World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

மிtணீறீஹ்'s ஙிமீக்ஷீறீusநீஷீஸீவீ ணீஸீபீ லீவீs "பிஷீusமீ ஷீயீ திக்ஷீமீமீபீஷீனீs"ணீ ஸீமீஷ் பீவீனீமீஸீsவீஷீஸீ வீஸீ tலீமீ பீமீஸ்மீறீஷீஜீனீமீஸீt ஷீயீ tலீமீ க்ஷீவீரீலீt ஷ்வீஸீரீ வீஸீ ணிuக்ஷீஷீஜீமீ

இத்தாலியில் பெர்லுஸ்கோனியும் அவரது ''சுதந்திரத்திற்கான வீடும்'' ஐரோப்பாவில் வலதுசாரிகளின் அபிவிருத்தியில் ஒரு புதிய மட்டத்தினை எடுத்துக்காட்டுகின்றது

By Peter Schwarz
7 May 2001

Back to screen version

இத்தாலியில் சில்வியோ பெர்லுஸ்கோனியினது (Silvio Berlusconi) தேர்தல் கூட்டான ''சுதந்திரத்திற்கான வீடு'' இன் எழுச்சியானது ஐரோப்பாவில் வலதுசாரிகளின் அபிவிருத்தியில் ஒரு புதிய மட்டத்தினை எடுத்துக்காட்டுகின்றது. தற்போது சாத்தியமாக கூடியது போல் இருக்கும் -13 ம் திகதி தேர்தலில் இக்கூட்டு வெற்றிபெறுமானால் ஐரோப்பாவின் அரசியல் வரைபடத்தை இது முற்றாக மாற்றியமைக்கும்.

இச் ''சுதந்திரத்திற்கான வீடு'' இரண்டாம் யுத்தத்திற்கு பிந்திய காலகட்டத்தில் தமது முத்திரையை பதித்த பழைமைவாதக் கட்சிகளையும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிகளையும் விட வித்தியாசமானது.

பெர்லுஸ்கோனியின் கீழ் இத்தாலியால் உருவாகும் அரசானது ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கு மிகவும் அந்நியப்பட்டதாகவே இருக்கும்.

இத்தாலி முன்னணி

இத்தாலி முன்னணி (Forza Italia) இக்கூட்டிலிருக்கும் பலமான கட்சியாகும். இது கட்சி என்பதிலும் பார்க்க ஒரு வர்த்தக நிறுவனம் என்பதற்கே கூடுதலாக பொருந்தும். இது 1994இல் பெர்லுஸ்கோனியினால் நிறுவப்பட்டதுடன், அன்றிலிருந்து அவரின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிலும், ஆழுமையின் கீழும் இருக்கின்றது.

இது தனது இனவாதத்திற்கும், யூத எதிர்ப்புவாதத்திற்கும் பேர்பெற்ற இத்தாலிய உதைபந்தாட்ட கழகங்களின் மாதிரியாக உருவாக்கப்பட்டது. அதற்கு கிளைகளோ அல்லது அமைப்போ அல்லது வேலைத்திட்டமோ கிடையாது. இதற்கு பதிலாக ''இக் கழகங்களால்'' இத்தாலிய தேசியக் கொடியின் நிறத்தை பின்னணியில் கொண்ட கொடிகள், இலட்சணைகள், கழுத்துப்பட்டி போன்றவற்றில் அவர்களின் குருவின் படம் பொறிக்கப்பட்டு விற்கப்படுகின்றது. இக்கட்சிப் பெயரான Forza Italia கூட பெர்லுஸ்கோனிக்கு சொந்தமான உதைபந்தாட்டக் கழகமான AC Milan ஊடாக முக்கிய பங்கு வகிக்கும் உதைபந்தாட்ட பின்னணியில் இருந்தே வந்ததுடன், இது இத்தாலிய உதைபந்தாட்ட ரசிகர்களின் கோசமான ''இத்தாலி முன்னேறு'' என்பதிலிருந்து வந்ததாகும்.

இத்தாலி முன்னணி இல் 300.000 பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் இருப்பதுடன், இவர்கள் 100 ஜேர்மன் மார்க் பெறுமதியான பணத்தை சந்தாவாக செலுத்துகின்றனர். [இது மற்றைய கட்சிகளை விட அதிகமாகும்]. அங்கத்தவர்கள் அரசியல் தொடர்பாக எதுவும் கூறமுடியாது. அரசியல் கோசங்கள், விளம்பரப்படங்கள், அமைப்பின் நடவடிக்கைகள் என்பன பெர்லுஸ்கோனியின் விளம்பர நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்களால் தீர்மானிக்கப்படும்.

சுவிட்சலாந்தின் பத்திரிகையான Tagesanzeigers, இக்கட்சி தனது வேட்பாளர்களை எவ்வாறு தெரிவுசெய்கின்றது என்பது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது; "பெர்லுஸ்கோனி மாகாண, பிராந்திய தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கு பாரிய நிறுவனங்களில் இருந்து தலையை வேட்டையாடுபவர்களையும், ஆலோசகர்களையும் வாடகைக்கு அமர்த்தி தனது வேட்பாளர்களினது உற்பத்தி திறமையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளார். யார் சிறந்த விற்பனையாளரோ அவர் தெரிவு செய்யப்படுவார். அவர்களது முன்னைய அரசியல் நடவடிக்கைகள் அவசியமற்றவை. இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டவர் இத்தாலி முன்னணி இன் 10 ஒருங்கிணைப்பாளர்களின் முன்னர் நிறுத்தப்பட்டு அவரின் அரசிலுக்கு பொருத்தமானவரா என்பது உறுதிப்படுத்தப்படும். தமது கீழ்ப்படிவினை தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே இதற்கு உட்படுத்தப்படுவர். இப்பிரசன்னத்தின்போது கண்ணாடி அணிபவர்கள் அல்லது தாடி உள்ளவர்கள் பிரதிகூலமுள்ளவர்களாவர். இதனை தலைவர் விரும்புவதில்லை''.

அது மேலும் ''ஒருவர் இதற்கு பொருத்தமானவரானதுடன், ரோம் இலுள்ள தலைமையகத்தில் சந்தை மூலோபாயங்களினதும், அபிப்பிராய கணிப்பீடுகளினதும் படி தனது வேலையை தொடங்குவார். கருத்துக்கணிப்பீடுகளினது அடிப்படையில் தேர்தல் பிரச்சார தலையங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன் வேட்பாளர்களுக்கு பொருத்தமான தோற்றமும் வழங்கப்படும். இது பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடும். எவர் கூடுதலான கட்சி வெளியீடுகளை கூடுதலாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று கூடுதலான வாக்குகளை பெறுகின்றார்களோ அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். கடந்த பிராந்திய தேர்தலின் பின்னர் கூட்டுக்கட்சிகளுக்கு பேர்லினுக்கு அல்லது மட்ரிட்டுக்கான கல்வி சுற்றுலாக்கள் வழங்கப்பட்டது அல்லது உதைபந்தாட்டக் கழகமான AC Milan இற்கான நுளைவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டது. மிகச்சிறந்தவர்கள் மிலான் இலுள்ள [Milan] பெர்லுஸ்கோனியின் மாளிகையில் ஒரு நாள் தங்கியிருக்கலாம்'' என குறிப்பிட்டுள்ளது.

பெர்லுஸ்கோனி மீதான தனிமனித வழிபாடு சர்வாதிகார ஆட்சிகளை நினைவுறுத்துகின்றது. அவர் தான் ஒரு தனிப்பட்ட மனிதனாக கருதிக்கொள்கின்றார். கடந்த கோடைகாலத்தில் ''சர்வதேச மட்டத்தில் என்னுடன் ஒப்பிடக்கூடிய ஒருவரும் இல்லை எனவும், எனது பெருமை ஐயுறவிற்கு அப்பாற்பட்டது, எனது மனிதத்தன்மை, வரலாறு தொடர்பாக மற்றவர்கள் கனவு மட்டுமே காணமுடியும்'' என குறிப்பிட்டார்.

உள்ளூர் வேட்பாளர்களுக்கான பிரச்சாராமானாலும் கூட, தற்போதைய தேர்தல் பிரசாரத்தின் போது சகல சுவரொட்டிகளில் அனைத்திலும் பெலுஸ்கோனியின் படங்களே அச்சிடப்பட்டிருந்தது. இத்தாலி முன்னணி இத்தேர்தல் பிரச்சாரத்தில் பெர்லுஸ்கோனியின் சுயசரிதையை பரப்புவது மத்தியாக உள்ளது. இதற்காக ஆரம்பத்தில் 12 மில்லியன் பிரதி அச்சிடப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக அனுப்பப்பட்டது.

128 பக்கங்கள் அடங்கிய இப்பிரசுரத்தில் 126 தடவை தலைவரின் படத்தை காணக்கூடியதாக உள்ளது. ''ஒரு இத்தாலிய வரலாறு'' என்ற தலையங்கத்துடன் வெளிவந்துள்ள இப்பிரசுரம் ஒரு அமைதியான, சுறுசுறுப்பான சில்வியோ பெர்லுஸ்கோனி எவ்வாறு வெற்றிகரமான முதலாளியாக மாறினார் என, அமெரிக்க கனவின் இத்தாலி மாதிரியான கோப்பை கழுவுபவர் கோடீஸ்வரராக எழுச்சியடைவது எடுத்துக்காட்டப்படுகின்றது. இதில் பெர்லுஸ்கோனி, ''ஒரு வங்கி உத்தியோகத்தரின் மகனான நான் கடுமையாக மீண்டும் மீண்டும் வேலைசெய்ய வேண்டியிருந்ததாகவும், எனது தாயார் இது உனக்கு கடுமையானது, இலகுவானதல்ல நீ கடுமையான தியாகங்களாலும் கஸ்டத்தாலும் வெற்றிகொள்ளவேண்டும் என கூறியபோது நான் நீங்கள் கூறுவது எல்லாம் உண்மை, இரத்தமும் வேர்வையும் கண்ணீரும் இல்லாமல் ஒன்றும் இல்லை என கூறியதாக'' குறிப்பிடுகின்றார்.

பெர்லுஸ்கோனியின் ''சுதந்திரம்''

இப்படியான நிலையற்ற, திறமையான விளம்பரங்களும் வெறும் வார்த்தை ஜாலங்களும் இத்தாலியில் சமூகநல அரசினதும், சமூகநல திட்டங்களின் பாரம்பரியத்தினையும் உடனடியாக அழிக்கும் செய்தியை கொண்டுவருகின்றது.

பெலுஸ்கோனியின் கருத்துப்படி சந்தையின் கட்டுப்பாடற்ற ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவோரும், தமது வியாபாரங்களை சற்று விமர்சனத்திற்கு உள்ளாக்குவோரும் ''கம்யூனிஸ்டாவர்''. அவர் தன்னை சிவப்பு நீதிபதிகளிடமிருந்தும் கம்யூனிச நிர்வாகத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக்கொண்ட ஒரு சுதந்திரமான முதலாளிகளின் வெற்றியாளராக காட்டிக்கொள்கின்றார். தனது எதிராளிகளின் மேல் அவர் சுமத்தும் வார்த்தை ஜாலங்களினதும், எல்லையற்ற குற்றச்சாட்டுக்களும், பொய்களும், ஆத்திரமூட்டல்களும் கடந்தகால தேர்தல்களில் பழக்கப்பட்டதை காட்டுகின்றது. இதனை அவர் தனது அரசியல் எதிராளிகளுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. ஜனாதிபதியும், பாராளுமன்றமும், நீதித்துறையும் அவரின் தாக்குதலின் முன் பாதுகாப்பற்றது.

தனது தேர்தல் கூட்டின் பெயரிலுள்ள ''சுதந்திரம்'' என்பதை அவர் வழமைக்கு மாறாக தனிநபரின் நலன்களுக்கு தடையாக உள்ளவை அனைத்தும் சுதந்திரமற்றது என அர்த்தப்படுத்தியுள்ளார்.

பல வருடங்களாக பெர்லுஸ்கோனி தனது வியாபார நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்துடன் முரண்பட்டுக்கொண்டுள்ளார். பெர்லுஸ்கோனிக்கு எதிரான கடந்த, தற்போதைய பல வழக்குகள் தொடர்பான விபரணத்தை Die Zeit என்ற பத்திரிகை ஏப்பிரல் 26ம் திகதி பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ''பொய் சாட்சியம் வழங்கியதற்காக பெர்லுஸ்கோனி குற்றவாளியாவார். அவர் வரி அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியுள்ளார், இலஞ்சம் வழங்கியுள்ளதுடன் வருமானவரி செலுத்தாதுள்ளார். ஆனால் அவர் இவற்றிலிருந்து தப்பிவந்துள்ளார்''.

1994 இல் முதல்தடவையாக பெர்லுஸ்கோனி பதவிக்கு வந்தபோது குற்றச்செயல்களுக்கு மன்னிப்பு வழங்க முயன்றார். இத்திட்டமானது பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்தும் அவரது அரசாங்கத்தின் குறைந்த வாழ்க்கைக் காலத்தினாலும் நடைமுறைப்படுத்தமுடியாது போனது. இப்போது அவர் நீதித்துறையின் சுயாதீனத்தை இல்லாதொழிக்க முனைகின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் கவனம் ''வழங்கப்பட்டுள்ள சட்டவரையறைக்குள் இயங்கும் வரை'' என்பதன் கீழ் தனியார் சொத்துரிமை மீதான சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவதன் பக்கம் திரும்பியுள்ளது. அவர் இதனை ''சோவியத்தை உள்ளடக்கியுள்ளது'' எனக் கூறி, அதனை இல்லாதொழிக்க விரும்புகின்றார். வருடாந்தம் பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் எந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்கலாம் என நீதித்துறைக்கு ஒரு அட்டவணை வழங்க விரும்புகின்றார். இதன் கீழ் ஊழல் குற்றங்களும், வியாபார மோசடிகளும் அவ் அட்டவணையின் கீழ் வரிசையிலேயே இருக்கும் என்பது தெளிவாகும்.

பெர்லுஸ்கோனி தேர்தல் பிரசாரத்தின் போது திட்டவட்டமான தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையும் வழங்கவில்லை. அண்மைய கருத்துக்கணிப்பின் படி அவரின் கோசம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்பதாகும்.

தேர்தல் முன்னோக்கின் முக்கியமாக உள்ள ஒரு விடயம் வரி குறைப்பாகும். ''எல்லோருக்கும் குறைந்த வரி'' என்பது நாடுமுழுவதும் பரப்பப்பட்டுள்ள கோசமாகும். முக்கியமாக முதலாளிகளுக்கான வரி பாரியளவில் குறைக்கப்படவுள்ளதுடன், பரம்பரை சொத்துவரி இல்லாது போகும் என்கின்றார். இதேவேளை 22.000 ஜேர்மன் மார்க்குக்கு சமமான இத்தாலி வருமானத்தை பெறுவோரிற்கான கழிவுகள் இல்லாது செய்யப்படும் எனவும், ஆகக்குறைந்த ஓய்வு ஊதியம் 1000 மார்க்குக்கு சமமானதாக இருக்கும் என்கின்றார். இதனை எவ்வாறு செய்யலாம் என்பதை அவர் இதுவரை கூறவில்லை.

பெர்லுஸ்கோனியின் அதிகாரமும், அதீத ஆசையுள்ள தன்னம்பிக்கையும், தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களின் கலப்பும், அதிகாரத்தின் மீதான பாரம்பரிய பிரிவின் மீதானதும் மற்றும் நீதித்துறை மீதான அக்கறையின்மையும் ஜனநாயகத்தின் பாரம்பரிய வடிவங்கள் மீதான புதிய தாக்குதலை ஐயுறவு ஏதுமில்லாது எடுத்துக்காட்டுகின்றது. இன்னும் பாரிய ஆபத்து என்னவெனில் பெர்லுஸ்கோனி ஜனாதிபதியானால் அவரின் கைகளில் குவியப்போகும் தொலைத்தொடர்பு சாதனங்களினதும், பொருளாதாரத்தினதும் பலமாகும்.

பெர்லுஸ்கோனி இத்தாலியினது 3 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களை கையில் வைத்திருக்கையில், ஏனைய 3 நிறுவனங்கள் மறைமுகமாக அரசாங்கத்தின் கைகளில் உள்ளன. பெர்லுஸ்கோனி தேர்தலில் வெற்றி பெற்றால் மொத்தமாக 7 நிறுவனங்களில் 6 அவரது கைகளில் இருக்கும். இது 90% ஆன பார்வையாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அவரது கட்டுப்பட்டின் கீழ் கொண்டிருக்கும்.

Elemond, Einaudi, Sperling & Kupfer, Mondadori என்பன Fininvest என்ற பெர்லுஸ்கோனியின் கட்டுப்பாட்டிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கீழ் உள்ள பதிப்பகங்களாகும். இதைவிட Mondadori ஊடாக பெர்லுஸ்கோனி முக்கிய அரசியல் இதழான Panorama வை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார். Fininvest இன் பெறுமதி 55-60 மில்லியாடன் ஜேர்மன் மார்க் என மதிப்பிடப்படுகின்றது. இடைவிட ஒரு தொகை வியாபார நிறுவனங்களையும் நிதி நிறுவனங்களையும், படத்தயாரிப்பு நிறுவனங்களையும், உதைபந்தாட்ட கழகமான AC Milan, ஹொக்கி, றக்பி, கைப்பந்தாட்ட கழகங்களையும், Internet provider Jumpy ஐயும் தனது கைகளில் வைத்திருக்கின்றார்.

பெலுஸ்கோனி இவற்றை ஈவிரக்கமின்றி பாவிப்பார் என்பதை தேர்தல் பிரச்சாரம் தெளிவாக்கியது.

தொடரும்..............


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved