World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

The "Teissier affair"
Astrology rehabilitated at the Sorbonne university in Paris

'தேய்சியே விவகாரம்'

பாரிசின் சோர்போன் பல்கலைக் கழகத்தில் சோதிடவியல் மீள் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது.

By Stefan Steinberg
21 September 2001

Use this version to print

கடந்த சில மாதங்களாக பிரான்சின் புகழ்பெற்ற சோதிடவியலாளரான Elizabeth Teissier தொலைத்தொடர்பு சாதனங்களால் அடிக்கடி பிரசன்னப்படுத்தப்பட்டதுடன், அதில் சோதிடவியலின் விஞ்ஞான மதிப்பு பற்றிய உண்மையற்ற விவாதம் மத்திய புள்ளியாக இருந்து வருகிறது.

Elizabeth Teissier என்ற பெயரால் பரவலாக அறியப்பட்ட, செல்வி Germaine Elisabeth Hanselmann, ஏப்ரல் மாதம், ''சோதிடவியலின் மனித அறிவியல் நிலைமை பற்றி பின்நவீனத்துவ சமூகத்தில்-இருபோக்கு கொண்ட ஈடுபாடும் மறுப்பும்,'' என தலையங்கம் இடப்பட்ட அவரது கலைமாணி பட்டப்படிப்பிற்கான ஆய்வறிக்கையை பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகத்தில் பாதுகாத்துக்கொண்டார்.

அவரது 900 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கை சோதிடவியலில் விஞ்ஞானப் பண்புகளை எடுத்துக்காட்டியிருப்பதாக கருதி அவருக்கு சமூகவியலில் கலாநிதி பட்டம் வழங்கும் அடிப்படையில் தலைமை பேராசிரியர் குழுவால் ஒரு பெரும்பான்மை முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

''தேய்சியே விவகாரத்தினை'' கவனமாக அணுகுவதானது, மேற்கு ஐரோப்பாவின் மிக அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒன்றில், எவ்வாறு பிரெஞ்சு ஜனாதிபதி அரசியலை வழிநடத்தினார் என்ற பாதையினை ஒரு தெளிவான வெளிச்சத்தில் அம்பலப்படுத்துவது மட்டுமல்லாது, Teissier இன் ஆய்வு பத்திரங்கள் பிரான்சின் மிக மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதானது பின்-நவீனத்துவக் (post-modern) கருத்தியல் என அழைக்கப்படுவதால் ஆழமான முறையில் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கும் பிரெஞ்சுக் கல்வியமைப்பில் ஏற்பட்ட விஞ்ஞான சிந்தனையின் சீரழிவினையும் தெளிவாக்குகின்றது.

Elizabeth Teissier, வாசனைத் திரவியம் மற்றும் கவர்ச்சி உடையலங்கார நிறுவனமான சானலின் (Chanel) முன்னாள் மாடல் அழகியாவார். தற்போது பிரான்சில் மிகப்பரவலாக அறியப்படும் சோதிடவியலாளர் ஆவார். ஏழு வருட காலம் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் ஆலோசகராக இருந்ததாக சிலகாலத்திற்கு முதல் அம்பலப்படுத்தியிருந்தார். மித்திரோனுக்காக தான் வேலைசெய்தது பற்றி, மித்திரோனின் சைகையின் கீழ் (Underthe Sign of Mitterrand) என்ற தலையங்கத்தின் கீழ் அவர் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். வளைகுடா யுத்தத்தின் இராணுவ நடவடிக்கை உள்ளடங்கலாக மித்திரோன் தனது ஒவ்வொரு அரசியல் நகர்வை தேர்வுசெய்யவும், அவருக்கு வழிகாட்டவும் தான் நட்சத்திரங்களை உபயோகப்படுத்தியதாக அந்த புத்தகத்தில் அவர் கூறியிருந்தார்.

மித்திரோனுடனான அவரது கூட்டின் தொடக்கத்தில் 1990 கோடையில் ஏற்பட்ட ஒரு சர்வதேச நிகழ்வை தான் முன்கூட்டியே கூறியதாக எழுதியிருந்தார். அதே வருடம் ஆகஸ்ட் மாதம் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தபோது, மித்திரோன் உடனடியாக அவரை அழைத்து சர்வாதிகாரியின் அடுத்த நகர்வை வரையறுக்கும் படியும், சதாம் குசைன் இன் ஜாதகத்தை கணிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். சதாம் குசைனை பேயாக்கிய, ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய அமெரிக்காவின் பிரச்சாரத்தை பிரதிபலித்து, ''கிட்லரின் அதே ஜாதக கூட்டுப்பலன்களை-- தராசும் எருது இராசியையும் கொண்டிருக்கும் வரை'' சதாம் குசைன் தனது படைகளை பின்வாங்குவது மிகமெதுவான காரியமாக இருக்கும் என்பதை தான் முன்கூட்டியே கணித்ததாக தேய்சியே அவரது புத்தகத்தில் தொடர்புபடுத்தியிருந்தார்.

தேய்சியேயின் கணிப்பு எவ்வளவு உண்மையானது என்பதை கூறுவது கடினமான விடயமாக இருக்கலாம். இதில் தெளிவானது என்னவெனில் தேய்சியே, மித்திரோனுடன் மிகநெருக்கமான உறவைக் கொண்டுருந்ததுடன், அடிக்கடி அவர் மித்திரோனின் அலுவலகத்திற்கு சென்று வந்தது அறியப்பட்டு இருந்தது. அத்துடன் மித்திரோன் சோதிடம், ஆன்மீகம், ஏவல் தேவதைகள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்பது தெரிந்த விடயமே. ஜனாதிபதி, விஞ்ஞானிகளின் கூட்டமொன்றில் பேசுகையில், சோதிடவியலும், வானவியல் விஞ்ஞானமும் தொடர்பாக தெளிவற்றவகையில் உரையாற்றினார்.

கிரகங்களின் நகர்வுக்கும், அதிர்ஸ்டத்திற்கும், பிரபல்யமான விளையாட்டு வீரர்களின் திறமைக்கும் தொழில் வெற்றிகளுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முயன்ற Michel Gauquelin இன் ஆய்வினை தனது படைப்பிற்கான அடிப்படையாக கொண்டதை தேய்சியே தெளிவாக்கியிருந்தார். தேய்சியே அவரது அண்மைய ஆய்வுத்தாள்களில், எப்படி ஜனாதிபதி மித்திரோன் அவரது பிரதம மந்திரி Pierre Bérégovoy யின் ''நட்சத்திர பலன்களை கணிக்கும்படி தன்னை கேட்டதை'' பிரபல்யப்படுத்துவதன் மூலம் அவரது ஆய்வினை நியாயப்படுத்த முயல்கிறார். (அப்படியான ஒரு கணிப்பை செய்தபோது தேய்சியே, அதன் பின்னர் ஒரு குறுகிய காலத்தில் நடந்த Bérégovoy இனது தற்கொலைக்கு காரணமான நட்சத்திரங்களின் தொடர்பை ஏதோவொரு முறையில் கணிக்க தவறிவிட்டார்).

தேய்சியேயின் படைப்பும் புத்தகமும் ஒரு வகைப்பட்ட நடைமுறை முக்கியத்துவமற்றதாக தள்ளிவைக்கப்பட்டிருக்கு முடியும், இருந்தபோதும், அவரது அண்மைய ஆய்வறிக்கை சோர்போன் பல்கலைக் கழகத்தின் முக்கியமான பேராசிரியர்கள் அடங்கிய குழுவால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதனை அவ்வாறு செய்யமுடியாது என்பதே உண்மையாகும். பேராசிரியர் குழு இதை சமூகவியல் பற்றிய ஆய்வறிக்கையாய் ஏற்றுக்கொண்டிருந்தபோதும், தேய்சியே, புத்தகத்தின் தொடக்கத்திலே சமூகவியல் பற்றிய எந்தவித கலந்துரையாடலையும் உடனடியாக நீக்கிவிட்டிருந்தார். அதில் ''சமூகவியல் தத்துவம் பற்றிய ஒரு கலந்துரையாடல்.... இதற்கு அப்பாற்பட்ட விடயமாகும்...'' என எழுதியிருந்தார். அவரது 900 பக்கங்களை கொண்ட முழு புத்தகமும் பிற்போக்கு முட்டாள்தனத்தால் நிரப்பப்பட்டிருந்தது. எமது வாசகர்களின் பொறுமையை மேலதிகமாக பரீட்சிக்காமல், அந்த புத்தகத்தில் இருந்து சில உதாரணங்கள் பின்வருமாறு:

* ''அண்மைய ஆய்வுகள் பிறப்பிற்கு காரணமான இரு கிரகங்களின் (நெப்ரியூன், புலோட்டோ) பொருத்தமின்மை, புற்றுநோய்கும் எய்ட்சுக்கும் இடையிலான ஒரு உறவை ஸ்தாபிக்க அனுமதியளித்துள்ளது''. (p. 213)

* ''.....கருச்சிதைவு, கருப்பை புற்றுநோய் மற்றும் ஏனைய வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் முன்கூட்டியே கூறக்கூடியதே ஏனெனில், இவைகள் நட்சத்திரங்களின் பொருத்தமின்மையால் உருவாகின்றன'' (p.239)

* அந்த புத்தகத்தின்127 பக்கத்தில், Gaullist முன்னாள் முன்னணி அமைச்சர்களில் ஒருவரான, Andre Malraux இன் ஜாதகத்தை பரீட்சித்து பார்க்கும் தேய்சியே, Andre Malraux உண்மையில் தனது ''அனேக திறமையை கடந்தகால வாழ்க்கையில் இருந்து'' பெற்றிருந்தார் என்ற முடிவுக்கு வருகின்றார்.

* ''நட்சத்திரங்களை கண்டு அலறும் ஆக்கிரோசமான அறிவியல்வாதிகள்'' (p. 42) மற்றும் ''உத்தியோகபூர்வ விஞ்ஞானத்தின் போராளிகள்'' (p. 767) இவர்கள் தான் அவரது தாக்குதலுக்கான குறி என்பதை முழுப்பக்கங்களிலும் அவர் தெளிவாக்கியிருந்தார்.

பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளில் சோதிடத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததானது கடந்த சகாப்தத்தில் குறிப்பாக அதிகரித்த வடிவத்தில் இடம்பெற்றுவரும் சமூக சிந்தனையின் நெருக்கடியினது தெளிவான வெளிப்பாடாகும். அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனும் அவரது மனைவி நான்சியும் அவரது பதவிக்காலத்தில் ஒரு சோதிடரின் ஆலோசனைக்கு அழைப்புவிட்டது அறியப்பட்டதொன்றே. அமெரிக்காவில் அண்மையில் சோதிடக்கல்லூரி ஒன்றைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பெரிய பிரித்தானியாவில் சோதிடத்தின் சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, டென்மார்க் மற்றும் ஆஸ்திரியாவில் சோதிட வாணிபர்கள் பல்கலைக் கழகங்களின் ஒத்துழைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்கள். இந்தியாவில் கல்வியமைச்சர் 200 பல்கலைக் கழகங்களில் சோதிடத்தை பாடமாக இணைத்துக் கொள்ளும்படியும், மேலதிகமாக படிப்பிப்பதற்கு 5 இடங்களையும், தனிப்பட்ட உதவிகளையும் வழங்கும் படியும் அவர்களுக்கு ஆலோசனை செய்துள்ளார். அத்துடன் உயர்பாடசாலைகளில் வேதகால சோதிடத்தையும் கணிதத்தையும் கற்றுக்கொடுக்கும்படி அறிவித்துள்ளார்.

எப்படியிருந்தபோதும், டேஸ்காட்டின் (Descarte) அறிவியல் சிந்தனையின் மூல இடமான பிரான்சில் சோதிடவியலை புதுப்பிப்பதை பற்றிய விவாதம் ஒரு பிரத்தியேகமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. பிரான்சில், கடந்த மூன்று நூற்றாண்டுகளாய் சோதிடத்திற்கு ஒரு கடினமான காலமாக இருந்து வந்தது. உண்மையான விஞ்ஞானத்தினை வகைப்படுத்தலும், ஒரு மனித அறிவுக் களஞ்சியத்தின் அபிவிருத்தியும் புத்தெழுச்சியின் ஆண்டுகளின் பிரதானமான நோக்கமாக இருந்தது. அப்போது உருவாகிக்கொண்டிருந்த பிரெஞ்சு முதலாளித்துவத்தின் சிந்தனைக்குள் இது ஊடுருவியதுடன், 1789 இன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு மகத்தான பாத்திரத்தை இது வகித்தது.

புரட்சிக்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே சோதிடவியல் பொருத்தமற்ற கல்விமுறை என்ற அடிப்படையில் பதினான்காவது லூயிஸின் பிரெஞ்சு முடியரசின் பிரதம மந்திரியான Jean-Baptiste Colbert ஆல் நிராகரிக்கப்பட்டது. இவர்தான் 1666 இல் பிரான்சின் விஞ்ஞான மன்றத்தை (Académie des Sciences) உருவாக்கியவராவர். 12வருட மர்ம மற்றும் நச்சுக்காரனது (mystic and poisoner) வழக்கைத் தொடர்ந்து, இது ஒரு முடியரசின் மட்டத்திற்கு சென்றதுடன் குறிசொல்வதில் ஈடுபட்டால் அவர்களை நாடுகடத்திவிடும் தண்டனைகளுடன் பயமுறுத்தியது. இப்போது மூன்றரை நூற்றாண்டுகளின் பின்னர், குறிசொல்வது சோர்போனில் மீளமைக்கப்பட்டுள்ளது.

பின்-நவீனத்துவ சமூகத்தில் சோதிடத்தை விளங்கிக்கொள்வதற்கு ஒரு பங்களிப்பாக தேய்சியே தனது ஆய்வறிக்கையை பார்ப்பது முக்கியத்துவமானது. கடந்த மூன்று தசாப்தங்களாக அபிவிருத்தியடைந்த பின்-நவீனத்துவ சிந்தனையானது ஒரு தீவிர சார்புநிலைவாதத்தால் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. இது புறநிலை உண்மையை நிராகரிப்பதுடன், உலகை புரிந்துகொள்ள ஒரு பொதுவான விளக்கத்தை வழங்கும் அனைத்து கோட்பாடுகள் மீதும் ஒரு அவநம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. உண்மை பற்றிய விஞ்ஞான ஆய்வு என்பது பின்-நவீனத்துவ வாதிகளுக்கு வெறும் வார்த்தைப் பரிமாற்றம் (வார்த்தையாடல்) மட்டுமே என்பதளவிற்கு குறுக்கிக்கொள்ளப்படுகிறது, அல்லது கதைகள், மதம், கட்டுக்கதைகள் அல்லது சோதிடமும் உண்மையில் விஞ்ஞான வரையறுக்கைகளுக்கு சமாந்திரமாக இருக்க முடியும் என்பதாகும்.

பின்-நவீனத்துவ சிந்தனையின் முன்னணிக் கதாநாயகர்களை ஒரு அனுபவவாத முறையில் பரிசோதித்துப் பார்ப்போமானால் அவர்கள் அனைவரும் சிலவேளைகளில் ஸ்ராலினிச அல்லது ஏனைய இடது தீவிரவாத அமைப்புகளில் இருந்திருப்பதை காணலாம். பிரான்சின் கல்வி அமைப்பானது அதனது முன்னணி அங்கத்தவர்களுக்கு கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஒரு உயர் அந்தஸ்த்தை அளித்ததன் மூலம் 1968 இல் தோன்றிய இயக்கத்தின் தீவிரத்தன்மையை செயலிழக்க வைத்தது என பிரான்சின் முன்னணி தத்துவஞானியும் பின்-நவீனத்துவவாதியுமான மிசேல் ஃபூகோ (1926-1984) வினது சுயசரிதையான மிசேல் ஃபூகோவின் விருப்பங்கள் (ThePassion of Michel Foucault) இல் அதன் ஆசிரியர் James Miller வர்ணிக்கிறார். ஃபூகோ, 68 இன் பின்னர் மாவோயிச ஆதரவாளராக இருந்ததுடன் Collège de France இல் அவருக்கு முன்னணிப் பதவி வழங்கப்பட்டது. அவரது நண்பரும், தத்துவஞானியும், மாவோயிச ஆதரவாளருமான Gilles Deleuze ஃபூகோவினது பழைய பதவியை வன்சன் (Vincennes) பல்கலைக் கழகத்தில் கைப்பற்றிக்கொண்டார்.

1968 இன் நிகழ்வுக்குப் பின்னர்- பிரான்ஸ் ஒரு பொதுவேலை நிறுத்தத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்துடன் ஜனாதிபதி கோல் நாட்டைவிட்டு தப்பிசென்றிருந்தார் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக்கொடுப்பபை தொடர்ந்து அது மதிப்பிழந்துபோனது. வெளிப்படையான வலதுசாரிகளான சோசலிச இயக்கத்திற்கு எதிரான கருத்தியலாளர்களான, சிந்தனையாளர்களினதும், புதிய தத்துவஞானிகளினதும் வருகையுடன் ஒரு குறிப்பிடும்படியான வேலைப்பங்கீடு ஒன்று பிரான்சின் கல்வித்துறை வட்டத்திற்குள் ஏற்பட்டது. பிரான்சிலும் ஏனைய இடங்களிலும் தம்மை பின்-நவீனத்துவாதிகளாக அழைத்துக்கொள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தீவிரவாதத்தை பிரதிநிதித்துவப்பட்த்தக்கூடியதாக இருந்தது. 1990 இன் தொடக்கத்தில் சோவியத் யூனியனின் கலைப்பானது, அரசியல் ரீதியாக ஏற்கனவே வலதுநோக்கி திரும்பிக் கொண்டிருந்த தீவிரவாதிகளால் முதலாளித்துவத்திற்கான எந்த ஒரு மாற்றீட்டினதும் இறுதி உடைவாகத்தான் பார்க்கப்பட்டது. பங்குச்சந்தையின் திடீர் வளர்ச்சியின் தோற்றமானது பழைமைவாத (Moloch) 'மூலதன'' த்தின் இறுதி வெற்றியாக தோன்றியது. அன்று முன்னாள் தீவிரவாதிகளில் பலர் தனிமனிதவாதம், ஆன்மீகம் மற்றும் இதுபோன்ற பின்-நவீனத்துவ சிந்தனையின் கருத்தியல் வடிவங்களை நோக்கி ஒருதிட்டமிடப்பட்ட முறையில் பின்நோக்கிச் சென்றனர். இந்த போக்கு இன்று பிரான்சின் கல்வித்துறையிலும் செல்வாக்கு செலுத்துகின்றது.

ஒரு அரைநூற்றாண்டுக்கு முன்னர், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி ஒரு குட்டிமுதலாளித்துவ தீவிர எதிர்ப்பிற்கு எதிராக அவரது சொந்தப் போராட்டத்தை நான்காம் அகிலத்திற்குள் நடாத்தினார். இப்போக்கானது அனுபவவாதத்தின் மோசமான வடிவங்களில் அடிதளமிட்டிருந்துடன், ''எல்லாகோட்பாடுகளின் மீதும் அவநம்பிக்கைவாதத்தை'' வெளிப்படுத்திய பேர்ன்ஹாம்-சட்மன் இனது போலியான தீவிரவாதத்தை ட்ரொட்ஸ்கி கண்டித்ததுடன், ''எல்லாக் கோட்பாடுகளின் மீதான அவநம்பிக்கையானது தனிப்பட்ட கைவிடுதலுக்கான தயாரிப்பே அன்றி வேறொன்றுமல்ல'' என பதிலளித்தார். (In Defence of Marxism, New Park Publications, p.230). விஞ்ஞான சிந்தனை மற்றும் இயங்கியல் பொருள்முதல் வாத்திற்கு எதிரான பேர்ன்ஹாம்-சட்மன் இனது எதிர்ப்பை அவர் கீழ்க்காணும் முறையில் விபரித்தார் ''இயங்கியல் பொருள்முதல் வாத்திற்கு எதிரான போராட்டமானது குட்டிமுதலாளித்துவ வாதிகளின் கடந்த காலத்தையும், பழமை வாதத்தையும், பல்கலைக் கழக வாதிகளின் தற்பெருமை வாதத்தையும், அத்துடன் அது மறுபிறப்பு தொடர்பான சிறிய எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறது'' (ibid,p.67)

தேய்சியே, சோதிடத்தை மீளமைக்க முயல்வதும், சோர்போன் பேராசிரியர்கள் தேய்சியேயின் ஆய்வறிக்கைக்கான தமது புகழாரத்தினூடாக ''மறுபிறப்பு தொடர்பான சிறிய எதிர்பார்ப்பிற்கு'' நெருப்பூட்ட முனைகிறார்கள். பிற்போக்கு கருத்தியலுக்கும், ஆன்மீக வாதத்திற்கும் எதிரான போராட்டமானது பல்கலைக்கழக வகுப்பறைக்குள் இனியும் தீர்க்கப்படப்போவதில்லை மாறாக அது மார்க்சிச இயக்கம் தன்னகத்தே கொண்டிருக்கும் விஞ்ஞான சிந்தனையினதும் மற்றும் பொருள்முதல் வாதிகளின் சக்திவாய்ந்த வளங்களையும் அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவத்திற்கு எதிரான பரந்த சோசலிச இயக்கத்தை கட்டுவதனைடாகவே தீர்க்கப்படும் என்பதை அவர்களது இந்த கைவிடல் தீர்மானமானது தெளிவாக்குகிறது.