World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

Lionel Jospin and Trotskyism: the debate over the French prime minister's past

லியனல் ஜொஸ்பனும் ட்ரொட்ஸ்கிசமும்: பிரான்ஸ் பிரதமரின் கடந்தகாலம் தொடர்பான விவாதம்
Peter Schwarz
27 June 2001

Back to screen version

கடந்த மூன்று வாரங்களாக பிரான்சின் தொலைத்தொடர்பு சாதனங்கள் பிரதமர் லியனல் ஜொஸ்பனின் ட்ரொஸ்கிச கடந்தகாலம் தொடர்பான வெளியான செய்திகளால் நிறைந்திருந்தன.

ஆரம்பத்தில் பிரான்சின் பத்திரிகையான Aujourd'hui, Organisation Communiste Internationaliste [OCI- சர்வதேச கம்யூனிச அமைப்பு- இது நான்காம் அகிலத்தின் கிளையாக இருந்தது] முன்னாள் உறுப்பினரான Patrick Dierich இன் பேட்டியை வெளியிட்டிருந்தது. 1968 தொடக்கம் 1986வரை OCI இல் இணைந்திருந்த 56 வயதுடைய வான்வெளி ஆராச்சியாளரான இவர், தான் 1971 கோடைகாலத்தின் ஜொஸ்பனை கட்சியின் அங்கத்தவராக அறிந்திருந்ததாக தெரிவித்திருந்தார். அவர் ''இதில் எந்தவித பிழையுமில்லை. 1971 இல் அவர் இருந்த கட்சிக் கிளையிலேயே நானும் இருந்ததேன். அவர் தோழர் 'Michel' எனவும் நான் தோழர் ‘Blum' எனவும் அழைக்கப்பட்டோம். நாங்கள் அனைவரும் புனைபெயரைக் கொண்டிருந்தோம்'' எனக் குறிப்பிட்டார்.

Patrick Dierich இன் கருத்துக்கள் ஒன்றும் புதிதானவையல்ல. இப்படியான வதந்திகள் 1995 இல் இருந்தே உலாவுகின்றன. ஆனால் இதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 1980ம் ஆண்டுகள்வரை OCI இன் முக்கிய அங்கத்தவராக இருந்த தனது சகோதரனான Oliver உடனான ஆள் மாறாட்டத்தின் விளைவு என ஜொஸ்பன் இவற்றை நிராகரித்துள்ளார்.

Dierich இன் கருத்துக்களை தொடர்ந்து, இன்னுமொரு முன்னாள் OCI அங்கதவரான 80 வயதுடைய Boris Fraenkel இன் பேட்டியொன்று Nouvel Observateur என்னும் வலைத் தள வார வெளியீடு ஒன்றில் வெளிவந்தது. Boris Fraenkel ஜேர்மன் நகரமான டன்ஸிக்கில் ஜேர்மன்- யூதக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் நாஜிகளிடமிருந்து தப்பி சுவிற்ஸலாந்தை நோக்கிச்சென்று, யுத்தத்தின் பின்னர் பிரான்சில் குடியேறினார். அங்கு அவர் OCI இன் நிறுவக உறுப்பினராக இணைந்துகொண்டார்.

Boris Fraenkel தான் ஒருவருட காலமாக தனது வீட்டில் அரசியல் வகுப்புக்களில் கலந்துகொண்டபோது 1964 இல் ஜொஸ்பனை அறிந்துகொண்டதாக குறிப்பிட்டார். மேலும் ''லியனல் ஜொஸ்பன் எனது வீட்டில் நடந்த 'புரட்சிகர கல்வி வகுப்புகளில்' ஒழுங்காக கலந்துகொண்டார். இவ் வகுப்புகள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைவதற்கான முன்நிபந்தனைகளாகும். எனது பல நண்பர்கள் பெருமையுடன் கூறுவது போல் இளம், இடதுசாரித் தன்மையான இளைஞர்களை எனது வலையில் விழுத்துவது எனது விஷேட தன்மையாகும். ஜொஸ்பன் அப்போது École Nationale D'administration [ENA, பிரான்சின் தேசிய அரசியல் உயர்மட்டத்தினருக்கான பல்கலைக் கழகமாகும்] இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். நான் அவருக்கு இரகசியமாக பயிற்சியளித்தேன். எதிர்காலத்தில் உயர் அரச அதிகாரியாக வரவிருப்பவர் ஒரு புரட்சிக்காரராக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. கலந்துரையாடல் மூலம் நாங்கள் நண்பர்களானோம்'' என குறிப்பிட்டார்.

தனது நட்பிற்கு ஆதாரமாக அவர் விடுமுறையின் போது 'லியனல்' என கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட தபால் அட்டையை காட்டினார். Fraenkel தான் 1966 இல் கட்சியிலிருந்து விலக்கப்பட்டபின் ஜொஸ்பன் உடனான தொடர்புகளை இழந்ததாக கூறினார். அப்போதைய OCI இன் தலைவரான Pierre Lambert, ஜொஸ்பன் உடனான தொடர்புகளை வைத்திருந்ததாக தான் கருதுவதாக குறிப்பிட்டார். ஆனால் தன்னால் இதனை உறுதிப்படுத்தமுடியாது என்றார். Fraenkel OCI இல் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு அவர் Wilhelm Reich இனதும் Herbert Marcuse இனதும் கருத்துக்களுக்கு இசைந்ததும், அவர்களின் புத்தகமான Eros and Civilisation இனை பிரான்ஸ் மொழிக்கு மொழிபெயர்த்ததும் தான் காரணமெனக் கூறினார்.

பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக ஜொஸ்பனின் இடம் கேட்கப்பட்டபோது முதல் தடவையாக தனக்கு உண்மையாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ''தான் 60ம் ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கிச கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும், இவ்வியக்கத்தின் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இது தனது சொந்த புத்திஜீவித, அரசியல் கடந்தகாலம் பற்றியது எனவும், நான் இச்சொல்லை பாவிக்க அனுமதிக்கப்பட்டால், இது தொடர்பாக தான் வெட்கப்படவில்லை'' எனவும் கூறினார்.

அவர் மேலும் ''தான் இத்தொடர்புகளால் பல குறிப்பிடத்தக்க நபர்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும், இது தனது சொந்த அபிவிருத்திக்கு உதவியதாகவும், இது தொடர்பாக நான் கவலைப்படவோ அல்லது மன்னிப்புக்கேட்கவோ தேவையில்லை'' எனவும் குறிப்பிட்டார். அவர் கடந்தகாலத்தில் பல சந்தர்ப்பங்களில் தான் ''ஒரு Suez இனதும் Budapest இனதும்'' குழந்தை என குறிப்பிட்டுள்ளார். [Suez- என குறிப்பிடப்படுவது அந்நேரம் பிரான்சின் சோசலிச கட்சியின் பிரதமரான Guy Mollet ன் கீழ் பிரான்சும், பிரித்தானியாவும் எகிப்தின் மீதான படையெடுப்பை குறிக்கின்றது. Budapest- ஹங்கேரியின் எழுச்சிகளை சோவியத் யூனியனின் படைகள் 1956 ஒடுக்கியதை குறிக்கின்றது.] ஜொஸ்பன் அப்போது 19 வயதானவராக இருந்தார்.

அடுத்தநாள் அவர் Radio Europe 1. ஆல் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட பேட்டி ஒன்றில் அவருக்கும் OCI இற்கும் இடையிலிருந்த தொடர்பு சம்பந்தமாக விபரமாக குறிப்பிட்டார். அதில் அவர் அப்போது ''உறுதியான பல மனிதர்களையும், போர்க்குணம் மிக்க தொழிலாளர்களையும், சிலவேளை புத்திஜிவிகளையும் அறிந்துகொண்டதாகவும், இது மிகவும் பிரயோசனமான எதிர்நிலையாக இருந்தது. நான் École Nationale D'administration TM விசேடமான கல்வியூட்டலின் எதிர்த்தன்மையாக இருந்ததாக குறிப்பிடலாம்'' என தெரிவித்தார். அவர் ''தீவீரவாத்துடனான அனுபவத்தை பெற்றுக்கொண்டதாகவும், மற்றவர்களைவிட தான் அதனை விளங்கிக் கொண்டதாகவும்'' கூறினார்.

பிரெஞ்சுப் பத்திரிகையான Le Monde " லியனல் ஜொஸ்பனின் ட்ரொட்ஸ்கிச கடந்தகாலம் '' என்ற தலையங்கத்தின் கீழ் பெரிய கட்டுரை ஒன்றை வெளிவிட்டிருந்தது. அதில் அப்போது 1971 யூன் இல் சோசலிசக் கட்சியில் ஜொஸ்பன் OCI இன் 'இரகசிய அங்கத்தவராக' [மறைவாக இயங்குபவராக] இணைந்து கொண்டார் என்ற குற்றம் சாட்டப்பட்டது. அப்பத்திரிகை 1969-1971 வரை OCI இல் ஜொஸ்பனின் கிளையில் இருந்த 10 பேரை சாட்சியமாக வைத்திருப்பதாக குறிப்பிட்டது. ஆனால் அவர்களில் Patrick Dierich இனையும் Yvan Berrebi எனப்படுவவரையும் தவிர்த்து ஏனையோரின் பெயர்களை குறிப்பிடவில்லை.

அப் பத்திரிகை தொடர்ந்தும் ''70 ஆம் ஆண்டுகள் முழுவதும் ஜொஸ்பன் OCI உடனான தொடர்புகளை பராமரித்து வந்தததாகவும், சோசலிசக் கட்சியின் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டு 6 வருடங்களின் பின்னரே 1987 ம் ஆண்டு OCI இன் தலைவரான Pierre Lambert உடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டதாக குறிப்பிட்டது. அவர்கள் மேலும் பெயர் குறிப்பிடாத, 70ம் ஆண்டுகளில் OCI இன் முழுநேர அங்கத்தவர்களான இரண்டு சாட்சியங்களை இதற்கு ஆதாரமாக குறிப்பிட்டனர். Pierre Lambert தனது பாரிஸ் OCI அலுவலகத்தில் ஜொஸ்பன் உடனான தொடர்புகளை இரகசியமாக வைத்திருக்கவில்லை. அவர் கம்யூனிச கட்சி தலைவரான Georges Marchais உடனான ஒரு தொலைக்காட்சி விவாதத்திற்காக ஜொஸ்பன் தயாராவதற்காக உதவியதாக 1980 ஏப்பரல் மாதம் பெருமையுடன் கூறியிருந்தார்.

முன்னைநாள் OCI இன் தலைவர்களிடமிருந்து சரியாக தகவல்களை பெறும் இப்பத்திரிகையின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது 84 வயதான Pierre Lambert இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுக்கின்றார். OCI இல் இருந்து உருவாகிய Parti des Travailleurs [PT-தொழிலாளர் கட்சி- Workers Party] இன் தேசிய செயலாளரான Daniel Gluckstein தான் ''தற்போதைய ஜொஸ்பனை பற்றி கதைக்க தயாராக இருப்பதாகவும், ஜொஸ்பனின் கடந்தகாலம் அவரது பிரச்சனை, எமது பிரச்சனையல்ல, மற்றவை எமக்கு தேவையில்லை'' எனவும் கூறினார். வரலாற்று ஆசிரியரான Pierre Broué தனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்றார். 70 ஆம் ஆண்டுகளில் OCI இன் இளைஞர் இயக்கமான AJS இன் செயலாளரான, Charles Berg இவர் Le Monde இன் கருத்தின்படி சோசலிச கட்சியினுள் உட்புகுதல்வாத வேலைகளுக்கு பொறுப்பாக இருந்தவர், இது தொடர்பாக வெளிப்படையான நிலைப்பாடு எடுக்க விரும்பவில்லை.

Charles Berg 1979ம் ஆண்டு OCI இல் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் தற்போது Jacques Kirsner என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராக வேலை செய்கின்றார். இவர் 1999ம் ஆண்டில் Libération என்ற பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் ''லியனல் ஜொஸ்பனுடன் பலவருட காலம் ஒரே புரட்சிகர, சோசலிச, ஜனநாயக நம்பிக்கைகளுக்காக ஒன்றாக அரசியல் ரீதியாக போராடியதாக'' OCI இற்கும் லியனல் ஜொஸ்பனிற்கும் இடையிலான உறவு தொடர்பாக குறிப்பிட்டார்.

Radio Europe 1 இனால் Le Monde ஆல் குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக கேட்டப்பட்டபோது ஜொஸ்பன் சந்திப்புக்களும், கூட்டங்களும் நடந்ததை மறுக்கவில்லை. ஆனால் அவை ''தனிப்பட்ட விடயங்களாகும்'' எனவும் இவை சோசலிச கட்சியில் தனது பகிரங்க, வெளிப்படையான நடவடிக்ககளை பாதிக்கவில்லை எனக் கூறினார்.

சோசலிச கட்சியில் OCI இன் 'இரகசிய அங்கத்தவராக' 1971 ஆம் ஆண்டு இணைந்தது தொடர்பாகவும், எப்போது அதனுடனான அரசியல், புத்திஜீவித் தொடர்புகளை துண்டித்துக் கொண்டீர்கள் என கேட்கப்பட்டதற்கு அவர் ''தான் சோசலிச கட்சியில் சுயமாக இணைந்ததாகவும், அங்கு சுயாதீனமாக செயற்பட்டதாகவும், 1973 இல் இருந்து சோசலிசக் கட்சியை பொறுப்பேற்றதிலிருந்து ஒரு முழுமையான சோசலிச கட்சியின் அங்கத்தவராக இயங்கியதாக'' குறிப்பிட்டார். மேலும் ''நான் வைத்திருக்க விரும்பிய தொடர்புகள், கலந்துரையாடல்கள் அனைத்தும் தனிப்பட்ட விடயங்களே தவிர அவை வெளிப்படையானவை அல்ல எனவும், தான் 1973-1981 வரை நான் கல்வி அமைச்சராகவும், ஏனைய பதவிகளையும் பின்னர் வகித்தபோது அதில் ஏதாவது பிரச்சனைகளை இருந்ததா என பாருங்கள்'' எனவும் கூறினார்.

ஜொஸ்பனின் செயல்கள் தொடர்பான பொதுமக்களின் கருத்து மட்டுப்பட்டிருந்தது. தனது சொந்த முகாமிலிருந்து அவர் ஆதரவை பெற்றுள்ளார். ஒரு சில எதிர்க்கட்சியினர் இதனை அரசியலாக்கப் பார்ப்பதுடன், ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடனான அவரது வரலாற்றை எதிர்வரும் தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாக பயன்படுத்த ஜனாதிபதி Jacques Chirac இன் அலுவலகம் முனைவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜொஸ்பனின் 2002ம் ஆண்டு தேர்தலில் Gaullist களின் வேட்பாளரான Jacques Chirac இனை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

இதன்போது ஜொஸ்பன் இவ் இரகசியங்களை நீண்டகாலமாக மறைத்து வைத்திருந்தமைக்காக பாரியளவில் தாக்கப்படப்போவதில்லை. 1960களின் பாரிய மக்கள் பிரிவினர் தீவிரமயமாக்கப்பட்டிருந்த போது பிரான்சில் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்திருந்தது ஒன்றும் அபூர்வமானதல்ல. Gaullist களின் ஜனாதிபதியான Jacques Chirac தான் இளைஞராக இருந்தபோது ஸ்ராலினிச பத்திரிகையான l'Humanité இனை விற்பனை செய்ததாக பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார்.

ஜொஸ்பனின் நெருங்கிய வட்டாரங்களில் 80ம் ஆண்டுகளில் தீவிரவாத அமைப்புகளில் இருந்த பலர் இருக்கின்றனர். பாரிஸ் இன் பாராளுமன்ற உறுப்பினரான Jean Christophe Cambadélis சோசலிச கட்சியினுள் ஜொஸ்பனின் முக்கிய ஆதரவாளராவார். இவர் 1986 வரை OCI இன் மத்தியகுழு உறுப்பினராக இருந்தவராவர்.

தொடரும்........


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved