WSWS
:செய்திகள்
& ஆய்வுகள் :
Suspicious trading points to advance knowledge by big investors of
September 11 attacks
செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல் குறித்து பாரிய முதலீட்டாளர்களுக்கு முன்னரே தகவல்கள்
தெரிந்துள்ளது என்பதை ஐயுறவுக்குரிய வர்த்தகம் எடுத்துக்காட்டுகின்றது
By Barry Grey
5 October 2001
Use
this version to print
நியூயோர்க்கினதும்,
வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11ஆம் திகதி தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க பங்குகளினதும்,
பங்குப்பத்திரங்களினதும் ஒரு எதிர்பாராததும் கணிப்பிடமுடியாததுமான ஊகவாணிப அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதானது சில
செல்வம்மிக்கதும், நன்கு தொடர்புள்ளதுமான முதலீட்டாளர்களுக்கு நடைபெறவிருக்கும் அழிவு தொடர்பாக முன்னரே தெரிந்திருப்பதை
எடுத்துக்காட்டுகின்றது.
இதில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பாரிய நெருக்கடி விமானப்போக்குவரத்து, உல்லாசப்பயணத்துறை,
காப்புறுதித்துறை போன்றவற்றினது பங்குப்பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்யும் என்பதையும், அமெரிக்க பொருளாதாரத்தை
முழுதாகவும் நம்பிக்கையற்றதாக்கும் என்பதை தெரிந்திருந்தனர். தற்போது பங்குகளுக்கும், பங்குப் பத்திரங்களுக்குமான
சந்தையினை மேற்பார்வை செய்யும் நிறுவனமான Securities and
Exchange Commission இனாலும், இரகசிய சேவையினராலும்,
FBI இனாலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நாள் முழுவதும் புதிய பயங்கரவாத சதி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஐயுறவுக்குரியவர்கள்
மறைந்திருப்பதாகவும் செய்திகளைப்பரப்பும் செய்தி ஸ்தாபனங்கள் அதற்கு மாறாக இது தொடர்பாக முக்கியத்துவம்
எதனையும் கொடுக்கவில்லை.
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதாவது தொடர்புள்ளதாக என ஆராய்வதாகவும்,
ஐயுறவுக்குரிய பரிமாற்றங்களை தாம் விசாரணைக்குட்படுத்தியுள்ளதாகவும்
Securities and Exchange Commission ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 11ம்
திகதி தாக்குதலுக்கு பின்னணியில் லேடனினது கெரில்லா படையோ அல்லது தீவிரவாதிகளோ இவ்வர்த்தகத்திற்கு காரணமாக
இருக்கலாம் என்ற கருத்தை ஆழமான ஆய்வு பொய்யாக்குகின்றது.
கடந்த பல நாட்களாக Wall
Street Journal பத்திரிகையானது
Securities and Exchange Commission உம் இரகசிய சேவையினதும் அறிக்கைகளை வெளிவிட்டிருந்து.
Associated Press உம்
USA Today உம் விரைவாக அறிக்கையை
வெளிவிட்டிருந்தன. ஆனால் New York Times
உம் Washington Post உம் வித்தியாசமான முறையில்
இது தொடர்பாக மெளனம் சாதித்ததுடன், செய்தி ஸ்தாபனங்கள் இது தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை.
Securities and Exchange Commission,
இரகசிய சேவையுடன் இணைந்து நடாத்தும் விசாரணையில் தாக்குதலுக்கு முன்னர்
ஐயுறவிற்குரிய பங்கு வியாபாரத்தில் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் 5 வருட பங்குப்பத்திரங்கள் வழமைக்குமாறான
அளவில் நிகழ்ந்துள்ளதாக Wall Street Journal
குறிப்பிட்டுள்ளது. திறைசேரி பங்குப்பத்திரங்களின்
வர்த்தகம் 5$ மில்லியன் இற்கு நிகழ்ந்துள்ளது.
Wall Street Journal
குறிப்பிட்டபடி 5 வருட திறைசேரிப் பங்குப்பத்திரங்கள் விஷேடமாக அமெரிக்காவினதும், உலகத்தினதும் நெருக்கடியான
காலகட்டத்தில் சிறந்த பங்குப்பத்திரங்களில் ஒன்றாகும். இப்பத்திரங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை பெறுவதாலும்,
முதலீட்டாளர்கள் அபாயகரமான பங்குகளை விட்டு விலகுகையில் இப்படியான பங்குகளின் பின் அணிதிரளுவதாலும் இதற்கு
மதிப்பு உள்ளது. Wall Street Journal
குறிப்பிட்டபடி இப்பத்திரங்களின் பெறுமதியானது செப்டம்பர் 11ம்
திகதிக்கு பின்னர் கூடியளவு அதிகரித்துள்ளது.
அக்கட்டுரையானது Tucker
Anthony Inc நிறுவனத்தின் பங்குச்சந்தையின் மூலோபாயவாதியான
Michael Shamosh
''அவர்கள் இப்படியான ஏதாவது செய்வதானால் சந்தையின் 5 வருட காலப்பகுதிக்கு
செய்வார்கள். அது ஒரு திரவமான பத்திரம் மட்டுமல்ல அதனது பாதையை கண்டுபிடிப்பதும் கடினமாகும்'' என குறிப்பிட்டதை
எடுத்துக்காட்டியது.
Securities and Exchange Commission
தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் வித்தியாசமான பங்குகளில் குறுகியகால
விற்பனை [Short-Selling]
நடைபெற்றது தொடர்பாக விசாரணை நடாத்துகின்றது. அவர்கள்
US securities firm
இடம் செப்டம்பர் 11ம் திகதிக்கு முன்னர் இடம்பெற்ற குறைந்தகால விற்பனை
தொடர்பான விபரங்களை தருமாறு கேட்டுள்ளது.
குறைந்தகால பங்கு விற்பனையாளர்கள்
பங்குகளை கடன்வாங்கி அவற்றை தற்போதைய விலைக்கு விற்கின்றனர்.
அக்கடன்வாங்கிய பங்குகளுக்கான விலையை கொடுக்கவேண்டிய நாளில் அதன் விலை குறையும் என பந்தயம் கட்டி [ஊகித்து],
அதில் கிடைக்கும் வித்தியாசத்தை தமது பைகளில் போட்டுக்கொள்கின்றனர்.
செப்டம்பர் 11ம் திகதிக்கு முன்னர் உலக வர்த்தக நிலையத்தில் அலுவலகங்களை
கொண்டிருக்கும் விமானச் சேவைகளினதும், காப்புறுதி நிறுவனங்களினதும், உல்லாச பிரயாணத்துறையுடன் தொடர்புள்ள
நிறுவனங்களினதும், நிதிநிறுவனங்களினதும் பங்குகள் பொருத்தமற்ற விதத்தில் வீழ்ச்சியடைந்துதுடன், கடத்தப்பட்டு குண்டுத்தாக்குதல்
நடாத்தப்பட்டதற்கும் இதற்குமான ஐயுறவை உருவாக்கியதுடன்,
Securities and Exchange Commission
விசாரணையை தொடரச்செய்தது. தாக்குதலின் பின்னர் இப்பங்குகளினது பெறுமதியானது
வோல் ஸ்ரீட்டின் விற்பனையில் பாரிய பாதிப்பை சந்தித்தது.
Securities and Exchange Commission
தனது பட்டியலிலுள்ள பாதுகாப்பு நிறுவனங்களினதும், ஐரோப்பாவிலும், கனடாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள அரசாங்க
நிறுவனங்கள் தொடர்பான விபரத்தை வெளிவிடாது கட்டுப்பாடாக உள்ளது. கடந்த செவ்வாய்கிழமை
Canadian securities
industry
இன் வர்த்தக அமைப்பான Investment Dealers
Association இற்கு அமெரிக்க
Securities and
Exchange
Commission
இனால் அனுப்பப்பட்ட 38 பங்குகளின் பட்டியலை அது தனது வலைத்தளத்தில் வெளியிட்டது. அமெரிக்க நிறுவனமானது
ஆகஸ்ட் 27 இற்கும் செப்டம்பர் 11 இற்கும் இடையில் இப்பங்குகளின் வர்த்தகம் தொடர்பாக விசாரிக்குமாறு
கனேடிய நிறுவனத்தை கேட்டுள்ளது.
இவ்விபரம் வலைத்தளத்தில் வெளிவிடப்பட்டது தெரியவந்ததும், அமெரிக்க அதிகாரிகள்
Investment Dealers Association
இடம் அதனை வலைத்தளத்திலிருந்து அகற்றுமாறு கேட்டதும், கனேடிய அமைப்பு அதனை ஏற்றுக்கொண்டது. எவ்வாறிருந்தபோதிலும்
செய்தித்துறையினரும் ஏனையோரும் அகற்றப்பட முன்னரே அதனை பிரதி எடுத்துக்கொண்டனர்.
அப்பட்டியலில் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களான
Continental, Delta, Northwest, Southwest,
United, US Airways போன்றவையும்,
Carnival, Royal Caribbean cruise
கப்பல் நிறுவனங்களும்,
Boeing விமானத்
தயாரிப்பாளரும், பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான
Lockheed Martin உள்ளடங்கியிருந்தன. காப்புறுதி நிறுவனங்களான
American International Group, Axa,
Chubb, Cigna, CNA Financial, John Hancock, MetLife
போன்றவையும் அதில் அடங்கியிருந்தன.
Securities and Exchange Commission
இன் பட்டியலில் உலக வர்த்தக நிலையத்தின் இரட்டை கட்டிடத்தில் இருந்த பல
பாரிய நிறுவனங்களை அடக்கியிருந்தது. அதனுள் இக்கட்டிடத்தில் மிகப்பெரியதான
Investment firms Morgan Stanley, Lehman
Brothers, Bank of America, The financial firm Marsh & McLennan
ஆகியவையும்
General Motors, Raytheon, LTV, WR Grace, Lone Star Technologies, American
Express, Bank of New York, Bank One, Citigroup and Bear Stearns
அடங்கும்.
கடந்த புதன்கிழமை நிதிச்சேவைகளுக்கான குழுவின் முன்னர்
FBI இன் நிதித்துறை குற்றவியல் பிரிவின் தலைவரான
Dennis Lormel ''இதுவரை இத்தாக்குதலால் எவராவது
பயனடைந்திருக்கின்றார்கள் என்பதற்கான அடையாளங்களோ அல்லது சாட்சிகளோ இல்லை'' என கூறியுள்ளார். ஆனால்
USA Today பத்திரிகை
PTI Securities இன் இணை நிறுவனரான
Jon Najarian ஆதாரங்காட்டி இதில்
Chicago Board Options Exchange ''முக்கிய
பங்கு வகித்துள்ளதாகவும், வழமைக்கு மாறான அளவிலான தொகை ''ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டது.
இந்நிலைமையில் எந்த தனிநபர்கள், குழுக்கள், நிறுவனக்கூட்டங்கள் செப்டம்பர் 11ம்
திகதி தாக்குதல் குறித்து முன்னர் அறிந்திருந்தன என்பது குறித்தோ அல்லது இதைப்பாவித்து இலாபமடைந்தனர் என்பது
குறித்தோ அல்லது அவர்களில் யாராவது அமெரிக்காவினுள் அடித்தளத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது குறித்தோ
கூறுவது சாத்தியமல்ல. ஆனால் காரணம் காட்டமுடியாதவாறு திறைசேரி பத்திரங்களை வாங்குவதற்கான
முன்நின்றதும், ஒரு சில குறிப்பிட்ட பங்குகளை குறுகியகால விற்பனை செய்ததும், இத்தாக்குதலுக்கு திட்டமிடலில்
ஈடுபட்டிருந்தவர்கள் சூதுவாது தெரிந்தவர்களாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும், அமெரிக்க சமுதாயத்தின் பல
விடயங்கள் தொடர்பாக ஆழமான புரிந்துணர்வையும் கொண்டவர்களாகும்.
See Also:
05 October 2001
எயர்
போர்ஸ்-1 மீதான தாக்குதல் அபாயம் குறித்து வெள்ளை மாளிகை பொய் கூறியுள்ளது
21 September 2001
புஷ் நிர்வாகத்துக்கு ஏன் யுத்தம் அவசியமாகியுள்ளது?
|