WSWS: செய்திகள்
& ஆய்வுகள் :
மார்க்கிச
அரசியல் பொருளாதாரம்
Reply to a letter on socialism and economic laws
சோசலிசம் மற்றும் பொருளாதார விதிகள் பற்றிய
கடிதத்திற்கு பதில்
24 April 2001
Use
this version to print
இதில் தொடர்புடையவர்களுக்கு;
நான் தங்களுடைய வலைத்தளத்தை
சிறிது காலமாக பெற்று வருகிறேன் மற்றும் எனக்கு மின் அஞ்சல்களின்
வழியாக அனுப்பப்படும் கட்டுரைகளை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்
மற்றும் அவற்றை எனது நண்பர்கள் பலருக்கும் பரிந்துரை செய்திருக்கிறேன்.
உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்க வேண்டும். உண்மையில், இந்தக்
கேள்வியை சில காலமாக வைத்திருக்கிறேன் மற்றும் யாரிடம் கேட்பது
என்று எனக்குத் தெரியவில்லை!? எனது கேள்வி உலகம் முழுமைக்குமான
இலட்சிய சோசிச சமுதாயம் பற்றியது. அதாவது அனைத்து நாடுகளும்
சோசலிசமாக ஆகினால் மற்றும் முதலாளித்துவத்திடமிருந்து சுதந்திரமானதாக
ஆனால்; அப்போது அவற்றுக்கு சர்வதேச பொருளாதாரங்களின்
அல்லது வர்த்தகத்தின் விதிகள் எப்படி பொருந்தும்?
பொருளாதாரப் போட்டிகளும் வர்த்தகமும் எதனை அடிப்படையாகக்
கொள்ளும்? அந்நாடுகளின்மீது அதே முதலாளித்துவ தன்மை அல்லது
இலாப நோக்கு நீடித்திருக்கும் என்று நீங்கள் எண்ணவில்லையா?
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..... இந்தப் பிரச்சினைக்கு தீர்வு
என்ன? எனது கேள்விக்கு உங்களது பதிலை நான் பெரிதும் வரவேற்கிறேன்.உங்களிடமிருந்து
விரைவில் பதிலை எதிர் நோக்கியிருக்கிறேன்.
தங்களது,
AS
அன்புள்ள AS,
உங்களது மின் - அஞ்சலுக்கு நன்றி. WSWS
ஐ மதிப்பு மிக்கதாகக் கருதி உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை
செய்ததை இட்டு நான் மகிழ்சியடைகிறேன்.
உங்களது கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக முதலாவது
அம்சமாக நான் குறிப்பிடவிருப்பது, "இலட்சிய சோசலிச
சமுதாயம்" எதைப்போல இருக்கும் என அமைத்துக் காட்டுவது
சாத்தியமில்லாதது. இது ஏனெனில், ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டவாறு:
"நமது தற்போதைய சமூக நிலைமைக்கும் சோசலிசத்திற்கும்
இடையில் அங்கு சோசலிசப் புரட்சியின் நீட்டித்த சகாப்தம்
ஒன்று உள்ளது, அதாவது, அதிகாரத்திற்கான பகிரங்கமான பாட்டாளி
வர்க்கப் போராட்டம், சமூக உறவுகளை முழுமையான ஜனநாயகப்படுத்துவதையும்
முதலாளித்துவ சமுதாயத்தை சோசலிச சமுதாயமாக படிப்படியாக
மாற்றுவதையும் இலக்காகக் கொண்டு இந்த அதிகாரத்தை
வெல்லலும் பயன்படுத்தலும் ஆகும்."
வேறுவார்த்தைகளில் சொன்னால், எங்கு சமூக
உறவுகள் ஜனநாயகப்படுத்தப் பட்டுள்ளதோ அங்கு, அவை
இன்று உள்ளதுபோல் முதலாளித்துவ சந்தையின் ஆதரவின் கீழ் தனியார்
இலாபத் திரட்சியினால் ஆதிக்கம் செய்யப்பட முடியாது
மாறாக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் கூட்டுத் தேவைகள்
மற்றும் இலக்குகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படும். ஆகையால்,
எதிர்கால சோசலிச சமுதாயத்தின் வடிவம், இன்று நாம் வரையும்
ஒரு மாதிரி திட்ட வரைபடத்தின்படி, அதன் இயல்பிலேயே முன்கூட்டி
அமைக்கப்படமுடியாது, மாறாக உலகம் முழுமையும் உள்ள லட்சக்கணக்கான
மக்களின் கூட்டு அனுபவம், முடிவெடுத்தல் மற்றும் செயல்பாடு
ஆகியவற்றிலிருந்து எழும்.
சில பொதுவான கோட்பாடுகள் ஏற்படுத்தப்பட
முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சோசலிச சமுதாயமானது
முதலாவது இடத்தில் இலாபத் தேவைகளுக்கு அல்லாமல் மனிதத்
தேவைகளுக்கு பொருந்துமாறு, காரண காரிய விதிகளின்படி
பொருளாதாரத்தைக் கட்டி அமைத்தலுடன் சம்பந்தம்
கொண்டுள்ளது. இருப்பினும், மக்கள் தொகையின் மிகப்பெரும்பான்மையினராயும்
அனைத்து செல்வங்களின் உற்பத்தியாளராயும் விளங்கும்
தொழிலாள வர்க்கம் --அரசியல் அதிகாரத்தை அதன் சொந்தக்
கரங்களில் எடுத்தால்தான்-- அது சாத்தியம்.
நாடுகள் முதலாளித்துவத்திடமிருந்து சுதந்திரமானதாக
ஆகும் பொழுது, சர்வதேசப் போட்டி மற்றும் வர்த்தக விதிகள்
அவற்றுக்கு எப்படிப் பொருந்தும் என்று நீங்கள் கேட்கின்றீர்கள்.
சோசலிச சமுதாயத்தை கட்டியமைத்தல் அவற்றின் முற்போக்கான
அகற்றுதல்களுடனும் சம்பந்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படையான
விடை ஆகும். தொழிலாள வர்க்கத்தால் அரசியல் அதிகாரம்
வென்றெடுக்கப்பட்ட பின்னர், ஆரம்பமாகும் முதலாளித்துவத்திலிருந்து
சோசலிசத்திற்கான இடைமருவல் திட்டத்திற்கு ஏற்றவாறு உற்பத்தியை
அபிவிருத்தி செய்தலை முதலாளித்துவ சுதந்திரசந்தை விதிகளுக்கு பதிலாக
இடம்பெற வைப்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது. அதாவது,
பொருளாதாரக் கோளத்தில், சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான
இடைமருவல் சந்தைக் கோட்பாடுகளை திட்டமிடல் கோட்பாடுகள்
மாற்றீடு செய்யும் அளவுக்கு இடம் பெறும்.
அத்தகைய திட்டமிடல், பெயரிலும் மதிப்பு மிக்கதாக
இருக்குமானால், அது ஸ்ராலினிச அதிகாரத்துவ அரசுகளால் அபிவிருத்தி
செய்யப்பட்ட சோசலிச எதிர்ப்பு நையாண்டிகள் வகைப்பட்டதல்ல,
திட்டங்களின் இலக்குகளையும் குறி இலக்குகளையும் வரைதல்,
அதனை நடைமுறைப்படுத்தலை சரிபார்த்தல், தேவைப்படும்
இடத்தில் புதுப்பித்தல், மற்றும் எதிர் காலத்திற்கான புதிய திட்டங்களை
முன் முயற்சித்தல் ஆகியவற்றில் சமுதாயத்தின் பரந்த மக்களை சம்பந்தப்படுத்தும்
தேவையைக் கட்டாயமாகக் கொண்டதாகும். வேறுவார்த்தைகளில்
சொன்னால், உண்மையான திட்டமிடலை நிறுவுதல் மிகப் பரந்த
ஜனநாயகத்திலிருந்து பிரிக்கமுடியாதது.
"முதலாளித்துவத்தின் இயல்பு" மற்றும்
"இலாப நோக்கு" பற்றி நீங்கள் கேட்டுள்ளீர்கள். அவை
வரவர இன்னொரு கோட்பாட்டால் வழிநடத்தப்படும் சமூக
உற்பத்தி முறையால் மாற்றீடு செய்யப்படும்: இயற்கைச் சூழல்களையும்
மற்றும் மனிதகுல அபிவிருத்திக்கான ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான
சூழல்களையும் பராமரிப்பது தொடர்பாக, சாத்தியமான மிகச்
சொற்ப மனித உழைப்புடன், மனிதத் தேவையை நிறைவு செய்யும்
உற்பத்தி அபிவிருத்தி என்ற கோட்பாட்டால் மாற்றீடு செய்யப்படும்.
அத்தகைய சமுதாயத்தை நிறுவுதல் ஒரு வகையான
கற்பனாவாத கனவு அல்ல என்ற விஷயத்தின் மீது வலியுறுத்த என்னை
அனுமதிக்கவும். மனிதகுலம் முன்னேற வேண்டுமானால் அது அத்தியாவசியமானது.
உற்பத்தியையும் முழுச்சமுதாயத்தையும், இலாபக் குவிப்புக்கு
கீழ்ப்படுத்தல், என்னும் அல்லாதவகையில் விரிந்து பரவும்
சமூக சமத்துவமின்மைக்கு ஊற்று மூலம் ஆகும். உலகம் முழுவதிலும்
உள்ள மக்களுக்கு நிகழும் துன்பங்களின் வேரில் அது இருக்கிறது.
எடுத்துக்காட்டாக, உலகின் மிக ஏழ்மையான
பகுதிகளில் ஒன்றான ஆபிரிக்கா, உதவி என்று அழைக்கப்படுவதிலிருந்து
பெறுவதைக் காட்டிலும் உண்மையில் பிரதான முதலாளித்துவ வங்கிகளுக்கும்
நிதி நிறுவனங்களுக்கும் நிறைய செலுத்துகின்றது. மேலும் பிரதான முதலாளித்துவ
நாடுகளில், உற்பத்தியை தனியார் இலாபத்திற்கு கீழ்ப்படுத்தல்,
ஒவ்வொரு பிரதான நாடுகளிலும் காணப்படும் சமூக சீரழிவுகளின்
வேரில் இருக்கிறது.
சோசலிசத்திற்கான தேவை எழுகிறது ஏனெனில்
நவீன மக்கள் சமுதாயம் உருவாக்கும் புதிய பிரச்சினைகள் சந்தையின்
தர்க்கத்தின்படி சாதாரணமாய் தீர்க்கப்பட முடியாது. இந்தப்
பிரச்சினைகளை விளைவிக்கும் மற்றும் தழுவும், இலாபத்தின் தர்க்கமானது,
மனிதகுலம் முன்னேற வேண்டுமானால், மற்றும் உண்மையாகவே
உண்மையான மனிதத்துவ அர்த்தத்தில் அது உயிர் தப்பி இருக்க வேண்டுமானால்
கூட அது கட்டாயமாக தேவைக்கான தர்க்கத்தினால் மாற்றீடு
செய்யப்பட வேண்டும்.
இந்த முன்னோக்கிற்காக போராடுவதில் நாங்கள்
கற்பனாவாதிகள் அல்லர். எடுத்துக்காட்டாக இன்று, தன் இனத்தையே
உண்பதன் மீது நாம் கொண்ட அதே அருவருப்பினை பேராசை
மீது காட்டுவதற்கு முன்னர், அதற்கு சிலகாலம் எடுக்கும் என்று
சோசலிஸ்டுகள் உணர்கின்றனர். ஆனால் அதுவல்ல பிரச்சினை.
மனித மனோவியல் மாறுவதற்கு முன்பாக அது
இடம்பெற நீண்ட காலம் எடுக்கக்கூடிய அதேவேளையில்,
--மாறிய சமூக நிலைமைகளின் உற்பத்தி பற்றிய இறுதி ஆய்வில்-- இலாபக்
குவிப்பையும் மூலதன விரிவாக்கத்தையும் நிறைவு செய்வதைக்
காட்டிலும், மனிதத் தேவையை நிறைவு செய்யும் போராட்டத்தின்
அடிப்படையில் புதிய உற்பத்தி முறையின் அபிவிருத்தியை கையில் எடுத்தல்
இன்று முழுமையாய் சாத்தியமானது. ஏற்கனவே பொருளாதாரத்தில்
மேலாதிக்கம் செய்யும் பெரும் மொத்த உற்பத்தி சக்திகள்
சமூகமயமாகிவிட்டன. அவை சமூக ரீதியில் சொந்தமாகின்ற
பொழுது, உற்பத்தியானது புதிய அடித்தளத்தைப் பொறுப்பெடுக்க
முடியும்.
அத்தகைய உற்பத்தி முறையை நிறுவுதலானது கற்பனாவாத
திட்டம் அல்ல, இன்னும் சொல்லப் போனால் அது பூகோள
முதலாளித்துவ அமைப்பு தன்னில் இருந்தே எழுகின்றது.
உலகை ஏற்கனவே மேலாதிக்கம் செய்துவரும்
பரந்த பெரிய நாடுகடந்த நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் ஏற்கனவே
பூகோள அளவில் திட்டமிடலை நிறைவேற்றுவதுடன், இலட்சக்கணக்கான
மைல்கள் தொலைவுகளில் பொருளாதார நடவடிக்கைகளை
ஒருங்கிணைக்கின்றன. பூகோள உற்பத்தியை திட்டமிடும் முறை முற்றிலும்
சாத்தியம் ஆகையால் -- அதற்கான அடித்தளம் ஏற்கனவே முதலாளித்துவத்தினாலேயே
இடப்பட்டிருக்கிறது.
அதுபோல பூகோளநிதி சந்தைகளின் நடவடிக்கைகளை
இலகுவாக்குதற்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்ற தகவல்
அமைப்புமுறை மற்றும் சிக்கலான நுட்பமான செய்தித் தொடர்பு
ஆகியன, பரந்த அளவு தகவல் விநியோகம் மற்றும் அளிப்புக்களை
வழங்குதற்கு தேவையான அமைப்புக்களுக்கான அடிப்படையை
அமைக்கின்றன. இவை சோசலிச பொருளாதாரத்தை ஜனநாயக
பூர்வமாக இயக்கவும் கட்டுப்படுத்தவும் செய்வதற்கான அடிப்படையை
அமைக்கின்றன.
இந்த சுருக்கமான குறிப்புரைகள் உங்களுக்கு
பிரச்சினைகளில் சிலவற்றைத் தெளிவூட்ட உதவி இருக்கும் என
நான் நம்புகின்றேன்.
தங்கள் உண்மையுள்ள,
நிக் பீம்ஸ்
சோசலிசத் திட்டமிடல் பற்றிய ஒரு கருத்துப்
பரிமாற்றம்
[11 May 2001]
|