World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரித்தானியா

ஙிக்ஷீவீtணீவீஸீ's ரீமீஸீமீக்ஷீணீறீ மீறீமீநீtவீஷீஸீ: ஜிலீமீ ஷிஷீநீவீணீறீவீst கிறீறீவீணீஸீநீமீ ணீஸீபீ ஷிஷீநீவீணீறீவீst லிணீதீஷீuக்ஷீ றிணீக்ஷீtஹ்ழிஷீ ணீறீtமீக்ஷீஸீணீtவீஸ்மீ tஷீ ஙிறீணீவீக்ஷீ's ழிமீஷ் லிணீதீஷீuக்ஷீ

பிரித்தானிய பொதுத் தேர்தல்: சோசலிச கூட்டும் (SA) சோசலிச தொழிற் கட்சியும் (SLP) பிளேயரின் புதிய தொழிற் கட்சிக்கு பதிலீடாகாது

Statement by the Socialist Equality Party of Britain
29 May 2001

Back to screen version

பிளேயர் அரசாங்கத்தின் மீதான தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையீனத்தின் வளர்ச்சியானது ஜூன் 7 பொதுத் தேர்தலில் ஒரு தொகை கட்சிகளை போட்டியிடச் செய்துள்ளது. இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தொழிற் கட்சிக்கு எதிரான "பெரும் இடதுசாரி கன்னை தேர்தல் சவால்" எனக் குறிப்பிடுகின்றது. சோசலிச தொழிற் கட்சி (Socialist Labour Party) சோசலிஸ்ட் அலயன்ஸ் (SA), ஸ்கொட்லாந்து சோசலிச கட்சி (Scotish Socialist Party) என்பவற்றில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட 300க்கும் அதிகமான வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த அமைப்புக்கள் ஒரு புதிய தொழிலாளர் கட்சியை ஸ்தாபிதம் செய்வதற்கு அவசியமான ஒரு காத்திரமான அடிப்படையை வழங்கவில்லை. இவற்றினது உபாய வேறுபாடுகளுக்கிடையேயும் இவை எல்லாம் ஒரு பொது முன்நோக்கில் ஒன்றுபட்டுள்ளன. ஒரு புதிய தொழிலாளர் கட்சியை கட்டி எழுப்ப அழைப்பு விடுக்கையில் இவை இது ஒரு மார்க்சிச வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சாத்தியத்தை நிராகரிக்கின்றன. பிளேயர் அரசாங்கம் "பாரம்பரியமான" தொழிற் கட்சி பெறுமானங்களை காட்டிக் கொடுத்துவிட்டதாக கண்டனம் செய்கையில் இவை பழைய பாணியிலான சீர்திருத்தவாத கொள்கைகளுக்கு நடைபோடுவதை ஆதரிக்கின்றன.

தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் (NUM) தலைவர் ஆர்தர் ஸ்கார்கில் 1996ல் சோசலிச தொழிற் கட்சியை (SLP) ஸ்தாபிதம் செய்தார். தொழிற் கட்சி தனது அரசியலமைப்பின் "நான்காவது சரத்தை" கைவிட்டு பொதுச் சொத்துடமையின் பேரிலான வழக்காறான பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கிக் கொண்டதை தொடர்ந்து இது அமைக்கப்பட்டது. ஸ்கார்கில் 1984ம் 85ம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு தாம் வழங்கிய தலைமையின் அடிப்படையில் தொழிலாளர்களை சோசலிச தொழிற் கட்சிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். பிரித்தானியாவில் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னொரு போதும் இல்லாத விதத்தில் திணிக்கப்பட்ட படுமோசமான போராட்ட தோல்விகளில் ஒன்றாக இது விளங்கியது. ஸ்கார்கில் இளமைப் பருவத்தில் இருந்தே ஒரு ஸ்ராலினிஸ்ட். அத்தோடு அவரின் கட்சி பெருமளவுக்கு பெரிய பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPGB) உடைவு சிதைவுகளைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்திய தொழிலாளர் சங்கம் (Indian Workers Association), ஸ்ராலின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில மாவோ வாதிகளையும் மற்றும் சில தீவிரவாதக் குழுக்களின் அங்கத்தவர்களையும் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.

போர்க்குணம் கொண்ட தொழிற்சங்க வாதத்துக்கு வேண்டுகோள்கள் விடுப்பதோடு சோசலிச தொழிற் கட்சியின் (SLP) வேலைத்திட்டம் ஸ்ராலினின் பாதுகாப்பின் கீழ் 1951ல் பெரிய பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியினால் வரையப்பட்ட "சோசலிச பிரித்தானிய பாதை" யையும் மாதிரியாகக் கொண்டுள்ளது. இவ்வேலைத் திட்டம் முற்று முழுதாக பாராளுமன்றப் பாதையூடான சோசலிசத்துக்கு சாதகமான முறையில் புரட்சிகர அரசியலுக்கு வழக்காறான ஆதரவு காட்டும் பெரிய பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளை கைகழுவி விட்டது.

சோசலிச அலயன்சும் ஸ்கொட்லாந்து சோசலிச கட்சியும் (SA/SSP)

சோசலிச அலயன்சும் ஸ்கொட்லாந்து சோசலிச கட்சியும் ட்ரொட்ஸ்கிசத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் அமைப்புக்களைக் கொண்டவை. இவை இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து போன்ற இடங்களில் ஒரு பொதுப் பட்டியலில் போட்டியிடுகின்றன. சோசலிசக் கட்சி (முன்னர் மிலிடன்ட் எனப்பட்டது) ஸ்கார்கில் தொழிற் கட்சியில் இருந்து பிரிந்து சோசலிச தொழிற் கட்சியை ஸ்தாபிதம் செய்ய எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து 19696ல் ஸ்கொட்லாந்தில் ஸ்தாபிக்கப்பட்டது. எவ்வாறெனினும் ஸ்கார்கிலின் அரசியல் ரீதியில் அவமானத்துக்கிடமான ஸ்ராலினிச சார்பும் தனிப்பட்ட மேலாதிக்கமும் பெரிதும் உலகளாவிய மீள் அணிதிரள்வு முயற்சிகளை தடை செய்தது. இதனால் பல தீவிரவாத அமைப்புக்களை இணைத்துக் கொண்டு 1998 செப்டம்பரில் ஸ்கொட்லாந்து சோசலிச கட்சி (SSP) அமைக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து சோசலிச கட்சி அதன் ஆரம்ப அமைப்பான சோசலிச கட்சியில் இருந்தும் தொழிலாளர் அனைத்துலகத்துக்கான கமிட்டியில் இருந்தும் இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரிந்தது.

இங்கிலாந்திலும் வேல்சிலும் இந்த அணிதிரள்வுகள் ஒரு தேர்தல் கூட்டையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. 1998 பெப்பிரவரியில் லண்டன் சோசலிஸ்ட் அலயன்ஸ் (LSA) அமைக்கப்பட்டமை ஒரு தொகை மத்தியதர வர்க்க தீவிரவாத அமைப்புக்களை ஒன்றிணைத்தது. தலைநகரில் பல உள்ளூராட்சி பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் பொருட்டு சோசலிச கட்சி, சோசலிச தொழிலாளர் கட்சி போன்ற அமைப்புக்களை ஒன்றிணைத்தது. 1999 மார்ச்சில் பேர்மிங்காமில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சோசலிச அலயன்ஸ் இங்கிலாந்து பூராவும் அமைக்கப்பட்டது. 2000 மேயில் லண்டன் சோசலிஸ்ட் அலயன்ஸ் தனது முதலாவது பெரும் அரசியல் உல்லாசப் பயணத்தை புதிதாக உருவாக்கப்பட்ட மாபெரும் லண்டன் அதிகார சபையின் ஆசனங்களுக்கு போட்டியிட்டது. இது தொழிற்கட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து லண்டன் சபையாகும்.

இங்கிலாந்தில் உள்ள பெரிய தீவிரவாத குழுவான சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் கூட்டில் சேர்ந்து கொள்ள எடுத்த தீர்மானம் இந்த கூட்டில் சில பிரிவினரை பொதுத் தேர்தலின் பின்னர் அமைப்பினுள் பதட்டம் இருந்து வருகையில் அலயன்சை ஒரு கட்சியாக பரிணாமம் செய்யத் தள்ளியுள்ளது. சோசலிச கூட்டினை ஆரம்பித்து வைத்ததன் காரணமாக சோசலிசக் கட்சி உடனடியாக ஒரு கட்சியை அமைத்துக் கொள்வதில் ஈடுபடத் தயக்கம் காட்டியுள்ளது. இந்நிலைமைகளின் கீழ் இது சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) அமைப்பு ரீதியான கட்டுப்பாடுகளுக்கு பெரிதும் கீழ்படிந்து போவதாக இருக்கும். சோசலிச தொழிலாளர் கட்சி தனது தரப்பில் தேர்தல் வெற்றியின் அளவில் சார்ந்து நின்று ஒரு ஒன்றுபட்ட கட்சியை அமைப்பதானது "பொறுத்திருந்து செய்யும்" மனோபாவத்தை எடுப்பதாக விளங்கும்.

சோசலிச தொழிற் கட்சியுடன் (SLP) ஒரு அரசியல் உடன்பாட்டுக்கு வர சோசலிச கூட்டு (SA) தவறுமானால் அதற்கு காரணம் பல தொகுதிகளில் இரண்டு அமைப்புக்களும் ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமாகப் போட்டியிடுவதேயாகும்.

சோசலிச கூட்டும் ஸ்கொட்லாந்து சோசலிசக் கட்சியும் (SA/SSP) இலாப அமைப்பை சீர்திருத்தும் சாத்தியத்தை பெரும்பான்மையான தொழிலாளர் கொண்டிருக்கும் வரையும் ஒரு மார்க்சிசக் கட்சியை கட்டியெழுப்புவது சாத்தியம் இல்லை என வாதிடுகின்றன. தொழிற் கட்சியின் வலதுசாரி பரிணாமம் தொழிலாளர் மத்தியில் அதனது ஆதரவை பெரிதும் பாதித்துள்ளது. அத்தோடு இது இடது புறத்தில் ஒரு இடைவெளியையும் திறந்து விட்டுள்ளது. ஆனால் அவர்கள் வெளிப்படையாக ஒரு புரட்சிகர முன்நோக்கை முன்வைப்பது இன்னமும் சாத்தியமில்லை என வாதிடுகின்றார்கள். ஏனெனில் தொழிலாளர்கள் ஒரு மத்தியவாத அபிவிருத்தி கட்டத்துக்கு ஊடாக -சீர்திருத்தத்துக்கும் புரட்சிக்கும் இடையேயானது- சென்றாக வேண்டும் என்கின்றனர்.

சோசலிச கூட்டிலும் ஸ்கொட்லாந்து சோசலிச கட்சியிலும் உள்ள தீவிரவாதிகளின்படி இந்தக் கட்டத்தை தாண்டிப் பாயும் சகல முயற்சிகளும் தனிமையிலும் தோல்வியிலும் போய் முடிந்து விட்டன. அதற்குப் பதிலாக மார்க்சிஸ்டுகளின் பணி, இடதுசாரி போக்குகளின் ஒரு "பரந்த சேர்ச்" சை (Broad Church) கட்டியெழுப்புவதே என்கின்றனர். அது ஒரு சூழலை வழங்கும் என்றும் ஒரு நீண்ட காலப்பகுதியினூடாக "புரட்சியாளர்கள்" தமது கொள்கைகளின் சரியான தன்மையை சீர்திருத்த தொழிலாளர்களை நம்பிக்கை வைக்கச் செய்ய முடியும் என்றனர்.

இது தொழிலாளர் வர்க்கத்தை தொழிற் கட்சி அதிகாரத்துவத்துக்கு கீழ்ப்படியச் செய்யும் மத்தியதர வர்க்க தீவிரவாதிகளின் முன்னைய முயற்சிகளின் ஒரு தொடர்ச்சியாகும். யுத்தத்தின் பிந்திய காலப்பகுதி பூராவும் இப்போக்குக்கள் தொழிற்கட்சியின் இடது கன்னையாக தொழிற்பட்டன. தனது கட்சி அணிக்குள் அல்லது சோசலிச தொழிலாளர் கட்சியின் விடயத்தில் ஒரு வெளிவாரி நெருக்குதல் குழுவாக செயற்பட்டனர். இவர்கள் தொழிற்சங்க இயந்திரத்தின் கீழ்மட்ட அணிகளிலும் கூட பதவிகளை வகிக்கின்றனர். இவர்களின் முன்நோக்கு, எப்போதும் பழைய தொழிலாளர் அமைப்புக்களை ஒரு இடதுசாரி திசையில் நெருக்குவதற்கு அங்கத்தவர்களை அணிதிரட்டுவது விளங்கியது. 1997ம் ஆண்டளவில் கூட இவர்கள் தொழிற் கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரினர். 1995ல் தொழிற் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் மிலிடன்ட் போக்கினரின் (Militant Tendency) விடயத்தில் அவர்கள் மிலிட்டனின் நடவடிக்கைகள் தொழிற் கட்சியை மீண்டும் அதனது சீர்திருத்தவாத பாதையில் திருப்பி விடுமிடத்து எதிர்காலத்தில் தொழிற் கட்சியில் மீண்டும் சேரும் விருப்பை தெரிவித்து வந்தனர்.

தீவிரவாதக் குழுக்கள் தொழிற் கட்சிக்கு எதிராகச் செல்லத் தள்ளப்பட்டன. ஏனெனில் அது வலதுசாரிகளுக்கு பெரிதும் தள்ளாடும் வகையில் நலன்புரி சேவைகளை ஒழித்தல் தனியார்மயமாக்கம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அமுல் செய்து வருகின்றது. தீவிரவாதக் குழுக்கள் ஆதரவு காட்டும் சீர்திருத்தவாத நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் பிளேயரின் கட்சி நேர்மையான ஆதரவை திரட்டுவதை முடியாமல் செய்து விட்டது. ஆனால் அவர்கள் இன்னமும் தொழிற் கட்சியை அல்லது அக்கட்சியின் ஒரு பகுதியினரை இடது திசையில் நெருக்கும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளதாகக் காட்டுகின்றனர்.

கார்டியன் (Guardian) பத்திரிகையாளரும் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) முன்னணி அங்கத்தவருமான போல் பூட் (Paul Foot) சோசலிசக் கூட்டு (SA) "போதுமான அளவு அனுபவித்த தொழிற் கட்சி ஆட்சிகளுக்கு ஒரு தேர்தல் பதிலீடாகும்" என விளக்குகின்றார். இதன் நோக்கம் "பிளேயரின் சகாக்களுக்கு ஒரு பாடம் புகட்டுவதே: அதாவது பாரம்பரியமான தொழிற் கட்சி வாக்காளர் படை அவர்களின் திசையை மாற்றும்படி வேண்டுகின்றனர்."

சோசலிச கூட்டு (SA) நீண்ட காலத்தில் ஒரு புதிய தொழிலாளர் கட்சியை ஸ்தாபிக்கும் சாத்தியத்தை எழுப்புகின்றது. அத்தகைய ஒரு கட்சி தனது தலைமையில் தொழிற் கட்சி, தொழிற் சங்க அதிகாரத்துவத்தின் ஒரு பகுதியையும் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

சோசலிச கூட்டு தனது ஆரம்ப மாதிரியாக இத்தாலிய கம்யூனிஸ்ட் றீபவுண்டேசனை (Communist Refoundation) கொண்டது. இது இத்தாலியில் பெரும் இடதுசாரிக் கட்சியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் இடம்பெற்ற பிளவினால் தோன்றியது. இந்த ஆர்.சீ. (RC) புதிதாக பேர்சூட்டப்பட்ட ஜனநாயக இடதுசாரியில் இருந்த அதனது முன்னைய தோழர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பல்வேறுபட்ட கூட்டரசாங்க வாத இடதுசாரி பரிந்துரையாளனாகச் செயற்பட்டது. இத்தாலியின் யுத்தத்துக்கு முன்னைய வரலாற்றின் நலன்புரி உரிமைகளின் பெரிதும் கணிசமான அளவு தேய்வுக்கு வழிவகுத்தது. 'மத்திய இடதுசாரிகளுக்கு' அவர்கள் வழங்கிய ஆதரவு கடந்த மேயில் வலதுசாரி தொடர்புச் சாதன பிரமுகர் சில்வியோ பேர்லுஸ்கோனி சமூக குறைபாடுகளால் ஏற்பட்ட விளைவுகளை சுரண்டிக் கொண்டு ஆட்சிக்கு வரவும், புதிய பாசிச தேசிய கூட்டில் ஒரு கூட்டரசாங்கம் அமைக்கவும் முடிந்தது.

சோசலிச கூட்டுக்கு (SA) உள்ள கஷ்டம் என்னவென்றால் தொழிற் கட்சியில் இருந்தோ அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினுள் இருந்தோ ஆர்.சீ. வகையறாவிலான எந்த ஒரு கட்சியும் தலையெடுக்காததேயாகும். அவர்கள் ஸ்கார்லின் சோசலிச தொழிற் கட்சி (SLP) அத்தகைய ஒரு இடைவேளையின் ஆரம்பமாக விளங்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அது கருச்சிதைவாகியது. இது இடதுசாரி தீவிரவாதக் குழுக்கள் அவை அவற்றின் வேறுபாடுகளைக் களைந்து கொள்வதையும் எதிர்காலத்தில் அவர்களை ஏதேனும் சில பெரும் அரசியல் ஆட்கள் சேர்ந்து கொள்வர் என்ற நம்பிக்கையில் ஒரு பொது முன்னணியில் தொங்கிக் கொள்வதையே தெரிவாக விட்டு வைத்துள்ளது.

இந்த இலக்கில் சோசலிசக் கூட்டு (SA) ஒரு வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இணக்கம் கண்ட குறைந்த பட்ச சமூக சீர்திருத்த வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிற் கட்சியை எதிர்ப்பதில் தம்முடன் இணையும்படி இவர்கள் விரக்தியடைந்த மாஜி தொழிற்கட்சி அலுவலர்களுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றனர். அவர்களது வெப்தளம் அங்ஙனம் தெரிவு செய்யப்பட்ட ஆட்களின் பட்டியலை வெளியிட்டு ஜம்பம் அடித்துக் கொள்கின்றது. இருப்பினும் பெரும்பான்மையானவர்கள் அவர்களின் சொந்த அங்கத்தவர்கள் அல்லது தொழிற் கட்சியில் இருந்து மாறி வந்த பழைய தீவிரவாதிகள். அல்லது தொழிற்சங்க இயந்திரத்தில் பதவி வகிப்பவர்கள்.

தொழிற்கட்சி ஒரு பெரும் வர்த்தகர் கட்சியாக மாற்றம் கண்டமை

ஆனால் அத்தகைய ஒரு மறு அணிதிரள்வானது பல்வேறுபட்ட தீவிரவாத அமைப்புக்களில் தங்கியுள்ளது. பழைய தொழிலாளர் அமைப்புகளுக்கு நேரிட்டது என்ன என்பது பற்றிய எந்த ஒரு கலந்துரையாடலையும் நசுக்கிக் கொண்டுள்ளார்கள். தொழிற் கட்சி பெரும் வர்த்தகர்களுக்கு சாதகமான கட்சியாக பரிணாமம் கண்டது எப்படி என்பது சம்பந்தமாக விளங்கும் விளக்கம், கட்சித் தலைவர்களின் அகநிலையான தோல்விகளையும் தட்ச்சர்வாத மரபுகளையும் தழுவிக் கொள்வதைக் குறிக்கின்றது.

எவ்வாறெனினும் தொழிற் கட்சியின் தற்போதைய நெழிவு சுழிவுகள் வெறுமனே ஒரு தோல்வி கண்ட தலைமைக்கான அடையாளம் மட்டுமன்றி ஒரு தோல்விகண்ட முன்நோக்கையும் காட்டிக் கொண்டுள்ளது. தொழிற் கட்சி பாராளுமன்றத்தில் தொழிற் சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஒரு அரசியல் வாகனமாக அமைக்கப்பட்டது. அது தனது அணியினுள் சோசலிசத்துக்கு பாசாங்கு செய்யும் குழுக்களை சேர்த்துக் கொண்ட போதிலும் அதனது வேலைத்திட்டம் தொழிற் சங்க அதிகாரத்துவத்தின் நலன்களை பிரதிபலித்தது. அது பேபியன் சமூகத்தில் (Fabian Sociaty-1884ல் அமைக்கப்பட்ட ஆங்கில சோசலிச சமூகம்) இருந்தே தனது சித்தாந்த உத்வேகத்தைப் பெற்றுக் கொண்டது. இது இலாப அமைப்பினை எந்த ஒரு புரட்சிகர சவாலும் சவாலுக்குள்ளாக்குவதை எதிர்த்தது. முதலாளித்துவ அமைப்பினுள் வரையறுக்கப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்காக வாதிட்டது.

தொழிலாள வர்க்கத்தினால் கடந்த நூற்றாண்டு பூராவும் வென்றெடுக்கப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் போர்க்குணம் கொண்ட வர்க்கப் போராட்டங்களின் விளைவாக ஈட்டிக் கொள்ளப்பட்டவையாகும். இந்தப் போராட்டங்களில் பலவும் தொழிற் கட்சி, தொழிற்சங்கங்கள் என்ற சாதனங்களூடாக இடம்பெற்ற போதும் அதிகாரத்துவத்தின் அடிப்படை நோக்கம் எப்போதும் இன்றுள்ள சமூக ஒழுங்கினை அச்சுறுத்தாத வர்க்கப் போராட்ட வழிகளில் தொழிலாளர் வர்க்கத்தை அடக்கி, கட்டுப்படுத்தி வைப்பதாக விளங்கியது. ஆதலால் தொழிற் கட்சி அதனது முதற் காலப் பகுதியில் ஒரு "முதலாளித்துவ தொழிலாளர் கட்சி" ("Bourgeouis Workers party") என அழைக்கப்பட்டது. இது தொழிலாள வர்க்கத்தினால் முதலாளித்துவ அமைப்பைக் கட்டிக் காத்த அதிகாரத்துவத்தின் அரசியல் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது.

ஒரு முழு வரலாற்றுக் காலப்பகுதி பூராவும் தொழிலாளர் இயக்கத்தை ஆளுமை செய்யும் தொழிற் கட்சி வாதத்தின் குறுகிய சீர்திருத்தவாத கண்ணோட்டத்தின் சக்தியானது, முக்கியமாக இரண்டு காரணிகளின் பெறுபேறாகும். முதலாவதாக, தொழிற் கட்சிக்கு ஒரு நிசமான சோசலிச பதிலீட்டை கட்டியெழுப்பும் முயற்சிக்கு 1920 பதுகளின் கடைப்பகுதியிலும் 1930பதுகளின் ஆரம்பத்திலும் சோவியத் யூனியனினுள் ஸ்ராலினிசத்தின் தோற்றம் ஒரு தலையடி கொடுத்தது. இரண்டாவதாக, இருந்து கொண்டிருந்த நிலைமைகளின் கீழ் ஆளும் வர்க்கம் சமூக அமைதியை பராமரிக்க சலுகை வழங்க விரும்பியதோடு சலுகைகளை வழங்கக் கூடியதாயும் இருந்தது. இதைச் செய்ய சீர்திருத்தவாதம் செயற்படுவதாகத் தோன்றியது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவின் தலைமையிலான பெரும் வல்லரசுகள் தேசிய, சமூக குரோதங்களை தரமாக்கும் முயற்சியாக ஒரு சிக்கலான நாணய, வர்த்தக விதிமுறைகளை ஏற்படுத்தும் உலக வியாபார, வர்த்தக பெருக்கத்தை ஊர்ஜிதம் செய்யவும் வேண்டியிருந்தது. இது சீர்திருத்தவாதத்தின் தலைமைக் காலமாக விளங்கிய காலப்பகுதிக்கான அத்திவாரத்தை இட்டது. பிரித்தானியா போன்ற முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகள் இது முதலாளி வர்க்கம் உலக வளங்களையும் மக்களையும் சுரண்டுவதையும் சாதகமாக்கியது. உள்நாட்டுச் சந்தையை தேசிய பொருளாதார விதிகள் மூலம் ஊக்குவிக்கும் அதே சமயம் தேசிய சுகாதார சேவையின் (National Health Service) சிருஷ்டித்தல் போன்ற சீர்திருத்தங்களை அமுல் செய்தது. அனைத்து முக்கிய கட்சிகளுக்கு -கன்சர்வேடிவ் கட்சி, தொழிற் கட்சி, லிபரல் கட்சி- இடையேயும் ஒரு அரசியல் உடன்பாடு ஏற்பட்டது. இலாப அமைப்பின் உயிர் வாழ்க்கையை அச்சுறுத்தக் கூடிய வர்க்கப் போராட்டத்தின் பெருக்கத்துக்கு எதிராக நின்று பிடிக்கக் கூடிய கொள்கைகளின் அவசியம் ஏற்பட்டது.

எவ்வாறெனினும் 1968க்கும் 1975க்கும் இடைப்பட்ட காலத்தில் உலக முதலாளித்துவம் ஒரு ஆழமான பொருளாதார, அரசியல் நெருக்கடியினால் ஈடாட்டம் கண்டது. இந்த ஆட்டங்கண்ட வருடங்கள் உலகம் பூராவும் தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த இயக்கத்தின் தோற்றத்தை கண்டது. இக்கட்டத்தில் அமெரிக்காவின் முன்னைய மேலாண்மை அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டிருந்த அமெரிக்க டாலர் யுத்தத்தின் பின்னைய பொருளாதார அமைப்பினால் ஆட்டங்கண்டது.

ஆளும் வர்க்கம் வர்க்க உறவுகளை மீள நிலைநிறுத்திக் கொள்ள பழைய தொழிலாளர் அமைப்புக்களின் மீது தங்கிக் கொண்டிருக்க முடிந்தாலும் கூட டொலர் மூலம் உலக வர்த்தகத்தின் முழு அமைப்பையும் உத்தரவாதம் செய்யும் வகையில் பிரெட்டென்வூட்சில் ஸ்தாபிதம் செய்யப்பட்ட பொருளாதார ஒழுங்கு முறையை மீளப் புதுப்பித்துக் கொள்ள முடியாது போய்விட்டது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்கள் ஒழுங்குபடுத்த முயற்சித்த உலக பொருளாதார அமைப்பு இப்போது முன்னொருபோதும் இல்லாத அளவிலான வளர்ச்சி காலப்பகுதியை அனுபவித்துக் கொண்டுள்ளது. "பூகோளமயமாக்கம்" எனப் பெயர்பட்ட சகாப்தம் வந்து விட்டது. கணனிமயமாக்கத்தினதும் தொலைத் தொடர்பினதும் முன்னேற்றங்களுடன் சம்பந்தப்பட்ட புதிய தொழில் நுட்ப அபிவிருத்திகளும் பிரமாண்டமான ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களின் தோற்றமும் உற்பத்தி, விநியோகம், பண்டமாற்றத்தை ஒரு பூகோள ரீதியான பரிமாணத்தில் தேசிய எல்லைகளை கணக்கில் கொள்ளாது மீள ஒழுங்கமைக்க இட்டுச் சென்றது. ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதாரத் தலைவிதியும் முன்னொரு போதும் இல்லாத விதத்தில் உலக சந்தைகளின் வெற்றியுடன் அல்லது தோல்வியுடன் நேரடியாக இணைந்ததாக்கியது.

அனைத்துலகப் போட்டிக்கான இடைவிடாத உந்துதல் தேசிய நலன்புரி அரச கொள்கைகளை கட்டிக் காப்பதுடன் ஒத்துப் போகாததாகும். இதனை கூட்டுத்தாபனங்கள் தமது இலாபத்தின் மீது மன்னிக்க முடியாத தாக்கங்களை ஏற்படுத்துமென்றும் ஒரு வசதி வாய்ப்பு படைத்த மேம்பட்ட செல்வந்தர்களை வளப்படுத்தும் எனவும் கணித்தன. தட்ச்சரின் விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்ட பொருளாதாரக் கொள்கைகளையும் தொழிற் கட்சி தனது பழைய சீர்திருத்தவாத வேலைத் திட்டத்தை கைவிட்டதும் இந்த உலகப் பொருளாதாரத்தின் உள்ளான அடிப்படை மாற்றங்களின் பெறுபேறாகும். தொழிற் கட்சி இலாப அமைப்பை கட்டிக் காப்பது சமூக சீர்திருத்தத்துக்கு வக்காலத்து வாங்குவதுடன் தொடர்ந்தும் ஒத்துப் போக முடியவில்லை. அது பிரித்தானிய முதலாளித்துவத்தை கட்டிக் காப்பது இப்போது தொழிலாளர் வர்க்கத்தை முழுமனே பூகோள மூலதனத்தின் தேவைகளுக்கு கீழ்ப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. இது பிளயர் அன்ட் கம்பனியின் பணத்திமிருக்கு காரணமாக இருந்து கொண்டுள்ளது.

அவர்கள் இன்னமும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை சூழ்ந்து கொண்டுள்ள போதிலும் தொழிற் சங்கங்கள் தொழிற் கட்சியின் பெரும் வர்த்தக நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு பதிலீட்டை வழங்கவில்லை. ஒரு புதிய தொழிலாளர் கட்சிக்கான அடிப்படையை மட்டுமே வழங்குகின்றது. தொழிற் கட்சியின் வேலைத் திட்டம் தொழிற் சங்க அதிகாரத்துவத்தின் நலன்களையும் அரசியலையுமே தொடர்ந்தும் வெளிப்படுத்துகின்றன. தாம் சிருஷ்டித்த கட்சியைப் போலவே தொழிற்சங்கத் தலைவர்கள் தமது அங்கத்தவர்களின் நலன்களை காப்பதை கைவிட்டு விட்டனர். இதனால் கம்பனி முகாமைத்துவத்தின் நீண்ட கையாகிவிட்டனர். வர்க்கப் போராட்டத்தை உயர்த்தும் அவர்களின் முன்னைய முயற்சிகள் பெருமளவுக்கு எந்த ஒரு வடிவிலான கைத்தொழில் நடவடிக்கையையும் தடை செய்யும் நடவடிக்கைகளால் பதிலீடு செய்யப்பட்டது. உயர்ந்த மட்டத்திலான உற்பத்தி திறனுக்கும் குறைந்த சம்பளத்துக்கும் கம்பனியின் அளவை குறைப்பதற்கும் இடைவிடாமல் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சோசலிச கூட்டும் ஸ்கொட்லாந்து சோசலிச கட்சியும் சோசலிச தொழிற் கட்சியும் (SA/SSP/SLP) "பழைய தொழிற் கட்சி பெறுமானங்களை தழுவிக் கொண்டுள்ளமையானது அவர்களின் முக்கியமான தேசிய- சீர்திருத்தவாத முன்நோக்கினை சுட்டிக் காட்டுகின்றது. அவர்கள் வக்காலத்து வாங்கும் சமூகச் சீர்திருத்தங்கள் தேசிய அரசைப் பலப்படுத்துகின்றதும் அதிகாரத்துவ தொழிலாளர் அமைப்புக்களை மீளக் கட்டியெழுப்புகின்றதுமான நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுடன் பிணைந்து கொண்டுள்ளது. இதனை அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தை பூகோளரீதியிலான முதலாளித்துவத்தின் கொள்ளையடிப்புக்களில் இருந்து கட்டிக் காக்கின்ற வழிவகைகளாக முன்வைத்த போதும் இது தேசிய பிளவுகளையும் இதே தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கும் ஏனைய நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிராக தொழிலாளர்களை தமது சொந்த ஆளும் வர்க்கத்துடன் இணையச் செய்வதை ஊக்குவிப்பதாயும் விளங்கியது.

ஸ்கொட்லாந்து சோசலிச கட்சி (SSP) தேசியவாதத்தை அப்பட்டமாகத் தழுவிக் கொள்ளும் நடவடிக்கையில் சோசலிச கூட்டினுள்ளான (SA) சகல குழுக்களுக்கும் அடிச்சுவட்டை ஏற்படுத்திக் கொடுத்தது. ஸ்கொட்லாந்து சோசலிசக் கட்சி தனியொரு கட்சியாக இருந்து வருவதற்குக் காரணம் அது தனது முதல் கொள்கையாக ஸ்கொட்லாந்துக்கு சுயநிர்ணய உரிமைக்காக நின்று வருவதேயாகும். இதனது இறுதி நோக்கம், எடின்பேக் (Edinburgh) பாராளுமன்றததில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் ஒரு கனிஷ்ட பங்காளராக வருவதேயாகும். ஸ்கொட்லாந்து பொருளாதாரம் மீதான ஹொலிறூட்டு (Holyrood) அதிகாரத்தை ஈட்டவும் நலன்புரி சேவை, பாதுகாப்பு, "பூகோளமயத்தின் சக்திகளுக்கு தாக்கிப் பிடிப்பதையும்" அடைவதாகும்.

ஸ்கொட்லாந்து சோசலிசக் கட்சியின் நிலைப்பாடானாது "தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்பும் வங்குரோத்து ஸ்ராலினிச முன்நோக்கை ஸ்கொட்லாந்துக்கு மட்டும் மீளப் பிரயோகம் செய்வதாகும். சோசலிச பாதையில் சுயமாகத் தாக்கிப் பிடிக்கும் பாதையில் ஸ்கொட்லாந்து செல்லலாம் என வாதிப்பதன் மூலம் ஸ்கொட்லாந்து சோசலிசக் கட்சியின் (SSP) தேர்தல் விஞ்ஞாபனம் கூறுவதாவது: "பல்லாயிரக் கணக்கான மைல் கரையோர நிலங்களையும், பரந்த அளவிலான மக்கள் குடிமனை இல்லா நிலங்களையும் இடைவிடாத தூய நீர் விநியோகத்தையும், எண்ணெய் இருப்புக்களையும், பெரிதும் திறன் கொண்டதும் கல்வி அறிவு படைத்ததுமான வேலைப் படையையும், ஒரு செழிப்பு மிகுந்த கலாச்சார மரபுரிமைகளையும் ஐரோப்பிய உயர்ந்த எழுத்தாளர், இசையாளர்கள், படத் தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய சக்திவாய்ந்த கலைஞர் சமூகத்தையும் கொண்டுள்ளது.

"ஒரு தீவிரமான புதிய ஸ்கொட்லாந்தை கட்டியெழுப்பக் கூடிய மூலப் பொருட்கள் இருந்து கொண்டுள்ளது. அது பூகோளமயமாக்கத்தினதும் முதலாளித்துவத்தினதும் சக்திகளுக்கு நின்று பிடிக்கும். அத்தோடு சுதந்திர சந்தை சுரண்டலின் எதிர்ப்பினது அனைத்துலக அடையாளமாகவும் வரும்."

அத்தகைய ஒரு வேலைத்திட்டத்தின் அரசியல் தர்க்கமானது ஸ்கார்கில் ஸ்ராலினையும் மாவோ சேதுங்கையும் மற்றும் சோசலிச கருத்தை அவமானத்துக்கு உள்ளாக்க அதிகம் செய்துள்ள தேசிய கொடுங்கோல் ஆட்சியாளர்களையும் மகத்தானவர்களாக காட்டியதன் மூலம் பெரிதும் பக்குவமற்ற முறையில் வெளிப்பாடாகியுள்ளது.

சுதந்திரத்துக்கான ஸ்கொட்லாந்து சோசலிசக் கட்சியின் அழைப்பினது நிச உள்ளடக்கம் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி முன்வைத்துள்ள "ஐரோப்பாவினுள் சுதந்திர ஸ்கொட்லாந்து" என்ற சுலோகத்தில் இருந்து வேறுபட்டது அல்ல. ஸ்கொட்லாந்து தேசிய கட்சி ஸ்கொட்லாந்து ஊழியப் படையை மலிவான ஊழியப்படை தடாகமாகவும் திறமை கொண்ட ஊழியர்களாகவும் ஸ்கொட்லாந்தை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றது. ஐரோப்பிய ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத் தாபனங்களுக்கு ஒரு உற்பத்தி மேடையாக -உள்வாரி முதலீடுகளை ஊக்குவிக்கும் உரிய கம்பனி வரிச் சலுகைகளுடன் கூடிய- அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றது. ஸ்கொட்லாந்து சோசலிசக் கட்சி (SSP) பேரளவில் ஒரு "ஐக்கிய சோசலிச ஐரோப்பாவுக்கு" அழைப்பு விடுத்த போதிலும் ஐரோப்பாவின் தனி நாணயத்தை -ஈரோ- ஏற்படுத்தும் விடயத்தில் உத்தேச கருத்துக் கணிப்பில் ஒரு நிலைப்பாடு எடுக்க மறுத்துள்ளது. ஆதலால் எதிர்காலத்தில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளும் கதவுகளை திறந்து விட்டுள்ளது.

பிரித்தானியா பூராவும் ஒரு நிஜமான சோசலிசக் கட்சியை ஸ்தாபிதம் செய்வதற்கான அவசியமான அடிப்படை, தொழிலாளர் வர்க்கத்தின் சமூக, ஜனநாயக, அரசியல் நலன்களை தேசிய அரசின் பொருளாதார வரையறைகளுக்குள் பின்வாங்கிச் செல்வதன் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியாது. உற்பத்தியின் அனைத்துலகமயமாக்கமும் அதனுடன் இணைந்த தொழில் நுட்பங்களிலான பிரமாண்டமான முன்னேற்றங்களும் வரலாற்றில் முதற் தடவையாக மனித இனத்தின் உடல், கலாச்சார அவசியங்களை திருப்திப்படுத்தும் புறநிலையான சாதனங்களை சிருஷ்டித்துள்ளது.

ஆனால் இச்சாத்தியங்களை நிசமாக்க உற்பத்திச் சாதனங்களை இலாப அமைப்பின் கால் விலங்குகளில் இருந்து விடுவிப்பதையும் முதலாளித்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ள போட்டியிடும் தேசிய அரசுகளின் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் வேண்டி நிற்கின்றது. இந்த அத்தியாவசியமான பணி தொழிலாள வர்க்கத்தினால் வேண்டப்படும் கட்சியின் பாணியை நேரடியாக வடிவமைக்கிறது. அனைத்து நாடுகளதும் தொழிலாள வர்க்கத்தை ஒரு பொது அனைத்துலக அமைப்பில் -உலக ரீதியான சோசலிசக் கட்சியில்- ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே பூகோள ரீதியாக அணிதிரட்டப்பட்ட மூலதனத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரித்தானியப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்துள்ள வேலைத்திட்டம் இதுவே.

இதற்கு முரணான முறையில் பழைய சீர்திருத்தவாத, ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியத்துக்கான உந்துதலுக்கு தமது வரலாற்று ரீதியான எதிர்ப்பைக் காட்டிக் கொண்டுள்ளன. முதலாளி வர்க்கத்தில் இருந்தும் தேசிய அரச அமைப்பு முறையில் இருந்து அரசியல் ரீதியில் சுதந்திரமாக செயற்படுவதற்கான உந்துதலையும் எதிர்க்கின்றன. ஆதலால் ஒரு புதிய சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்பவது தொழிற் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சகல பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர் இயக்கத்தினுள் வீழ்ச்சி கண்டு வரும் தமது செல்வாக்கிற்கு மீண்டும் பலமூட்ட முயற்சிக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கும் எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் சுதந்திரமான இயக்கத்தின் அபிவிருத்தியை முன் அனுமானிக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved