The New York Times and the dirty secret of US-Saudi
relations
நியூயோர்க் ரைம்ஸ் உம் அமெரிக்க-சவுதி அராபிய உறவின் அழுக்கான இரகசியமும்
By David Walsh
29 October 2001
Use
this version to print |
Send this link by email
| Email the author
அக்டோபர் 11ம் திகதிய நியூயோர்க் ரைம்சின் ஆசிரியர் தலையங்கமானது
(சவுதி அராபியாவினை மறுபரிசீலனை செய்தல்) என்பதன் கீழ் அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கையின் அழுக்கான
இரகசியம் ஒன்றின் முகமூடியை ஒரு பகுதி வெளிப்படுத்தியுள்ளது. இவ்வுறவானது அரை நூற்றாண்டுக்கு மேலாக அரை
நிலப்பிரபுத்துவ சவுதி அராபிய அரசாங்கத்துடன் வாஷிங்டன் வைத்திருந்த உறவின் இழிவான தன்மையை காட்டுகின்றது.
நியூயோர்க் ரைம்சின் பத்திரிகை ஆசிரியர்கள் ஏனைய அமெரிக்க பத்திரிகையாளர்களையும்
அரசியல்வாதிகளையும் போல் தற்போதைய நெருக்கடியானது அமெரிக்க-சவுதியின் நலன்கள் முரண்பாட்டுக்குள்ளானதை
தொடர்ந்து அண்மையில் இப்பிரச்சனை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளனர். றியாட் அரசாங்கமானது பின் லேடனினதும்,
அவரின் கூட்டாளிகளினதும் சொத்தினை உறையச்செய்யுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன்,
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு தனது விமானத்தளங்களை அமெரிக்கா பாவிப்பதற்கும் தடைவிதித்துள்ளது.
சவுதியின் ஆளும்வட்டாரத்தின் சில பிரிவினர் அமெரிக்க அரசாங்கம் யுத்தம் தொடுத்துள்ள
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர் என்பது நன்கு தெரிந்ததே.
New Yorker சஞ்சிகைக்கு
Seymour Hersh அண்மையின் எழுதிய கட்டுரையின்படி ''
FBI உம்
CIA உம் பெயர்களை ஆராய்வதற்கும், பின்னணி தகவல்களை துப்பறிந்து ஆராய்வதற்கும் சவுதியினர் மறுத்ததையிட்டு
அமெரிக்க உளவு அதிகாரிகள் ஆத்திரமடைந்துள்ளதாகவும், உலக வர்த்தக மையத்தின் மீதும் வாஷிங்டன் மீதும் தாக்குதலில்
கலந்துகொண்ட 19 பேரில் அரைவாசியினர் சவுதியிலிருந்து வந்ததாக நம்பப்படுவதாகவும்'' குறிப்பிட்டிருந்தது.
முற்றுமுழுதான சந்தர்ப்பவாதத்தன்மையான அவ்வாறான அரசியல் கருத்துக்கள்
''நெஞ்சில் இருந்து சிலவற்றை எடுக்கும்'' தீர்மானத்தை நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தேர்ந்தெடுத்த நேரத்தின்
மூலம் காட்டப்படுகின்றது. சவுதியுடனான உறவை வாஷிங்டன் மறு பரிசீலனை செய்வது தொடர்பாக ரைம்ஸ் பத்திரிகை
ஆசிரியர்கள் ''பல பத்தாண்டுகளாக அமெரிக்காவும் சவுதி அராபியாவும் இரத்தம் தோய்ந்த
கொடுக்கல்வாங்கல்களை தமது உறவின் மத்திய புள்ளியாக கொண்டிருந்தன. அமெரிக்கா தனது பொருளாதாரத்தை
கொண்ட நடத்த எண்ணையை பெற்றுக்கொள்கையில், சவுதி அராபியா அரசு ஈராக், ஈரான் உள்ளடங்கலான தனது
ஆபத்தான அயலவர்களால் பயமுறுத்தப்படுகையில் அமெரிக்க இராணுவப்பலத்தினை தமது பாதுகாப்பிற்கு நம்பியிருந்தனர்''
என குறிப்பிட்டனர்.
அவர்கள் தொடர்ந்தும் ''பிராங்கிளின் ரூஸ்வெல்டின் (Franklin
Roosevelt) காலத்திலிருந்து வாஷிங்டன் சவுதி அராபியாவின் அரச குடும்பத்தை அணைத்துக்கொண்டிருந்தது.
இது எண்ணெயை முக்கியமாக நோக்கமாக இருந்தபோதும் வேறு காரணங்களும் ஒரு பங்கு வகித்தன. இதனுள் அமெரிக்க
திறைசேரி பங்குகளில் சவுதியின் முதலீடுகளும், விலைகூடிய அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதும் உள்ளடங்கும். இதுவரை
சவுதியின் எண்ணெயும், பணமும் அரச குடும்பத்தின் லஞ்ச அமைப்பையும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும், அதன்
பேரிலான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் கடுமையான விமர்சனத்தை அமைதியடையச் செய்தது.
இது அமெரிக்கா, மத்திய கிழக்கில் வகித்த பிற்போக்கானதும், அழிவுகரமான பங்கினை
குறிப்பிடத்தக்க வெறுப்பிற்குள்ளாக்கும் ஒத்துக்கொள்ளலாகும். முதலாவதாக மத்தியகிழக்கில் அமெரிக்காவினது கொள்கையானது
இப்பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்தும் மூர்க்கமான நோக்கத்தை உடையது என்பதையும்,
பொதுமக்களுக்கு அமைதியையும், ஜனநாயகத்தையும் வழங்கும் ஏமாற்றும் பொய்யுரையாகும் என்பதை நியூயோர்க்
ரைம்சின் பத்திரிகை ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவர்கள் மேலும் மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் விநியோகத்திற்காக அதன்
விளைவாக சவுதியின் மக்களுக்கும், அப்பிரதேசத்தில் ஏனையமக்களுக்கும் உருவாக்கிய அழிவுகரமான விளைவுகளை கருத்திற்கொள்ளாது
அதனை பாதுகாக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நியூயோர்க் ரைம்சின் அறிக்கையானது மேலும்
1991 வளைகுடா யுத்தமானது தேசியவாத நோக்குடைய பிரிவினரிடமிருந்து றியாட் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காவும்
(அமெரிக்காவிற்கான எண்ணெய்க்காகவும்) நடாத்தப்பட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.
அறிந்தோ அறியாமலோ நியூயோர்க் ரைம்ஸ் தனது சொந்த சிக்கலை ஏற்றுக்கொள்கின்றது.
அக்டோபர் 11ம் திகதி ஆசிரியர் தலையங்கத்தில் முக்கியமான முடிவை எடுத்தபோதும் அப்பத்திரிகைக்கு தற்போது
குறிப்பிடும் சவுதி அராபியாவுடனான அமெரிக்காவினது ''ஆழ்ந்த மோசமான உறவு'' தொடர்பாக தொடர்பாக
முன்னரே நன்கு தெரிந்திருக்கின்றது.
ஈரானில் ஷாவினது சர்வாதிகார ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் மத்திய கிழக்கில் அமெரிக்காவினது
கொள்கையினது மத்திய புள்ளியாக இரண்டு விடயங்கள் இருந்தன. முதலாவதாக ஏகாதிபத்தியத்தின் நலன்களை
பாதுகாப்பதற்க பாலஸ்தீன மக்களை ஒடுக்குவதற்காக இஸ்ரேலை பாவித்தது, இரண்டாவதாக சவுதி முடியாட்சிக்கான
அதனது ஆதரவாகும். சவுதி அராபியாவின் அரசானது உலகத்திலுள்ள மோசமான அரசாங்கங்களுள் ஒன்றாகும். சர்வதேச
மன்னிப்பு சபையின் படி ''சவுதி அராபியாவின் அரச கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பயமும், இரகசியமும் ஊடுருவியிக்கின்றது.
அங்கு ஒருவித அரசியல் கட்சிகளும் இல்லை, தேர்தல் இல்லை, சுதந்திரமான சட்டமைப்பு இல்லை, தொழிற்சங்கங்கங்கள்
இல்லை, சட்டத்தரணிகளின் அமைப்பு இல்லை, சுயாதீனமான நீதித்துறை இல்லை, சுயாதீனமான மனித உரிமை அமைப்புகளும்
இல்லை. அரசமைப்பை விமர்சிக்கும் அங்கு வாழும் எவரும் கடுமையாக தண்டிக்கப்படுவர். அரசாங்கத்திற்கு எதிரான
அரசியல், மத எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், வழக்கு விசாரணை இன்றி தடுத்துவைக்கப்படுவர் அல்லது
இரகசியமான நீதியற்ற விசாரணையின் பின்னர் சிறையிலிடப்படுவர். சித்திரவதை பரவலாக உள்ளது. வெளிநாட்டு
தொழிலாளர்கள் எப்போதும் அபாயத்திற்குள்ளாகியிருக்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளது.
மதவாத பொலிசால் புகுத்தப்படும் சவுதி அராபியாவின் மத்தியகாலத்திற்குரிய சமூககொள்கைகளானது
தலிபானால் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாரியளவால் வித்தியாசப்படவில்லை.
1998 ம் ஆண்டு அமெரிக்க அரச திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பின்அறிக்கைகளில்
பின்வருமாறு குறிப்பிட கடமைப்பட்டிருந்தது ''பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான நெருக்கமான கூட்டுழைப்பு
இருந்தபோதும், சவுதி அராபியாவின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக அமெரிக்கா கவனத்திற்கு
கொண்டிருக்கின்றது. கைதிகளை துஸ்பிரயோகம் செய்தல், தனிப்படுத்தப்பட்ட சிறைவைத்தல் போன்ற முக்கிய மனித
உரிமை பிரச்சனைகள், பேச்சு சுதந்திரத்தின் மீதான கடும்கட்டுப்பாடு, பத்திரிகை மற்றும் சுதந்ததிரமாக கூட்டம்
கூடுதல், மத, அரசாங்கத்தை மாற்றுவதற்கான மக்களுக்கு உள்ள சுதந்திரத்தை மறுத்தல், பெண்களுக்கும் மற்றும் சிறுபான்மை
மத, இன பிரிவினருக்கும் எதிரான திட்டமிட்ட அவமரியாதை, தொழிலாளர்களின் உரிமையை நசுக்குதல் போன்றவை
நிலவுகின்றது''.
2000ம் ஆண்டில், 123 மரணதண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்பு
சபை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இவற்றில் சுய இன்பத்தில் ஈடுபடுதல், ''சூனியம்''
(Sorcery) போன்றவையும் அடங்கும். ஒரு எகிப்து நாட்டவர்
மரணதண்டனையை தொடர்ந்து அவரின் உடல் சிலுவையில் அறையப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. கடந்த வருடம் 34
பேருக்கு அங்கங்கள் வெட்டப்பட்டதாகவும், அவற்றில் 7 பேர் குறுக்கு வெட்டுக்கு (வலது காலும் இடது கையும்
அல்லது இடது காலும் வலது கையும்) உள்ளாகியுள்ளனர். Medina
நகரின் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி எகிப்து நாட்டவர் ஒருவருக்கு இடது கண் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
பிரம்படி பரவலாக நடைமுறையிலுள்ளது. Najran நகரத்தில்
நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட இரு ஆசிரியர்களுக்கு 1500 கசையடி வழங்கப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது. இத்தண்டனையானது அவர்களின் குடும்பத்தினரினதும், மாணவர்களினதும், சக ஆசிரியர்களினதும் முன்னர்
வழங்கப்பட்டது. மின்சார அதிர்ச்சி உட்பட கைதிகளின் மீதான சித்திரவதை பொதுவாக உள்ளது.
நியூயோர்க் ரைம்சின் ஆசிரியர் தலையங்கம் குறிப்பிட்டபடி அமெரிக்காவிற்கும், சவுதி
அராபியாவிற்கும் இடையிலான உறவு ரூஸ்வெல்டின் காலகட்டம் வரை செல்கின்றது. இருநாடுகளுக்கிடையிலான உறவுகள்
மேலெழுந்தவாரியாக 1942 இல் உருவாக்கப்பட்டது. சவுதி அராபியாவின் முதலாவது வெளிநாட்டு பிரிவு அமெரிக்காவில்
1944 இல் உருவாக்கப்பட்டது. (இதே வருடம் அராபிய அமெரிக்க எண்ணைய் நிறுவனம்
[Aramco] நிறுவப்பட்டது.
ஒரு வருடத்தின் பின்னர் அரசர் Abdul
Aziz Al-Saud (Ibn Saud என அழைக்கப்படுபவர்) ரூஸ்வெல்டை அமெரிக்க கப்பல் ஒன்றில் சுயேஸ்
கால்வாயில் சந்தித்தார். வெற்றிகரமான அமெரிக்க நிர்வாகம் சவுதியினரைப்பற்றி கணிப்பிட்டிருந்தது. அரசர்
Abdul Aziz Al-Saud உம் அப்போதைய அமெரிக்க
ஜனாதிபதியான Dwight D. Eisenhower ஐ 1957
இல் வெள்ளைமாளிகையில் சந்தித்தார். பின்னர் அவர் 1962 இல்
John F. Kennedy உடன் கலந்தாலோசிக்க வந்தார். சவுதியின் முடியாட்சிக்குரியவர்கள்
Lyndon Johnson, Richard Nixon, Jimmy Carter
போன்றோருடனும் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
Seymour Hersh ஆல்
New Yorker
சஞ்சிகைக்கு எழுதியதன் படி றேகன் நிர்வாகத்திற்கான ''முக்கிய நிதி உதவியாளராக''
இருந்ததுடன், ''இலத்தீன் அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும், சோவியத் யூனியனை உறுதியற்றதாக்குவதில்
ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சிக்கும் ஆதரவளித்தது. 1985 இல் றேகன்
அரசர் Fahd (உத்தியோகபூர்வமாக
அரசராக இருந்தபோதிலும், அவர் முற்றாக இயலாத நிலையில் இருந்தார்) இனை சந்திக்கும் போது ''எமது அரசாங்கங்களுக்கும்
மக்களுக்கும் இடையிலான நட்பும் கூட்டுறவும் முக்கியமான ''உயர்வாக மதிக்கப்படவேண்டியது'' என குறிப்பிட்டது காரணமில்லாமலில்லை.
இந்த ''உயர்வாக மதிக்கப்படவேண்டியதற்கு'' எண்ணெய் வார்த்தது 1940 இலிருந்து
பாய்ந்த மில்லியன் கணக்கான பரல்கள் பெற்றோலியமாகும். 1945 இலிருந்து 1974 வரை சவுதியின் எண்ணெய் உற்பத்தி
சராசரி 19% ஆல் அதிகரித்து நாளாந்தம் 8 பில்லியன் பரல்களானது.
Aramco
நிறுவனம் சவுதியின் எண்ணெய் உலகத்தில் உள்ள வழங்களில் 25% இனை கொண்டிருப்பதாக
மதிப்பிட்டது. ஆனால் இம்மதிப்பீடு ஒரு பின்தங்கியது என பலர் கருதுகின்றனர்.
உலகத்தில் முன்னணியிலுள்ள உற்பத்தியாளனும் ஏற்றுமதியாளனுமான சவுதி அராபியா 1999
இல் அமெரிக்காவிற்கு நாளாந்தம் 1.4 மில்லியன் பரல்களை விநியோகிப்பதுடன், இது அதன் எண்ணெய் இறக்குமதியின்
கிட்டத்தட்ட16% ஆகும். சவுதி அராபியாவின் ஆட்சியாளருக்கும் புஷ் இன் நிர்வாகத்திற்கும் (தற்போதையவரின் தகப்பனுக்கும்)
இடையிலான உறவு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உப ஜனாதிபதியான
Dick Cheney இனால் முன்னர் தலைமை தாங்கப்பட்ட எண்ணெய் வியாபாரத்திற்கு தொடர்பான
Haliburton நிறுவனம் ''சவுதி அராபியாவில் பல கிளை
நிறுவனங்கள் கடந்த வருட இறுதிவரை இயங்கியதாக Seymour
Hersh குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க சவுதி வர்த்தகத்தின் பெறுமதி மிகவும் கூடியது. 1999 இல் சவுதியின்
நிறுவனங்கள் ஏற்றுமதி 7.9 $ பில்லியனாகவும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி 7.6 $ பில்லியனாகும். இவ்
எண்ணிக்கைகள் அமெரிக்காவிற்கான எண்ணைய் ஏற்றுமதியும், சவுதிக்கான ஆயுத இறக்குமதியுமான இரண்டு வகை
வர்த்தகத்தை எடுத்துக்காட்டுகின்றது. 1950 இலிருந்து 1997 வரை சவுதியுடனான ஆயுத உடன்படிக்கையின் பெறுமதி
94$ பில்லியனாகும். இதேவேளை 1991-97 வரை மட்டும் 23$ பில்லியனாக இருந்தது. காங்கிரஸின் ஆய்வு சேவை
ஒன்றின் தகவல்களின்படி சவுதியில் உள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை (இராணுவமும், உள்ளூர் இராணுவத்துடன் ஒப்பந்த
அடிப்படையில் வேலைசெய்வோரும்) 35,000 இற்கும் 45,000 இடையில் உள்ளது.
அமெரிக்க ஆயுதங்களும் இராணுவ உதவியும் சவுதியின் ஊழல் மிகுந்த அரசினை (7000
அங்கத்தவர்களை கொண்டுள்ளதுடன், நாட்டின் எண்ணெய் வளத்தின் 40% இனை கட்டுப்படுத்துகின்றனர்) உள்நாட்டு வெளிநாட்டு
எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கே கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றது.
பத்து வருடங்களுக்கு முன்னர் குவைத்தினது விடுதலை வளைகுடா யுத்தத்திற்கான சாட்டாக
பயன்படுத்தப்பட்டது போல், பின் லேடன் மீதான குற்றச்சாட்டும், ''இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தை''
அழித்தல் தற்போதைய யுத்தத்திற்கான சாட்டாக உள்ளது. புஷ் இன் யுத்த நோக்கத்தினை ஆதரிக்கும் நியூயோர்க்
ரைம்சின் ஆசிரியர்களினதும் ஏனைய ஆதரவாளர்களினதும் விவாதம் வஞ்சகமானதும், சுயபாதுகாப்பை நோக்கமாக
கொண்டதுமாகும். சவுதி அராபியாவுடனான அமெரிக்காவின் கொள்கை எண்ணெயை நோக்கமாக கொண்டதும், சிடுமூஞ்சித்தனாமானதும்
என நியூயோர்க் ரைம்ஸ ஒத்துக்கொள்கையில் ஏன் அவர்களால் அல்லது அமெரிக்காவின் செய்தித்துறையின் ஏனைய
பிரிவினரால் ஆப்கானிஸ்தானுடனான தற்போதைய முரண்பாட்டிற்கான கூடிய பொதுவான விளக்கத்தை வழங்க முடியாது
என நம்புகின்றனர். உண்மையில் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பேரில் அடுத்த முக்கிய எண்ணெய், நிலவாயு
வளங்களை கட்டுப்படுத்த மத்திய கிழக்கையும், மத்திய ஆசியாவையும் மறு ஒழுங்கமைக்கும் யுத்தமாகும்.
செப்டம்பர் 11 ம்திகதி தாக்குதல் ''பேய்த்தனமான செயல்களை'' செய்தவர்களின்
நடவடிக்கை எனவோ அல்லது மடையர்களின் சாதாரண நடவடிக்கை என விளங்கப்படுத்தமுடியாது. இது வெளிப்படையாக
பாரிய பலத்தை கொண்டிருப்பதாக தோற்றமளிக்கும் ஏகாதிபத்தியத்தின் மிகப்பலமானதும் மூர்க்கமானதுமான
பிரதிநிதியான அமெரிக்காவிற்கு எதிரான அரசியல்ரீதியாக சீரழிந்த தேசியவாத பிரிவினரின் ஆழமான பிற்போக்கான
நடவடிக்கையாகும்.
ஸ்ராலினிசத்தின் குற்றம்மிக்க கொள்கைகளால் (1979 இல் ஆப்கானிஸ்தானில்
பிற்போக்கான ஆக்கிரமிப்பு உட்பட) முக்கியமாக உருவாகிய புரட்சிர தலைமை இல்லாமையால் தொழிலாள வர்க்க
இயக்கத்தினுள் தோன்றியுள்ள இடைவெளியே அடிப்படைவாதத்தின் உருவாக்கத்திற்கு காரணமானது. 1917 அக்டோபர்
புரட்சியானது இப்பிரதேசத்தை ஒன்றிணைக்கும் நோக்காக இருக்கையில், அதன் பின்னரான வருடங்களில் சோவியத் ஸ்ராலினிச
அதிகாரத்துவத்தின் நடவடிக்கைகள் போல்ஷிவிசத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் மூலதனத்தை கலைத்து விட்டதுடன்,
அரைக்காலனித்துவத்திற்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும், காலனித்துவ, நவகாலனித்துவத்திற்கும் எதிரான சோசலிச
மாற்றீட்டை மதிப்பிழக்கச்செய்தது. இந்த இலாபங்களை இஸ்லாமிய அடிப்படைவாதம் தற்காலிகமாக அறுவடை செய்துகொண்டது.
சவுதி அராபியாவின் சமூக இயற்கை அமைப்பிலிருந்து பார்க்கையில் பின் லேடனினதும்,
அல் காட்டாவினதும் எழுச்சியானது சமூகத்தில் உள்ள ஆழமான பிரிவினை பிரதிபலிப்பதுடன், விஷேடமாக சவுதி முதலாளித்துவத்தின்
பிரிவினர் அமெரிக்காவுடனான தரகு உறவுமுறையின் மனக்கசப்பை காட்டுகின்றது. அல் காட்டா அரபு ஆளும் தட்டினரின்
வெளிப்பாட்டையே காட்டுகின்றது. அது மத்திதர வர்க்கத்தினதும், சோசலிச மாற்றீடு ஒன்றை காணாத ஒடுக்கப்பட்ட
மக்களினதும், தொழிலாள வர்க்கத்தினதும், மக்கள் தொகையின் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரதும் ஒரு குறிப்பிட்டளவு
ஆதரவை பெற்றுள்ளது.
ரைம்ஸின் ஆசிரியர் தலையங்கம் உலக சோசலிச வலைத் தளத்தால்
வலியுறுத்தப்பட்ட கருத்தான, செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலுக்கான முக்கிய அரசியல் பொறுப்பு அப்பிரதேசத்தில்
(ஈராக், பாலஸ்தீனம், சோமாலியா.. மற்றும் ஏனைய) பலதரப்பட்ட மக்களின் மேல் அமெரிக்காவின் நிர்வாகத்தினரால்
நடைமுறைப்படுத்தப்பட்ட மோசமான கொள்கைகளின் விளைவாகும் என்பதையும், இஸ்லாமிய அடிப்படைவாதம் வாஷிங்டனின்
சேவைக்கு பயன்பட்டுத்த தூண்டிவிட்டதையும், மத்திய கிழக்கில் மிகவும் ஊழல்மிக்க பிரிவினருடன் மோசமான உறவை
பாதுகாத்ததையும் குறிப்பிட்டதை உறுதிப்படுத்துகின்றது.
மிகவும் அடிப்படையான வரலாற்று நிலைப்பாட்டிலிருந்து நோக்குகையில் தற்போதைய
நெருக்கடியானது உலக முதலாளித்துவம் உருவாகிய தேசிய அரசமைப்பு முறையினை பாதுகாப்பதையும், இலாப நோக்கத்தை
கொண்ட தனியார் சொத்துமுறையை அடிப்படையாக கொண்ட முழு ஏகாதிபத்தியத்தினது உற்பத்தியாகும். தன்னகத்தே
உள்ளடக்கியுள்ள சமத்துவமின்னையும், வெடிப்புமிக்க முரண்பாடுகளையும் கொண்ட இவ்வமைப்பானது தவிர்க்கமுடியாதவாறு
யுத்தத்தை நோக்கி இட்டுச்செல்கின்றது.
ரைம்ஸின் படி சவுதி அராபியாவுடனான அமெரிக்காவின் உறவானது ''மீழ்
ஒழுங்கமைக்கப்பட வேண்டும்''. இது முழுக்க போலியானதாகும். தற்போதைய நெருக்கடியானது உருவாக்கியுள்ளது
என்னவெனில் ஏகாதிபத்தியத்திற்கு முடிவுகட்டுவதாகும். இக்கடமைக்கு சர்வதேச சோசலிசத்தின் அடித்தளத்தில் சகலநாட்டிலுமுள்ள
தொழிலாளர்கள் ஒன்றிணைவதை தவிர வேறு தீர்வு கிடையாது.
|