WSWS:
செய்திகள் & ஆய்வுகள் :
ஐரோப்பா
Arms decommissioning central to election in Northern Ireland
ஆயுதங்களைக் களைவது வட அயர்லாந்து தேர்தலின்
நடு மையமாகும்
By Mike Ingram
12 May 2001
Back to screen version
ஜூன் 7ம் திகதிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி
அமோக வெற்றியீட்டுவது பற்றிய பேச்சுக்களோடு, வட அயர்லாந்தில்
தேர்தல் முடிவுகள் நிச்சயம் இல்லை என்ற உண்மையை நழுவ விட்டுவிட
முடியாது. அயர்லாந்தின் எல்லைக்கு இரு புறத்திலும் பாரதூரமான
விளைவுகள் இருந்து கொண்டுள்ளன.
வெஸ்ட் மினிஸ்டருக்கான (Westminster)
தேர்தல்கள் தொழிற் கட்சி ஆட்சியில்
இருந்த நான்கு ஆண்டுகளுக்கான ஒரு கருத்துக் கணிப்பாக இருக்குமானால்,
வட அயர்லாந்தில் அது மூன்று வருட கால வட அயர்லாந்து சமாதான
உடன்படிக்கை மீதான ஒரு கருத்துக் கணிப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.
கடந்த ஆண்டில் வட அயர்லாந்து பிரதிநிதிகள்
சபையை உருவாக்கியதன் பின்னர் இடம் பெற்ற பெருமளவிலான
கதையளப்புக்களுக்கும் "ரொட்டிக்கும் வெண்ணெய்க்கட்டிக்குமான
பிரச்சினைகளை" "சாதாரண" அரசியல் வாழ்க்கைக்கு
கொணர்ந்ததன் பின்னரும் தேர்தல்கள் 1998ம் ஆண்டின் புனித வெள்ளிக்கிழமை
உடன்படிக்கையில் இருந்து தீர்க்கப்படாமல் விடுபட்ட சகல பிரச்சினைகளையும்
முன்னரங்குக்கு கொணர்ந்துள்ளது. ஐரிஸ் குடியரசு இராணுவத்தின் (IRA)
ஆயுதங்களைக் களைவது இதில் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம்
பிரதிநிதிதிகள் சபை கூட்டப்படுவதற்கு இடமளிக்கும் விதத்தில் கடந்த
ஆண்டு வைகாசியில் தற்காலிகமாகத் தள்ளிப் போடப்பட்டது. அல்ஸ்டர்
யூனியனிஸ்ட் கட்சித் (UUP)
தலைவரும் முதலமைச்சருமான டேவிட் ட்ரிம்பிள் (David
Trimble) இராஜினாமாச் செய்யப் போவதாக
மிரட்டியமை முழு உடன்படிக்கையையும் குழிபறிந்து போக அச்சுறுத்தியது.
இதனால் ஐ.ஆர்.ஏ. (IRA)
இவ்வாண்டு ஜூன் 1ம் திகதிக்குப் பின்பு அதனது ஆயதங்களை
"பயன்பாட்டுக்கு அப்பால்" விட்டுவிட இணங்கியது. டேவிட்
ட்ரிம்பிள், ஜூன் 7ம் திகதி வாக்களிப்புக்கு முன்பாக ஆயுத பிரச்சினையை
கோரியபடி இராஜினாமா சீட்டை இழுத்து விளையாடினார். யூனியனிஸ்ட்
கட்சியின் உடன்படிக்கைக்கு ஆதரவான கன்னையினர் வெஸ்ட்மினிஸ்டர்
தேர்தலில் வெற்றி பெறுவதை ஊர்ஜிதம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிலேயே
அப்படிச் செய்துள்ளார்.
இந்த வாரத்தின் முற்பகுதியில் ட்ரிம்பிள் ஐ.ஆர்.ஏ
ஆயுதத்தை கைவிடும் தீர்மானத்தில் முன்னேற்றம் காணத் தவறுமிடத்து
ஜூன் 1ம் திகதி இராஜினாமாச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
அவர் வார்த்தைகளை தெரிந்து எடுத்துக் கொண்டுள்ள முறை முக்கியமானது.
ஏனெனில் எல்லா மனிதருக்கும் எல்லா விடயமும் "முன்னேற்றமானதாக"
விளங்க முடியும்.
பிரித்தானியாவிலும் அயர்லாந்திலும் உள்ள பத்திரிகைகளில்
பலவும் ட்ரிம்பிளின் நடவடிக்கை தொடர்பாக வேறுபட்ட முறையில்
அவரைப் பாராட்டின. அவர் ஒரு கெட்ட நிலைமையில் இருந்து நல்லதைச்
செய்கின்றார் என்பதை அங்கீகரிக்கின்றனர். கடந்த பெப்பிரவரி
போலல்லாது இம்முறை ட்ரிம்பிள் தமது சொந்த இராஜினாமாவை
மட்டுமே உத்தரவாதம் செய்துள்ளார். வட அயர்லாந்து
பிரதிநிதிகள் சபையில் உள்ள தமது சகாக்களின் இராஜினாமா பற்றி
அவர் உத்தரவாதம் செய்யவில்லை என ஐரிஸ் டைம்ஸ் (Irish
Times) சுட்டிக் காட்டியுள்ளது. காலம்
தள்ளிப்போடப்பட்டு ட்ரிம்பிளின் இராஜினாமா இடம் பெற்றாலும்
கூட அவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட இன்னமும் முடியும்.
"இதன் பயன் பிரித்தானிய, ஐரிஸ் அரசாங்கங்களுக்கு
குறைந்த பட்சம் ஒரு ஆறு வாரகால உயிர்காக்கும் கயிற்றை
வீசுவதற்காகும். -இக்காலப்பகுதி ஒரு புதிய முதலமைச்சரை தெரிவு
செய்ய பிரதிநிதிகள் சபை விதிகளால் வழங்கப்பட்டது-. இக்காலப்
பகுதியினுள் இராணுவத்தைக் கலைத்தல், படைவிலக்கல், பொலிசினதும்
பெல்பாஸ்ட் உடன்படிக்கையினதும் நிறுவனங்களை இயங்கச் செய்தல்
போன்ற தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்தல்
என்பன அடங்கும்" என தி டைம்ஸ் (The
Times) பத்திரிகை குறிப்பிட்டது.
ட்ரிம்பிள் பெரிதும் அக்கறை காட்டுவது வெஸ்ட்மினிஸ்டரில்
அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி (UUP)
கொண்டுள்ள 18 ஆசனங்களில 9 ஆசனங்களைத் தக்க வைத்துக்
கொள்வதாகும். இதற்குக் குறைவான எதுவும் அல்ஸ்டர் யூனியனிஸ்ட்
கட்சியின் உடன்படிக்கைக்கு சார்பான நிலைப்பாட்டை நிராகரிப்பதாகவும்
உடன்படிக்கைக்கு எதிரான ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் (DUP)
கரங்களைப் பலப்படுத்துவதாகவும் நோக்கப்படும்.
தி ஐரிஸ் இன்டிபென்டன்ட் (The
Irish Indepenent) பத்திரிகை இராஜினாமா
நடவடிக்கை "தாம் எதைச் செய்யக் கடமைப்பட்டவர்கள்
என்பதை நன்கு அறிந்து கொண்டுள்ள குடியரசுவாதிகளுக்கு (Republicans)
சம்பந்தம் இல்லாதது. மாறாக இது யூனியன் அல்ஸ்டர் கட்சியில்
(UUP)
உள்ள ஓட்டைகளுக்கு ஒட்டுப்போடும் திசையில் நெறிப்படுத்தப்பட்டுள்ளதோடு
அந்த அடிப்படையில் வாசிக்கப்படவும் வேண்டும். அத்தோடு
உடன்படிக்கைக்கு எதிரான யூனியனிஸ்டுகளுடன் சமரசம் செய்யவும்
ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் சவால்களை நிறுத்தவும் செய்யும்"
ஒன்றாகும் என்றது.
ஜனநாயக அல்ஸ்டர் கட்சி (DUP)
இத்தேர்தலை சமாதான போக்கிலான ஒரு கருத்துக் கணிப்பாகக்
கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளது. கட்சித் தலைவர் இயன் பெயிஸ்லி
(Ian Paisley) வாக்காளர்கள்
வட அயர்லாந்து "குடியரசு நிகழ்ச்சி நிரல் பாதையில் செல்லுமா
அல்லது அதை நிறுத்தி எமது நிலைப்பாட்டை மீள பேச்சுவார்த்தை
செய்வதற்கான ஒரு பாதையைத் தேடுமா என்ற தெரிவு பிரச்சினைக்கு
முகம் கொடுக்கும்" என்றுள்ளார். பெஸ்லி மேலும் கூறியதாவது:
"சாதாரண மக்கள் வாக்களிக்கச் செல்வது அவரை (ட்ரிம்பிளை)
தலைமைக் கொமாண்டராகக் கொண்ட கீழ் படிவு போக்குக்கு
சாதகமாக வாக்களிக்கப் போகின்றார்களா என்ற ஒரு கடுமையான
உண்மைக்கு வருகின்றோம்." என்றார்
ட்ரிம்பிள்ளின் மூலோபாயம் எந்த வகையிலும்
தொழிற்படும் சாத்தியம் இல்லை. ஆதலால் அல்ஸ்டர் யூனியனிஸ்ட்
கட்சியின் (UUP)
இழப்புக்கள் பற்றிய பேச்சுக்களே பரந்து பட்டுள்ளது.
இன்டிபென்டன்ட் பத்திரிகை கூறியதாவது: "ட்ரிம்பிள் (கொன்சர்வேட்டிவ்
கட்சியின் தலைவர்) வில்லியம் ஹேக்குடன் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டுள்ளார்.
அதில் தேர்தலில் படுதோல்வி அல்லாத எதுவும் ஒரு வெற்றியாகக்
கணிக்கப்படும். அவரைச் சூழ இருந்து வந்த சகலரும் பல
மாதங்களாக இளகிப் போகுவதைப் பற்றி முன் அனுமானித்து வந்துள்ளனர்.
அதற்குக் குறைவான எதுவும் ஒரு வகையான வெற்றி எனக் கணித்தனர்.
இருப்பினும் யூ.யூ.பீ. எந்த ஒரு கட்சியைக் காட்டிலும் அதிக ஆசனங்களை
இழக்கும் சாத்தியம் உள்ளது. எஸ்.டீ.எல்.பீ.யும் (SDLP)
பீ.யூ.பி.யும் சின்பென்னும் (Sinn Fein) தமது
ஆசனங்களை பெரிதும் தக்க வைக்கும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளது."
என்றது.
இப்பத்திரிகை முடிவுரையாகக் கூறுவதாவது: "ட்ரிம்பிளுக்கான
நல்லதொரு நாளில் நான்கு ஆசனங்கள் தோல்வி கண்டு, இரண்டு
ஆசனங்களில் வெற்றி கண்டாலும் அது அதை ஒரு சற்று நீட்டும்"
என்றுள்ளது. அவர்களைப் பொறுத்தமட்டில் சின்பென் ட்ரிம்பிளுக்கு
உதவ எதுவும் செய்யவில்லை. சின்பென் இயக்கத் தலைவர் ஜெரி
அடம்ஸ் மேற்கு பெல்பாஸ்ட் எம்.பி.க்கான பிரச்சாரத்தில் றிபப்பிளிக்கன்
நலன்களை ஸ்திரமாகக் காட்டிக் கொண்டுள்ளார். "தேர்தல்களின்
பின்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. வாக்கு கணக்கெடுப்பு
முடிந்ததும் அவர்கள் உடனடியாக அங்கு இருக்கப் போகிறார்கள்.
ஆதலால் இறுக்கமாக பேரம் பேசுபவர்கள் யார் என்பதை நீங்களே
கேட்டுக் கொள்ளுங்கள்? பெரிதும் கற்பனையான மக்கள் யார்?
உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த சகல கட்சிகளுடனும்
தொழிற்பட்டுள்ளது யார்?
"சின்பின் தொழிற்பட்டுள்ளது. நாம் மக்களை
பேரம் பேசலிலும் குடியரசுக் கட்சி பேரம் பேசுவோரின் கரங்களைப்
பலப்படுத்துவதிலும் பொலிஸ் படையை அமைப்பது, சமத்துவ நிகழ்ச்சி
நிரல், இராணுவத்தைக் கலைத்தல் சுயநிர்ணய உரிமைக்கான தெளிவான
சமிக்கையை விடுப்பதிலும் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்"
எனக் கோருகின்றோம் என்றார்.
அடம்ஸ், ட்ரிம்பிளைப் பற்றிக் கூறுகையில் "இராஜினாமாச்
செய்யும் பயமுறுத்தல் மூலம் அவர் அடைய முயற்சிப்பதையிட்டு
திகைப்படைந்ததாக" கூறினார். இப்போது அல்ஸ்டர் யூனியனிஸ்ட்
கட்சி தலைவரை எதிர்த்து நின்று அவருக்கு "இது எப்படி நடக்கிறதோ
அந்தளவுக்கு நல்லது" எனச் சொல்வது பிரித்தானிய, ஐரிஸ்
அரசாங்கங்களுக்கும் சிறப்பாக பிரதமர் ரொனி பிளேயருக்கும்
உரியதாகும்." யூனியனிஸ்டுகளும் குடியரசுவாதிகளும் தமது சொந்த
ஆதரவாளர்கள் கும்பலை திரட்ட முயற்சிக்கையில் அது இரு தரப்பையும்
மேலும் அப்பால் தள்ளச் செய்யும். புனித வெற்றி உடன்படிக்கையால்
உருவாக்கப்பட்ட ஏற்கனவே உடைந்து போன அரசியல் அமைப்புக்களின்
ஈடாட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
|