World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் :மார்க்கிச அரசியல் பொருளாதாரம்Reply to a criticism of globalisation lecture பூகோளமயமாக்கல் சொற்பொழிவு பற்றிய விமர்சனத்திற்கு பதில் 11 June 2001அன்புள்ள ஆசிரியருக்கு, பொருள்: "பூகோளமயமாக்கல்: ஒரு சோசலிச முன்னோக்கு, பகுதி மூன்று" என்ற சொற்பொழிவில் நிக் பீம்ஸ் பின்வருமாறு எழுதுகின்றபொழுது, அவர் தவறென்று நான் கருதுகின்றேன்: "அதன் விளைவாக திரளான ஊகமூலதனம் இறுதியாக இந்தக் கோரிக்கைகளை எதிர்நோக்கும் உற்பத்தி மூலதனத்துடன் பார்க்கையில் ஏற்றமும் இறக்கமும் உள்ள உபரிமதிப்பிற்க்கு உரிமைகோருவதால், பூகோள மூலதனத்தின் கட்டமைப்பானது தலைகீழான பிரமிட் (Pyramid) வடிவத்தை எடுக்கின்றது. இந்த தோற்றப்பாட்டை விளக்கும் சில புள்ளிவிபரங்களை சுட்டிகாட்ட என்னை அனுமதியளிக்கவும். 1999ன் தொடக்கத்தில் 10,000 பேர் பணியாற்றிய America Online இன் சந்தையில் மூலதனமாக்கல் 66,400 கோடி டொலர். எவ்வாறிருப்பினும் ஆறு இலட்சம் பேரை பணிக்கு அமர்த்தியுள்ள ஜெனரல் மேட்டார்ஸ் இன் சந்தை மதிப்பு $52,400 கோடி ஆகும். அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்றாற்போல் மூலதனத்தின் இருபகுதிகளும் உபரிமதிப்பின் பங்கிற்கு உரிமைகோரும். மூலதனம் மொத்தத்திற்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கும் ஒட்டுமொத்த உபரி மதிப்பின் திரட்சிக்கு 10,000 பேர்களையே வேலைக்கு அமர்த்தியிருக்கும் America Online இன் பங்களிப்பு, 600,000 பேர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் ஐ விட மிகக்குறைவாகும். America Online தொழிலாளர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 24மணி நேரங்கள் பணியில் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கபடாவிட்டாலும் கூட ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்களிடம் இருந்து எடுக்கப்படும் அதே அளவு உபரி மதிப்பை அவர்களால் பங்களிப்புச் செய்ய முடியாது. Yahoo ! வில் இந்த முரண்பாடு [ஒருபுறம் உபரி மதிப்பின் மீது மூலதனம் விடுக்கும் கோரிக்கைக்கும் மறுபுறம் அது உண்மையில் கறந்தெடுப்பதற்கும் இடையில் உள்ள இந்த முரண்பாடு] இன்னும் தெளிவானது. 673 பணியாளர்களை மட்டுமே கொண்ட Yahoo! 33,900 கோடி அமெரிக்க டொலர்களை சந்தை மதிப்பாகக்கொண்டிருந்தது.பூகோள மூலதனத்தின் தலைகீழ் பிரமிட் வடிவ அமைப்புத்தான் அதன் பெரிதும் நிலையிலாத் தன்மைக்கு மூலகாரணம் ஆகும். பலகோடிக்கணக்கான டாலர் மூலதனமானது தனது திரும்பப் பெறும் வீதத்தை தக்கவைக்க வேண்டி உலகச்சந்தை முழுவதும் இலாபத்தைத் தேடி அலைபாய்கிறது." நான் நினைக்கின்றேன் அவர் தவறென்று, ஏனென்றால்.... மனித மூலதனம் ஒரே இயல்பானதல்ல. பொதுவில் எல்லா மூலதனமும் ஒரே திரும்பப் பெறும் வீதத்தை (வருவாய் வீதத்தை) கொடுப்பதில்லை. அறிவுசார் தொழில் துறைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித மூலதனம் குறை திறனுள்ள தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித மூலதனத்தைவிட அதிகமான பொருளாதார திரும்பப்பெறல் வீதத்தைக் (அல்லது "உபரிமதிப்பு") கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமாக வரக்கூடாது. கடைசியில், உங்களுக்கு ஒரு மூளை அறுவை மருத்துவர் தேவைப்பட்டால், யார் மலிவானவர் என்று நீங்கள் கேட்பீர்களா? ஆயினும், கார்ப்பொரேட்டுகளது இலாபம் வீழ்ச்சி அடையத் தொடங்கும் பொழுது மனித மூலதனத்தின் மீதான வருவாய் (இலாபங்கள்/ கூலிகள்) வீழ்ச்சி அடையும், அந்த மட்டத்துக்கு அறிவுசார் தொழிலாளர்கள் மேலும்மேலும் அதிகமான கூலிகளைப் பெற முடியும். பொருளாதார தளர்ச்சியில் உள்ளவாறு, வளர்ச்சி மெதுவாக இருக்கும்பொழுது, கூலி உறைதல் (பிடித்தம்) அல்லது வெட்டுக்கள் இல்லாத கம்பனிகள் மூலதனத்தின் மீது போதுமான வருவாய் வருவதைப் பராமரிக்க, தொழிலாளர்களைப் "போகவிடும்". ஒரு கம்பெனிக்கு ஒருவர் மதிப்பீடு வழங்குவது உண்மையில் இரண்டு காரணிகளின் தொழிற்பாடால் ஆகும், "மூலதனத்தின் மீதான வருவாய்" மற்றும் குறைந்து செல்லும் வருவாயை அனுபவிக்காமல் மூலதனம் தூக்கி நிறுத்தப்படும் அளவு ஆகியன. இரண்டாவது காரணி அங்கு மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சி இருக்கிறது என்ற கருத்தைக் குறிக்கிறது. நாம் எல்லைகள் கொண்ட வளங்களுடன் ஆன கோளில் தான் வாழ்கிறோம், அதனால் எல்லைகளுடன் ஒதுக்கீடுகள் சாத்தியமே. முடிவே இல்லாது ஒன்றும் தொடர்ச்சியாய் வளர்ச்சி அடைய முடியாது. இது கூட "பெரும் எண்ணிக்கை விதி" அல்லது மார்க்சிச தத்துவத்தில், "மூலதனத்தின் நெருக்கடி" யாக குறிக்கப்படுகிறது. குறைந்தது "மூலதனத்தின் நெருக்கடி" என்ற பதத்தை நான் புரிந்து கொண்ட விதம் அதுதான். சந்தையின் ஏற்ற இறக்கங்கள் போவதைப் பொறுத்தவரை, அவை உண்மையில் எதனையும் அர்த்தப்படுத்தவில்லை. விலையும் மதிப்பும் ஒரே தன்மையது அல்ல. வி= ம (P=V) என்பது மார்கஸ் அவரது பகுப்பாய்வு வேலையில் செய்த முதல் தரமான தவறு. இன்னொரு விதத்தில் வைப்போம், ஜெனரல் மோட்டார்ஸ், இன்னும் இலாபகரமானதாக இருக்கவும் சுமார் 10,000 பேரை வேலையில் அமர்த்தவும் வழியைக் காணமுடியும் என்றால், அவர்களால் முடியும் என நீங்கள் கருதவில்லையா? எந்திர மனிதர்களைக் (ரொபோட்ஸ்) கருத்தில் கொள்ளுங்கள்..... RP ____________________________________________________________________________________
அன்புள்ள RP, "பூகோளமயமாக்கல்: சோசலிச முன்னோக்கு, பகுதி மூன்று" என்ற சொற்பொழிவில் எனது குறிப்புக்கள் தொடர்பான உங்களது விமர்சனம் தவறான கருத்துருவை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. அத்தவறான கருத்துரு பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் "பொருளாதாரம்" என்று அழைக்கப்படுவதைக் கற்பித்தலில் துரதிர்ஷ்டவசமாகவும், பரவலான வகையிலும் முன்னெடுக்கப்படுகிறது. "மனித மூலதனம் ஒரே இயல்பானதல்ல". ஆகையால் "அறிவுசார் தொழில் துறைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித மூலதனம் குறை திறனுள்ள தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித மூலதனத்தைவிட அதிகமான பொருளாதார திரும்பப்பெறல் வீதத்தைக் (அல்லது "உபரிமதிப்பு") கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமாக வரக்கூடாது". அதன் காரணமாக நான் தவறு என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இங்குள்ள பிரச்சினை என்னவெனில் நீங்கள் மூலதனத்தை உழைப்புடன், குறிப்பாக தேர்ச்சி பெற்ற உழைப்பில், "மனித மூலதனம்" என்ற வகையினத்தின் கீழ், குழப்பிக் கொள்கிறீர்கள். உண்மையில் மூலதனம் மற்றும் மனித உழைப்பு இவை வேறுபட்ட மற்றும் எதிரெதிரான வகையினங்களாகும். மூலதனம் அதன் சுற்றினை, உற்பத்திச்சாதனங்களை ---கச்சாப்பொருட்கள், எந்திரங்கள் முதலியனவற்றை-- மற்றும் அந்த குறிப்பிட்ட உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குக்கு, அது எஃகு இரும்பு உற்பத்தியாக இருக்கட்டும் அல்லது கணினியில் மென்பொருள் வேலைத்திட்டங்களை எழுதுவதாக இருக்கட்டும், அதற்கு தேவையான மனித உழைப்புச் சக்தியை வாங்குவதற்கு இடப்படும் பணமாக ஆரம்பிக்கிறது. தேர்ச்சி பெறாமையிலிருந்து உயர் தேர்ச்சி வரை, மனித உழைப்புச் சக்தியால் என்னென்ன வேறுபட்ட வடிவங்கள் எடுக்கப்பட்டபோதும், மனித உழைப்புச் சக்தியானது மூலதனத்துடன் ஒரே சமூக உறவைக் கொண்டுள்ளது. அதாவது, அது கூலி ஒப்பந்த முறை மூலம் ஒரு பண்டமாக வாங்கப்படுகிறது. அது உடல் உழைப்பாக இருக்கட்டும் அல்லது மூளை உழைப்பாக இருக்கட்டும், மனித உழைப்பினை ஈடுபடுத்துகின்றதன் மூலம் அனைத்து சமுதாயத்தினரும் உற்பத்தியில் சம்பந்தப்பட்டுள்ளனர். இருப்பினும், முதலாளித்துவ சமுதாயத்தில் உழைப்பின் உற்பத்திப்பொருள் சந்தையில் விற்கும் பண்டங்களாக வடிவம் எடுக்கின்றது. ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதனை உற்பத்தி செய்வதற்கு சராசரியாய் எடுக்கின்ற உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. எளிய பண்ட --உற்பத்தி பொருளாதாரத்திற்கு எதிரானதாக, முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மைய சிறப்பியல்பு, உற்பத்தி சக்தி, வேலை செய்வதற்கான திறமை, அதுதானே வாங்கவும் விற்கவும் கூடிய பண்டமாக ஆகிறது என்பதுதான். இந்த பண்டத்தின் மதிப்பும், ஏனைய பண்டங்களைப்போல, அதனை மறுஉற்பத்தி செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் சமூகரீதியான அத்தியாவசிய உழைப்பு நேரத்தின் அளவால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர்வாழ்வதற்கான உணவு, உடை, இருப்பிடம் முதலியனவற்றை உற்பத்தி செய்வதற்கு எடுக்கும் நேரத்தின் அளவால் தீர்மானிக்கப்படுகிறது. தேர்ச்சி பெற்ற உழைப்பு உயர் மதிப்பைக் கொண்டிருக்கிறது ஏனெனில் அதனை உற்பத்தி செய்ய நீண்ட காலம் எடுக்கிறது. அதாவது, அந்த திறமைகளைப் பெறுவதற்காக எடுத்துக் கொண்ட நேரத்தை அது பொதிந்திருக்கிறது. தேர்ச்சி பெற்றதாயினும் தேர்ச்சி பெறாததாயினும், உழைப்புச் சக்தி பண்டம் வாங்கப்பட்ட பிறகு, மூலதனத்தின் சொந்தக்காரர் அதனை உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் நுகர்கிறார். இதன் விளைவான பண்டங்களின் மதிப்பானது அவற்றை உற்பத்தி செய்வதற்கு எடுத்துக்கொண்ட நேரத்தால் தீர்மானிக்கப்படுகின்றது --- உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் பயன்படுத்தப்பட்ட கச்சாப் பொருட்களில் மற்றும் எந்திரங்களில் பொதிந்துள்ள மதிப்புக் கூட்டல் கூடுதல் உழைப்பினால் சேர்க்கப்பட்ட மதிப்பு ஆகும். உபரி மதிப்பிற்கான மூலம் இங்குதான் இருக்கின்றது. உழைப்பு நாளின் பொழுது, தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாத தொழிலாளியால் சேர்க்கப்பட்ட மதிப்பு, மூலதனத்தின் சொந்தக்காரருக்கு தொழிலாளி விற்ற உழைப்புச் சக்தியின் மதிப்பினை விட அதிகமாக இருக்கிறது என்ற உண்மையிலிருந்து எழுகின்றது. பின்னர் உபரி மதிப்பானது அது பொதிந்துள்ள பண்டங்கள் சந்தையில் விற்கப்படும்போது பணமாக அடையப் பெறுகிறது. உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் உழைப்பில் இருந்து கறந்து எடுக்கப்பட்ட, பணமாக திரும்பப்பெற்ற கூடுதல் உபரி மதிப்பினால் பெரிதாகிய மூலதனம், நிகழ்ச்சிப் போக்கை மீண்டும் தொடர தயாராக இருக்கிறது. தொழிலாள வர்க்கத்திடமிருந்து உபரி உழைப்பை சுவீகரித்துக் கொள்வதன் மூலம் மூலதனம் வளர்கிறது, விரிவடைகிறது. நாம் மனித மூலதனம் என்ற வகையினத்தில் மூலதனத்தையும் உழைப்பையும் போட்டுக் குழப்பிக்கொண்டால், பின்னர் இந்த நிகழ்ச்சிப்போக்கு தெளிவற்றதாகிவிடும் மற்றும் அதன் விளைவாக முதலாளித்துவ உற்பத்தியின் அடிப்படை சிறப்பியல்புகள் ஒன்றையும் புரிந்துகொள்வது சாத்தியமில்லாமற்போகும், அது தோற்றுவித்த சிக்கலான பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளைப் புரிந்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். உபரி மதிப்பின் உற்பத்தி இந்த விஷயத்தின் முடிவு அல்ல. உபரி மதிப்பு பின்னர் மூலதனத்தின் பல்வேறு பகுதிகளுக்கிடையில், தொழில் துறை இலாபமாகவும், வட்டியாகவும் மற்றும் வாடகை ஆகவும் வடிவம் எடுக்கிறது. கார்ப்பொரேட் முதலாளித்துவத்தின் அபிவிருத்தி --உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் எல்லைகளின் காரணமாக பங்குகளை வெளியிடுவதன் மூலம் மூலதனத்தைத் திரட்ட வேண்டிய தேவை--- மேலும் சிக்கல்களைக் கூட்டுகிறது. பங்குகள் ஒருமுறை வெளியிடப்பட்டதும், அவை வாங்கப்படவும் விற்கப்பட முடியும். இந்த பங்கு முதல் சந்தையில், பங்குகளின் விலை குறிப்பிட்ட கம்பெனியின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருக்கும். எல்லா வகையான காரணிகளும் குறிப்பிட்ட பங்கின் விலையைத் தீர்மானிப்பதில் வினையாற்றும். இருப்பினும், இறுதி ஆய்வில், சந்தையில் அதன் நாளாந்த விலையை என்னென்ன தீர்மானித்தாலும், பங்கு என்பது மூலதனத்தால் கறந்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பின் மேல் உரிமை கோருவதாக இருக்கும். இதுதான் நீங்கள் மேற்கோள் காட்டிய சொற்பொழிவின் பகுதியில் --Yahoo! மற்றும் ஏனைய கம்பனிகளின் ஊதிப் பெருகிய பங்கு விலைகள் உண்மையாய் கறந்தெடுக்கப்படும் உபரி மதிப்புக்களுடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்கவில்லை, ஆகையால் ஒட்டு மொத்த நிதிக் கட்டமைப்பும் தலைகீழ் பிரமிட் வடிவத்தை ஏற்கிறது--- என்ற பகுதியில் கோடிட்டுக் காட்டப்படும் விஷயமாகும். அச்சொற்பொழிவு வழங்கப்பட்ட பொழுது, மிகக் கடுமையான பிரச்சினைகளுடன் சேர்த்து வர்த்தகச் சுழற்சி கடந்த காலத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக இருந்தன மற்றும் "புதிய பொருளாதாரம்" எவ்வாறு வந்து சேர்ந்தது என்பது பற்றிய அனைத்துவகையான கூற்றுக்களின் மத்தியில், பங்குச் சந்தை அதன் உச்சத்தில் இருந்தது. WSWS மீதான எங்களது வேலை கணிப்புக்களைச் செய்வதில் அக்கறை கொண்டதாக இல்லை, மாறாக இன்னும் சொல்லப்போனால், முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வேலை செய்யும் அடிப்படைப் போக்குகளை, நிதி அமைப்பு முறையின் உள்ளார்ந்த இயல்பான உறுதியிலாத்தன்மை அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் ஆதரிக்கப்பட்டு வருகிறது என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான முயற்சியுடன் அக்கறை கொண்டதாகும்.தங்கள் உண்மையுள்ள, நிக் பீம்ஸ் |