WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா
:
பால்கன்
Macedonia "on the brink of the abyss"
பால்கன்:
மசிடோனியா "ஆழமான நெருக்கடியின் விளிம்பில்"
By Richard Tyler
12 May 2001
Use
this version to print
மசிடோனியாவில் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை
அமைப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள்,
இன்றைய ஆளும் கூட்டரசாங்கத்தில் சேர்வதற்கு முன்னர் இடம்பெறும்
உள்நாட்டு யுத்தம் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என இனக்குழு
அல்பேனியன் பிரதிநிதிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து ஸ்தம்பித்துப்
போயுள்ளது.
நாட்டின் பெரும் அல்பேனியன் இனக்குழுக் கட்சியான
ஜனநாயக சுபீட்சத்துக்கான கட்சி (PDP),
மசிடோனியன் இராணுவம் தற்சமயம் பல கிராமங்களை ஆக்கிரமித்துக்
கொண்டுள்ள தேசிய விடுதலை இராணுவப் (NLA)
போராளிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தும் வரை எந்த
ஒரு அரசாங்கத்திலும் சேர்ந்து கொள்ள மறுத்துள்ளது. தேசிய
விடுதலை இராணுவ (NLA)
தலைவர் கொமாண்டர் சொலோலி கூறியதாவது: "தேசிய
விடுதலை இராணுவம் இல்லாமல் அமைக்கப்படும் எந்த ஒரு
அரசாங்கமும் அதிகம் இரத்தம் சிந்த மட்டுமே உதவும்"
என்றுள்ளார்.
அல்பேனியன் ஜனநாயகக் கட்சி (DPA)
என்ற சிறிய கட்சியின் தலைவரான ஆர்பென் ஷாபெரி அல்பேனியன்
இனக்குழு உரிமைகளின் பெருமளவிலான அங்கீகாரக் கோரிக்கைகள்
வழங்கப்படாது போனால் இன்றைய கூட்டரசாங்கத்தில் இருந்து
வெளியேறிவிடப் போவதாக மிரட்டியுள்ளர். சண்டை தொடர்ந்து
இடம்பெறும் நிலையில், சனத்தொகையில் 30 சதவீதத்தினராக விளங்கும்
நாட்டின் அல்பேனிய சிறுபான்மையினருடனான உறவுகள் முன்னர்
பொஸ்னியா- ஹேர்சகோவினாவில் கண்டது போன்ற இரத்தம் சிந்தும்
இடமாக நாட்டை மாற்றும் ஆபத்து இருந்து கொண்டுள்ளது.
மசிடோனிய நெருக்கடி பெப்பிரவரியில்
கொசோவா எல்லைக்கு சமீபமாக தெற்கு சேர்பியாவினுள் உள்ள
ஒரு பெரும் அல்பேனிய பிரதேசமான பிறிசேவோ பள்ளத்தாக்கில்
(Presevo Valley)
சண்டை வெடித்ததைத் தொடர்ந்து ஆரம்பமாகியது. யூகோசலாவியா
மீதான குண்டுவீச்சை முடிவுக்குக் கொணர 1999ம் ஆண்டின் சமாதான
உடன்படிக்கையின் சரத்தின் கீழ் காவல் செய்ய-பெருமளவுக்கு
கொசோவா விடுதலை இராணுவத்தை கொண்டு அமைக்கப்பட்டது-
பிறிசேவோ, மெட்வெட்ஜா, புஜானாவோக் (UCPMP)
விடுதலை இராணுவத்துடன் மோதிக் கொண்டது. இந்த விடுதலை
இராணுவம் தனது பெயரை அல்பேனிய இனக்குழுக்களை
பெருவாரியாகக் கொண்ட மூன்று நகரங்களின் பெயரைக் கொண்டு
ஆக்கியது. கிளர்ச்சிப் படைகள் இதனை கொசோவாவுடன்
ஒன்றிணைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். முழு மாகாணத்துக்கும்
வழக்காறான சுதந்திரத்தை ஈட்டிக் கொள்வதனதும் இறுதியாக
மாபெரும் அல்பேனியாவுடன் ஒன்றிணையும் நடவடிக்கையின் ஒரு
பாகவுமாகவே இதைச் செய்கின்றனர்.
மார்ச்சில் தேசிய விடுதலை இராணுவம்- இது கே.எல்.ஏ.யைப்
போலவே அதே அல்பேனியன் முதல் எழுத்துக்களையே கொண்டுள்ளது-
மசிடோனியாவின் இரண்டாவது நகரமான டெட்டோவோவின் (Tetovo)
வெளிப்புறத்தில்
கைகலப்பை தொடங்கியது. தனது படைகளை
நகரின் சுற்றுப் புறத்தில் இருந்து வாபஸ்பெறத் தள்ளப்பட்டதன்
பின்னர் நாட்டின் முக்கிய அல்பேனிய இனக்குழுக் கிராமங்களை
தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள தேசிய விடுதலை இராணுவம் (NLA)
பல சண்டைகளில் ஈடுபட்டது.
மசிடோனியா நெருக்கடி அயலில் உள்ள கிரீசை உள்ளடக்கிய
விதத்தில் ஒரு பரந்த அளவிலான பால்கன் மோதுதலுக்கு இலகுவாகத்
தீமூட்டுவதற்கு ஒரு சமாதானத் தீர்வுகாண ஐரோப்பிய வல்லரசுகள்
முயன்று கொண்டுள்ளன. ரொயிட்டர் செய்தி அறிக்கையின்படி தேசிய
ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்படுவது தாமதம் செய்யப்படுவதையிட்டு
பிரித்தானியா "பெரிதும் கவலை அடைந்துள்ளது." "கடந்து
செல்லும் ஒவ்வொரு நாளும் மசிடோனியாவின் வேறுபட்ட இனக்குழு
சமூகங்களுக்கு இடையே ஆழமான பிளவுகள் அதிகரிக்கும் ஆபத்தை
அதிகரித்துள்ளது" என வெளிநாட்டு அமைச்சுப் பேச்சாளர்
குறிப்பிட்டுள்ளார்.
அல்பேனியன் இனக்குழு கட்சிகள் ஒரு பரந்த
அரசாங்க பாத்திரத்தை வகிக்கச் செய்யும் விதத்தில் தேசிய விடுதலை
இராணுவத்தை நசுக்குவதற்கு மசிடோனியன் இராணுவத்தில் தங்கியிருக்கவே
விரும்புகின்றன. இதனால் ஐரோப்பிய வல்லரசுகள் அப்பிராந்தியத்துக்கு
அதிக அளவிலான தரைப் படைகளை அனுப்பி வைப்பதற்கு தயக்கம்
காட்டிக் கொண்டுள்ளன. நேட்டோ செயலாளர் நாயகம்
ஜோர்ஜ் றொபேட்சனுடன் சேர்ந்து ஐரோப்பிய யூனியனின் சிரேஷ்ட
பாதுகாப்பு அதிகாரி ஜாவியர் சொலானா (ஐரோப்பிய யூனியன்
உயர் பிரதிநிதி) இவ்வாரம் மசிடோனியன் தலைநகரான ஸ்கோப்ஜேக்கு
விஜயம் செய்வது யுத்தப் பிரகடனம் செய்யும் அதனது முன்னைய
பயமுறுத்தலை வாபஸ்பெற்றுக் கொள்ள அரசாங்கத்துக்கு
நெருக்குவாரம் கொணர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அத்தகைய ஒரு நடவடிக்கை கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன்
மசிடோனியாவுடன் கைச்சாத்திட்டுக் கொண்ட "ஸ்திரப்பாட்டு
சகவாழ்வு உடன்படிக்கை" யை ஓட்டை விழச் செய்வதாகும்.
இது ஐரோப்பிய யூனியன் அங்கத்துவத்துக்கான முதல் நடவடிக்கையை
பிரதிநிதித்துவம் செய்கின்றது.
கடந்த திங்கட்கிழமை றொபேட்சன் மசிடோனியா
"நரகத்தின் விளிம்பில்" இருந்து கொண்டுள்ளதாக எச்சரிக்கை
செய்ததோடு, தேசிய விடுதலை இராணுவ போராளிகள் (NLA)
"ஒரு ஜனநாயக மசிடோனியாவை நாசம் செய்வதை நோக்கமாகக்
கொண்ட ஒரு கொலைகார காடையர் கும்பல்" எனவும்
வருணித்தார். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான மசிடோனியன் அரசாங்க
நடவடிக்கைகளுக்கு பரந்த அளவிலான இராணுவ ஆதரவை வழங்கும்படி
நேட்டோவுக்கு கூறுகிறார். அத்தோடு தான் இருதரப்பு இராணுவ
உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குவதை அதிகரிக்குமாறு அங்கத்துவ
நாடுகளை நெருக்குவதாகவும் தெரிவித்தார். அத்தோடு இராணுவ
உளவு நடவடிக்கைகளில் பெரும் பங்களிப்புச் செய்யவும் வாக்குறுதி
அளித்தார்.
நேட்டோவின் தென் மண்டல கொமாண்டர் அட்மிரல்
ஜேம்ஸ் எலிஸ் மசிடோனியன் இராணுவத் தளபதி ஜெனரால்
ஜோவான் அண்டிரிவ்ஸ்கியை சந்தித்து "இரு தரப்புக்களுக்கும்
இடையே நல்ல ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளை" எடுக்கும்படியும்
வேண்டிக் கொண்டார்.
அரசாங்கத்துக்கும், தேசிய விடுதலை முன்னணி கிளர்ச்சியாளர்களை
எதிர் கொள்ளும் முயற்சிக்கும் தமது ஆதரவை வெளிப்படையாகத்
தெரிவிக்கும் றொபேட்சனும் சொலானாவும் நாட்டின் அல்பேனியன்
சிறுபான்மையினரை அன்னியப்படுத்த வேண்டாம் என ஜோர்ஜிவ்ஸ்கியை
நெருக்கி வருவதாக தெரிகின்றது. அவரது கூட்டரசாங்கத்தில்
பிரதான சுலாவிய (Slav),
அல்பேனிய இனக்குழு எதிர் கட்சிகளையும் உள்ளடக்கும் விதத்தில்
அதை விஸ்தரிக்கும்படி நெருக்கி வருவதாகவும் தெரிகிறது.
கடந்த வாரம் பிரதமர் ஜோர்ஜிஸ்கிக்கு அமெரிக்காவில்
ஒரு பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்கு அவர் ஜனாதிபதி
புஷ்சையும் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் றம்ஸ்பெல்ட்,
இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் உட்பட்ட சிரேஷ்ட நிர்வாக
அதிகாரிகளையும் சந்தித்துள்ளார். கடந்த மாதம் அல்பேனியன்
சிறுபான்மையினருக்கு பொலிஸ் பயிற்சியும் சமூக சுய உதவித் திட்டமும்
வழங்குவதாக வாக்குறுதியளித்த 5.5 மில்லியன் டாலருக்கு மேலாக
50 மில்லியன் டாலர்களை பொருளாதார, இராணுவ உதவியாக
வழங்கவும் வாஷிங்டன் இணங்கியுள்ளது.
ஜோர்ஜிவ்ஸ்கியை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களிடம்
பேசிய கொலின் பவல் கூறியதாவது. "நான் மீண்டும் ஒரு
முறை மசிடோனியாவிடம் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வாய்ப்பும்
மசிடோனியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்காவின்
முழு அர்ப்பணிப்பை தெரியப்படுத்தும் சந்தர்ப்பமும் கிடைத்தது"
என்றார்.
இந்த விதத்தில் தேசிய விடுதலை முன்னணி போராளிகளை
தனிமைப்படுத்தும் நம்பிக்கையில் இனக்குழு அல்பேனியன் கட்சிகளுடன்
ஒரு உடன்பாட்டுக்கு வரும் விதத்தில் மசிடோனிய அரசாங்கத்தை
நெருக்குவதில் அமெரிக்கா ஐரோப்பாவுடன் சேர்ந்து கொண்டது.
ஜோர்ஜிவ்ஸ்கி பின்னர் நாட்டை ஒரு யுத்த நிலைமையில் இருத்தும்
விடயத்தைப் பற்றிக் கலந்துரையாடும் பொருட்டு பாராளுமன்றத்தைக்
கூட்டும்படி கடந்த வாரம் விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றுக்
கொண்டார். இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
அவசியமாகி இருக்கும். அத்தோடு சட்டத்தின் மூலம் பிரதமருக்கு
பரந்த அளவிலான அதிகாரங்களை கையளிக்கவும் நேரிட்டு இருக்கும்.
முக்கிய சுலோவ் எதிரக் கட்சியான சமூக ஜனநாயக யூனியன் (SDU)
புதன்கிழமை இரண்டு முக்கிய ஆளும் சுலோவ் கட்சிகளான பீ.பீ.ஏ.யுடனும்
லிபரல் கட்சியுடனும் சேர்ந்து அரசாங்கத்துள் நுழைய சம்மதித்தது.
பாரம்பரியமான பெரிதும் யுத்த நாட்டம்
கொண்ட சமூக ஜனநாயக யூனியனை கொண்டிருந்த அரசாங்கம்
தேசிய விடுதலை முன்னணித் தளங்கள் மீது குண்டு வீச்சுக்களை உக்கிரமாக்கியது.
யுத்தம் ஆரம்பமானதில் இருந்து இது கடுமையான குண்டு வீச்சாக
விளங்கியது. பீரங்கிகளதும், டாங்கிகளதும் துணையோடு வக்சின்ஸ்,
சுலுட்கேன் போன்ற கிராமங்களின் மீது குண்டு வீச்சு விமானங்கள்
குண்டு வீச்சில் ஈடுபட்டன. கேர்ணல் பிளாகோகே மார்க்கோவ்ஸ்கியின்படி
"பயங்கரவாதிகள் இறுதியாக துடைத்துக் கட்டப்படும்
வரை இந்நடவடிக்கை தொடரும்."
ஏப்பிரல் 29ம் திகதி டெட்டோவோவுக்கு 12
மைல்கள் வடக்கேயும் கொசோவா எல்லைக்கு சமீபமாகவும்
உள்ள ஒரு கிராமமான வேஜ்ஸில் என்.எல்.ஏ. கெரில்லாக்கள்
நடாத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படைகளின் 8 அங்கத்தவர்கள்
கொல்லப்பட்டதில் இருந்து மசிடோனிய நெருக்கடி உக்கிரம்
அடைந்தது. டெட்டோவா நகரில் பெப்பிரவரியில் சண்டை மூண்டதில்
இருந்து இடம்பெற்ற பெரிதும் பாரதூரமான தனிச் சம்பவம்
இதுவேயாகும். உடல்கள் சின்னாபின்னமாகி சிதறிப் போய்க் கிடந்ததாக
பத்திரிகைச் செய்திகள் குறிப்பிட்டன.
பேர் குறிப்பிடப்படாத ஒரு மேற்கத்தைய இராஜதந்திரி
கூறுகையில்: சேர்பியர்களுக்கு எதிரான ஒரு நேட்டோ குண்டு வீச்சு
பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான ஒரு முன்னோடியாக
கொசோவாவில் இனக்குழு அல்பேனியர்களின் பெரும்
படுகொலை எனக் கூறப்படுவதைச் சாட்டாக வைத்து "அவர்கள்
(என்.எல்.ஏ) உணர்ச்சிகளை தட்டி எழுப்ப முயன்றனர்.
வேஜ்சில் பதுங்கியிருந்து தாக்குதல் நடாத்தியமை
ஜோர்ஜியேவ்ஸ்கி அரசாங்கத்துக்கும் இனக்குழு அல்பேனியக் கட்சிகளின்
பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளை
சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு இடம் பெற்றிருக்கலாம்.
இதன் பிரதிபலிப்புக்கள் இடம்பெற அதிக காலம் செல்லவில்லை.
கடந்த வாரம் 8 மசிடோனியன் இராணுவத்தினதும் பொலிசாரதும்
மரணச் சடங்குகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து தென்
நகரமான பிற்றோலாவில் கலகம் வெடித்தது. பத்திரிகைச் செய்திகளின்படி
நூற்றுக்கணக்கான மசிடோனியர்கள் இனக்கலப்பு நிறைந்த நகரில்
அல்பேனியர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை நாசமாக்குவதிலும்
கடைகளைக் கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டனர்.
சில பத்திரிகைச் செய்திகள் இக்கொள்ளையடிப்புக்களுக்கு
தீவிர தேசியவாத மசிடோனியன் பரா-இராணுவ அமைப்புக்களை குற்றம்
சாட்டின. பீ.பீ.ஏ. தலைவர் அர்பான் ஷபேரி இந்த அழிவுகளையும்
கொள்ளையடிப்புக்களையும் யூதர்களுக்கு எதிரான நாஸிகளின்
கலகங்களுக்கு ஒப்பிட்டார். 1938ல் அவர்கள் யூதர்களின் கடைகளைத்
தாக்கியதைப் போன்ற Kristallnacht
ஆக விளங்கியது. இது இரண்டும் ஒரே விளையாட்டே.
மசிடோனியாவின் உள்ளே தேசிய விடுதலை இராணுவத்தின்
(NLA)
தோற்றம் அயலில் உள்ள கொசோவாவில் மேற்கத்தைய நாடுகளின்
கொள்கையின் கசப்பான பெறுபேறாகும். நேட்டோ வல்லரசுகள்
பெல்கிரேட் ஆட்சியாளரான சுலோபோடன் மிலோசவிக்குக்கு
எதிரான தமது யுத்தத்தில் இனக்குழு அல்பேனிய கொசோவியர்களின்
குறைநிறைகளை சிடுமூஞ்சித்தனமான முறையில் பயன்படுத்திக் கொண்டனர்.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் சேர்பியவிடம் இருந்து
கொசோவாவுக்கு சுதந்திரம் கோரிய ஹசீம் தாசி (Hashim
Thaci) போன்ற கே.எல்.ஏ. தலைவர்களுக்கு
விழா எடுத்தனர்.
பாதுகாப்பு நிபுணர் பிரசுரமான "ஜேன்ஸ் சேக்குரிட்டி"யில்
(Janes Security)
வெளியான ஒரு அறிக்கை தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ள கே.எல்.ஏ.
வை (KLA)
உள்ளடக்கியதாக கருதப்படும் இனக்குழு அல்பேனியன் கெரில்லாக்கள்
"தமக்கு ஒரு போதும் பூரண சுதந்திரம் வழங்கப்படாது
போனால் அல்லது மசிடோனியாவில் உள்ள இனக்குழு அல்பேனியன்
உறவினர்களோடு இறுதியாக இணைந்து கொள்ள வாய்ப்பளிக்காது
போனால் கே.எல்.ஏ. மேற்கு மசிடோனியாவில் உள்ள அல்பேனியன்
மொழி பேசும் பிராந்தியங்களின் எல்லைகளூடாக ஆயுதக் கையிருப்பை
ஒரே மாஜி யூகோசலாவிய குடியிருப்பை டிட்டோவின் பிடியில் இருந்து
இரத்தக் களரி இல்லாமல் விடுவிக்கும் விதத்தில் ஆட்டங்காணச்
செய்யும் ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்துக் கிடப்பதாக"
குறிப்பிட்டது.
யுத்தத்துக்கும் சமாதானத்துக்குமான நிறுவனத்தின்
(Institute for War and Peace
reporting) அறிக்கையின்படி கே.எல்.ஏ.யின்
ஸ்தாபகர்களில் பலரும் கொசோவா வெகுஜன இயக்கத்தில் (LPK)
சேர்ந்தவர்கள். "கே.எல்.ஏ. யை ஸ்தாபிதம் செய்வதற்கு
கருவியாக விளங்கிய ஒரு சிறிய கட்சி." இதன் மாஜி தலைவரான
பஸ்லி வெலியூ உட்பட எல்.பீ.கே. ஆட்களில் பலரும்
கொசோவாகாரர்கள் அன்றி மசிடோனியன் அல்பேனியர்களாவர்.
கொசோவாவில் யுத்தம் முடிவடைந்ததும் மசிடோனியன்
அல்பேனியர்களில் சிலர் கொசோவாவில் ஒரு அரசியல் வாழ்க்கையைத்
தொடர விருப்பம் தெரிவித்தனர் என ஐ.பீ.டபிள்யூ.ஆர் (IPWR)
விளக்குகின்றது. எவ்வாறெனினும் "சிலர் அவ்வாறு செய்யவில்லை.
இவர்கள் என்.எல்.ஏ.யின் அரசியல் தலைவரும் பசில் நெலியூவின்
மருகருமான அலி அஹமெட்டியை உள்ளடக்குவர். இக்குழு
கொசோவா அரசியலில் இழப்புக்களை கண்டவர்களாகவும்
நாடு திரும்ப முடியாதவர்களாகவும் விளங்கியது. நீண்ட காலமாக
இவர்கள் மசிடோனியாவில் ஒரு மோதுதலை ஆரம்பிக்க பிரச்சாரம்
செய்து வந்தனர். ஆனால் அவர்களது கொசோவா சகாக்களால்
தடுக்கப்பட்டனர். ஒரு மசோடோனியன் யுத்த முனையை திறக்கும்
எந்த ஒரு முயற்சியும் சீரழிவு மிக்கது என அவர்கள் நம்பினர்."
அத்தகைய தடுப்பு நடவடிக்கைக்கான முயற்சிகள் எதுவும் தற்போது
செய்யப்படவில்லை. கே.எல்.ஏ. யை பால்கனில் அதனது சொந்த
நலன்களை உடன் அடையும்படி கோருவதன் மூலம் மேற்கத்தைய
நாடுகள் ஒரு மாபெரும் அல்பேனியா (A
Greater Albania) என்ற பூதத்தை தட்டியெழுப்பியுள்ளதோடு
இன்னும் பரந்த அளவிலான ஒரு பால்கன் யுத்தத்துக்கான சாத்தியத்தையும்
ஏற்படுத்தி உள்ளன.
|