Layoffs soar throughout US economy
ஐக்கிய அமெரிக்க பொருளாதாரத்தில் எங்கும்
வேலை வெட்டுகள் பாரியளவில் அதிகரித்துள்ளது
By Jerry White
9 October 2001
Use
this version to print
கடந்த வெள்ளியன்று தொழிலாளர் இலாகாவினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி
செப்டம்பர் 11 இற்கு முன்னைய வாரங்களில் அமெரிக்க நிறுவனங்கள் சுமார் 200,000 வேலைகளை இல்லாமல் செய்துள்ளன.
பல எண்ணிக்கையிலான வேலைகள் ஆகஸ்ட் பிற்பகுதியிலும் செப்டம்பர் முற்பகுதியிலும் வெட்டப்பட்டன. இது பல ஆய்வாளர்கள்
எதிர்பார்த்ததை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். அத்தோடு ஐக்கிய அமெரிக்கா ஆழமான பொருளாதார
நெருக்கடிக்கு சென்றிருப்பதோடு, அமெரிக்கா செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னரே ஒரு பொருளாதாரப்
பின்னடைவுக்குள் சென்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாரத்தின் ஆரம்ப நாளான திங்களில் இருந்து செப்டம்பர் 10வரை யாராவது வேலை
செய்திருந்தால் அவர்கள் செப்டம்பர் மாதம் முழுவதும் வேலை செய்தபவர்களாக தொழிலாளர் இலாகா எடுத்துக்கொண்டது.
இல்லாவிடின், கடந்த மாதத்திற்கு முன்பிருந்து 199,000 வேலைகள் வெட்டப்பட்டன. இது கடந்த முறை 1991
பெப்ரவரியில் ஐக்கிய அமெரிக்கா பொருளாதார பின்னடைவுக்குள் சென்றிருந்தபோது நடந்தவேலை வெட்டினைக்
காட்டிலும் அதிக எண்ணிக்கையாகும்.
ஐக்கிய அமெரிக்காவில் 80 வீதமான வேலைகளை கொண்ட சேவைத்துறை மற்றும் ஒரு
வருடத்திற்கு மேலாக அண்மைக் காலத்தில் தப்பியிருந்த வீழ்ச்சிக்குட்பட்டிருந்த உற்பத்தித்துறை உள்ளடங்கலாக ஐக்கிய
அமெரிக்க பொருளாதாரத்தில் வேலைவெட்டுகள் பாரியளவில் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் பிற்பகுதியிலும் செப்டம்பர்
முற்பகுதியிலும் சேவைத்துறைகளான உணவகங்கள், நவீனசந்தைகள், ஆடையகங்கள், திரையரங்குகள் மற்றும் தற்காலிக
வேலை வழங்கு நிலையங்கள் உள்ளடங்கலாக 102,000 வேலைகள் வெட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் இலாகா
அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் தொழிற்சாலை உடமையாளர்கள் மேலும் 93,000 வேலை இடங்களை
வெட்டியுள்ளனர். தொழிற்சாலைத் தொழில்கள், தொடர்ந்துவந்த பதினான்காவது மாதமான செப்டம்பரில்
வீழ்ச்சிக்குப் போனது அதாவது 2000 ஆண்டு யூலையிலிருந்து 1.1 மில்லியன் வேலைகளால் அல்லது 6 சதவீதத்தால்
குறைவடைந்தது.
தொழிலாளர் இலாகாவின் நேர அளவீட்டுத் திட்டத்திற்கமைய வேலையின்மை கணிப்பிடப்பட்டதன்படி
அதிகாரபூர்வ வேலையின்மையின் அளவு 4.9 வீதமாக தொடர்ந்து இருந்துவருகின்றது. செப்டம்பர் 11 இற்கு பின் நிகழ்ந்த
வேலை இழப்புகள் இதனுடன் சேர்க்கப்படும்போது அக்டோபரில் வேலையின்மை அளவு குறைந்தது 5 சதவீதத்திற்கு
பாயுமென -இது 1997 இற்குப் பின் மிக உயர்ந்த புள்ளியுமாகும்
ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த மந்தமான போக்கானது குறைந்த கூலி பெறுபவர்களை பாதித்துள்ளதுடன் மற்றும்
குறைந்த கல்விகற்ற தொழிலாளர்களுக்கு மேலும் கடினமான நிலை உருவாகியுள்ளதை இத் தொழில் நிலை அறிக்கை
உறுதிப்படுத்தியுள்ளது. உயர்பாடசாலை பட்டம் இல்லாத தொழிலாளர்களின் வேலையிழப்பு அளவு வருடத்தில் அதிககாலம்
உறுதியான நிலையில் இருந்ததன் பின்னர், யூலை மாதம் 6.6 வீதத்திலிருந்து 7.8 வீதமாக உயர்ந்துள்ளது. கல்லுரிப்
பட்டதாரிகளது வேலையிழப்பு அளவும் டிசம்பர் மாத்தில் 1.6 வீத்தில் இருந்து 2.4 வீதமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச வேலை outplacement
firm Challenger எனப்படும் Gray and
Christmas நிறுவனத்தினது கருத்துப்படி, அமெரிக்க கூட்டுத்தாபனங்கள் செப்டம்பர் 11 பின்
200,807 வேலைவெட்டுக்களை அறிவித்திருந்தன. இது செப்டம்பர் 2001 இன் வெட்டுக்களின் அளவை கால் மில்லியன்
அளவுக்கு எட்டவைத்தது, அதாவது ஆகஸ்ட்டு மாதத்திலிருந்து 77 சதவீதமாக உயர்த்தியதுடன் கடந்த வருடம்
செப்டம்பர் மாதத்தில் இருந்ததைவிட 421 வீதமளவுக்கு உயர்ந்தது.
Challenger அறிவித்தன்படி, கடந்த
ஒன்பது மாதங்களில் ஐக்கிய அமெரிக்க நிறுவனங்கள் 1.37 மில்லியன் வேலைவெட்டுக்களை அறிவித்துள்ளன.
US airlines இனால் நடாத்தப்படும் போக்குவரத்து
நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் 96,333 வேலைகளை வெட்டியுள்ளன.
நியூயோர்கில் Swiss
Re என்னும்
நிறுவனத்தின் தலைமை பொருளாதாரவாதியான Kurt
Karl என்பவர் "நாம் ஒரு பொருளாதார மந்தநிலையில் உள்ளோம்
என்பது தெளிவு" எனவும், "தற்போதுள்ள வேலைகள் அழிக்கப்பட்டு வேலையின்மை மூன்று நான்கு மாதங்களில் 6 வீதம்
அதிகரிக்கும் மட்டத்தினை எட்டும் நிலை உள்ளது" என்றும் கூறினார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான வாரங்களில் வேலை இழப்பு உதவிநிதி (jobless
benefits) கோருபவர்களின் எண்ணிக்கை
431,000 இருந்து
528,000 ஆக
அதிகரித்துள்ளது, இது ஒன்பது வருடங்களில் அதிகரிப்பின் அளவின் உயர்ந்த நிலையாகும்.
செப்டம்பர் 11 இற்கு முன்பிருந்த சம்பளவெட்டு,
Federal Reserve
மீண்டும் மீண்டும் வட்டிவீதத்தில் வெட்டுக்களை கொண்டு வந்ததும் கூட்டுறவு முதலீடுகளை
பிழைத்தெழச் செய்வதற்கு அல்லது நுகர்வோர் செலவீட்டில் ஏற்பட்டுள்ள ஒரு வீழ்ச்சியைத் தடுப்பதற்கு என புஷ் நிர்வாகத்தினால்
கொண்டுவரப்பட்ட வரிவெட்டுகளையும் பிரயோசனமற்றதாக்கியது. இத்தாக்குதலுக்குப் பின்
Federal Reserve
வட்டி வீதத்தினை முழு சதவீதத்தால் வெட்டியது, 1960களின் முற்பகுதியில் நடந்ததற்கு
பின்னர் இதுவே மிகவும் கீழ்மட்ட நிலையாகும்.
பொருளாதாரத்தினை பின்னடைவிலிருந்து பாதுகாத்துவந்த நுகர்வோர் நம்பிக்கையும்
தனிநபர் செலவீனமும் செப்டம்பர் 11 இற்கு முன்னரே மோசமாக வீழ்ச்சியுற்றது. "பங்குச் சந்தையில் ஏற்பட்ட
வீழ்ச்சியினைப் போலவே, அதிகளவில் கடினநிலைக்கு உள்ளான நுகர்வோர், அங்குமிங்கும் ஊசலாடி முடிவுகள் எடுக்கமுடியாமல்
விலகிச் செல்கின்றனர்" என Lehman Brothers
நிறுவனத்தின் ஒரு பொருளியலாளரான
Stephen Slifer
குறிப்பிட்டார். செப்டம்பர் 11 இற்கு சில வாரங்கள் முன்னர் மேலும் அவர் நுகர்வோர்
"அவர்களது வேலைத்தலங்களையிட்டு சடுதியாக கவலையடைந்துள்ளதுடன், இது பிரச்சனையின் மற்றொரு வடிவமாகும்
" எனவும் குறிப்பிட்டார்.
வருமான வீழ்ச்சியானது நுகர்வோர் செலவினை கீழ்ப்படுத்தியதுடன் வேலை இழப்புகளையிட்டும்
பீதியடையச் செய்துள்ளது. செப்டம்பரில் சராசரி மணித்தியால வருமானம் 0.2 சதவீதத்தினால் அதாவது 14.44
டொலரினால் உயர்ந்தது. ஆனால் கூடுதலாக தொழிலாளர்களினது வேலை செய்யும் மணித்தியாலம் 0.3 % ஆல்
குறைந்துள்ளதாக ஒரு புள்ளிவிபரம் எடுத்துக்காட்டியது. இது நான்காவது தொடர்ச்சியான வீழ்ச்சியாகும்.
அண்மைக்காலம் வரை கூலி ஒரு வேகமான அளவினால் உயர்ந்து சென்றது, ஏனெனில் உழைப்புச் சந்தையினுடைய இறுக்கத்தன்மையாகும்.
கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் வட்டியற்ற நிதியுதவித்திட்டம்
நடைமுறைக்கு -இடப்பட்டிருந்தும் மோட்டார் வாகன விற்பனை கடுமையாக வீழ்ச்சியுற்றது. செப்டம்பர் 2000 இற்குப்
பின் விற்பனை 9.1 சதவீதமாக வீழ்ந்தது, இத் தொழிற்துறையின் வீழ்ச்சி 2002 நடுப்பகுதிவரை செல்லும் என ஆய்வாளர்கள்
கருதுகின்றனர். Daimler Chrysler இன் ஐக்கிய அமெரிக்க
பகுதி உள்நாட்டு மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் உயர்ந்த அளவிலான விற்பனை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது,
கார் விற்பனை 22% குறைவடைந்ததுடன், டிரக் வண்டிகளது விற்பனை 30% வீழ்ச்சியுற்றது. இந்நிலைக்கு பதிலீடாக
Chrysler நிறுவனம் வடஅமெரிக்காவில் ஐந்து உற்பத்தி
நிலையங்களை செயலிழக்கச்செய்துள்ளது.
புதிய கட்டிடங்கள், இயந்திரங்கள் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீதான முதலீடுகளை
கூட்டுத்தாபனங்கள் தொடர்ச்சியாக குறைத்து வந்துள்ளன. 1990 களில் மிக வேகமாக விஸ்தரிக்கப்பட்ட வியாபாரங்கள்
முதலீடுகளை தொடர்ச்சியாக வெட்டிவந்தன. ஏனெனில் இலாப வீழ்ச்சி, சந்தைத் தேக்கம் மற்றும் விலை இறக்கம்
உள்ள சூழ்நிலையில் கூட்டுத்தாபனங்கள் புதிய கடன்கள் பெறுவதை விரும்பவில்லை.
அண்மையில் Wall Street
Journal பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது, "வியாபாரக் கடன்களின் பெருக்கம் ஒரு அடிப்படையான
நிறுத்தத்தை வந்தடைந்துள்ளதுடன், நுகர்வோரின் கடன்களின் பெருக்கம் மிகவும் மந்தகதியாகியுள்ளது.... இவைகள்
அனைத்தும் ஓர் பிரச்சனைக்குரிய கேள்வியை எழுப்புகின்றன: எதிர்காற்றுக்கு முகம் கொடுக்கும் இப் பொருளாதாரம்
வட்டிவீதம் இன்மையாக இருந்தால் மிக நன்று, அது ஒரு பூச்சியநிலைக்கு இறங்கினும் கூட, இதனால் அதனது
போக்கினை மாற்றமுடியுமா?"
செப்டம்பர் 11 இல் இருந்து விமான நிறுவனங்கள் 106,290 வேலைகளை
வெட்டியுள்ளன, விண்வெளி பாதுகாப்பு (Defense Aerospace)
நிறுவனங்கள் 38,900 எண்ணிக்கையிலும் மற்றும் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள் 29,451 எண்ணிக்கையிலும் வேலை
இடங்களை இல்லாது ஒழித்துள்ளன.
கடந்த வாரம் வேலை வெட்டுக்களை அறிவித்த நிறுவனங்கள்: கனேடிய
Nortel Networks நிறுவனம்
இவ்வருட ஆரம்பத்தில் வெட்டப்பட்ட 30,000 வேலைகளுடன் மேலும் 20,000 வேலைகள் அழிக்கப்படும் என அது
கூறியுள்ளது. கலிபோனியாவில் மையப்படுத்தப்பட்டுள்ள கணனி உற்பத்திசெய்யும்
Sun Micro systems நிறுவனம்
4,000 வேலைகளை வெட்டுகின்றது. Las Vegas
இல் உள்ள உல்லாச மற்றும் விடுமுறை சேவை
நிறுவனமான MGM Mirage
6,000 வேலைகளை அழிக்கப்போவதாக கூறியுள்ளதுடன் சில்லறை வியாபார நிறுவனமான
Nord strom 1,600 வேலைகளை வெட்டுவதாக
அறிவித்துள்ளது.
|