WSWS: செய்திகள் & ஆய்வுகள்:
ஐரோப்பா
: பிரித்தானியா
Britain: Oldham riots sparked by deliberate
cultivation of racism
பிரித்தானியா: ஓல்ட்ஹாம் வன்முறைகள் திட்டமிட்டு
வளர்த்தெடுக்கப்பட்ட இனவாதத்தால் தூண்டிவிடப்பட்டது
By Chris Marsden
29 May 2001
Back to screen
version
மான்ஷெஸ்டருக்கு அண்டையிலுள்ள ஓல்ட்ஹாமில்
கடந்தவார இறுதியில் ஆசிய இளைஞர்களுக்கும் பொலிசாருக்கும்
இடையிலான வன்முறைகளையும் மோதுதல்களையும் இரண்டு இரவு
சந்தித்தது. கடந்த சனிக்கிழமை 500 ஆசிய இளைஞர்களும், 100 வெள்ளையின
இளைஞர்களும் பாரியளவு கவச உடையணிந்த கலக தடுப்பு பொலிசாருடன்
மோதலில் ஈடுபட்டனர். பொலிசார் இம்மோதலை ''மனிதப்
படுகொலை'' என கூறினர். இம்மோதல்களில் 15 பொலிசாரும்,
10 பொதுமக்களும் காயமடைந்தனர். இம்மோதல்கள், ஒரு
விரைவு உணவு விடுதியின் வெளியே ஆசிய இளைஞர்கள் வெள்ளையின இளைஞர்களுடன்
மோதல்களில் ஈடுபட்டபின்னர் ஆரம்பமானது. இதற்குப் பதிலாக
ஒரு குழு வெள்ளையின இளைஞர்கள் ஒன்றுதிரண்டு பல கடைகளை தாக்கியதுடன்,
ஆசியமக்கள் வாழும் பகுதியான Glodwick
இல் தாய்மையுற்றிருந்த பெண் ஒருவர்
இருந்த வீட்டின் மீது கல் வீசினர். இதனால் Farida
Azan என்ற 23 வயது பெண்ணின் மீது கண்ணாடி
துண்டுகளால் தாக்கப்பட்டு, அவர் அதிர்ச்சியடைந்த நிலையில்
உள்ளார்.
வீதிகளில் ஆசியப்பெண்களும், சிறுவர்களும் தாக்கப்பட்டனர்.
இதற்கு பதிலாக ஆசியர்கள், Live
and Let Live pub என்ற மதுபானக்கடையை
தாக்கினர். இங்கு மதுவருந்திக்கொண்டிருந்தவர்களை தாக்கியபின்னர்,
அவர்கள் திரும்பி வந்து யன்னல் வழியாக பெற்றோல் குண்டினை
வீசினர்.
ஞாயிற்றுக்கிழமை பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதுடன்,
பலகட்டிடங்கள் தாக்கப்பட்டன. ஆசிய பல்பொருள் அங்காடி
ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டதுடன், உள்ளூர் பத்திரிகையான
Oldham Evening Chronicle இன் காரியாலயம்
நெருப்பு வைப்புக்குள்ளானது. இப்பத்திரிகை ஒரு பக்கசார்பான
செய்திகளை வெளிவிடுவதால் உள்ளூர் ஆசிய மக்களிடையே வெறுப்புக்குள்ளானது.
கலகத்தடுப்பு பொலிசார் குழு ஒன்று ஒரு மோட்டார் காரினால்
மோதப்பட்டபோதும் காயங்களுடன் தப்பிவிட்டனர். Jolly
Carter என்ற மதுபானக்கடை ஒன்றும்
40 பேர் கொண்ட குழுவால் கல்லெறித் தாக்குதலுக்கு உள்ளானது.
அண்ணளவாக 30 வெள்ளையின இளைஞர்கள் இனவாதப் பாடல்களை
பாடிக்கொண்டு ஒவ்வொரு மதுபானக்கடைகளாக சென்றனர்.
இவர்கள் பின்னர் பொலிசாரால் கலைக்கப்பட்டனர். இதில் 7 வெள்ளையின
இளைஞர்களும், 5 ஆசிய இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
ஓல்ட்ஹாம் வன்முறைகள், கடந்த கிழமைகளாக
இப்பிரதேசம் பல இனவாதக் குழுக்களால் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்களின்
பின்னரே இடம்பெற்றது. ஆனால் நியோ-நாசிகளுக்கான [neo-Nazis]
அடித்தளம் உருவாகுவதற்கான பல காரணங்கள் உள்ளன. அதற்கு
ஏழ்மையின் பரவல், சமூக சீரழிவு, கன்சவேட்டிவ் கட்சியும் தொழிற்
கட்சியும் தொலைத்தொடர்பு சாதனங்களும் இனவாதத்தை
அணைத்துக்கொண்டதும், பொலிசாரின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளும்,
ஆத்திரமூட்டும் அறிக்கைகளும் காரணமாகும்.
பிரித்தானியாவில் ஓல்ட்ஹாம் மூன்றாவது ஏழ்மை
ஆன வட்டரமாகும். அதன் 219,000 சனத்தொகையில் 14,000 பாக்கிஸ்தானியர்கள்
9,000 பங்களாதேசியர்கள் 1,600 இந்தியர்கள் உள்ளடங்கலாக 24,600
பேர் ஆசிய இனத்தவராகும். இந்நகரமானது முக்கியமாக வெள்ளை
இனத்தவர்கள், பாக்கிஸ்தானியர்கள், பங்களாதேசியர்களுக்கான
பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.
கூடுதலான ஆசிய இனத்தவர்கள் பிரித்தானியாவின் நெசவு
ஆலைகளில் இரவுவேலைகளுக்காகவும், ஏனைய ஊதியம் குறைந்த
வேலைகளுக்குமாக வந்தவர்களாவர். இவ் ஆலைகள் மூடப்பட்டபோது
முதலாவதாக வேலைநீக்கப்பட்டவர்களும் இவர்களே. இப்பிரதேசம்
வீழ்ச்சியானால் தாக்கப்பட்டபோது, தொடர்ச்சியான இனவாத
கீழ்மைப்படுத்துதல்களுடன் வேலையின்மை இப்பிரதேசத்தில் பங்களாதேசியர்களிடையே
25% உம், பாக்கிஸ்தானியர்களிடையே 16% உம் ஆகும். ஆசிய இளைஞர்கள்
மத்தியில் இது இன்னும் மோசமாக 40% ஆகும்.
இந்நிலைமைகளின் கீழ் சமூக கொந்தளிப்பும், குற்றச்செயல்களின்
அதிகரிப்பும், போதைப்பொருள் தவறாக பாவிப்பதும் ஏனைய
சமூக குறைபாடுகளும் எழுவது தவிர்க்கமுடியாத விளைவாகும்.
ஆனால் இவ்வருட ஏப்பிரல் மாதத்தின் நிகழ்வு ஒன்று இக்கொதிக்கும்
எண்ணையினுள் நெருப்பை வைத்தது.
ஏப்பிரல் 22ம் திகதி மூன்று ஆசிய இளைஞர்களால் 75
வயதான முன்னாள் படைவீரரான Walter
Chamberlain றக்பி விளையாட்டு பார்த்துவிட்டு
திரும்பிவருகையில் தாக்கப்பட்டார். இத்தாக்குதல் நிகழ்ந்த
நிலைமைகள் இன்னும் தெளிவாகவில்லை. Walter
Chamberlain இன் பணம் திருடப்படாததாலும்,
அவரின் சுடுதண்ணீர் போத்தல் மட்டும் காணாமல் போனாதல்
இது களவெடுக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதாக தெரியிவில்லை
என பொலிசார் தெரிவித்தனர். எவ்வாறிருந்த போதிலும் இவ்விடயம்
இனவாத தாக்குதலுக்கான சாத்தியத்துடனேயே விசாரிக்கப்படுவதாக
தெரிவித்தனர்.
இவ்வார ஆரம்பத்தில் தாம் ஒரு ''வெள்ளையர்கள்
புகமுடியாத பிரதேசத்தை'' அமைத்திருப்பதாக ஆசிய இளைஞர் குழு
ஒன்று உள்ளூர் வானொலி நிலையத்திற்கு தொலைபேசியில் தெரிவித்ததாக
கூறப்படுகின்றது. உளவுப்பிரிவு தலைவரான Andy
Brennan இச்சம்பவத்தை Chamberlain
மீதான தாக்குதலுடன் தொடர்புபடுத்தியுள்ளார்.
அவர், Chamberlain மீதான
தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் Chamberlain
க்கு அவர் வெள்ளையினத்தவர் என்பதால்
''நகரத்தின் இப்பகுதியில் அனுமதிக்கப்பட முடியாது'' எனக் கூறியதாக
குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தநாள் தொலைதொடர்பு சாதனங்கள் பாரிய
தலையங்கங்களுடனும், இரண்டு பக்க அறிக்கைகளுடன் ஆசியர்கள்
''வெள்ளையர்கள் புகமுடியாத பிரதேசத்தை'' அமைத்திருப்பதாகவும்,
அதை இப்போது நடைமுறைப்படுத்துவதாகவும் தகவல்களை வெளிவிட்டன.
ஆனால் பின்னர் Chamberlain
பொலிசுக்கு வழங்கிய தனது ஆரம்ப வாக்குமூலத்தில் இது தொடர்பாக
குறிப்பிடவில்லை என தெரியவந்தது. அவரின் மகனும் இத்தாக்குதலுக்கு
இனவாத நோக்கமிருக்கும் என்பதை மறுத்துள்ளார். ITN
தொலைக்காட்சியில் Tonight
with Trevor McDonald என்ற நிகழ்ச்சியில்
''ஒரு குடும்பம் என்ற வகையில் இது ஒரு இனவாத பிரச்சனை என
தாம் நம்பவில்லை எனவும், இது ஒரு தாக்குதல் '' என குறிப்பிட்டார்.
இது தொலைத்தொடர்பு சாதனங்களையோ அல்லது
பொலிசாரையோ அவர்களது பாதையிலிருந்து திருப்பவில்லை.
மான்ஷெஸ்டர் உயர் பொலிஸ் அதிகாரியான Eric
Hewitt கடந்த வருடம் பதிவுசெய்யப்பட்ட
572 இனவாதத் தாக்குதல்களில் 60% ஆனவற்றிற்கு '8-10' ஆசிய
இளைஞர்களே காரணம் என ஆத்திரமூட்டும் அறிக்கையை ஏற்கெனவே
வெளிவிட்டுள்ளார். Eric Hewitt ஆசிய
மக்கள் மத்தியில் இனவாதியாக கருதப்படுவதுடன், கூடுதலானோர்
தாம் இனவாத தாக்குதல்கள் குறித்து பொலிசாருக்கு அறிவிப்பதில்லை
எனவும், ஏனெனில் அவர்கள் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும்
எடுப்பதில்லை என கூறினர்.
Chamberlain மீதான தாக்குதலைத்
தொடர்ந்த இனவாத நிலையையும், தொலைத்தொடர்பு சாதனங்களின்
''வெள்ளையர்கள் புகமுடியாத பிரதேச'' பிரசாரத்தையும் தமக்கான
அறிகுறியாக எடுத்துக்கொண்ட பாசிச பிரித்தானிய தேசிய கட்சி [British
National Party -BNP] யூன் 7ம் திகதி பொதுத்தேர்தலில்
மேற்கு ஓல்ட்காமிலும், றோய்டனிலும் ''சாதாரண வெள்ளை மக்களை''
பாதுகாப்பதற்காக இரண்டு வேட்பாளர்களை நிறுத்த போவதாக
உடனடியாக அறிவித்தது. இதில் ஒருவர் தொலைக் காட்சிகளிலும்
வானொலிகளிலும் இனப்பிரச்சனைகள் தொடர்பான விவாதங்களில்
கலந்துகொள்ள வழமையாக அழைக்கப்படும் பிரித்தானிய தேசிய
கட்சி (BNP) இன்
தலைவரான Nick Griffin
ஆவார். பிரித்தானிய தேசிய கட்சி அகதிகள் வருகையை தடைசெய்யவும்,
''சட்டபூர்வமற்ற அகதிகளை'' திருப்பி அனுப்பவும் கோருகின்றனர்.
போட்டி தேசிய முன்னணி மே மாதம் ஓல்ட்ஹாம்
இல் இரண்டு ஊர்வலங்களை நடத்தபோவதாக அறிவித்துள்ளது. இதற்கு
பதிலாக உள்நாட்டு அமைச்சரான Jack
Straw மூன்று மாதங்களாக இப்பகுதியில்
ஊர்வலங்களை தடை செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால் கடந்த
மூன்று வார இறுதியில் நூற்றுக்கணக்கான பாசிசவாதிகள் ஓல்ட்ஹாம்
இல் காணப்பட்டனர். மே 16ம் திகதி பொலிசார் நாசி எதிர்ப்பு ஊர்வலத்தில்
கலந்தகொண்ட பலர் உட்பட 11 வெள்ளை இனத்தவர்களையும்,
4 ஆசியர்களையும் கைது செய்தனர்.
ஓல்ட்ஹாம் இல் நிகழ்வுகள் 4 வருட தொழிற்கட்சி
ஆட்சியின் பின்னர் பிரித்தானிய அரசியலின் அசிங்கமான முகத்தின் தோற்றத்தினை
காட்டுகின்றது. இந்நிகழ்வுகள் முன்வந்துள்ள சமூக, இனவாத
நெருக்கடிகளால் உருவாக்கப்பட்டவை என்பதையும், அவை திட்டமிட்ட
வகையில் வலதுசாரிப்பக்கம் திசை திருப்பப்படுகின்றது என்பதையும்
விளங்கிக்கொள்ளவேண்டும்.
மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை முதலாளித்துவ
சார்பு தொழிற்கட்சியாலும், அவர்களுக்கு முந்திய ரோரி அரசாங்கத்தாலும்
கடுமையான நிலைமைக்குள்ளும், பொருளாதார நிட்சயமற்ற
நிலைமைக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சனைகளுக்கான
தமது சொந்த பொறுப்பை மறைப்பதற்காக, ஒவ்வொரு சமூக
பிரச்சனைகளுக்கும் அகதிகள் தான் காரணம் என கூறி புகலிடம் தேடுவோர்கள்
மீது யார் கூடுதலான இனவாதத்தை காட்டுவது என்ற மூர்க்கமான
போட்டியில் இவ்விரு கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். புகலிடம் வழங்கவதை
கட்டுப்படுத்துவது இனவாதம் எனக்கூறுவதை இரு கட்சிகளும் நிராகரிக்கின்றன.
ஆனால் பாசிசவாதிகளுக்கும் இது தெளிவாக தெரியும். தற்போதைய
அரசியல் கட்டுமானத்தில் ''இனவாத துரும்பை'' பயன்படுத்துவது
சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானிய வேலைத்தலங்களுக்கும்,
வீட்டுவசதிகளுக்கும், கல்விவசதிகளுக்கும், சுகாதார சேவைகளுக்கும்
புகலிடம் கோரியோர் அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என்பதை
நியோ நாசிகள் தமக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள கூடியதாக்கியது.
ஓல்ட்ஹாம் இன் நிகழ்வுகள், தொழிற்கட்சியினதோ
அல்லது ரோரியினரதோ திசையை மாற்றம் செய்யப்போவதில்லை.
தாராளவாத ஜனநாயக கட்சியின் Simon
Hughes ரோரியினரின் தலைவரான William
Hague இன் புகலிடம் கோருவோருக்கு
எதிரான பேச்சுக்கள் உள் பிரச்சனைகளை மோசமாக்கும் என
சிறிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் GM
TV இற்கு வழங்கிய பேட்டியில் ''நாம்
எமது வார்த்தைகள் தொடர்பாக கவனமாக இருக்கவேண்டும்.
அதனால் தான் முக்கியமாக William
Hague ஆலும் அவரது கட்சியினராலும்
கடந்த இரண்டு வருடங்களாக பாவிக்கப்படும் வார்த்தைகள்
குறித்து நாம் மிகவும் விமர்சனத்திற்குள்ளாக்கினோம்'' என குறிப்பிட்டார்.
ரோரியினரின் பிரதிபலிப்பு எதிர்பார்த்தபடியே மோசமானது.
ரோரியினரின் நிழல் உள்நாட்டு அமைச்சரான Ann
Widdecombe, William Hague இன் கருத்துக்களை
''மரியாதையற்றது'' என கூறினார். மிகவும் தெளிவானது என்னவெனின்
தொழிற்கட்சி உள்நாட்டு அமைச்சரான Jack
Straw ரோரியினரை பாதுகாக்கும் கருத்தாகும்.
அவர் Jonathan Dimbleby நிகழ்ச்சிக்கு
''நாங்கள் அனைவரும் எமது மொழியை நவீனமயப்படுத்தவேண்டும்.
விவாதிப்பது சாத்தியமற்றது என நான் நம்பவில்லை. நம்பமுடியாத
விவாதம் நேற்று ஓல்ட்ஹாம் இல் நிகழ்ந்தது William
Hague இன் வீட்டு வாசலில் நிகழலாம்.
இதனால் அதற்கு விவாதம் உதவியளிக்கலாம் என நான் நம்பவில்லை.
ஏனெனில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டு பின்னர் அதற்கான தமது
பொறுப்பினை தவிர்த்துக்கொள்ளவும் மன்னிப்பு தேடிக்கொள்ளவும்
அலைந்த சந்தர்ப்பங்கள் பலவற்றை நான் கண்டுள்ளேன்'' என
குறிப்பிட்டார்.
தொலைத்தொடர்பு சாதனங்கள் ஓல்ட்ஹாம்
நிகழ்வுகளுக்கும் புகலிடம் கோருவோருக்கு எதிரான பேச்சுக்களுக்கும்
தொடர்பு இல்லை என்ற Jack Straw
கருத்தின் பின்னிற்கின்றன.
Independent பத்திரிகை
Jack Straw கருத்தினை
''அர்த்தமற்றது'' எனவும், Daily
Mail அவர்களின்
வழியில் ''ஸ்ராலினச'' பிரச்சாரம் என கூறி அகதிகள் தொடர்பான
''வெளிப்படையான, நேர்மையான'' விவாதம் தேவை என எழுதியது.
ரோரிகளின் பத்திரிகையான Telegraph
'''பல பத்தாயிரக்கணக்கான
மக்கள் பிழையான தகவல்களுடன் இந்நாட்டுக்குள் நுழைகின்றனர்''
என்பதை தொடர்ந்து விவாதிக்கவேண்டும் என கூறி, ''சனிக்கிழமை
நிகழ்ந்தது பிரித்தானியாவின் பல நகரங்களில் வழமையான வார
இறுதிகளில் நிகழ்வதை விட வித்தியாசமானது என்பதற்கு சாட்சியங்கள்
எதுவுமில்லை'' எனவும் எழுதியுள்ளது.
Jack Straw இனை புகழ்ந்து
Telegraph
தொடர்ந்து ''ஒரு குழுவின் வன்முறைகளை எதிர்நோக்கும் ஒரு
அரசியல்வாதியின் சரியான அணுகுமுறை நேரடியாக கண்டனம் தெரிவிப்பதாகும்.
Jack Straw அவர்
மரியாதைக்குரிய வகையில் அரசியல்தஞ்சம் தொடர்பான விவாதத்திற்கும்
இந்நிகழ்விற்கும் தொடர்பு இல்லை என்பதை மிக வெளிப்படையாக
செய்துள்ளார்'' என குறிப்பிட்டுள்ளது.
இதேநாள், முன்னாள் கன்சவேட்டிவ் கட்சி தலைவரான
Lord Tebbitt, இனவாதம்
அரசியல் தஞ்சம் கோரும் உரிமை மீதான தாக்குதலுக்கு அடித்தளமாக
உள்ளதாக வெளிப்படையாக்கியுள்ளார். அவர் ஓல்ட்ஹாம் தாக்குதலில்
இருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்னவெனில்,
''ஒரே பிரதேசத்தில் தனித்தனியான, வித்தியாசமான சமூகங்கள் வாழ்வது
எப்போதும் மோதலுக்கான அபாயத்தை கொண்டுள்ளது. அவர்கள்
தம்மை போட்டிப்பிரிவுகளாக உருவாக்கிகொள்வதை தவிர்த்து
கொள்வதற்காக தம்மை போதியளவு இணைத்துக்கொள்வதில்லை''
எனக் கூறியுள்ளதுடன், அரசாங்கம் அகதிகள் பிரச்சனையை கையாள
தவறுமானால் ஓல்ட்ஹாம் இல் நிகழ்ந்தது போலான பிரச்சனைகள்
எதிர்காலத்தில் உருவாகுவதற்கான சாத்தியங்களை கொண்டுள்ளது
எனக் குறிப்பிட்டார்.
உண்மையில் Tebbitt
இன் கருத்துக்கள் பிரித்தானிய தேசியக்
கட்சித் தலைவரான Phil Edwards இனதை
போன்றது. அவர் ''நாங்கள் மிக நெருக்கமாக அருகாமையில் வித்தியாசமான
சமூகங்கள் வாழ்வதால் உருவான ஏமாற்றங்களை தீர்த்துக்கொள்ள
உதவுவதற்காக பிரசாரம் செய்கின்றோம்'' என தெரிவித்தார்.
|