World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Florida ballot review shows voters preferred Gore

Media slants results to favor Bush

புளோரிடா வாக்கு மறு ஆய்வு வாக்காளர்கள் கோருக்கு முக்கியத்துவம் கொடுத்ததைக் காட்டுகின்றது

பத்திரிக்கைச் சாதனங்களின் ஒரு பக்கச் சாய்வின் விளைவே புஷ்ஷூக்கு ஆதரவு

By Fred Mazelis
28 May 2001

Back to screen version

புளோரிடாவில் 2000ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எண்ணப்படாத வாக்குகளின் இரு பெரிய மறு ஆய்வுகளுள், ஒன்று தனது இறுதி முடிவுகளை இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தது. 60647 குறை வாக்குகள் (எந்திர அட்டவணையில் ஜனாதிபதி வாக்கினைப் பதிவு செய்யாத வாக்குகள்) மற்றும் 1,11,261 மிகை வாக்குகள் (ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாதிபதி வாக்குகள் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக செல்லாத வாக்குகள்) --ஆக மொத்தம் 1,71,908 வாக்குகள்-- இன்றைய அமெரிக்கா, மியாமி ஹெரால்ட் மற்றும் நைட் ரைடர் (Kight-Rider) பத்திரிகை தொடரிணைப்பால் அமைக்கப்பட்ட கூட்டுக் குழுவால் மறு ஆய்வு செய்யப்பட்டன.

பெப்ரவரியிலும் ஏப்ரலிலும் அறிவிக்கப்பட்ட பகுதி முடிவுகளைப் போல், புஷ் தேசிய ரீதியில் செல்வாக்கு வாக்குகளை இழந்திருந்தபோதும், புளோரிடாவில் பலநூறு வாக்குகள் வித்தியாசத்தின் அடிப்படையில் ஜார்ஜ். டபிள்யு. புஷ் ஜனாதிபதி ஆக நியமனம் சட்டபூர்வமானது என்று பத்திரிகைச் சாதனங்களில் பொதுவாக முன்வைக்கப்பட்டது. புளோரிடாவில் இடம் பெற்ற பரந்த அளவு வாக்காளர் வாக்களிக்கும் உரிமை பறிப்பு, பல்வேறுவாக்கு -எண்ணல் வழிமுறைகள் பற்றிய நுட்ப விவரங்களின் பனிச்சறுக்குப் பாறைகளுக்கு கீழ் இருட்டடிப்பு செய்யப்படுவது தொடர்கிறது.

குறை வாக்குகள் தொடர்பாக அறிவிக்கையில், பதிவு அட்டை வாக்குகள் (2000ம் ஆண்டு தேர்தலில் புளோரிடாவின் 67 மாவட்டங்களில் 25ல் பயன்படுத்தப்பட்டன) செல்லக்கூடியதா எனத் தீர்மானிப்பதற்கு நான்கு சாத்தியமான தரங்களை இன்றைய -அமெரிக்கா விவாதிக்கிறது. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரு தரங்களின் கீழ் புஷ் வெற்றி பெற்றிருக்கக்கூடும் என பத்திரிகை குறிப்பிட்டது. வாக்கை மதிப்பிடுவதற்கு, பகுதியாக இணைக்கப்பட்டுள்ள தாளின் இரு மூலைகள், அல்லது காட் (chad) கட்டாயம் அகற்றப்பட வேண்டுமானால், 407 க்கு 537 என்று அதிகாரபூர்வ எண்ணிக்கையிலிருந்து புஷ் வாக்கு வித்தியாசம் சரிந்திருக்கும். அப்பொழுதும் அவர் புளோரிடாவின் 25 தேர்வாளர் தொகுதி வாக்குகளை மற்றும் தேர்தலை பெறுவது இன்னும் போதுமானதாக இருக்கும். வாக்கு எண்ணப்படுவதற்கு தெளிவான துளையிடல் தேவைப்படுகின்ற, மிகவும் கண்டிப்பான தரப்படி, புஷ்ஷின் வித்தியாசம் இன்னும் சிறிதாக 152 ஆகி இருக்கும். குழி விழுந்த ஆனால் காட்கள் அகற்றப்படாத, இரு தளர்வான தரங்களின் கீழ், கோர் இந்த மாநிலத்தில் 332க்கும் 242கும் இடையிலான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருப்பார்.

இந்த எண்ணிக்கைகள் புஷ் ஜனாதிபதி பதவியில் வீற்றிருப்பது செல்தகைமையானது மற்றும் அறிவுபூர்வமானது என்று கருத்துரைக்கும் தலைப்புக்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன. "சர்ச்சைக்குரிய வாக்குச் சீட்டுக்களில் புஷ் வெல்வார்" என ராய்ட்டர் கூறியது. "புஷ் புளோரிடாவில் இன்னும் வெல்கிறார்" என சி என் என்.கொம் அறிவித்தது. "வாக்கு ஆய்வுகள்: புஷ் மீண்டும் வெல்கிறார்" என ஏபிசி நியூஸ்.கொம் கூறியது.

சில செய்திகள் தொடர்ச்சியான ஐயத்தை உறுதி செய்தன. "புளோரிடா வெற்றியாளர் தெளிவாகவில்லை" என அசோசியேடட் பிரஸ் கூறியது. புளோரிடா ஜனாதிபதி வாக்குகள் தொடர்பான "இரண்டாவது மறு ஆய்வு முடிவு சொல்ல இயலாததாய் இருக்கிறது" என்ற ஒரு பத்தி தலையங்கத்தின் கீழ், நியூயார்க் டைம்ஸ் உட்பக்கங்களுள் விஷயத்தைப் புதைத்தது.

இருப்பினும், மறு எண்ணிக்கையின் முன் நியாயமாய் தெளிவானது என்ன மற்றும் மறு ஆய்வால் உண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது என்ன --புளோரிடாவில் புஷ்ஷை விட கோருக்கு அதிக வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன-- என்பதை ஒரு தலையங்கங்கள் கூடக் கூறவில்லை. அவர்கள் தங்களின் ஆய்வில் மிகை வாக்குகளை தவிர்த்ததன் மூலம் இதனை மூடி மறைத்தார்கள். பெரும்பாலான விஷயங்கள் மனக்குறையோடு, எழுத்தில் நன்றாக உறுதிப்படுத்தப்பட்டன. மிகைவாக்குகள் எண்ணப்பட்டிருந்திருக்குமானால், கோர் 15,000 க்கும் 20,000 க்கும் இடையில் கூடுதல் வாக்குகளை வெல்ல, மாநிலத்தில் கணிசமான அளவு வாக்கு வித்தியாசத்தில் கோரின் வெற்றிக்கு வழி அமைத்திருக்கும்.

பெரும்பாலான செய்தி அறிக்கைகளில் இந்த உண்மை பெரும்பாலும் காலந்தாழ்த்திய சிந்தனையாக சேர்க்கப்பட்டது. இந்த வாக்குச் சீட்டுக்களை மறுஆய்வு செய்யமாறு கோர் இன் பிரச்சாரம் ஒருபோதும் கேட்டுக்கொள்ளவில்லை ஆதலால், இது கல்வி ரீதியானதை மட்டுமே கொண்டிருப்பதாக கருத்துரைக்கப்பட்டது. புளோரிடா உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்ட மற்றும் அமெரிக்க உச்சநீதிமன்றத்தால் 5 க்கு 4 என்ற முடிவால், டிசம்பர் 12 ல் நிறுத்தப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கை, குறை வாக்குகளை ஆய்வு செய்வதற்கான அழைப்பு மட்டுமே ஆகும்.

வாக்காளராகிய தனி நபர்களை குற்றம் சாட்டும் வகையில் செய்திகள் குறிப்பிடப்பட்டன. அந்த அளவுக்கு, எண்ணப்படாத கோர் வாக்குகள் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு பத்திரிகை செய்தித் தொடர்பு சாதனங்கள் நிர்ப்பந்தத்துக்கு ஆளாயின. "புளோரிடா வாக்காளரின் தவறுகள் கோரின் தேர்தலைப் பாதித்தது" என இன்றைய அமெரிக்கா தலையங்கம் எழுதி இருந்தது. இந்த தவறுகள் பெரும்பாலும் வாக்காளர்களின் அக்கறை இன்மை அல்லது அலட்சியம் அவற்றின் விளைவு அல்ல, மாறாக உள்நோக்கத்தோடோ அல்லது உள்நோக்கம் இல்லாமலோ, வாக்குச் சீட்டை தவறான முறையில் வடிவமைத்தது மற்றும் தவறான கற்பித்தல்கள், குறைந்த வாக்களிப்பு அனுபவம் கொண்ட மற்றும் நவீனமுறையில் வாக்களிப்பதில் குறைந்த அனுபவம் கொண்ட வாக்காளர்களைப் பாதித்தது, என்று கட்டுரையின் ஆழத்தில் மட்டும் பத்திரிகையானது மீண்டும் உறுதிப்படுத்தியது.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்து அன்டனி சால்வன்டோ (Anthony Salvanto) வால் நடத்தப்பட்ட 56,000 மிகை வாக்குகளுக்கான வாக்கு வடிவங்கள் பற்றிய ஆய்வானது, மிக அதிகமான ஜனநாயகக் கட்சி ஆதரவு வாக்காளர்கள் தவறாகச் செல்வதற்கு வழிகாட்டப்பட்டு அது அவர்களின் வாக்குகளை செல்லாததாக ஆக்கி இருக்கிறது என்று காட்டியது. புஷ் அல்லது கோருக்கு மிகை வாக்குகளை குறியிட்ட வாக்காளர்கள் (அதாவது புஷ் அல்லது கோர் போல் இன்னொரு வேட்பாளரையும் குறியிட்டவர்கள்) வழக்கமாய் அதே கட்சி வேட்பாளர்களுக்கே மற்றைய தேர்தல்களிலும் வாக்களித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, அமெரிக்க செனட் தேர்தலில் மூன்றாவது கட்சி வேட்பாளராய் ஜனநாயகக் கட்சிக்கும் அல் கோருக்கும் வாக்களித்தோர், மிகை வாக்களித்தோருள் 83% ஆவர். ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் வாக்களித்தோருள் 6% பேர் மட்டுமே செனட் தேர்தலில் அதே தவறைச் செய்துள்ளனர், அது வாக்குச் சீட்டில் அடுத்து இருக்கிறது. கோர் உள்ளடங்கலாக மொத்தமுள்ள மிகைவாக்குகள் 84,197, அதேவேளை புஷ்ஷூக்கு குறிக்கப்பட்டது 37,731 மட்டுமே ஆகும். (இந்த எண்ணிக்கைகள் மொத்த மிகைவாக்குச் சீட்டுக்கள் 1,11,261 ஐ விட அதிக எண்ணிக்கையைச் சேர்த்திருப்பதற்குக் காரணம் சில வாக்குச் சீட்டுக்களில் புஷ் கோர் இருவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன).

கோருக்குக் கிடைத்த வாக்குகள் செல்லாமற் போனதற்குக் காரணம் வடிவமைப்பும் அறிவுறுத்தலும் ஆகும். எடுத்துக்காட்டாக பெரு நகரமான ஜாக்சான்வில்லே உள்ளடங்கலான டுவல் மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு முதல் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் முதல் பக்கத்திலும் இன்னொரு ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் இரண்டாவது பக்கத்திலும் காட்டப்பட்டுள்ளன. முதல் பக்கத்திற்குப் பின்னர் அவர்கள் "தொடர்ந்து வாக்களிக்க பக்கத்தைத் திருப்புக" என எழுத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், அவர்களுக்கு விளக்கப்படுத்துவதற்காக தேர்தல் அதிகாரிகளால் விநியோகிக்கப்பட்ட மாதிரி வாக்குச் சீட்டில் "ஒவ்வொரு பக்கத்திலும் வாக்களிக்கவும்" என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் விளைவாக, டுவல் மாவட்டத்தில் 21,188 மிகை வாக்குகளாக இருந்தன. மாநிலத்து மிகை வாக்குகளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேலான பகுதியை இந்த ஒரு மாவட்டம் மட்டுமே பெற்றிருந்தது. டுவல் மாவட்டத்து மிகை வாக்குகளில் 55% வாக்குச் சீட்டின் முதலாவது பக்கத்திலிருந்து ஒன்றும் இரண்டாவது பக்கத்திலிருந்து ஒன்றும் ஆக இரண்டு வாக்காளர்களை உள்ளடக்கி இருந்தது. இவை குழப்பமான அறிவுறுத்தல்களே காரணம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இந்த செல்லாத வாக்குகளில் பெரும்பான்மையானவை கோருக்கானவை. சால்வன்டோ குறிப்பிட்டவாறு, "டுவல் மாவட்ட வாக்குச்சீட்டு மட்டுமே கோரின் தேர்தலைப் பாதித்திருக்கலாம்".

பாம் பீச் மாவட்டத்து "வண்ணத்துப் பூச்சி வாக்குச் சீட்டு" ஏற்கனவே மிகவும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் இரு எதிரெதிர் பக்கங்களில் காணப்படுமாறும், பெயர்ப்பட்டியலில் இரண்டாவதாக உள்ள கோருக்கு மூன்றாவது இடத்தில் (Punch) துளையிடுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. துளையிடப்பட வேண்டிய இரண்டாவது இடம் அதி வலதுசாரி பேச்சாளர் பட்ரிக்புக்கானனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக கோருக்கும் புக்கானனுக்கும் 5,237 வாக்குகள் மிகை வாக்குகளாய் ஆயின.

பாம்பீச் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான, வயதான யூத வாக்காளர்கள், யூத எதிர்ப்பு வாதத்துக்கு வக்காலத்து வாங்குவதில் வசைப் பெயர் எடுத்த வேட்பாளருக்கு அறியாமல் வாக்களித்துள்ளனர். மறுபடியும் பாம்பீச் மாவட்டத்தில் நியாயமான வாக்கு என்பது, அதன் மூலம் அதுவே மாநிலத்தில் தேர்வாளர் வாக்குகளை கோருக்கு அளித்திருக்கும். அண்மைய ஆய்வு ஒன்று, இரட்டைத்துளையிடல் காரணமாக (Double Punches) வண்ணத்துப் பூச்சி வாக்குச் சீட்டு கோருக்கு குறைந்த பட்சம் 3,400 வாக்குகளைப் பாதித்தது, மற்றும் 2,400 வாக்குகளை புக்கானனுக்கு என தவறாகக் கொள்ளவைத்தது என்று சுட்டிக் காட்டியது.

வாக்குச் சீட்டு மறு ஆய்வுகள் குறை வாக்குகளுக்கு என மட்டுப்படுத்தப்பட்டால் கூட, பெரும்பாலான மாவட்டங்களில் அதிகாரிகளால் குறைவாக்குகள் என உருவாக்கப்பட்ட எண்ணிக்கை, தேர்தல் நாளை அடுத்து உடனடியாக இதே மாவட்டங்களால் அறிவிக்கப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கையுடன் ஒத்ததாக இல்லை. 67 மாவட்டங்களில் 8ல் மட்டுமே எண்ணிக்கை பொருந்தி வருகிறது. எடுத்துக்காட்டாக, ஆரஞ்சு மாவட்டத்தில் ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களால் ஆன குறுகிய இடைவெளி, "வாக்கு நழுவல்" 966 குறை வாக்குகளை விளைவித்ததாக அறிவிக்கப்பட்டது. இது, மியாமி ஹெரால்ட் குழு வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும்பொழுது ஆவியாகி 639 ஆக ஆனது.

குறைவாக்குகள் மற்றும் மிகைவாக்குகள் தொடர்பான விஷயங்கள் புளோரிடா மற்றும் 2000ம் ஆண்டு தேர்தல் பற்றிய விஷயத்தின் பாதிப்பகுதி மட்டுமே ஆகும். வாக்கு மறு எண்ணிக்கையானது குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட மற்ற வழிகளின் வகைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. தேர்தல் நாளன்றே ஆத்திரமூட்டல் மற்றும் தொந்தரவுகுள்ளாக்குதல் பற்றி கறுப்பின வாக்காளர்கள் எண்ணிறைந்த புகார்களைச் செய்தனர். வாக்களிக்கத் தகுதி பெற்ற இலட்சக்கணக்கான வாக்காளர்கள் பெரும் குற்றம் இழைத்தவர்கள் என்ற பொய்யான அடிப்படையில், சட்டத்திற்குப் புறம்பான வகையில் வாக்காளர் பதிவேட்டிலிருந்து அகற்றப்பட்டனர். அவர்களுள் பெரும்பான்மையினர் கறுப்பினத்தவர்கள். (புளோரிடா மாநில சட்டப்படி வாக்களிக்கும் வயதுடைய கறுப்பர்களில் இருபத்தி நான்கு சதவீதத்தினர், பெருங்குற்றம் இழைத்தவர்கள் என்பதன் காரணமாக நிரந்தரமாகவே வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்களுள்ளும் பெரும்பான்மையோர் அதற்கான தண்டனைகளை அனுபவித்து முடித்து விட்டவர்கள் மற்றும் நாணய உறுதியின் பேரில் விடப்படக்கூடியவகையில் இனியும் இல்லாதவர்கள், ஆயினும் அவ்வாறு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டனர்.

தேர்தல் நாளன்று செய்தி வலைப்பின்னலின் கருத்துக் கணிப்பு மற்றெங்கும் சரியாக இருக்கும் அதேவேளையில், புளோரிடாவில் மட்டும் புதிரான முறையில் தவறாக இருக்கவில்லை. அவர்கள் கோர் மாநிலத்தைக் கைப்பற்றுவார் என துல்லியமாகக் கணித்தனர், ஏனெனில் அவர்கள்-- பெரும் எண்ணிக்கையிலான வாக்குகள் செல்லாததாகும் என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை-- கொள்ள முடியவில்லை. சட்டப்பொறியில் சிக்கவைத்தல், குடியரசுக் கட்சியினரின் ஆத்திரமூட்டல், பத்திரிகை செய்தித் தொடர்புசாதனங்களின் அழுத்தம் மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலையீடு ஆகிய இவற்றின் சேர்க்கை, தேர்தலை புஷ்ஷூக்கு சாதகமாக்கியது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved