World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Following a major military setback

Sri Lankan government puts peace talks back on the agenda

பெரும் இராணுவ பின்னடைவைத் தொடர்ந்து

இலங்கை அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைகளை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டுள்ளது

By K. Ratnayake
8 May 2001

Use this version to print

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரு பெரும் இராணுவ எதிர்த்தாக்குதல் அவமானத்துக்கு இடமான முறையில் தோல்வி கண்டு போனதைத் தொடர்ந்து இலங்கை பொதுஜன முன்னணி அரசாங்கம் ஒரு "உத்தியோக பூர்வமற்ற" யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்க விருப்பம் கொண்டுள்ளதாக சமிக்கை செய்துள்ளதோடு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை முடிவு செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எறிக் சொல்ஹெயிமுக்கு நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட இலங்கை தொடர்பு சாதனங்கள்; மே 15ம் திகதியளவில் பேச்சுவார்த்தைகள் மீதான தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தன. சொல்ஹெயிம் அரசாங்கத்துடனும் எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தும் பொருட்டு கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் தலைவர் அண்டன் பாலசிங்கத்தை சந்திக்க லண்டன் பயனமானார். அவர் இந்திய தலைவர்களைச் சந்திக்க புதுடில்லிக்கு விஜயம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய யூனியனின் சார்பில் நோர்வே கொழும்புக்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை உருவாக்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று வந்துள்ளது. 18 வருடகால காட்டுமிராண்டி யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு கட்டுமாறு இலங்கை அரசாங்கம் பெரும் வல்லரசுகளாலும் பெரும் வர்த்தக நிறுவனங்களாலும் நெருக்குவாரத்துக்கு உள்ளாகி வந்துள்ளது. எவ்வாறெனினும் அரசாங்கம், பேச்சுவார்த்தை பக்கமான திருப்பம் சிங்கள உறுமய கட்சி, ஜே.வி.பி. போன்ற சிங்கள தீவிரவாத அமைப்புக்களின் அக்கறையை உக்கிரம் காணச் செய்யலாம் எனவும் தனது சொந்த அணியில் பிளவுகளை ஏற்படுத்தும் எனவும் அஞ்சுகின்றது.

ஏப்பிரல் மாத தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியங்கள் காணப்பட்டன. வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பாராளுமன்றத்தில் பேசுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் சமீபித்துவிட்டதாகவும் இம்மாத முடிவில் அதற்கான திகதிகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மூன்று மாதங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப் பிடித்த ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தின் பின்னரும் இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்த பொதுஜன முன்னணி அரசாங்கம் அனைத்துலக நெருக்குவாரத்தின் வளர்ச்சி காரணமாக அது சமாதானப் பேச்சுவார்த்தைகள் பக்கம் திரும்ப சில அறிகுறிகள் காட்டுவதாக காட்டிக் கொள்ள தள்ளப்பட்டது.

ஆனால் ஏப்பிரல் இறுதியில் தமிழீழ விடுலைப் புலிகள், ஏப்பிரல் 24க்கு பின்னரும் யுத்த நிறுத்தத்தை நீடிக்க மறுத்துவிட்டது. அரசாங்கம் யுத்தத்தை தொடர்ந்து நடாத்தியமைக்காக அதை வன்மையாக கண்டனம் செய்த விடுதலைப் புலிகள் கொழும்பு அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு கொணரத் தவறியமைக்காக பெரும் வல்லரசுகளையும் கண்டனம் செய்தது. "எமது சமாதான நடவடிக்கையை பாராட்டி, ஊக்குவிப்பதற்கு பதிலாக" "சில சர்வதேச அரசாங்கங்கள் எம் மீது சில சர்ச்சைகளையும் இன்னும் பல கட்டுப்பாடுகளையும் திணித்துள்ளன" என விடுதலைப் புலிகளின் ஒரு அறிக்கை முறைப்பட்டுக் கொண்டது. "இதே சமயம் மோதுதலில் சம்பந்தப்பட்ட மறு தரப்புக்கு நிதி, இராணுவ உதவிகளை வழங்கியதோடு பயிற்சி வசதிகளையும் வழங்கினர். இதன் மூலம் எமது எதிரி ஒரு கடும் போக்கு இராணுவ நிலைப்பாட்டை கடைப்பிடிக்க ஊக்குவித்தனர்."

இந்த அறிக்கை குறிப்பாக பெப்பிரவரியில் பிரித்தானிய அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய எடுத்த தீர்மானத்தை குறிப்பிட்டது. விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை கடைப் பிடிப்பதன் மூலம் அதனது போராளிகளின் நெருக்குவாரங்களுக்கும் உள்ளானது. இலங்கை இராணுவத்தினர் தமது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்ற நிலையிலும் கடந்த வருடம் விடுதலைப் புலிகளிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றி வரும் போதும் இந்த ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தம் இடம்பெற்றது.

இந்த யுத்த நிறுத்தக் காலப்பகுதியில் 140 போராளிகள் கொல்லப்பட்டதோடு மேலும் 400 போராளிகள் காயமடைந்ததாக விடுதலைப் புலிகளின் அறிக்கை குறிப்பிட்டு இருந்தது. யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொணரும் தீர்மானத்தை விடுதலைப் புலிகள் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளின் படகுகளை முல்லைத் தீவுக்கு சமீபமாக தாக்கி அதன் பல காரியாளர்களை கொன்றும் ஒன்பது பேரை காயப்படுத்தியதை தொடர்ந்தே எடுத்ததாகத் தோன்றுகின்றது.

யுத்த நிறுத்தத்தை ஒரு முடிவுக்கு கொணரும் தீர்மானத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இலங்கை இராணுவம் "தீச்சுவாலை" என்ற பெயரிலான பெரும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசாங்கப் படைகள் எழுதுமட்டுவாள், நாகர்கோவில் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தெற்கில் உள்ள பளையை நோக்கி முன்னேறின. கடந்த ஏப்பிரலில் விடுதலைப் புலிகளால் அரசாங்கப் படைகளிடம் இருந்து குடாநாட்டின் ஒரு மூலோாபாய முக்கியத்துவம் வாய்ந்த நுழை வாசலான ஆனையிறவை மீண்டும் கைப்பற்றுவதே இராணுவத்தின் இறுதி இலக்காக விளங்கியது.

இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஒரு தீர்க்கமான தோல்வியை ஏற்படுத்தும் எனவும் அதன் மூலம் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் கொழும்பின் நிலைமையைப் பலப்படுத்தும் எனவும் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெளிவாகக் கணித்துக் கொண்டிருந்தார். ஆனையிறவில் தோல்வி ஏற்பட்டதில் இருந்து அரசாங்கம் பல்முனை ஏவுகணைகள், யுத்த விமானங்கள், பீரங்கிகள் உட்பட நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்யக் கோடிக் கணக்கான ரூபாக்களை செலவு செய்தது. இதன் மூலம் இராணுவத்தின் அந்தஸ்தை உயர்த்தத் திட்டமிட்டது.

ஆனால் "அக்கினிச் சுவாலை" (அக்கினிக் கீல) இராணுவ நடவடிக்கை வெகு விரைவில் தோல்வியில் முடிவடைந்தது. அரசாங்கத்தின் சொந்த அறிக்கையின்படி நான்கு நாட்கள் இடம்பெற்ற கடும் சண்டையில் இராணுவம் 250 படையாட்களை இழந்ததோடு 1600 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலர் படுகாயமடைந்தனர். அரசாங்கம் 190 தமிழீழ விடுதலைப் புலி படையாட்களை கொன்றதாகவும் மேலும் 400 பேர் காயமடைந்ததாயும் கூறியது. ஆனால் விடுதலைப் புலிகள் அரசாங்கத்தின் இழப்புக்கள் மேலும் பெரியது என அறிவித்தது -500 பேர் உயிரிழந்ததோடு 2000 பேர் காயமடைந்தனர்.

ஒரு இராணுவ நடவடிக்கையில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளைக் காட்டிலும் கூடுதலான இழப்புக்களை சந்தித்ததாக முதற் தடவையாக ஒப்புக் கொண்டதன் மூலம் தோல்வியின் பாரதூரமான தன்மை இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கடும் இழப்புக்களுக்கிடையேயும் இராணுவம் எதுவிதத்திலும் முன்னேறவில்லை. ஒரு அரசாங்க அறிக்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் கடும் பீரங்கி, மோட்டார் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்ததாயும் "புதிய பந்தோபஸ்து மார்க்கங்கள் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் என்பதால் படைகள் மூல பந்தோபஸ்து மார்க்கங்களிலேயே குவிக்கப்பட்டதாகவும்" தெரிவித்தது.

நிலக்கண்ணி வெடியால் பல இராணுவத்தினர் காயமடைந்தனர். எதிர்த்தாக்குதல் காரணமாக காயமடைந்த நூற்றுக்கணக்கான படையாட்களால் கொழும்பு தேசிய வைத்தியசாலையும் இராணுவ வைத்தியசாலையும் நிரம்பி வழிந்தன. வைத்தியசாலை ஊழியர்களது தகவல்களின்படி வைத்தியசாலை படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பல படையாட்களை நிலத்தில் கிடத்த நேரிட்டது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடும் காயமடைந்த படையாட்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தும் பொருட்டு மேலதிக தாதிகளை தருவிக்க தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இரத்த தானம் கோரி அவசர அறிவிப்புக்கள் விடுவிக்கப்பட்டன.

பின்தங்கிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான கடும் காயமடைந்த படையாள் எமது நிருபர்களிடம் கூறுகையில்: "நான் இராணுவத்தை விட்டோடி சமீபத்தில் மீண்டும் சேர்ந்தேன். நான் முன்னரங்குக்கு அனுப்பப்பட்டேன். எனது காயங்கள் குணமடைந்த பின்னர் நான் மீண்டும் முன்னரங்குக்கு -நான் அங்கு செல்ல விரும்பாத போதிலும்- செல்ல வேண்டும். இது ஒரு வீணான யுத்தம். விவசாயத்தின் மூலம் உழைப்பது வாழ்க்கைக்கு போதாததன் காரணத்தாலேயே நான் இராணுவத்தில் சேர்ந்தேன்" என்றார்.

இராணுவம் தனது நடவடிக்கை மூலம் "திட்டமிடப்பட்ட புலிகளின் எதிர்த்தாக்குதலை சிதறடிக்க" முடிந்ததாக அரசாங்கம் தெரிவித்து இருந்தது. அனால் பின்னடைவின் பரிமாணம் உண்மையில் அரசாங்கத்தையும் இராணுவ அமைப்பையும் ஆட்டங்காண வைத்துள்ளது. இதனால் தவறை கண்டுபிடிக்க ஒரு விசாரணைக்கு உத்தரவிடும் அளவுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

"தற்காலிக யுத்த நிறுத்தம்"

குமாரதுங்க முன்னர் "யுத்தத்தை தொடர்கையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது" "யுத்தநிறுத்தம் இல்லை" என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்தார். அவரின் நோக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் எதிர்க்கும் ஜே.வி.பி. சிங்கள உறுமய அத்தோடு தனது சொந்த பொதுஜன முன்னணி உள்ளேயான சிங்கள சோவினிஸ்டுகளின் விமர்சனங்களை தடுத்து நிறுத்துவதேயாகும். எவ்வாறெனினும் அக்கினிச் சுவாலை' இராணுவ நடவடிக்கையின் தோல்வியைத் தொடர்ந்து குமாரதுங்க தனது உயர்மட்ட ஆலோசகர்களுடன் இடைவிடாத பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இராணுவ உயர்மட்ட புள்ளிகளின் சம்மதத்துடன் "தற்காலிக யுத்த நிறுத்தத்தை" கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளார்.

ஏப்பிரல் 29ம் திகதி 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை, கொழும்பு ஆளும் வட்டாரங்களில் நிலவும் ஆழமான நம்பிக்கையீனத்தினை வெளிப்படுத்தியது. அது எழுதியதாவது: "ஒரு பின்னடைவை தவிர்ப்பது அல்லது குறைந்தது ஒரு (இராணுவ) நடவடிக்கை சிதைந்து போகுமிடத்து அரசியல் அமைப்பானது ஒரு சூழ்ச்சியான நிலைமையைக் கொண்டிருக்கும். அது தவிர்த்துக் கொள்ளக் கூடியது போல் இருந்த பேச்சுவார்த்தைகள் இப்போது நெருங்கி வந்து கொண்டுள்ளது போல் தோன்றும். மேசைக்கு குறுக்கே தடைகளை எல்லாம் தெளிவாக தாண்டிய எதிரி பேரம்பேசலில் அகப்படாமல் பொறிகளை கடந்து செல்வான்."

இதே சமயம் 'ஐலன்ட்' பத்திரிகை இத்தோல்வியை "தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலில் இறங்கியுள்ளது" என்ற முன்பக்க தலைப்புச் செய்தியுடன் எதிர்கொண்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நிலைமையை இராணுவ ரீதியில் சுரண்டிக் கொள்ளும் கணக்குக் கிடையாது என்பதை உடனடியாக தெளிவுபடுத்தியது. ஆரம்பத்தில் சரமாரியான பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்து அது தாக்குதலை நிறுத்திக் கொண்டதோடு மோதுதலை மோசமடையச் செய்ததற்காகவும் நோர்வே சமாதான திட்டத்துக்கு குழிபறித்ததற்காகவும் கொழும்பை குற்றம் சாட்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. சகல ஆயுத போட்டா போட்டிகளையும் தணிந்து போகச் செய்ய நோர்வேயின் புரிந்துணர்வு அறிக்கையை முடிவு செய்ய விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தயாராக உள்ளதாகவும்" பேச்சுவார்த்தைகளுக்கான நிலைமைகளை சிருஷ்டிக்க ஆயத்தமாக உள்ளதாயும் மேலும் குறிப்பிட்டது.

திரைக்குப் பின்னால் யுத்த நிறுத்தத்துக்கும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கும் இணங்கும்படி புதிய நெருக்குவாரங்கள் கொணரப்பட்டன. நோர்வே, இந்தியா இரண்டும் தாக்குதல் தொடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு எச்சரிக்கை தெரிவித்தன. ஏப்பிரல் 29ம் திகதி இந்திய வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் 'கடந்த சில நாட்களின் சம்பவங்களையிட்டு கவலை தெரிவித்தர்." அத்தோடு அவர் 'சகல தரப்பினரும் சமாதான திசையில் சென்று பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிப்பார்கள்" எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மறுநாள் நோர்வே சிறப்புத் தூதுவர் சொல்ஹெயிம் மீண்டும் கொழும்புக்கு வருகை தந்ததோடு யுத்தம் சமாதான போக்குக்கு "திட்டவட்டமான பின்னடைவை" ஏற்படுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

மே 1ம் திகதி வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொலின் பவலுடன் பேச்சுவார்த்தை நடாத்த வாஷிங்டன் பயணமானார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிநாட்டு கோரிக்கைக்கு அமெரிக்காவின் எதிர்ப்பை மீண்டும் குறிப்பிட்ட அதே வேளையில் இலங்கை அரசாங்கம் முடிந்த மட்டும் விரைவில் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். இலங்கையில் தொடர்ந்து வரும் மோதுதல்கள் அமெரிக்கா பொருளாதார மூலோபாய நலன்களைக் கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தின் ஏனைய பாகங்களை ஆட்டங்காணச் செய்வதாக கவலை தெரிவித்து உள்ளது.

கொழும்பில் உள்ள பெரும் வர்த்தக நிறுவனங்கள் யுத்தம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை உக்கிரமாக்கும் எனவும் சமூகப் பதட்ட நிலைமையை வளர்ச்சி பெறச் செய்யும் எனவும் அஞ்சுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6 சதவீதத்துக்கு சமமான பிரமாண்டமான இராணுவச் செலவீனங்கள் ஏற்கனவே ஆழமான சென்மதி நிலுவை பற்றாக்குறை பிரச்சினையை தோற்றுவித்துள்ளன. அத்தோடு மூலதன வெளியேற்றம் நாட்டின் பங்குமுதல் சந்தையை 11 ஆண்டுகளுக்கு வீழ்ச்சி காணச் செய்துள்ளது. ஒரு ஆய்வாளர் டோஜோன்ஸ் (Dow Jones) இணைய சேவைக்கு அளித்த பேட்டியில்: "பொருளாதாரம் மீண்டும் தண்டவாளத்தில் காலடி வைக்கும் நிலையில் இராணுவ தீர்வு தாக்கிப் பிடிக்கக் கூடிய ஒன்றல்ல. இச்சமயத்தில் நாம் பிரச்சினை மோசமடைந்து செல்வதை சகிக்க முடியாது" என்றுள்ளார்.

இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் வளர்ச்சி கண்டுவரும் நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் குமாரதுங்க ஒரு "உத்தியோகப்பற்றற்ற யுத்த நிறுத்தத்துக்கு" இணங்கவும் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை உருவாக்கவும் இணங்கிக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. எவ்வாறெனினும் எப்போது பேச்சுவார்த்தைகள் இறுதியாக இடம்பெறுகின்றதோ அப்போது, அதை முதலாவதாக ஆரம்பித்து வைப்பதற்கான நீண்டகால முயற்சியை பாதித்த பிரச்சினைகளால் பாதிக்கப்படச் செய்யும்.