World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரித்தானியா

Britain's general election: Labour secures second term, but turnout plummets to record low

பிரித்தானிய பொதுத்தேர்தல்: தொழிற்கட்சி இரண்டாவது தடவையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் வாக்காளர்களின் அளவு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.

By Julie Hyland
8 June 2001

Use this version to print

கடந்த வியாழக்கிழமை பொதுத் தேர்தலில் பிரித்தானிய தொழிற் கட்சி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்ட 659 தொகுதிகளில் 638 இன் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரொனி பிளேயர் 167 பெரும்பான்மையை பெற்றுள்ளார். முதல் முதலாக இரண்டாவது தடவை தொழிற் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது. அறிவிக்கப்படாத தொகுதிகள் கூடுதலானவை அயர்லாந்திலாகும்.

எவ்வாறிருந்தபோதும் தொழிற் கட்சியின் வெற்றி 1918 இன் பின்னர் ஆகக்குறைந்தவர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 1997 தேர்தலின் 71.6% உடன் ஒப்பிடுகையில், வாக்களிக்கத் தகுதியானவர்களில் அண்ணளவாக 59.1% ஆனோர் வாக்களித்துள்ளதுடன், இது 2ம் உலக யுத்தத்தின் பின்னர் ஆக்குறைந்த அளவாகும். 1997 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொழிற்கட்சியின் வாக்குகள் 2.4% ஆல் குறைந்துள்ளது.

இம்முடிவு 1920 இன் பின்னர் கன்சவேட்டிவ் கட்சியை ஆகக்கூடிய காலம் அதிகாரத்திலிருந்து அகற்றியுள்ளதுடன், அதன் தலைவரான William Hague இன் பதவிவிலகலுக்கும் காரணமாகியுள்ளது. ரோரிகளின் ஆதரவில் எந்தவொரு அதிகரிப்பும் இருக்கவில்லை. அது 8 தொகுதிகளை இழந்துள்ளதுடன், 8 தொகுதிகளை வெற்றிபெற்றுள்ளது. இதில் Romford, Tatton ல் இருந்த தமது இரு தொகுதிகளையும் பாதுகாத்துள்ளதுடன், 1997 இல் ஒரு தொகுதியையும் பெறாத ஸ்கொட்லாந்தில் ஒரு தொகுதியையும் பெற்றுள்ளது.

காலை 8.00 மணிக்கு கன்சவேட்டிவ் கட்சியின் பிரதான அலுவலகத்திற்கு வெளியே வெளிவிட்ட பரிதாபகரமான அறிக்கையில் William Hague "வேறு ஒருவர் பதவியேற்கும் வரை தாம் பதவியிலிருப்பதாகவும், இது புதிய நடைமுறைகள் மூலமாக நாட்டில் புதியவர்களை அணிதிரட்டிக்கொள்ளலாம் என நம்புவதாக குறிப்பிட்டார்''. ஒருவரை இப்பதவிக்கு தேடிக்கொள்ளவது முக்கிய பிரச்சனையாக இருக்கும். இது மேலும் பதவிக்கான கசப்பான போட்டியை உருவாக்கி கட்சியின் பிளவிற்கு இட்டுச்செல்லும்.

வாக்களிப்பவர்களின் தொகை குறைவினால் தொழிற்கட்சியினதும், ரோரிகளினதும், தாராளவாத ஜனநாயகவாதிகளினதும் ஆசனங்களின் சிறிய அதிகரிப்பை தவிர பாராளுமன்றம் உண்மையாக மாற்றமில்லாதுள்ளது. இவ்வியக்கமின்மைக்கான காரணம், குறிப்பாக கடந்த நான்கு வருடங்களாக உத்தியோகபூர்வ அரசியல் போக்கிலிருந்து இலட்சக்கணக்கானோர் அந்நியப்பட்டு போனமையே ஆகும். தொழிற்கட்சியினர் முதலாளிகளினதும், தொலைத்தொடர்பு சாதனங்களினதும் ஆதரவினை பலப்படுத்திக் கொண்டுள்ளபோது, முக்கிய நகரங்களிலும், பிரதான தொழிலாள வர்க்க பிரதேசங்களிலும் பாரியளவு வாக்குளை இழந்துள்ளது.

659 தொகுதிகளில் 440 இலட்சம் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருந்தனர். இதில் 529 இங்கிலாந்திலும், 72 ஸ்கொட்லாந்திலும், 40 வேல்ஸிலும், 18 வட அயர்லாந்திலும் உள்ளது. பிரித்தானியாவின் இலகுவான வாக்களிப்பு முறையினால் ஒவ்வொரு தொகுதியும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதுடன், ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு மட்டுமே உண்டு.

வாக்களிப்போரின் அளவை அதிகரிக்கும் நோக்கத்துடன் தபால் வாக்களிப்பு முறையை அரசாங்கம் மாற்றிய போதும் 3/5 என்ற அளவிலேயே வாக்களித்துள்ளனர். பல பிரதேசங்களில் 50% இற்கு குறைவாகவுள்ளது இது 18% இற்கு மேலான வீழ்ச்சியாகும். ஆகக்குறைந்த வாக்குப்பதிவு இடம்பெற்றது தொழிற்கட்சியின் பாதுகாப்பான தொகுதியான Liverpool Riverside ஆகும். 34.1% ஆனோர் வாக்களித்துள்ளதுடன், இது 1997 இனுடன் ஒப்பிடுகையில் 17.5% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களினை விட வாக்களிக்காதவர்களே அதிகமாகும்.

இதனை மாற்றியுள்ள ஒரேயொரு தொகுதி Wyre Forest ஆகும். இங்கு ஓய்வுபெற்ற வைத்தியரான Dr Richard Taylor தொழிற் கட்சியை விட 7,000 வாக்குகள் அதிகமாகப்பெற்று 1945 இற்கு பின்னர் வெஸ்மினிஸ்டரில் பதவியேற்கும் இரண்டாவது சுயேட்சை உறுப்பினராகின்றார். இவரின் ''உடல்நல கவன'' [Health Concern] கட்சி சுகாதார சேவைகள் மீதான வெட்டுகளுக்கு, முக்கியமாக உள்ளூர் வைத்தியசாலைகளில் அவசர உதவிப்பிரிவுகள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக உருவாக்கப்பட்டதாகும்.

தாராளவாத ஜனநாயக் கட்சியினர் முக்கியமாக ரோரிகளிடமிருந்து காப்பற்றிக்கொண்ட வாக்குகளால் குறிப்பிடத்தக்களவு வெற்றிபெற்றுள்ளனர். அத்துடன் பாரம்பரிய தொழிற் கட்சியினரின் பகுதிகளிலும் வாக்குகளை பெற்றுள்ளனர். Barnsley இல் 5% தாராளவாத ஜனநாயக் கட்சியின் பக்கம் சென்றுள்ளதால் தொழிற் கட்சியினரின் பெரும்பான்மை ஓரளவிற்கு குறைந்துள்ளது. தாராளவாத ஜனநாயக் கட்சியினர் தமது வாக்குளை அதிகரித்துக் கொள்ளக் கூடியதாக இருந்ததற்கு காரணம், அவர்கள் தம்மை தொழிற்கட்சியின் இடது எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொண்டமையாகும். அவர்கள் பொது சேவைகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக வரியை அதிகரிக்ககோரினர். இவர்களின் முக்கிய வெற்றி Chesterfield இல் 2586 அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்றதாகும். இத்தொகுதி கடந்த தேர்தல் வரை தொழிற் கட்சியின் இடதுபிரிவின் தலைவராக இருந்து பதவிவிலகிய Tony Benn ஆல் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டதாகும்.

தொழிற் கட்சினரின் மீதான வெறுப்பால் தேசியவாதக் கட்சிகள் குறிப்பிடத்தக்களவு இலாபடையவில்லை. ஸ்கொட்லாந்து தேசியக்கட்சி Galloway, Upper Nithsdale தொகுதிகளை ரோரிகளிடம் இழந்ததுடன், மொத்தமாக 2% வாக்குகளையும் இழந்துள்ளனர். Plaid Cymru ஒரு தொகுதியை இழந்ததுடன், ஒன்றினை வெற்றிபெற்று, ஒரளவு வாக்கு வெற்றிபெற்றுள்ளது. ரோரியினர் வேல்ஸ் இல் ஒரு தொகுதியையும் பெறவில்லை.

தொழிற் கட்சிக்கு மாற்றீடு எனக்கூறிக்கொண்ட கட்சிகளில் ஒன்றான ஸ்கொட்லாந்து சோசலிசக் கட்சி ஸ்கொட்லாந்தின் 72 தொகுதிகளில் 70,000 வாக்குகளை பெற்றது. இங்கிலாந்திலும் வேல்ஸிலும் சோசலிசக் கூட்டு 100 தொகுதிகளில் 57,553 வாக்குளை பெற்றது. Arthur Scargill இன் சோசலிச தொழிலாளர் கட்சி (Socialist Labour Party) பிரித்தானியா முழுவதுமான 114 தொகுதிகளில் 57,075 வாக்குகளை பெற்றது. Hartlepool இல் மதிப்பிழந்த முன்னாள் தொழிற் கட்சி அமைச்சரான Peter Mandelson இற்கு எதிராக போட்டியிட்ட சோசலிச தொழிலாளர் கட்சி 2,4% வாக்குகளை மட்டும் பெற்று கட்டுப்பணத்தை இழந்தது.

ஓல்ட்ஹாம் இல் போட்டியிட்ட பாசிச பிரித்தானிய தேசிய கட்சி உத்தியோகபூர்வ கட்சிகளின் தஞ்சம் கோரியோருக்கு எதிரான பிரச்சாரத்தை ஆத்திரமூட்டல்களையும், இனவாத பதட்டத்தை அதிகரிப்பதற்கான சாதகமாக பாவித்துக்கொண்டது. இது தேர்தல் பிரச்சார காலத்தில் ஆசிய இளைஞர்களுக்கும் பொலிசாருக்கும் இடையிலான மோதல்களுக்கு இட்டுச்சென்றது. இந்நகரத்தின் இரு தொகுதிகளில் அவர்கள் 11,000 வாக்குகளை பெற்றனர். இது அவர்களுக்கு கிடைத்த கூடிய வாக்குகளாகும். பிரித்தானிய தேசிய கட்சியின் தலைவரான Nick Griffin ஓல்ட்ஹாம் மேற்கிலும் Royston இலும் மூன்றாவது இடத்தை பெற்றார். குறைந்த வாக்களிப்பில் அவர் 16% இனை பெற்றுக்கொண்டார்.

பிளேயர் வெற்றியை கொண்டாடுகின்றபோதிலும், அவரின் பாராளுமன்ற பெரும்பான்மை வாக்களிக்க தகுதியானவர்களில் 1/4 பகுதியினரிலேயே தங்கியுள்ளது. இது அவரின் ''தொழிற் கட்சி ஆளத்தகுதியானது'' என்ற கருத்தை குழிபறிப்பதுடன், சுகாதார சேவைகளினதும், கல்வி, பொதுச்சேவைகளையும் வெட்டுவதற்கான வழியை வகுக்கும்.

அதியுயர் விகிதமான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீதான தொழிற் கட்சியின் தாக்குதல்கள் மீதான ஒரு அமைதிவாத பிரதிபலிப்பை காட்டுகின்றது. பலர் வாக்களிக்க செல்லாமைக்கு அவர்கள் எந்தவொரு கட்சியும் தமது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதை கண்டுகொண்டுள்ளனர் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பிரித்தானியாவில் அரசியலுக்கான அடித்தளத்தை பரவலாக்குவது என்ற அவர்களின் உறுதிமொழிக்கு மாறாக பிளேயரின் அரசாங்கம் இதை இன்னும் ஒடுங்கச்செய்கின்றது. பிரதான கட்சிகளின் முயற்சிக்கு மாறாக தேர்தல் காலங்களில் தோன்றிய வேலைநிறுத்தங்களும் உள்ளூர் குழப்பங்களும் அடிமட்டத்தின் கீழ் சமூக, அரசியல் நெருக்கடிகள் எழுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

ரோரிகளின் உடைவானது, தனது முதல் ஆட்சிக் காலத்தில் தொழிற் கட்சியினர் பின்தள்ளி வைத்த பிரச்சனைகள் தற்போது பலவீனமாகி மறைந்துவிடப்போவதில்லை. வட அயர்லாந்தில் குடியரசுக்கட்சியினர் காரில் சென்று கொண்டே வாக்குச்சாவடியின் முன் நின்ற இரு பொலிசாரை சுட்டுக்காயப்படுத்தினர். சமாதான உடன்படிக்கை எனப்படுவது இயங்கா நிலையை அடைந்துள்ளது.

மிகமுக்கியமாக அரசாங்கம் பிரித்தானியா ஐரோப்பிய நாணயமான யூரோ உடன் ஒன்றிணைவது தொடர்பாக தெளிவான நிலைப்பாடு எடுக்கவேண்டியுள்ளது. வாக்களிப்பு தினத்தன்று சந்தை, தொழிற் கட்சியின் வெற்றிக்கும், யூரோ அங்கத்துவம் தொடர்பான வாக்கெடுப்புக்கும் தயார் செய்கையில் ஸ்ரேர்லிங் பவுண், டொலர் சந்தைக்கு எதிராக கடந்த 15 வருடத்தில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்தது. இவ்வீழ்ச்சியானது பிரித்தானிய பொருளாதாரம் வீழ்ச்சியடைவதும், உற்பத்தி ஏப்பிரலில் 0.9 % ஆல் வீழ்ச்சியடைவது தொடர்பான செய்தியுடனும் இணைந்தது.