World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Indian "left" forms an unholy alliance with fascistic Shiv Sena

இந்திய "இடதுகள்" பாசிச சிவசேனாவுடன் கடைகெட்ட கூட்டை அமைக்கின்றனர்

By Deepal Jayasekera
11 May 2001

Back to screen version

ஏப்ரல் 25 அன்று இந்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைநகர் பம்பாயை ஸ்தம்பிக்க வைத்த ஒருநாள் பொது வேலை நிறுத்தம் அல்லது பந்த் தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த அளவில் முக்கிய அரசியல் பிரச்சினைகளைக் கிளப்பி உள்ளது.

வேலை நிறுத்தமானது நிச்சயமாக, வேலை இழப்புக்கள், அதிகரித்துவரும் வேலையின்மை, வறுமை மற்றும் ஏழை பணக்காரர்களுக்கு இடையில் வளர்ந்து வரும் இடைவெளி மீதான தொழிலாளர்கள் மற்றும் ஏனையோரின் பரந்துபட்ட கோபத்தினை எதிரொலித்தது. தொழிற்சங்கங்களின் கருத்துப்படி இரண்டு கோடி மக்கள் பங்கேற்ற இந்த எதிர்ப்பு பெரும்பாலான போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்ததுடன் பம்பேயிலும் மற்றும் மகாராஷ்டிரா எங்கிலும் பல அலுவலகங்களையும் தொழிற்சாலைகளையும் மூடவைத்தது. இந்திய வணிகர் சங்க செயலாளர் பி.என்.மோக்ரேயின்படி, "பம்பாயில் மட்டும் 400 கோடி ரூபாய்கள் இழப்பு இருக்கக்கூடும்."

அதேவேளை எவ்வாறாயினும், வேலை நிறுத்தமானது குறிப்பாக, "பூகோளமயமாக்கலை" எதிர்த்துப்போராடல் எனும் பெயரில் அதிவலதுசாரி அமைப்புக்கள் மற்றும் இடது என்று அழைக்கப்படுவோருக்கிடையில் சர்வதேச ரீதியாக படுமோசமான கூட்டு அபிவிருத்தி அடைந்துள்ளதன் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. பம்பாயில் பந்த் ஏற்பாடு செய்தல் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அழைக்கப்படும் சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ களை மட்டும் தழுவவில்லை -மகராஷ்டிரத்தை தளமாகக் கொண்ட மராத்திய இனவாதம் மற்றும் நச்சுத் தன்மை மிக்க இந்து வகுப்பு வாத சேர்க்கையான பாசிச சக்தியான சிவ சேனாவையும் தழுவிக் கொண்டது.

ஒரு மாதத்திற்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணியால் கொண்டுவரப்பட்ட தேசிய வரவு-செலவு திட்டத்தை தொடர்ந்து, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் அவற்றின் உறுப்பாக இணைந்த தொழிற்சங்கங்கள் பிப்ரவரி இறுதியில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விட்டன. எதிர்ப்பானது அரசுடமை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தல் அதேபோல் ஆயிரம் தொழிலாளர்கள் வரை வேலை பார்க்கும் கம்பனிகளில் அரசாங்க அனுமதி இல்லாமல் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க அனுமதிக்கும் தொழிலாளர் சட்டங்களை முன்மொழிந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பந்த் நாளன்று இந்த நடவடிக்கைகள் பாராளுமன்றத்தின் கீழ் அவையில் (Lower house) நிறைவேற்றப்பட்டன.

பெரு வர்த்தகர்கள், தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குதலை எளிதாக்குவதை அனுமதிக்குமாறு தொழிற்சட்டங்கள் திருத்தப்படவேண்டுமென்று நீண்டகாலமாக கோரி வருகிறார்கள். அண்மைய மாற்றத்திற்குப் பின்னர், இந்தியாவில் அனைத்துக் கம்பனிகளிலும் மதிப்பிடப்பட்ட 80% கம்பனிகளில் தொழிலாளர்களை அரசாங்கத்தின் முன் அனுமதியை பெறாமலே நீக்க முடியும். இந்திய தொழில்துறை கூட்டமைப்பில் இருக்கும் ஜூபின் கப்ராஜ் (Zubin Kabraji), தொழிற்சட்டங்கள் திருத்தப்படவேண்டும் ஆனால் தொழிற் சங்கங்களுடன் பேசுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். "தொழிற் சட்டங்களில் மாற்றங்கள் செய்வதிலிருந்து நீங்கள் ஓடிவிடமுடியாது, நகரை மூடுவதைக் காட்டிலும் பேரம் பேசுவதற்கு சிறந்த வழிகள் உள்ளன" என்றார்.

உலக வர்த்தக அமைப்புக்கு (WTO) இந்தியாவின் உறுதிமொழியின் பங்காக இறக்குமதிகள் அளவுரீதியான கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டங்களை அரசாங்கம் நிறுத்துமாறும் கூட தொழிற்சங்கங்கள் கோருகின்றன. இந்த தேசியவாத வேண்டுகோள் --சர்வதேசப் போட்டியிலிருந்து பலவீனமான இந்திய மூலதனப் பகுதியை பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட பொருளாதார தேசிய வாதம் மற்றும் இந்திய தேசத்தை பாதுகாத்தல் என்பது-- சி.பி.ஐ(எம்) மற்றும் சி.பி.ஐ தீவிர வலது சாரிகளுடன் இருப்பதற்கான தளத்தைக் கொண்டிருக்கிறது. இந்த "கம்யூனிஸ்ட் " கட்சிகளில் ஒன்றும் கூட சர்வதேச சோசலிச கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. தசாப்த காலங்களாக அவை "தனிநாட்டில் சோசலிசம்" எனும் தேசியவாதக் கொள்கையை ஆதரித்தன.

எதிர்ப்பு நாள் நெருங்கியபொழுது சிவசேனா, தான் வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. இக்கட்சியானது, மற்ற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்கள் மற்றும் உள்ளூர் மராத்தி பேசுவோருக்கு வேலை என்ற கோரிக்கையின் அடிப்படையிலும் 1960 களில் நிறுவப்பட்டது. அது அதனது முஸ்லிம் விரோத வாய்வீச்சுக்கு இழிபுகழ் பெற்றது மற்றும் 1990 களில் பம்பாயில் முஸ்லிம் எதிர்ப்பு இன ஒழிப்புகளை நடத்தியதில் சம்மந்தப்பட்டிருந்தது. அதனது குண்டர் படைகள் முஸ்லிம்கள் மீது மட்டும் சரீர ரீதியான தாக்குதல்களை நடத்தவில்லை, சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ உறுப்பினர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

கடந்தகால வேறுபாடுகளையும் மோதுதல்களையும் விரைவாய் ஒரு பக்கமாய் ஒதுக்கி வைத்துவிட்டு, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்கள் சிவசேனாவின் தலையீட்டை வரவேற்றது மட்டுமல்லாமல், அதன் வருகை தாங்கள் நடத்தபோகும் எதிர்ப்பினை "முழுவெற்றி" உடையதாக்கும் என்றன, ஆனால் வேலை நிறுத்தத்திற்கான தலைமையை இனவாத கட்சியிடம் சக்திமிக்க வகையில் ஒப்படைத்தன.

சிவசேனை குண்டர்கள் வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்காற்றினர். கட்சியின் பொது செயலாளர் சுபாஷ் தேசாய் பத்திரிகைகளிடம் கூறினார்: "அண்மைக் காலத்தில் அரசாங்கம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தனியார்மயமாக்கல் மற்றும் பூகோளமயமாக்கல் தவறாக வடிவமைக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை." சர்வதேச வர்த்தகம் மிகவும் தாராளமயமாய் இருந்தன என்று பிரகடணம் செய்து, இந்தியாவில் நாடு கடந்த கம்பனிகளின் வளர்ந்துவரும் செல்வாக்கை தாக்கினர். "உழைக்கும் சமுதாயத்திற்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டுமென நாங்கள் வாழ்த்துகின்றோம் " என்றார்.

ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடங்கியதும், இந்து தீவிரவாதிகளின் அணியில் மோதல்கள் எழுந்தன. 1999 ல் மகாராஷ்டிரா சட்டசபைத்தேர்தலில் மாநில அளவில் சிவசேனை அதிக இடத்தை இழந்தது.

டெக்கான் ஹெரால்ட் (Deccan Heral), மே 1 அன்று "சேனா இடதுகளின் நிகழ்ச்சி நிரலை தனதாக்கிக் கொண்டது" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில், பம்பாய் வேலைநிறுத்தத்தில் சிவசேனாவின் பங்களிப்பு பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது. "தலைநகரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இடதுகளுடன் தெருச் சண்டைகளில் இறங்கியிருந்த, வலதுசாரி ஆதரவு இந்துத்துவ (இந்து தீவிரவாத) கட்சி சிவசேனா, ஒரு நுட்பமான நகர்த்தலில் அவர்களின் தொழிலாளர் சார்பு நிகழ்ச்சி நிரலை தனதாக்கிக் கொண்டது மற்றும் மத்திய, மாநில அரசாங்கங்களின் 'தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு' எதிரான, கடந்த வார வெற்றிகரமான மகாராஷ்டிரா பந்த்திற்கு முழு உரிமை கோரியது.

பத்திரிகை குறிப்பிட்டதாவது: பின்புலமாய் இருந்த அனைத்து தொழிற்சங்கவாதிகளாலும் உரையாற்றப்பட்ட மாநாடுகளிலும் திரு. தாக்கரேயின் மகனும் சிவசேனா தலைவருமான உத்தவ் தலைமைப் பேச்சாளராக இருந்தார். விவஸ்தை கெட்ட தொழிற்சங்கவாதி சரத் ராவ் கூட காவிக் கொடி (இந்து இனவாத கூட்டத்துடன் இனங்காணும் நிறம்) பட பட வென பறக்க விட்டுக் கொண்டு வாகனத்தில் ஓடியதைக்கூட பார்க்க முடிந்தது.

இந்திய உழைக்கும் மக்களின் பாதுகாவலனாக பொது மேடையில் வேலை நிறுத்தத்தையும் ஊர்வலத்தையும் "தனதாக்கிக் கொள்வதற்கான" சிவசேனாவின் திறமையானது, சிபிஐ(எம்), சிபிஐ தலைவர்களின் தடை சொல்லா உடன்படலின் மீது தங்கி இருந்தது. இந்தக் கட்சிகள் வெளிப்படையான முதலாளித்துவக் கட்சிகளுடனான பல்வேறு சந்தர்ப்பவாதக் கூட்டுக்களை, தங்களின் பங்காளிகள் அந்நேரத்தில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மிக முற்போக்கான பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்று கூறுவதன் மூலம் நியாயப்படுத்தினர். அந்த அளவு சீரழிந்துபோன இக்கட்சிகள் இப்போது, மாநாடுகளில் தங்களது அரசியல் எதிராளிகள் மீது குண்டர்களை ஏவிவிட ஒருபோதும் தயங்காத பாசிசக் கட்சிக்குப் பின்னால் இடம் எடுக்கும் நிலைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், மகாராஷ்டிராவில் உள்ள சிபிஐ(எம்)-ன் உறுப்பாகிய இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் பொதுச் செயலாளர் பத்திரிகைகளிடம் பின்வருமாறு கூறினார்: "பந்தில் சிவசேனா பங்கேற்பதை நாங்கள் வரவேற்கிறோம். சொல்லப்போனால் இணை கோட்டில்தான் நிற்கின்றோம்." இந்த சொற்கள் பம்பாயிலும் இந்தியா முழுமையிலும் உள்ள தொழிலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை ஆகும். ஸ்ராலினிச கட்சிகள் சிவசேனாவுக்கு மட்டும் அல்லாமல் பிஜேபி மற்றும் அதனோடு தொடர்புடைய ராஷ்ட்ரிய சுய சேவக் சங்க் (ஆர் எஸ் எஸ்) உட்பட ஏனைய இந்து தீவிரவாத அமைப்புக்களுடன் ஒத்துப்போக தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இந்த அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரல் நாட்டின் வளர்ந்து வரும் பதட்ட நிலைகளை வகுப்புவாத பிற்போக்கு வழியில் திசைதிருப்புவதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved