்கள் என்ற வெள்ளை மாளிகையின் கூற்றை ஆதாரம் காட்டி
''அவர்கள் எவ்வாறு இரகசிய பரிபாஷையையும், அவர்களது செய்திகளையும் எவ்வாறு அறிந்துள்ளார்கள்? இரகசிய
பரிபாஷை, ஜனாதிபதியின் இருப்பிடம், இரகசிய நடைமுறைகள் தொடர்பாகவும் பயங்கரவாதிகள் அறிந்திருப்பது
அவர்களுக்கு வெள்ளை மாளிகையினுள் உளவாளிகைகளையோ அல்லது இரகசிய சேவைகள்,
FBI, FAA, CIA
தகவல் கொடுப்போரையும் வைத்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது''.
William Safire இன் மிகவும்
வலிமையான கேள்வியான பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு இவ் இரகசிய தகவல்களும், முக்கிய விடயங்களும் கிடைத்தன
என்ற கேள்வி செய்தித்துறையால் கூடுதலாக கவனத்திற்கு எடுக்காததுடன், அரசாங்கத்தாலும் கவனிக்கப்படவில்லை.
அப்படியான ஒரு தொலைபேசி அழைப்பு கிடைத்திருந்தாலும், அது அரசாங்கத்தின் ஏதாவது
ஒரு சேவையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு,
Safire இனால்
முன்வைக்கப்பட்டதைவிட இன்னுமொரு சாதகமான ஒரு கொள்கையின் சாத்தியப்பாட்டை எழுப்புகின்றது. அதாவது அத்தொலைபேசி
அழைப்பானது ஒரு எச்சரிகைகையாக இல்லாது, பயங்கரவாதிகளின் திட்டம் தொடர்பாகவும், நடவடிக்கைகள் தொடர்பாகவும்
அமெரிக்க அரசாங்கத்திற்கு தகவல் வழங்குபவரின் துப்பாகவும் இருக்கலாம்.
உலக சோசலிச வலைத்தளம் இப்படியான கேள்விகளுக்கான பதிலை வைத்திருப்பதாக
கூறவில்லை. ஆனால் அரசாங்கத்தின் சொந்த அறிக்கைகளில் இவை எழுப்பப்பட்டுள்ளபோது, அவற்றை எழுப்புவது நியாயமானதும்
அவசியமானதும் ஆகும்.
ஒரு விடயம் தெளிவாகியுள்ளது. அரசாங்கம் அமெரிக்க மக்களுக்கும், உலக மக்களுக்கும்
பொய் கூறியுள்ளது. செப்டம்பர் 12ம் திகதி Air Force
One மீதான அபாயம் குறித்து தெரிவித்தபோதோ அல்லது இரண்டு
வாரங்களின் பின்னர் அக்கதையை வாபஸ்பெற்றபோதோ அது பொய் கூறியுள்ளது. கட்டுப்பாடற்ற இராணுவ வாதத்தை
ஏற்றுக்கொள்ளும்படியோ அல்லது பயங்கரவாத்திற்கு எதிரான புனிதப் போராட்டத்திற்கு தமது ஜனநாயக உரிமைகளை
பலியிடுமாறு இலட்சக்கணக்கான மக்களிடம் கூறப்படும்போது, அவர்கள் இப்பிரச்சனைக்குரிய விடயத்திலிருந்து சரியான
முடிவை எடுக்கவேண்டும்.
See Also:
24 September 2001
அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள்: புஷ்சின்
பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தின் முதல் பலி
|