World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காRobert Kerrey and the bloody legacy of Vietnam ரொபேர்ட் கெர்ரியும் இரத்தம் தோய்ந்த வியட்னாம் வழி மரபும் By Patrick Martin and David North இக்கட்டுரையின் முதல் பகுதி 21/05/2001 ல் பிரசுரிக்கப்பட்டது. இரண்டாம் பகுதியை கீழே காணலாம். வரலாற்றுப் பரிமாணங்கள் கெர்ரியின் பாதுகாப்பு வக்கீல்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற இரு விவதாங்கள் விமர்சகர்களை விட அதிக எண்ணிக்கையில்- அதிகாரிகள் வட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. மிகவும் திவாலான வக்காலத்து என்னவென்றால், இந்த சம்பவங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே இடம்பெற்றன, கண்ட சாட்சிகள் வேறுபடலாம், தூங்குகின்ற நாயை விட்டுவிடுவதே சிறப்பானது என்பதாகும். அத்தகைய அளவில் உள்ள குற்றங்கள், மற்றும் அத்தகைய வரலாற்றுப் பரிமாணங்களை உடையவை, ஒரு தலைமுறைக்குப் பின்னரும் அல்லது இரு தலைமுறைக்குப் பின்னரும் கூட எரியும் பிரச்சினைகளாக எஞ்சியிருக்கின்றன. நாஜி யுத்தக் குற்றவாளிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டிருக்கின்றனர், உயர்மட்ட தலைவர்கள் மட்டுமல்ல இன அழிப்புகளை வடிவமைத்தவர்களும் கூட, ஆனால் நாள்தோறுமாக, தடுப்புக் காவல் முகாம்களின் காவலர்கள் மற்றும் கொலைப் பிரிவு கமாண்டர்களை உருவாக்கியவர்கள் --வில்லியம் கலீஸ்கள் (William Calleys) மற்றும் ரொபேர்ட் கெர்ரிஸ்கள் (Robert Kerreys) பின்தொடரப்படவில்லை. முன்னாள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் ஜெனரல் குர்ட் வால்ட்ஹைம் (Kurt Waldheim) --ஐக்கிய நாடுகள் சபையை விட்டு விலகி ஆஸ்திரிய நாட்டின் ஜனாதிபதி ஆனார்-- அவர் 2ம் உலகப்போரின் போது யூகோஸ்லாவியாவில் தீவிர நாசி அதிகாரியாக இருந்தார் என்பது தெரிய வந்ததும், சேர்பிய மக்களுக்கு எதிரான பயங்கரமான கொடுமைகளுடன் இணைக்கப்பட்டதாக, அவர் சர்வதேச புறக்கணிப்புக்கு ஆளானார். அமெரிக்கா அப்போது ஆஸ்திரியாவுக்கு எதிரான சர்வதேச தடைகளில் சேர்ந்து கொண்டது. அமெரிக்காவிலும் பல உதாரணங்கள் உண்டு. 1963 ல் பிர்மிங்ஹாம் (Birmingham), இல் அலபாமா தேவாலய குண்டு வெடிப்பில் நான்கு சிறுமிகளை கொலை செய்ததற்காக கடந்த மாதம் விசாரணைக்கு தோமஸ் பிளான்டன் (Thomas Blanton) ä கொண்டு வந்தது, வீண் முயற்சியென ஒருவரும் கூறவில்லை. 1969 ல் தான் பொங் (Thanh Phong) கில் பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்ததற்காக ரொபர்ட் கெர்ரியை விசாரணைக்குள்ளாக்குவது ஏன் சிந்திக்கத் தகாதது? ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் வியட்னாமியர்கள், அமெரிக்கர்கள் அல்ல என்பதாலா? மேலும் பிளான்டன் வழக்கு வெற்றிகரமாக முடிந்தது எடுத்துக் காட்டுவது என்னவெனில், 40 வருடங்கள் பழமையானதாக இருந்தாலும் கூட, படுபயங்கரமான குற்றத்தில் அக்கறை கொண்ட சக்தி மிக்க விசாரணை சாத்தியமானது, பொது மக்களின் நோக்கில் ஒரு இடப் பெயர்வை கொடுத்துள்ளது. அமெரிக்க பொதுக் கருத்து, தெற்கத்திய வெள்ளையர்கள் மத்தியிலும்கூட, இப்போது 1960 களில் கு குளுஸ் கிளான் (Ku Klux Klan) கொடுமைகளில் சம்மந்தம் கொண்டிருக்கினறன. மாறாக, கெர்ரியைப் பாதுகாக்கும் பிரச்சாரம் வியட்னாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அளவுக்கு அதிகமான கொடுமைகளை சட்டரீதியாக்கும் அதிகார பூர்வ அசாதாரண முயற்சியாகும். கெர்ரியின் சார்பான இன்னொரு விவாதம், அவரது நடவடிக்கைகள் யுத்த உள்ளடக்கத்தில் இடம் பெற்றதால், வேறுபட்ட அளவுகோலால் அளவிடப்படவேண்டும் என்பதாகும். கெர்ரி இராணுவ ஆணையை மட்டும் நிறைவேற்றினார், அவர் அதன் விளைவுக்கு பொறுப்பல்ல. இது நூரெம்பேர்க்கில் (Nuremberg) நாஜி தலைவர்களால் வழங்கப்பட்ட பாதுகாப்பு முயற்சியை-- அவர்கள் அடோல்ப் ஹிட்லரின் "கட்டளைகளைப் பின்பற்றினர்" என்பதை மெல்லிய மறைப்புகளில் புதுப்பித்தலைவிட சிறிது அதிகமானது. ஆம், கெர்ரி நிக்சன், ரிச்சர்ட் ஹெல்ம்ஸ், ஜெனரல் கிரெய்க்டன் அப்ராம்ஸ் மற்றும் ஏனைய அமெரிக்க உயர் அதிகாரிகளின் கட்டளைகளை மேற்கொண்டார். ஆனால் அவர் தன்னை சீல்களில் (SEALS) இணைவதற்கு தேர்ந்தெடுத்துக் கொண்டார். அது தேர்ச்சி பெற்ற படுகொலைப் பிரிவு, அமெரிக்க இராணுவத்துடன் மிக நெருக்கமானது, நாசியின் எஸ்எஸ் க்கு இணையானது. அவரே ஒத்துக்கொண்டபடி, அவர் வியட்னாமியரின் பின்னால் "பற்களின் நடுவே கத்தியை கவ்விக்கொண்டு" போக விரும்பினார். அதன் பின் 1970 ல் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற விழா ஒன்றில் அமெரிக்க நாடாளுமன்ற கெளரவ பதக்கத்தை ஏற்றுக்கொண்டார், அது நிக்சன் கம்போடியாவில் ஆக்கிரமிப்புக்கு கட்டளையிட்ட மற்றும் கெண்ட் மாநில பல்கலைக் கழகத்தில் (Kent State University) மாணவர்களை படுகொலை செய்ததை வக்காலத்து வாங்கிய சில நாட்களுக்குப் பின்னர் மட்டுமே ஆகும். கெர்ரி அவரது யுத்த சேவைக்காக அவரது அரசியல் வாழ்வு முழுவதும் நெப்ராஸ்கா (Nebraska) வின் ஆளுநராக, அமெரிக்க செனட்டராக மற்றும் 1992 ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான வெற்றி பெறா வேட்பாளராக ஆதாயம் பெற்றார். 2004 ல் அவர் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் ஆற்றல் வாய்ந்தவராக பரவலாக பார்க்கப்பட்டிருக்கிறார். குர்ட் வால்ட்ஹைம் தனது யுத்தகால நினைவுப்பதிவுகளை மறைத்து ஏமாற்றியதுபோல் அல்லாமல், கெர்ரியின் அரசியல் எழுச்சி அதன் தொடக்க புள்ளியாக வியட்னாமில் அவர் ஒரு "கதாநாயகன்" என்ற உருவகப்படுத்தலை எடுத்திருக்கிறது. அமெரிக்காவும் யுத்தக் குற்றங்களும் கெர்ரியை அம்பலப்படுத்தல் அமெரிக்க அரசியல் தட்டின் உணர்வு இழையைத் தொட்டுள்ளது. வியட்னாம் யுத்தக்காலத்து எலும்புக் கூடுகளை மறைவிடத்தில் வைத்திருக்க அவர்கள் விரும்பக் கூடும் என்பதால் மட்டுமல்ல. சிறப்பாக குளிர் யுத்த முடிவுக்குப் பின், மனித உரிமைகளை பாதுகாத்தல் என்பது அமெரிக்கா வெளிநாடுகளில் தலையிடுவதற்கான முதன்மை காரண காரியமாக ஆகியிருக்கிறது. பனாமாவில், ஈராக்கில், சோமாலியாவில், யூகோஸ்லாவியாவில் மற்றும் எங்கிலும் வெள்ளை மாளிகையும் அரசாங்கத்துறையும் இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இட்டுக்கட்டப்பட்ட அல்லது உண்மையான கொடுமைகளை பயன்படுத்துவதற்கு நாடுகின்றன. 1999 ல் யூகோஸ்லாவியாவுக்கு எதிரான குண்டுவீச்சு பிரச்சாரம் சேர்பிய "இன துடைத்தழிப்புக்கு" பதிலாக இருந்ததாக கூறப்படுகிறது. 1999 ஜனவரி ரெகாக் (Racak) இல் படுகொலையை வெளிப்படுத்தலில் --காட்சி A யில் குறிப்பிட்ட, அப்போதைய யூகோஸ்லாவிய ஜனாதிபதி சுலோபோடன் மிலோசெவிக் மீதான குற்றச் சாட்டு-- ஹேக்கில் உள்ள யுத்தக் குற்றங்களின் விசாரணைக் குழுவால் குற்றம் சாட்டப்பட்டது. தான் பொங் போல, ரெகாக்கில் எதிர்த்தரப்பு கொரில்லாக்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தின் மீதான தாக்குதலில், பல டசின் கணக்கில் கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும், தான் பொங் போல் அல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் அல்லர். ரெகாக்கில் கொல்லப்பட்டவர்களில் அனேகர் கொசோவோ விடுதலை இராணுவத்தின் போராளிகள் ஆவர், மற்றும் கொசோவா விடுதலை இராணுவத்தினர், மேற்கத்திய பத்திரிகை சாதனங்களிடம் அக்காட்சியை சூழ்ச்சியாகக் கையாண்டதாக கணிசமான சான்றுகள் கருத்துரைக்கின்றன. இறந்துபோன கமாண்டோக்களின் உடல்களை, மரணதண்டனை நிறைவேற்றும் பாணியில், அவர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டது போல் காட்டினர். அவர்கள் யூகோஸ்லாவிய இராணுவத்துடன் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதை காட்டிலும் முன் குறிப்பிட்டவாறு கொல்லப்பட்டது போல் தோன்றுமாறு அவர்களின் உடல்கள் கிடத்தப்பட்டன. யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச் சாட்டுக்கள் எளிதில் இருவழிகளிலும் வெட்டும் என்பதையிட்டு அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை கொண்டுள்ளனர். அதன் காரணமாகத் தான், அவர்கள் 1973 சிஐஏ ஆதரவு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப்பின் ஆயிரக் கணக்காணோர் படுகொலை செய்யப்பட்டதற்காக சிலியின் இராணுவ சர்வாதிகாரி ஒகுஸ்டோ பினோசே (Augusto Pinochet) ä --ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் -- அந்தக் குற்றங்களுக்காக ஹெல்ம்ஸ் (Helms), கிசிங்கர் (Kissinger) மற்றும் கூட்டாளிகள் குற்றச்சாட்டுகளுக்கு எளிதாய் ஆளாகக்கூடும். ஹேக் டிரிபியூனல் (Hague tribunal) போன்ற அமைப்புக்களை தனது வெளிவிவகார கொள்கை நலன்களுக்கு ஏற்றவாறு, மிலோசிவிக்கை பேயுருவாகக் காட்ட பயன்படுத்தும் அதேவேளை, வாஷிங்டன் தனது சொந்த நடவடிக்கைகளையும் அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்க தொடர்ந்து மறுத்து வருகின்றது. அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பினும் கூட, அத்தகைய அங்கங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாததால், உலகம் முழுவதும் அரசியல் இராணுவத் தலையீட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக தொடர்ந்து மறுத்து வருகின்றது. கெர்ரியும் புதிய பள்ளியும் புதிய பள்ளியின் (New School) தலைவராக அலுவலகப் பொறுப்பை ஏற்று சில வாரங்களுக்குப் பின்னர் மட்டுமே செர்ரி இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்பது வழக்கில் முக்கிய அரசியல் கலாச்சார பரிமாணத்தை சேர்க்கிறது. புதிய பள்ளியானது சாதாரணமாய் எந்த கல்லூரியையும் போல் அல்ல, மாறாக அது அமெரிக்காவில் தாராள மற்றும் முற்போக்கு சிந்தனைகளின் அடித்தளங்களுள் ஒன்றாகும். பரந்த கொலைகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு மனிதனை அதன் தலைவராக வைப்பது குறிப்பாக ஆத்திரமூட்டல் நடவடிக்கை ஆகும். சமூக ஆய்வுக்கான புதிய பள்ளி (New School) 1919ல் நிறுவியவர்களுள் வரலாற்றாசிரியர் சார்லஸ் பியர்ட் (Charles Beard), தத்துவவியலாளர் ஜோன் டுவே (John Dewey) மற்றும் பொருளியல் வல்லுநர்கள் மற்றும் சமூக விமர்சகர் தோர்ஸ்ரய்ன் (Thorstein Veblen) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அங்கு சொற்பொழிவாற்றியோருள் டபிள்யு. இ. பி டுபுவா (W.E.B. Dubois), ஜோன் மேனார்ட் கேய்ன்ஸ் (John Maynard Keynes), ஆரோன் கோப்லாண்ட் (Aaron Copland), பிராங்க் லோய்ட் றைட் (Frank Lloyd Wright) மற்றும் ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin) ஆகியோரும் அடங்குவர். அப்பள்ளி புகழ் பெற்ற நடிகர்களின் பட்டறையை உருவாக்கியது. அங்கு கடந்த இரு தலைமுறைகளின் முக்கிய நடிகர்களில் பெரும்பாலானோர் பயிற்சி எடுத்திருக்கின்றனர். 1930 களின் இறுதியிலும் இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுதும் புதிய பள்ளி நாசிசத்தால் அகதிகளான முக்கியமாக ஜேர்மன் மற்றும் யூத அகதிகளின் புகலிடமாக விளங்கியது. மார்க்சிச செல்வாக்கு கொண்ட சமூக மற்றும் கலாச்சார விமர்சனத்தின் பிராங்போர்ட் அணியினைச் சேர்ந்தோர் உட்பட பலருக்கு அது புகலிடமாக இருந்தது. ஜெருசலேமில் ஐய்ச்மேன் நூலின் ஆசிரியர் அரெண்ட் போல மாக்ஸ் ஹொக்கெய்மரும் அங்கு கற்பித்தார். புதிய பள்ளியின் காப்பாளர் குழு, வியட்னாமில் கெர்ரியின் நடவடிக்கைகள் அம்பலமானது தொடர்பாக, தங்களின் புதிய தலைவருக்கான "நிபந்தனை அற்ற ஆதரவை" உறுதி அளித்ததன் மூலம் பதிலளித்தனர். கெர்ரி பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்படு முன் காப்பாளர் குழுவிடம் தனது நிலைச்சான்றுகளை (record) மறைத்துள்ளார் என்ற உண்மை இருப்பினும் இந்த நோய் பீடித்த தகவல் வந்துள்ளது. இருப்பினும், புதிய பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இன்னமும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எழும்பவில்லை. அது வியட்னாம் யுத்தம், அமெரிக்காவின் ஒவ்வொரு கல்லூரி வளாகத்தையும் கலக்கிய மோதல்களின் பின்னர், கடந்து சென்ற தலைமுறையின் தாராளமயத்தில் ஏற்பட்ட நீண்ட சீரழிவினை சான்றளிக்கிறது. மிகவும் வெளிப்படையாக, கெர்ரிக்கு சரியான எதிர்ப்பு ஒன்றும் இல்லை, மற்றும் பொதுவாக தாராண்மை வட்டாரங்களில் இருந்து வியட்னாம் தாக்குதல்களை அம்பலப்படுத்துதற்கான கோரிக்கை எதிர்பார்க்கப்பட முடியா ஒன்றாகும். வியட்னாம் யுத்தமானது, ஜனநாயகக் கட்சியால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அது தொழிலாளர் அதிகாரத்துவம், தாராண்மை கல்விமான்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இனொழிப்பு நடவடிக்கைக்கு கம்யூனிச எதிர்ப்பு காரண காரியங்களை தழுவிய அறிவுஜீவி அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது. வியட்னாமில் கெர்ரியின் பாத்திரம் மீதான பத்திரிகை பாராட்டுமொழி மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது, இப்பொழுது விலக்கி வைப்பதாக ஆனது ஆளும் வட்டாரங்கள் இதன் மீதான பொதுக்கருத்தை சோதித்துப் பார்க்கின்றன. யுத்தக் குற்றவாளியை அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவார்ந்த மையம் ஒன்றின் தலைமையில் தக்கவைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றால், வியட்னாம் யுத்தம் மற்றும் ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையை ஒட்டுமொத்தமாக புதுப்பித்தலில் பலமான அடியைக் கொடுப்பர். அவர்கள் அப்படிப்போவதை அனுமதிக்கக்கூடாது. உலக சோசலிச வலைதளம் "போனது போகட்டும்" என்று கெஞ்சும் தத்துவத்தை நிராகரிக்கிறது. அமெரிக்காவில் வளர்ந்துள்ள முழு தலைமுறையும் வியட்னாம் பற்றி குறைவாக அறிந்துள்ள நிலையில், யுத்தம் பற்றி முறையாக புதுப்பித்தலுக்கான முயற்சியும் விஷயங்கள் பற்றிய எந்த புரிதல்களையும் தடைசெய்யும் முயற்சியும், அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் இலட்சக்கணக்கானோரை யுத்தத்திற்கு எதிராக நகர்த்தும். 1969ல் லெப்டினென்ட் கெர்ரி தான் பொங்கில் அவரது அணிக்கு தலைமை தாங்கியபொழுது, உலம் முழுவதும் அமெரிக்க அரசாங்கம் வெறுக்கப்படுவதற்கு தகுதியானதாக இருந்ததைப்பற்றி இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எத்தனைபேர் அறிவர்? அமெரிக்கா தீ எரி குண்டுகளுடனும், இலைகளை உதிரச் செய்யும் குண்டுகளுடனும், சித்திரவதை முகாம்களுடனும் ("மூலோபாய ஹாம்லெட்டுக்கள்"), படுகொலைகளுடனும், சித்திரவதைகளுடனும் ("புலிக் கூண்டுகள்"), "அதனைப் பாதுகாக்க கிராமத்தை அழித்தல்" எனும் காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளுடனும் இனம் காணப்பட்டது. பழைய குற்றங்களில் தான் உடந்தையாக இருந்ததை மூடி மறைக்கவும், புதிய குற்றங்களுக்க வழி அமைக்கவும் ஆகிய இரண்டுக்கும் ஆளும் தட்டு இவ் வரலாற்றை குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றது. ஏற்கனவே புஷ் நிர்வாகம் சீனாவை மிரட்டி இருக்கிறது, ஈராக்கில் குண்டு வீசி இருக்கிறது, கொலம்பியாவில் தலையீட்டுக்கு அடி எடுத்து வைத்துள்ளது, அணு ஆயுத ஏவுகணை எதிர்ப்பு உடன்பாட்டினை முறித்துள்ளது, மற்றும் வர்த்தகம், சுற்றுச்சூழல் மீதான தன்னிச்சையான நடவடிக்கைகளால் எங்கும் உள்ள தனது சொந்த கூட்டாளிகளை ஆத்திரமூட்டல் செய்து வருகின்றது. ஆயினும் இன்னும் வியட்னாம் அனுபவங்களில் எஞ்சியிருப்பது --நீண்ட அமெரிக்க யுத்தம் உள்நாட்டில் கட்டுப்படுத்தமுடியாத அரசியல் சமூக மோதல்களை உண்டு பண்ணும் என்ற ஆளும் வர்க்கத்தின் பயம் மட்டுமே. இதுதான் தான் பொங்கை தரைவிரிப்புக்குள் பெருக்கித்தள்ளி மறைக்க முயற்சிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் இராணுவத்தின் எதிராளிகள் தொழிலாள வர்க்கத்தை புதிய வியட்னாம்களுக்கு எதிராக அணிதிரட்டுவதில் நம்பிக்கை வைத்தாக வேண்டிய, அமெரிக்காவுக்குள் ஆழமாகி வரும் சமூக முரண்பாடுகள் இவைதான். |