World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்

Pacifist moralizers rally behind the US war drive

அமைதிவாதிகள் அமெரிக்க யுத்த நோக்கங்களின் பின் அணிதிரளுகின்றனர்

By David Walsh
19 October 2001

Use this version to print

உலக சோசலிச வலைத்தளத்தில் வெளிவந்த பல விமர்சனங்கள் அமெரிக்க அரசானது அண்மைய பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னரே தயாரிக்கப்பட்ட உள்நாட்டினதும் [ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை], வெளிநாட்டின் மீதான [மத்திய ஆசியாவில் ஆதிக்கத்தை பரப்பும்] கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக செப்டம்பர் 11ம் திகதியின் துயரமான நிகழ்வினை பயன்படுத்துவதை தெளிவுபடுத்தியது.

அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில சமூகத்தட்டினரின் மத்தியில் நீண்டகாலமாக முதிர்ச்சியடைந்த போக்கினை உலக வர்த்த மையத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைய செய்துள்ளது. ஒரு பரந்த பிரிவு முன்னாள் இடதுசாரிகள், தீவிரவாதிகள், தாராளவாதிகள் [லிபரல்வாதிகள்], புஷ் நிர்வாகத்தினது ''பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தை'' ஆதரிப்பதன் மூலம் அமெரிக்க ஆளும்வர்க்கத்துடனான தமது உறவை பலப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இப்படியான போக்குகள் தற்போது பெருகியுள்ளன. குறிப்பிட்ட பத்திரிகைகளின் கருத்து மேடைகளில் அவர்களின் வெற்று அறிக்கைகள் இடத்தை பிடித்துள்ளன. தனது பங்கிற்கு உலக சோசலிச வலைத்தளம் இப்படியானவர்களிடம் இருந்து அதாவது ''முன்னாள் சோசலிசவாதி'', ''தன்னை எப்போதும் ஒரு தாராளவாதியாக கருதிக்கொண்ட'' பலரிடமிருந்து பல கடிதங்களை பெற்றது. அவர்கள் அவற்றில் உலக வர்த்த மையத்தின் மீதான தாக்குதல் ஏன் தமது முன்னைய நிலைப்பாட்டை மீளாய்வு செய்யவைத்துள்ளது என்பதற்கு விளக்கமளித்தனர்.

Wall Street Journal பத்திரிகை அண்மையில் Scott Simon இன் கட்டுரை ஒன்றை வெளிவிட்டிருந்தது. National Public Radio இன் ''Scott Simon இன் வார இறுதி நிகழ்ச்சி'' இனை நடத்தும் Scott Simon அரசியல் ரீதியாக நிலையற்ற கூட்டத்தின் மனநிலையையும், சிந்தனையையும் தொகுத்து வெளிப்படுத்திக்காட்டியிருந்தார்.

"அமைதிவாதிகளும் இந்த யுத்தத்தை கட்டாயம் ஆதரிக்கவேண்டும்'' என்ற தலையங்கத்திலான தனது விமர்சனத்தில் தான் 60களில் இறுதியில் ஒரு பயந்தவராகவும், அமைதிவாதியாகவும் இருந்ததாக குறிப்பிட்டார். 1960களிலும், 1970களிலும் பல மோதல்களின்போது யுத்த செய்தியாளராக கடமையாற்றியபோது அவை தனது முடிவுகளை தகர்த்துவிடவில்லை என குறிப்பிட்டார். எவ்வாறிருந்தபோதும் 1990களில் பால்க்கனின் யுத்த செய்தியாளராக கடமையாற்றியபோது ''சகல சிறந்த மக்களும் மிகமோசமானவர்களால் கொல்லப்படலாம்'' என்ற முக்கிய முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் ''உலக வர்த்தக மையமும், பென்டகனும் தாக்கப்பட்ட சக்திகளை எதிர்கொள்கையில் அமெரிக்க அமைதிவாதிகளுக்கு யுத்தத்தை ஆதரிப்பதை தவிர எவ்வித மாற்றீடும் இல்லை என தனக்கு தோன்றுவதாகவும், அதனை தான் ஒரு எதிர்த்தாக்குதல் அல்லது பதில்தாக்குதல் என கருதாது, உலகத்தை தாக்கியளிப்பவர்களிடம் இருந்து மேலும் பாதுகாப்பதற்கான ஒரு தற்பாதுகாப்பு'' எனவும் கூறினார்.

இப்படியான பலதரப்பட்ட அமைதிவாதிகளும் யுத்தமற்ற காலகட்டத்தில் அமைதிக்காக அணிதிரள்வதை ஒருவர் அவதானிக்க முடியும்.

ஒரு சமூக நிலைப்பாட்டிலிருந்து நோக்கினால், அமைதிவாதம் ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனத்தின் மோசமான வெளிப்பாடுகளின் போது மத்தியதர வர்க்க பிரிவினரது பதிலாக இருக்கின்றது. ஆனால் அது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான அணிதிரட்டலை எதிர்க்கின்றது. Scott Simon இன் சொந்த வரலாறு அவர் வியட்னாம் யுத்தத்தின்போதும், மத்திய அமெரிக்காவில் றேகன் நிர்வாகத்தின் ஆதரவுடனான யுத்தத்தின் போதும் ஒரு அமைதிவாதியாக இருந்திருந்தார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா குண்டுமழை பொழியும்போதும், வாஷிங்டனின் கைக்கூலிகள் ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்யும்போதும், கொலைசெய்யும்போதும் Simon வியட்நாமியர்களினையும் எல்சல்வடோர் மக்களினையும் நோக்கி தனது மறுகன்னத்தை காட்டியிருந்தார். தற்போது அமெரிக்க மக்கள் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாகையில் ஆயுதங்களுக்கு ஆதரவாக அழைப்பு விடுவதை தவிர வேறுவழியில்லை என்கின்றார்.

Simon இன் கருத்தானது, முக்கியமாக ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கான எதிர்ப்பிற்கும், பொதுவாக அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கைகளுக்கும் எதிரான சாதகமான ஒரே ஒரு அடித்தளம் அமைதிவாதம் என்ற பிழையான முடிவிலிருந்து எழுகின்றது. அவர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பிரித்தானியர்கள் அரசனுக்கும் நாட்டுக்குமாக போராடவேண்டுமா என 1933 ஆம் ஆண்டு நடந்த விவாதத்தை பற்றி குறிப்பிடுகின்றார். அதில் இறுதியில் பிரபல்யமான தீர்மானமானத்தில் ஆரதவளிக்கதேவை இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது முக்கியமான ''ஒரு பல்கலைக்கழகத்தின் நேர்மையான புத்திஜீவிகளின்'' ஒழுக்கமான மனநிலையின் அடையாளமாகும்.

இது முற்றாக Simon இற்கு அப்பாற்பட்டதுடன், 1930களின் பாரிய புத்திஜீவிகளின் பிரிவானது பிரித்தானியாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான முரண்பாடானது இரண்டு போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல் என்பதை விளங்கிக்கொண்டதுடன், ஜேர்மன் பாசிசத்திற்கும், பிரித்தானிய முடியாட்சிக்கும் எதிராக சோசலிச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தால் எதிர்கொள்ளவேண்டும் என, பரந்த முற்போக்கான பிரிவினர் முடிவெடுத்தனர்.

Simon இன் விமர்சனத்தின் முக்கிய தன்மை என்னவெனில் அது வரலாற்று உள்ளடக்கமற்றதாகும். ''குறிப்பிட்ட அமெரிக்க கொள்கைகளை அல்லது கலாச்சார பொறுப்புக்களை பற்றிக்கொள்ள விரும்புபவர்கள் போலியான அரசியல் முக்கியத்துவம் உடைய சித்தசுவாதீனமற்றவர்களின் (psychotics) குற்றங்களை அலங்கரிக்க முயல்கின்றனர்'' என வரலாற்றை கருத்திற்கு எடுக்காது குறிப்பிடுகின்றார்.

அவர் செப்டம்பர் 11ம் திகதியின் தாக்குதல்களை ''சித்தசுவாதீனமற்றவர்களின்'' நடவடிக்கை என சுலபமாக காட்டுவதன் மூலம், அதற்கான காரணமான ஒரு தொடர் நிகழ்வுகளில் இருந்து அப்பரிதாபகரமான நிகழ்வை அகற்றப்பார்க்கின்றார். நிகழ்வுகளை இப்படியான மரபுவழிப்பட்ட நோக்கில் பார்ப்பதானது, புஷ் இனாலும் அவரின் ஆதரவாளர்களாலும் செய்யப்படுவதைப்போல் ஒருவரின் எதிரியை ''பேய்களின் சக்தியாக'' குறைத்து மதிப்பிடுகின்றது.

ஆளும் தட்டினரும் அவர்களின் ஆதரவாளர்களும் அமெரிக்க மக்கள் சாதாரணமான விளக்கங்கள் மூலம் திருப்தியடைந்திவிடுவர் என கருதுகின்றனர். இதற்கு மாறாக பல அமெரிக்கர்கள் இத்தாக்குதல் மிகவும் முக்கியமானதாகவும், நியூயோர்க்கினதும், வாஷிங்டன் மீதான தாக்குதலுக்கு மிகவும் சிக்கலான சமூக, அரசியல் அடித்தளம் இருக்கவேண்டும் என்று கருதுவதற்கான சாட்சியங்கள் காணப்படுகின்றன.

அவரின் குறைத்து மதிப்பிடுதலால் Simon இதனை விளக்குவதால் ஏற்படும் ஆபத்தை இல்லாதொழிக்கின்றார். இதன் சூழ்ச்சி என்னவெனில் இவ்வழிவை உருவாக்கியவர்களின் கருத்து முறைக்கும், Simon இனது வரலாற்று உள்ளடக்கமற்ற, மதவாத அணுகுமுறையிலிருந்து கூடியளவு வித்தியாசமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் சிந்தனை தொடர்பாக ஆராய்வது மிகவும் கடினமானதாகும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அமெரிக்காவை ஒரு ஒடுக்கும் அதிகாரமிக்கதாகவும், பேய்த்தன்மையை உள்ளடக்கி தனது பலத்தின் ஆதிக்கத்தை சகல பக்கமும் பரப்பிக்கொள்ள முனைகின்றது என கருதுகின்றனர். ''பாரிய சாத்தானுக்கு'' எதிராக தாக்குவதற்கான ஒரேயொரு வழி பலவீனமானவர்களின் ஆயுதமாகிய பயங்கரவாதம் என கருதுகின்றனர்.

சோசலிஸ்டுகள், செப்டம்பர் 11 இன் தாக்குதலை வெறும் மனிதாபமான ரீதியில் ஒரு ''பேய்களின்'' தாக்குதல் என்பதால் மட்டும் அல்லாது அது அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானது என்பதால் கண்டிக்கின்றனர். அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைந்த உணர்வு பூர்வமான அரசியல் போராட்டத்தின் அபிவிருத்திக்கு மிகவும் தீர்க்ககரமானதாகும்.

இத்தாக்குதல்களின் பின்னால் உள்ளவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான போராளிகள் அல்லர். அவர்களுக்கு சமூக இயக்கவியல் தொடர்பாக முதலாளித்துவ தேசியவாதத்தில் வேரோடியுள்ள ஒரு பிழையான கருத்து உள்ளது. அவர்கள் தமது குண்டுவீச்சினாலோ அல்லது தாக்கியோ அதன் பின்னால் வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டுக்குவர விரும்புகின்றனர். அவர்கள் உழைக்கும் மக்களின் உலகளாவிய போராட்டத்தை அடித்தளமாக கொள்வதை திட்டவட்டமாக நிராகரிக்கின்றனர்.

Simon இன் நிலைப்பாட்டில் கண்ணை உறுத்தும் விடயமொன்றுள்ளது. புஷ் இன் நிர்வாகத்தை பாதுகாக்கும் ஏனைய தீவிரவாத மற்றும் தாராளவாதிகளைப்போல் அவரும் நியூயோர்க்கினதும் வாஷிங்டனினதும் மீதான தாக்குதலுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கும், பயங்கரவாதத் தாக்குதலுக்கும் அமெரிக்க கொள்கையின் பொறுப்பை நிராகரிக்கின்றார். மேற்குக் கரையிலும் காஸா கரையோரப்பகுதியிலும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கான ஆதரவினையோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கான ஆதரவையோ அல்லது தலிபானுக்கான அதனது ஆதரவையோ அல்லது அதன் உதவியில்லாது பின் லேடன் கோடீஸ்வரனாக முடியாதிருந்திருக்கும் தீவிரவலதுசாரி சவுதிஅராபிய அரசாங்கத்துடனான தனது கூட்டையோ ஆராய்வதற்கான பொறுப்பை அமெரிக்க அரசாங்கம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

விமானத்தை ஓட்டியவர்களும் அதற்கு திட்டமிட்டவர்களும் மட்டுமே Simon போன்றவர்களுக்கு குற்றத்திற்குரியவர்கள். ஆனால் இந்த மனநிலையானது ஒரு விதத்திலும் அமெரிக்கர்களின் நடவடிக்கைகளுக்கு ஒரளவேனும் பொருத்தமற்றது.

அமெரிக்க குண்டுகளால் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் மரணமும், கட்டுமானங்களும், மருத்துவ வசதிகளும் அழிக்கப்படுவதும் "வருத்தப்படவேண்டியது" எனவும், ஆனால் அமெரிக்க விமானிகளையும், யுத்த நிர்வாகத்தையும் குற்றம் சாட்டுவதற்கு எவ்வித காரணமில்லை என அமெரிக்க மக்களுக்கு கூறப்படும். இவை அனைத்தும் மறைமுகமானதும், கடந்தகாலத்தின் விளைவான இருக்கின்றபோதும் சகல பொறுப்புக்களும் பின் லேடனினதும், தலிபானினதும் கால்களில் வைக்கப்படுகின்றது. இதேபோன்று கிளின்டனின் நிர்வாகம் ஈராக் மீதான கொலைகாரத்தனமான பொருளாதாரத்தடை கொள்கையை நியாயப்படுத்தியது.

வாஷிங்டன் எதற்கும் தான் பொறுப்பு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. மரணங்களும் அழிவுகளும் எப்போதும் மற்றவர்களின் நடவடிக்கையின் விளைவு எனப்பட்டது.

Simon இன் கருத்திற்கு மாறாக உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கானோரின் இறப்புக்கு காரணமான பயங்கரமான குற்றச்செயல்களை அமெரிக்க அரசாங்கமும் இராணுவமும் செய்துள்ளன. மத்தியதர பிலிஸ்தீனியர்களின் மத்தியில் தற்போது பொதுவாக காணப்படும் மனிதாபிமான நிலைப்பாடானது, சகல நிலைமைகளிலும் பிரயோசனமற்றது. ஒருவர் கடந்த பல தசாப்தங்களாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை தொடர்பான செப்டம்பர் 11 இன் நிகழ்வுக்கு முன்னான வரலாற்றை கவனத்திற்கு எடுக்கும் தற்போதைய நிலைமையில் முக்கியமாக பொருத்தமற்றதாகும்.

Simon இன் கருத்து, கடத்தல் தற்கொலைத்தாக்குதல் மிகவும் பயங்கரமானது எனவே அதற்கு எதிரான யுத்தம் அல்லது, உண்மையான எவ்வித நடவடிக்கையும் நியாயமானது என்பது போல் தெரிகின்றது. இத்தாக்குதல் இப்படியான பயங்கர தன்மையுடையது, எனவே அவர்கள் முன்னர் நம்பிக்கை கொண்டிருந்த அனைத்தையும் கேள்விக்குரியதாக்க வேண்டும் என்ற கருத்தை ஒருவர் பங்கிட்டுக்கொள்வாரானால், பின்வரும் கேள்வியை வெளிப்படையாக கட்டாயம் வைக்கவேண்டும். செப்டம்பர் 11ம் திகதிக்கு முன்னர் இவர்கள் எந்த உலகத்தில் வாழ்ந்தார்கள்?

லெபனானிலும் சோமாலியாவிலும் அமெரிக்கா தலையீடு செய்யும் போதும், ஈராக்கின் ஒரு நவீன சமுதாயத்தை அழித்து பொருளாதாரத்தடை மூலம் ஆயிரக்கணக்கான மக்களை கொல்லும்போதும், சூடான், சோமாலியா மீதும் ஏவுகணைத்தாக்குதல் நடாத்துகையிலும், பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை எதிர்ப்பின்றி ஆதரிக்கையிலும் இவர்கள் எங்கு சென்றிருந்தனர்? ஒன்றில் யதார்த்தம் தொடர்பாக அவை நினைவில் இல்லாதவாறு அவர்கள் சுயதிருப்தியடைந்து கண்மூடிக்கொண்டிருக்கவேண்டும் அல்லது அவர்களது தற்போதைய ஆச்சரியம் முற்றுமுழுதாக பிழையானதாக இருக்கவேண்டும்.

இவ்விடயத்தின் சந்தோசமற்ற தன்மை என்னவெனில், இவ்விடயங்களை விளங்கியிருந்திருந்தால் அரசியல் சூழ்நிலைகளோ அல்லது இவ் அழிவை உருவாக்கியதற்கான காரணத்தை விளங்கிக்கொள்வதோ சிக்கலானதாக இருந்திருக்காது. அவர்கள் மனிதத்தன்மையின் உயர்ந்த வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் மனிதாபிமான கூற்றுக்களை கருத்திற்கெடுக்காமல் செய்யாமல் அப்பயங்கரமான குற்றத்தை செய்தவர்களின் முன்னோக்கை நிராகரிப்பது சாத்தியம்.

அமெரிக்காவின் தன்மையை ஒருவர் கருத்திற்கெடுத்தால், இப்படியான கொலைகாரத் தாக்குதல் நடந்தது தொடர்பாக ஏன் ஒருவர் ஆச்சரியப்படவேண்டும்? 90 ஆம் ஆண்டுகளில் பாரசீக வளைகுடாவிலும், பால்க்கனிலும் அமெரிக்கப் படைகள் தமது பக்கத்தில் ஒரு இழப்பும் இல்லாது ஆயிரக்கணக்கான மக்களை கொலைசெய்ததுடன், நாட்டை அடியோடு அழித்துமுள்ளனர். எதிர்காலத்திலும் அமெரிக்கா மீது ஏதாவது ஒரு தேசியவாத, அடிப்படைவாத குழுக்கள் தற்கொலைத்தாக்குதலை நடாத்தாது என்பது தொடர்பாக யாராவது ஐயுறவு கொள்ளமுடியுமா?

ஒருவிடயத்தை விளங்கப்படுத்துவது என்பது அதற்கு மன்னிப்பு வழங்குவதாகாது. செப்டம்பர் 11ம் திகதியின் தாக்குலுக்கான எமது எதிர்ப்பானது Simon இனதும் அவரது ஆதரவாளர்களினதையும் விட அடிப்படையானதும், கொள்கை ரீதியானதும் ஆகும். ஏனெனில் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான வெளிப்படையான வக்காலத்து வாங்குதலில் இருந்து தோன்றவில்லை.

''பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமானது தனக்கு தேவையில்லாத இடத்தில் அமெரிக்காவின் இராணுவப் பலத்தை பிரயோகிக்க அனுமதிக்கவில்லை. அமைதியான தீர்வு ஒன்று சாத்தியமற்ற உலக நெருக்கடி அமெரிக்க இராணுவப்பலத்தை பிரயோகிக்க அழைப்புவிடுகின்றது'' என Simon எழுதுகின்றார்.

இது திட்டமிட்டதும், பிற்போக்கானதும், முட்டாள்த்தனமானதுமாகும். ஆப்கானிஸ்தானின் யுத்தமானது அடிப்படையில் பயங்கரவாதத்திற்கோ அல்லது அதற்கு காரணமானவர்களுக்கோ எதிரானது அல்ல. அது கடந்த காலத்தில் அமெரிக்காவால் பின்பற்றப்பட்ட பலவகையான கொள்கைகளான சோவியத் யூனியனை உறுதியற்றதாக்குவதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவளித்ததில் இருந்து, அப்பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் வளங்களை அடைவது போன்றவற்றின் விளைவும், உலகத்தின் மூலோபாய முக்கியத்துவமுடைய பிரதேசத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்வதையும் நோக்கமாக் கொண்டதுமாகும்.

Simon இன் நிலைப்பாடானது கடந்த இருபது வருடங்களாக குடியரசுக்கட்சியின் வலதுசாரி பிரிவினருக்கு அடிபணிந்துபோன National Public Radio இலும் பொது வானொலிபரப்பு அமைப்பிலும் ஒலிக்கும் ''சுதந்திர'' குரல்களின் குறிப்பிட்ட பிரிவினர் மீது வெளிச்சத்தை பாய்ச்சுகின்றது. அத்துடன் அவரின் கருத்தானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், இராணுவ வாதத்தினதும் முகாம்களில் தமது பொருத்தமான இடத்தை கண்டுகொண்ட பொதுவான ஒரு சமூகப்பிரிவான புத்திஜீவி வங்குரோத்தடைந்த முன்னாள் தீவிரவாதிகளினையும், தாராளவாதிகளினையும், அமைதிவாதிகளினையும் பிரதிபலிக்கின்றது.