World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The case of Robert Kerrey: how the US media covered up Vietnam War atrocity story

ரொபேர்ட் கெர்ரியின் பிரச்சினை: வியட்னாம் யுத்த அட்டூழிய செய்தியை அமெரிக்க பத்திரிகைச் சாதனங்கள் எவ்வாறு மூடி மறைத்தன

By Patrick Martin
18 May 2001

Back to screen version

ஏப்ரல் பின் பகுதியில் ஒருவாரகாலமாய், அமெரிக்க பத்திரிகைச் சாதனங்கள் முன்னாளைய செனட்டரும் நியூயோர்க் நகரில் புதிய பள்ளி பல்கலைக்கழகத்தின் (New School University) தற்போதைய தலைவரும் ஆன ரொபேர்ட் கெர்ரி, 32 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்னாம் யுத்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டது தொடர்பாக கணிசமான கவனத்தைச் செலுத்தின.

நியூயார்க் டைம்ஸ் இதழில் வந்த முகப்புக் கட்டுரையும் C H âv (CBS) தொலைக்காட்சியில் வந்த அறுபது நிமிடங்கள் 2 எனும் ஒரு மணி நேர அறிக்கையும், மெகொங் ஆற்று கழிமுகத்துவாரத்தில் உள்ள தான் பொங் கிராமத்தில் (Thanh Phong), 1969 பிப்ரவரி இரவில் 21 பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான ஆண்களைக் கொலை செய்த, ரொபேர்ட் கெர்ரி தலைமையிலான அமெரிக்க கடற்படை சீல்களின் நடவடிக்கைகளை சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் ஆய்வு செய்தன.

ஆனால், பெரிய மூன்று அமெரிக்க வார இதழ்களில் ஒன்றான நியூஸ்வீக் இதழில் 1998 லேயே இந்நிகழ்ச்சியைப் பற்றிய வரைவைக் கொண்டிருந்தது மற்றும் அதனை நசுக்க தீர்மானித்தது என்ற உண்மையைப் பற்றி அங்கு கண்டனம் எதுவுமில்லை மற்றும் அதுபற்றி சிறிதளவே கவனம் எடுக்கப்பட்டிருந்தது. அந்த இதழுக்கான அப்போதைய தேசிய பாதுகாப்புத் தொடர்பான செய்தித் தொடர்பாளர் கிரிகோரி விஸ்டிக்கா, தான் பொங் பற்றிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார் ---அவர் மற்றவர்களிடம் பேட்டி எடுத்துள்ளார், அவர்களுள் ஜெர்ஹார்ட் கிளான் எனும் முன்னாளைய சீலும் ஒருவர். அவர் இக்கொலைகளை, ரொபர்ட் கெர்ரியினால் ஆணையிடப்பட்டு வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலைகள் என விவரித்துள்ளார்.

நியூஸ்வீக் தொகுப்பாசிரியர் மார்க் வைட்டேக்கர் மற்றும் உதவி நிர்வாக ஆசிரியர் இவான் தோமஸ் ஆகியோர், 2000ல் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுத்தாக்கலுக்கு ரொபர்ட் கெர்ரி ஒரு வேட்பாளராக இருக்கமாட்டார் என்று அவர் 1998 டிசம்பரில் அறிவித்த பிறகு, இச்செய்தியினைப் புதைத்துவிட முடிவு செய்தோம் என்று கூறுகின்றனர்." ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான உயர் மட்ட பாதுகாப்பு கடைப்பிடிக்கப்படுவதில் நாம் அனைவரும் உடன்படுகின்றோம்" என வைட் டேக்கர் பத்திரிகை விசாரணைகளுக்கு பதிலளிக்கையில் குறிப்பிட்டார்." அந்தப் புள்ளியில், எனது சிந்தனையில் இந்த செய்தியின் பொருத்தம் கொஞ்சம் மாறிவிட்டது" என்றார்.

விஸ்டிக்காவுடன் சேர்ந்து கெர்ரியைப் பேட்டி எடுத்த தோமஸ், "நாங்கள் இந்தச் செய்தியை ஓடவிட முடியும்" என மேலும் குறிப்பிட்டார். "கெர்ரியின் உறுதிப்படுத்தல் சான்றுகளை நாங்கள் பெற்றிருந்தோம். இந்த ஆள் ஜனாதிபதிபதவிக்கு போட்டியிடாத பொழுது நாங்கள் அதனைச் செய்ய விரும்பவில்லை" என்றார். தாங்கள் விசாரணையை பகிரங்கப்படுத்தினால், ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து கெர்ரியை வெளியேற்றினோம் என குற்றம் சாட்டப்படலாம் என்று ஏனைய ஆசிரியர்களும்கூட குறிப்பிட்டதாக தோமஸ் கூறினார்.

அத்தகைய மன உறுத்தல் எதுவும் அவர்களின் முகத்தில் காணப்படாதது, பவ்லா ஜோன்ஸ் (Paula Jones case) வழக்கில் வெட்கத்தை விட்டொழித்த அரசியல் தலையீட்டை நடத்திய மற்றும் கிளின்டனின் ஜனாதிபதி பதவியை சீர்குலைக்க சதி செய்த அரசியல் இயக்கிகள் மற்றும் வலதுசாரி வழக்கறிஞர்களுடன் கைகோர்த்து வேலைசெய்த நியூஸ் வீக் இதழை கேள்விக்குள்ளாக்குகிறது. நியூஸ் வீக் இதழானது முன்னாள் வாஷிங்டன் போஸ்ட் நிருபர் மைக்கல் இசிக்கோஃபை வேலைக்கு அமர்த்தியது. இவர் பவ்லா ஜோன்ஸூக்கு நண்பராக இருந்தவர் மற்றும் ஜனாதிபதி கிளின்டனின் பாலியல் குற்றங்கள் என்று சொல்லப்படுவதை வெளியே கொண்டு வருவதற்கு தன்னை முழுநேரமாய் அர்ப்பணித்துக் கொண்டவர்.

பாலியல் பலாத்காரத்தை எதிர்த்துப் போராடும் சட்டரீதியான முயற்சி என வருணித்து, பவ்லா ஜோன்ஸ் வழக்கின் மீதான 1997 நியூஸ் வீக் அட்டைப்பட கட்டுரைக்கான முன்வெட்டு வேலையை அவர் செய்தார். அவர் பின்னர் கிளின்டனால் கத்லின் வில்லி (Kathleen Willey) "துழாவித் தேடல்" என்று கூறப்படுவதைப் பற்றி செய்தி அறிவித்தார். அவர், மொனிக்கா லெவின்ஸ்கிக்கும் லின்டா டிரிப் (Linda Tripp) புக்கும் இடையிலான சட்டத்திற்குப் புறம்பாகப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களை கேட்ட முதல் பத்திரிக்கையாளராக இருந்தார். இறுதியில் அவர் 1998 ஜனவரியில் லெவின்ஸ்கி ஊழல் வெடிப்பதற்கு வழிவகுத்த வாரங்களில், முன்னாள் நிக்சனின் கீழ்த்தர தந்திரக்காரர், லுசியன் கோல்ட்பெர்க் உடனும் டிரிப்புடனும் நெருக்கமாக வேலைசெய்தார்.

வெள்ளை மாளிகையில் கிளின்டனின் தனிப்பட்ட பாலியல் விவகாரங்களை அம்பலப்படுத்துவதற்கான இதழின் பித்துப்பிடித்த வெறிக்கும், அமெரிக்க செனட்டர் மற்றும் ஜனாதிபதி பதவிக்கு வரலாம் என நம்பக்கூடியவரைப் பாதிக்கும் பரந்த படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர மெளனம் சாதிப்பதற்கும் இடையில் உண்மையில் வேறுபாடு இருக்கின்றது.

அதிலும் மிகவும் முக்கியமானது, தான் பொங் படுகொலையைப் பற்றி நியூஸ்வீக் முதலில் அறிய வந்தது 1998ல் அல்ல மாறாக 1992ல் தான் என்பது காணக்கிடைக்கிறது. நியூஸ் வீக்கிற்கு கட்டுரை எழுதுகின்ற, வியட்னாம் காலப்பகுதியின் ஓய்வுபெற்ற கேர்னலும் குழுவாக இயங்கும் இராணுவக் கட்டுரையாளருமான டேவிட் ஹாக்வொர்த்தின் படி, அவர் 1992-ல் "முன்னாளைய சீலால்" தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறார் மற்றும் கிரிகோரி விஸ்டிக்கா கடந்த மாதம் தெரிவித்த அதே செய்தியை அந்த சீல் முக்கியமாக அவரிடம் தெரிவித்திருக்கிறார். ஹாக்வொர்த் மற்றும் நியூஸ் வீக் ஆசிரியர் மேனார்ட் பார்க்கர் அந்த முன்னாள் படை வீரரின் கூற்றைக்கேட்டுவிட்டு "வெளியேறி விட்டனர்."

ஹாக்வொர்த் 1992-ல் அதனைப் பிரசுரிக்காததற்கான இரு காரணங்களைத் தருகின்றார்: நிகழ்ச்சியில் பங்கேற்றோரால் அந்நிழ்ச்சியை நினைவு கூர்தலில் ஒன்றுடன் ஒன்று முரண்படல், மற்றும் பார்த்த சாட்சியாளர்கள் ஏன் அப்படுகொலையை நிறுத்த முயற்சிக்கவில்லை அல்லது பின்னர் அதுபற்றி மேலதிகாரிகளுக்கு ஏன் அறிவிக்கவில்லை மற்றும் பத்திரிக்கைச் சாதனங்களைத் தொடர்பு கொள்வதற்கு இவ்வளவு காலம் ஏன் காத்திருந்தனர் என்பதை விளக்குவதற்கு இயலாமை ஆகியனவாகும்.

1969ன் வியட்னாமில், பெரும்பாலான படைவீரர்கள் இதேபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் ஹாக்வொர்த், கெர்ரியைப் பாதுகாக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. "வியட்னாமில் கிட்டத்தட்ட எனது ஐந்து ஆண்டுகளை அடிப்படையாக வைத்து" என அவரது மே1 கட்டுரைப் பகுதியில் பின்வருமாறு எழுதுகின்றார்," அந்த வெட்கங்கெட்ட யுத்தத்தின்பொழுது, அத்தகைய ஆயிரக்கணக்கான கொடுமைகள் நடந்தன.... 1969ல் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவு 1 --புதிய புத்தகத்துக்கான பேட்டிகளை எடுக்கையில் நான் அண்மையில் கண்டுபிடித்தவாறு-- குறைந்தபட்சம் டஜன் கணக்கான அத்தகைய பேரச்சங்களைக் கொண்டிருந்தன.... வியட்னாமில் எங்கும் நமது இளைஞர்கள் போராடினார்கள், எங்கு பொதுமக்கள் இருந்தனரோ அங்கு படுகொலைகள் நடந்தன."

ஹாக்வொர்த்தின் படி, அவரது 9வது படைப்பிரிவு தான் பொங் படுகொலை இடம்பெற்ற, மெக்காங் கழிமுகப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. "1968 மற்றும் 1969ல் 20,000க்கும் அதிகமான வியட் காங்கினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இருப்பினும் இறந்துபோன 'பகைவர்கள்' மேல் 2000 கருவிகளுக்கும் குறைவாகவே காணப்பட்டன. எத்தனை உடல்கள் குடிமக்களைக் கொண்டிருந்ததாக 'உடல்கள் கணக்கெடுப்பு' நடத்தப்பட்டன?"

1992ல் ஜனநாயகக் கட்சி சார்பான ஜனாதிபதி மனுத்தாக்கலுக்கான அரை டஜன் வேட்பாளர்களில் கெர்ரியும் ஒருவராக இருந்தார். செய்தி அறைகளில் பிரதான செய்திச் சுற்றுக்களில் இடம்பிடித்த, வியட்னாம் சம்பந்தமாக இரண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் அம்பலப்படுத்தல்கள் இருந்தன. ஒன்று பில் கிளின்டன் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து விலக முயற்சித்தார் என்ற செய்தி. மற்றொன்று கெர்ரி யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார் என்ற செய்தி. கிளின்டன் "தேர்ந்தெடுக்கப்பட்டதை- மறைத்தவர்" செய்தி ஒரே நாளிரவு பத்திரிக்கைச் செய்தியாக ஆனது. பொதுமக்கள் தோளைக் குலுக்கி அலட்சியம் காட்டிய போதிலும், கிளின்டன் வேட்பு மனுத்தாக்கல் மற்றும் ஜனாதிபதி பதவி ஆகிய இரண்டிலும் வென்றார். கெர்ரியின் யுத்த குற்றச் செய்தியோ புதைக்கப்பட்டது--- மற்றும் அடுத்த ஒன்பது ஆண்டுகள் வரையிலும் அப்படியே விடப்பட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved