World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்

Fall of Kabul sets stage for further political conflict in Afghanistan

காபூலின் வீழ்ச்சி ஆப்கானிஸ்தானின் தொடர்ச்சியான அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்கின்றது

By Peter Symonds
15 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூல் உட்பட கூடுதலான பிரதேசத்தின் மீதான தமது பிடியை அமெரிக்க ஆதரவு வடக்கு கூட்டிடம் தலிபான் விரைவாக இழந்தமை, அமெரிக்காவிற்கும் அதன் கூட்டினருக்கும் அங்கு உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை ஒழுங்கற்ற அனைத்தையும் ஒன்றிணைத்து ஒட்டுப்போட்டு அரசாக உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

வடக்கின் முக்கிய நகரமான மெஸார்- இ- ஷாரீப்பை [Mazar-e-Sharif] வடக்கு கூட்டணி கைப்பற்றியதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை உருவாகிய சீர்குலைவானது மேற்கிலுள்ள கேராட் [Herat] நகரத்தினையும், வடக்கிலுள்ள ரலூகானின் [Taloqan] மீதான கட்டுப்பாட்டை இழக்குமளவிற்கு விரைவாக பரந்தது. 10% ஆக இருந்த அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசம் ஒரு சில நாட்களுக்குள் நாட்டின் அரைவாசியானது. வடக்கில் ஒரு சில பகுதிகள் தான் தலிபானின் எதிர்ப்பு இருக்கின்றது. முக்கியமாக குறிப்பிடத்தக்கது அவர்களது பலமான நகரமான குண்டூஸ் [Kunduz] ஆகும்.

வடக்கு கூட்டணி கடுமையான சண்டையில்லாது கூடுதலான வெற்றியை பெற்றுக்கொண்டது. வடக்கு கூட்டணியின் இராணுவ அதிகாரிகளின் பிரச்சாரத்திற்கு உதவியளித்த அமெரிக்காவினது விஷேட படையினரினதும் இராணுவ ஆலோசகர்களினதும் கூட்டுழைப்புடன் கடந்த வாரங்களில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் தலிபானின் முன்னணி நிலையின் மீது குண்டு மழை பொழிந்தன. பம்யான் [Bamyan] மாநில ஆளுனர் உட்பட குறிப்பிட்டளவிலான படையினரும், தளபதிகளும் விட்டோடியது தலிபானின் வீழ்ச்சிக்கான முக்கிய ஒரு காரணமாக தெரிகின்றது.

ஆனால் வடக்கு கூட்டணி காபூலை நோக்கி முன்னேற ஆயத்தப்படுத்தியபோது, ஜனாதிபதி புஷ் தலைநகரத்தை கைப்பற்றவேண்டாம் என்ற அமெரிக்காவின் முன்னைய கட்டளையை பின்வாங்கிக்கொண்டார். ''எமது நண்பர்கள் தெற்கு நோக்கி செல்லும்படியும், ஆனால் காபூல் நகரத்தினுள் செல்லவேண்டாம் என உற்சாகப்படுத்துவோம்'' என ஆப்கான் அரசாங்கம் வடக்கு கூட்டணியால் ஆதிக்கம் செலுத்தப்படகூடாது என அடம்பிடித்த பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளரான பேர்வஸ் முஷாராப்பினை சந்தித்த பின்னர் புஷ் கடந்த வார இறுதியில் தெரிவித்தார்.

அமெரிக்க ஆகாய மார்க்கமான ஆதரவிலும், ஆலோசனைகளிலும், ஆயுதங்களிலும், நிதியிலும் தங்கியுள்ள வடக்கு கூட்டணியின் தலைவர்கள் தலைநகரத்தின் வாசலில் நிறுத்திக்கொண்டு ஒரு புதிய நிர்வாகத்திற்கான ஏனைய தகுதி வாய்ந்த கட்சிகளுடன் அமெரிக்காவினதும், ஐக்கிய நாடுகளினதும் இராஜதந்திர பேச்சுவார்த்தைக்காக நேரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். எவ்வாறிருந்தபோதும், செவ்வாய்க்கிழமை தலிபான் காபூலில் இருந்து விலகி தென்பகுதியில் தமது பலமான நகரமான கந்தகாரை [Kandahar] நோக்கி பின்வாங்கினர். வடக்கு கூட்டணி விரைவாக தலைநகரத்தினுள் நுழைந்தது.

பஸ்ரூன் எதிர்ப்பு குழுக்களிடையே எதிர்ப்பை உருவாக்க அமெரிக்காவின் CIA தீவிரமாக இயங்கிவரும் தென் ஆப்கானிஸ்தானிலிருந்தும் தலிபான் பின்வாங்குவதாக இறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் எதிர்ப்பு குழுக்களின் கைகளில் ஜலாலாபாத் [Jalalabad] வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், உள்ளூர் பஸ்தூன் [Pashtun] எதிர்ப்பாளர்களிடையே இயங்கும் வடக்கு கூட்டணியின் பேச்சாளர் ஒருவர் தனது படைகள் கந்தகாருக்குள் புகுந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். தலிபானின் முழு இழப்பின் அளவு உறுதியற்றதாக இருக்கின்றபோதிலும், அது நாட்டின் 20% இனையே கட்டுப்பாட்டினுள் கொண்டிருப்பதாக தெரிகின்றது.

வடக்கு கூட்டணியின் தன்மை தலிபான் படையினர் அதனுடைய படையினரால் மரணதண்டனைக்குள்ளாவதை உறுதிப்படுத்துவதற்கு முழுசாட்சியமாக இருப்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அது தொடர்பான முழுக்காட்சிகள் மேற்கின் படப்பிடிப்பாளர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் கிடைத்துள்ளன. அமெரிக்க பேச்சாளரான Stephanie Bunker 100 இற்கு மேலான தலிபான் படைவீரர்கள் வடக்கு கூட்டணியால் கொல்லப்பட்டதை ஒத்துக்கொண்டுள்ளார். இவர்களில் அதிகமானோர் இளவயதினரும், மெஸார்- இ- ஷாரீப்பில் பாடசாலை ஒன்றினுள் ஒழிந்திருந்தபோது பிடிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்டவர்களாகும். ஒரு தொகை கொள்ளையடிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அரசாங்கத்தை நிலைகுலையச்செய்ததற்காக முயற்சிகளுக்காக அமெரிக்கா தன்னை தொடர்ச்சியாக புகழ்ந்துகொள்கையில், வடக்கு கூட்டணியின் முன்னேற்றமானது பல ஆப்கானிஸ்தான் குழுக்களிடையே பங்குபிரிக்கும் புதிய வட்ட அரசியல் முரண்பாடுகளுக்கான நிலைமையை உருவாக்கியுள்ளது. இவ்வடக்கு கூட்டணியானது உள்ளூர் படைத்தளபதிகளையும், இனரீதியான இராணுவக்குழுக்களையும் கொண்ட ஒரு முரண்பாடுகள் உள்ளடங்கிய கூட்டாகும். கடந்த பத்தாண்டுகளாக அவர்கள் தமக்குள்ளேயே பலதடவை மோதிக்கொண்டுள்ளார்கள். இக்கூட்டை ஒன்றாக இணைத்துவைத்திருப்பது ஒவ்வொரு பிரிவிற்கும் தலிபானின் மேலுள்ள ஆத்திரமும், அவர்களது ஆதரவாளர்களான ரஷ்யாவும், ஈரானும், இந்தியாவுமாகும்.

காபூலை கைப்பற்றிய பின்னர் இப்போது அவர்கள் எவ்வாறான புதிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக கவனமாக கட்டளையிடத்தொடங்குகின்றனர். அது ஒரு தற்காலிக நிர்வாகத்தையும், முக்கிய அமைச்சர்களையும் அறிவித்துள்ளதுடன், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஆப்கானிய பிரிவினர் அனைவரையும் காபூலில் கூட அழைப்புவிட்டுள்ளனர். எவ்வாறிருந்தபோதிலும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஐக்கியநாடுகள் சபையுடன் ஒன்றிணைந்து தமது விஷேட தூதுவரான Lakhdar Brahimi மூலம் எந்தவொரு ஆப்கான் அரசாங்கத்தின் மீதும் தமது முத்திரையை பதிக்க தீர்மானித்துள்ளனர்.

வடக்கு கூட்டணியின் இராணுவத்துடன் கூடி இயங்குகின்றபோதிலும், காபூலில் அவர்களின் ஆதிக்கத்திற்குள்ளான ஒரு நிருவாகம் தொடர்பாக அமெரிக்கா கவலைகொண்டுள்ளது. வடக்கு கூட்டணியானது வடக்கில் உள்ள சிறுபான்மை இனக்குழுக்களை கூடுதலாக கொண்டிருப்பதையும் தெற்கிலுள்ள பஸ்தூன் பெரும்பான்மையின் பிரதிநிதிகளை அது உள்ளடக்கியிருக்கவில்லை என்ற அபாயத்தை வாஷிங்டன் சுட்டிக்காட்டியுள்ளது. 1992-1994 இற்கு இடையில் காபூலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு அவர்கள் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டதையும், தலைநகரத்தின் பொரும்பாலான பகுதியை தரைமட்டமாக்கியதையும், 50,000 பொதுமக்களை கொன்ற வடக்கு கூட்டணியின் இரத்தம் தோய்ந்த வரலாற்றை ஆதாரத்துடனான விபரங்கள் காட்டப்படுகின்றன.

எவ்வாறிருந்தபோதிலும் இந்த உண்மையான கவனம், எந்தவொரு புதிய ஆப்கான் அரசாங்கத்திலும் இனக்கலப்பு எப்படியிருக்கவேண்டும் எனபதோ அல்லது பல்வேறு பிரிவினராலும், ஆயுதக்குழுக்களாலும் செய்யப்பட்ட கொடுமைகள் தொடர்பானதோ அல்ல. முக்கிய விடயம் ஆப்கானின் மீதான பரந்த அரசியலை யார் வைத்திருப்பது என்பது தொடர்பானதும், அதன் அண்டை நாடுகள் உள்ள மத்திய ஆசியாவின் பாரிய இயற்கை வளங்களை ஆதிக்கம் செலுத்துவதும் தொடர்பானதாகும். ஆப்கானிஸ்தான் மீதான யுத்தத்தை அமெரிக்கா தொடுத்திருக்கையிலும், வாஷிங்டன் குறிப்பாக ஆப்கான் பிரிவினர் மீதும், அதனூடாக அவற்றின் வெளிநாட்டு ஆரதவாளர்கள் மீதான கட்டுப்பாட்டை கைவிட்டுவிட தயாராக இல்லை.

இராஜதந்திர சூழ்ச்சிகள்

கூடுதலான ஆப்கான் பிரிவினரின் மூலம் 1980 களில் சோவியத் யூனியனுக்கு எதிராக போராட அமெரிக்காவால் நிதியும் ஆயுதமும் வழங்கப்பட்ட முஜைகிதீன் [Mujaheddin] அமைப்பினுள் வேரோடியிருக்கின்றது. 1992 இல் அவ்வரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் அண்டைநாடுகள் தமக்கு சார்பான குழுக்கள் மூலம் ஆப்கானிஸ்தானில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள முயன்றதால் மோதல்கள் தொடர்ந்தன. தற்போது இடம்பெறும் இராஜதந்திர பிரச்சனைகள் இக்குழுக்கள் ஒவ்வொன்றினுள்ளும், அவர்களின் வெளிநாட்டு ஆதரவாளர்களினுள்ளும் உள்ளடங்கியுள்ள ஒரு சிக்கலான அரசியல் சமாந்திரமாகும்.

அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் பாகிஸ்தான் தலிபானுக்கான தனது ஆதரவை முடிவிற்கு கொண்டுவரவேண்டியிருந்ததுடன், புதிய நிர்வாகத்தினுள் ''புதிய தலிபானையும்'' அதற்கு தொடர்பான பஸ்தூன் தலைவர்களையும் இணைத்துக்கொள்வதன் மூலம் தனது நிலையை மீளமைத்துக்கொள்ள மிகுந்த பிரயத்துடன் முயல்கின்றது. வடக்கு கூட்டணியின் ஆதரவாளர்களான ருஸ்யிவும், ஈரானும், இந்தியாவும் முன்னாள் தலிபான் தலைவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதை வெளிப்படையாக எதிர்க்கின்றனர் .

இவ்விடயங்கள் தற்போது ஆப்கானிஸ்தானின் ''ஆறு இரண்டு'' [Six plus Two] குழுவான அமெரிக்காவும் ருஸ்யாவும், ஆறு அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஈரான், தஸ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பேக்கிஸ்தான் இனுள் முட்டிமோதிக்கொண்டிருக்கும் பிரச்சனையாகும். ''பரந்த அடிப்படையிலான, பல்லின, பிரதிநிதித்துவத்தை '' கொண்ட பொதுவான கருத்து தொடர்பாக அனைவரும் ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்கின்றபோதும், அரசாங்கத்தில் சரியாக யார் பிரதிநிதித்துவப்படுத்துவது, எந்தளவில் , யார் தலைமை தாங்குவது என்ற அனைத்தும் முரண்பாட்டுக்குள்ளானதாக இருக்கின்றது.

இராஜதந்திர முயற்சிகள் எவ்வளவு விரைவாக நடக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நடக்க அமெரிக்கா விரும்புகின்றது. ஒரு இராஜதந்திரி ''ஆறு இரண்டு'' குழுக்கூட்டத்தின் பின்னர் அமெரிக்க செயலாளரான கொலின் பெளல் ''விரைவாக, விரைவாக, விரைவாக'' என்ற அவசியத்தை வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். அமெரிக்காவின் முக்கிய வலியுறுத்தல் காபூலில் வடக்கு கூட்டணி அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவதை தடுப்பதாகும். கொலின் பெளல் காபூல் ஐக்கியநாடுகளினதுதலைமையில் துருக்கி, இந்தோனேசியா, பங்களாதேஸ் போன்ற முஸ்லீம் நானுகளினதும் படைகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு ''திறந்த நகரமாக'' மாற்றவேண்டும் என அழைப்புவிட்டார். பிரித்தானிய பிரதமர் பிளேயர் காபூலில் ஐக்கியநாடுகள் சபை விரைவாக தனது பிரசன்னத்தை ஏற்படுத்தகோரி வலியுறுத்தியதுடன், பல ஆயிரக்கணக்கான படையினரை தயார் நிலையில் வைத்துள்ளார்.

ஒரு பைத்திக்காரத்தனமான இராஜதந்திர முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஒரு புதிய நிர்வாகத்தை உருவாக்குவதற்கான அவசர பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்க விஷேட தூதுவரான James Dobbins இலண்டனுக்கும், ரோமிற்கும், அங்காராவிற்கும், தாஸ்கன்றுக்கும், டுஸாம்பேயிற்கும், இஸ்லாமாபாத்திற்கும் சென்றார்.ரோமில் ஆப்கானிஸ்தானின் 87 வயதான முன்னாள் அரசரான Zahir Shah ஐ சந்தித்ததுடன், எதிர்கால அரசியல் ஒழுங்கமைப்பில் அவரின் பங்கு குறித்து கலந்துரையாடியுள்ளார். James Dobbins தனது பயணத்தை பாகிஸ்தானின் எல்லைப்புற நகரமான பெஸாவரில் வெளிநாடுகளில் வாழும் பல ஆப்கான் தலைவர்களை சந்திப்பதுடன் முடிக்கவுள்ளார்.

ஒரு இரண்டு வருட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்கு ஆப்கான் தலைவர்களுக்கு அழைப்புவிட்டுள்ள ஐக்கியநாடுகளின் விஷேட தூதுவரான Lakhdar Brahimi பாகிஸ்தான் செல்லவுள்ளார். ஐக்கியநாடுகள் சபைக்கு தனது திட்டத்தை விளக்குகையில் ஒரு அமைப்பை உருவாக்க அதிகாரிகளை உள்ளே பாரசூட்டில் இறக்க விரும்பவில்லை எனவும் ஆப்கானிஸ்தானியர்களை தலைமைதாங்க அழைப்புவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆனால் ஆப்கானிஸ்தானின் அரசாங்கத்தை அமைக்க ஐக்கியநாடுகள் சபையினதும், அமெரிக்காவினதும் கோரிக்கைகள் அனைத்திற்கும் ''பரந்த அடிப்படையிலான'', ''பிரதிநிதித்துவத்தை கொண்ட'' மூடியைப்போட நடக்கும் முயற்சிகள் பாரிய சக்திபடைத்த நாடுகளின் ஏவல்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு காலனித்துவவடிவாலான நிர்வாகத்தை அமைப்பதற்கான வெளிப்படையான முயற்சிகளாகும். இப்பாரிய சக்திகளிடையேயும், பிராந்திய அரசாங்கங்களுக்கும், பல்வேறு ஆப்கான் குழுக்களும் இடையே எப்படியான ஒற்றுமையின்மையோ அல்லது உடன்பாடின்மையோ உருவாகினாலும் கலந்துரையாடப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் கருத்தினுள் ஆப்கான் மக்களின் ஜனநாயகரீதியான தலையீடு இருக்கப்போவதில்லை.